Jump to content
இணைய வழங்கி மாற்றம் காரணமாக இன்று  (17/11/2024) ஐரோப்பிய நேரம் 20:00 மணிமுதல் இணைய வழங்கியில் தடங்கல் ஏற்படும் என்பதை அறியத்தருகின்றோம்.

ஏலியன்கள் எனப்படும் வேற்றுகிரக வாசிகள் வாழும் புதிய கிரகம் கண்டுபிடிப்பு:


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்
பதியப்பட்டது
வேற்றுகிரகவாசிகள் வாழும் சாத்தியக்கூறுகள் நிறைந்த புதிய கிரகத்தை அமெரிக்க வானியல் வல்லுனர்கள் கண்டுபிடித்துள்ளனர்.  ஏலியன்கள் எனப்படும் வேற்றுகிரக வாசிகள் இருக்கிறார்களா இருந்தால் அவர்கள் எப்படி இருப்பார்கள்? நம்மை போலவே இருப்பார்களா? அல்லது சினிமாவில் காட்டப்படும் உருவங்களில் இருப்பார்களா? இதுபோன்ற எண்ணற்ற கேள்விகள் நம் மனதில் எழுவது உண்டு. பொதுவாக, வேற்று கிரகவாசிகள் உள்ளார்களா? என்ற கேள்விக்கு பெரும்பாலான விஞ்ஞானிகள் 'ஆம்' என்றே பதில் கூறுகிறார்கள். தற்போது வேற்றுக்கிரக வாசிகளின் வாழ்விடம் 40 ஒளி ஆண்டுகள் தூரத்தில் அமைந்துள்ளதாக கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

வேற்றுகிரகவாசிகள் வாழும் சாத்தியக்கூறுகள் நிறைந்த புதிய கிரகத்தை அமெரிக்க வானியல் வல்லுனர்கள் கண்டுபிடித்துள்ளனர். ஏலியன்கள் எனப்படும் வேற்றுகிரக வாசிகள் இருக்கிறார்களா இருந்தால் அவர்கள் எப்படி இருப்பார்கள்? நம்மை போலவே இருப்பார்களா? அல்லது சினிமாவில் காட்டப்படும் உருவங்களில் இருப்பார்களா? இதுபோன்ற எண்ணற்ற கேள்விகள் நம் மனதில் எழுவது உண்டு. பொதுவாக, வேற்று கிரகவாசிகள் உள்ளார்களா? என்ற கேள்விக்கு பெரும்பாலான விஞ்ஞானிகள் 'ஆம்' என்றே பதில் கூறுகிறார்கள். தற்போது வேற்றுக்கிரக வாசிகளின் வாழ்விடம் 40 ஒளி ஆண்டுகள் தூரத்தில் அமைந்துள்ளதாக கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

   

நாசா விண்வெளி ஆய்வு மையம் வெளியிட்டுள்ள வீடியோவில் பூமியை போலவே அங்கும் சுற்றுச்சூழல் ஆதாரம் காணப்படுகின்றது. ஒரு குட்டையான செந்நிற நட்சத்திரமும் அதனைச் சுற்றும் பூமியைவிட சற்று பெரியதுமான மூன்று கிரகங்களும் அண்டவெளியில் வானியல் வல்லுநர்களால் கடந்த மே மாதம் கண்டுபிடிக்கப்பட்டன. ஒன்றுக்கொன்று வெகுதூரத்தில் காணப்படும் மூன்று கிரகங்களில். நட்சத்திரத்துக்கு மிக அருகாமையில் உள்ள இரண்டு கிரகங்களில் உயிர்கள் வாழ்வதற்கேற்ப நமது பூமியில் உள்ளது போன்ற பாறைகளும் சுற்றுச்சூழலும் அமைந்துள்ளது.

விவரிக்க முடியாத அமைப்புடன் பறக்கும் தட்டுகளில் பூமிக்கு வந்து செல்லும் வேற்றுக்கிரக வாசிகள் இங்கு வாழக்கூடும் என ஆய்வாளர்கள் முடிவுசெய்துள்ளனர். இதை ஹப்பிள் விண்வெளி தொலைநோக்கி மூலம் பார்த்தும் உறுதி செய்துள்ளனர்.அந்த நட்சத்திரத்திற்கு ட்ராப்பிஸ்ட்-1 என பெயரிட்டுள்ளனர். அதைச் சுற்றும் கிரகங்களும் முன்பே கண்டுபிடிக்கப்பட்டிருந்தாலும் ஆய்வுகள் தொடர்ந்த நிலையில், இப்போழுதுதான் ட்ராப்பிஸ்ட்- 1 க்கு மிக அருகில் உள்ள கிரகத்தில், பூமியில் அமைந்திருப்பது போல, உயிர்கள் வாழக்கூடிய பாறை நிலங்களும், சிறிய சுற்றுச்சூழலும் காணப்படுவது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

இது செவ்வாய் கிரகத்தோடு ஒப்பிடுகையில், சராசரியாக அதன் சுற்றுவட்டப்பாதையை விட, 12.5 ஒளி நிமிடங்கள் தூரத்தில் உள்ளது. மேலும், அந்த கிரகம் நம் பூமியைவிட தோராயமாக மூன்று மடங்கு பெரியதாகவும் உள்ளது. இந்த கண்டுபிடிப்பு விண்வெளி ஆய்வு வரலாற்றிலே மிகச்சிறந்த முன்னேற்றமாக விஞ்ஞானிகளே வியக்கின்றனர்.

