Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

பஞ்சுஅருணாசலம்

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

பஞ்சுஅருணாசலம்

 

 


மரத்தின் கீழ் வளரும் தாவரத்திற்கு வளர்ச்சி இருக்காது என்பார்கள். ஆனால் கண்ணதாச விருட்சத்தின் கீழிருந்த இந்த (பஞ்சு அருணாசலம்) தாவரம்; பாடலாசிரியர், கதாசிரியர், கதை வசனகர்த்தா, தயாரிப்பாளர், இயக்குநர் – என்றபடி சினிமாவுலகில் படிப் படியாக வளர்ச்சியடைந்து நல்ல பலனை நமக்கு தந்தது. இந்த சாதனைகளையெல்லாம் தாண்டி, இளையராஜா என்ற இசைப் புதையலை கண்டு பிடித்ததுடன், கன்னட இசையமைப்பாளர் விஜய பாஸ்கர் என்பவரையும் தமிழுக்கு அறிமுகப் படுத்தினார் பஞ்சு.

1. பஞ்சு அருணாசலம் – வாழ்க்கைகுறிப்பு

காரைக்குடியை அடுத்த சிறுகூடல்பட்டி என்ற ஊரில் வசித்துவந்த கண்ணப்பனின் புதல்வராக 1941 இல் பிறந்தார் பஞ்சநாதன் என்ற பஞ்சுஅருணாசலம். படத் தயாரிப்பாளர் ஏ.எல்.சீனிவாசனும் கவிஞர் கண்ணதாசனும் கண்ணப்பனின் தம்பிகள் ஆவார்கள். பஞ்சுவுக்கு 4 தம்பிகளும் 2 தங்கைகளும் இருந்தனர். பஞ்சுஅருணாசலம் புகுமுக வகுப்பு (P.U.C.) வரை படித்தவர். திரிக்கப்பட்ட பஞ்சு நூலாவதுபோல, நூல்களால் கவரப்பட்ட பஞ்சு நுண்ணறிவாள ரானார். ஆம், இளம் வயதில் பஞ்சுவின் புகலிடம் நூலகமாக இருந்தது.

பஞ்சுவின் சித்தப்பா ஏ.எல்.சீனிவாசன் பி.பானுமதியின் பரணி படப்பிடிப்பு தளத்தை குத்தகைக்கு எடுத்து நடத்தி வந்தார். பஞ்சு இந்த பரணி ஸ்டுடியோவில் கொஞ்ச காலம் வேலை செய்து சினிமாவின் நுணுக்கங்களை அறிந்து கொண்டார். பஞ்சுவின் இன்னொரு சித்தப்பா கண்ணதாசன் மௌண்ட் ரோடில் ‘தென்றல்’ பத்திரிக்கை அலுவலம் வைத்திருந்தார். ஸ்டுடியோ வேலைகள் முடிந்து நேரம் கிடைக்கும் போதெல்லாம், பஞ்சுதென்றலின் இலக்கிய மணத்தை நுகரச் செல்வார். பஞ்சுக்கு பிடித்தது நூல் என்பதால், பஞ்சு ஸ்டுடியோவை விட்டு நீங்கி தென்றலில் பணியாற்ற தொடங்கினார். அடுத்த கட்டமாக பாடலெழுதும் சித்தப்பாவுக்கு உதவியாளராக இருந்தார் பஞ்சு. 1957 இல் சென்னைக்கு வந்த பஞ்சு அருணாசலம், 1959 முதல் 1973 வரை 15 ஆண்டுகளாக சித்தப்பாவிடம் உதவியாளராக இருந்துள்ளார்.

தமிழகஅரசுஇவருக்கு; 1979 இல் ’கலைமாமணி’ விருதும், 1992 இல் (பாண்டியன்படத்திற்காக) ‘சிறந்தவசனகர்த்தா’ விருதும், 1996 இல் ‘கண்ணதாசன்’ விருதும்கொடுத்துஇவரைகௌரவித்துள்ளது.

சித்தப்பா ஊரில் இல்லாத சமயங்களில் இவருக்கு பாடலெழுத வாய்ப்பு கிடைக்கும். அப்படி கிடைத்ததுதான் இவரின் ‘சாரதா’ படத்தின் முதல் பாடல் வாய்ப்பு.

‘கலங்கரை விளக்கம்’ படத்திற்கு பஞ்சு எழுதிய ‘பொன்னெழில் பூத்தது’ பாடல் எம்.ஜி.ஆருக்கு பிடித்து விட்டது. அதனால் பஞ்சுவை தனது வீட்டிற்கு வந்து பார்க்கும்படி எம்.ஜி.ஆர். சொன்னார். அப்பொழுது எம்.ஜி.ஆருக்கும் கண்ணதாசனுக்கும் சுமுகமற்ற நிலை இருந்ததால், பஞ்சு எம்.ஜி.ஆரை சந்திக்கவில்லை.

சித்ரமஹால் கிருஷ்ணமூர்த்தியின் ஹலோ பார்ட்னர் (1972) படத்திற்குதான்பஞ்சு முதன் முதலில் கதை, வசனம் எழுதினார். தொடர்ந்து; உங்கள் விருப்பம் (1974), கல்யாணமாம் கல்யாணம் (1974) – ஆகிய தனது படங்களில் பஞ்சு அருணாசலத்திற்கு கதை, வசனம் எழுத வாய்ப்பளித்தார் கிருஷ்ணமூர்த்தி. சித்ரமகால் நிறுவனத்தில் காமெடி கதைகளையே எழுதி வந்த பஞ்சு, மறுபட்ட கதைகளை கையாளத் தொடங்கினார். அந்த வகையில்; ஃபிலிமாலயா ராமச்சந்திரன் தயாரித்த உறவு சொல்ல ஒருவன் (1975), எஸ்.பி.முத்துராமன் இயக்கத்தில் மயங்குகிறாள் ஒரு மாது – ஆகிய 2 படங்களை தந்தார் பஞ்சு.

ஆராதனா, பாபி போன்ற இந்திப் படங்களின் பாடல்கள் தமிழகமெங்கும் பரபரப்பாக ஒலித்துக் கொண்டிருந்தது. இந்திப் படத்தின் பாடல்களே இரசிகர்களை கவர்ந்துள்ளபோது, தமிழில் இதுமாதிரி இரசிகர்களை கவரும் பாடல்களைநாம் தந்தால் எப்படியிருக்கும் என்று எண்ணினார் பஞ்சு அருணாசலம். பிரபல இசையமைப்பாளர்களைத் தவிர்த்து புதிய இசையமைப்பாளரை தேடினர் பஞ்சு. அப்பொழுது இவரிடம் உதவியாளராக இருந்த கதாசிரியர் ஆர்.செல்வராஜ், ஜி.கே. வெங்கடேஷிடம் உதவியாளராக இருந்த ராஜா என்ற இளையராஜாவை பஞ்சுவிடம் அறிமுகப் படுத்தினார். ஆர்.செல்வராஜின் ‘மருத்துவச்சி’ என்ற கதையே ‘அன்னக்கிளி’ என்ற படமாக உருவாகியது. 200 நாட்களுக்கு திரையிடப் பட்டு, இப்படம் மிகப் பெரிய வெற்றி கண்டது. இபடம் ஜானகிக்கும் மறு சுழற்சியை தந்தது. திரையுலக வரலாற்றை, அன்னக்கிளிக்கு முன்பு, அன்னக்கிளிக்கு பின்பு என்று சொல்ல வைத்தது இப்படம்.

நா,காமராசன் சொல்கிறார், ‘ மாங்கனி, அர்த்தமுள்ள இந்து மதம், சினிமாப் பாடல்கள், பஞ்சு அருணாசலம் ஆகியவை கண்ணதாசன் தமிழகத்துக்கு விட்டுச் சென்ற நன்கொடைகள் ஆகும்.’

பேராசிரியர் டாக்டர் காவ்யா திரு.சு.சண்முகசுந்தரம் பஞ்சுவை ‘பாக்ஸ் ஆபீஸ் பஞ்சு’ என்று போற்றுகிறார்.

பொம்மை செப்டம்பர் 1977 இதழில் மாயா என்ற வாசகர் பஞ்சுவைப் பற்றி எழுதியது, ‘பாடல் புனைவதில் உங்களை பட்டுக்கோட்டைக்கு ஈடாக நினைக்கிறேன். விரசமில்லாமல் இயற்கை அழகோடு எளிமையான வார்த்தைகளோடு காட்சிக்கு முற்றும் பொருந்தும் கருத்தோடு எழுதுவது உங்கள் தனிச் சிறப்பு.’
 

அன்புடன்,
கவிஞர் பொன். செல்லமுத்து
  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்
பஞ்சுஅருணாசலம்


Image

கலங்கரைவிளக்கம் படத்தில் சரோஜாதேவி, M.G.R.



2. பஞ்சுஅருணாசலம் பாடல் எழுதிய படங்கள் – ஆண்டு வரிசையில்

கவிஞர் பஞ்சு அருணாசலம் 1962 முதல் 2001 வரையில் 40 ஆண்டுகளில் எமது தேடுதலின்படி 108 படங்களில் பாடல்கள் எழுதியுள்ளார் என அறியமுடிகிறது.

இவர் பாடல் எழுதிய இந்த 108 படங்களில், 41 படங்களில் கதை, திரைக்கதை, வசனம் எழுதியுள்ளார் என்பது குறிப்பிடத் தக்கது.

