Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

வாக்களி/கழி க்கலாம் வாங்க !!

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

vaaka;ikkallam-vangaஸ்காபுரோ ரூட்ஜ் ரிவர் தொகுதிக்கான தேர்தல் தொகுதியில் நடைபெறப் போகும் இறுதித் தேர்தலை சந்திப்பதற்கு இன்னும் சில தினங்களே எஞ்சியுள்ள நிலையில் எழுதப்படும் இந்த கட்டுரையானது அந்த தேர்தலின் வெற்றியாளரை தீர்மானிப்பதில் எந்த ஒரு தாக்கத்தையும் ஏற்படுத்தாது என்ற புரிதலோடும் தீர்மானத்தோடும் எழுதப்பட்டது என்பதை முதல் பந்தியில் பதிவு செய்ய விரும்புகின்றோம்.

காரணம் தேர்தல் வெற்றி தோல்விகளை தீர்மானிக்கும் அளவிற்கான தமிழ் ஊடகச் சூழலும் வாசகப் பரப்பும் தமிழ் ஊடகத்துறைக்கு இதுவரை கனடாவில் உருவாக்கப்படவில்லை என்ற உண்மை கட்டுரையாளருக்கும் பத்திரிக்கை யாளருக்கும் நன்கு தெரிந்தே இருக்கின்றது.

அவ்வாறு இருக்க இந்த கட்டுரையின் அவசியம் என்ன என்ற கேள்வி பலருக்கும் எழும் இது ஒரு அவதானியின் பதிவு என்பதாக மட்டுமே கருதப்பட வேண்டும் அதுவே இந்த கட்டுரையின் பிரதான நோக்கம்.

அவதானங்களும் எழுமானங்களும் ஆளுக்காள் வேறுபடும் இந்த கட்டுரையோடு ஒத்துப் போவதும் ஒவ்வாமை கொண்டு திட்டித் தீர்பதும் அவரவர் உரிமை.

தமிழர்கள் அதிகமாக வாழும் ஒரு தேர்தல் தொகுதி என்ற வகையிலும் முதல் தமிழ் பாராளுமன்ற உறுப்பினரை தெரிவு செய்த தொகுதி என்ற அடிப்படையிலும் இந்த தொகுதி குறித்த கரிசனை தமிழர்கள் மத்தியில் ஒரளவு இருக்கின்றது.

ஆனால் இந்த தொகுதியில் வாழும் ஒட்டு மொத்த தமிழர்களும் வாக்களிப்பில் கலந்து கொண்டு தமக்கு ‘பிடித்த’ வேட்பாளருக்கு வாக்களிப்பதன் மூலம் இந்த தொகுதியில் முதல் ‘தமிழ்’ மாகாண சபை உறுப்பினரை தெரிவு செய்து விடலாம் என்பதில் எல்லாம் எனக்கு உடன்பாடு கிடையாது.

தமிழர்கள் செறிந்து வாழும் பகுதியில் தமிழர்கள் தான் போட்டியிட வேண்டும் என்ற வாதமே  மிகத் தவறானது

 


முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் ராதிகா சிற்சபையீசன் கூட தனது வெற்றியில் மாற்றின சமூகங்களின் பங்களிப்பின் முக்கியத்துவம் குறித்து பல தடவைகள் வெளிப்படுத்தியிருக்கின்றார்

இது பிரதான கட்சிகள் தொடர்பில் வாக்களார்கள் கொண்டுள்ள நம்பிக்கை மற்றும் நம்பிக்கையீனங்களுக்கு இடையிலான போட்டியாகவே இருக்கும் என்பதும் வேட்பாளர்கள் யார் எந்த இனத்தவர் எமக்கு என்ன செய்தார் ? இனி என்ன செய்வார் ?; என்ற கேள்விகளின் அடிப்படையில் வெற்றி பெறக் கூடிய தேர்தல் களமோ காலமோ அல்ல.

