Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

கறை படிந்த கறுப்பு ஜூலை

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

கொழும்பில் தமிழர்களின் இருப்பையே கேள்விக்குறியாக்கிய, தமிழரின் வரலாற்றுப் பக்கங்களில் அழிக்க முடியாத வடுக்களை ஏற்படுத்திய, கறுப்புஜூலை நினைவு நாள் இன்றாகும். பல வரலாற்றுத் துன்பங்களை சுமந்து வந்துள்ள ஜூலை மாதம் ஈழத்தமிழரின் வரலாற்றில் ஆழமாகப் பதிந்துவிட்ட ஒன்று.

கொழும்பில் தமிழர்களின் இருப்பையே கேள்விக்குறியாக்கிய, தமிழரின் வரலாற்றுப் பக்கங்களில் அழிக்க முடியாத வடுக்களை ஏற்படுத்திய, கறுப்புஜூலை நினைவு நாள் இன்றாகும். பல வரலாற்றுத் துன்பங்களை சுமந்து வந்துள்ள ஜூலை மாதம் ஈழத்தமிழரின் வரலாற்றில் ஆழமாகப் பதிந்துவிட்ட ஒன்று.

   

33 ஆண்டுகளுக்கு முன்னர் இன்றைய நாளில் தான் தமிழீழ விடுதலைப் போராட்டத்தில் பாரிய திருப்புமுனை ஏற்படுத்திய திருநெல்வேலித் தாக்குதல் நடத்தப்பட்டது. 1983இல் நடத்தப்பட்ட இத்தாக்குதலில் 13 சிங்கள இராணுவத்தினர் கொல்லப்பட்டனர். வெறும் கிளர்ச்சி என அறியப்பட்ட போராட்டம் அத்தாக்குதலுடன் உலகளாவிய ரீதியில் அறியப்பட்டது.

13 இராணுவச் சிப்பாய்கள் கொல்லப்பட்டதன் எதிரொலியாக தலைநகரில் வாழ்ந்த தமிழர்களுக்கு எதிராக வன்முறை கட்டவிழ்த்து விடப்பட்டது. சுமார் 3 ஆயிரம் பேர் வரையான தமிழர்கள் கொல்லப்பட்டனர். ஏராளமான பெண்கள் பாலியல் வன்புணர்வுக்கு உட்படுத்தப்பட்டார்கள். கோடிக்கணக்கான தமிழரின் சொத்துக்கள் அழிக்கப்பட்டன. ஏற்கனவே பல இனப்படுகொலைகள் சிங்களவர்களால் நடத்தப்பட்டாலும் அவை எல்லாவற்றுக்கும் சிகரம் வைத்தாற்போல் அமைந்ததே இந்த 1983ஆம் ஆண்டு ஜூலை படுகொலை.

1983 இனக்கலவரத்தில் தமிழர்களை அழிக்க வெறியோடு ஒரு கூட்டம் விரட்டினாலும், அதே சிங்கள இனத்தைச் சார்ந்த மனிதாபிமானம் உள்ளவர்களினால் துணிவோடு பல தமிழர்கள் காப்பாற்றப்பட்டார்கள் என்பதை நாம் இத்தருணத்தில் மறந்துவிடக் கூடாது. பல சிங்கள குடும்பங்கள் தமது வீடுகளில் தமிழர்களுக்கு அடைக்கலம் கொடுத்து உதவினார்கள்.

ஈழத்தில் ஆயுதப் போராட்டம் தீவிரம் அடைவதற்கு ஜூலைக் கலவரம் பிரதான காரணமாக அமைந்தது. தமிழர்கள், பெரும்பான்மையினமான சிங்களவர்கள் மீதும் சிங்கள ஆட்சியாளர்கள் மீதும் நம்பிக்கையிழந்து சந்தேகம் கொள்ள தலைப்பட்டனர். இந்த நாட்டிலே இனங்கள் ஒன்றாக இணைந்து வாழ முடியாது என்கின்ற நிலைமையை ஜூலைக் கலவரம் ஏற்படுத்தியிருந்தது.