12 படங்களில், பாடல் எழுதாமல் கதை, வசனம் தயாரிப்பு என்று இவர் ஈடுபட்டுள்ளார்.

ஆறிலிருந்து 60 வரை, உல்லாசப் பறவைகள், ருசி கண்ட பூனை, என் ஜீவன் பாடுது, மைக்கேல் மதன காமராஜன், ராசுக்குட்டி, எங்க முதலாளி தம்பிக்கு எந்த ஊரு, மாயா பஜார் - ஆகிய 8 படங்களை இவர் தயாரித்துள்ளார்.

மணமகளே வா, புதுப் பாட்டு - ஆகிய 2 படங்களை இயக்கியுமுள்ளார்.

இவர் சித்தப்பா கண்ணதாசன் பாடல் எழுதிய ‘சாரதா’ படத்தில்தான் இவர் தனது முதல் பாடலை எழுதினார். 1965 இல் ‘கங்கரை விளக்கம்’ படத்தில் வாலியுடன் பாடல் எழுதிய பஞ்சு, 35 ஆண்டுகள் கழித்து 2001 இல் ‘ரிஷி’ படத்தில் வாலியின் சீடரான கவிஞர் பழனி பாரதியுடனும் சேர்ந்து பாடல் எழுதிய வகையில், தலைமுறை கடந்து பாடல் எழுதி சாதனை படைத்துள்ளார். பஞ்சு அருணாசலமும் இளையராஜாவும் சுமார் 70 படங்களில் இணைந்து பணியாற்றியுள்ளார்கள்.

1.சாரதா – 1962
2. ஆசை அலைகள் – 1963
3. ஏழைப் பங்காளன் – 1963
4. காட்டு ரோஜா – 1963
5. குங்குமம் – 1963
6. தர்மம் தலை காக்கும் - 1963
7. நானும் ஒரு பெண் – 1963
8. யாருக்கு சொந்தம் – 1963
9. ஜெகதலப்பிரதாபன் – 1963 (டப்பிங்)
10. அம்மா எங்கே – 1964
11. அல்லி – 1964
12. நானும் மனிதன்தான் – 1964
13. கன்னித் தாய் – 1965
14. கலங்கரை விளக்கம் – 1965
15. மகாபாரதம் – 1965 – (டப்பிங்)
16. வல்லவனுக்கு வல்லவன் – 1965
17. காதல் படுத்தும் பாடு – 1966
18. மெட்றாஸ் டூ பாண்டிச்சேரி – 1966
19. அன்னையும் பிதாவும் – 1969
20. தெய்வம் பேசுமா – 1971
21. திருநீலகண்டர் – 1972
22. ஹலோ பார்ட்னர் – 1972 – கதை, வசனம், பாடல்
23. காசி யாத்திரை – 1973
24. தெய்வக் குழந்தைகள் – 1973
25. பூக்காரி – 1973
26. ஸ்கூல் மாஸ்டர் – 1973
27. எங்கம்மா சபதம் – 1974 – திரைக்கதை, வசனம், பாடல்கள்
28. ஆண் பிள்ளை சிங்கம் – 1975
29. உறவு சொல்ல ஒருவன் – 1975 - திரைக்கதை, வசனம், பாடல்கள்
30. மயங்குகிறாள் ஒரு மாது – 1975 - திரைக்கதை, வசனம், பாடல்கள்
31. அன்னக் கிளி – 1976
32. உறவாடும் நெஞ்சம் – 1976 – கதை, வசனம், பாடல்
33. காலங்களில் அவள் வசந்தம் – 1976
34. அவர் எனக்கே சொந்தம் – 1977 – கதை, வசனம், பாடல்கள்
35. ஆடு புலி ஆட்டம் – 1977
36. ஆளுக்கொரு ஆசை – 1977 – திரைக்கதை, வசனம், பாடல்கள்
37. ஒளிமயமான எதிர்காலம் – 1977
38. கவிக் குயில் – 1977 – திரைக்கதை, வசனம், பாடல்கள்
39. காயத்ரி – 1977 – திரைக்கதை, வசனம், பாடல்கள்
40. துணையிருப்பாள் மீனாட்சி – 1977
41. புவனா ஒரு கேள்விக்குறி – 1977 – திரைக்கதை, வசனம், பாடல்கள்
42. இது எப்படி இருக்கு – 1978 – வசனம், பாடல்கள்
43. காற்றினிலே வரும் கீதம் – 1978 - திரைக்கதை, வசனம், பாடல்கள்
44. சக்க போடு போடு ராஜா – 1978
45. பேர் சொல்ல ஒரு பிள்ளை – 1978
46. ப்ரியா – 1978 – வசனம், பாடல்கள்
47. மாரியம்மன் திருவிழா – 1978 – திரைக்கதை, வசனம், பாடல்கள்
48. முள்ளும் மலரும் – 1978
49. வட்டத்துக்குள் சதுரம் – 1978
50. வாழ நினைத்தால் வாழலாம் – 1978
51. ஆறிலிருந்து 60 வரை – 1979 – கதை, வசனம், பாடல்கள், தயாரிப்பு
52. கன்னி வேட்டை – 1979 – கதை, வசனம், பாடல்கள்
53. கல்யாணராமன் – 1979 – கதை, வசனம், பாடல்கள்
54. கவரிமான் – 1979 – கதை, வசனம், பாடல்
55. பூந்தளிர் – 1979
56. பொண்ணு ஊருக்கு புதுசு – 1979
57. வெற்றிக்கு ஒருவன் – 1979 – கதை, வசனம், பாடல்கள்
58. அன்புக்கு நான் அடிமை – 1980
59. அன்னப் பறவை – 1980
60. உல்லாசப் பறவைகள் – 1980 - கதை, வசனம், பாடல்கள், தயாரிப்பு
61. குரு – 1980
62. பூட்டாத பூட்டுக்கள் – 1980
63. நதியைத் தேடி வந்த கடல் – 1980
64. நிழல்கள் – 1980
65. முரட்டுக் காளை – 1980 - கதை, வசனம், பாடல்கள்
66. ருசி கண்ட பூனை – 1980 – திரைக்கதை, வசனம், பாடல்கள், தயாரிப்பு
67. அலைகள் ஓய்வதில்லை – 1981
68. எல்லாம் இன்ப மயம் – 1981 – கதை, வசனம், பாடல்கள்
69. கடல் மீன்கள் – 1981 – திரைக்கதை, வசனம், பாடல்கள்
70. கன்னித் தீவு – 1981
71. கரையெல்லாம் செண்பகப்பூ – 1981
72. கர்ஜனை – 1981 - திரைக்கதை, வசனம், பாடல்கள்
73. கழுகு – 1981 – தயாரிப்பு, கதை,திரைக்கதை, வசனம், பாடல்கள்
74. சங்கர்லால் – 1981
75. மீண்டும் கோகிலா – 1981
76. ஆனந்த ராகம் – 1982
77. எங்கேயோ கேட்ட குரல் – 1982 - கதை, வசனம், பாடல்கள்
78. காற்றுக்கென்ன வேலி – 1982
79. கோழி கூவுது – 1982
80. மகனே மகனே - 1982
81. ராணித் தேனீ – 1982
82. அடுத்த வாரிசு – 1983 – திரைக்கதை, வசனம், பாடல்கள்
83. மண் வாசனை – 1983
84. வீட்டில ராமன் வெளியில கிருஷ்ணன் – 1983 – கதை, பாடல்
85. அம்பிகை நேரில் வந்தாள் – 1984
86. குவா குவா வாத்துக்கள் – 1984 – கதை, பாடல்கள்
87. நெஞ்சத்தைக் கிள்ளாதே – 1984
88. வாழ்க்கை – 1984 - கதை, வசனம், பாடல்கள்
89. வைதேகி காத்திருந்தாள் – 1984
90. ஜான்ஸி – 1985
91. நீதானா அந்தக் குயில் – 1986
92. மனக் கணக்கு – 1986
93. உள்ளம் கவர்ந்த கள்வன் – 1987
94. இரண்டில் ஒன்று – 1988
95. என் ஜீவன் பாடுது – 1988 – கதை, பாடல், தயாரிப்பு
96. குரு சிஷ்யன் – 1988 - திரைக்கதை, வசனம், பாடல்கள்
97. தர்மத்தின் தலைவன் – 1988 – கதை, திரைக்கதை, வசனம், பாடல்கள்
98. மணமகளே வா – 1988 – கதை, திரைக்கதை, வசனம், பாடல்கள், இயக்கம்
99. மாப்பிள்ளை – 1989
100. புதுப் பாட்டு – 1990 – கதை,திரைக்கதை, வசனம், பாடல்கள், இயக்கம்
101. மைக்கேல் மதன காமராஜன் – 1990 – பாடல், தயாரிப்பு
102. வா அருலில் வா – 1991
103. பாண்டியன் – 1992 – திரைக்கதை, வசனம், பாடல்
104. ராசுக்குட்டி – 1992 – பாடல், தயாரிப்பு
105. எங்க முதலாளி – 1993 - கதை,திரைக்கதை, வசனம், பாடல்கள்,தயாரிப்பு
106. வியட்நாம் காலணி – 1994
107. வீரா – 1994 – திரைக்கதை, வசனம், பாடல்
108. ரிஷி – 2001

 

அன்புடன்,
கவிஞர் பொன். செல்லமுத்து
  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்
பஞ்சுஅருணாசலம்