மாசசூசெட்ஸ் தொழில்கல்வி நிறுவனத்தில் இந்த கிரகங்களை பார்த்து மேலும், ஆய்வு செய்துவரும் சர்வதேச விஞ்ஞானிகள் குழு, சூரியனை பூமி சுற்றுவதுபோல, அந்த நட்சத்திரத்தையும் அந்த கிரகங்கள் சுற்றுகின்றன. ஆனால், அந்த நட்சத்திரம் வெப்பமின்றி குளிர்ந்தும் பிரகாசமான செந்நிற ஒளியுடனும் காணப்படுகிறது. அதற்கு, அந்த நட்சத்திரத்தை சுற்றியுள்ள அகச்சிவப்பு அடுக்கே காரணம்.

அந்த கிரகங்களின் அளவும் வெப்பநிலையும் உயிர்கள் வாழ தகுதியானது. மேலும், அடர்சிகப்பு நிறத்தில் ஒளிரும் அந்த நட்சத்திரம் சூரியனில் எட்டில் ஒரு பகுதி நிறையுடையது. மறையாத, உறுதியான சமிஞைகள் அந்த சிவப்பு நட்சத்திரத்தில் இருந்து பெறப்படுவதால், வாழத்தக்க உலகங்களின் பிரதான இலக்குகள் அங்கு நிச்சயம் இருக்க வேண்டும் என வானியல் வல்லுனர் லீஜ்(Liege) வாதிடுகிறார்.

மேலும், அந்த நட்சத்திரம் ஒரு ஒழுங்கான கால இடைவெளியில் மறைந்து பின் தோன்றுகிறது. அது நட்சத்திரத்துக்கும் பூமிக்கும் இடையில் பல பொருள்கள் இங்கும் அங்குமாக செல்வதை உணர்த்துவதாக உள்ளது. சுழற்சியின்போது, கிரகங்களுக்குள்ளும் நட்சத்திரத்துடனுமான நேரும் நேர்க்கோட்டு சந்திப்பு வெவ்வேறு காலங்களில் நடக்கிறது. நட்சத்திரத்துக்கு மிக அருகாமையில் உள்ள இரண்டு கிரகங்கள் 1.5 நாள் மற்றும் 2.4 நாளில் சுற்றி முடிக்கின்றன. மூன்றாவது கிரகம் கேள்விக்குறியாக உள்ளது.

அதற்கு 4 லிருந்து 73 நாட்கள் வரை ஆகலாம்.ட்ராப்பிஸ்ட்-1 நட்சத்திரத்தை சுற்றிலும் மேலும் 60 குட்டையான நட்சத்திரங்கள் காணப்படுவதாக பெல்ஜியம், லீஜ் பல்கலைக்கழகத்தை சேர்ந்த மைக்கேல் கில்லான் கூறுகிறார். இரண்டு வாரங்களுக்கு முன்பாக, அந்த இரண்டு கிரகங்களில் போக்கு மற்றும் வரத்து என இருமுறையிலும் எடுக்கப்பட்ட ஸ்பெக்ட்ரோஸ்கோபிக் பதிவில், அவற்றின் உள் சுற்றுச்சூழலின் தன்மையும் கணிக்கப்பட்டுள்ளது.

அதன் ஸ்பெக்ட்ரமும் எதிர்பார்த்தபடி கிடைத்துள்ளது என்கின்றனர்.மேலும், கிரகத்துக்குள் செல்லும் ஒளியின் அலைநீளத்தில் (Wavelength) நிறைய மாறுபாடுகள் ஏற்படுவதால், அங்கு ஒளியும், பெரிய மற்றும் அடர்த்தியான கார்பன் டை ஆக்ஸைடு அதிகமுள்ள வளிமண்டலமும், அடர்த்தியான மேகங்களும் இருக்கக்கூடும்.

அது பூமி, செவ்வாய், வியாழன் கிரகத்தைப் போல சுற்றுச்சூழல் கொண்டது என்பதை ஆய்வுகள் உறுதிசெய்கிறது. அங்கு வாழ்பவர்கள் வாழ்க்கை முறையும் பூமியில் இருப்பதுபோல, பெரிய தொழில்நுட்ப வளர்ச்சி கொண்ட கலாசாரமாக இருக்கும்.

