Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

ரியோ 2016 | ஒலிம்பிக் செய்திகள்

Featured Replies

  • தொடங்கியவர்

'ஒலிம்பிக் பதக்கமே லட்சியம்..!' - சர்ச்சையை சவாலாக மாற்றிய நர்சிங்

Narsinghyadavlong1.jpg


''ரியோ ஒலிம்பிக் போட்டியில், இந்தியாவுக்காக பதக்கம் வெல்வேன்" என்று ஊக்க மருந்து சர்ச்சையில் இருந்து விடுவிக்கப்பட்ட மல்யுத்த வீரர் நர்சிங் யாதவ் நம்பிக்கை தெரிவித்துள்ளார்.

சர்வதேச ஒலிம்பிக் போட்டி, பிரேசில் நாட்டின் ரியோ டி ஜெனிரோவில், வரும் 5ம் தேதி தொடங்குகிறது. இதில்  74 கிலோ எடைப்பிரிவில் பங்கேற்க, மல்யுத்த வீரர் நர்சிங் யாதவ் தகுதி பெற்றிருந்த நிலையில், தடை செய்யப்பட்ட ஊக்க மருந்தை அவர் பயன்படுத்தியதாக புகார் எழுந்தது.

இதனால், அவர் ரியோ ஒலிம்பிக் போட்டியில் பங்கேற்பாராஎன்ற சந்தேகம் எழுந்தது. இதுதொடர்பாக, தேசிய ஊக்கமருந்து தடுப்புக் கழகம் நடத்திய விசாரணையில், இந்திய விளையாட்டு ஆணைய விடுதியில் வழங்கப்பட்ட உணவில்தான் ஊக்கமருந்து கலந்திருந்தது என்றும், இதில் நர்சிங் யாதவ் மீது எந்தத் தவறும் இல்லை என்றும் தெரிய வந்தது.

இதையடுத்து அவர் ரியோ ஒலிம்பிக்கில், இந்தியா சார்பில் பங்கேற்க அனுமதி வழங்கப்பட்டது. இந்நிலையில், நர்சிங் யாதவ் டெல்லியில் பிரதமர் நரேந்திர மோடியை இன்று சந்தித்தார். அப்போது, எந்த பதற்றமும் இன்றி ஒலிம்பிக்கில் பங்கேற்க வேண்டும் என்று நர்சிங்குக்கு பிரதமர் அறிவுரை வழங்கினார். இதைத் தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய நர்சிங், இந்தியாவுக்காக ரியோ ஒலிம்பிக் போட்டியில் பதக்கங்களை வெல்வேன் என்றார்.

http://www.vikatan.com/news/sports/66747-narsingh-cleared-doping-keep-his-rio-hopes-alive.art

  • Replies 145
  • Views 19.1k
  • Created
  • Last Reply
  • தொடங்கியவர்

நேபாள நிலநடுக்கத்தில் உயிர்பிழைத்தவர் ரியோ ஒலிம்பிக்கில் சாதனை!

olymps.jpgநேபாள நிலநடுக்கத்தில் உயிர் பிழைத்த 13 வயது கௌரிகா சிங் என்ற நீச்சல் வீராங்கனை, ரியோ ஒலிம்பிக்கின் இள வயது போட்டியாளர் என்ற சாதனையை படைத்துள்ளார்.

ரியோ ஒலிம்பிக் போட்டி, வரும் 5ம் தேதி தொடங்குகிறது. இதனையொட்டி, ரியோ நகரில் வீரர் வீராங்கனைகள் குவிந்து வருகின்றனர். ஒலிம்பிக்கில் பங்கேற்பவர்களில் மிக இளவயது போட்டியாளர் என்ற பெருமையை, நேபாள நீச்சல் வீராங்கனை கௌரிகா சிங் பெறுகிறார்..

 நேபாளத் தலைநகர், காத்மண்டுவில் நடந்த நிலநடுக்கத்தில் உயிர் பிழைத்தவர் இந்த கௌரிகா சிங். பதின்மூன்று வயது, 255 நாட்களே நிரம்பிய இவர், ஒலிம்பிக்கில் 100 மீட்டர் பேக் ஸ்ட்ரோக் நீச்சலில் பங்கேற்கிறார்.

கௌரிகாவுக்கு இரண்டு வயது இருக்கும்போதே, பெற்றோர் இங்கிலாந்துக்கு குடி பெயர்ந்து விட்டனர். கடந்த ஏப்ரல் மாதத்தில், காத்மண்டுவில் நடந்த தேசிய நீச்சல் போட்டியில் பங்கேற்க கௌரிகா சிங் வந்திருந்தார். காத்மண்டுவில் 5 மாடிக் கட்டடத்தில் தாயுடன் தங்கியிருந்தார். அப்போதுதான் காத்மண்டுவை நிலநடுக்கம் தாக்கியது. பக்கத்து கட்டடங்கள் எல்லாம் சிதைந்துபோக,  கௌரிகா சிங் குடும்பத்தினர் தங்கியிருந்த கட்டடம் புதியது என்பதால் பாதிப்படையாமல் தப்பித்தது. இதனால் கௌரிகா சிங் உயிர் தப்பினார். அப்போது உயிர் தப்பியவர்தான் இப்போது ஒலிம்பிக்கில்  சாதனை படைத்துள்ளார்.

 

''ஒரு மாதத்திற்கு முன்தான், இந்த தகவல் எனக்கு தெரிய வந்தது. நான் ஷாக் ஆயிட்டேன் '' என்கிறார் கௌரிகாசிங். ஒலிம்பிக்கிலேயே இளம் வயது போட்டியாளர் என்பதால், கௌரிகா மீதுதான் அனைவரது கவனமும் இருக்கும்.

நிலநடுக்கத்தால் சிதைந்து கிடந்த காத்மண்டு நகரை நேரில் பார்த்த கௌரிகா சிங் ,நீச்சல் போட்டியில் மூலம் தனக்கு கிடைக்கும் வருவாயின் பெரும்பகுதியை தந்தையின் நண்பர் நடத்தும் அறக்கட்டளைக்கு வழங்கி வருகிறார் என்பது கூடுதல் தகவல்.

http://www.vikatan.com/news/sports/66760-meet-the-youngest-athlete-at-the-rio-olympics.art

  • தொடங்கியவர்

கோடை கால ஒலிம்பிக் போட்டிகள் -ஒரு அலசல். 

 

348b

கோடை கால ஒலிம்பிக் போட்டிகள் -ஒரு அலசல்.

உலகம் முழுவதும் தற்சமயம் எதிர்பார்த்து காத்திருக்கும் ஒரு நிகழ்வு  2016 ஆம் ஆண்டிற்கான கோடை கால ஒலிம்பிக் போட்டிகள்.

200 இற்கும் அதிகமான நாடுகள் பங்கு பெறும் ஒலிம்பிக் போட்டிகள் உலக விளையாட்டரங்கில் அதிகம் எதிர்பார்க்கப்படும் விளையாட்டு போட்டியாகவும் கௌரவமான விளையாட்டு போட்டியாகவும் கருதப்படுகின்றது. அத்துடன் அரசியல் ரீதியான பகைகள் ஒற்றுமைகள் மறந்து அனைத்து நாடுகளும் சமத்துவமாகவும் விளையாட்டுணர்வுடனும் மோதிக்கொள்ளும் களமாகவும் ஒலிம்பிக் போட்டிகள் விளங்குகின்றன.

e50d01_4fcf74a0043b4dd287fe21ea09c3d8ff

ஒலிம்பிக் போட்டிகள் பல ஆயிரம் வருடங்கள் பழமையானதும் பல ஆயிரம் வருட வரலாற்றைக் கொண்டதாகவும் விளங்குகின்றது. கிறிஸ்துவுக்கு முன்னரான காலப்பகுதியிலேயே கிரீஸில் ஒலிம்பியா நகரில் இப்போட்டிகள் நடைபெற்று வந்துள்ளன.

ஒலிம்பிக் போட்டிகள் ஆதி காலம் தொட்டு வழக்கத்தில் இருந்தாலும் முதன் முறையாக 17 ஆம் நூற்றாண்டிலேயே  முறையான ஆவணப்படுத்தலுடன் போட்டிகள் நடைபெற்றன. அதன் பின்னர் தொடர்ச்சியாக பல மாற்றங்களை சந்தித்த ஒலிம்பிக் போட்டிகள் முதன் முறையாக சர்வதேச ஒலிம்பிக் குழுவின் கீழ் 1896 ஆம் ஆண்டு அதன் தாயகமான கிரீஸில்  ஏதென்ஸ் நகரில் நடைபெற்றது.

இப்போட்டிகளே இன்றுவரை சர்வதேச ஒலிம்பிக் போட்டிகளின் முறையான ஆரம்பமாக கருதப்படுகிறது. அதன் பின்னர் தொடர்ச்சியாக 4 வருடங்களுக்கொருமுறை நடாத்தப்பட்டு வருகின்றது. 1916, 1940, 1944 ஆண்டுகளில் உலகப்போர் காரணமாக போட்டிகள் தடைப்பட்டிருந்தாலும் மற்றைய ஆண்டுகளில் தொடர்ச்சியாக சரியான முறையில் நடைபெற்று வருகின்றது.

இம்முறை 2016 ஆம் ஆண்டிற்கான கோடைகால ஒலிம்பிக் போட்டிகள் பிரேசிலின் ரியோ நகரில் ஆகஸ்ட் 5 ஆம் திகதி முதல் 21 ஆம் திகதி வரை நடைபெறவுள்ளது. இதன் மூலம் கோடை கால ஒலிம்பிக் போட்டிகளை நடாத்தும் முதலாவது தென்னமெரிக்கா நகராக பெருமை பெற்றுள்ளது ரியோ. அத்துடன் உலக தென் அரைக்கோளத்தில் நடைபெறும் 3 ஆவது கோடைகால ஒலிம்பிக் போட்டியாகவும் இவ்வருட ஒலிம்பிக் போட்டிகள் அமைந்துள்ளன.

இம்முறை பங்கெடுக்கும் நாடுகளின் எண்ணிக்கை, விளையாட்டுக்களின் எண்ணிக்கை என்பன சாதனையாக அமைந்துள்ளன. இம்முறை 206 தேசிய ஒலிம்பிக் குழுக்களின் சார்பாக 10,500 இற்கும் அதிகமான விளையாட்டு வீரர்கள் போட்டிகளில் பங்கெடுக்கின்றனர். அத்துடன் 28 ஒலிம்பிக் விளையாட்டுக்களில் 306 பிரிவுகளில் பதக்கங்கள் வழங்கப்படவுள்ளன. இப்போட்டிகள் அனைத்தும் பிரேசில் நாட்டின் ரியோ நகரின் 33 இடங்களிலும் சேவ் போலோ நகரின் 5 இடங்களிலும் நடைபெறவுள்ளன. இவ்வருட போட்டிகளுக்கான தொடக்க விழா 5 ஆம் திகதி மரகனா அரங்கில் நடைபெறவுள்ளது. இதே அரங்கில் 21 ஆம் திகதி முடிவு விழாவும் இடம்பெறவுள்ளது.

rio-de-janeiro-olympics-vector-set-four-

ஒலிம்பிக் போட்டிகளில் பல்வேறு விளையாட்டுக்களில் பல்வேறு நாட்டு  வீரர்கள் பதக்கங்கள் பெற்றிருந்தாலும் ஒப்பீட்டளவில் மிகவும் அதிகளவான பதக்கங்களைப்பெற்று ஒலிம்பிக் அரங்கில் ஜாம்பவான்களாக திகழ்கின்றது.

கோடைகால ஒலிம்பிக் போட்டிகளில் ஐக்கிய அமெரிக்கா 977 தங்கப்பதக்கங்கள் 758 வெள்ளிப்பதக்கங்கள் 668 வெண்கலப்பதக்கங்கள் என மொத்தமாக 2403 பதக்கங்களை பெற்று அசைக்கமுடியாத பதக்க வேட்டை நடாத்தியுள்ளது. இதற்கு அடுத்த நிலையில் சோவியத் ரஷ்யா  395 தங்கம் 319 வெள்ளி 296 வெண்கலம் என மொத்தமாக 1010 பதக்கங்களுடன் காணப்படுகின்றது. பிரித்தானியா(780), பிரான்ஸ்(669), சீனா(473) என்பன அடுத்த இடங்களில் உள்ளன. (இலங்கை 1 வெள்ளி 1 வெண்கலம் உடன் 111 ஆவது இடத்தில் உள்ளது.)

தனி நபர் சாதனைகளை பொறுத்தவரை அமெரிக்கா நீச்சல் வீரர் மைகேல் பெல்ப்ஸ் 18 தங்கம் 2 வெள்ளி 2 வெண்கலம் என 22 பதக்கங்களை பெற்று முதலிடம் வகிக்கிறார். ரஷ்யா ஜிம்னாஸ்டிக்ஸ் வீராங்கனை லரிஸ லதீனினா 9 தங்கம் 5 வெள்ளி 4 வெண்கலம் என 18 பதக்கங்களுடன் அடுத்த இடத்தில் உள்ளார். தற்கால விளையாட்டில் தடகளத்தில் அதிகம் பேசப்படும் ஜமைக்கா வீரர் உசைன் போல்ட் 6 தங்க பதக்கங்களை பெற்றுள்ளார்.chicago-sailing_1488652i

இம்முறை அதிகப்படியாக அமெரிக்கா சார்பில் பெல்ப்ஸ் உட்பட 550 வீரர்கள் போட்டிகளில் பங்குபெறுகின்றனர். போட்டியை நடத்தும் நாடு பிரேசில் சார்பாக 464 வீரர்கள் பங்குபெறுகின்றனர். (இலங்கை சார்பில் 9 வீரர்கள் பங்குகொள்கின்றனர்.)

தொன்று தொட்டு நடைபெற்று வரும் இவ் ஒலிம்பிக் போட்டிகள் இம்முறை நவீன முறையில் அதிக வீரர்களுடன் அதிக மக்களின் எதிர்பார்ப்புக்களுடன் பலரின் கனவுகளை நனவாக்க காத்திருக்கின்றது.

http://vilaiyattu.com/16766-2/

  • தொடங்கியவர்

1980 மாஸ்கோ ஒலிம்பிக்: ஹாக்கியில் மீண்டும் தங்கம்

 
alec_2955946h.jpg
 

மாஸ்கோவில் 22-வது ஒலிம்பிக் போட்டி 1980-ம் ஆண்டு ஜூலை 19 முதல் ஆகஸ்ட் 3 வரை நடை பெற்றது. ஆப்கானிஸ்தானில் சோவியத் யூனியனின் தலையீட்டைக் கண்டித்து அமெரிக்கா, ஆஸ்திரேலியா, ஜப்பான் உள்ளிட்ட 65 மேற்கத்திய நாடுகள் இந்த ஒலிம்பிக் போட்டியைப் புறக்கணித்தன.

80 நாடுகள் மட்டுமே கலந்து கொண்ட இந்த ஒலிம்பிக்கில் 4,064 வீரர்கள், 1,115 வீராங்கனைகள் என மொத்தம் 5,179 பேர் பங் கேற்றனர். 21 விளையாட்டுகளில் 203 பிரிவுகளில் போட்டிகள் நடத் தப்பட்டன. சோவியத் யூனியன் 80 தங்கம், 69 வெள்ளி, 46 வெண் கலம் என மொத்தம் 195 பதக்கங் களுடன் பதக்கப் பட்டியலில் முதலிடத்தைப் பிடித்தது.

கிழக்கு ஜெர்மனி 47 தங்கம், 37 வெள்ளி, 42 வெண்கலம் என மொத்தம் 126 பதக்கங்களை வென்று 2-வது இடம்பிடித்தது. பல்கேரியா 8 தங்கம், 16 வெள்ளி, 17 வெண்கலம் என மொத்தம் 41 பதக்கங்களுடன் 3-வது இடத்தைப் கைப்பற்றியது.

சோவியத் யூனி யனின் அலெக் சாண்டர் டிட்யாடின் ஜிம்னாஸ்டிக்ஸில் தான் பங்கேற்ற 8 பிரிவுகளிலும் பதக்கம் வென்றார். இதில் மூன்று தங்கப் பதக்கங்களும் அடங் கும். இதன்மூலம், தான் பங்கேற்ற அனைத்துப் பிரிவுகளி லும் பதக்கம் வென்றவர் என்ற சாதனையை அவர் படைத்தார். சிறு தவறுகூட செய்யாமல் பல பிரிவுகளில் மொத்தமுள்ள 10 புள்ளிகளையும் அவர் பெற்றார்.

ஹாக்கியில் தங்கம்

ஹாக்கி போட்டியில் தமிழகத்தைச் சேர்ந்த பாஸ்கரன் தலைமையிலான இந்திய அணி 4-3 என்ற கோல் கணக்கில் ஸ்பெ யினை வீழ்த்தி தங்கம் வென்றது. இதுவே ஒலிம்பிக் ஹாக்கியில் இந்தியா வென்ற கடைசி தங்க மாகும். இந்த ஒலிம்பிக்கில் பெண் களுக்கான ஹாக்கி அறிமுகம் செய்யப்பட்டது. 6 அணிகள் பங் கேற்ற இதில் இந்திய அணியால் 4-வது இடமே பிடிக்க முடிந்தது.