Image

அன்னையும் பிதாவும் படத்தில் மனோரமா



3. பஞ்சுஅருணாசலம் பாடல் எழுதிய படங்கள் – அகர வரிசையில்

1.அடுத்த வாரிசு
2. அன்புக்கு நான் அடிமை
3. அன்னக் கிளி
4. அன்னப் பறவை
5. அன்னையும் பிதாவும்
6. அம்பிகை நேரில் வந்தாள்
7. அம்மா எங்கே
8. அலைகள் ஓய்வதில்லை
9. அல்லி
10. அவர் எனக்கே சொந்தம்
11. ஆசை அலைகள்
12. ஆடு புலி ஆட்டம்
13. ஆறிலிருந்து 60 வரை
14. ஆனந்த ராகம்
15. ஆண் பிள்ளை சிங்கம்
16. ஆளுக்கொரு ஆசை
17. இது எப்படி இருக்கு
18. இரண்டில் ஒன்று
19. உறவாடும் நெஞ்சம்
20. உறவு சொல்ல ஒருவன்
21. உல்லாசப் பறவைகள்
22. உள்ளம் கவர்ந்த கள்வன்
23. எங்கம்மா சபதம்
24. எங்க முதலாளி
25. எங்கேயோ கேட்ட குரல்
26. என் ஜீவன் பாடுது
27. எல்லாம் இன்ப மயம்
28. ஏழைப் பங்காளன்
29. ஒளிமயமான எதிர்காலம்
30. கடல் மீன்கள்
31. கன்னித் தாய்
32. கன்னித் தீவு
33. கன்னி வேட்டை
34. கரையெல்லாம் செண்பகப்பூ
35. கர்ஜனை
36. கலங்கரை விளக்கம்
37. கல்யாணராமன்
38. கவரிமான்
39. கவிக் குயில்
40. கழுகு
41. காசி யாத்திரை
42. காட்டு ரோஜா
43. காதல் படுத்தும் பாடு
44. காற்றினிலே வரும் கீதம்
45. காற்றுக்கென்ன வேலி
46. காலங்களில் அவள் வசந்தம்
47. காயத்ரி
48. குங்குமம்
49. குரு
50. குரு சிஷ்யன்
51. குவா குவா வாத்துக்கள்
52. கோழி கூவுது
53. சக்க போடு போடு ராஜா
54. சங்கர்லால்
55. சாரதா
56. தர்மம் தலை காக்கும்
57. தர்மத்தின் தலைவன்
58. திருநீலகண்டர்
59. துணையிருப்பாள் மீனாட்சி
60. தெய்வக் குழந்தைகள்
61. தெய்வம் பேசுமா
62. பாண்டியன்
63. புவனா ஒரு கேள்விக்குறி
64. பூக்காரி
65. பூட்டாத பூட்டுக்கள்
66. புதுப் பாட்டு
67. பூந்தளிர்
68. பேர் சொல்ல ஒரு பிள்ளை
69. பொண்ணு ஊருக்கு புதுசு
70. ப்ரியா
71. நதியைத் தேடி வந்த கடல்
72. நானும் ஒரு பெண்
73. நானும் மனிதன்தான்
74. நிழல்கள்
75. நீதானா அந்தக் குயில்
76. நெஞ்சத்தைக் கிள்ளாதே
77. மகனே மகனே
78. மகாபாரதம் (டப்பிங்)
79. மனக் கணக்கு
80. மணமகளே வா
81. மண் வாசனை
82. மயங்குகிறாள் ஒரு மாது
83. மாப்பிள்ளை
84. மாரியம்மன் திருவிழா
85. மீண்டும் கோகிலா
86. முள்ளும் மலரும்
87. முரட்டுக் காளை
88. மெட்றாஸ் டூ பாண்டிச்சேரி
89. மைக்கேல் மதன காமராஜன்
90. யாருக்கு சொந்தம்
91. ராசுக்குட்டி
92. ராணித் தேனீ
93. ரிஷி
94. ருசி கண்ட பூனை
95. வட்டத்துக்குள் சதுரம்
96. வல்லவனுக்கு வல்லவன்
97. வா அருலில் வா
98. வாழ நினைத்தால் வாழலாம்
99. வாழ்க்கை
100. வியட்நாம் காலணி
101. வீட்டில ராமன் வெளியில கிருஷ்ணன்
102. வீரா
103. வெற்றிக்கு ஒருவன்
104. வைதேகி காத்திருந்தாள்
105. ஹலோ பார்ட்னர்
106. ஸ்கூல் மாஸ்டர்
107. ஜான்ஸி
108. ஜெகதலப்பிரதாபன் (டப்பிங்)


4. பஞ்சுஅருணாசலம் கதை, வசனம் எழுதிய படங்கள்


1.ஹலோ பார்ட்னர் – 1972 – கதை, வசனம், பாடல்
2.எங்கம்மா சபதம் – 1974 – திரைக்கதை, வசனம், பாடல்கள்
3. உறவு சொல்ல ஒருவன் – 1975 - திரைக்கதை, வசனம், பாடல்கள்
4. மயங்குகிறாள் ஒரு மாது – 1975 - திரைக்கதை, வசனம், பாடல்கள்
5. உறவாடும் நெஞ்சம் – 1976 – கதை, வசனம், பாடல்
6. அவர் எனக்கே சொந்தம் – 1977 – கதை, வசனம், பாடல்கள்
7. ஆளுக்கொரு ஆசை – 1977 – திரைக்கதை, வசனம், பாடல்கள்
8. கவிக் குயில் – 1977 – திரைக்கதை, வசனம், பாடல்கள்
9. காயத்ரி – 1977 – திரைக்கதை, வசனம், பாடல்கள்
10. புவனா ஒரு கேள்விக்குறி – 1977 – திரைக்கதை, வசனம், பாடல்கள்
11. இது எப்படி இருக்கு – 1978 – வசனம், பாடல்கள்
12. காற்றினிலே வரும் கீதம் – 1978 - திரைக்கதை, வசனம், பாடல்கள்
13. ப்ரியா – 1978 – வசனம், பாடல்கள்
14. மாரியம்மன் திருவிழா – 1978 – திரைக்கதை, வசனம், பாடல்கள்
15. ஆறிலிருந்து 60 வரை – 1979 – கதை, வசனம், பாடல்கள், தயாரிப்பு
16. கன்னி வேட்டை – 1979 – கதை, வசனம், பாடல்கள்
17. கல்யாணராமன் – 1979 – கதை, வசனம், பாடல்கள்
18. கவரிமான் – 1979 – கதை, வசனம், பாடல்
19. வெற்றிக்கு ஒருவன் – 1979 – கதை, வசனம், பாடல்கள்
20. உல்லாசப் பறவைகள் – 1980 - கதை, வசனம், பாடல்கள், தயாரிப்பு
21. முரட்டுக் காளை – 1980 - கதை, வசனம், பாடல்கள்
22. ருசி கண்ட பூனை – 1980 – திரைக்கதை, வசனம், பாடல்கள், தயாரிப்பு
23. எல்லாம் இன்ப மயம் – 1981 – கதை, வசனம், பாடல்கள்
24. கடல் மீன்கள் – 1981 – திரைக்கதை, வசனம், பாடல்கள்
25. கர்ஜனை – 1981 - திரைக்கதை, வசனம், பாடல்கள்
26. கழுகு – 1981 – தயாரிப்பு, கதை,திரைக்கதை, வசனம், பாடல்கள்
27. எங்கேயோ கேட்ட குரல் – 1982 - கதை, வசனம், பாடல்கள்
28. அடுத்த வாரிசு – 1983 – திரைக்கதை, வசனம், பாடல்கள்
29. வீட்டில ராமன் வெளியில கிருஷ்ணன் – 1983 – கதை, பாடல்
30. குவா குவா வாத்துக்கள் – 1984 – கதை, பாடல்கள்
31. வாழ்க்கை – 1984 - கதை, வசனம், பாடல்கள்
32. என் ஜீவன் பாடுது – 1988 – கதை, பாடல், தயாரிப்பு
33. குரு சிஷ்யன் – 1988 - திரைக்கதை, வசனம், பாடல்கள்
34. தர்மத்தின் தலைவன் – 1988 – கதை, திரைக்கதை, வசனம், பாடல்கள்
35. மணமகளே வா – 1988 – கதை, திரைக்கதை, வசனம், பாடல்கள், இயக்கம்
36. புதுப் பாட்டு – 1990 – கதை,திரைக்கதை, வசனம், பாடல்கள், இயக்கம்
37. மைக்கேல் மதன காமராஜன் – 1990 – பாடல், தயாரிப்பு
38. பாண்டியன் – 1992 – திரைக்கதை, வசனம், பாடல்
39. ராசுக்குட்டி – 1992 – பாடல், தயாரிப்பு
40. எங்க முதலாளி – 1993 - கதை,திரைக்கதை, வசனம், பாடல்கள்,தயாரிப்பு
41. வீரா – 1994 – திரைக்கதை, வசனம், பாடல்



5. பஞ்சுஅருணாசலம் பாடல் எழுதாத படங்கள்


1. உங்கள் விருப்பம் – 1974 – கதை, வசனம்
2. கல்யாணமாம் கல்யாணம் – 1974 - கதை, வசனம்
3. தொட்டதெல்லாம் பொன்னாகும் – 1974 - கதை, வசனம்
4. அவன்தான் மனிதன் – 1975 – வசனம்
5.துணிவே துணை – 1976 – திரைக்கதை, வசனம்
6. நிறம் மாறாத பூக்கள் – 1979
7. சலங்கை ஒலி – 1983 – வசனம்
8. முத்து எங்கள் சொத்து – 1983 – வசனம்
9. தம்பிக்கு எந்த ஊரு – 1984 – வசனம், தயாரிப்பு
10. புதிய தீர்ப்பு – 1985 – திரைக்கதை, வசனம்
11. எங்கிட்ட மோதாதே – 1990 – கதை
12. மாயா பஜார் – 1995 – 1995 – தயாரிப்பு



6. பஞ்சுஅருணாசலம் பாடல் எழுதிய படங்கள் – நடிகர் வரிசையில்


1.எம்.ஜி.ஆர்.