அந்த கிரகத்தின் உட்பகுதி சுற்றுச்சூழலை மேலும் ஆராய்வதற்கு, இன்னும் துல்லியமான, பெரிய இடவசதிகள் கொண்ட தொலைநோக்கிகளை உருவாக்குவது சர்வதேச விஞ்ஞானிகள் குழுவின் அடுத்தக்கட்ட நடவடிக்கையாக இருக்கும் என டாக்டர் டி விட் கூறுகிறார்.

அங்கு வேற்றுக்கிரக வாசிகள் இருந்தால், மனிதர்களைவிட சக்தி மிக்கவர்களாகவே நிச்சயம் இருப்பார்கள். எப்படி என்கிறீர்களா?பூமியின் துணை கிரகமான நிலவுக்கே சமீப காலத்தில்தான் நாம் சென்றிருக்கிறோம். ஆனால், 40 ஒளி ஆண்டுகள் தூரத்திலிருந்து நம் பூமிக்கு விதவிதமான பறக்கும் தட்டுகளில் வந்து அடிக்கடி பயமுறுத்துகிறார்களே அவர்களுடைய விஞ்ஞான வளர்ச்சி எவ்வளவு சக்திகொண்டதாக இருக்கும்?

http://www.seithy.com/breifNews.php?newsID=162128&category=WorldNews&language=tamil

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

  • Our picks

    • "முதுமையில் தனிமை [Senior Isolation]"/பகுதி: 01
      உலகத்தின் சனத்தொகை ஒவ்வொரு ஆண்டும் கூடிக் கொண்டு போகிறது. இத்தகைய சனத்தொகை அதிகரிப்பில் முதியோரின் அதிகரிப்பு வேகமானதாக உள்ளது என்பதை புள்ளி விபரங்கள் எடுத்தியம்புகின்றன. 2021 ம் ஆண்டளவில் உலக சனத் தொகையில் ஏறத்தாள கால் பங்கினர் (23%) 60 வயதிற்கு மேற்பட்டோராய் இருப்பர் என எதிர்வு கூறப்பட்டுள்ளது. ஆனால் முதியோர் என்றால் என்ன ? மக்களில் வயதில் மூத்த, நீண்ட நாள் வாழுபவரையும் [elderly people] மற்றும் நல்ல உலக அனுபவம், பலவகைக் கல்வி முதலான தகுதிகளைக் கொண்ட அறிவில் பெரியவர்களையும் [persons of ripe wisdom] முதியோர் என பொதுவாக குறிப்பிடுவர். இதில் நாம் முன்னையதைப் பற்றி மட்டும் இங்கு ஆராய உள்ளோம்.
        • Like
      • 4 replies
    • "சோதிடமும் அசட்டுநம்பிக்கையும்"

      தமிழர்களுக்கு நான்கு என்ற எண்ணை நிறையவே பிடிக்கும். இதைப் பார்க்கையில் சங்க காலத்திலேயே எண் சோதிடம்- (Numerology) "பித்து" வந்துவிட்டதோ என்று தோன்றுகிறது. ஆனால் சங்க காலத்துக்குப் பின்னர் தான் நூல்களையும் பாக்களையும் தொகுக்கும் வேலைகள் துவங்கின. என்ன காரணமோ தெரியவில்லை நூல்களின் பெயர்களில் 4, 40, 400, 4000 என்று நுழைத்து விட்டார்கள். நான் மணிக் கடிகை முதல் நாலாயிர திவ்யப் பிரபந்தம் வரை சர்வமும் நாலு மயம்தான் !!

      “ஆலும் வேலும் பல்லுக்குறுதி, நாலும் இரண்டும் சொல்லுக் குறுதி” என்று சொல்லுவார்கள். ஆல, வேல மரங்களை விளக்கத் தேவை இல்லை. “நாலும் இரண்டும்” என்பது வெண்பாவையும் குறள் வகைப் பாக்களையும் குறிக்கும். நம்பிக்கை தவறில்லை அது மூடநம்பிக்கை யாகமல் இருக்கும் வரை. அளவுக்கு அதிகமாக இதுபோல சிந்திக்கும் போது நம்பிக்கையே மூடநம்பிக்கைக்கு வழிவகுப்பதாக அமைகிறது!.
        • Like
      • 4 replies
    • இதை எழுத மிகவும் அயற்சியாய்த் தான் இருக்கிறது.

      ஜீவா போன்றவர்களுக்கு இந்து மதத்தை காப்பாற்ற வேண்டிய தேவை என்ன என்பதை நான் கேட்கவில்லை ஆனால் சமுத்ரா போன்றவர்களுடைய தேவையில் இருந்து மாறுபட்டதாக அது இருக்கும் என்று புரிந்துகொள்கிறேன். அது என்னுடைய புரிதல். எல்லோரும் எதோ ஒரு புரிதலின் அடிப்படையிலேயே அடுத்த அடியை எடுத்து வைக்கிறோம்.
        • Like
      • 4 replies
    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.