Skip to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

கல்முனை புதிய நகர அபிவிருத்தி திட்டம் ஆரம்பம் கல்முனை மாநகர தமிழர்களின் எதிர்காலம் ???

Featured Replies

4751_1468655842_image-0-02-01-002e648aa7

'கல்முனை புதிய நகர அபிவிருத்தி திட்டம் ஆரம்பம் கல்முனை மாநகர தமிழர்களின் எதிர்காலம் ???
கல்முனை புதியநகர அபிவிருத்தி திட்டம் ஆரம்பிக்க கடந்தவருடம்  தொடங்கியபோது தமிழ்மக்களின் எதிர்ப்பு காரணமாக கிடப்பில் போடப்பட்டு நேற்று மீண்டும் தூசு தட்டப்பட்டு 
கல்முனை புதிய நகர அபிவிருத்தித்திட்டம் தொடர்பாக இறுதித் தீர்மானம் எடுக்கும் உயர்மட்டக் கூட்டம் விளையாட்டுத்துறை பிரதி அமைச்சர் எச்.எம்.எம்.ஹரீஸின் ஏற்பாட்டில் கல்முனை  மாநகர சபை கட்டிடத் தொகுதியில் ேநற்று (15) வெள்ளிக்கிழமை காலை 9.00 மணியளவில் இடம்பெற்றது.
நகர திட்டமிடல், நீர்வழங்கல் வடிகாலமைப்பு அமைச்சரும், ஸ்ரீலங்கா முக்கீம் தலைமையில் இவ் உயர்மட்டக் கூட்டம் இடம்பெற்றது.
கல்முனை புதிய நகர அபிவிருத்தித்திட்டம் உடன் ஆரம்பிக்கப்பட்டவுள்ளது. இதற்காக அடையாளம் காணப்பட்ட அபிவிருத்தி வேலைத்திட்டங்கள் விரிவாக ஸ்லிம் காங்கிரஸின் தலைவருமான ரவூப் ஹஆராயப்பட்டு இறுதித் தீர்மானங்கள் எடுக்கப்பட்டதுடன் அதற்கான மதீப்பீட்டு அறிக்கைகள் உடன் தயாரிப்பதற்கு சம்பந்தப்பட்ட திணைக்களத் தலைவர்களுக்கும் அதற்கான நிதிகளை ஒதுக்கிடுவதற்கு அமைச்சின் செயலாளர்கள் மற்றும் திறைசேரி அதிகாரிகளுக்கு பணிப்புரை வழங்கப்பட்டுள்ளது.
அந்த வகையில் முதலில் காணி நிரப்புவதற்கும், சாய்ந்தமருது வொலிவோரியனிலிருந்து கல்முனை நூலகம் வரை புதிய காபெட் வீதி அபிவிருத்திக்கும் அங்கீகாரம் வழங்கப்பட்டுள்ளது.
கல்முனை இறைவெளிக் கண்டத்திலுள்ள 13 ஏக்கர் காணி, சாய்ந்தமருது கரைவாகு வட்டையிலுள்ள 23 ஏக்கர் காணி, கல்முனை பாண்டிருப்பிலுள்ள 5 ஏக்கர் காணி, மருதமுனை மோட்டு வட்டை காணி ஆகிய காணிகளை நிரப்புதற்கு 600 மில்லியம் ரூபா ஒதுக்கப்பட்டுள்ளது. இதனை காணி மீட்பு கூட்டுத்தாபனம், அம்பாறை அரசாங்க அதிபர் காரியாலயத்தினூடாக மேற்கொள்ளவுள்ளது.
மேலும் சாய்ந்தமருது தோணா அபிவிருத்தி உடன் நடைமுறைபட்டுத்த அங்கீகாரம் வழங்கப்பட்டுள்ளது. அத்தோடு சாய்ந்தமருது அல் - ஹிலால் வீதி, பழைய தபாலக வீதி, மாளிகா வீதி, பழைய வைத்தியசாலை  வீதிகளிலுள்ள பாலங்கள் அபிவிருத்தி செய்யப்படவுள்ளது.
கல்முனை பிரதேச செயலகத்திற்கான நிரந்தர கட்டிடத்துக்கான காணி வழங்குவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதுடன் இதன் நிர்மாணத்திற்கு பொதுநிர்வாக அமைச்சினூடாக 69 மில்லியன் ரூபா நிதியும் ஒதுக்கப்பட்டுள்ளது.
இதனுடன் இணைந்ததாக சாய்நதமருது புதிய பிரதேச செயலக கட்டிடம், வீதி அபிவிருத்தி, மைதான அபிவிருத்தி, நூலக அபிவிருத்தி, அரச காரியாலயங்கள் போன்ற பல்வேறுபட்ட அபிவிருத்தி திட்டங்களுக்கும் அங்கீகாரம் வழங்கப்பட்டுள்ளது.