கன்னித் தாய்
கலங்கரை விளக்கம்
தர்மம் தலை காக்கும்

2. சிவாஜி கணேசன்

குங்குமம்
கவரிமான்
வெற்றிக்கு ஒருவன்
வாழ்க்கை
அவன்தான் மனிதன் (வசனம் மட்டும்)

3. எஸ்.எஸ்.ராஜேந்திரன்

அல்லி
சாரதா
நானும் ஒரு பெண்
ஆசை அலைகள்
காட்டு ரோஜா

4. ஜெமினி கணேசன்

ஏழைப் பங்காளன்
ஸ்கூல் மாஸ்டர்
வல்லவனுக்கு வல்லவன்

5. ஜெய்சங்கர்

காதல் படுத்தும் பாடு
இது எப்படி இருக்கு
கன்னித் தீவு
காயத்ரி
சக்க போடு போடு ராஜா
தெய்வக் குழந்தைகள்
வாழ நினைத்தால் வாழலாம்
உங்கள் விருப்பம்

6. ரவிச்சந்திரன்

மெட்றாஸ் டூ பாண்டிச்சேரி

7. முத்துராமன்

அம்மா எங்கே
உறவு சொல்ல ஒருவன்
காசி யாத்திரை
காலங்களில் அவள் வசந்தம்
பேர் சொல்ல ஒரு பிள்ளை
மயங்குகிறாள் ஒரு மாது
ஆளுக்கொரு ஆசை
காற்றினிலே வரும் கீதம்

8. ஏ.வி.எம்.ராஜன்

அன்னையும் பிதாவும்
தெய்வம் பேசுமா

9. சிவக்குமார்

அன்னக்கிளி
ஆண்பிள்ளை சிங்கம்
துணையிருப்பாள் மீனாட்சி
புவனா ஒரு கேள்விக்குறி
ஆனந்த ராகம்
உறவாடும் நெஞ்சம்
குவா குவா வாத்துக்கள்
எங்கம்மா சபதம்
கவிக் குயில்
பூந்தளிர்
மாரியம்மன் திருவிழா
வீட்டில ராமன் வெளியில கிருஷ்ணன்

10. ரஜினிகாந்த

அடுத்த வாரிசு
குரு சிஷ்யன்
மாப்பிள்ளை
முரட்டுக் காளை
முள்ளும் மலரும்
எங்கேயோ கேட்ட குரல்
கர்ஜனை
கழுகு
ஆறிலிருந்து 60 வரை
பாண்டியன்
வீரா
ப்ரியா
தர்மத்தின் தலைவன்

11. கமலகாசன்

கன்னி வேட்டை
கல்யாண ராமன்
ஆடுபுலி ஆட்டம்
எல்லாம் இன்ப மயம்
சங்கர்லால்
உல்லாசப் பறவைகள்
மைக்கேல் மதன காமராஜன்
கடல் மீன்கள்
குரு
மீண்டும் கோகிலா

 

அன்புடன்,
கவிஞர் பொன். செல்லமுத்து
  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்
பஞ்சுஅருணாசலம்


Image

கவிக்குயில் படத்தில் ராதையாக ஸ்ரீதேவி, கண்ணனாக சிவக்குமார்


7. பஞ்சுஅருணாசலம் எழுதிய பாடல்கள்


(1). சாரதா – 1962 – மணமகளே மருமகளே வாவா – எல்.ஆர்.ஈஸ்வரி, எல்.ஆர்.அஞ்சலி, சூலமங்கலம் ராஜலட்சுமி

(2). ஆசை அலைகள் – 1963 – 1. சொல்லப் போனா கோபிக்கிறான் – எஸ்.வி.பொன்னுசாமி / 2. நடந்துவந்த பாதையிலே – டி.எம்.எஸ்.

(3). ஏழைப் பங்காளன் – 1963 – 1. தாயாக மாறவா தாலாட்டுப் பாடவா – டி.எம்.எஸ். / 2. மனதில் என்ன மயக்கம் – டி.எம்.எஸ்., சுசீலா

(4). காட்டு ரோஜா – 1963 – என்னைப் பாரு பாரு – கே.ஜமுனாராணி

(5). குங்குமம் – 1963 – சின்னஞ் சிறிய வண்ணப் பறவை – டி.எம்.எஸ்., எஸ்.ஜானகி

(6). தர்மம் தலை காக்கும் – 1963 – மூடுபனி குளிரெடுத்து – டி.எம்.எஸ்., சுசீலா

(7). நானும் ஒரு பெண் – 1963 – பூப்போல பூப்போல பிறக்கும் – டி.எம்.எஸ்., சுசீலா

(8). யாருக்கு சொந்தம் – 1963 – 1. பூவுக்குள் தேனை வைத்தவன் – சுசீலா / 2. எங்கே போறே நீ – கே.ஜமுனாராணி

(9). ஜெகதலப் பிரதாபன் (மொழிமாற்று படம்) – 1963 – 1. ஜெயதிரு ஜெகதல ராஜபிரதாபா – பி.சுசீலா, பி.லீலா, குழுவினர் / 2. ஜலம்தனில் ஆடுகின்றோம் - பி.சுசீலா, பி.லீலா, குழுவினர் / 3. ஒ தேவ ரமணியாரே – டி.எம்.எஸ். / 4. இருதயம் கல்லா – பி.லீலா / 5. கூந்தல்மேல் பூவேதம்மே – ஏ.எல்.ராகவன், ஏ.ஜி.ரத்னமாலா / 6. ஆனதெனமோ ஆனதே – டி.எம்.எஸ்., பி.சுசீலா, குழுவினர் / 7. மனோஹரமுடன் மதுர - டி.எம்.எஸ்., பி.சுசீலா, குழுவினர் / 8. ஆதிலட்சுமி வந்தாய் - பி.சுசீலா, பி.லீலா, குழுவினர் / 9. காணாய் கண்காணாய் – டி.எம்.எஸ்.

(10). நானும் மனிதன்தான் – 1964 – காற்றுவரும் காலம் ஒன்று – பி.பி.ஸ்ரீனிவாஸ், எஸ்.ஜானகி

(11). அம்மா எங்கே – 1964 – அம்மா எங்கே போனே – எம்.எஸ்.ராஜேஸ்வரி

(12). அல்லி – 1964 – 1. என்னாங்க என்னைத் தெரியுமா – சுசீலா / 2. நலுங்கு பாடவா – எஸ்.ஜானகி

(13). கன்னித் தாய் – 1965 – 1. வாயார முத்தம் தந்து – சுசீலா / 2. கேளம்மா சின்னப் பொண்ணு கேளு –டி.எம்.எஸ். / 3. என்றும் பதினாறு வயதும் பதினாறு - டி.எம்.எஸ்., சுசீலா / 4. அம்மாடி தூக்கமா - டி.எம்.எஸ்., சுசீலா / 5. மானாப் பொறந்தா காட்டுக்கு ராணி - டி.எம்.எஸ்., சுசீலா / 6. வாழவிடு இல்லே வழியவிடு – தாராபுரம் சுந்தரராஜன், மனோரமா

(14). கலங்கரை விளக்கம் – 1965 – 1.என்னை மறந்ததேன் – சுசீலா / 2. பொன்னெழில் பூத்தது புதுவானில் – டி.எம்.எஸ்., பி.சுசீலா

(15). மகா பாரதம் (டப்பிங்) – 1965 – 1.மௌனத்திலே இணைந்ததுவே – எஸ்.ஜானகி / 2. கண்ணோடு கண்ணை வைத்து – எஸ்.ஜானகி / 3. வாழும் உயிகள் - சுசீலா

(16). வல்லவனுக்கு வல்லவன் – 1965 – கண்டாலும் கண்டேன் உன்போலே – சீர்காழி கோவிந்தராஜன், எல்.ஆர்.ஈஸ்வரி

(17). காதல் படுத்தும் பாடு – 1966 – கண்க ளிரண்டில் யாரடி வந்தான் – சுசீலா, எஸ்.ஜானகி

(18). மெட்றாஸ் டூ பாண்டிச்சேரி – 1966 – பயணம் எங்கே பயணம் எங்கே – டி.எம்.எஸ்.

(19). அன்னையும் பிதாவும் – 1969 – 1. முத்தான ஊர்கோலமோ - . . . . / 2. மோதிரம் போட்டது போலொரு - . . . . / 3. பொன்னாலே வாழும் புதிய உலகம் - . . . ./ 4. மலரும் மங்கையும் ஒரு ஜாதி - . . . .

