Skip to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

வெளிநாட்டு அமைச்சின் அலுவலகமொன்றை வடக்கில் நிறுவவேண்டும்-முதல்வர் விக்கி கோரிக்கை

Featured Replies

வெளிநாட்டு அமைச்சின் அலுவலகமொன்றை வடக்கில் நிறுவவேண்டும்-முதல்வர் விக்கி கோரிக்கை
 
 
வெளிநாட்டு அமைச்சின் அலுவலகமொன்றை வடக்கில் நிறுவவேண்டும்-முதல்வர் விக்கி கோரிக்கை
வெளிநாட்டு அலுவல்கள் அமைச்சின் அலுவலகமொன்றை வடக்கில் நிறுவி னால், அங்குள்ள மக்கள் தமது சேவைகளை இலகுவாக பெற்றுக்கொள்ள க்கூடியதாக இருக்குமென்றும் இதுகுறித்து துறைசார் அமைச்சர் கவ ன த்திற்கொள்ள வேண்டுமெனவும் வட மாகாண முதலமைச்சர் சி.வி.விக்னே ஸ்வரன் கோரிக்கையொன்றை முன்வைத்தார்.
 
வெளிநாட்டு அலுவல்கள் அமைச்சினால் ஒழுங்குசெய்யப்பட்ட, ஆவணங்களை உறுதிப்படுத்துவதற்கான தேவைகளை உடைய பொதுமக்களுக்கான ஆலோச னைகளும் வழிகாட்டுதலுக்குமான நடமாடும் சேவை இன்று (ஞாயிற்றுக்கிழ மை) நல்லூரில் நடைபெற்றது. இதில் அதிதியாக கலந்துகொண்டு உரையாற்று கையிலேயே முதலமைச்சர் இவ்வாறு தெரிவி த்தார். முதலமைச்சர் தொடர்ந்து குறிப்பிடுகையில்-
 
”நல்லூர் உற்சவம் நடைபெறும் இவ்வாறான சனக்கூட்டம் நிறைந்த தினங்களில் நடாத்தப்படுகின்ற நடமாடும் சேவையும் அதன் வழிகாட்டி அறிவுறுத்தல்களும் கூடுதலான மக்களுக்கு போய்ச்சேரும் என்பதில் ஐயமில்லை.
 
கடந்த கால அசாதாரண சூழ்நிலை காரணமாக எமது இளைஞர்கள் யுவதிகளில் பலர் வெளிநாடுகளில் குடியேறி வாழ்கின்றனர். அவர்கள் அந் நாடுகளில் தொழில்வாய்ப்பினை பெற்றுக்கொள்வதற்கும் உயர்கல்வியை மேற்கொள்வ தற்கும் தாம் இலங்கையில் பெற்றுக்கொண்ட கல்விச் சான்றிதழ்கள், பிறப்பு அத்தாட்சிப்பத்திரம் என இன்னோரன்ன சான்றிதழ்களின் சான்றுபடுத்தப்பட்ட பிரதிகளை பெறவேண்டிய தேவை உள்ளது.
1472380485_nallur.jpg
இதற்கென தமது பெற்றோர், உறவினர், நண்பர்கள் ஆகியோருக்கு விண்ணப்பங்களை அனுப்புகின்றனர். அவற்றை வெளிநாட்டு அலுவல்கள் அமைச்சில் கொடுத்து உறுதிப்படுத்துவதற்காக இப் பகுதிகளில் இருந்து மிகப் பெரிய பணத்தைச் செலவு செய்து சொகுசு பஸ்கள் மூலமாகவும், புகையிரதங்கள் மூலமாகவும் கொழும்புக்குச் சென்று அங்கே வெளிநாட்ட லுவல்கள் அமைச்சு அலுவலகத்தை தேடிப்பிடிப்பதற்கு வாடகை வண்டிகள், முச்சக்கர வண்டிகள் போன்றவற்றிற்குப் பணத்தைக் கொடுத்து உரிய கரும பீடங்களில் அவர்களின் ஆவணங்களைக் கையளிக்கும் போது அவற்றில் பல குறைபாடுகளை அமைச்சு மட்ட அதிகாரிகள் இனங்காண்பதால் உரிய சேவை கள் கிடைக்காது அவர்கள் மீளத்திரும்பி வரவேண்டிய துர்ப்பா க்கிய நிலைக்கு உள்ளாகின்றனர்.
 
இந்த விடயம் வெளிநாட்டு அலுவல்கள் அமைச்சராலும் அமைச்சில் கடமை யாற்றுகின்ற உயர்மட்ட அதிகாரிகளாலும் அடையாளம் காணப்பட்டி ருக்கும் காரணத்தினால், இவ்வாறான ஒரு நடமாடும் சேவை இன்று இங்கு முன்னெடுக்க ப்பட்டுள்ளது.இதற்கு அமைச்சருக்கு எமது நன்றிகளைத் தெரிவித்துக் கொள்கி ன்றேன்” என்றார்.

http://onlineuthayan.com/news/16845

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.