கடைசி நேரத்தில் அழைக்கப் பட்டு கலந்து கொண்ட ஜிம்பாப்வே பெண்கள் அணி லீக் சுற்று முடிவில் 8 புள்ளிகளுடன் முதலிடத்தைப் பிடித்து தங்கப்பதக் கத்தை வசப்படுத்தி யது. இதற்கு முன்பு செயற்கை இழை மைதானத்தில் விளையா டிய அனுபவம் ஜிம்பாப்வே வீராங் கனைகளுக்கு கிடையாது. அப்படிப்பட்ட நிலைமையில் வெற்றி பெற்றது அனைவரையும் ஆச்சரியத்துக்குள்ளாக்கியது.

http://tamil.thehindu.com/sports/1980-மாஸ்கோ-ஒலிம்பிக்-ஹாக்கியில்-மீண்டும்-தங்கம்/article8932106.ece?homepage=true&relartwiz=true

  • தொடங்கியவர்

ஜெயித்துக்காட்டுமா ரியோ?

 

olympic_2955959f.jpg
 

கடந்த இரண்டு மாதங்களாகவே அந்த வார்த்தை உலகெங்கும் மீண்டும் மீண்டும் உச்சரிக்கப்பட ஆரம்பித்துவிட்டது. உலக விருதுகளில் உச்சம் என்று நோபல் பரிசு கருதப்படுவதைப் போல, விளையாட்டுப் போட்டிகளின் உச்சம் என்று கருதப்படுவது அந்த வார்த்தை - ஒலிம்பிக்.

ஒலிம்பிக் போட்டிகளில் பரிசுப் பணம் கிடையாது. ஆனால் உலக விளையாட்டு வீரர்கள் மிகப் பெரிய கவுரவமாகக் கருதுவது ஒலிம்பிக் போட்டிகளைத்தான். அதற்குக் காரணம், உலகம் கொண்டாடும் அணி விளையாட்டான கால்பந்து முதல் உலகின் பிரபலத் தனிநபர் விளையாட்டான டென்னிஸ்வரை முக்கிய விளையாட்டுகள் ஒலிம்பிக்கில் இடம்பெற்றிருப்பதும், போட்டிகளில் கடைப்பிடிக்கப்படும் தரக் கட்டுப்பாடு களும்தான்.

தென்னமெரிக்க மண்ணில்

பிரேசிலின் இரண்டாவது மிகப் பெரிய நகரான ரியோ டி ஜெனிரோவில், இந்த வாரம் தொடங்கவிருக்கிறது 31-வது ஒலிம்பிக் போட்டி. தென்னமெரிக்க மண்ணை ஒலிம்பிக் போட்டி மிதிப்பது இதுதான் முதன்முறை.

உலகின் மாபெரும் விளையாட்டுப் போட்டிகளை நடத்தும் வாய்ப்பைக் கடும் போட்டிக்கு இடையே பிரேசில் பெற்றிருந்தாலும், அடிப்படையில் அது ஒரு மூன்றாம் உலக நாடு. அதிபர் தில்மா ரூசெஃப் மீதான வழக்கு விசாரணை, உள்நாட்டுப் பொருளாதார நெருக்கடிநிலை, ஸிகா வைரஸ் அச்சுறுத்தல் எனப் பல்வேறு பிரச்சினைகளுக்கு இடையேதான் ஒலிம்பிக் போட்டிகளை பிரேசில் நடத்தப் போகிறது. அதற்கு முன்னர் சின்ன ஃபிளாஷ்பேக்.

நவீன ஒலிம்பிக்

பல அறிவியல் கண்டுபிடிப்புகள் நிகழ்த்தப்பட்ட, மிகப்பெரிய தத்துவஞானிகள் தோன்றிய பண்டைய கிரேக்கத்தில்தான் (இன்றைய கிரீஸ்) உலகின் மாபெரும் விளையாட்டுப் போட்டியான ஒலிம்பிக்கின் தொடக்கமும் அமைந்தது.

நவீன ஒலிம்பிக் போட்டிகளின் தந்தை, ஃபிரான்ஸைச் சேர்ந்த கல்வியாளர் பியர் தெ குபர்தென் (Pierre de Coubertin) பண்டைய ஒலிம்பிக் போன்ற விளையாட்டுப் போட்டிகளை நடத்துவதன் மூலமாக உலக நாடுகளை ஒருங்கிணைக்க முடியும் என்று நம்பினார். தொடர் முயற்சிகளுக்குப் பிறகு 1894-ல் அவருடைய தலைமையில் சர்வதேச ஒலிம்பிக் கமிட்டி உருவாக்கப்பட்டது. பண்டைய ஒலிம்பிக் போட்டிகள் நடைபெற்ற கிரீஸ் தலைநகர் ஏதென்ஸில் நவீன ஒலிம்பிக் போட்டிகள் 1896-ல் நடைபெறத் தொடங்கின.

olymp_2955962a.jpg

ஒவ்வொரு ஒலிம்பிக் போட்டியின் தொடக்கத்தை அறிவிக்கும் ஒலிம்பிக் தீபம், இன்றளவும் கிரீஸில்தான் முதலில் ஏற்றப்படுகிறது. அதேபோல ஒலிம்பிக் தொடக்க விழாவில் ஒவ்வொரு நாடும் மைதானத்துக்குள் அறிமுகப்படுத்தப்படும் பேரணியில், எப்போதுமே கிரீஸ் அணிதான் முதலில் வரும். ஒலிம்பிக் விளையாட்டு அந்த நாட்டில் தோன்றியதால் இந்தச் சிறப்பு கவுரவம்.

அத்துடன் ஒலிம்பிக் போட்டி என்பது காலம்காலமாகப் பின்பற்றப்பட்டுவரும் பல்வேறு முக்கிய நடைமுறைகளை, சின்னங்களை உள்ளடக்கியது. இவைதான் ஒலிம்பிக்கின் நோக்கத்தையும் பிரம்மாண்டத்தையும் ஒருசேரத் தூக்கிப் பிடிக்கின்றன. அவை:

குறிக்கோள்

ஒலிம்பிக்கின் குறிக்கோள், ‘இன்னும் வேகம், இன்னும் உயரம், இன்னும் வலிமை’

இந்த வாசகத்தை முன்வைத்தவர் பியர் தெ குபர்தெனின் நண்பர் பாதிரியார் ஹென்றி டிடான். 1894-ல் இந்தக் குறிக்கோள் முன்மொழியப் பட்டது.

ஐந்து வளையங்கள்

ஒலிம்பிக் சின்னமான ஐந்து வளையங்கள், பூமியில் உள்ள ஐந்து கண்டங்களைக் குறிப்பதாக நவீன கால வரையறை சொல்கிறது. ஆப்பிரிக்கா, ஐரோப்பா-ஆசியா, இரண்டு அமெரிக்கக் கண்டங்கள், ஆஸ்திரேலியா, அண்டார்டிகா ஆகியவையே அந்த ஐந்து கண்டங்கள். இருந்தபோதும் 1912 ஸ்டாக்ஹோம் ஒலிம்பிக் போட்டிகளில் ஐந்து வளையங்கள் அறிமுகப்படுத்தப்பட்ட காலத்தில், அப்போது பங்கேற்ற நாடுகளின் கொடியில் இருந்த ஐந்து வண்ணங்கள் எடுக்கப்பட்டே இந்தச் சின்னம் உருவாக்கப்பட்டது.

கொடி

ஒலிம்பிக் கொடி என்பது வெள்ளை பின்னணியில் ஒன்றோடு மற்றொன்று பிணைந்த நீலம், மஞ்சள், கறுப்பு, பச்சை, சிவப்பு வளையங்களைக் கொண்டது. உலக விளையாட்டு வீரர் வீராங்கனைகள் ஓரிடத்தில் கூடுவதையும் மனிதர்கள் வாழும் ஐந்து கண்டங்களின் ஒருங்கிணைவையும் எடுத்துக்கூறும் ஒலிம்பிக்கின் சர்வதேசத் தத்துவத்தை இது வெளிப்படுத்துகிறது. 1920 ஆண்ட்வெர்ப் ஒலிம்பிக் போட்டிகளில்தான் ஒலிம்பிக் கொடி முதன்முதலில் பறக்க விடப்பட்டது.

தீபம்

1928, ஆம்ஸ்டர்டாம் ஒலிம்பிக் போட்டிகளில் இருந்து ஒலிம்பிக் சின்னங்களில் ஒன்றாக ஒலிம்பிக் சுடர் கருதப்படுகிறது. இதற்கான தீப ஓட்டம் 1936 பெர்லின் ஒலிம்பிக் போட்டிகளின்போது தொடங்கியது. ஒலிம்பிக் தீபம், பண்டைய ஒலிம்பியாவில் புறப்பட்டு உலகம் முழுவதும் வலம்வந்து கடைசியாகப் போட்டி நடைபெறும் நாட்டை அடைகிறது. ஒலிம்பிக் போட்டிகளின் தொடக்கத்தை அறிவிக்கும் முதல் அம்சம், ஒலிம்பிக் தீப ஓட்டம். இந்தத் தீபம் ஏற்றப்பட்டதுமுதல் போட்டிகள் முடியும்வரை எங்கும் தடைபடாமல், அணைக்கப்படாமல் வைக்கப்படுகிறது.

நல்லெண்ணச் சின்னம்

1972 மியூனிக் ஒலிம்பிக் போட்டியில் ‘லிட்டில் வால்டி’ என்ற டாஷ்ஹண்டு வகை நாய்க்குட்டி போட்டிகளின் நல்லெண்ணச் சின்னமாக முதன்முறையாக அறிமுகப்படுத்தப்பட்டது. போட்டியை நடத்தும் நாட்டின் பண்பாட்டைப் பிரதிபலிக்கும் வகையிலும் விளையாட்டின் சாராம்சத்தைப் பிரபலப்படுத்தும் வகையிலும் இந்தச் சின்னங்கள் உருவாக்கப்படுகின்றன.

என்னதான் நடக்கும்?

மேற்கண்ட அனைத்தும் ஒலிம்பிக் போட்டிகளின் பிரிக்க முடியாத அம்சங்களாக இருக்கின்றன. அதேநேரம் என்னதான் நல்லிணக்கம், உலக ஒருங்கிணைப்புக்காக ஒலிம்பிக் போட்டிகள் நடத்தப்படுவதாகச் சொல்லப்பட்டாலும், சர்வதேச அளவில் அதிகாரப்போட்டியும் உள்நாட்டு அளவில் ஏற்றத்தாழ்வுகளும் பெரிதாகக் குறையவில்லை.

ஒலிம்பிக் போட்டிகளும் அதைப் பிரதிபலித்தே வந்துள்ளன. விளையாட்டு வீரர்-வீராங்கனைகளும் பல்வேறு நாடுகளின் அரசுகளும் ஒலிம்பிக்கில் தங்கள் கருத்தை வெளிப்படுத்துவதில் முனைப்பு காட்டியுள்ளனர். அந்த வகையில் போர், நிறவெறி, புறக்கணிப்பு, பயங்கரவாதச் செயல்பாடுகள் ஆகியவை ஒலிம்பிக் போட்டிகளில் இடையீடு செய்துள்ளன.

இவற்றைத் தாண்டி ஒலிம்பிக் போட்டிகளை நடத்துவது என்பது, ஒரு நாடு தன்னுடைய பொருளாதார வலுவை நிரூபிக்கும் விஷயமாக இருந்துவருகிறது. ரியோ ஒலிம்பிக் போட்டிகளை பிரேசில் எப்படிச் சமாளிக்கப் போகிறது என்பதைப் பொறுத்திருந்து பார்ப்போம்.

purpose_2955961a.jpg

indiaa_2955964a.jpg

http://tamil.thehindu.com/general/education/ஜெயித்துக்காட்டுமா-ரியோ/article8929703.ece?widget-art=four-all

  • தொடங்கியவர்

ரியோ 2016: தடைகளைத் தாண்டிய டட்டீ சந்த்

பி.எம்.சுதிர்

Comment   ·   print   ·   T+  
 
 
 
 
 
ttt_2955882f.jpg
 

1980-ம் ஆண்டுக்கு பிறகு ஒலிம்பிக் போட்டியில் 100 மீட்டர் ஓட்டத்தில் பங்கேற்கும் முதல் இந்தியப் பெண் என்ற பெருமையைப் பெற்றுள்ளார் டட்டீ சந்த். இதற்காக அவர் சந்தித்துள்ள போராட்டங்கள் ஏராளம். ஒருபுறம் மைதானத்திலும், மறுபுறம் நீதிமன்றத்திலும் பெரும் போராட்டம் நடத்தி இந்த நிலைக்கு வந்திருக்கிறார் டட்டீ சந்த். அவரது போராட்டக் கதையை விரிவாகப் பார்ப்போம்.

ஒடிஷாவில் மாதம் 3 ஆயிரம் ரூபாய்க்கும் குறைவாக சம்பாதிக்கும் ஒரு ஏழைக் குடும்பத்தில் பிறந்தவர் டட்டீ சந்த். அவரது அப்பா ஒரு நெசவாளி. டட்டீயின் அக்கா சரஸ்வதி ஓட்டப் பந்தயத்தில் ஆர்வமிக்கவராக இருந்தார். “விளையாட்டுத் துறையில் சாதித்தால் அரசு வேலை கிடைக்கும், நிதி உதவிகளும் கிடைக்கும்” என்று ஊரிலுள்ள சிலர் கூற, ஓட்டப்பந்தயத்தில் அதிக கவனம் செலுத்தத் தொடங்கினார் சரஸ்வதி. அவரைப் பார்த்து டட்டீ சந்தும் ஓட்டப்பந்தயத்தில் கவனம் செலுத்தத் தொடங்கினார். உள்ளூர் மற்றும் மாவட்ட அள விலான போட்டிகளில் வென்றதால் இருவருக்கும் பள்ளியில் ஸ்காலர்ஷிப் கிடைத்தது.

இவர்கள் இருவரில் சரஸ்வதியின் கனவு ஒரு பாதுகாப்பான வேலையோடு முடிவுக்கு வந்தது. தேசிய அளவிலான போட்டியில் பதக்கம் வென்ற அவருக்கு ஒடிஷா காவல்துறையில் வேலை கிடைக்க, அதோடு தன் விளையாட்டுத்துறை கனவுகளை முடித்துக்கொண்டார். ஆனால் டட்டீ சந்த் அப்படி ஓயவில்லை. விளையாட்டுத் துறையில் மேலும் சாதிக்க விரும்பினார். 2013-ம் ஆண்டு தனது 17வது வயதில் உலக இளைஞர் தடகளப் போட்டியின் இறுதிச் சுற்றுக்குத் தகுதிபெற்றார். இதற்கு தகுதி பெறும் முதல் இந்தியர் என்ற பெருமையையும் பெற்றார். தேசிய சாம்பியன் பட்டத்தை வென்ற அவர் 2014-ம் ஆண்டு தைபேயில் நடந்த ஆசிய ஜூனியர் சாம்பியன்ஷிப் போட்டியில் 2 தங்கப் பதக்கங்களை கைப்பற்றினார். இதன் மூலம் இப்போட்டியில் தங்கப் பதக்கம் வென்ற முதல் இந்தியர் என்ற பெருமையையும் பெற்றார்.

2014-ம் ஆண்டு காமன்வெல்த் விளையாட்டுப் போட்டியில் கலந்துகொள்ள இருந்த நிலையில்தான் அவரது வாழ்க்கையை இருள் சூழ்ந்தது. ஆசிய ஜூனியர் சாம்பியன்ஷிப் போட்டியின்போது வந்த புகாரைத் தொடர்ந்து இந்திய தடகள கூட்டமைப்பு அவருக்கு பாலின சோதனை நடத்தியது. இந்த சோதனையில் அவரது உடலில் அளவுக்கு அதிகமாக ஆண்ட்ரோஜன் ஹார்மோன் (androgen hormone) சுரப்பதாக கண்டறியப்பட்டது. இதைத் தொடர்ந்து ஹைபராண்ட்ரோ ஜெனிசம் (hyperandrogenism) என்ற ஹார்மோன் பிரச்சினை யால் பாலின சோதனையில் டட்டீ தோல்வியடைந்ததாக அறிவிக்கப்பட்டது. சர்வதேச தடகள கூட்டமைப்பு அவருக்கு தடை விதிக்க, தேசிய பயிற்சி முகாமில் இருந்து வெளியேற்றப்பட்டார் டட்டீ சந்த். தன் கனவுகள் தகர்ந்ததால் கண்ணீரோடு பயிற்சி முகாமில் இருந்து வெளியேறினார் டட்டீ சந்த்.