(20). தெய்வம் பேசுமா – 1971 – 1. நேற்று பார்த்ததெல்லாம் – எல்.ஆர்.ஈஸ்வரி / 2. நானே நீயாக தோன்றுவதேன் – எல்.ஆர்.ஈஸ்வரி / 3. பனிநிலவே சிறுமலரே - ஏசுதாஸ்

(21). திருநீலகண்டர் – 1972 – 1. நம்பிக்கை கொண்டு கை தொழுதால் – சுப்புலக்ஷ்மி, குழுவினர் / 2. பந்தபாசக் காட்டுக்குள்ளே – டி.ஆர்.மகாலிங்கம், எஸ்.ஜானகி / 3. (விளையாட்டுக் காரனுக்கு) தத்துவத்தில் நானோர் சந்யாசி – கே.எம்.மணிராஜன்

(22). ஹலோ பார்ட்னர் – 1972 – ஹலோ பார்ட்னர் நான் – டி.எம்.எஸ்.

(23). காசி யாத்திரை – 1973 – 1. திமிகிட திமிகிட – எல்.ஆர். ஈஸ்வரி / 2. அழகின் அவதாரமே - எல்.ஆர். ஈஸ்வரி / 3. அம்மாடியோ ஐயா கதையை – கோவை சௌந்தரராஜன், எஸ்.பி.பாலசுப்பிரமணியம், சசிரேகா

(24). தெய்வக் குழந்தைகள் – 1973 – 1. நான் எண்ணத்தில் நீந்தும் பெண்ணல்லோ – சுசீலா, ஈஸ்வரி / 2. ஏன் இந்தக் கோபம் – டி.எம்.எஸ்.

(25). பூக்காரி – 1973 – காதலின் பொன்வீதியில் – டி.எம்.எஸ்., எஸ்.ஜானகி

(26). ஸ்கூல் மாஸ்டர் – 1973 – வேளைவந்து கூப்பிட்டதும் ஓடிவந்தேன் – கே.வீரமணி, எல்.ஆர்.ஈஸ்வரி

(27). எங்கம்மா சபதம் – 1974 – 1. என்னய்யா முழிக்கிறே – எல்.ஆர்.ஈஸ்வரி / 2. வா இளமை அழைக்கின்றது - . . . . / 3. உனக்கும் எனக்கும் - . . .

(28). ஆண்பிள்ளை சிங்கம் – 1975 – 1. கண்ணடி கையடி பட்டால்தானே – சுசீலா / 2. சேர்த்துக்கோ காசு சேர்த்துக்கோ – வாணிஜெயராம் / 3. மயக்கம் குழப்பம் நேரும்போது - சுசீலா

(29). உறவு சொல்ல ஒருவன் – 1975 – 1. பனிமலர் நீரில் ஆடும் அழகை – சுசீலா / 2. கேளுபாப்பா ஆசையின் கதையை – எஸ்.பி.பாலசுப்பிரமணியம் / 3. நடந்த கதையை சொல்ல – ஏசுதாஸ் / 4. மோகனப் புன்னகை ஊர்வலமே – ஏசுதாஸ்

(30). மயங்குகிறாள் ஒரு மாது – 1975 – ஒருபுறம் வேடன் மறுபுறம் நாகம் – வாணிஜெயராம்

(31). அன்னக்கிளி – 1976 – 1. அன்னக்கிளி ஒன்னைத் தேடுதே – எஸ்.ஜானகி / 2. அன்னக்கிளி ஒன்னைத் தேடுதே –டி.எம்.எஸ். / 3. மச்சானப் பாத்தீங்களா – எஸ்.ஜானகி / 3. (கல்யாணம் பேசி) மச்சானப் (சோகம்) – எஸ்.ஜானகி / 5. சுத்த சம்பா பச்ச நெல்லு – எஸ்.ஜானகி, குழுவினர் / 6. சொந்தம் இல்லை பந்தம் இல்லை – பி.சுசீலா

(32). உறவாடும் நெஞ்சம் – 1976 – 1. ஒருநாள் உன்னோடு ஒருநாள் – எஸ்.பி.பாலசுப்பிரமணியம், எஸ்.ஜானகி / 2. நெனச்சதெல்லாம் நடக்கப் போற – எஸ்.பி.பாலசுப்பிரமணியம், எஸ்.ஜானகி / 3. டியர் அங்கிள் வி ஆர் ஹேப்பி – மலேசியா வாசுதேவன், குமாரி இந்திரா, பேபி அனிதா

(33). காலங்களில் அவள் வசந்தம் – 1976 – முதல் முதல் வரும் சுகம் – எஸ்.பி.பாலசுப்பிரமணியம், வாணிஜெயராம்

(34). அவர் எனக்கே சொந்தம் – 1977 – 1. (தொலிருல) சுராங்கனி சுராங்கனி – டி.எம்.எஸ்., மலேசியா வாசுதேவன், ரேணுகா / 2. தேனில் ஆடும் ரோஜா – சுசீலா / 3. தேவன் திருச்சபை மலர் இது – ஏசுதாஸ் / 4. தேவன் திருச்சபை மலர்களே – பூரணி, இந்திரா

(35). ஆடுபுலி ஆட்டம் – 1977 –

(36). ஆளுக்கொரு ஆசை – 1977 – 1. வாழ்வென்னும் சொர்க்கத்தில் – எஸ்.ஜானகி / 2. கணக்குப் பார்த்து காதல் வந்தது – டி.எம்.எஸ். / 3. மஞ்சள் அரைக்கும் போது மதிலேறி பார்த்த மச்சான் – வாணிஜெயராம் / 4. இதய மழையில் நனைந்த – ஏசுதாஸ், சுசீலா

(37). ஒளி மயமான எதிர்காலம் – 1977 – குடும்பத்தின் தலைவி குலவிளக்கு – கிருஷ்ணமூர்த்தி, வாணிஜெயராம்

(38). கவிக் குயில் – 1977 – 1. ஆயிரம் கோடி காலங்களாக – பாலமுரளி கிருஷ்ணா / 2. குயிலே கவிக் குயிலே – எஸ்.ஜானகி / 3. மானோடும் பாதையிலே – சுசீலா / 4. வானத்தில் மீன் இருக்க – ஜி.கே.வெங்கடேஷ், எஸ்.ஜானகி / 5. சின்ன கண்ணன் அழைக்கிறான் - பாலமுரளி கிருஷ்ணா / 6. சின்ன கண்ணன் அழைக்கிறான் -

(39). காயத்ரி – 1977 – 1. காலைப் பனியில் ஆடும் மலர்கள் – சுஜாதா / 2. ஆட்டம் பொன்னாட்டம் வாழ்வில் – சுசீலா / 3. வாழ்வே மாயமா? பெரும் கதையா? – சசிரேகா / 4. உன்னைத்தான் அழைக்கிறேன் – ஏ.எல்.ராகவன். எஸ்.ஜானகி

(40). துணையிருப்பாள் மீனாட்சி – 1977 – 1. உண்மைக்கே பிறந்திருந்தேன் – கோவை சௌந்தரராஜன், மலேசியா வாசுதேவன், ஸ்வர்ணா / 2. உறவோ ஆயிரம் சுகமோ – சுசீலா / 3. சேற்றில் ஒரு செங்கழுனி – டி.எம்.எஸ்., எஸ்.ஜானகி / 4. வார்த்தை இல்லாமல் நான் கவி பாடவா – சுசீலா / 5. அம்மம்மா பசிக்குதம்மா – ஸ்வர்ணா, பூரணி

(41). புவனா ஒரு கேள்விக்குறி – 1977 – 1. விழியிலே மலர்ந்தது - ஜெயச்சந்திரன் / 2. பூந்தென்றலே நல்ல நேரம் – ஜெயச்சந்திரன், வாணிஜெயராம் / 3. ராஜா என்பார் மந்திரி என்பார் – எஸ்.பி.பாலசுப்பிரமணியம், எஸ்.ஜானகி / 4. தெய்வத்தில் உன்னைக் கண்டேன் – எஸ்.ஜானகி

(42). இது எப்படி இருக்கு – 1978 – 1. எங்கும் நிறைந்த இயற்கையில் – ஏசுதாஸ், எஸ்.ஜானகி / 2. தினம் தினம் ஒரு நாடகம் – சுசீலா / 3. ஓ மை லவ் ஓர் இரவிலே – எஸ்.ஜானகி / 4. கைரேகை பார்த்து ஜோசியம் - முரளி

(43). காற்றினிலே வரும் கீதம் – 1978 – 1. கண்டேன் எங்கும் பூமகள் நாட்டியம் – எஸ்.ஜானகி / 2. கண்டேன் எங்கும் பூமகள் நாட்டியம் – வாணிஜெயராம் / 3. ஒரு வானவில் போலே – ஜெயச்சந்திரன், எஸ்,ஜானகி – 4. சித்திரச் செவ்வானம் - ஜெயச்சந்திரன்

(44). சக்க போடு போடு ராஜா – 1978 –

(45). பேர் சொல்ல ஒரு பிள்ளை – 1978 –

(46). ப்ரியா – 1978 – 1. டார்லிங் டார்லிங் டார்லிங் ஐ லவ் யூ – பி.சுசீலா / 2. ஹேய் பாடல் ஒன்று – ஏசுதாஸ், ஜானகி / 3. அக்கரைச் சீமை அழகினிலே – ஏசுதாஸ் / 4. என் உயிர் நீதானே - ஏசுதாஸ், ஜானகி / 5. ஸ்ரீராமனின் ஸ்ரீதேவியே - ஏசுதாஸ்

(47). மாரியம்மன் திருவிழா – 1978 – 1. பொழுது எப்ப புலரும் – மலேசியா வாசுதேவன், எஸ்.ஜானகி / 2. தங்க குடத்துக்கு பொட்டும் இட்டேன் - சுசீலா

(48). முள்ளும் மலரும் – 1978 – 1. மானினமே நல்ல - . . . . / 2. அடி பெண்ணே பொன்னூஞ்சல் – எஸ்.ஜானகி

(49). வட்டத்துக்குள் சதுரம் – 1978 – 1. இதோ இதோ என் நெஞ்சிலே - . . . . ./ 2. காதலென்னும் காவியம் - . . . . / 3. ஆடச் சொன்னாரே எல்லோரும் - . . . . / 4. பேரழகு மேனி கொண்டேன் - . . . .