இரண்டு பிரதான கட்சிகள் தமிழ் வேட்பாளர்களை களமிறக்கிய நிலையில் தமிழர் அல்லாத ஆனால் தமிழ் மக்களுக்கு நன்கு பரீட்சயமான ரேமண்ட  சோ என்ற கொரிய சமூகத்தைச் சேர்ந்த ஒரு மூதாளரை பழமைவாதக் கட்சி இந்த தேர்தலில் களமிறக்கியுள்ளது.

தமிழர் அல்லாத ஒருவருக்கு தமிழர்கள் செறிந்து வாழும் பகுதியில் போட்டியிடும் வாய்பினை வழங்காமால் பழமைவாதக் கட்சியின் தலைவர் பற்றிக் பிரவுண் ‘துரோகம்’ செய்து விட்டதாக ‘தமிழ் உணர்வாளர்கள்’ என்று தம்மை அழைத்துக் கொள்பவர்களும் பற்றிக் பிரவுணின் தலைமைத்துவத்திற்கான பயணத்தின் பின்னர் களற்றிவிடப்பட்ட முன்னாள் ‘ பழமைவாதிகள்’ சிலரும் அழுத கண்ணீர் மழையாச்சு.

உண்மையில் தமிழர்கள் செறிந்து வாழும் பகுதியில் தமிழர்கள் தான் போட்டியிட வேண்டும் என்ற வாதமே  மிகத் தவறானது.

மூன்று தமிழர்கள் போட்டியிட்டு அதில் ஒருவர் வெற்றி பெற்றால் அந்த தொகுதியில் வாழும் தமிழர்களின் பிரச்சினைகள் அனைத்தும் தீர்ந்து விடுமா ? எல்லோருக்கும் அரச வேலை வாய்ப்பை ஏற்படுத்திக் கொடுத்து அவர்களை நல்ல நிலைக்கு உயர்த்தி விடுவார்களா? அல்லது தாயகத்தில் யுத்த வடுக்களை சுமந்து நிற்கும் குடும்பங்களை கனடாவிற்கு அழைத்து வரும் தீர்மானத்தை ஏற்படுத்தி சிரிய அகதிகள் போல் ‘தமிழ்’ அகதிகளை அழைத்து வந்து இங்கே குடியேற்றுவதற்கு முயல்வார்களா ? இல்லைத் தானே சரி இவை தான் வேண்டாம் குறைந்த பட்சம் நம் தமிழ் வேட்பாளர்களின் வெற்றிக்காக காலையும் மாலையும் கால் கடுக்க நடந்து நடந்து வீடு தட்டும் தொண்டர்களில் ஒன்றிரண்டு பேருக்காவது எதாவது நல்வழி காட்டுவார்களா என்றால் ‘ அதுவும் இல்லை ‘ என்ற பதிலையே நாம்  உரத்துக் கூறப் போகின்றோம்.

தேர்தலில் வென்ற பின்னர் தமது உறவினர்களையும் நண்பர்களையும் தமக்கு மிக வேண்டியவர்களையும் கவனிப்பதில் தான் இவர்களின் பதவிக் காலம் முடியும்.

இது மாநகர சபை அரசியலில் இருந்து தேசிய அரசியல் வரை நமது தெரிவுகள் செந்த செய்து கொண்டிருக்கின்ற மகத்தான பணி என்பதை அப்பாவி ‘தமிழர்கள்’ இன்னும் புரிந்து கொள்ளாமல் இருப்பதற்கு யார் காரணம்.

அவர்களின் தவறுகளை சுட்டிக்காட்டினால் எங்கே எங்கள் வருமானம் பாதிக்கப்பட்டு விடுமோ என்ற அச்சத்தில் அலைக்கழியும் ஊடகங்களும் நமக்கேன் வீண் வம்பு என்று ஒதுங்கிப் போகும் இந்த கட்டுரையை கூட கடிவாளம் போட்டு எழுதிக் கொண்டிருக்கும் ‘நான்’ உட்பட சக ஊடகவியலாளர்களின் இயலாமையும் தான் இதற்கு பிரதான காரணம்.

