Skip to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

முள்ளிவாய்க்கால் கிழக்கை மீண்டும் சுவீகரிக்க 1ஆம் திகதி காணி அளவீடு!

Featured Replies

முள்ளிவாய்க்கால் கிழக்கை மீண்டும் சுவீகரிக்க 1ஆம் திகதி காணி அளவீடு!

முள்ளிவாய்க்கால் கிழக்கை மீண்டும் சுவீகரிக்க 1ஆம் திகதி காணி அளவீடு!  குளோபல் தமிழ் செய்தியாளர்:

 

உரிமை கோருபவர்கள் ஆவணங்களுடன் வருமாறு அழைப்பு

முல்லைத்தீவு மாவட்டத்தில் உள்ள வட்டுவாகல் பகுதியில் கோத்தபாய கடற்படை முகாம் என்ற பெயரில் இலங்கை கடற்படை தளம் அமைத்துள்ள பகுதி உள்ளிட்ட 617 ஏக்கர் காணியை சுவீகரிக்கும் நோக்கில் மீண்டும்  நில அளவை இடம்பெறவுள்ளதாக பிரதேச நில அளவைத் திணைக்களம் அறிவித்துள்ளது. இதற்கான அறிவித்தல் முள்ளிவாய்க்கால் கிழக்கில் ஒட்டப்பட்டுள்ளது. 

பாதுகாப்பு அமைச்சின் செயலாளரது விண்ணப்பத்திற்கு இணங்க, காணி சுவீகரிப்பு அதிகாரியின் கேட்டளையின் பிரகாரம் இந்த நில அளவை இடம்பெறவுள்ளதாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது. முள்ளிவாய்க்கால் கிழக்கு வட்டுவாகலில் தற்போது கடற்படையால் வேலியிடப்பட்ட பகுதியை நிரந்தரமாக சுவீகரிக்கவே இவ்வாறு அளவை செய்யப்படவுள்ளது.

இதேவேளை கடந்த ஓகஸ்ட் 3ஆம் திகதி இவ்வாறு நில அளவை செய்ய முற்பட்டபோது, வட்டுவாகல் பகுதியை முற்றுகையிட்டு மக்கள் மாபெரும் எதிர்ப்பை மேற்கொண்டனர். சுமார் 250 வரையிலான காணி உரிமையாளர்கள் கடற்படை முகாமின் முன்பாக ஒன்றுகூடியிருந்தனர். இவர்கள் தமது காணிகளை அபகரித்துள்ளமைக்கும் நரந்தரமாக சுவீகரிப்பதற்கும் எதிர்ப்பு வெளியிட்டனர்

அத்துடன் முல்லை - பரந்தன் வீதியை இடைமறித்து காணியை சுவீகரிக்கும் அளவையை நிறுத்துமாறு கோரி மக்கள் எதிர்ப்பு நடவடிக்கையிலும் ஈடுபட்டனர். இதன் காரணமாக நில அளவை கைவிடப்பட்டது. இதனால் குறித்த பகுதி ஊடான போக்குவரத்தும் சில மணிநேரம் பாதிக்கப்பட்டது. 

இந்தப் போராடடத்தில் மக்களுடன் தமிழ் தேசியக் கூட்டமைப்பு மற்றும் தமிழ் தேசிய மக்கள் முன்னணி ஆகிய கட்சிகளின் அரசியல் பிரதிநிதிகளும் கலந்து கொண்டனர். இந்த நிலையில் நில அளவை தற்காலிகமாகவே நிறுத்தப்பட்டுள்ளது என்று கூறும் மக்கள் கடற்படை வசம் ஆக்கிரமிக்கப்பட்டுள்ள சுவீகரிக்க காணிகளை மீண்டும் அளவீடு செய்ய அதிகாரிகள் தீர்மானித்திருந்தனர். 

இந்த நிலையில் மீண்டும் காணிகளை நிரந்தரமாக சுவீகரிப்பதற்காக எதிர்வரும் 1ஆம் திகதி அளவீடு செய்யவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. கடற்படை தளம் அமைக்கப்பட்டுள்ள பகுதியை உரிமை கோருபவர்கள் இருந்தால் ஆவணங்களுடன் வருகை தருமாறும் 1ஆம் திகதி வியாழக்கிழமை முதல் காணி அளீவீடு இடம்பெறும் என்றும் அரச நில அளவையாளர் அறிவித்துள்ளார். 

 வட்டுவாகலில் தனியாருக்குச் சொந்தமான .379 ஏக்கர் நிலமும் மக்கள் வசித்த அரச காணிகள் 379 ஏக்கர் காணியுமாக மொத்தம் 626 ஏக்கர் நிலத்தில் இலங்கை கடற்படையின் கோத்தபாய முகாம் அமைக்கப்பட்டுள்ளது. பெருமளவான நிலப் பகுதிகளில் முட்கம்பி வேலி அமைக்கப்பட்டு கடற்படையினரின் பாதுகாப்பு அரண்களின் கீழ் அபகரிக்கப்பட்டுள்ளது. 

இதனால் சுமார் 500 குடும்பங்கள் தங்கள் வாழிடத்தை இழந்து தவிக்கின்றனர். இந்தக் காணிகளை விடுவிக்குமாறு மக்கள் பலமுறை கோரிக்கை விடுத்துள்ளனர். இந்த நிலத்திற்குரிய மக்கள் நிலமற்றவர்களாக உறவினர் வீடுகளிலும் தெருக்களிலும் அகதிகளாக அலைகின்றனர்.

 

http://globaltamilnews.net/GTMNEditorial/tabid/71/articleType/ArticleView/articleId/135315/language/ta-IN/article.aspx

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.