பாலியல் சோதனையில் சிக்கி தடை விதிக்கப்பட்டவர்களுக்கு 2 வழிகள்தான் உள்ளன. முதலாவது வழி விளையாட்டுத்துறையை விட்டு விலகுவது. இரண்டாவது வழி, ஆண்ட்ரோஜன் ஹார்மோனின் அளவைக் குறைக்க சிகிச்சை எடுத்துக்கொண்டு அதிலிருந்து மீண்டு வருவது. ஆனால் டட்டீ சந்த் 3-வதாக ஒரு வழியை கண்டுபிடித்தார். அது தனக்கு விதிக்கப்பட்ட தடைக்கு எதிராக வழக்கு தொடர்வது. “என் உடலில் இயற்கையாக உள்ள ஒரு குறைக்கு நான் ஏதும் செய்ய முடியாது. நான் ஊக்க மருந்து பயன்படுத்தவில்லை. அப்படி இருக்கும்போது என் உடலில் உள்ள குறையை வைத்து எனக்குத் தடை விதிக்க முடியாது. சர்வதேச போட்டிகளில் கலந்துகொள்ள என்னை அனுமதிக்க வேண்டும்” என்று சர்வதேச விளையாட்டு தீர்ப்பாயத்தில் முறையிட்டார். அவருக்கு ஆதரவாக இந்திய விளையாட்டு ஆணையமும் களத்தில் குதித்தது. மேலும் சர்வதேச அளவில் பல வீரர்களும், விஞ்ஞானிகளும் அவருக்கு ஆதரவாக இருந்தனர்.

மிக நீண்ட சட்டப் போராட்டத்துக்கு பிறகு கடந்த ஆண்டு ஜூலை 25-ம் தேதி டட்டீ சந்துக்கு விதிக்கப்பட்டிருந்த தடையை சர்வதேச விளையாட்டு தீர்ப்பாயம் நீக்கியது. தடை விலக்கப்பட்டாலும் இந்திய விளையாட்டு ஆணையத்தின் பயிற்சி மையத்தில் சேர்ந்து பயிற்சிபெற டட்டீ சந்துக்கு அழைப்பு கிடைக்கவில்லை. இதனால் துவண்டு போனார் டட்டீ. இதைக் கேள்விப்பட்ட அவரது முன்னாள் பயிற்சியாளரான நாக்பூரி ரமேஷ், அவரை ஹைதராபாத்தில் பயிற்சி பெற அழைத்தார். ஹைதராபாத்தில் பாட்மிண்டன் பயிற்சி மையத்தை நடத்திவந்த கோபிசந்திடம் பேசிய ரமேஷ், அங்குள்ள நவீன வசதிகளை டட்டீ சந்த் பயன்படுத்த அனுமதி பெற்றார்.

ரமேஷ், கோபிசந்த் ஆகியோரின் உதவியால் புதிய பலம் பெற்ற டட்டீ சந்த் மீண்டும் வெற்றிப் பாதைக்கு திரும்பினார். அடுத்தடுத்து போட்டிகளில் வென்றவர் கடந்த ஜூன் 25-ம் தேதி கஜகஸ்தானில் நடந்த சர்வதேச தடகள போட்டியில் பங்கேற்றார். இதில் 100 மீட்டர் தூரத்தை 11.24 வினாடிகளில் கடந்து தேசிய சாதனை படைத்தார். இதன் மூலம் ஒலிம்பிக் போட்டிக்கும் தகுதிபெற்றார். (ஒலிம்பிக்கில் ஒருவர் 100 மீட்டர் ஓட்டத்தில் கலந்துகொள்ள வேண்டுமென்றால் பந்தய தூரத்தை 11.32 வினாடிகளில் கடக்கவேண்டும்) இதன் மூலம் பி.டி.உஷாவுக்கு பிறகு இப்பிரிவில் கலந்துகொள்ளும் முதல் வீராங்கனை என்ற சாதனையை அவர் படைத்துள்ளார்.

“கோபிசந்தும், பயிற்சியாளர் ரமேஷும் இல்லாவிட்டால் நான் இந்த ஒலிம்பிக்கில் கலந்துகொண்டிருக்க முடியாது” என்று கூறும் டட்டீ சந்த், இதுவரை காட்டிய போராட்ட குணத்தை ஒலிம்பிக்கிலும் காட்டி பதக்கத்தை வெல்வேன் என்று நம்புகிறார். அவரது கனவு நனவாக வாழ்த்துவோம்.

http://tamil.thehindu.com/sports/ரியோ-2016-தடைகளைத்-தாண்டிய-டட்டீ-சந்த்/article8932043.ece?homepage=true&relartwiz=true

  • தொடங்கியவர்

1984 லாஸ் ஏஞ்சலீஸ் ஒலிம்பிக்: ஏமாற்றம் தந்த பி.டி. உஷா

 
பி.டி.உஷா
பி.டி.உஷா

அமெரிக்காவின் லாஸ் ஏஞ்சலீஸ் நகரில் 23-வது ஒலிம்பிக் போட்டி 1984-ம் ஆண்டு ஜூலை 28 முதல் ஆகஸ்ட் 12 வரை நடைபெற்றது. 140 நாடுகளைச் சேர்ந்த 1,566 வீராங்கனைகள் உட்பட மொத்தம் 6,829 பேர் கலந்து கொண்டனர். 21 விளையாட்டுகளில் 221 பிரிவுகளில் போட்டிகள் நடைபெற்றன.

போட்டியை நடத்திய அமெரிக்கா 83 தங்கம் உட்பட 174 பதக்கங்களுடன் முதலிடத்தைப் பிடித்தது. ருமே னியா 20 தங்கம் உட்பட 53 பதக்கங் களை வென்று 2-வது இடத்தையும், மேற்கு ஜெர்மனி 17 தங்கம் உட்பட 59 பதக்கங்களை வென்று 3-வது இடத்தையும் பிடித்தன.

மொராக்கோ வீராங்கனை நவால் இல் மவுதாவாகெல் 400 மீட்டர் தடை தாண்டும் ஓட்டத்தில் தங்கம் வென்றார். இஸ்லாமிய நாட்டைச் சேர்ந்த பெண் ஒருவர் ஒலிம்பிக்கில் தங்கம் வென்றது இதுவே முதல்முறை. போர்ச்சுக்கல் வீரர் கார்லோஸ் லோப்ஸ் மாரத்தான் ஓட்டத்தில் சாதனை படைத்தார். 2 மணி, 9 நிமிடம், 21 விநாடிகளில் அவர் பந்தய தூரத்தைக் கடந்தார். இந்த சாதனை 24 ஆண்டுகளுக்குப் பின்னர் முறியடிக்கப்பட்டது.

பி.டி.உஷா ஏமாற்றம்

இந்தியாவால் ஒரு பதக்கம்கூட வெல்ல முடியவில்லை. 400 மீட்டர் தடை தாண்டும் ஓட்டத்தில் பங்கேற்ற இந்தியாவின் பி.டி. உஷா இறுதிச்சுற்று வரை முன்னேறினார். நூலிழையில் வெண்கலப் பதக்கம் வெல்லும் வாய்ப்பை இழந்த அவர், 4-வது இடத்தைப் பிடித்தார். ஒலிம்பிக் தடகளத்தில் இறுதிச் சுற்றுவரை முன்னேறிய முதல் இந்திய வீராங்கனை என்ற பெருமை பி.டி.உஷாவுக்கு கிடைத்தது.

http://tamil.thehindu.com/sports/1984-லாஸ்-ஏஞ்சலீஸ்-ஒலிம்பிக்-ஏமாற்றம்-தந்த-பிடி-உஷா/article8936118.ece

  • தொடங்கியவர்

இந்திய ஜோடிகள் டென்னிஸில் ஜொலிக்குமா?

பெ.மாரிமுத்து

Comment   ·   print   ·   T+  
 
 
 
 
 
mirsa_2957023f.jpg
 

1996-ல் நடைபெற்ற அட் லாண்டா ஒலிம்பிக் கில் ஒற்றையர் பிரிவில் லியாண்டர் பயஸ் வெண்கலம் வென்றார். அதைத் தவிர ஒலிம்பிக்கில் வேறு எதையும் இந்தியா சாதிக்க முடியவில்லை.

இம்முறை ரியோ ஒலிம்பிக் டென்னிஸ் போட்டியில் இந்தியாவின் சார்பில் 4 பேர் களமிறங்குகின்றனர். ஆடவர் மற்றும் மகளிர் ஒற்றையர் பிரிவுகளில் இந்தியாவிலிருந்து யாரும் தகுதி பெறவில்லை.

ஆடவர் இரட்டையர் பிரிவில் லியாண்டர் பயஸ் - ரோகன் போபண்ணா ஜோடியும், மகளிர் இரட்டையர் பிரிவில் சானியா மிர்சா - பிரார்த்தனா தாம்ப்ரே ஜோடியும், கலப்பு இரட்டையர் பிரிவில் ரோகன் போபண்ணா - சானியா மிர்சா ஜோடியும் களமிறங்குகின்றன.

இதில் ஆடவர் இரட்டையர் பிரிவு, கலப்பு இரட்டையர் பிரிவு ஆகியவற்றில் இந்தியா பதக்கம் வெல்ல வாய்ப்பிருப் பதாக கருதப்படுகிறது. இதில் ஆடவர் இரட்டையரில் நாட்டுக்காக விளையாடு கிறோம் என்ற அர்ப்பணிப்பு உணர்வுடன் பயஸும், போபண்ணாவும் ஒருங்கிணைந்து விளையாடினால் மட்டுமே பதக்க வேட்டை சாத்தியப்படும்.

2012-ல் நடைபெற்ற லண்டன் ஒலிம்பிக்கில் ஆடவர் இரட்டையர், கலப்பு இரட்டையர் பிரிவுகளில் பதக்கம் வெல்வதற்கு இந்தியாவுக்கு பிரகாசமான வாய்ப்புகள் இருந்தன. ஆனால் பயஸின் வாய்த் துடுக்கு, பூபதி, போபண்ணா ஆகியோர் பயஸை புறக்கணித்தது, கலப்பு இரட்டையர் பிரிவில் பூபதி-சானியா ஜோடி கலக்கி வந்த நிலையில், அதைப் பிரித்து பயஸோடு சானியாவை விளையாட வைத்தது போன்ற காரணங்களால் பதக்கமின்றி வெறுங்கையோடு திரும்பியது இந்திய அணி.

இந்த முறையும் அகில இந்திய டென்னிஸ் சங்கத்தின் வற்புறுத்தலின் பேரிலேயே பயஸை தனது இணையாக சேர்த்துள்ளார் போபண்ணா. 7-வது முறையாக ஒலிம்பிக்கில் களமிறங்கும் 42 வயதான பயஸுக்கு இதுவே கடைசி ஒலிம்பிக் போட்டியாக இருக்கும். அதேநேரத்தில் போபண்ணா இன்னொரு ஒலிம்பிக்கில் விளையாட முடியும் என்றாலும், அப்போது அவருக்கு பயஸ் போன்ற ஒரு வலுவான இணை கிடைப்பதற்கு வாய்ப்பே இல்லை.

42 வயதிலும் பயஸ் நேர்த்தியான ஆட்டக்காரராக உள்ளார். போபண்ணாவும் நல்ல பார்மில் இருக்கிறார். இந்த ஜோடி மனஸ்தாபங்களை மறந்து களத்தில் ஜொலிக்கும் பட்சத்தில் நிச்சயம் பதக்கம் கிடைக்கும்.

இரட்டையர், கலப்பு இரட்டையர் என இரு பிரிவுகளிலும் சேர்த்து 18 கிராண்ட் ஸ்லாம் பட்டங்கள் வென்றிருக்கிறார் பயஸ். போபண்ணா இதுவரை கிராண்ட் ஸ்லாம் போட்டியில் வென்றதில்லை என்றாலும், அவரைக் குறைத்து மதிப்பிட முடியாது. சர்வதேச அளவில் 14 இரட்டையர் பட்டங்கள் வென்றிருக்கிறார்.

கலப்பு இரட்டையர் பிரிவில். இந்த முறை சானியா மிர்சாவும், ரோகன் போபண்ணாவும் இணைந்து களமிறங்குவதால் இந்தியா நிச்சயம் பதக்கம் வெல்லக்கூடும் என கருதப்படுகிறது.

மகளிர் இரட்டையர் தரவரிசையில் சானியா மிர்சா முதலிடத்தில் இருக்கிறார். இந்த சீசனில் ஸ்விட்சர்லாந்தின் மார்ட்டினா ஹிங்கிஸுடன் இணைந்து ஆஸ்திரேலிய ஓபன் உள்ளிட்ட முக்கியப் போட்டிகளில் வென்றிருக்கிறார். தொடர்ச்சியாக 41 ஆட்டங்களில் வென்று சாதித்ததோடு, கடந்த இரு ஆண்டுகளாகவே உச்சக்கட்ட பார்மிலும் உள்ளார்.

அதேநேரத்தில் போபண்ணா ஆடவர் இரட்டையர் தரவரிசையில் 10-வது இடத்தில் இருக்கிறார். போபண்ணா, சானியா இடையே நல்ல புரிந்துணர்வு இருக்கிறது. நிறைய போட்டிகளில் ஒன்றாக இணைந்து ஆடிய அனுபவம் கொண்டவர்கள். போபண்ணா ஆடுகளத்தில் இடதுபுறம் ஆடக்கூடியவர். சானியா மிர்சா ஆடுகளத்தின் வலதுபுறம் ஆடக்கூடியவர். இது போபண்ணா-சானியா ஜோடிக்கு கூடுதல் பலமாகும்.

தாம்ப்ரே

மகளிர் இரட்டையர் பிரிவில் சானியா வுடன் பிரார்த்தனா தாம்ப்ரே இணைந்து விளையாடுகிறார். தாம்ப்ரே அனுபவமற்றவர் என்பது சற்று பின்னடைவுதான்.

தரவரிசையில் 198-வது இடத்தில் இருக்கும் தாம்ப்ரே, ஐடிஎப் போட்டியில் இரட்டையர் பிரிவில் 17 பட்டங்கள் வென்றிருந்தாலும், ஏடிபி போட்டிகளில் விளையாடிய அனுபவம் கிடையாது. 2014 ஆசிய விளையாட்டுப் போட்டியில் சானியாவும், தாம்ப்ரேவும் இணைந்து வெண்கல பதக்கம் வென்றனர். இரட்டையர் பிரிவில் தாம்ப்ரே முன்னணி வீராங்கனைகளை எப்படி சமாளிக்கிறார் என்பதை பொறுத்தே ஆட்டத்தின் முடிவு இருக்கும்.

http://tamil.thehindu.com/sports/இந்திய-ஜோடிகள்-டென்னிஸில்-ஜொலிக்குமா/article8936116.ece?homepage=true&relartwiz=true

  • தொடங்கியவர்

1988 சியோல் ஒலிம்பிக்: பென் ஜான்சன் - சாதனையும், சோதனையும்

 

 
சியோல் ஒலிம்பிக் போட்டியில் 100 மீட்டர் ஓட்டத்தில் வெற்றிக்கோட்டைத் தொடும் பென் ஜான்சன்(159). படம்: கெட்டி இமேஜஸ்
சியோல் ஒலிம்பிக் போட்டியில் 100 மீட்டர் ஓட்டத்தில் வெற்றிக்கோட்டைத் தொடும் பென் ஜான்சன்(159). படம்: கெட்டி இமேஜஸ்

தென் கொரிய தலைநகர் சியோலில் 24-வது ஒலிம்பிக் போட்டி 1988-ம் ஆண்டு செப்டம்பர் 17 முதல் அக்டோபர் 2 வரை நடைபெற்றது. 160 நாடுகளைச் சேர்ந்த 6,197 வீரர்கள், 2,194 வீராங்கனைகள் என மொத்தம் 8,391 பேர் கலந்து கொண்டனர். 27 விளையாட்டுகளில் 263 பிரிவுகளில் போட்டிகள் நடத்தப்பட்டன.

சோவியத் யூனியன் 55 தங்கம், 31 வெள்ளி, 46 வெண்கலம் என மொத்தம் 132 பதக்கங்களுடன் முதலிடத்தைப் பிடித்தது. கிழக்கு ஜெர்மனி 37 தங்கம், 35 வெள்ளி, 30 வெண்கலம் என மொத்தம் 102 பதக்கங்களுடன் 2-வது இடத்தையும், அமெரிக்கா 36 தங்கம், 31 வெள்ளி, 27 வெண்கலம் என 94 பதக்கங்களுடன் 3-வது இடத்தையும் பிடித்தன.

தகுதி நீக்கம்

கனடாவின் பென் ஜான்சன் 100 மீட்டர் ஓட்டத்தில் தங்கம் வென்றதோடு, புதிய உலக சாதனையும் படைத்தார். ஆனால் அவர் ஊக்கமருந்து உட்கொண்டது சோதனையில் தெரியவந்தால் அடுத்து தகுதி நீக்கம் செய்யப்பட்டார்.

குத்துச் சண்டையில் சர்ச்சை

அமெரிக்காவின் ராய் ஜோன்ஸ், தென் கொரியாவின் பார்க் சி-ஹன் ஆகியோரிடையிலான குத்துச் சண்டைப் போட்டியில் பார்க் சி-ஹென் வெற்றி பெற்றார். ஆனால் நடுவர்கள் ஜோன்ஸுக்கு எதிராக செயல் பட்டதாகவும், கொரிய ஏற்பாட்டாளர்கள் தங்கள் நாட்டு வீரருக்கு சாதகமாக செயல்படுமாறு நடுவரிடம் முன்கூட்டியே பேரம் பேசிவிட்டதாகவும் சர்ச்சை எழுந்தது. இதனால் அந்த 3 நடுவர்களும் சஸ்பெண்ட் செய்யப்பட்டனர். ஜோன்ஸ் சிறந்த குத்துச்சண்டை வீரராக தேர்வு செய்யப்பட்டார்.