தமிழ் சமூகத்தின் பிரதி ஒருவருர் தேசிய பாராளுமற்றத்திலும், மாகாண சபையிலும், மாநாகரச சபையிலும் கல்விச் சபையிலும் இருக்கின்றார் என்று சொல்லிக் கொள்ளலாம் அவ்வளவு தான்.
neethan-shan
இந்த போட்டியில் ஈடுபட்டுள்ள இரண்டு தமிழ் வேட்பாளர்களையும் கடந்த வாரம் சந்தித்தோம். ஏன் தமது கட்சி வெற்றி பெற வேண்டும் என்பதற்கான பதிலில் அவர்கள் காண்பித்த தெளிவும் புரிதலும் ஏன் நீங்கள் வெல்ல வேண்டும் என்ற கேள்வியின் போது காணமல் போனதை அவதானிக்க முடிந்தது. அது ஏன் என்பதை அவர்piragal-thiruகள் தான் தெளிவு படுத்த வேண்டும்.

நான் பல வருடங்களாக சமூக சேவையில் ஈடுபட்டு வருகின்றேன் பல மேடைகளில் தமிழ் மக்களுகாக குரல் கொடுத்துள்ளேன் என்று கூறுவது மட்டும் ஒரு சமூகமாக உங்களை தெரிவு செய்வதற்கு போதுமானதா என்று எனக்கும் தெரியவில்லை

இந்த தேர்தலின் போது தாம் வெற்றி பெற வேண்டும் என்ற முனைப்பும் அதற்கான தமிழர்கள் தமக்கு உதவ வேண்டும் என்ற கோரிக்கையினை முன்வைக்கும் அவர்கள் ‘தமிழ்’ சமூகத்திற்கு என்ன செய்யப் போகின்றோம் என்ற வாக்குறுதிகளை அளிக்க தவறுகின்றார்கள் என்பது துரதிஸ்டவசமானது.

கடந்த 2003 ஆண்டு முதல் 2016ஆம் ஆண்டு வரையான 13 ஆண்டுகளில் 8 முறை தேர்தல்களை சந்தித்த ‘ பெருமை’ புதிய ஜனநாயகக் கட்சியின் வேட்பாளர் நீதன் சானைச் சாரும்.

இந்த வருடம் நடைபெற்ற இடைத் தேர்தலில் போட்டியிட்டு ரொரன் ரோ கல்விச் சபைக்கு தெரிவாகியிருந்த நீதன் அந்த பதவிக் காலம் முடிவதற்குள் மீண்டும் ஒரு தேர்தலுக்கு முகம் கொடுக்கின்றார்

நீதனின் இந்த தெளிவான இலக்கற்ற அரசியல் பயணமும் அவர் மீதான நம்பிக்கைகளை பாதிக்கும் நிலையில் இதற்கான காரணம் குறித்து அவரிடம் கேட்ட போது தன்னுடைய பணிகள் இளைஞர்கள் வலுவூட்டல், கல்வி முன்னேற்றம் மற்றும் புதிய குடிவரவாளர்கள் குறிததே மையப்படுத்தப்பட்டுள்ளதாக சுறினார்.

தான் எந்த விதமான அரசியல் அரங்கில் செயல்பட்டாலும் தன்னால் இந்த விடயங்கள் குறித்து ஆக்கபூர்வமான பங்களிப்பை வழங்க முடியும் என்றும் அவர் நம்பிக்கை வெளியிட்டார்.

அதேவேளை மாகாண அரசில் கல்வி விடயங்களை கையாளக் கூடிய அமைச்சு பொறுப்பொன்றே தனது இறுதி இலக்காக அமையும் என்றும் நீதன் தெரிவித்தார்.

மாகாண முதல்வர் கத்தலின் வின் அவர்கள் முன்னாள் கல்விச் சபை உறுப்பினராக இருந்தவர் என்றும் இப்போது தனது போட்டிக் களத்தில் இருக்கும் ரேமண் சோ பல்வேறு அரசியல் தளம்பல்களை கடந்தவர் என்றும் நீதன் சான் கூறினார்.

கனேடிய அரசியலைப் பொறுத்த வரையில் இது போன்று மாறி மாறி தேர்தல்களில் போட்டியிடுவது ஒரு புதுமையான விடயம் அல்ல என்றும் எனவே இது குறித்து  அதிகமாக கலைப்பட வேண்டியதில்லை என்பதும் நீதனின் கருத்து நிலைப்பாடாக இருந்தது.