இந்நிகழ்வில் விளையாட்டுத்துறை பிரதி அமைச்சர் எச்.எம்.எம்.ஹரீஸ், சுகாதர சுதேச வைத்தியத்துறை பிரதி அமைச்சர் பைசால காசீம், கிழக்கு மாகாண முதலமைச்சர் ஹாபீஸ் நஸீர் அகமட், பாராளுமன்ற உறுப்பினர் எம்.ஐ.எம்.மன்சூர் மற்றும் மாகாண சபை உறுப்பினர்களான ஆரிப் சம்சுதீன், கே.எம்.ஏ.றஸ்ஸாக், ஏ.எல்.தவம், கல்முனை மாநகர சபை முன்னாள் மேயர் நிசாம் காரியப்பர், முன்னாள் பிரதி மேயர் முழக்கம் ஏ.எல்.ஏ.மஜீத், முன்னாள் உறுப்பினர்கள், அமைச்சுக்களின் செயலாளர்கள், திணைக்கள தலைவர்கள், உயர் அதிகாரிகள் என பலரும் கலந்து கொண்டனர்.
இதில் எந்த தமிழர் தரப்பும் பிரதிநிதிகளுக்கு அழைப்பு விடுக்கப்படவில்லை.
இதன் தமிழர் தரப்பு பாதிப்புகளான 1-தமிழர்காணிகள் சுவிகரிப்பட்டு பாண்டிருப்பு, துரைவந்தியன்மேடு,சேனைகுடியிருப்பு, நட்பட்டிமுனை கல்முனை நெற்காணிகள் சுவிகரிக்கப்படும்
2---1956வெள்ளத்தின் போது கல்முனை தமிழ் பிரதேசம் அழிவுற்றது போன்று கல்முனை முஸ்லிம் பிரதேச கல்முனைக்குடி சாய்ந்தமருது கல்முனை பஸ்தரிப்பு நூலகம் பின்னாலுள்ள காணிகள் மண்நிரப்பட்டு மேடாகும் போது கல்முனை நகரத்தை சுற்றியுள்ள தமிழர் பிரதேசமான கல்முனை 1,2,3போன்ற பிரிவுகளும் பாண்டிருப்பு சேனைக்குடியிருப்பு, துரைவந்தியன்மடு, நற்பட்டிமுனை,பாண்டிருப்பு, பெரியநீலாவணை,  துறை நீலாவணை போன்ற பகுதிகள்  வெள்ளத்தில் மூழ்கும் அபாயம் அதனால் மீண்டும் முஸ்லிம்களிடம் பிச்சையெடுக்கும் நிலை.
3--
அமைக்கப்படும் புதுநகரம் ஒரு அரபுதேசம் போன்று முஸ்லிம்களின் மதசின்னங்களுடன் ஆங்காங்கே காட்யளிக்குமாறு அமைக்கப்படும்.
ஏற்கனவே கல்முனை பஸ்தரிப்பிடத்தில் நிர்மாணிக்கப்பட்ட கடைதொகுதியில் தமிழருக்கு எந்த கடையும்  பகிர்ந்தளிக்காத முஸ்லிம் பிரதிநிதிகள். நகரத்தில் கடை வைத்திருப்பவர் மாத்திரம்தான் முஸ்லிம்கள் ஆனால் சுற்றியுள்ளோர் தமிழர்கள் என்பதை மனதில் வைத்து எம்மை முழுமையாக அப்புறப்படுத்த சூழ்ச்சி திட்டத்துடன் புதுநகரம் எனும் மாயதிட்டத்தை வைத்து அடுத்த ஊர்சுத்திகரிப்பு நடைபெற நேற்று பிள்ளையார் சுழி போடப்பட்டுள்ளது.
இது அம்பாறை மாவட்ட கல்முனை மாநகர கல்முனை தமிழர்களுடன் நேரடி பாதிப்பை சுமக்கவேண்டியுள்ள மட்டக்களப்பு துறைநீலாவணை, கல்லாறு சார்ந்த பட்டிருப்பு தொகுதி மக்களும் ஒன்று சேர்ந்து தமது எதிர்ப்பை பலமாக மாற்றுவதற்கு முடிவு எடுக்கப்படவேண்டும்.
(அம்பாறை மாவட்ட தமிழர்மகாசங்கம் இத்திட்டத்தால் ஏற்படும் பிரச்சினை பற்றிய கடிதம்  கீழே காணப்படுகின்றது)
    4751_1468655842_image-0-02-01-e9c198234c

http://battinaatham.com/description.php?art=4751

 

Edited by Athavan CH

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.