ஸ்டெபி கிராப்

64 ஆண்டுகளுக்குப் பிறகு ஒலிம்பிக் போட்டியில் மீண்டும் டென்னிஸ் கொண்டுவரப்பட்டது. அமெரிக்க வீராங்கனை ஸ்டெபி கிராப் தங்கம் வென்றார். இறுதிப் போட்டியில் அர்ஜென் டினாவின் கேப்ரிலா சபாட்டினியை வீழ்த்தினார் ஸ்டெபி கிராப்.

கருணை உள்ளம்

படகுப் போட்டி நடத்தப்பட்டபோது கடுமையான காற்று வீசியது. அப்போது போட்டியாளர் ஒருவர் படகில் இருந்து தூக்கி வீசப்பட்டார். அதைப் பார்த்த கனடா வீரர் லாரன்ஸ் போட்டியைக் கைவிட்டுவிட்டு அவரைக் காப்பாற்றி, ரோந்துப் படகில் வந்தவர்களிடம் ஒப்படைத்துவிட்டு, மீண்டும் போட்டியில் கலந்துகொண்டார்.

இதனால் 2-வது இடத்தை நோக்கி விரைந்து கொண்டிருந்த அவரால் 21-வது இடத்தையே பிடிக்க முடிந்தது. லாரன்ஸின் துணிவையும், தியாகத்தையும் பாராட்டி, அவருக்கு சிறப்பு விருது வழங்கியதோடு, வெள்ளிப் பதக்கத்தையும் வழங்கி கவுரவித்தது சர்வதேச ஒலிம்பிக் கவுன்சில்.

யூரி ஸகாரெவிச்

சோவியத் யூனியனின் பளுதூக்குதல் வீரர் யூரி ஸகாரெவிச் ஆடவர் ஹெவி வெயிட் போட்டியில் ஸ்னாட்ச் பிரிவில் 210 கிலோ, கிளீன் அன்ட் ஜெர்க் பிரிவில் 245 கிலோ என மொத்தம் 455 கிலோ எடையைத் தூக்கி தங்கம் வென்றார். இவர் 1983-ம் ஆண்டு உலக சாதனை நிகழ்த்த முயற்சி செய்தபோது, அவருடைய கைமூட்டு முறிந்து இடம்பெயர்ந்தது. இருப்பினும் செயற்கை மூட்டு பொருத்திய பிறகு ஒலிம்பிக்கில் பங்கேற்று சாதனைப் படைத்தார்.

http://tamil.thehindu.com/sports/1988-சியோல்-ஒலிம்பிக்-பென்-ஜான்சன்-சாதனையும்-சோதனையும்/article8941088.ece

  • தொடங்கியவர்

ஒலிம்பிக் போட்டிகள் நாளை தொடங்குகின்றன: விழாக்கோலம் பூண்டது ரியோ நகரம்

 

  • ரியோ ஒலிம்பிக் போட்டியில் பங்கேற்கும் இந்திய வீரர்களை வரவேற்கும் நிகழ்ச்சி அங்குள்ள ஒலிம்பிக் கிராமத்தில் நேற்று முன்தினம் நடந்தது. இதில் பங்கேற்ற இந்திய வீரர்கள் செல்பி எடுத்துக்கொண்டனர்.
    ரியோ ஒலிம்பிக் போட்டியில் பங்கேற்கும் இந்திய வீரர்களை வரவேற்கும் நிகழ்ச்சி அங்குள்ள ஒலிம்பிக் கிராமத்தில் நேற்று முன்தினம் நடந்தது. இதில் பங்கேற்ற இந்திய வீரர்கள் செல்பி எடுத்துக்கொண்டனர்.
  • ஒலிம்பிக்கில் பங்கேற்பதற்காக ரியோ நகருக்கு வந்துள்ள விளையாட்டு வீரர்களை உற்சாகப்படுத்தும் வகையில் பாரம்பரிய நடனமாடும் பிரேசில் மக்கள்.
    ஒலிம்பிக்கில் பங்கேற்பதற்காக ரியோ நகருக்கு வந்துள்ள விளையாட்டு வீரர்களை உற்சாகப்படுத்தும் வகையில் பாரம்பரிய நடனமாடும் பிரேசில் மக்கள்.
  • ரியோ ஒலிம்பிக் போட்டியில் பங்கேற்கும் வீரர்கள் பயிற்சி பெறுவதற்காக அமைக்கப்பட்டுள்ள பிரத்யேக உடற்பயிற்சிக் கூடம். படம்:கெட்டி இமேஜஸ்
    ரியோ ஒலிம்பிக் போட்டியில் பங்கேற்கும் வீரர்கள் பயிற்சி பெறுவதற்காக அமைக்கப்பட்டுள்ள பிரத்யேக உடற்பயிற்சிக் கூடம். படம்:கெட்டி இமேஜஸ்

ஒலிம்பிக் விளையாட்டுப் போட்டிகள் நாளை தொடங்கவுள்ளதை முன்னிட்டு ரியோ நகரம் விழாக்கோலம் பூண்டுள்ளது.

பிரேசில் நாட்டில் உள்ள ரியோ நகரில் ஒலிம்பிக் விளையாட்டுப் போட்டிகள் நாளை (5-ம் தேதி) தொடங்குகின்றன. இப்போட்டியில் அமெரிக்கா, சீனா, இந்தியா உட்பட 206 நாடுகளைச் சேர்ந்த 11 ஆயிரத்துக்கும் மேற்பட்ட வீரர்கள் கலந்துகொள்கின்றனர். தொடக்க விழா நிகழ்ச்சிகள் நாளை (இந்திய நேரப்படி சனிக்கிழமை அதிகாலை 4.30 மணி) தொடங்குவதை முன்னிட்டு பல்வேறு நாடுகளைச் சேர்ந்த வீரர்களும் ஒலிம்பிக் கிராமத் துக்கு வந்தவண்ணம் உள்ளனர். அவர்களை பிரேசில் மக்கள் தங்கள் பாரம்பரிய நடனங்களை ஆடி வரவேற்று வருகின்றனர். இதனால் ரியோ நகரமே விழாக்கோலம் பூண்டுள்ளது.

இந்திய வீரர்களுக்கு வரவேற்பு

ரியோ ஒலிம்பிக் போட்டியில் பங்கேற்கும் இந்திய வீரர்களுக்கு வரவேற்பு அளிக்கும் நிகழ்ச்சி ஒலிம்பிக் கிராமத்தில் நேற்று முன்தினம் நடந்தது. இதில் பிரேசிலின் கலாச்சாரத்தை எடுத்துக்காட்டும் விதமாக நடனம் மற்றும் இசை நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டன. 45 நிமிடங்கள் நடந்த இந்த நிகழ்ச்சியின்போது இந்திய தேசியக் கொடி ஒலிம்பிக் கிராமத்தில் ஏற்றிவைக்கப்பட்டது. இதில் இந்திய விளையாட்டு வீரர் கள் வெள்ளை நிற டிராக் சூட்களை அணிந்து கலந்துகொண்டனர். இந்த நிகழ்ச்சியில் பங்கேற்ற இந்திய ஒலிம்பிக் சங்கத் தலைவர் என்.ராமச்சந்திரன், இந்திய குழு வின் தலைவர் ராகேஷ் குப்தா ஆகியோர் ஒலிம்பிக் கிராமத்தின் மேயரான ஜானெத் அர்கெயினுக்கு இரண்டு வெள்ளி யானைச் சிலைகள் மற்றும் தங்க முலாம் பூசப்பட்ட மயிலின் சிலையை நினைவுப் பரிசாக வழங்கினர்.

கூடுதல் நாற்காலிகள்

ஒலிம்பிக் கிராமத்தில் இந்திய ஹாக்கி வீரர்கள் தங்கியுள்ள அபார்ட்மென்ட்களில் போதிய நாற்காலிகள் இல்லை என்று அணியின் பயிற்சியாளர் ஓல்ட்மான்ஸ் புகார் கூறியிருந்தார். இதைத் தொடர்ந்து இந்திய வீரர்கள் தங்கும் அறைகளுக்கு கூடுதல் நாற்காலிகள் மற்றும் தொலைக்காட்சிப் பெட்டிகளை வாங்க முடிவெடுக்கப்பட்டுள்ளது.

இதுபற்றி இந்திய ஒலிம்பிக் குழுவின் தலைவர் ராகேஷ் குப்தா கூறும்போது, “போட்டி அமைப் பாளர்கள் போதிய நாற்காலி களுக்கும் தொலைக்காட்சிப் பெட் டிகளுக்கும் ஏற்பாடு செய்யாத தால், பிரேசிலில் உள்ள இந்திய தூதரகம் மூலம் அவற்றை வாங்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இந்திய வீரர்களுக்கு தேவையான அனைத்து வசதிகளும் ரியோ நகரில் செய்து கொடுக்கப்படும்” என்றார்.

நர்சிங் யாதவுக்கு அனுமதி

ரியோ ஒலிம்பிக் போட்டியில் ஆண்களுக்கான 74 கிலோகிராம் மல்யுத்த பிரிவில் கலந்துகொள்ள இந்திய வீரர் நர்சிங் யாதவுக்கு உலக மல்யுத்த கூட்டமைப்பு அனுமதி அளித்துள்ளது. முன்னதாக ஊக்கமருந்து சோதனையில் இருந்து விடுவிக்கப்பட்ட நர்சிங் யாதவை ஒலிம்பிக் போட்டியில் பங்கேற்க அனுமதிக்க வேண்டும் என்று உலக மல்யுத்த கூட்டமைப்புக்கு, இந்திய மல்யுத்த கூட்டமைப்பு கடிதம் எழுதியிருந்தது. இந்தக் கடிதத்தை தொடர்ந்து நர்சிங் யாதவுக்கு அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. இந்திய மல்யுத்த கூட்டமைப்பின் தலைவர் பிரிஜ் பூஷண் ஷரண் இத்தகவலை தெரிவித்தார். இருப்பினும் ஒலிம்பிக் போட்டியில் நர்சிங் யாதவ் பங்கேற்க இன்னும் உலக ஊக்கமருந்து தடுப்பு ஆணையத்தின் அனுமதியையும் பெறவேண்டும். இது தொடர்பாக அந்த அமைப்பு தேசிய ஊக்கமருந்து தடுப்பு ஆணையத்தின் விளக்கத்தைக் கேட்டுள்ளது.

தரம்பீருக்கு சிக்கல்

ஒலிம்பிக் போட்டியில் கலந்து கொள்ளும் இந்திய வீரர்களில் நர்சிங் யாதவ், இந்தர்ஜித் சிங் ஆகியோரைத் தொடர்ந்து தடகள வீரர் தரம்பீர் சிங்கும் சிக்கியுள்ளார். இவர் 200 மீட்டர் ஓட்டப்பந்தயத்தில் கலந்து கொள்ள தேர்ந்தெடுக்கப்பட்டிருந் தார். 36 ஆண்டுகளுக்குப் பிறகு ஒலிம்பிக்கில் ஓட்டப்பந்தயத்தில் பங்கேற்கும் முதல் இந்திய வீரர் என்ற பெருமையைப் பெற்றிருந்த தரம்பீருக்கு நடத்தப்பட்ட ரத்த சோதனையில் அவர் ஊக்கமருந்து பயன்படுத்தியது தெரியவந்துள் ளதாக தேசிய ஊக்கமருந்து தடுப்பு ஆணையம் தெரிவித்துள்ளது. இதைத் தொடர்ந்து அவரை ரியோ நகருக்கு அனுப்புவது தற்காலிக மாக நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது.

பல்பீர் சிங் விருப்பம்

ஒலிம்பிக் ஹாக்கி போட்டியில் இந்தியா தங்கப் பதக்கம் வெல்ல வேண்டும் என்பதே தனது கடைசி ஆசை என்று முன்னாள் ஹாக்கி வீரர் பல்பீர் சிங் கூறியுள்ளார். 92 வயதான இந்தியாவின் மூத்த ஹாக்கி வீரரான அவர் செய்தி நிறுவனம் ஒன்றிடம் இதுபற்றி கூறும்போது, “இந்த ஒலிம்பிக்கில் கலந்துகொள்ளும் இந்திய அணி மீது நான் மிகுந்த நம்பிக்கை வைத்துள்ளேன். நான் இறப்பதற்குள் மீண்டும் ஒருமுறை இந்திய ஹாக்கி அணி ஒலிம்பிக்கில் தங்கப் பதக்கம் வெல்லவேண்டும் என்று விரும்புகிறேன். இதுவே எனது கடைசி ஆசையாகும்” என்றார்.

http://tamil.thehindu.com/sports/ஒலிம்பிக்-போட்டிகள்-நாளை-தொடங்குகின்றன-விழாக்கோலம்-பூண்டது-ரியோ-நகரம்/article8941090.ece?homepage=true

  • தொடங்கியவர்

ரியோ ஒலிம்பிக்கின் 5 'லேடி' சூப்பர் ஸ்டார்கள்!

ரியோ ஒலிம்பிக் தொடர் நாளை தொடங்குகிறது. வீரர், வீராங்கனைகள் ரியோவில் குவிந்துவிட்டனர். இந்த ஒலிம்பிக்கை பொறுத்தவரை 5 வீராங்கனைகள் உற்று கவனிக்கப்பட வேண்டியவர்கள். 'லேடி 'சூப்பர் ஸ்டார்களான அவர்களைப் பற்றி பார்ப்போம்.

ஜப்பான் அணியின் முதல் பெண் கேப்டன்

ஜப்பான் குழுவின் தலைவர் சோரி யோஷிடா இதில் முதன்மையானவர். அபாரத் திறமை கொண்ட மல்யுத்த வீராங்கனை. கடந்த 2004ம் ஆண்டு ஏதென்ஸ் ஒலிம்பிக்கில்தான் முதன்முறையாக மகளிருக்கான மல்யுத்தப் போட்டி அறிமுகப்படுத்தப்பட்டது. அதில் இருந்து லண்டன் ஒலிம்பிக் வரை 55 கிலோ பிரீஸ்டைல் பிரிவில் தொடர்ந்து தங்கம் வெனறு வருகிறார் யோஷிடா.  தற்போது 33 வயதான இவர் 13 முறை உலகச் சாம்பியன் பட்டத்தையும் கைப்பற்றியவர்.

yos.jpg

லண்டன் ஒலிம்பிக்கில் ஜப்பான் குழுவுக்கு கேப்டனாக நியமிக்கப்பட்டு தேசியக் கொடியை ஏந்தி செல்லும் பெருமை யோஷிடாவுக்கு வழங்கப்பட்டது.  ஜப்பான் அணிக்கு கேப்டனாக நியமிக்கப்பட்ட முதல் வீராங்கனையும் இவர்தான். இவரது தந்தை எக்காஸ்ட் யோஷிடாவும் முன்னாள் ஒலிம்பிக் சாம்பியன்தான். தற்போது ஜப்பான் அணிக்கு மல்யுத்த பயிற்சியாளராக இருக்கிறார். ''மூன்று தங்கப்பதக்கங்களுடன் திருப்தி அடைந்து விடப் போவதில்லை நான்காவது தங்கமே இலக்கு'' என்று கர்ஜிக்கிறார் யோஷிடா.

செமன்யாவும் பாலின சர்ச்சையும்...

தடகள வீராங்கனை காஸ்டர் செமன்யா, தென்ஆப்ரிக்காவின் அதிவேக 'ஸ்பிரின்டர்'. ரியோ ஒலிம்பிக்கில் 800 மீட்டர் ஓட்டத்தில் தங்கம் வெல்லும் வாய்ப்பு மட்டுமல்ல, உலக சாதனையும் கூட படைப்பார் என்ற எதிர்பார்ப்பு இருக்கிறது. கடந்த 2009ம் ஆண்டு உலக சாம்பியன்ஷிப் போட்டியில் 800 மீட்டர் ஓட்டத்தில் செமன்யா தங்கம் வென்றார். செமன்யாவுக்கும், அப்போதைய உலகச் சாம்பியனும் இந்த ஓட்டத்தில் வெள்ளி வென்றவருமான கென்ய வீராங்கனை ஜெனத்துக்கும்  வித்தியாசம் மலைக்கும் மடுவுக்குமானதாக இருந்தது.  இதனைத் தொடர்ந்து செமன்யா பாலின பரிசோதனைக்குட்படுத்தப்பட்டார். அவரது உடலில் ஆண்களுக்கான ஹார்மோன்கள் அதிகமாக இருப்பதாகவும் ஆண்தன்மை நிறைந்தவர் என்றும் புகார் எழுந்தது.

sems.jpg

இந்த சர்ச்சையால் 11 மாதங்கள் அவரால்,  போட்டியில் பங்கேற்க முடியாத நிலை. ஆனால் தென்ஆப்ரிக்காவே செமன்யாவுக்கு பின்னால் இருந்தது. பல போராட்டத்திற்கு பின் மீண்டும் தடகளம் திரும்பிய அவர், 2011ம் ஆண்டு உலகத்தடகளப் போட்டியில் 800 மீட்டர் ஓட்டத்தில் வெள்ளி வென்றார். லண்டன் ஒலிம்பிக் தொடக்க விழாவில் தென்ஆப்ரிக்கத் தேசியக் கொடியை ஏந்தி செல்லும் கவுரவம் செமன்யாவுக்கு வழங்கப்பட்டது. 