ஜூலைக் கலவரம் நடந்தேறி 33 வருடங்கள் உறுண்டோடினாலும் தமிழரின் மனதோடு அன்றைய நாள் ஆழமாக பதிந்துவிட்டது. வருடத்தில் மாதங்கள் பல கடந்தாலும் ஜூலை என்றதுமே தமிழரின் மனங்களில் 1983ஆம் ஆண்டின் கறைபடிந்த கறுப்பு ஜூலையே நினைவிற்கு வருகின்றது.

 

http://www.seithy.com/breifNews.php?newsID=162096&category=TamilNews&language=tamil

கறை படிந்த கறுப்பு ஜூலை
கொழும்பு பொரளையில் உரு­வா­கிய இனக்­க­ல­வரம் ஆடிக்­க­ல­வ­ர­மாக உரு­வெ­டுத்து தமிழ் மக்­களின் உயிர்கள், உடை­மைகள் என்­ப­வற்றைப் பெரிய அளவில் அழித்­தொ­ழித்­தது என்­பது குறிப்­பி­டத்­தக்­கது.  இந்த தாக்­குதல் சம்­ப­வத்­திற்கு மறு­நா­ளா­கிய ஜூலை மாதம் 24 ஆம் திகதி பர­விய காட்டுத் தீ போன்ற வதந்­திகள் கொழும்பு மாந­க­ரத்தைச் சுடு­கா­டாக்­கி­யது. இந்த நிலைமை 30 ஆம் திகதி வரையில் மிக மோச­மாகத் தொடர்ந்­தது. 
showImageInStory?imageid=286003:tn
 
showImageInStory?imageid=286004:tn
 
showImageInStory?imageid=286005:tn
 

முப்­பத்திமூன்று வரு­டங்­க­ளுக்கு முன்னர் அன்­றைய தினமும் இது­போன்­ற­தொரு சனிக்­கி­ழ­மைதான். இரவு 11.30 மணி­ய­ளவில் யாழ்ப்­பாணம் திரு­நெல்­வேலி தபால் பெட்டிச் சந்­தியில் இரா­ணுவ வாகனத் தொட­ரணி ஒன்றின் மீது நடத்­தப்­பட்ட தாக்­கு­தலில் ஒரு அதி­காரி உட்­பட 13 இரா­ணு­வத்­தினர் கொல்­லப்­பட்­டனர். 

பலா­லியில் இருந்து யாழ்ப்­பாணம் கோட்­டையை நோக்கி சென்று கொண்­டி­ருந்த இரா­ணுவ ஜீப் மற்றும் ட்ரக் வண்­டி­யொன்றின் மீதே இந்தத் தாக்­குதல் நடத்­தப்­பட்­டது. முன்னால் சென்று கொண்­டி­ருந்த ஜீப் கண்­ணி­வெடி தாக்­கு­த­லுக்கு உள்­ளா­கி­யதில் இரண்டு இரா­ணு­வத்­தினர் காய­ம­டைந்­தனர். அவர்­க­ளுக்கு உத­வு­வ­தற்­காக பின்னால் வந்த இரா­ணுவ ட்ரக் வண்­டியில் இருந்து இறங்­கிய இரா­ணு­வத்­தினர் மீது மறைந்­தி­ருந்த விடு­த­லைப்­பு­லிகள் சர­மா­ரி­யாகத் துப்­பாக்­கிப்­பி­ர­யோகம் செய்­ததன் கார­ண­மா­கவே இந்த அனர்த்தம் நேர்ந்­தது. 

இந்தத் தாக்­கு­தலில் 13 இரா­ணு­வத்­தி­ன­ருடன் விடு­த­லைப்­பு­லி­களின் முக்­கி­யஸ்­த­ரா­கிய செல்­லக்­கிளி அம்­மானும் கொல்­லப்­பட்­டார். 