(50). வாழ நினைத்தால் வாழலாம் – 1978 – கானாங் குருவிக்கு கல்யாணமாம் - மனோரமா

 
அன்புடன்,
கவிஞர் பொன். செல்லமுத்து

*
  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

பஞ்சுஅருணாசலம்




காயத்ரி, படத்தில் ஸ்ரீதேவி, ரஜினி



7. பஞ்சுஅருணாசலம் எழுதிய பாடல்கள் (தொடர்ச்சி)


(51). கன்னி வேட்டை – 1979 – 1. ஏழாம் உதயத்தில் ஓர் - . . . . / 2. சந்திரன் வீசிய தண்ணொளியில் - . . . . / 3. என் காதல் சொர்க்கத்தில் - . . . . / மலராலே மணிமாலை - . . . .

(52). ஆறிலிருந்து 60 வரை – 1979 – 1. பரிதாபம் அந்தோ – பி.எஸ்.சசிரேகா, எஸ்.பி.ஷைலஜா / 2. கண்மணியே காதல் என்பது - எஸ்.பி.பாலசுப்பிரமணியம், வாணிஜெயராம் / 3. வாழ்க்கையே வேஷம் - ஜெயச்சந்திரன்

(53). கல்யாண ராமன் – 1979 – 1. மலர்களில் ஆடும் இளமை – எஸ்.பி.ஷைலஜா / 2. ஆஹா வந்திருச்சி - மலேசியா வாசுதேவன் / 3. காதல் தீபம் ஒன்று - மலேசியா வாசுதேவன் / 4. நினைத்தால் இனிக்கும் – எஸ்.ஜானகி

(54). கவரிமான் – 1979 –1. பூப்போலே உன் புன்னகையில் – எஸ்.பி.பாலசுப்பிரமணியம் / 2. பூப்போலே உன் புன்னகையில் – எஸ்.பி.பாலசுப்பிரமணியம் / 3. ஆடுது உள்ளம் ஆசையில் – எஸ்.ஜானகி, குழுவினர் / 4. உள்ளங்கள் இன்பத்தில் - . . . . / 5. கோலமயில் ஆடுவதை - . . . . . (4,5 பாடல்கள் இசைத் தட்டில் மட்டும், படத்தில் இல்லை)

(55). பூந்தளிர் – 1979 – 1. வா பொன் மயிலே – எஸ்.பி.பாலசுப்பிரமணியம் / 2. ராஜா சின்ன ராஜா பூந்தளிரே – சுசீலா / 3. மனதில் என்ன நினைவுகளோ – எஸ்.பி.பாலசுப்பிரமணியம், எஸ்.பி.ஷைலஜா

(56). பொண்ணு ஊருக்கு புதுசு – 1979 – 1. சாமக் கோழி கூவுதய்யா – இளையராஜா, எஸ்.பி.ஷைலஜா / 2. ஒரு மஞ்சக் குருவி - இளையராஜா

(57). வெற்றிக்கு ஒருவன் – 1979 – 1. முத்தமிழ்ச் சரமே இளங்கொடி மலரே - . . . . . / 2. தோரணம் ஆடிடும் மேடையில் - . . . / 3. நான் மாமனோ ஜோதியோ - . . . . . / 4. ஆடல் பாடலில் உலகே மயங்காதோ - . . . .

(58). அன்புக்கு நான் அடிமை – 1980 – ஒன்றோடு ஒன்றானோம் -

(59). அன்னப் பறவை – 1980 – 1. பச்சைக் கிளிபோல – பி.பத்மா / 2. பொன் என்பதோ பூ என்பதோ -எஸ்.பி.பால சுப்பிரமணியம் / 2. சூடான எண்ணம் நெஞ்சில் – ஜெயச்சந்திரன், எஸ்.ஜானகி

(60). உல்லாசப் பறவைகள் – 1980 – 1. அழகு ஆயிரம் – எஸ்.ஜானகி / 2. தெய்வீக ராகம் தெவிட்டாத பாடல் – ஜென்ஸி / 3. அழகிய மலர்களின் புதுவித ஊர்வலமே – எஸ்.ஜானகி / 4. நான் உந்தன் தாயாக வேண்டும் – எஸ்.ஜானகி / 5. எங்கெங்கும் கண்டேனம்மா - எஸ்.பி.பாலசுப்பிரமணியம், மலேசியா வாசுதேவன் / 6. ஜெர்மனியின் செந்தேன் மலரே - எஸ்.பி.பாலசுப்பிரமணியம், எஸ்.ஜானகி

(61). குரு – 1980 – நான் வணங்குகிறேன் சபையிலே – எஸ்.ஜானகி

(62). பூட்டாத பூட்டுக்கள் – 1980 – 1. வண்ணப் பூஞ்சோலையில் – எஸ்.ஜானகி / 2. ஆனந்தம் ஆனந்தம் – எஸ்.ஜானகி / 3. (ஏம்மா இந்த ராத்திரி) நான் ஆண்டிப்பட்டி மாரியப்பன் பொண்டாட்டி - . . . / 4. நெஞ்சுக்குள்ளே ஆசை – எஸ்.ஜானகி / 5. சூறைக் காற்றில் ஆடுதே - இளையராஜா

(63). நதியைத் தேடிவந்த கடல் – 1980 – 1. எங்கேயோ ஏதோ – எஸ்.பி.பாலசுப்பிரமணியம், பி.சுசீலா / 2. வராத காலங்கள் – பி.சுசீலா, எஸ்.பி.ஷைலஜா

(64). நிழல்கள் – 1980 – தூரத்தில் நான்கண்ட – எஸ்.ஜானகி

(65). முரட்டுக் காளை – 1980 – 1. பொதுவாக எம்மனசு தங்கம் – மலேசியா வாசுதேவன், குழுவினர் / 2. புது வண்ணங்கள் கொஞ்சிடும் – எஸ்.ஜானகி, குழுவினர் / 3. எந்தப் பூவிலும் வாசம் உண்டு – எஸ்.ஜானகி / 4. மாமன் மச்சான் – எஸ்.பி.ஷைலஜா, குழுவினர் / 5. கோடான கோடி கண்ட - . . . .

(66). ருசி கண்ட பூனை – 1980 – என் நெஞ்சம் உன்னோடு – எஸ்.ஜானகி

(67). அலைகள் ஓய்வதில்லை – 1981 –

(68). எல்லாம் இன்ப மயம் – 1981 – 1. சொல்ல சொல்ல எந்தன் - எஸ்.பி.பாலசுப்பிரமணியம் / 2. டேய் நிறுத்துங்கடா - மலேசியா வாசுதேவன் / 3. லேடீஸ் அண்ட் ஜெண்டில்மென் - மலேசியா வாசுதேவன் / 4. ஒண்ணும் ஒண்ணும் ரெண்டுதான் – இளையராஜா, எஸ்.ஜானகி, குழுவினர்

(69). கடல் மீன்கள் – 1981 –

(70). கன்னித் தீவு – 1981 – 1. பொய்மீது பொய்சொல்லி – மலேசியா வாசுதேவன், சாய்பாபா, எஸ்.பி.ஷைலஜா / 2. பொன்னான நேரம் ராஜா வாவா – எஸ்,ஜானகி / 3. ஆத்தா எங்கிருந்து வந்திருக்கா – இளையராஜா, எஸ்.ஜானகி / 4. இது ஒரு புதுவித ரகசிய – எஸ்.ஜானகி, குழுவினர் / 5. கண்டேனே கண்டேனே – மலேசியா வாசுதேவன், எஸ்.பி.ஷைலஜா

(71). கரையெல்லாம் செண்பகப்பூ – 1981 – 1. காடெல்லாம் பிச்சிப்பூ – இளையராஜா / 2. ஏரியிலே எலந்த மரம்- .
(72). கர்ஜனை – 1981 – 1. வருவாய் அன்பே தருவாய் ஒன்று – டி.கே.எஸ்.கலைவாணன், எஸ்.ஜானகி / 2. என்ன சுகமான உலகம் - எஸ்.பி.பாலசுப்பிரமணியம், உமா ரமணன்

(73). கழுகு – 1981 – 1. காதலென்னும் கோவில் – சாய்முரளி பிரசாத் / 2. பொன்னோவியம் கண்டேனம்மா – இளையராஜா, எஸ்.ஜானகி / 3. ஒரு பூவனத்திலே - எஸ்.பி.பாலசுப்பிரமணியம் / 4. தேடும் தெய்வம் நேரில் வந்தது - மலேசியா வாசுதேவன், எஸ்.ஜானகி