இதேவேளை ரொரன்ரோ கல்விச் சபையில் தமது குரலாக இருக்க வேண்டும் என்பதற்காக நீதனை தெரிவு செய்த மக்களுக்கு நீங்கள் வழங்கிய வாக்குறுதிகளை நிறைவேற்றாமால் அந்த பதவியை கைவிட்டு மாகாண சபைக்கான தேர்தலில் போட்டியிடுவது உங்களை தெரிவு செய்த மக்களுக்கு ஏமாற்றமளிக்காதா என்று கேட்ட போது தன்னை கல்விச் சபைக்கு தெரிவு செய்த மக்களே மாகாண சபைக்கும் தெரிவு செய்வார்கள் என்றும் எனவே அந்த மக்களின் எதிர்பார்ப்புகளை தான் நிறைவேற்றுவேன் என்ற அவர்களின் நம்பிக்கைக்கு அமைவாக மாகாண அரசியல் கல்வித்துறை சார்ந்த மாற்றங்களை ஏற்படுத்துவதற்கு தன்னால் ஆன பங்களிப்பை வழங்குவேன் என்றும் அதற்குரிய அறிவும் ஆற்றலும் அனுபவமும் தனக்கு இருப்பதாகவும் நீதன் சான் தெரிவத்தார்.

இகுருவி சார்பில் லிபரல் கட்சியின்  வேட்பாளர் பிரகல் திரு அவர்களையும் சந்தித்தோம் இந்த தேர்தலில் ஏன் பிரகல் வெற்றி பெற வேண்டும் என்ற கேள்விக்கு பதிலளித்த அவர் ஆளும் கட்சியில் உள்ள ஒருவரால் மட்டுமே விரும்பிய மாற்றங்களை கொண்டு வர முடியும் என்றும் எனவே ஆளும் லிபரல் கட்சியின் சார்பில் போட்டியிடும் தன்னை வெற்றி பெற வைப்பதன் மூலம் ரூட்ஜ் ரிவர் தொகுதி மக்களின் தேவைகளை தன்னால் உடனடியாக பூர்த்தி செய்து வைக்க முடியும் என்று அவர் கூறினார்.

கடந்த 13 ஆண்டுகளாக ஆளும் லிபர் கட்சியின் வெற்றிக் கோட்டைகளில் ஒன்றாக விளங்கும் ஸ்காபுரோ ரூட்ஜ் ரிவர் தொகுதியில் இதுவரை இருந்த ‘ஆளும் கட்சியின்’ மாகாண சபை உறுப்பினர்கள் பல தேவைகளை பூர்த்தி செய்ய தவறியிருக்கின்றார்களா என்ற கேள்வியை பிரகலின் இந்த பதில் தோற்று வித்திருக்கின்றது.

அதே சமயம் ஆளும் லிபரல் அரசாங்கம் உட்கட்டுமான திட்டங்களை முன்னெடுப்பதற்கு மிகப் பெரிய நிதி ஒதுக்கீடுகளை மேற்கொண்டுள்ளதாகவும் இதனை நடைமுறையப்படுத்துவதன் மூலம் மக்களின் தேவைகள் பலவற்றை பூர்த்தி செய்ய முடியும் என்று தான் நம்புவதாகவும் பிரகல் கூறினார்.

பிரகல் கனேடிய அரசியலில் ஒரு புதிய முகம் எவ்வாறு பல வருட அரசியல் அனுபவம் கொண்ட போட்டியாளர்களை எதிர் கொள்ளப் போகின்றீர்கள் என்ற கேள்விக்கு பதில் அளித்த பிரகல் திரு அரசியலும் சமூக சேவையும் தனக்கு புதிதான ஒன்றல்ல என்று கூறினார்.

14 வயதில் லிபரல் கட்சியின் தன்னார்வ தொண்டனாக தனது பயணத்தை ஆரம்பித்ததாகவும் தற்போது ஒன்ராறியோ லிபரல் கட்சியின் உப தலைவர் என்ற நிலை வரை தான் உயர்ந்திருப்பதாகவும் குறிப்பிட்டார்.