விடு­த­லைப்­பு­லி­க­ளினால் இரா­ணு­வத்­தினர் மீது மேற்­கொள்­ளப்­பட்ட முத­லா­வது பெரும் தாக்­குதல் இது என்று வர்­ணிக்­கப்­ப­டு­கின்­றது. இந்தத் தாக்­கு­தலே 1983 ஜூலை கல­வ­ரத்­திற்கு வித்­திட்­டி­ருந்­தது. 

அர­சாங்­கத்­திற்கு எதி­ரான தமிழர் தரப்பின் ஆயுதப் போராட்­டத்தில் மேற்­கொள்­ளப்­பட்ட முத­லா­வது பெரிய தாக்­குதல் இது­வாகும். அது மட்­டு­மல்ல; தமிழ் இளை­ஞர்­களின் வீரம், சுமார் 30 வருட கால யுத்­தத்­திற்கு இந்தச் சம்­ப­வமே பிள்­ளையார் சுழி­யிட்­டி­ருந்­தது. 

ஆயினும் இந்தத் தாக்­கு­தலின் உட­னடி எதிரொ­லி­யாக கொழும்பு பொரளையில் உரு­வா­கிய இனக்­க­ல­வரம் ஆடிக்­க­ல­வ­ர­மாக உரு­வெ­டுத்து தமிழ் மக்­களின் உயிர்கள், உட­மைகள் என்­ப­வற்றைப் பெரிய அளவில் அழித்­தொ­ழித்­தது என்­பது குறிப்­பி­டத்­தக்­கது. 

இந்த தாக்­குதல் சம்­ப­வத்­திற்கு மறு­நா­ளா­கிய ஜூலை மாதம் 24 ஆம் திகதி பர­விய காட்டுத் தீ போன்ற வதந்­திகள் கொழும்பு மாந­க­ரத்தைச் சுடு­கா­டாக்­கி­யது. இந்த நிலைமை 30 ஆம் திகதி வரையில் மிக மோச­மாகத் தொடர்ந்­தது. 

கொல்­லப்­பட்ட இரா­ணு­வத்­தி­னரை அவர்­களின் குடும்­பத்­தி­ன­ரிடம் கைய­ளிப்­ப­தற்குப் பதி­லாக பொரளை மயா­னத்தில் இறு­திக்­கி­ரி­யை­களை நடத்­து­வது என்றும் அதில் அப்­போ­தைய ஜனா­தி­பதி ஜே.ஆர்.ஜய­வர்­தன, பிர­தமர் ரண­சிங்க பிரே­ம­தாசா மற்றும் அமைச்­ச­ர­வை­யினர் கலந்து கொள்­வது என்றும் அவ­ச­ர­மாகக் கூடிய அமைச்­ச­ர­வையில் தீர்­மா­னிக்­கப்­பட்­டது.

ஆனால், இந்தத் தாக்­குதல் பற்றி பர­விய பல்­வேறு வகை­யான தக­வல்கள் வதந்­தி­க­ளினால் பொரளை கனத்தை பகு­தியில் மூவா­யிரம் பேர­ளவில் கூடினர். கொல்­லப்­பட்ட இரா­ணு­வத்­தி­ன­ரு­டைய சட­லங்­களை அவர்­க­ளு­டைய உற­வி­னர்­க­ளிடம் கைய­ளிக்க வேண்டும் என்­பதே அவர்­களின் கோரிக்­கை­யாக இருந்­தது.

யாழ்ப்­பாணம் பலா­லியில் இருந்து இரத்­ம­லானை விமா­னத்­தளம் ஊடாக பொரளை மயா­ன­பூ­மிக்கு மாலை 5 மணிக்கு வந்து சேரும் என எதிர்­பார்க்­கப்­பட்ட இரா­ணுவ சட­லங்கள் இரவு 8.30 மணி­ய­ள­வி­லேயே இரத்­ம­லானை விமான தளத்­திற்கு வந்து சேர்ந்­தன. அங்­கி­ருந்து அந்த சட­லங்கள் இரா­ணுவ தலை­மை­ய­கத்­திற்கு எடுத்துச் செல்­லப்­பட்டு மேலும் தாம­த­மா­கிய அதே­வேளை, பொரளை பகு­தியில் கூடி­யி­ருந்த கூட்டம் ஆயி­ரக்­க­ணக்கில் அதி­க­ரித்து, எண்­ணா­யி­ரத்தைத் தாண்­டி­யது. 

