Skip to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

ஜிம் பிறவுண் அடிகளார் காணாமல் போனார்! சிவமகராஜா கொல்லப்பட்டார்

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

இற்றைக்கு பத்து ஆண்டுகளின் முன்னர் ஈழத்தின் வடக்கில் நான்காம் கட்ட ஈழப் போர் மூண்ட நாட்களில் நடந்த மிகப் பெரிய மனித உரிமை மீறல்களாக அருட்தந்தை ஜிம்பிரவுண் அடிகளார் காணாமல் போகச் செய்யப்பட்டமை மற்றும் ஊடக நிறுவனம் சிவமகாராஜா சுட்டுக்கொல்லப்பட்டமை ஆகிய சம்பவங்கள் நிகழ்த்தப்பட்டன.


ஜிம் பிறவுண் அடிகளார்:


அல்லைப்பிட்டிப் பங்குத்தந்தையாக நியமிக்கப்பட்டிருந்த அருட்திரு ஜிம் பிறவுண் அடிகளார் தனது உதவியாளருடன் ஞாயிற்றுக்கிழமை ஆகஸ்ட் 20 2006 அன்று யாழ்ப்பாணத்திலிருந்து அல்லைப்பிட்டிக்குச் சென்றுவிட்டு திரும்பிக் கொண்டிருந்த போது காணாமல் போகச் செய்யப்பட்டார்.


யாழ்ப்பாணத்தில் இருந்து பிற்பகல் 1.45 மணிக்கு அல்லைப்பிட்டி சென்றதற்கான பதிவும், பிற்பகல் 1.50 மணிக்கு அங்கிருந்து திரும்பியதற்கான பதிவும் தம்மிடம் உள்ளதாக பண்ணைப்பாலம் பகுதியில் நிலைகொண்டுள்ள இலங்கை இராணுவத்தினர் தெரிவித்தனர்.


அதன்பின் அவர் பற்றிய தகவல்கள் தொடர்புடையவர்களுக்கு கிடைக்கவில்லை. இராணுவத்தினருடன் தொடர்பு கொண்டபோதும் தமக்கு அது பற்றி எதுவும் தெரியாது என்று தெரிவித்தனர். அவர்கள் காணாமல் போனமை பற்றி மனித உரிமைகள் ஆணைக்குழுவிடம் முறையிடப்பட்டது.


முல்லைத்தீவு புதுக்குடியிருப்பைச் சேர்ந்தவர் பங்குத்தந்தை ஜிம் பிறவுண் அடிகளார். பங்குத்தந்தையுடன் சென்ற அவரது உதவியாளர் அல்லைப்பிட்டியைச் சேர்ந்தவர் பென்சன் பிளஸ் (வயது 39). அல்லைப்பிட்டிப் பங்குத்தந்தையாக 2004 இல் நியமிக்கப்பட்ட அருட்திரு அந்தோனி அமலதாஸ் அல்லைப்பிட்டியில் 4 மாதக்குழந்தை, 4 வயதுச் சிறுவன் உட்பட 9 பேர் கொடூரமாகப் படுகொலை செய்யப்பட்ட சம்பவத்தை வெளியுலகுக்கு கொண்டு வந்தவர்.


பலவித அச்சுறுத்தலால் அவரால் அங்கு தொடர்ந்து பணியாற்ற முடியவில்லை. இதனால் அவர் வேறு இடத்துக்கு மாற்றப்பட்டு அவரது இடத்திற்கு அருட்திரு ஜிம் பிரௌன் நியமிக்கப்பட்டார்.


அவரை விரைவில் கண்டுபிடித்து தருமாறு வத்திக்கான் வேண்டுகோள் விடுத்தது. பேராயர் காணாமல் போனது பற்றி விசாரணை நடத்துமாறு ஆம்னஸ்டி இன்டர்நஷனல் அமைப்பு கோரியது.


அல்லைப்பிட்டிற்கு சென்ற சமயம் காணாமற்போன பங்குத் தந்தை ஜிம்பிறவுண் அடிகளார் மற்றும் அவரது உதவியாளர் பற்றி சம்பந்தப்பட்டவர்கள் உடன் பதில் தரவேண்டுமென பாப்பரசரின் இலங்கைக்கான தூதுவர் பேராயர் மரியோ செனாறி வேண்டுகோள் விடுத்தார்.


சிவமகராஜா படுகொலை:


முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினரும், ஊடவியலாளருமான சின்னத்தம்பி சிவமகராஜா யாழ்ப்பாணத்தில் இருந்து வெளிவந்த நமது ஈழநாடு பத்திரிகையின் ஆசிரியராகவும், தமிழர் விடுதலைக் கூட்டணி, மற்றும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு ஆகியவற்றின் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினராகவும் செயற்பட்டதுடன்  வலிகாமம் வடக்கு பொது அமைப்புகளின் தலைவராகவும் பணியாற்றியிருந்தார்.


யாழ்ப்பாணக் குடாநாட்டை மையமாகக் கொண்டு தமிழ்த் தேசியத்தை வலியுறுத்தி 2002 ஆம் ஆண்டில் 'நமது ஈழநாடு' பத்திரிகையை ஆரம்பித்தார். இலங்கை படைத்துறையினர் இப்பத்திரிகை நிலையத்தின் மீது 2005 டிசம்பரில் தாக்குதல் நடத்தினர்.


அக்காலகட்டத்தில் இலங்கையில் ஊடகவியலாளருக்கு எதிராக இடம்பெற்று வந்த அடக்குமுறைகளின் ஒரு பகுதியாகவே இது பார்க்கப்பட்டது.விடுதலைப் புலிகளுக்கு ஆதரவாக செயல்படுவதாகக் குற்றம் சாட்டி இவருக்கு எதிராக மரண எச்சரிக்கையும் விடுக்கப்பட்டிருந்தது.


சிவமகராஜா 2006 ஆகத்து 20இல் அவரது வீட்டில் தெல்லிப்பளையில் வைத்து இனந்தெரியாதோரால் சுட்டுக் கொல்லப்பட்டார். இவரது வீடு இலங்கை இராணுவத்தின் உயர் பாதுகாப்பு வலயத்தினுள் அமைந்திருந்தது.


ஐநாவின் யுனெஸ்கோ நிறுவனம் இப்படுகொலையைக் கண்டித்து அறிக்கை வெளியிட்டிருந்தது. பன்னாட்டு ஊடகவியலாளர் மன்றம் பாரபட்சமற்ற விசாரணைகளை மேற்கொள்ளுமாறு அரசைக் கேட்டிருந்தது.


இந்த இரண்டு சம்பவங்களின் பின்னணியிலும் இலங்கை அரச படைகள் இருந்தமை வெளிப்படையானது. எனினும் இந்தச் செயற்பாடுகளின் குற்றவாளிகள் பத்தாண்டுகளின் பின்னரும் தண்டிக்கவில்லை என்பதே இலங்கையின் மனித உரிமை குறித்த கேள்விகளையும் சந்தேகங்களையும் ஏற்படுத்தம் சூழல் என்பது இன்றைய நாளில் சுட்டிக்காட்டத்தக்கது.
 

அனுப்புக Home, Srilankan News

http://globaltamilnews.net/GTMNEditorial/tabid/71/articleType/ArticleView/articleId/135073/language/ta-IN/article.aspx

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.