(74). சங்கர்லால் – 1981 – உண்மை என்றும் வெல்லும் - வாணிஜெயராம்

(75). மீண்டும் கோகிலா – 1981 – 1. பொன்னான மேனி உல்லாசம் – ஏசுதாஸ், ஜானகி / 2. ஹேய் ஓராயிரம் மலர்களே மலர்ந்தது - எஸ்.பி.பாலசுப்பிரமணியம்

(76). ஆனந்த ராகம் – 1982 – 1. ஒரு ராகம் பாடலோடு – ஏசுதாஸ், எஸ்.ஜானகி / 2. கடலோரம் கடலோரம் – இளையராஜா / 3. ஒரு ராகம் பாடலோடு - ஏசுதாஸ், எஸ்.ஜானகி /4. கனவுகளே கனவுகளே கலைந்து செல்லுங்கள் – ஏசுதாஸ்

(77). எங்கேயோ கேட்ட குரல் – 1982 – 1. பட்டு வண்ணச் சேலைக்காரி - மலேசியா வாசுதேவன் / 2. ஆத்தோரம் காத்தாட – ஜென்சி / 3. நீ பாடும் பாடல் எது – எஸ்.ஜானகி

(78). காற்றுக்கென்ன வேலி – 1982 – 1. ரேகா ரேகா காதலென்னும் வானவில்லை – ஜாலி அப்ரஹாம், பி.சுசீலா / 2. கல்யாணம் கல்யாணம் - சுசீலா

(79). கோழி கூவுது – 1982 – வீரைய்யா வீரைய்யா – எஸ்.பி.ஷைலஜா

(80). மகனே மகனே – 1982 – 1. ஆரிரோ ஆரோ பேர்சொல்ல வந்த பிள்ளை - . . . . / 2. மது மலர்களே தினம் மலர்ந்தது – மலேசியா வாசுதேவன், எஸ்.ஜானகி

(81). ராணித் தேனீ – 1982 – ராமனுக்கேத்த சீதை – தீபன் சக்கரவர்த்தி, எஸ்.ஜானகி

(82). அடுத்த வாரிசு – 1983 – 1. ஆசை நூறு வகை – மலேசியா வாசுதேவன் / 2. பேசக் கூடாது வெறும் - எஸ்.பி.பாலசுப்பிரமணியம், பி.சுசீலா / 3. காவிரியே கவிக் குயிலே - எஸ்.பி.பாலசுப்பிரமணியம், பி.சுசீலா / 4. வாழ்க ராணி வாழ்க ராஜாங்கம் – எஸ்.ஜானகி, எஸ்.பி.ஷைலஜா

(83). மண் வாசனை – 1983 – ஆனந்தத் தேன்சிந்தும் பூஞ்சோலையில் - மலேசியா வாசுதேவன், ஜானகி

(84). வீட்டில ராமன் வெளியில கிருஷ்ணன் – 1983 –

(85). அம்பிகை நேரில் வந்தாள் – 1984 – அன்னை தாலாட்டுப் பாட - சுசீலா

(86). குவா குவா வாத்துக்கள் – 1984 – 1. நெனச்சேன் நெனச்சேன் - . . . . / 2. பாயும் புலி ஜீயாகு ஜீயாகு - . . . . / 3. பொல்லாத ஆசை வந்து – எஸ்.பி.பாலசுப்பிரமணியம், எஸ்.ஜானகி - . . . .

(87). நெஞ்சத்தைக் கிள்ளாதே – 1984 – பருவமே புதிய பாடல் பாடு – எஸ்.ஜானகி

(88). வாழ்க்கை – 1984 – யாவும் நீயப்பா உன்சரணம் – மலேசியா வாசுதேவன், குழுவினர்

(89). வைதேகி காத்திருந்தாள் – 1984 – மேகங் கருக்கையிலே புள்ள – இளையராஜா, உமாரமணன்

(90). ஜான்ஸி – 1985 – 1. மேகம் கருத்து மழைபெய்யும் – மலேசியா வாசுதேவன், வாணிஜெயராம் / 2. புருஷனைக் கைக்குள்ளே – வாணிஜெயராம், அனுராதா / 3. மை டியர் எங் லவர் – வாணிஜெயராம் / 4. வண்ண மேகம் ஓடுது – ராஜ்குமார் பாரதி, வாணிஜெயராம்

(91). நீதானா அந்தக் குயில் – 1986 –

(92). மனக் கணக்கு – 1986 –

(93). உள்ளம் கவர்ந்த கள்வன் – 1987 – 1. பூந்தென்றல் போகும் பாதை - . . . . / 2. எம்மனச பறிகொடுத்து – ஜெயச்சந்திரன் / 3. இதுக்குத்தானா உன்மேலே ஆசைப்பட்டேன் - மலேசியா வாசுதேவன் / 4. நாடு இருக்கும் நிலமையிலே – ஜெயச்சந்திரன் / 5. தேனே செந்தேனே - எஸ்.பி.பாலசுப்பிரமணியம்

(94). இரண்டில் ஒன்று – 1988 – 1. சங்கீத பூமழையே – மனோ, சித்ரா / 2. காதலுக்கு தூது சொல்லி – சித்ரா / 3. தங்க குடம் எடுத்து - மலேசியா வாசுதேவன் / 3. இங்க எல்லாரும் நல்லவங்கதான் - மலேசியா வாசுதேவன்

(95). என் ஜீவன் பாடுது – 1988 – 1. ஒரேமுறை உன்தரிசனம் – எஸ்.ஜானகி / 2. கட்டி வச்சுக்கோ எந்தன் - மலேசியா வாசுதேவன், எஸ்.ஜானகி / 3. ஆண்பிள்ளை என்றால் மீசை உண்டு – மனோ, எஸ்.ஜானகி, குழுவினர் / 4. மௌனமேன் மௌனமே – மனோ, குழுவினர்

(96). குரு சிஷ்யன் – 1988 – ஜிங்கிடி ஜிங்கிடி ஒனக்கு – மனோ, சித்ரா

(97). தர்மத்தின் தலைவன் – 1988 – முத்தமிழ்க் கவியே வருக – ஏசுதாஸ், சித்ரா

(98). மணமகளே வா – 1988 – 1. தண்ணிய தெறந்து விடுங்க – சித்ரா / 2. பொன்மானைப் போலாடும் - மலேசியா வாசுதேவன், சித்ரா, குழுவினர் / 3. ஆவாரம் பூவைத் தொட்டு ஆலோலம் பாடும் தென்றலே – சுசீலா / 4. கன்னிமனம் கெட்டுப் போச்சி – எஸ்.ஜானகி

(99). மாப்பிள்ளை – 1989 – என்னதான் சுகமோ நெஞ்சிலே - எஸ்.பி.பாலசுப்பிரமணியம், எஸ்.ஜானகி

(100). புதுப் பாட்டு – 1990 – 1. செஞ்சாந்து குழம்பாலே – சித்ரா / 2. ஒத்த நெல்லு போட்டா – மனோ, எஸ்.ஜானகி / 3. கும்பிடும் கைபோல – சித்ரா / 4. தவமான தவம் இருந்து – சித்ரா / 5. வெத்தல பாக்குபோட – சித்ரா

(101). மைக்கேல் மதன காமராஜன் – 1990 – 1. சுந்தரி நீயும் சுந்தரன் ஞானும் – கமலகாசன், எஸ்.ஜானகி / 2. கத கேளு கத கேளு - இளையராஜா

(102). வா அருகில் வா – 1991 – பொன்னுமணி பூச்சரமே – எஸ்.ஜானகி, ராஜன் சக்கரவர்த்தி

(103). பாண்டியன் – 1992 – பாண்டியனின் ராஜ்ஜியத்தில் உய்யலாலா – மனோ, சித்ரா

(104). ராசுக்குட்டி – 1992 – 1. அடி நான் புடிச்சக் கிளியே - எஸ்.பி.பாலசுப்பிரமணியம், குழுவினர் / 2. ஹோலி ஹோலி சுபலாலி - எஸ்.பி.பாலசுப்பிரமணியம், ஜானகி, குழுவினர் / 3. காலம் கலிகாலம் இது – இளையராஜா

(105). எங்க முதலாளி – 1993 – 1. குங்குமம் மஞ்சளுக்கு – ஏசுதாஸ், ஜானகி / 2. ஏழேழு தலைமுறைக்கும் – எஸ்.பி.பாலசுப்பிரமணியம், சித்ரா, குழுவினர் / 3. கொல்லிமலைச் சாரலிலே – மனோ, ஸ்வர்ணலதா / 4. மகத்தான உறவுகளை - எஸ்.பி.பாலசுப்பிரமணியம்

(106). வியட்நாம் காலணி – 1994 – எனக்கு உள்ளதெல்லாம் – ஸ்வணலதா

(107). வீரா – 1994 – 1. அடி பந்தலிலே தொங்குகிற – மனோ, குழுவினர் / 2. கொஞ்சி கொஞ்சி அலைகள் ஆட - எஸ்.பி.பாலசுப்பிரமணியம், சித்ரா, குழுவினர்

(108). ரிஷி – 2001 – 1. ஓ மானே மானே மீண்டும் வருமே காலம் – ஹரிஹரன் / 2. ஓ மானே மானே மீண்டும் வருமே காலம் – சுஜாதா
 

அன்புடன்,
கவிஞர் பொன். செல்லமுத்து

 

Edited by அன்புத்தம்பி

பஞ்சுவின் பல பாடல்கள் எனக்கு பிடித்திருந்தாலும், உடனேயே முதலில் ஞாபகத்துக்கு வருவது இதுதான்.