பொரளை பகு­தியில் உள்ள சேரிப்­ப­குதி மக்­களே முதலில் அங்கு ஆயி­ரக்­க­ணக்கில் கூடினர். அதனைத் தொடர்ந்து நேரம் செல்லச் செல்ல வேறு இடங்­களில் இருந்தும் மக்கள் அங்கு வந்து குழு­மினர். முடிச்­சு­மா­றிகள், குற்றச் செயல்­க­ளையே தமது ஜீவ­னோ­பா­ய­மாகக் கொண்­டி­ருந்த குழு­வி­னரும் கூட்­டத்தில் கலந்து கொண்­டனர். குடும்­பங்­க­ளிடம் சட­லங்­களை ஒப்­ப­டைக்க வேண்டும் என்று கோஷ­மிட்டுக் கொண்­டி­ருந்த கூட்டம் ஆவேசம் கொண்­டது. கலகம் அடக்கும் பொலிஸார் கண்­ணீர்ப்­பு­கைக்­குண்­டு­களைப் பயன்­ப­டுத்­தினர்; குண்­டாந்­த­டி­யடிப் பிர­யோ­கமும் நடத்­தப்­பட்­டது, 

கலகம் அடக்கும் பொலி­ஸா­ரினால் கல­வ­ரத்தை அடக்க முடி­ய­வில்லை. நிலைமை கட்­டுக்­க­டங்­காமல் போகவே, இரா­ணு­வத்­தி­ன­ரிடம் பொறுப்பு கைய­ளிக்­கப்­பட்­டது. இத­னை­ய­டுத்து வானத்தை நோக்கித் துப்­பாக்கிப் பிர­யோகம் நடத்­தப்­பட்­டது. கூட்டம் கலைந்­தது. ஆனால் அமைதி ஏற்­ப­ட­வில்லை. 

கலைந்த கூட்டம் பொரளை நகரில் உள்ள தமிழ்க்­க­டை­களைத் தாக்­கி­யது தமி­ழர்கள் பெரும் எண்­ணிக்­கையில் வாழ்ந்த அடுக்கு வீடு­களும் தாக்­கு­த­லுக்கு உள்­ளா­கின. பொரளையில் இருந்து படிப்­ப­டி­யாக தமி­ழரைத் தாக்கும் காடையர் கூட்டம் பெருகி கொழும்பு நகரின் பல இடங்­க­ளுக்கும் பரவிச் சென்று தாக்­கு­தல்கள் நடத்­தப்­பட்­டன. 

இந்த நிலைமை 30 ஆம் திகதி வரையில் ஒரு கிழமை நீடித்­ததில் சுமார் மூவா­யிரம் பேர் கொல்­லப்­பட்­டனர். பலர் படு­கா­யங்­க­ளுக்கு உள்­ளா­கினர் தமிழ் மக்­களின் வர்த்­தக சொத்­துக்கள் கொழும்பில் மட்­டு­மல்­லாமல் மலை­யகம் உட்­பட தெற்கில் நாட்டின் பல பகு­தி­க­ளிலும் பல நக­ரங்­க­ளிலும் அடித்து நொறுக்­கப்­பட்­டன. தீயிட்டு அழிக்­கப்­பட்­டன கோடிக்­க­ணக்­கான சொத்­துக்கள் நாச­மாக்­கப்­பட்­டன. 

ஆயி­ரக்­க­ணக்­கான தமி­ழர்கள் அக­தி­க­ளா­கினர். கொழும்பின் பல இடங்­க­ளிலும் அகதி முகாம்கள் உரு­வா­கின. இந்­தி­யாவில் இருந்து வருகை தந்த கப்­பலில் கடல் மார்க்­க­மாக தமி­ழர்கள் வட­ப­கு­திக்கு – யாழ்ப்­பா­ணத்திற்கு கொண்டு செல்­லப்­பட்­டார்கள் என்­பதை விட விரட்டி அடிக்­கப்­பட்­டனர் என்றே கூற வேண்டும். 