தேசிய அரசியல் முதல் மாநகர சபை அரசியல் வரை பல்வேறு தேர்தல் களங்களில் தேர்தல் பரப்புரை நடவடிக்கைகளில் ரொரன்ரோ நகரபிதா ஜோன் ரோரி உட்டபட பலருடைய வெற்றிக்காகவும் தான் கடுமையாக உழைத்துள்ளதாகவும் அவர் சுட்டிக்காட்டினார்

சிறுவயதில் தாயாருடன் அகதியான இந்த நாட்டிற்கு வந்த ஒருவர் என்ற வகையில் இங்கு வாழும் குடிவரவாளர்களின் பிரச்சினைகளை தான் நன்கு அறிந்துள்ளதாகவும் அவை குறித்து மாகாண அரசில் குரல் எழுப்பவும், நடவடிக்கை எடுக்கவும் ;தன்னால் முடியும் என்றும் பிரகல் நம்பிக்கை வெளியிட்டார்.

நீங்கள் சார்ந்துள்ள ஒரு தமிழ் அமைப்பை உங்கள் வெற்றிக்காக நீங்கள் பயன்படுத்துவது குறித்து எழுந்துள்ள குற்றச்சாட்டை எவ்வாறு எதிர் கொள்கின்றீர்கள் என்று கேட்ட போது இதுபோன்ற பல்வேறு விதமான குற்றச்சாட்டுகள் முன்வைக்கப்படலாம் ஆனால் சமூகத்திற்கு நன்மை செய்வதற்கு அமைப்புகளின் ஒத்துழைப்பு அவசியம் என்றும் எனவே தான் இதனை பெரிதாக எடுத்துக் கொள்ளப் போவதில்லை என்றும் பதிலளித்தார்.

கனடாவில் பெட்னா மாநட்டை நடத்தியதில் தான் முக்கிய பங்காற்றியதாகவும், தாயக மக்களின் அவலங்கள் குறித்து கனேடிய அரசாங்கத்திற்கு தெளிவு படுத்தும் பணிகளை முன்னெடுத்து வருவதாகவும் எனினும் அவை குறித்து வெளிப்படையான பேச முடியாதிருப்பதாகவும் பிரகல் திரு கூறினார்.

இந்த இரண்டு தமிழ் வேட்பாளர்களினதும் சந்திப்பிற்கு பின்னர் ஒரு விடயம் மட்டும் தெளிவானது அதாவது அவர்கள் தாம் போட்டியிடும் கட்சிகளுக்கு ‘பொருத்தமான’ தெரிவாக இருக்கின்றார்கள்.

ஒரு கட்சியின் பிரதிநிதியாக தங்களை முன்னிலைப்படுத்தும் இவர்களுக்கு தமிழ் அடையாளம் சூட்டப்படுவது எந்த வகையில் நியாயமாகின்றது.

அவர்களின் வெற்றிக்கு தமிழ்  சமூகம் உதவ வேண்டும் என்ற கோரிக்கை பொருத்தமற்ற ஒன்றானவே எனக்கு தென்படுகின்றது.

அவர்களின் வெற்றிக்கு தமிழர்களின் வாக்குகள் வேண்டும் வென்ற பின்னர் அவர்கள் தொகுதி மக்களாகி பத்தோடு பதினொன்றாகி விடுவார்கள் என்ற நிலைப்பாடும் நியாயப்படுதலும் ஏற்புடையதல்ல

ஒரு சமூகத்தை  நோக்கி நீங்கள் ஆதரவு கோரும் போது அந்த சமூகத்திற்கு என்ன நன்மைகளை நீங்கள் ஏற்படுத்தப் போகின்றீர்கள் என்பதையும் குறிப்பிட்டுக் கூற வேண்டுமல்லவா?