லண்டன் ஒலிம்பிக்கில் செமன்யா வெள்ளிப் பதக்கமும் வென்றிருந்தார். ரியோவில் தங்கத்தை குறி வைத்துள்ளார் செமன்யா. தற்போது, ''வீராங்கனைகளிடம் ஆண்களுக்கான ஹார்மோன்கள் அதிகமாக இருப்பது, அவர்களது தடகளத் திறமைக்கு உந்து சக்தியாக இருக்கிறது என்பதற்கு போதுமான அறிவியல்பூர்வமான  ஆதாரங்கள் நிரூபிக்கப்படவில்லை '' என லாசானேவில் உள்ள சர்வதேச விளையாட்டுத் தீர்ப்பாயம் அறிவித்துள்ளது.

குழந்தை பிறப்பு ஒரு தடையல்ல...

தடகளமே கடினமானது. அதுவும் ஹெப்டத்லான் பற்றி சொல்லவே வேண்டாம். 100 மீட்டர் தடை தாண்டும் ஓட்டம், ஹைஜம்ப், லாங் ஜம்ப், ஷாட் புட், 200 மீட்டர் ஓட்டம், ஈட்டி எறிதல், 800 மீட்டர் ஓட்டம் என 7 விளையாட்டுகள்  அடங்கிய கடுமையான ஒரு பிரிவு ஹெப்டத்லான். இத்தகைய கடின விளையாட்டில் பங்கேற்கும் ஜெசிகா என்னிஸ் ஹில் பிரிட்டனை சேர்ந்தவர்.

jesi.jpg

லண்டன் ஒலிம்பிக்கில் ஹெப்டத்லானில் 6,955 புள்ளிகள் பெற்று தங்கம் வென்றவர். ரியோவிலும் தங்கம் கைப்பற்றினால், குழந்தை பிறந்த பிறகு பதக்கத்தை தக்க வைத்துக் கொண்ட 3வது தடகள வீராங்கனை என்ற பெருமையை ஜெசிகா பெறுவார். கடந்த 2014ம் ஆண்டு ஜெசிகாவுக்கு மகன் பிறந்தான். அவனுக்கு ரெஜ்ஜி என பெயர் சூட்டிய கையோடு மீண்டும் பயிற்சிக்குத் திரும்பிய ஜெசிகா, அடுத்த ஆண்டே பெய்ஜிங்கில் நடந்த உலகத் தடகளப் போட்டியில் ஹெப்டத்லானில் தங்கம் வென்று அசத்தினார்.  ரியோவிலும் ஜெசிகாவுக்குதான் தங்கப் பதக்கத்திற்கான வாய்ப்பு இருக்கிறது.

'லேடி' பீலே

மார்த்தா... பிரேசிலிய கால்பந்து வீராங்கனை. சூரியன் ஷேடோவில் இருக்கும் சந்திரன் போல, பிரேசில் கால்பந்து வீரர்கள் புகழில் மறைந்து வாழும் பரிதாப ஜீவன். பீலேவை தெரியும்; ரொனால்டோவைத் தெரியும்; ரொனால்டினோவைத் தெரியும்; ஆனால் மார்த்தா என்றால் யார் என கேட்கும் கால்பந்து ‘உலகம். இவரும் மெஸ்சியை போல் 5 முறை 'பல்லான் டி ஓர் '(தங்கப்பந்து விருது)விருதை வென்றவர்தான். அதுவும் 2006 முதல் 2010ம் ஆண்டு வரை தொடர்ச்சியாக 5 முறை கால்பந்து உலகின் கௌரவ விருதை கைப்பற்றிய வீராங்கனை.

mars.jpg

ஆடவர் கால்பந்து அணிபோல போல பிரேசில் மகளிர் கால்பந்து அணி வெற்றிகளை குவித்ததில்லை. உலகக் கோப்பையை இதுவரை வென்றதில்லை. ஒரே ஒரு முறை இறுதி ஆட்டம் வரை முன்னேறியது. ஒலிம்பிக்கிலும் தங்கம் வென்றதில்லை. இந்த முறை தாய் மண்ணில் போட்டி நடைபெறுவதால் பிரேசில் அணி கோப்பையை வெல்லும் முனைப்பில் இருக்கிறது. அப்படி வென்றால் அதற்கு மார்த்தா காரணமாக இருப்பார்.

ஜமைக்காவின் 'பாக்கெட் ராக்கெட்'

ஷெல்லி ஆன் ஃபிரேசர்... ஜமைக்காவின் தடகள ராணி. 'பாக்கெட் ராக்கெட்' என்பது ஷெல்லியின் செல்லப் பெயர். 100 மீட்டர் ஓட்டத்தில் அடித்துக் கொள்ள ஆள் கிடையாது. பெய்ஜிங் மற்றும் லண்டன் ஒலிம்பிக்கில் 100 மீட்டர் ஓட்டத்தில் தங்கம் வென்றவர். இப்போது ரியோ ஒலிம்பிக்கிலும் 100 மீட்டர் ஓட்டத்தில் தங்கத்தை குறி வைத்துள்ளார்.

shelly.jpg

இன்னொரு விஷயம், 100 மீட்டர் ஓட்டத்தில் எந்த வீராங்கனையும் 'ஹாட்ரிக் ' தங்கம் வென்றது கிடையாது. ரியோவில் ஷெல்லி தங்கம் வென்றால், புதிய வரலாறு படைப்பார். லண்டன் ஒலிம்பிக்கில் 200 மீட்டர் ஓட்டத்தில் ஷெல்லி, வெள்ளி வென்றிருந்தார். ட்ரையல்சின்போது காயமடைந்த காரணத்தினால், இந்த ஒலிம்பிக்கில் 200 மீட்டர் ஓட்டத்தில் பங்கேற்கவில்லை. ஒலிம்பிக்  தொடக்க விழாவின்போது, ஜமைக்காவின் தேசியக் கொடியை ஏந்திச் செல்கிறார் ஷெல்லி.

http://www.vikatan.com/news/sports/66830-five-women-to-watch-at-the-rio-olympics.art

  • தொடங்கியவர்

பதக்க நாயகன் பெல்ப்ஸ்

 

 
belps1_2958254f.jpg
 

உலகின் தலைசிறந்த ஒலிம்பிக் நீச்சல் வீரர் என்ற பெருமையைப் பெற்றுள்ள அமெரிக்க வீரர் மைக்கேல் பெல்ப்ஸ் சாதாரண குடும்பத்தில் பிறந்தவர். தந்தை பிரெட் காவல்துறை அதிகாரி. தாய் டெப்பி ஆசிரியை. பெல்ப்சின் மூத்த சகோதரி விட்னியும் நீச்சல் வீராங்கனை. பெல்ப்ஸுக்கு 7 வயதாக இருந்தபோதே அவரது பெற்றோர் கருத்து வேறுபாடு காரணமாக பிரிந்து விட்டனர்.

பயிற்சியாளர் பாப் பவ்மென், 11 வயதில் மைக்கேல் பெல்ப்ஸ்-ஐ பார்த்தார். அந்த கணமே பவ்மெனின் மனதில், பெல்ப்ஸ் உலக சாம்பியனாக நிச்சயம் வருவார் எனத் தோன்றியது.

இதையடுத்து அவரது பெற்றோரிடம் பேசிய பவ்மென், பெல்ப்ஸ் மனது வைத்தால் உலகின் தலைசிறந்த நீச்சல் வீரனாக முன்னேற முடியும் என தன் மனதில் தோன்றியதை கூறினார். அவர் அன்று சொன்ன வார்த்தை பொய்த்து போகவில்லை.

ஒலிம்பிக்கின் தங்க வேட்டை நாயகனாக உருவெடுத்துள்ள மைக்கேல் பெல்ப்ஸ். 18 தங்கப்பதக்கம் வென்று சாதனை படைத்துள்ளார்.

சோவியத் யூனியனை சேர்ந்த ஜிம்னாஸ்டிக் வீராங்கனை லரிசா லத்யானியா (1956-1964), பின்லாந்து தடகள வீரர் பாவோ நுர்மி (1920-1928), அமெரிக்க நீச்சல் வீரர் மார்க் பிட்ஸ் (1968-1972), அமெரிக்க தடகள வீரர் கார்ல் லீவிஸ் (1984-1996) ஆகியோர் தலா 9 தங்கப்பதக்கம் வென்றதே தனிப்பட்ட வீரரின் அதிகபட்ச தங்கமாக இருந்தது. இதை பெல்ப்ஸ் பெய்ஜிங் ஒலிம்பிக்கில் முறியடித்தார்.

பெல்ப்ஸ் 2004-ம் ஆண்டு ஏதென்சில் நடந்த ஒலிம்பிக்கில் 6 தங்கமும், 2 வெண்கல பதக்கமும் பெற்றார். 2008-ல் பெய்ஜிங் ஒலிம்பிக்கில் 8 தங்கம் கைப்பற்றினார். 2012-ம் ஆண்டு லண்டனில் நடந்த ஒலிம்பிக்கில் 4 தங்கமும், 2 வெள்ளியும் வென்றார். 3 ஒலிம்பிக்கிலும் சேர்த்து 18 தங்கம், 2 வெள்ளி, 2 வெண்கலம் என மொத்தம் 22 பதக்கம் பெற்றுள்ளார் பெல்ப்ஸ்.

பெய்ஜிங் ஒலிம்பிக்கில் 8 தங்கம் வென்றதன் மூலம் பெல்ப்ஸ் ஒரே ஒலிம்பிக்கில் அதிக தங்கப்பதக்கம் பெற்றவர் என்ற சாதனையை படைத்திருந்தார். அதற்கு முன்பு 1972-ம் ஆண்டு ஒலிம்பிக்கில் அமெரிக்க நீச்சல் வீரர் மார்க் பிட்ஸ் 7 தங்கப்பதக்கங்களை வென்றதே சாதனையாக இருந்தது.

ஒலிம்பிக் போட்டியில் அதிக பதக்கம் வென்ற சாதனை வீரராகவும் பெல்ப்ஸ் இருக்கிறார். ஒன்றுபட்ட சோவியத் யூனியன் சார்பாக பங்கேற்ற ஜிம்னாஸ்டிக் வீராங்கனை லரிசா லாத்னியாதான் அதிக பதக்கம் வென்றவராக திகழ்ந்தார். இவர் 1956, 1960, 1964 ஆகிய 3 ஒலிம்பிக் போட்டிகளின் மூலம் 18 பதக்கங்களைப் பெற்றார். இதை பெல்ப்ஸ் லண்டன் ஒலிம்பிக்கில் முறியடித்து, அதிக பதக்கங்கள் (22) வென்றவர் என்ற சாதனையை படைத்தார்.

வெற்றி ரகசியம்

போட்டியிடும் மனப்பான்மை, மிக சிறப்பான உடல் தகுதி ஆகியவையே பெல்ப்ஸின் சாதனையின் ரகசியம் என்று பயிற்சியாளர் பாப் பவ்மென் கூறியுள்ளார். அகன்ற தோள்கள், மிக நீளமான கைகள் உள்ளிட்ட உடல் அம்சங்கள் நீச்சலில் அவருக்கு பேருதவி யாக இருக்கிறது. 6 அடி 4 அங்குலம் உயரமுடைய பெல்ப்ஸின் கைகள் மற்ற வர்களைக் காட்டிலும் சற்றே நீளமானது என்பதால், உயரத்துக்கு ஏற்ற அளவை விட 3 அங்குலம் கூடுதலான தூரத்தை எட்டக் கூடிய சிறப்புத் தகுதியை பெல்ப்ஸ் பெற்றுள்ளார்.

நீச்சல் போட்டிகளில் ஒரு முனையில் இருந்து மறுமுனைக்கு செல்லும் வீரர்கள் அங்கிருந்து திரும்பி வர நீருக்குள்ளேயே ஒரு குட்டிக்கரணம் அடித்து கால்களால் சுவரை உதைத்து ஒரு உந்துதலை உருவாக்கி மீண்டும் நீந்திச் செல்வர். இந்த விஷயத்திலும் பெல்ப்ஸ் சற்றே வித்தியாசமானவர்.

மற்ற நீச்சல் வீரர்களைப் போல் குட்டிக்கரணம் அடிக்கும் போது பெல்ப்ஸ் அதிக ஆழத்திற்கு செல்ல மாட்டார். நீரின் மேல்மட்டத்தில் இருப்பதால் நீரின் ஈர்ப்பு விசை மிகக் குறைவாக இருக்கும். இதன் காரணமாக மற்ற வீரர்கள் கால்களால் சுவரை உதைத்து கடக்கும் தூரத்தை விட பெல்ப்ஸ் சற்றே அதிக தூரம் செல்ல முடிகிறது. இந்த சூட்சுமத்தை பெல்ப்ஸ் நீண்ட காலமாக பயன்படுத்தி வருவதே அவரது தங்கவேட்டையின் ரகசியமாக உள்ளது.

இந்த முறை ரியோ ஒலிம்பிக்கில் பெல்ப்ஸ் 4 பிரிவுகளில் (100 மீட்டர் பட்டர்பிளை, 200 மீட்டர் பட்டர் பிளை, 200 மீட்டர் தனி நபர் மெட்லே, 4X100 மீட்டர் மெட்லே தொடர்) தங்க பதக்க வேட்டைக்காக களமிறங்குகிறார்.

http://tamil.thehindu.com/sports/பதக்க-நாயகன்-பெல்ப்ஸ்/article8941072.ece?homepage=true&relartwiz=true

  • தொடங்கியவர்

ரியோ ஒலிம்பிக்: 29 ரஷிய நீச்சல் வீரர்களுக்கு அனுமதி

160727092852_russia_ban_olympic_624x351_

 

ரியோ ஒலிம்பிக்ஸ் போட்டியில் கலந்து கொள்ள மொத்தம் 67 ரஷிய நீச்சல் வீரர்களில் 29 பேருக்கு சர்வதேச ஒலிம்பிக் கமிட்டி அனுமதி வழங்கியுள்ளது.

ரியோ ஒலிம்பிக்ஸில் கலந்து கொள்ள அனுமதிக்கப்பட்டவர்களில் ரஷியாவின் ஒருங்கிணைக்கப்பட்ட நீச்சல் அணியும் மற்றும் ரஷிய பெண்கள் தண்ணீர் பந்தாட்ட அணியும் அடங்கும்.

11 ரஷிய குத்துச்சண்டை வீரர்களும் கலந்து கொள்ள அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

ஆனால், ரஷிய பளு தூக்குதல் அணி மற்றும் 17 துடுப்பு போடும் வீரர்கள் மீதான தடையை மேல் முறையீட்டின் மூலம் விலக்கும் முயற்சி தோல்வியில் முடிந்துள்ளது.

நாட்டின் ஊக்க மருந்து மோசடியை தொடர்ந்து, ரஷிய வீரர்கள் ரியோ ஒலிம்பிக் போட்டியில் கலந்து கொள்ள அனுமதிக்கலாமா என்ற முடிவை அந்தந்த விளையாட்டு கூட்டமைப்புகளே எடுத்து கொள்ள சர்வதேச ஒலிம்பிக் கமிட்டி கேட்டுக் கொண்டிருக்கிறது.

http://www.bbc.com/tamil/sport/2016/08/160804_russia_swimmers_allowed_in_rio

  • தொடங்கியவர்

ஒலிம்பிக்கில் பெண்கள்!

OLY_3.jpg வேலைகளில் மட்டும் அல்ல, ஆண்களுக்கு நிகராக பெண்களும் இன்று, அனைத்து விளையாட்டுப் போட்டிகளிலும் பங்கேற்கின்றனர். உள்ளூர் போட்டிகள் முதல் உலகப் போட்டிகள் வரை முத்திரை பதித்து வருகின்றனர் பெண் வீராங்கனைகள்.

இவ்வாறு பெண்கள், விளையாட்டில் அதிக அளவில் பங்கேற்க ஒலிம்பிக் போட்டி முக்கிய காரணமாக அமைந்தது என்றால் அது மிகையில்லை. ஆனால், முதன்முதலில் பெண்கள் பங்கேற்ற ஒலிம்பிக் எது தெரியுமா? 

முதன்முதலில், ஒலிம்பிக் போட்டி 1896 ம் ஆண்டு ஏதென்ஸில் நடைபெற்றது. இரண்டாவது, ஒலிம்பிக் போட்டி 1900 ம் ஆண்டு பாரிஸில், வெலொட்ரொம் டீ வின்ஸென்ஸ் என்ற ஆடுகளத்தில் நடைபெற்றது. அங்கு மொத்தம் 997 வீரர்கள் பங்கேற்றனர். அதில் 22 பேர் பெண்கள். முதன்முதலில் பெண்கள் பங்கேற்ற ஒலிம்பிக் போட்டி இதுவே ஆகும். அங்கேதான் துவங்கியது ஒலிம்பிக் போட்டியில் பெண்களின் பங்கேற்பு. அன்று வெறும் 2 சதவிகிதமாக இருந்த பெண்களின் பங்கேற்பு, கடந்த லண்டன் ஒலிம்பிக்கில் 44 சதவீதமாக உயர்ந்தது.