ஜூலை கல­வரம் ஆரம்­ப­மா­வ­தற்கு முன்பே சிறு சிறு இனக்­க­ல­வர அசம்­பா­வித சம்­ப­வங்கள் நடை­பெற்­றி­ருந்­தன. அதே­போன்று 1958 ஆம் ஆண்டு சிங்­களம் மட்டும் என்ற சட்டம் கொண்டு வரப்­பட்­டதைத் தொடர்ந்து வாக­னங்­களில் சிங்­கள எழுத்­தா­கிய ஸ்ரீ என்ற எழுத்து சிங்­க­ளத்தில் பொறிக்­கப்­பட்­டது. இதனைத் தமிழில் பொறிக்க முற்­பட்­டனர் சிலர். சிங்­களம் மட்­டுமே அரச கரும மொழி­யாக பிர­க­ட­னப்­ப­டுத்­தப்­பட்ட நிலையில் பெயர்ப்­ப­ல­கை­களில் தமிழ்ப் பெயர்­க­ளுக்கு தார் பூசி அழிக்­கப்­பட்­டது. சில இடங்­களில் சிங்­களப் பெயர்­க­ளுக்கு இந்தக் கதி­யேற்­பட்­டது, 

கறுப்பு ஜூலை கல­வ­ரத்­தின்­போது மண்­ணெண்ணெய் மற்றும் பெற்ரோல் கொள்­க­லன்­க­ளு­டனும் பொல்­லுகள், கோட­ரி­க­ளு­டனும் திரிந்­தது போன்று 1958 ஆம் ஆண்டு தார் நிரப்­பிய வாளி­க­ளு­டனும் வாள்கள், கத்­தி­க­ளு­டனும் காடையர் கூட்டம் திரிந்­தது பெயர்ப்­ப­ல­கை­களில் தமிழ் மொழியைக் கண்ட இடத்தில் தார்­பூசி அழித்­தது மட்­டு­மன்றி கண்ணில் அகப்­பட்ட தமி­ழர்­களைத் தாக்­கியது. பல இடங்­களில் கொதிக்க வைத்த தார் நிறைந்த பரல்­களில் பலரைத் தூக்கிப் போட்டு இனந்­தெ­ரி­யாத கார­ணத்­திற்­காகப் பழி வாங்­கி தங்­க­ளு­டைய கோபத்தைத் தீர்த்துக் கொண்­டனர். 

ஆனால், கறுப்பு ஜூலை கல­வ­ரத்தின் போது வீடு­க­ளிலும் கொட்­டில்­க­ளிலும் வர்த்­தக நிலை­யங்­க­ளிலும் இருந்­த­வர்கள் உள்ளே இருக்­கத்­தக்­க­தாக தீயிட்டு கொளுத்­தப்­பட்­டார்கள்; அப்­பா­வி­க­ளான தமி­ழர்கள் மீது அடை­யா­ளமே தெரி­யாத சிங்­களக் காடை­யர்கள், உட­மை­களைக் கொள்­ளை­யிட்டும், தாக்­குதல் நடத்­தியும், தீயிட்டும் தமது கார­ணமே இல்­லாத கோபத்தைத் தீர்த்துக் கொண்­டார்கள். சம்­பந்­தமே இல்­லாத ஒரு செய­லுக்­காக பழி தீர்த்துக் கொண்­டார்கள். 