 

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

பஞ்சுஅருணாசலம்




முரட்டுக்காளை படத்தில் ரஜினிகாந்த், சுமலதா



8. நெஞ்சிலாடும் பஞ்சுவின் பாடல்கள்


கன்னித் தாய் - கேளம்மா சின்னப் பொண்ணு கேளு
கன்னித் தாய் - என்றும் பதினாறு வயதும் பதினாறு
கலங்கரை விளக்கம் - பொன்னெழில் பூத்தது புதுவானில்
குங்குமம் - சின்னஞ் சிறிய வண்ணப் பறவை
கவரிமான் - பூப்போலே உன் புன்னகையில்
வெற்றிக்கு ஒருவன் - முத்தமிழ்ச் சரமே இளங்கொடி மலரே
சாரதா - மணமகளே மருமகளே வாவா
நானும் ஒரு பெண் - பூப்போல பூப்போல பிறக்கும்
ஏழைப் பங்காளன் - தாயாக மாறவா தாலாட்டுப் பாடவா
காயத்ரி - காலைப் பனியில் ஆடும் மலர்கள்
மயங்குகிறாள் ஒரு மாது - ஒருபுறம் வேடன் மறுபுறம் நாகம்
ஆளுக்கொரு ஆசை - மஞ்சள் அரைக்கும் போது மதிலேறி பார்த்த மச்சான்
காற்றினிலே வரும் கீதம் - கண்டேன் எங்கும் பூமகள் நாட்டியம்
வட்டத்துக்குள் சதுரம் - இதோ இதோ என் நெஞ்சிலே
அன்னக்கிளி - அன்னக்கிளி ஒன்னைத் தேடுதே
அன்னக்கிளி - மச்சானப் பாத்தீங்களா
புவனா ஒரு கேள்விக்குறி – ராஜா என்பார் மந்திரி என்பார்
கவிக் குயில் - சின்ன கண்ணன் அழைக்கிறான்
கவிக் குயில் – குயிலே கவிக் குயிலே
அடுத்த வாரிசு - ஆசை நூறு வகை
முரட்டுக் காளை - பொதுவாக எம்மனசு தங்கம்
கல்யாண ராமன் – ஆஹா வந்திருச்சி ஆஹா ஓடி வந்தேன்
பூக்காரி - காதலின் பொன்வீதியில்
ஹலோ பார்ட்னர் - ஹலோ பார்ட்னர் நான் உன்னைவிட மாட்டேன்
உல்லாசப் பறவைகள் - ஜெர்மனியின் செந்தேன் மலரே
பாண்டியன் - பாண்டியனின் ராஜ்ஜியத்தில் உய்யலாலா
மணமகளே வா - ஆவாரம் பூவைத் தொட்டு ஆலோலம் பாடும் தென்றலே
மைக்கேல் மதன காமராஜன் – சுந்தரி நீயும் சுந்தரன் ஞானும்
வீரா - கொஞ்சி கொஞ்சி அலைகள் ஆட
ப்ரியா – என் உயிர் நீதானே




9. பஞ்சு அருணாசலம் பாடல்கள் – ஒரு பார்வை


1.பஞ்சுவின் சித்தப்பா கண்ணதாசன் ‘பாசமலர்’ படத்திற்கு எழுதிய ‘வாராய் என் தோழி வாராயோ’ பாடல் திருமண நிகழ்ச்சிகளில் முக்கியத்துவம் பெற்றுஒலிப்பது போல, ‘சாரதா’ படத்திற்காக பஞ்சு எழுதிய ‘மணமகளே மருமகளே வாவா’ என்ற பாடலும்திருமண வீடுகளில் முக்கியத்துவம் பெற்று வருகிறது. புகுந்த வீட்டார் தங்கள் வீட்டிற்கு வரும் மணமகளுக்கு சுமையை கொடுக்காமல், அவளின்நகை (புன்னகை) குறையாமல் பார்த்துக் கொள்வதாக பாடல் வரிகளை எழுதியுள்ளார் கவிஞர்.

தங்கநகை / வைரநகை / நிறைந்திருக் / காது - இங்கு
தங்கவரும் / பெண்மணிக்கு / சுமையிருக் / காது
பொங்கிவரும் / புன்னகைக்கு / குறைவிருக் / காது – அதைப்
பொழுதெல்லாம் / பார்த்திருந்தால் / பசியெடுக் / காது

2. ‘தினமணிக் கதிர்’ இதழில் சுஜாதா எழுதிய கதைக்கு, பஞ்சு அணாசலம் கதை, வசனம், பாடல்கள் எழுதிய படம் ‘காயத்ரி’. இப்படத்தில் இவரெழுதிய 5 பாடல்களில் ஒன்று ‘வாழ்வே மாயமா? பெரும் கதையா?’ என்பது.

சிரிப்பது / போலே / முகமிருக்கும்
சிரிப்புக்கு / பின்னால் / நெருப்பிருக்கும்
அணப்பது / போலே கரமிருக்கும்
அங்கே / கொடுவாள் / மறைந்திருக்கும்

என்ற வரிகளில் வஞ்சிக்கப்பட்ட ஒரு பெண்ணின் நிலையை சொல்கிறார் கவிஞர். இவ்வரிகள்; தஞ்சை ராமையாதாஸ் எழுதிய ‘ கும்பிடும் / கரமே / கொன்றிடும்; (படம் - சிங்காரி), கண்ணதாசன் எழுதிய ‘வாழ்த்தும் / கையிலே / வாளுண்டு’ (படம் – பறக்கும் பாவை) என்ற பாடல் வரிகளை நினைவூட்டுவதாக உள்ளது.

3. எஸ்.பி.முத்துராமன் இயக்கத்தில் ஆர்.முத்துராமன் நடித்த ‘மயங்குகிறாள் ஒரு மாது’ படத்தில் நாயகி பாடுவதாக உள்ள

‘ஒருபுறம் / வேடன் / மறுபுறம் / நாகம்,
இரண்டுக்கும் / நடுவே / அழகிய / கலைமான்’

என்றுஒரு பாடலை இவர் எழுதியுள்ளார். நாயகிக்கு வந்த இரட்டிப்பு துயரத்தை இப்படி பாடலில் சொல்லியுள்ளார் கவிஞர். மேலும்

‘பாட / நினைத்தது / பைரவி / ராகம்,
பாடி / முடித்தது / யாவையுன் / சோகம்’

என்ற வரிகளில் அவளுக்கு நேர்ந்ததையும், முடிவாகச் சொல்லிவிட்டார் கவிஞர். ‘தேனும் பாலும்’ படத்தில் கண்ணதாசன் எழுதிய, ‘நதியினில் / வெள்ளம் / கரையினில் / நெருப்பு, இரண்டுக்கும் / நடுவே / இறைவனின் / சிரிப்பு’ என்ற பாடல் வரிகள் இங்கு நினைவு கொள்ள தக்கதாக உள்ளது. பஞ்சுவின் வரிகள் அவர் சித்தப்பாவின் வரிகளுடன் ஒத்துள்ளன.

4. 200 நாட்களுக்கும் மேலாக திரையில் பறந்த இந்த அன்னக்கிளியில், ‘அன்னக்கிளி ஒன்னைத் தேடுதே’ என்ற பாடலில் பஞ்சு அவர்கள் எழுதிய இந்த வரிகளை காண்போம்.

நதிஎன்றால் / அங்கே / கரையுண்டு / காவல்
கொடியென்றால் / அதை(க்)காக்க / மரமே / காவல்
நெல்லறுக்கப் / போகையில்யார் / கன்னிஎந்தன் / காவலடி

நதிக்கு காவலாக கரையும், கொடிக்கு காவலாக மரமும் உள்ளபோது எனக்கு காவல் யார் என்கிறாள் நாயகி. உவமை மற்றும் பொருளை கையாண்டு நல்ல எடுத்துக் காட்டு உவமையணியை அமைத்துள்ளார் கவிஞர்.

இதே படத்தில், ‘சுத்தச் சம்பா பச்சை நெல்லு’ குத்தும் பெண்கள் பாடும் பாடல் ஒன்றையும் எழுதியுள்ளார் இவர். இப்பாடலில், ‘கல்லோடு உமியும் சேராமப் பாத்து பக்குவமா இடிங்க’ என்ற வரியை எழுதியுள்ளார். கற்களையும் உமியையும் நீக்கிய பின்புதான் நெல்லை உரலிலிட்டு இடிப்பது பழக்கம். ஒருவேளை உரலோடு உமி சேராமல் இடிக்கச் சொல்கிறாரோ.அடுத்த வரிகளில், ‘பஞ்சு பஞ்சாக வரணும் பணியாரம், வெள்ளி நூலாக வரணும் இடியாப்பம்’ என்ற வரி மூலமாக, பலகாரங்களில் வெண்மையும் மென்மையும் இருக்க வேண்டும் என்கிறார் இவர். அப்பொழுதெல்லாம் சமையல் சோடா இல்லாமலேயே பலகாரங்களில் மென்மையை கொண்டுவரும் திறன் மிக்கவர்கள் நம் பெண்கள். பஞ்சு அருணாசலம் அல்லவா, அதனால்தான் பஞ்சுபோல் பலகாரம் இருக்க வேண்டும் என்கிறார்.

 

அன்புடன்,
கவிஞர் பொன். செல்லமுத்து

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.