Skip to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

யாழில் மீண்டும் தாதா குழுக்களின் அட்டகாசம்!

Featured Replies

நேற்று முன்தினம் யாழ்ப்பாணத்தின் பிரபல தாதா என அழைக்கப்படும் சன்னா என்பவர் சங்குவேலிப் பகுதியில் குடும்பஸ்தர் ஒருவரை வெட்டிப் படுகொலை செய்தார்.

சங்குவேலி வடக்கு பகுதியைச் சேர்ந்த சிவகுமார் பிரணவன் (வயது 35) என்ற குடும்பஸ்தரே பலியாகியிருந்தார்.

மீண்டும் நேற்றிரவு மீண்டும் நடைபெற்ற வாள்வெட்டுத் தாக்குதில் சங்குவேலிப் பகுதியில் இளைஞர் ஒருவர் படுகாயமடைந்துள்ளார்.

முன்பகை காரணமாக இரண்டு இளைஞர் குழுக்கழுக்கிடையில் நடைபெற்ற வாள்வெட்டுச் சம்பவத்திலேயே குறித்த இளைஞர் காயமடைந்துள்ளார் எனத் தெரியவருகின்றது.

சுன்னாகம் சபாபதிப்பிள்ளை முகாமுக்கருகிலேயே  இத்தாக்குதல் சம்பவம் இடம்பெற்றுள்ளது.

குறித்த வாள் வெட்டுத் தாக்குதல்கள் இரண்டும் சங்குவேலிப் பிரதேசத்திலேயே நடைபெற்றுள்ளதுடன், குடும்பப் பகை காரணமாகவே வாள்வெட்டுக்கள் நடைபெற்றுள்ளதாகத் தெரியவருகின்றது.

இத்தாகுதல்களின் பின்னணியில் கொக்குவில் பகுதியைச் சேர்ந்த சன்னா என்று அழைக்கப்படும் பிரபல தாதா என்பவரே உள்ளார் எனவும் மக்கள் தெரிவிக்கின்றனர்.

குறித்த சன்னா யாழ்.பல்கலைக்கழக மாணவர்கள் மீதான வாள்வெட்டு சம்பவங்கள் மற்றும் காவல்துறை மீதான வாள்வெட்டு சம்பவங்களுடன் தொடர்புடைய நபர், குறித்த நபரை காவல்துறையினர் தேடுதல் நடாத்திய போதும், அவர் வெளிநாடு தப்பிச் சென்று விட்டதாக தெரிவிக்கப்பட்டநிலையில் நேற்று முன்தினம் இரவு வீட்டிற்குள் புகுந்து குடும்பஸ்தரை வெட்டியுள்ளார்.

ஆனால், குறித்த சன்னா கிளிநொச்சி மாவட்டத்தில் தலைமறைவாகி இருக்கின்றார் என காவல்துறையினருக்கு தகவல் கிடைக்கப்பெற்றும் காவல்துறையினர் அவரை கைதுசெய்வதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளவில்லை என்றும் மக்கள் விசனம் தெரிவித்துள்ளனர். காவல்துறையின் ஒத்துழைப்பில் தான் குறித்த நபர் தலைமறைவாகியிருந்து, இவ்வாறானசட்டவிரோத செயற்பாடுகளில் ஈடுபட்டு வருகின்றார் மக்கள் விசனம் தெரிவித்துள்ளனர்.

http://thuliyam.com/?p=38256

  • கருத்துக்கள உறவுகள்

blood-Knife-300-news.jpg

சுன்னாகம் சபாபதிப்பிள்ளை முகாமிற்கு அண்மையில் நேற்றிரவு இடம்பெற்ற வாள்வெட்டுச் சம்பவத்தில் இளைஞர் ஒருவர் படுகாயமடைந்த நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். குறித்த பகுதியைச் சேர்ந்த இளைஞர் குழுவுக்கும் அயல் கிராம இளைஞர்களுக்கும் இடையில் மோதல் ஏற்பட்டதைத் தொடர்ந்து, நேற்று இரவு மோட்டார் சைக்கிளில் வந்த இனந்தெரியாத குழுவொன்று இளைஞர் ஒருவர் மீது வாள் வெட்டுத் தாக்குதலை நடத்திவிட்டு தப்பிச் சென்றதாக பொலிஸார் தெரிவித்தனர்.

   

இந்தச் சம்பவத்தின் போது, இளைஞர் ஒருவர் காயமடைந்த நிலையில் யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் சேர்க்கப்பட்டுள்ளதுடன், வாள் வெட்டு சம்பவம் தொடர்பான விசாரணைகளை சுன்னாகம் பொலிசார் மேற்கொண்டுள்ளனர்.

http://www.seithy.com/breifNews.php?newsID=163845&category=TamilNews&language=tamil

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.