கறுப்பு ஜூலை கல­வ­ரத்­திற்கு முன்­ன­தாக தமிழ் தரப்­பி­ன­ருக்கும் ஜனா­தி­பதி ஜே.ஆர்.ஜய­வர்­தன அரச தரப்­பி­ன­ருக்கும் ஏற்­பட்­டி­ருந்த அர­சியல் பிணக்கு கார­ண­மாக தெருச்­சண்­டியர் பாணியில் இய­லு­மென்றால் மோதிப்­பா­ருங்கள். போர் என்றால் போர். சமா­தானம் என்றால் சமா­தானம் என்று ஜனாதி­பதி ஜே.ஆர்.ஜய­வர்­தன சூளு­ரைத்­தி­ருந்தார். 

இந்தப் பின்­ன­ணி­யி­லேயே கறுப்பு ஜூலை கல­வரம் வெடித்­தி­ருந்­தது. இந்தக் கல­வ­ரத்தின் மூலம் சிங்­கள இனமே கூனிக்­கு­றுகத் தக்க வகையில் வன்­செ­யல்கள் தலை­விரித்தாடின. உட­ன­டி­யாக ஊர­டங்கு சட்டம் நடை­மு­றைப்­ப­டுத்­தப்­பட்ட போதிலும், நிலை­மையைக் கட்­டுப்­பாட்­டினுள் கொண்டு வர முடி­ய­வில்லை. மாறாக வெலிக்கடை சிறைச்­சா­லைக்கும் கல­வரம் பர­வி­யது. அங்கு தமிழ்க்­கை­திகள் மீது நடத்­தப்­பட்ட தாக்­கு­தல்­ சம்­ப­வங்­களில் 50க்கும் மேற்­பட்ட தமிழ் அர­சியல் கைதிகள் சித்­தி­ர­வதை செய்து காட்டு மிராண்டித் தன­மாகக் கொல்­லப்­பட்­டனர்.

வெலிக்­கடை சிறைச்­சாலை படு­கொலை­யா­னது கறுப்பு ஜூலை கல­வ­ரத்தில் இடம்­பெற்ற தாக்­கு­தல்­களின் உச்ச கட்ட காட்­டு­மி­ராண்­டித்­த­னத்தை வெளிப்­ப­டுத்­தி­யி­ருந்­தது. 

கறுப்பு ஜூலை கல­வ­ர­மா­னது ஐக்­கிய தேசிய கட்­சியின் ஆட்சிக் காலத்­தி­லேயே இடம்­பெற்­றது. இதேபோன்று ஐக்­கிய தேசியக் கட்சி அதி­கா­ரத்தில் இருந்த போதே, யாழ்ப்­பா­ணத்தில் 1981 ஆம் ஆண்டு தமி­ழரின் கலா­சாரப் பொக்­கி­ஷ­மாக விளங்­கிய யாழ் நூலகம் எரி­யூட்­டப்­பட்­டது.

இந்த நாட்டின் இனப்­பி­ரச்­சி­னை­யா­னது, வன்­முறை மட்­டத்­திற்கு உயர்­வ­தற்கும், தமிழ் இளை­ஞர்கள், தமி­ழர்­களை அரச பயங்­க­ர­வா­தத்­தி­லி­ருந்து பாது­காப்­ப­தற்­கு­மாக ஆயு­த­மேந்­து­வ­தற்கு தீவி­ர­மான தூண்­டு­தலை அளிப்­ப­தற்கும் கறுப்பு ஜூலை கல­வ­ரமும், யாழ். நூலக எரிப்­புமே முக்­கிய சம்­ப­வங்­க­ளாக அமைந்­தன.  

யாழ்ப்­பாணம் திரு­நெல்­வே­லியில் இரா­ணு­வத்­தினர் மீது விடு­த­லைப்­பு­லிகள் நடத்­திய தாக்­கு­தலே கறுப்பு ஜூலை கல­வ­ரத்­திற்கு தூண்­டு­கோ­லாக அமைந்­தது என்­பது மேலோட்­ட­மான கார­ண­மாக இருந்த போதிலும், கறுப்பு ஜூலை கல­வ­ரத்தின் ஊடாக தமி­ழர்­க­ளுக்கு எதி­ரான இனச்­சுத்­தி­க­ரிப்பு நட­வ­டிக்­கையை மேற்­கொள்­வ­தற்கு ஏற்­க­னவே அரச தரப்பில் ஒரு திட்டம் இருந்­தது என்ற விடயம் கறுப்பு ஜூலை கல­வரம் பற்­றிய விசா­ர­ணை­களின் போது வெளிப்­பட்­டி­ருந்­தது.