அந்த ஒலிம்பிக்கில் தடகளப் போட்டிகள், நீச்சல் போட்டி, மல்யுத்தம், ஜிம்னாஸ்டிக்ஸ், கத்திச் சண்டை, பிரஞ்ச் மற்றும் பிரிட்டிஷ் குத்துச்சண்டை, படகு பந்தயம், சைக்கிள் ஓட்டுதல், கோல்ஃப், உயிர் காத்தல், வில்வித்தை, பளு தூக்குதல், படகோட்டுதல் (துடுப்போடு), டைவிங், தண்ணீர் பந்தாட்டம் (Water Polo). இந்தப் போட்டியில் சற்று வித்தியாசமான விளையாட்டுகளும் நடைபெற்றன. அதில் கிரிக்கெட், மோட்டார் சைக்கிள் பந்தயம், உள் நீச்சல், தடைகளுடன் கூடிய 200 மீட்டர் நீச்சல் போட்டி போன்ற பல்வேறு போட்டிகள் புதிதாகவே இருந்தன.

OLY_1.jpg

அந்த ஆண்டு ஒலிம்பிக்கில் 22 பெண்கள், 5 போட்டிகளில் பங்கேற்றார்கள். அதில், ஹிலேனி டி பௌர்டேல்ஸ்  ஒலிம்பிக்கில் பதக்கம் வென்ற முதல் பெண் என்ற பெயரை பெற்றார். இவர் அந்த பதக்கத்தை படகோட்டும் போட்டிக்காக பெற்றார். ஆனால், முதன்முதலில் தனியாக பங்கேற்று பதக்கம் வென்ற பெண் என்ற பெருமையை தட்டிச் சென்றவர்,டென்னிஸ் போட்டியில் பங்கேற்ற சார்லொட்டெ கூப்பர். பின், அவர் டென்னிஸ் கலப்பு இரட்டையர் பிரிவிலும் பதக்கம் வென்றார். அந்த ஆண்டு பங்கேற்ற எவருக்கும் பதக்கங்கள் வழங்கப்படவில்லை. பதக்கங்களுக்கு பதிலாக கோப்பைகள் வழங்கப்பட்டன.

இந்த ஒலிம்பிக்கில் மற்றொருவரும் சாதனை படைத்துள்ளார். அல்வின் க்ரேன்ஸ்லென் 60 மீட்டர், 110 மீட்டர், 200 மீட்டர் ஆகிய தூரத்திற்கான தடைகளை தாண்டும் போட்டிகளிலும், நீளம் தாண்டுதல் போட்டியிலும் தங்கம் வென்று, ஒரு ஒலிம்பிக்கில் நான்கு பதக்கங்கள் வென்ற முதல் வீரர் என்ற பெருமையை தட்டிச் சென்றார். அது மட்டும் அல்ல, 60 மீட்டர் தடைகள் தாண்டும் போட்டியில் பதக்கம் வென்ற இருவரில் ஒருவர் என்ற பெருமையையும் தட்டிச்சென்றார். இந்தப் போட்டியில் நடந்த சுவராஸ்யமான விஷயம் என்னவென்றால், நீளம் தாண்டுதல் போட்டியில் இவர் வென்றதற்காக மேயெர் ப்ரின்ஸ்டெய்ன் என்ற சக வீரர் இவரது முகத்திலேயே குத்தினார்.

OLY_2.jpg

2008 ம் ஆண்டு நடைபெற்ற ஒலிம்பிக் வரை பெண்களுக்காக அனைத்து போட்டிகளும் நடத்தப்படாமல் இருந்தது. ஆனால், 2012 ல் நடந்த லண்டன் ஒலிம்பிக்கில் பெண்களுக்கான குத்துச்சண்டையை இணைத்த பிறகு, ஆண்களுக்கு சமமாக அனைத்துப் போட்டிகளும் பெண்களுக்கும் நடத்தப்பட்டன. இன்னும் ஒரு சுவராஸ்யமான தகவல் என்னவென்றால், 1991 ம் ஆண்டிற்கு பிறகு ஒலிம்பிக்கில் இணைக்கப்பட்ட அனைத்து போட்டிகளும் பெண்களுக்கும் சேர்ந்தே நடத்தப்பட்டன.

http://www.vikatan.com/news/sports/66816-women-at-the-olympic-games.art

  • தொடங்கியவர்

உலக மகா ஒலிம்பிக் 5: பதக்கம் வென்ற தனிப்பிறவிகள்!

 

 
RIO_2957176f.jpg
 

l இந்தியாவுக்காக முதல் ஒலிம்பிக் பதக்கம் வென்றவர், இந்தியாவில் பிறந்த ஒரு பிரிட்டிஷ்காரர். 1900 பாரிஸ் ஒலிம்பிக்கில் நார்மன் பிரிட்சர்ட் 200 மீட்டர் ஓட்டம், 200 மீட்டர் தடையோட்டத்தில் வெள்ளிப் பதக்கங்களை வென்றார்.

l நம் நாட்டின் சார்பில் தனிநபராகப் பதக்கம் வென்ற முதல் இந்தியர் மகாராஷ்டிரத்தைச் சேர்ந்த கஷாபா ஜாதவ். 1952 ஹெல்சிங்கி ஒலிம்பிக் போட்டியில் மல்யுத்தத்தில் வெண்கலப் பதக்கத்தை அவர் வென்றார்.

l இந்தியா சார்பில் தனிநபராகப் பதக்கம் வென்ற முதல் வீராங்கனை ஆந்திரத்தைச் சேர்ந்த கர்ணம் மல்லேஸ்வரி. 2000 சிட்னி ஒலிம்பிக் போட்டியில் பளு தூக்கும் போட்டியில் வெண்கலப் பதக்கத்தை அவர் வென்றார். அந்த ஒலிம்பிக்கில்தான் பெண்களுக்கான பளுதூக்கும் பிரிவு அறிமுகப்படுத்தப்பட்டது.

l இந்தியா சார்பில் தனிநபராகத் தங்கம் வென்ற முதல் வீரர் பஞ்சாபைச் சேர்ந்த அபிநவ் பிந்த்ரா. 2008 பீஜிங் ஒலிம்பிக் போட்டியில் துப்பாக்கி சுடுதல் மூலம் இந்தச் சாதனையை அவர் புரிந்தார். ரியோ ஒலிம்பிக்கிலும் பங்கேற்கும் அவர், ஒலிம்பிக் பேரணியில் இந்தியக் கொடியை ஏந்திச் செல்லும் கவுரவத்தைப் பெற்றிருக்கிறார்.

l நார்மன் பிரிட்சர்டுக்குப் பிறகு ஒலிம்பிக்கில் இரண்டு பதக்கங்களை வென்ற தனிநபர் இந்தியர், டெல்லியைச் சேர்ந்த மல்யுத்த வீரர் சுஷில்குமார் மட்டுமே. துரதிர்ஷ்டவசமாக இந்த முறை அவர் பங்கேற்கவில்லை.

கல்வியாளரின் ஒலிம்பிக் கனவு

பண்டைய ஒலிம்பிக் போட்டிகள் வரலாற்றில் உறைந்துவிட்ட 2,300 ஆண்டுகளுக்குப் பிறகு, ஃபிரெஞ்சு கல்வியாளர் பியர் தெ குபர்தென் அந்தப் போட்டிகளை மீட்டெடுப்பதற்கான உத்வேகத்துடன் இருந்தார். இதற்காக யு.எஸ்.எஃப்.எஸ்.ஏ. என்ற ஒரு புதிய விளையாட்டு அமைப்பை 1890-ல் அவர் நிறுவினார்.

இரண்டு ஆண்டுகளுக்கு பாரிஸில் நடைபெற்ற இந்த அமைப்பின் கூட்டத்தில் ஒலிம்பிக் போட்டிகளை மீண்டும் நடத்தும் யோசனையை அவர் முன்வைத்தபோது, பெரிதாக வரவேற்பு கிடைக்கவில்லை. மனம் தளர்ந்துவிடாத அவர், தொடர்ந்து ஒலிம்பிக் பற்றி வலியுறுத்திவந்தார். 1894-ல் ஒன்பது நாடுகளைச் சேர்ந்த 74 பிரதிநிதிகள் அடங்கிய கூட்டத்தை அவர் கூட்டினார். அந்த முறை ஒலிம்பிக் போட்டிகளைப் பற்றி அவர் பேசியபோது, ஆர்வத்துடன் பலரும் வரவேற்றார்கள்.

உலக அளவில் விளையாட்டுப் போட்டிகளை நடத்துவதற்கான ஒரு சர்வதேசக் குழுவைக் குபர்தென் உருவாக்குவதற்கு அந்தக் கூட்டத்தில் அனுமதி அளிக்கப்பட்டது. அந்தக் குழுதான் ‘சர்வதேச ஒலிம்பிக் கமிட்டி’. அதன் முதல் தலைவராக கிரீஸைச் சேர்ந்த டெமெட்ரியாஸ் விகிலாஸ் தேர்ந்தெடுக்கப்பட்டார். நவீன ஒலிம்பிக்கை அரங்கேற்றும் இடமாக கிரீஸ் தலைநகர் ஏதென்ஸ் தேர்வு செய்யப்பட்டது. ஏதென்ஸில் நவீன ஒலிம்பிக் போட்டிகள் 1896-ல் நடந்தபோது, குபர்தெனின் கனவு நனவானது. 120 ஆண்டுகளாக அந்தப் பாரம்பரியம் வெற்றிகரமாகத் தொடர்ந்துவருகிறது.

l நார்மன் பிரிட்சர்டுக்குப் பிறகு ஒலிம்பிக்கில் இரண்டு பதக்கங்களை வென்ற தனிநபர் இந்தியர், டெல்லியைச் சேர்ந்த மல்யுத்த வீரர் சுஷில்குமார் மட்டுமே. துரதிர்ஷ்டவசமாக இந்த முறை அவர் பங்கேற்கவில்லை.

l 1996 அட்லாண்டா ஒலிம்பிக்கில் லியாண்டர் பயஸ் டென்னிஸில் வெண்கலப் பதக்கம் வென்றார். இந்தியாவிலேயே அதிகமாக ஆறு முறை ஒலிம்பிக் போட்டிகளில் பங்கேற்றுள்ள அவர், ஏழாவது முறையாக இந்த முறையும் ரியோ சென்றுள்ளார்.

l 2004 ஏதென்ஸ் ஒலிம்பிக்கில் ராஜ்யவர்தன் சிங் ராதோட், துப்பாக்கி சுடுதலில் வெள்ளிப் பதக்கம் வென்றார்.

l 2008 பீஜிங் ஒலிம்பிக்கில் சுஷில் குமார் (மல்யுத்தம்), விஜேந்தர் சிங் (குத்துச்சண்டை) ஆகிய இருவரும் வெண்கலப் பதக்கம் வென்றனர்.

l இதுவரை பங்கேற்றதிலேயே அதிக ஒலிம்பிக் பதக்கங்களை இந்தியா கடந்த முறைதான் வென்றது. 2012 லண்டன் ஒலிம்பிக்கில் சுஷில் குமார் (மல்யுத்தம்), விஜய் குமார் (துப்பாக்கி சுடுதல்) ஆகிய இருவரும் வெள்ளிப் பதக்கமும், மேரி கோம் (குத்துச்சண்டை), சானியா நேவால் (பாட்மின்டன்), ககன் நாரங் (துப்பாக்கி சுடுதல்), யோகேஷ்வர் தத் (மல்யுத்தம்) ஆகியோர் வெண்கலப் பதக்கமும் வென்றனர்.

பதக்கங்களை அள்ளிச் சென்றவர்கள்

ஒலிம்பிக் போட்டிகளில் அதிகப் பதக்கங்களை வென்ற பெண் பழைய ரஷ்யாவின் ஜிம்னாஸ்டிக் வீராங்கனை லாரிஸா லாட்டினினா. 1956, 1960, 1964 ஒலிம்பிக் போட்டிகளில் 9 தங்கம், 5 வெள்ளி, 4 வெண்கலப் பதக்கங்களை அவர் வென்றுள்ளார். மொத்தம் 18 பதக்கங்கள்.

அமெரிக்க நீச்சல் வீரர் மைக்கேல் பெல்ப்ஸ் அதிகப் பதக்கங்களை வென்ற ஆண் சாதனையாளர். 2004-2012 வரையிலான ஒலிம்பிக் போட்டிகளில் மொத்தம் 22 பதக்கங்களை (18 தங்கம், 2 வெள்ளி, 2 வெண்கலம்) அவர் வென்றுள்ளார். இந்த ஒலிம்பிக் போட்டியிலும் அவர் பங்கேற்கிறார் என்பதால், அவருடைய சாதனை இன்னும் முற்றுப்பெறவில்லை.

RIO1_2957175a.jpg

விநோதச் சாதனை

குதிரை செலுத்திய பாட்டி

கோடை ஒலிம்பிக் போட்டிகளில் பங்கேற்றவர்களிலேயே முதியவர், பெண் குதிரையேற்ற வீராங்கனை ஹில்டா எல். ஜான்ஸ்டோன். 1972 மியூனிக் விளையாட்டுப் போட்டிகளில் டிரெஸ்ஸேஜ் பிரிவில் பங்கேற்றபோது அவருடைய வயது 69.

2016 ஒலிம்பிக்கில்... விளையாட்டு காட்டும் வினிசியஸ்

ரியோ ஒலிம்பிக், பாராலிம்பிக் போட்டிகளின் அதிகாரபூர்வச் சின்னம் பிரேசில் நாட்டுப் பாலூட்டிகளைப் போன்ற தோற்றம் கொண்ட வினிசியஸ் என்ற உயிரின ஜோடி. பிரேசில் பண்பாடு, மக்களைப் பிரதிபலிக்கும் விதமாக இந்தச் சின்னங்கள் அமைந்துள்ளன. ‘வினிசியஸ் தெ மொரஸ்’ என்ற பிரபல பிரேசில் கவிஞரின் பெயரிலிருந்து உத்வேகம் பெற்று இந்தப் பெயர் வைக்கப்பட்டிருக்கிறது.

http://tamil.thehindu.com/society/kids/உலக-மகா-ஒலிம்பிக்-5-பதக்கம்-வென்ற-தனிப்பிறவிகள்/article8937401.ece

  • தொடங்கியவர்

ரியோ ஒலிம்பிக்: பெருமளவில் பங்கேற்பதாக ரஷ்யா தகவல்

160728084128_russia_team_rio_olympics_64

 

ரியோ ஒலிம்பிக் போட்டிகளில் ரஷ்யாவின் பெரும்பாலான அணிகள் பங்கேற்க அனுமதிக்கப்படும் என்று ரஷ்ய ஒலிம்பிக் கமிட்டி தெரிவித்துள்ளது.

மொத்தமுள்ள 387 பேரில், 271 பேர் போட்டிகளில் பங்கேற்க அனுமதி கிடைத்துவிட்டதாகவும், மேலும் ஐந்து பேர் இறுதி முடிவுக்காகக் காத்திருப்பதாகவும் ரஷ்ய ஒலிம்பிக் கமிட்டி தெரிவித்திருக்கிறது.

ரியோ ஒலிம்பிக் போட்டிகளில் பங்கேற்கும் அணிகளில், ரஷ்ய அணிதான் தூய்மையான அணியாக இருக்கும் என ரஷ்ய ஒலிம்பிக் கமிட்டித் தலைவர் அலெக்ஸாண்டர் ஜுகோவ் தெரிவித்தார்.

முன்னதாக, அரசு ஆதரவுடன், ரஷ்ய அணியினர் ஊக்க மருந்து உட்கொள்கிறார்கள் என சோதனை முடிவுகள் உறுதிப்படுத்துவதாகவும், அந்த அணியை முழுமையாகத் தடை செய்ய வேண்டும் என்றும் உலக ஊக்கமருந்து தடுப்பு அமைப்பு பரிந்துரை செய்தது.

ரியோ ஒலிம்பிக் போட்டிகளில் ஊக்க மருந்து பயன்படுத்தும் வீரர், வீராங்கனைகள் தப்ப முடியாது என்று சர்வதேச ஒலிம்பிக் கமிட்டித் தலைவர் தாமஸ் பேச் எச்சரித்திருக்கிறார். போட்டியின்போது ஆயிரக்கணக்கான ஊக்க மருந்து சோதனைகள் நடத்தப்படும் என்றும், அந்த முடிவுகள் பத்து ஆண்டுகளுக்கு பாதுகாக்கப்படும் என்றும், அதனால், ஊக்க மருந்து பயன்படுத்துவோர் எந்த நேரத்திலும் நிம்மதியாக இருக்க முடியாது என்றும் அவர் தெரிவித்தார்.

http://www.bbc.com/tamil/global/2016/08/160804_russiaolympics

  • கருத்துக்கள உறவுகள்

Whistleblower Yulia Stepanova able to compete in Olympics

The IAAF have given the green light for Russian doping whistleblower Yulia Stepanova to compete in this summer's Rio Olympics as a neutral athlete, with the middle distance runner granted "exceptional eligibility."

Russische Athletin Julia Stepanowa

The decision was announced by athletics' governing body on Friday and Stepanova will now also be eligible to compete in the upcoming European Championships in Amsterdam.