பிச்சை வேண்டாம் நாயைப் பிடி என்று ஒதுங்கி இருக்கும் தமிழ் புலமையாளர்கள், சிந்தனையாளர்கள் , சமூக அக்கறை கொண்ட , ஈகைமனம் கொண்ட செயற்பாட்டளார்களை மீண்டும் செயல்பாட்டு தளத்திற்கு அழைத்து வர வேண்டும்


தமிழர்கள் அதிகம் வாழும் தொகுதி இது என்று பல முறை கூறும் உங்களால் இந்த தொகுதியில் வாழும் தமிழ் மக்கள் எதிர் கொள்ளும் பிரச்சினைகள் சிலவற்றையேனும் பட்டியலிட முடியவில்லையே ?

இந்த தொகுதியில் இதுவரை இருந்த மாற்றின சமூகத்தை சேர்ந்த மாகாண சபை உறுப்பினர்களால் கண்டு கொள்ளாமல் விடப்பட்ட தமிழர் நலன் சார்ந்த பிரச்சினைகள் இவை இவற்றை தீர்பதற்காக என்னை நீங்கள் மாகாண சபைக்கு அனுப்புங்கள் என்று தமது வாக்கு சேகரிப்பில் கருத்துக்களை  முன்வைக்க இவர்கள் முன்னவராதது ஏன் ?

வீடு தட்டும் போது தமிழ் வாக்களார்கள் இந்த கேள்விகளை எழுப்பியிருந்தால் அவர்கள் உணர்ந்திருக்கலாம் ஆனால் நாம் தான் கேள்வி கேட்காமலே இருக்க பழகிவிட்டோமே அல்லது பழக்கப்படுத்தப்பட்டு விட்டோமே

எமது சமூகத்தின் குரலாக இருக்கக் கூடிய தலைவர்களையும் அவர்களின் தலைமையில் செயல்படக் கூடிய அமைப்புகளையும் தமிழர்கள் சரியாக இதுவரை உருவாக்கவில்லை என்ற கசப்பான உண்மை மீண்டும் மீண்டும் உயிரூட்டப்பட்டுக் கொண்டிருக்கின்றது.

தமிழர்களுக்கான அமைப்புகளாக தம்மை காட்டிக் கொள்பவர்களும் அதனை வழிநடத்தும் ‘ தலைவர்களின்’ ‘கொள்கை ‘ முன்னெடுப்பு பிரிவாக செயல்படும் அவலம் தான் இங்கு தொடர்கின்றது.

தமிழர் அமைப்பு ஒரு பேட்பாளரை ஆதரிப்பதா எதிர்ப்பதா அவரின் வெற்றிக்கு உழைப்பதா அல்லது அவரை இழுத்து விழுத்தி தேற்கடிப்பதா என்பதை எல்லாம் யாரோ ஒரு சில ‘ தலைவர்கள்’ தீர்மானிக்கும் நிலை நீடிக்கும் வரை தமிழ் வேட்பாளர்கள் தேர்தலில் வெல்வதும் தோற்பதும் தமிழர்களுக்கு முக்கியத்துவமற்ற ஒன்றாகவே இருக்கும்.

கனடாவில் வாழும் தமிழ்ச் சமூகம் எதிர் நோக்கும் சவால்கள் என்ன ? எங்கள் அடுத்த தலைமுறையின் வளர்ச்சிக்கான பங்களிப்பை ஒரு சமூகமாக நாம் எவ்வாறு மேற்கொள்ளலாம்? எங்கள் சமூகத்தில் காணப்படும் உறவுச் சிக்கல்கள், மூதாளர்களின் பிரச்சினைகள், புதிய குடிவரவாளர்கள் எதிர் நோக்கும் சவால்கள், அகதித் தஞ்சக் கோரிக்கை நிராகரிக்கப்பட்டு நிர்க்கதியாய் நிற்பவர்களின் நிலைகள் குறித்தெல்லாம் அக்கறை கொள்வதற்கு யார் இங்கே இருக்கின்றார்கள் ?