வட்­டுக்­கோட்­டையில் தனி­நாட்­டுக்­கான தீர்­மானம் நிறை­வேற்­றப்­பட்டு அர­சாங்­கத்­திற்கு எதி­ராக ஒத்­து­ழை­யாமை இயக்கம் உட்­பட பல­த­ரப்­பட்ட வழி­களில் ஆட்­சி­யா­ளர்­க­ளுக்கு நெருக்­கடி கொடுத்த தமிழ் மக்­களின் சாத்­வீகப் போராட்­டத்தை நசுக்­கு­வ­தற்­காக பல்­வேறு வடி­வங்­களில் அரச பயங்­க­ர­வாதம் அரங்­கேற்­றப்­பட்­டி­ருந்­தது. அவற்றில் யாழ் நூலக எரிப்பும், 1983 கறுப்பு ஜூலை கல­வ­ரமும் மிக மிக முக்­கிய சம்­ப­வங்­க­ளாகக் கரு­தப்­ப­டு­கின்­றன. 

கல்வி, விளை­யாட்டு, வர்த்­தகம், அரச நிரு­வாகம், பொதுத் துறை செயற்­பா­டுகள் என பல வழி­க­ளிலும் கொடி­கட்டிப் பறந்த தமி­ழரை பெட்­டிப்­பாம்­பாக அடக்கி ஆள முற்­பட்­டதன் உச்­ச­கட்ட வெளிப்­பா­டா­கவே கறுப்பு ஜூலை கல­வரம் நோக்­கப்­ப­டு­கின்­றது. அத்­த­கைய கல­வ­ரத்­திற்குக் கார­ண­மா­ன­வர்களை விசா­ர­ணை­களின் மூலம் கண்­ட­றி­வ­தற்கு அர­சாங்கம் முனை­ய­வில்லை.அதற்­கான முயற்­சி­களும் மேற்­கொள்­ளப்­ப­ட­வில்லை. சன்­சோனி கமிஷன் என்ற பெயரில் ஒரு விசா­ரணை நடை­பெற்ற போதிலும் அது­வொரு கண்­து­டைப்பு விசா­ர­ணை­யா­கவே நடந்­தே­றி­யது. 

முப்­பத்திமூன்று வரு­டங்கள் கடந்­துவிட்ட போதிலும், கறுப்பு ஜூலை கல­வ­ரத்­திற்குக் கார­ண­மா­ன­வர்கள் கண்­டு­பி­டிக்­கப்­ப­டா­தது போலவே, அந்தக் கல­வ­ரத்தில் ஈடு­பட்­ட­வர்கள் எவரும் இந்த நாட்டின் சட்டம் ஒழுங்கு மற்றும் நீதிச் செயற்­பாட்டு கட்­ட­மைப்­பினால் இது­வ­ரையில் சட்டத்தின் முன்னால் நிறுத்­தப்­ப­ட­வில்லை; தண்­டிக்­க­ப்ப­ட­வு­மில்லை.

உள்­ளக விசா­ர­ணைகள் எந்தப் பல­னையும் தரப்­போ­வ­தில்லை என்று இப்­போது தமிழ் மக்­களும் அவர்­களைச் சார்ந்த புத்­தி­ஜீ­வி­களும் கூறு­வ­தற்கு கறுப்பு ஜூலை கல­வ­ரத்தின் கொடு­மை­க­ளுக்கு நீதி கிடைக்­காத அனு­ப­வமும் ஒரு முக்­கிய கார­ண­மாகும். 

கறுப்பு ஜூலை கல­வ­ரத்தின் கொடு­மைகள் தமிழ் மக்­களின் மனங்­களில் இன்னும் ஆறாத வடு­வாகப் படிந்­துள்­ளது போலவே, மனி­தா­பி­மா­ன­முள்ள சிங்­கள மக்கள் மனங்­க­ளிலும் இந்த வடு ஆறாத வடு­வாக அமைந்­தி­ருக்­கின்­றன. 