The IAAF said Stepanova can compete as someone who has made "a truly exceptional contribution to the protection and promotion of clean athletes, fair play and the integrity and authenticity of the sport."

The 29-year-old is the first athlete to be given "exceptional eligibility" to compete as a neutral athlete in international competition, the IAAF doping review board said.

The IAAF has suspended the Russian athletics federation from the August 5-21 Games in Rio over doping.

However, Russian athletes who have been subject to independently controlled drug testing have been given the opportunity to compete at the Games. As a result, the IAAF have received more than 80 applications from Russian athletes hoping to prove they are clean.

Although she has been given the all clear by the IAAF, Stepanova must still be accepted by each individual competition in order to race.

http://www.dw.com/en/whistleblower-yulia-stepanova-able-to-compete-in-olympics/a-19370752

  • தொடங்கியவர்
ஒலிம்பிக் கால்பந்தாட்டம்: தென்னாபிரிக்காவை வெல்லத் தவறிய பிரேஸில்
 
 

article_1470379367-In560188-01-02_553965

றியோ 2016ஆம் ஆண்டு ஒலிம்பிக் போட்டிகளை நடாத்தும் நாடான பிரேஸில், ஆண்களுக்கான கால்பந்தாட்டத்தில், தனது முதலாவது போட்டியில் 10 பேர் கொண்ட தென்னாபிரிக்க அணியை வெல்லத் தவறியுள்ளது.

ஒலிம்பிக் கால்பந்தாட்டத்தில், மகளிர் மட்டுமே முழுப் பலம் கொண்ட அணிகளாக களமிறங்குகையில், ஆண்களுக்கான கால்பந்தாட்டத்தில், 23 வயதுக்கு மேற்பட்ட வீரர்கள் மூவர் மட்டுமே அணியில் இடம்பெறமுடியும் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்நிலையில், பிரேஸில் அணியின் நட்சத்திர வீரர் நேமர் மேற்படி போட்டியில் விளையாடிய போதும் பிரேஸிலினால், தென்னாபிரிக்க அணிக்கெதிராக எந்தவொரு கோலும் பெறாமல், சமநிலையில் போட்டியை முடித்துக் கொண்டது.

 ஏனைய போட்டி முடிவுகள்

ஈராக் 0-0 டென்மார்க்

மெக்ஸிக்கோ 2-2 ஜேர்மனி

போர்த்துக்கல் 2-0 ஆர்ஜென்டீனா

- See more at: http://www.tamilmirror.lk/178733#sthash.Cc3U0AMk.dpuf

Edited by நவீனன்

  • தொடங்கியவர்
ஒலிம்பிக் வரலாற்றின் சுருக்கம்
2016-08-05 12:34:30

விளையாட்டு உலகில் மகத்தானதும் ஒவ்வொருவரும் பங்குபற்ற வேண்டும் என கனவு காண்பதுமான நவீன ஒலிம்பிக் விளையாட்டு விழா அதன் அங்குரார்ப்பண அத்தியாயத்தை பண்டைய ஒலிம்பிக்கின் பிறப்பிடமான ஏதென்ஸில் அரங்கேற்றியது.


18403_olympic-history.jpg

 

நவீன ஒலிம்பிக் ஆரம்பமாவதற்கு 27 நூற்றாண்டுகளுக்கு முன்னர் பண்டைய ஒலிம்பிக் விளையாட்டுப் போட்டிகள் நடத்தப்பட்டிருந்தன.


கிறிஸ்துவுக்கு முன்னர் 776 இல் ஒலிம்பியா என்ற இடத்தில் ஒரு நாள் போட்டியாக பண்டைய ஒலிம்பிக் போட்டி ஆரம்பிக்கப்பட்டது.


கிரேக்கர்களின் கடவுளர்களாக கருதப்படும் ஸெயஸ் மற்றும் ஹேரா ஆகியோரை வழிபட்டு அவர்களுக்கு அர்ப்பணிக்கப்படும் திருவிழாவாக பண்டைய ஒலிம்பிக் போட்டிகள் நடத்தப்பட்டுவந்தன.


184031896-logo-7486146520.jpgஇப் போட்டிகளில் கிரேக்க உலகின் ஒவ்வொரு நகரிலும் வாழ்ந்து வந்த வீரர்கள் ஒலிம்பியா நகரில் ஒன்று கூடி ஒலிம்பிக் விழாவை நடத்திவந்தனர்.


எனினும் முதலாவது சக்கரவர்த்தி தியோடோசியஸ் கிறிஸ்துவுக்குப் பின்னர் 393 இல் பண்டைய ஒலிம்பிக் போட்டிகளுக்கு தடைவிதித்ததால் பண்டைய ஒலிம்பிக் அஸ்தமனமானது.


17 நூற்றாண்டுகளின் பண்டைய ஒலிம்பிக் பற்றிய ஆய்வுகளை நடத்திய பிரான்ஸ் தேசத்தின் பாரன் பியரே டி கூபேர்ட்டினின் அயரா முயற்சியாலும் பிரதான நாடுகளைச் சேர்ந்த பிரதிநிதிகளின் ஒத்துழைப்பினாலும் 1896இல் நவீன ஒலிம்பிக் விளையாட்டு விழா ஆரம் பித்துவைக்கப்பட்டது.


அதன் பின்னர் நான்கு வருடங்களுக்கு ஒருமுறை லீப் வருடத்தில் நவீன ஒலிம்பிக் விளையாட்டு விழா நடத்தப்பட்டுவருகின்றது.

(குறிப்பு: 1956 இல் ஒலிம்பிக் போட்டிகள் பிரதானமாக அவுஸ்திரேலியாவின் மெல்பேர்னில் நடத்தப்பட்டது.

 

எனினும் குதிரையேற்றம் சுவீடனின் ஸ்டொக்ஹோமில் நடைபெற்றது. ஒலிம்பிக் வரலாற்றில் இரண்டு நாடுகளில் ஒலிம்பிக் போட்டிகள் நடத்தப்பட்டது அதுவே முதலும் கடைசியுமாகும்.)

 

18403_23.jpg

 

- See more at: http://metronews.lk/article.php?category=sports&news=18403#sthash.87rwgBhA.dpuf
  • தொடங்கியவர்

ஒலிம்பிக்கையும் இவர்களையும் மறக்க முடியாது...!

லிம்பிக் போட்டியின் உச்சகட்டமே 100 மீட்டர் ஓட்டம்தான். ஆடவர், மகளிர் என இரு பிரிவிலும் உலகமே முடிவை எதிர்பார்த்து காத்துக் கிடக்கும் போட்டி இது. கடந்த 1988ம் ஆண்டு சியோல் ஒலிம்பிக் தொடரில் புல்லரிக்க வைக்கும் உச்சகட்ட மோதலுக்கு பென்ஜான்சனும் கார்ல் லீவீசும் தயாராக நின்றனர். உலகின் அதிவேக மனிதர் யார் என அடுத்த 10 விநாடிகளில் தெரிந்து விடும். கனடாவை சேர்ந்த பென் ஜான்சன் 100 மீட்டர் ஓட்டத்தை 9.79 விநாடிகளில் கடக்க, உலகமே வாயை பிளந்தது. ஏற்கனவே 100 மீட்டர் ஓட்டத்தை 9.83 விநாடிகளில் கடந்து பென் ஜான்சன் சாதனை படைத்திருந்தார். சொந்த சாதனையை ஜான்சனே மீண்டும் உடைத்தார். இதற்கு முன் எந்த ஒரு கொம்பனும் 100 மீட்டரை இத்தனை அதி வேகத்தில் கடந்தது கிடையாது.

ben1.jpg

அடுத்த நாளே பென் ஜான்சனுக்கு ஊக்க மருந்து பரிசோதனை நடத்தப்பட்டது. அவரது மாதிரிகளில் 'அனபாலிக் ஸ்டீராய்ட்' கலந்துள்ளது தெரியவந்தது. உடனடியாக பென் ஜான்சனிடம் இருந்து பதக்கம் பறிக்கப்பட்டது. வெள்ளி வென்றிருந்த  அமெரிக்க வீரர் கார்ல் லீவீசுக்கு தங்கப் பதக்கம் வழங்கப்பட்டது. ஒலிம்பிக், சர்வதேச தடகளப் போட்டிகளில்  எத்தனையோ ஊக்க மருந்து விவகாரங்கள் அரங்கேறியிருக்கின்றன. ஆனால் பென் ஜான்சனிடம் இருந்து பதக்கம் பறிக்கப்பட்டபோது உலகமே அதிர்ந்து போனது.  ஏனென்றால் அவரது சிறுத்தை போன்ற வேகத்தில் அப்போது உலகம் மயங்கிக் கிடந்தது. உலக ரசிகர்களை அதிர வைத்த ஊக்க மருந்து விவகாரம் இதுதான்.

mid.jpg

1996ம் ஆண்டு அட்லாண்டா ஒலிம்பிக் போட்டியில் அயர்லாந்து நீச்சல் வீராங்கனை மிட்செல் ஸ்மித் திடீரென அனைத்து தங்கப் பதக்கங்களையும் அள்ளிக் கொண்டார். ஒரே ஒலிம்பிக்கில் அயர்லாந்தை சேர்ந்த எந்த வீராங்கனையும் 3 தங்கப்பதக்கங்களை வென்றது கிடையாது. அதற்கு முன் வியன்னாவில் நடந்த உலகச் சாம்பியன்ஷிப் போட்டியில், மிட்செல், 2 தங்கப்பதக்கம் வென்றிருந்தார். 1997ம் ஆண்டு செவிலாவில் நடந்த சர்வதேசப் போட்டியிலும் மிட்செல் 2 பதக்கம் வென்றார். ஆனால் 1995ம் ஆண்டுக்கு முன் எந்த ஒரு சர்வதேச நீச்சல் போட்டியிலும் மிட்செல், பதக்கம் வென்றது இல்லை. ஏன், முதல் 25 இடங்களுக்குள் கூட வந்தது கிடையாது.

தரவரிசையில் 90வது இடத்தில்தான் இருந்தார். அதிவேகமான மிட்செல்லின் முன்னேற்றம் ஒலிம்பிக் கவுன்சிலுக்கு எங்கேயோ இடித்தது. 1998ம் ஆண்டு  மிட்செல் சிறுநீர் மாதிரி பரிசோதனைக்குட்படுத்தியதில், ஊக்க மருந்து பயன்படுத்தியது தெரியவந்தது.  இதனைத் தொடர்ந்து, 4 ஆண்டுகள் அவருக்குத் தடை விதிக்கப்பட்டது. அனைத்து பதக்கங்களும் பறிக்கப்பட்டன. மிட்செல் நீச்சல் போட்டியில் இருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்தார்.

marion1.jpg

சிட்னி ஒலிம்பிக் போட்டியில் அமெரிக்கத் தடகள வீராங்கனை மரியான் ஜோன்ஸ் 3 தங்கம் 2 வெண்கலம் உள்பட 5 பதக்கங்களை வென்றிருந்தார். 100 மீட்டர், 200 மீட்டர், நீளம் தாண்டுதல், 2 தொடர் ஓட்டங்களிலும் பதக்கம் வென்று அசத்தியிருந்தார். ஒரே ஒரு ஒலிம்பிக் போட்டியில் 5 பதக்கங்கள் வென்ற முதல் தடகள வீராங்கனை என்ற சாதனையையும் மரியான் அப்போது படைத்தார். கடந்த 2007ம் ஆண்டு மரியான் ஜோன்ஸ் ஊக்க மருந்து பயன்படுத்தியது தெரியவந்தது.  அவரிடம் இருந்து அத்தனை பதக்கங்களும் பறிக்கப்பட்டன. தடகளத்தில் பங்கேற்க வாழ்நாள் தடை விதிக்கப்பட்டது. மரியான் கண்ணீர் மல்க ரசிகர்களிடமும் அமெரிக்க மக்களிடமும் மன்னிப்பு கேட்டார்.

amsst.jpg

 

பிரான்ஸ் சைக்கிள் பந்தய வீரர் லேன்ஸ் ஆம்ஸ்ட்ராங், தொடர்ச்சியாக 7 முறை 'டூர் டி பிரான்ஸ்' பட்டத்தை கைப்பற்றியவர். சிட்னி ஒலிம்பிக்கில் பங்கேற்று சைக்கிள் பந்தயத்தில் வெண்கலமும் வென்றிருந்தார். ஒரு கட்டத்தில் இவரும் தடை செய்யப்பட்ட ஊக்க மருந்தை பயன்படுத்தியிருப்பது தெரியவந்தது. முதலில் ஆம்ஸ்ட்ராங் இதனை மறுத்தாலும் பின்னர் ஒப்புக் கொண்டார். அவரது' டூர் டி பிரான்ஸ்' பட்டம் பறிக்கப்பட்டது. ஒலிம்பிக் கவுன்சிலும் பதக்கத்தை பறித்துக் கொண்டது. டைகர் வுட்ஸ் போல், புகழின் உச்சத்தில் இருந்து அதள பாதாளத்தில் விழுந்தவர் ஆம்ஸ்ட்ராங். புற்றுநோயில் இருந்து மீண்டு வந்து சைக்கிள் பந்தயத்தில் சாதித்துக் காட்டினார். அந்த சாதனை நிலைக்காமல் போனதுதான் சோகத்திலும் சோகம்!

http://www.vikatan.com/news/sports/66849-infamous-dope-cheats-in-olympics-history.art

  • தொடங்கியவர்

11 ஆயிரம் வீரர், வீராங்கனைகள் பங்கேற்பு: ரியோ ஒலிம்பிக் திருவிழா நாளை தொடக்கம்

 

 
ஒலிம்பிக் போட்டி தொடக்க விழாவுக்கான வாணவேடிக்கை ஒத்திகை நிகழ்ச்சிகள் நேற்று மரக்கானா மைதானத்தில் நடைபெற்றது. படம்: ஏஎப்பி
ஒலிம்பிக் போட்டி தொடக்க விழாவுக்கான வாணவேடிக்கை ஒத்திகை நிகழ்ச்சிகள் நேற்று மரக்கானா மைதானத்தில் நடைபெற்றது. படம்: ஏஎப்பி

பீலே தீபம் ஏற்றுகிறார்; இந்திய கொடியை ஏந்தி செல்கிறார் அபிநவ் பிந்த்ரா

 

*

பிரேசிலின் இரண்டாவது மிகப் பெரிய நகரான ரியோ டி ஜெனிரோ வில் 31-வது ஒலிம்பிக் திருவிழா நாளை அதிகாலை இந்திய நேரப் படி 4.30 மணிக்கு கண்கவர் கலை நிகழ்ச்சிகளுடன் கோலாகலமாக தொடங்குகிறது. தொடக்க விழா நிகழ்ச்சிகளை ஸ்டார் ஸ்போர்ட்ஸ் சானல் நேரடி ஒளிபரப்பு செய்கிறது.

தென் அமெரிக்க மண்ணில் ஒலிம்பிக் போட்டி நடத்தப்படுவது இதுதான் முதன்முறை. மேலும் போர்த்துக்சீய மொழி பேசும் நாட்டில் ஒலிம்பிக் திருவிழா நடத்தப் படுவதும் இதுதான் முதன்முறை.

17 நாட்கள் திருவிழா

உலகின் மாபெரும் விளையாட்டு திருவிழாவான ஒலிம்பிக்கை நடத்தும் வாய்ப்பைக் கடும் போட்டிக்கு இடையேதான் பிரேசில் பெற்றிருந்தது. மேலும் அதிபர் தில்மா ரூசெஃப் மீதான வழக்கு விசாரணை, உள்நாட்டுப் பொருளாதார நெருக்கடிநிலை, ஜிகா வைரஸ் அச்சுறுத்தல், ஊக்க மருந்து விவகாரத்தால் ரஷ்ய தடகள அணிக்கு தடை, குவானாபாரா கடல் பகுதி மாசு எனப் பல்வேறு பிரச்சினைகளை கடந்துதான் ஒலிம்பிக் போட்டிகளை பிரேசில் நடத்துகிறது.

வரும் 21-ம் தேதி வரை மொத் தம் 17 நாட்கள் நடைபெறும் ரியோ ஒலிம்பிக் திருவிழாவில் அமெ ரிக்கா, சீனா, இந்தியா உட்பட 206 நாடுகளைச் சேர்ந்த 11,239 வீரர் வீராங்கனைகள் கலந்துகொள் கின்றனர். இந்த முறை கோசாவோ, தெற்கு சூடான் அணிகள் முதன் முறையாக ஒலிம்பிக்கில் காலடி எடுத்து வைக்கின்றன. பல்வேறு நாடுகளைச் சேர்ந்த வீரர், வீராங் கனைகள் ஒலிம்பிக் கிராமத்தில் குவிந்துள்ளதால் ரியோ நகரமே விழாக்கோலம் பூண்டுள்ளது.

ரூ.76 ஆயிரம் கோடி

மொத்தம் 31 விளையாட்டுகளில் 41 பிரிவுகளில் போட்டிகள் நடைபெறுகிறது. ரக்பி செவன்ஸ், கோல்ப் ஆகிய விளையாட்டுகள் புதிதாக சேர்க்கப்பட்டுள்ளது. 306 தங்கப் பதக்கங்கள் வழங்கப்பட உள்ளது. சாவோ பாவ்லோ, பெல்லோ ஹாரிசோன்டி, சல்வேடார், பிரேசில்லா, மனாஸ் ஆகிய 5 நகரங்களில் உள்ள 33 மைதானங்களில் போட்டிகள் நடைபெற உள்ளன. இந்த ஒலிம்பிக் போட்டியை சுமார் 76 ஆயிரம் கோடி ரூபாய் செலவில் பிரேசில் நடத்துகிறது.

