Skip to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

வெளிநாடுகளில் இலங்கையின் பெயரைக் கெடுத்தவர் மஹிந்த! - சஜித் பிரேமதாச

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

நாட்டின் அமைதியையும் சமாதானத்தையும் சீர்குலைத்து, வெளிநாடுகளில் இலங்கையின் நற்பெயரை கெடுத்து மோசமான நிலைக்கு கொண்டு சென்றவர் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவே என்று வீடமைப்பு நிர்மாணத்துறை அமைச்சர் சஜித் பிரேமதாச தெரிவித்தார். இன்று காலை மட்டக்களப்பு டேபா மண்டபத்தில் நடைபெற்ற செமட்ட செவன வீடமைப்பு வேலைத் திட்டத்தின் விசிறிநிவாச காசோலை வழங்கல் மற்றும் உறுதிப்பத்திரம் கட்டிடப்பொருட்கள் விநியோக நிகழ்வில் பிரதம அதிதியாக கலந்து கொண்டு பேசும்போது அவர் இவ்வாறு தெரிவித்தார்.

நாட்டின் அமைதியையும் சமாதானத்தையும் சீர்குலைத்து, வெளிநாடுகளில் இலங்கையின் நற்பெயரை கெடுத்து மோசமான நிலைக்கு கொண்டு சென்றவர் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவே என்று வீடமைப்பு நிர்மாணத்துறை அமைச்சர் சஜித் பிரேமதாச தெரிவித்தார். இன்று காலை மட்டக்களப்பு டேபா மண்டபத்தில் நடைபெற்ற செமட்ட செவன வீடமைப்பு வேலைத் திட்டத்தின் விசிறிநிவாச காசோலை வழங்கல் மற்றும் உறுதிப்பத்திரம் கட்டிடப்பொருட்கள் விநியோக நிகழ்வில் பிரதம அதிதியாக கலந்து கொண்டு பேசும்போது அவர் இவ்வாறு தெரிவித்தார்.

   

படைத்தரப்பை காட்டி நாட்டை கொள்ளையடித்த கொள்ளையர்களிடமிருந்து நாட்டை பாதுகாத்து இலங்கையை சுபீட்சமிக்க நாடாக ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவும் பிரதமர் ரணில் விக்ரமசங்கவும் இணைந்து கட்டியெழுப்பி வருகின்றனர் என்று அவர் தெரிவித்தார்.

http://www.seithy.com/breifNews.php?newsID=163491&category=TamilNews&language=tamil

யுத்த வெற்றியைக் காரணம் காட்டி கடந்த அரசாங்கம் நாட்டைச் சூறையாடியது'


யுத்த வெற்றியைக் காரணம் காட்டி கடந்த அரசாங்கம் நாட்டைச் சூறையாடியுள்ளதென வீடமைப்பு மற்றும் நிர்மாணத்துறை அமைச்சர் சஜித் பிரேமதாஸ தெரிவித்தார்.

'செமட்ட செவன கிராமத்துக்கு கிராமம் வீட்டுக்கு வீடு' எனும் தேசிய வீடமைப்புத் திட்டத்தின் கீழ், வீடுகளைக் கட்டுவதற்கான உதவி வழங்கும் நடவடிக்கை மட்டக்களப்பு, மண்முனை வடக்கு பிரதேச செயலகத்தில் சனிக்கிழமை (13) நடைபெற்றது. இதில் கலந்துகொண்டு உரையாற்றியபோதே அவர் மேற்கண்டவாறு கூறினார்.

இதன்போது, 422 பேருக்கு வீடமைப்புக் கடன் உதவியும் 215 பேருக்கு சீமெந்துப் பைக்கெட்டுகளும் வீடு கட்டுவதற்கான தொழிற்பயிற்சியை பூர்த்திசெய்த 83 பேருக்கு தொழில் உபகரணங்களும் வழங்கப்பட்டன.

இங்கு அவர் மேலும் உரையாற்றுகையில், 'வெளிநாட்டில் இலங்கைக்கு அபகீர்த்தியை கடந்த அரசாங்கம் ஏற்படுத்தியிருந்தது. ஆனால், தற்போதைய நல்லாட்சி அரசாங்கமானது  வெளிநாட்டில் இலங்கையின் புகழை ஓங்கச் செய்துள்ளதுடன், இலங்கை மீதான நன்மதிப்பையும் உருவாக்கியுள்ளது' என்றார்.

'கடந்த அரசாங்கத்தால் இந்த நாட்டில் நல்லிணக்கம், ஒற்றுமை சீர்குலைந்தது. யுத்த வெற்றியை வைத்து படையினரைக் காட்டி நாட்டைச் சூறையாடியதுடன், கொள்ளையடிக்கும் நடவடிக்கையையே கடந்த அரசாங்கம் மேற்கொண்டது' என்றார்.
'மேலும், இந்த நாட்டில் வீடுகள் இல்லாதவர்களின் பிரச்சினையைத் தீர்ப்பதற்கு முழுமையான நடவடிக்கையை எடுத்துவருகின்றோம். அந்த வகையில், எதிர்வரும் 10 வருடங்களுக்குள் மட்டக்களப்பு மாவட்டத்தில்; வீடுகள் இல்லாத அனைவருக்கும் வீடுகளை நிர்மாணித்துக்கொடுத்து வீட்டுப் பிரச்சினையை முழுமையாக தீர்ப்பதற்கு நடவடிக்கை எடுப்போம்' எனவும் அவர் கூறினார்.

http://www.tamilmirror.lk/179409/-ய-த-த-வ-ற-ற-ய-க-க-ரணம-க-ட-ட-கடந-த-அரச-ங-கம-ந-ட-ட-ச-ச-ற-ய-ட-யத-

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.