கறுப்பு ஜூலை கல­வ­ரத்­தின்­போது எந்த அள­வுக்கு சிங்­களக் காடை­யர்கள் கொடூ­ர­மான முறையில் நடந்து கொண்­டார்­களோ அதே அள­வுக்கு கருணை மிகுந்­த­வர்­க­ளா­கவும் இரக்­க­முள்­ள­வர்­க­ளா­கவும் மனி­தா­பி­மானம் நிறைந்த சிங்­கள மக்­களில் பலர் நடந்து கொண்­டி­ருந்­தனர் என்­பதை மறுக்­கவோ மறக்­கவோ முடி­யாது. 

கறுப்பு ஜூலை கல­வ­ரத்தின் போது இடம்­பெற்ற அநி­யா­யங்கள், அட்­டூ­ழி­யங்­களை எண்­ணி­யெண்ணி எத்­த­னையோ சிங்­கள உள்­ளங்கள் கண்ணீர் சிந்­தி­யி­ருக்­கின்­றன. சிங்­களக் காடை­யர்­களின் காட்­டு­மி­ராண்­டித்­த­ன­மான செய­லுக்­காக வெட்கித் தலை­கு­னிந்து என்ன செய்­வ­தென்று தெரி­யாமல் தடு­மா­றிய நல்ல சிங்­கள உள்ளம் கொண்­ட­வர்­களும் இருக்­கத்தான் செய்­கின்­றார்கள். தமி­ழ­ரா­யி­னும்­சரி, சிங்­க­ள­வர்­க­ளா­யி­னும்­ சரி அவர் கள் மனி­தர்­களே. மனித இயல்­பின்­படி, நல்­லதும் கெட்­டதும் ஒன்றே. ஓரி­னத்­த­வ­ருக்கு நல்­லதாகப்படு­ வது மற்ற இனத்தவருக்கு மனிதர்கள் என்ற ரீதியில் பிழையானதாகப்படுவதில்லை. அரசியல் நோக்கங் களும்,  இனவாத மனப் போக்கு கொண்ட செயற்பாடு களுமே தமிழ் மக்களையும் சிங்கள மக்களையும் இந்த நாடு எட்டத்தில் பிரித்து வைத்திருக் கின்றது. 

மனிதாபினமானத்தின் அடிப்படை யிலான அரசியல் செயற்பாடுகள் இனத்துக்கும் மதத்திற்கும் முக்கி யத்துவம் கொடுப்பதில்லை. முன்னுரிமை அளிப்பது மில்லை. அந்தச் செயற்பாடுகள் ஒட்டுமொத்த நாட்டின் நலன்களையே முதன்மைப்படுத்தியதாக அமைந்திருக்கும்.

மோசமான இன ரீதியான வன்முறை­களுக்கும், மத ரீதியான வன்செயல்களுக்கும், முப்பது வருடகால ஆயுத முரண்பாட்டு அழிவுகளுக்கும் முகம் கொடுத்த, மிகுந்த கசப்பான அனுபவங்களைக் கொண்டுள்ள இலங்கை மக்கள் இனிமேலும் அரசியல் இலாபங்களுக்காக இன ரீதியாகவும் மத ரீதியாகவும் பிரிந்து நின்று செயற்படுவது எதிர்காலத்திற்கு நல்லதல்ல. 

வெளிப்படையான வன்முறைகள், வன்செயல்களுக் குத் தூண்டி வந்த அரசியல்வாதிகள் இப்போது மறை முகமான முறையில் இனங்களுக்கிடையில் சாதாரண சிறு சிறு விடயங்களில் பிரிவுகளையும் பகை உணர்வு களையும் தூண்டி வருகின்றார்கள். 

http://epaper.virakesari.lk:8080/home/index?editionId=13&editionDate=23/07/2016

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.