தொடக்க விழா நிகழ்ச்சிகள் வரலாற்று சிறப்பு வாய்ந்த மரக்கானா மைதானத்தில் நாளை அதிகாலை 4.30 தொடங்குகிறது. தொடக்க விழா நிகழ்ச்சிகளில் வரவேற்புரை, கொடியேற்றம், விளையாட்டு வீரர்களின் அணிவகுப்பு, ஒலிம்பிக் தீபம் ஏற்றுதல், வீரர்கள், நடுவர்கள், அலுவலர் உறுதிமொழிகள் ஆகி யவை இடம்பெறும். இவற்றுடன் பிரேசில் நாட்டின் பண்பாட்டை பிரதி பலிக்கும் வகையில் கலைநிகழ்ச்சி கள் இடம் பெறுகின்றன.

தீபம் ஏற்றும் பீலே

தொடக்க விழா நிகழ்ச்சிகள் சுமார் 4 மணி நேரம் நடத்த திட்ட மிடப்பட்டுள்ளது. ஒலிம்பிக் தீபத்தை பிரேசில் கால்பந்து ஜாம்பவான் பீலே ஏற்றுகிறார். இதற்காக சர்வதேச ஒலிம்பிக் சங்கம் விடுத்துள்ள அழைப்பை அவர் ஏற்றுக்கொண்டுள்ளார். பீலேவுடன் இங்கிலாந்து நடிகை ஜூடி டென்ச் தொடக்க விழாவில் கலந்து கொள்கிறார். அவர் ஒலிம்பிக் போட்டிக்கான பாடலை பாடுகிறார்.

தொடக்க விழாவில் சுமார் 6 ஆயிரம் நடன கலைஞர்கள் கலந்து கொள்ளும் பிரம்மாண்டமான கண்கவர் கலை நிகழ்ச்சிகளும் இடம் பெறுகின்றன. தொடக்க விழாவுக்கு பிரேசில் நாட்டை சேர்ந்த இயக்குநர் பெர்னாண்டோ மெய்ரெல்ஸ் மற்றும் தயாரிப்பாளர் டேனிலா தாமஸ் ஆகியோர்தான் பொறுப்பாளர்களாக உள்ளனர். நடன அமைப்பாளர் டிபோராக் கோல்கரின் கைவண்ணத்தில் கலக்கல் நடனமும் இடம் பெறுகிறது. தொடக்க விழா நடைபெறும் மைதானத்தில் 75 ஆயிரம் பேர் அமரும் வசதி உள்ளது.

குறைந்த செலவில்

2012 லண்டன் ஒலிம்பிக்கில் தொடக்க விழாவுக்காக மட்டுமே பல ஆயிரம் கோடி ரூபாய் செலவி டப்பட்டது. ஆனால் ரியோ ஒலிம் பிக்கில் லண்டன் போட்டிக்கு செலவி டப்பட்ட தொகையில் 10 சதவீதம் மட்டுமே தொடக்க விழாவுக்கு செலவழிக்கப்பட உள்ளது.

இதுதொடர்பாக மெய்ரெல்ஸ் கூறும்போது, “லண்டன் ஒலிம்பிக் போட்டி தொடக்க விழாவுக்கு செலவு செய்தது போல் அதிக அளவிலான பணத்தை நாங்கள் செலவு செய்ய விரும்பவில்லை. அந்த பணத்தை துப்புரவு, கல்விக்காக செலவிட லாம். அர்த்தமுள்ளதாக உள்ள குறைந்த செலவில் நிகழ்ச்சிகளை நடத்துவதில் மகிழ்ச்சியடைகிறேன்” என்றார்.

அணிவகுப்பு

தொடக்க விழா நிகழ்ச்சியில் முக்கிய நிகழ்வாக வீரர்களின் அணி வகுப்பு இடம் பெறுகிறது. ஒலிம்பிக் பிறந்த இடமாக கருதப்படும் கீரிஸ் அணி முதலில் அணி வகுத்து செல்ல அகர வரிசைப்படி மற்ற நாட்டு அணிகள் வரிசையாக செல்லும். கடைசியாக போட்டியை நடத்தும் பிரேசில் நாட்டு அணியை சேர்ந்த வீரர், வீராங்கனைகள் செல்வார்கள்.

ரியோ ஒலிம்பிக்கில் இந்தியா வில் இருந்து 118 வீரர், வீராங்கனை கள் கலந்து கொள்கின்றனர். இந்திய வரலாற்றில் ஒலிம்பிக்கில் அதிகள அளவிலான வீரர்கள் பங்கேற்பது இதுவே முதன்முறையாகும். அணிவகுப்பில் துப்பாக்கி சுடுதல் வீரர் அபிநவ் பிந்த்ரா தேசிய கொடியை ஏந்தி செல்கிறார்.

உசேன் போல்ட்

ஜமைக்காக தடகள வீரர் உசேன் போல்ட் 3-வது முறையாக 3 தங்க பதங்கங்களை வேட்டையாட தயாராக உள்ளார். ஒலிம்பிக்கின் தங்க மகனான அமெரிக்காவின் மைக்கல் பெல்ப்ஸ் ‘தங்க வேட்டை தாகத்துடன்' நீச்சல் குளத்தில் பாய்ந்து செல்ல முழு அளவில் ஆயத்தமாக இருக்கிறார்.

31 வயதான பெல்ப்ஸ் இது வரை ஒலிம்பிக் போட்டியில் 18 தங்கப் பதக்கம் உட்பட 22 பதக்கங்கள் வென்றுள்ளது குறிப் பிடத்தக்கது. அமெரிக்க ஜிம்னாஸ் டிக் வீராங்கனை சைமோன் பில்ஸ், பிரேசில் கால்பந்து நட்சத்திர வீரர் நெய்மர், சிரியாவின் யசுரா மர்தினி, மபிகா உள்ளிட்ட பலர் முதல்முறையாக தங்கப் பதக்கத்தை கைப்பற்றும் முனைப்பில் உள்ளனர்.

பலத்த பாதுகாப்பு

ஒலிம்பிக் போட்டி பாதுகாப்புக் காக 85 ஆயிரம் ராணுவ வீரர்கள், போலீஸார் பணியில் ஈடுபடுத்தப் பட உள்ளனர். இது கடந்த 2012 லண்டன் ஒலிம்பிக் போட்டிக்கு வழங்கப்பட்ட பாதுகாப்பை விட இருமடங்கு அதிகமாகும்.

ஐந்து வளையங்கள்

ஒலிம்பிக் சின்னமான ஐந்து வளையங்கள், பூமியில் உள்ள ஐந்து கண்டங்களைக் குறிப்பதாக நவீன கால வரையறை சொல்கிறது. ஆப்பிரிக்கா, ஐரோப்பா, ஆசியா, இரண்டு அமெரிக்கக் கண்டங்கள், ஆஸ்திரேலியா ஆகியவையே அந்த ஐந்து கண்டங்கள். இருந்தபோதும் 1912 ஸ்டாக்ஹோம் ஒலிம்பிக் போட்டிகளில் ஐந்து வளையங்கள் அறிமுகப்படுத்தப்பட்ட காலத்தில், அப்போது பங்கேற்ற நாடுகளின் கொடியில் இருந்த ஐந்து வண்ணங்கள் எடுக்கப்பட்டே இந்தச் சின்னம் உருவாக்கப்பட்டது.

குறிக்கோள்

ஒலிம்பிக்கின் குறிக்கோள், ‘இன்னும் வேகம், இன்னும் உயரம், இன்னும் வலிமை.’

இந்த வாசகத்தை முன்வைத்தவர் பியர் தெ குபர்தெனின் நண்பர் பாதிரியார் ஹென்றி டிடான். 1894-ல் இந்தக் குறிக்கோள் முன்மொழியப் பட்டது.

கொடி

ஒலிம்பிக் கொடி என்பது வெள்ளை பின்னணியில் ஒன்றோடு மற்றொன்று பிணைந்த நீலம், மஞ்சள், கறுப்பு, பச்சை, சிவப்பு வளையங்களைக் கொண்டது. உலக விளையாட்டு வீரர் வீராங்கனைகள் ஓரிடத்தில் கூடுவதையும் மனிதர்கள் வாழும் ஐந்து கண்டங்களின் ஒருங்கிணைவையும் எடுத்துக்கூறும் ஒலிம்பிக்கின் சர்வதேசத் தத்துவத்தை இது வெளிப்படுத்துகிறது. 1920 ஆண்ட்வெர்ப் ஒலிம்பிக் போட்டிகளில் தான் ஒலிம்பிக் கொடி முதன்முதலில் பறக்க விடப்பட்டது.

தீபம்

ஒலிம்பிக் சின்னங்களில் ஒன்றாக ஒலிம்பிக் சுடர் கருதப்படுகிறது. இதற்கான தீப ஓட்டம் 1936 பெர்லின் ஒலிம்பிக் போட்டிகளின்போது தொடங்கியது. ஒலிம்பிக் தீபம், பண்டைய ஒலிம்பியாவில் புறப்பட்டு உலகம் முழுவதும் வலம்வந்து கடைசியாகப் போட்டி நடைபெறும் நாட்டை அடைகிறது. ஒலிம்பிக் போட்டிகளின் தொடக்கத்தை அறிவிக்கும் முதல் அம்சம், ஒலிம்பிக் தீப ஓட்டம். இந்தத் தீபம் ஏற்றப்பட்டது முதல் போட்டிகள் முடியும்வரை எங்கும் தடைபடாமல், அணைக்கப்படாமல் வைக்கப்படுகிறது.

நல்லெண்ணச் சின்னம்

போட்டியை நடத்தும் நாட்டின் பண்பாட்டைப் பிரதிபலிக்கும் வகையிலும் விளையாட்டின் சாராம்சத்தைப் பிரபலப்படுத்தும் வகையிலும் நல்லெண்ணச் சின்னம் உருவாக்கப்படுகின்றன. ரியோ ஒலிம்பிக்கின் நல்லெண்ணச் சின்னமாக ‘விம்சியஸ்’ அறிவிக்கப் பட்டுள்ளது. இது பிரேசில் நாட்டில் வாழும் விலங்கினங்களின் கலவையாக உருவாக்கப்பட்டுள்ளது.

http://tamil.thehindu.com/sports/11-ஆயிரம்-வீரர்-வீராங்கனைகள்-பங்கேற்பு-ரியோ-ஒலிம்பிக்-திருவிழா-நாளை-தொடக்கம்/article8946809.ece?homepage=true&relartwiz=true

  • தொடங்கியவர்

ரியோ துளிகள்...

 


 

2,488 பதக்கங்கள்

இந்த ஒலிம்பிக் போட்டியில் மொத்தம் 2,488 பதக்கங்கள் வெற்றி பெற்றவர்களின் கழுத்தை அலங்கரிக்கவுள்ளன. இதில் 306 தங்கம், 812 வெள்ளி, 864 வெண்கலப் பதக்கங்கள் அடங்கும். குழுப் போட்டிகளில், அணியில் இடம்பெற்றுள்ள அனைத்து வீரர்களுக்கும் பதக்கம் வழங்கப்படுகிறது.

 

3,80,000 ரசிகர்கள்

ஒலிம்பிக் போட்டியை நேரில் பார்ப்பதற்காக மற்ற நாடுகளிலிருந்து 3 லட்சத்து 80 ஆயிரம் பேர் பிரேசிலுக்கு வருவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.

 

25,000 பந்துகள்டென்னிஸ் போட்டியில்

25 ஆயிரம் பந்துகள் பயன்படுத்தப்படவுள்ளன.

 

315 குதிரைகள்குதிரையேற்றப் போட்டிக்காக 315 குதிரைகள் பயன்படுத்தப்படவுள்ளன.

 

500 வீரர்கள்

2014 யூத் ஒலிம்பிக் போட்டியில் பங்கேற்றவர்களில் 500 பேருக்கு ரியோ ஒலிம்பிக் போட்டியில் களமிறங்கும் வாய்ப்பு கிடைத்துள்ளது.

 

70 ஹோட்டல்கள்

ஒலிம்பிக் போட்டிக்காக புதிதாக 70 ஹோட்டல்கள் திறக்கப்பட்டுள்ளன. இதன்மூலம் 16 ஆயிரம் பேருக்கு வேலைவாய்ப்பு கிடைத்துள்ளது.

 

50 ஆயிரம் தன்னார்வலர்கள்

ஒலிம்பிக் போட்டியில் தன்னார்வலர்களாக பணியாற்றுவதற்கு

2 லட்சத்து 40 ஆயிரம் பேர் விண்ணப்பித்திருந்தனர். அவர்களில் 50 ஆயிரம் பேர் தேர்வு செய்யப்பட்டுள்ளனர். இதில் 50 சதவீதத்தினர் பிரேசிலைச் சேர்ந்த 25 மற்றும் அதற்கு குறைவான வயதுடையவர்கள்.

 

90 ஆயிரம் பணியாளர்கள்

ஒலிம்பிக் போட்டிக்கான பணியில் அரசு அதிகாரிகள், தன்னார்வலர்கள், ஒப்பந்ததாரர்கள் என 90 ஆயிரம் பேர் ஈடுபடுகிறார்கள்.

http://www.dinamani.com/sports/2016/08/05/ரியோ-துளிகள்.../article3563407.ece

  • தொடங்கியவர்

 

உடல்நலக்குறைவால் ரியோ ஒலிம்பிக் தொடக்க விழாவில் பிரேசில் நாட்டு கால்பந்து ஜாம்பவான் பீலே பங்கேற்கமாட்டார்

 

பிரேசில் நாட்டு முன்னாள் நட்சத்திர கால்பந்து வீரர் பீலே (75) உடல்நலக்குறைவால் ரியோ ஒலிம்பிக் தொடக்க விழாவில் பங்கேற்கமாட்டார் என அறிவிக்கப்பட்டது. ஒலிம்பிக் ஜோதியை பீலே ஏந்திச் செல்வார் என அறிவிக்கப்பட்ட நிலையில் உடல்நலக்குறைவால் அவதிப்படும் அவரால் தொடக்க விழாவில் பங்கேற்கமுடியவில்லை. இது அவரது ரசிகர்களிடையே வருத்தத்தை ஏற்படுத்தியுள்ளது.

http://www.dinakaran.com/Latest_Detail.asp?Nid=236663

Edited by நவீனன்

  • தொடங்கியவர்

oliympic.jpg

ரியோ ஒலிம்பிக் 2016 ஒலிம்பிக் அட்டவணை

  • தொடங்கியவர்

தொடங்கியது பிரேசில் ஒலிம்பிக்ஸ்

 

31வது நவீன கால ஒலிம்பிக் விளையாட்டுப் போட்டிகள் பிரேசிலின் ரியோ டி ஜெனெரோவில் பிரமிக்கத்தக்க தொடக்கவிழா வைபவத்துடன் தொடங்கின.

160806043134_olympics4.gif
 

ரியோ நகரின் மரக்கானா விளையாட்டரங்கில் நடைபெற்ற இந்த வைபவத்தில், பிரேசிலின் செழுமையான கலாசாரப் பாரம்பரியத்தையும், அதன் பிரசித்திபெற்ற சுற்றுச்சூழலையும் வெளிக்காட்டும், ஒளி, இசை மற்றும் நாட்டிய நிகழ்ச்சிகள் நடந்தேறின.

    160805235413_rio_640x360_getty_nocredit.

சுமார் 200க்கும் மேற்பட்ட நாடுகளிலிருந்து வந்த 10,000 தடகள வீரர்கள் , உற்சாகமாகக் கூடியிருந்த கூட்டத்தினரின் முன் அணிவகுத்துச் சென்றார்கள்.

உலகின் பல பாகங்களில் அகதிகளாய் வாழ நேர்ந்திருப்போரைப் பிரதிநிதித்துவப் படுத்தும் ஒரு சிறிய குழு ஒன்றும் பெரும் ஆரவார வரவேற்பைப் பெற்றது.

160805221029_rio_olympic_2016_openning_6

 

பகிர்ந்து கொள்ளப்பட்ட மனிதநேயம் என்ற ஒலிம்பிக் விழுமியங்கள்தான் உலகில் காணப்படும் நெருக்கடி, நம்பிக்கையின்மை மற்றும் நிச்சயமற்றநிலை ஆகியவற்றுக்கான பதில் என்று சர்வதேச ஒலிம்பிக் கமிட்டியின் தலைவர் தாமஸ் பேக் கூறினார்.

பிரேசிலின் இடைக்கால அதிபர் மிஷேல் டெமெர் ஒலிம்பிக் போட்டிகளை முறையாகத் தொடங்கிவைத்த போது அவருக்கெதிராக எழுந்த சில கேலிக்குரல்கள், பிரேசிலில் நிலவும் ஆழமான அரசியல் நெருக்கடியை நினைவுபடுத்தின.

http://www.bbc.com/tamil/global/2016/08/160806_brazilolympicsopen

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.