நாங்கள் நட்சத்திரங்களை அடுக்கி விழா எடுபதிலும் தெருக்களை மூடி திருவிழா கொண்டாடுவதிலும் அதில் அரசியல் தலைவர்களை அழைத்து எங்கள் வீர தீரங்களை அவர்களுக்கு எடுத்துக் காட்டி பின்கதவால் எங்களுக்கு வேண்டியவர்களுக்கும் அரசாங்க உத்தியோகம் பெற்றுக் கொடுப்பதற்கும் அரசாங்க சலுகைகளை பெறுவதற்கும் துடியாய் துடித்துக் கொண்டிருக்கும் ‘சமூகத் தலைவர்களை’ நம்பியவாறு தமிழ் சமூகம் என்றும் தமிழ் பிரதிநிதிகள் வெற்றி பெற வேண்டும் என்றும் பிரார்தித்துக் கொண்டும் திரியப் போகின்றோம்..

18 மாதங்களில் மாகாண சபைத் தேர்தல் வரும் அப்பபோதும் பிரதான கட்சிகளின் சார்பில் போட்டியிடுவதற்கு நல்ல வேட்பாளர்களை தேடி அலையும் சமூகமாக தான் நாம் இருக்கப் போகின்றோமா ?

அல்லது இதுவரை கற்றுக் கொண்ட பாடங்களில் இருந்து பட்டு தெரிந்த விடயங்களை வைத்துக் கொண்டு ஒரு சமூகமாக சிந்திக்க தலைப்படுவோமா ?

தமிழர்கள் கட்சி பேதங்கள் அமைப்பு பேதங்கள், கொள்கை பேதங்கள், இயக்க பேதங்கள் மறந்து தமிழர் நலன் என்ற ஒரு விடயத்தை மட்டும் முன்னிறுத்தி ஒன்றுபடும் சூழல் ஒன்று உருவாக்கப்பட வேண்டும்.

வெளிப்படையான உரையாடல்கள் கருத்து பகிர்வுகள் தமிழ் சூழலில் ஏற்படுத்தப்பட வேண்டும்.

பிச்சை வேண்டாம் நாயைப் பிடி என்று ஒதுங்கி இருக்கும் தமிழ் புலமையாளர்கள், சிந்தனையாளர்கள் , சமூக அக்கறை கொண்ட , ஈகைமனம் கொண்ட செயற்பாட்டளார்களை மீண்டும் செயல்பாட்டு தளத்திற்கு அழைத்து வர வேண்டும்.

இதையெல்லாம் யார் செய்வது என்ற கேள்வி உங்களைப் போல எனக்கும் இருக்கின்றது. மாற்றம் ஒன்று தான் மாறாதது.முயன்றால் முடியாதது எதுவும் இல்லை இவை சாத்தியமானால் மிகப் பெரிய மாற்றமும் மறுமலர்ச்சியும் தமிழர் வாழ்வில் ஏற்படும் என்பதை மட்டும் உறுதியாக சொல்ல முடியும்.

http://ekuruvi.com/vaakalikalam-vaanaga/

 

 

  • கருத்துக்கள உறவுகள்
39 minutes ago, nunavilan said:

அரசியல் தலைவர்களை அழைத்து எங்கள் வீர தீரங்களை அவர்களுக்கு எடுத்துக் காட்டி பின்கதவால் எங்களுக்கு வேண்டியவர்களுக்கும் அரசாங்க உத்தியோகம் பெற்றுக் கொடுப்பதற்கும் அரசாங்க சலுகைகளை பெறுவதற்கும் துடியாய் துடித்துக் கொண்டிருக்கும் ‘சமூகத் தலைவர்களை’ நம்பியவாறு தமிழ் சமூகம் என்றும் தமிழ் பிரதிநிதிகள் வெற்றி பெற வேண்டும் என்றும் பிரார்தித்துக் கொண்டும் திரியப் போகின்றோம்..

18 மாதங்களில் மாகாண சபைத் தேர்தல் வரும் அப்பபோதும் பிரதான கட்சிகளின் சார்பில் போட்டியிடுவதற்கு நல்ல வேட்பாளர்களை தேடி அலையும் சமூகமாக தான் நாம் இருக்கப் போகின்றோமா ?

ஓ அங்கேயும் அப்படித்தானா ....இங்கேயும் அப்படித்தான் ...வாக்கு போட்டதற்கு மக்கள் நன்றாகவே அனுபவிக்கினம் 

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.