Skip to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

தமிழ் மக்கள் மட்டுமல்ல; சர்வதேசமும் ஏமாற்றப்படுகிறது

Featured Replies

11542.jpg

யுத்தம் இல்லாத சூழ்நிலையை அமைதி என்று பார்க்கின்ற சர்வதேச நாடுகள் ஈழத்தமிழ் மக்களின் எதிர்காலம் பற்றியோ இந்த நாட்டின் ஆட்சி அதிகாரத்தில் அவர்களின் வகிபாகம் பற்றியோ இம்மியும் கவலை கொள்ளவில்லை.

யுத்தம் நின்று விட்டது. மகிந்த அரசு இப்போது ஆட்சியில் இல்லை. நல்லாட்சி அதிகாரத்தில் உள்ளது. ஆகையால் தமிழர்களுக்கு எந்தக் குறையும் இல்லை என்ற சர்வதேசத்தின் நினைப்பை தனக்கு சாதகமாக்கிக் கொண்டு நல்லாட்சியும் தமிழ் மக்களை ஏமாற்றி வருகிறதென்பதே உண்மை.

ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவைப் பொறுத்தவரை தனிப்பட்ட மைத்திரி மிகவும் நல்ல மனிதர் என்பதில் எந்த மாற்றுக் கருத்தும் இல்லை. 

மனிதநேயம், இரக்கம், சமத்துவம், ஆடம்பரம் அற்ற எளிமையான வாழ்வு என்பன மைத்திரிபால சிறிசேனவின் அணிகலன்கள் என்பதும் உண்மையே. 

எனினும் இலங்கை நாட்டின் ஜனாதிபதி என்ற மைத்திரிபால சிறிசேன தனது நேர்மைத்தன்மையை நிலைநாட்ட முடியாதவராக இருப்பது உண்மை என்பதும் ஏற்புடையதே. 

தான் சார்ந்த கட்சியின் நிலைப்பாடு; உடன் இருக்கும் அமைச்சர்கள்; பாராளுமன்ற உறுப்பினர்கள்; அரசியல்வாதிகள்; மதபீடங்களின் இறுக்கமான போக்குகள் என்பவற்றுக்கு ஈடு கொடுத்து தமிழ் மக்களுக்கான உரிமையை வழங்குவதென்பது அவரால் முடியாத காரியமாகவே உள்ளது. 

இதன் காரணமாக தமிழ் மக்களின் வாழ்விடங்களில் அவர்கள் மீளவும் குடியமர்வதற்கான சூழ்நிலையை ஏற்படுத்துவதோ, தமிழ் அரசியல்கைதிகளை விடுதலை செய்வதோ, காணாமல்போனவர்களின் உறவுகளுக்கு உரிய பதிலை வழங்குவதோ அவரால் முடியாத காரியமாகவே இருக்கிறது.

இந்நிலையில் அவரை தமக்குச் சாதகமாக்கிக் கொள்ளும் பேரினவாத சக்திகள் தமிழர் தாயகத்தில் திட்டமிட்ட பெளத்த-சிங்கள மயமாக்கலை கனகச்சிதமாக மேற்கொள்கின்றனர். 

இவை பற்றி தமக்கு எதுவும் தெரியாது என்ற அளவிலேயே ஜனாதிபதியின் பதில் அமைவதையும் நாம் அவதானிக்க முடிகிறது.
 
ஐ.நா செயலாளர் நாயகம் பான் கீ மூன் அவர்கள் ஜனாதிபதி மைத்திரியைச் சந்தித்த போது வலி வடக்கில் மக்கள் மீள்குடியமர்வதற்கு மூன்று மாத காலத்துக்குள் நடவடிக்கை எடுக்கப்படும் என உறு தியளித்துள்ளார்.

எனினும் இந்த உறுதியளிப்பை இராணுவத் தளபதி ஏற்றுக்கொள்வாரா? என்ற சந்தேகம் கூட இருக்கவே செய்கிறது. 

ஏனெனில் கடந்த சில வாரங்களுக்கு முன்னர்  கருத்துரைத்த இராணுவத்தளபதி இராணுவத் தேவைக்கான காணிகள் விடுவிக்கப்பட மாட்டாது. அவை உரிய நட்ட ஈட்டுடன் சுவீகரிக்கப்படும் எனக் கூறியிருந்தார்.
ஆக, இராணுவத்துக்குத் தேவையான காணி என்பது எவ்வளவு என்ற கேள்வி இங்கு எழுகிறது. 

இராணுவ ஆக்கிரமிப்புக்கு உட்பட்ட காணிகளை விடுவித்து மக்களை மீள்குடியமர அனுமதிப்பது என்றால் அங்கு காணி சுவீகரிப்பு என்ற பேச்சுக்கே இடமிருக்க முடியாது.

அப்படியானால் ஐ.நா செயலாளர் பான் கீ மூனுக்கு ஜனாதிபதி வழங்கிய உறுதிமொழி மூன்று மாத காலத்துக்குள் சாத்தியமாகுமா? அதை நம்பமுடியுமா? என்ற ஐயங்கள் தொக்கி நிற்கவே செய்யும்.

எது எப்படியாயினும் முன்னைய ஆட்சிகள் மட்டுமன்றி நல்லாட்சியும் தமிழ் மக்களை ஏமாற்றுகின்றது.

கூடவே, சர்வதேச சமூகமும் ஏமாற்றப்படுகிறது. எனினும் இந்த உண்மையை உரியவர்கள் உணராமல் இருப்பதுதான் மகா கொடுமைத்தனம்.  

http://www.valampurii.lk/valampurii/content.php?id=11542&ctype=news

  • கருத்துக்கள உறவுகள்

எது எப்படியாயினும் முன்னைய ஆட்சிகள் மட்டுமன்றி நல்லாட்சியும் தமிழ் மக்களை ஏமாற்றுகின்றது என்பதனை முதலில் ஒட்டுமொத்தத் தமிழர்களும் அவர்களது தலைவர்களும் உணரவேண்டும். அதன்பின்பு சர்வதேச சமூகமூகத்தைப் பார்க்கலாம்.:rolleyes:

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.