Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

தொடைரைக் கைப்பற்றியது அவுஸ்திரேலியா : டில்ஷானை தோல்வியுடன் வழியனுப்பியது இலங்கை

Featured Replies

தொடைரைக் கைப்பற்றியது அவுஸ்திரேலியா : டில்ஷானை தோல்வியுடன் வழியனுப்பியது இலங்கை

 

இலங்கை மற்றும் அவுஸ்திரேலியா அணிகளுக்கிடையிலான 2 ஆவதும் இறுதியுமான இருபதுக்கு 20 போட்டியில் அவுஸ்திரேலிய அணி 4 விக்கெட்டுகளால் இலங்கை அணியை வீழத்தி, தொடரை 2-0 என கைப்பற்றியது.

14264125_10210279324044951_3378355160858

இலங்கைக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள அவுஸ்திரேலிய அணிஇரு போட்டிகள் கொண்ட இருபதுக்கு 20 தொடரில் பங்கேற்று விளையாடியது.

14247618_10205645224764641_215241204_o.j

இரு அணிகளுக்குமிடையிலான முதல் போட்டி பல்லேகலயில் இடம்பெற்றது.

14247713_10205645227084699_1001819432_o.

இதில் 85 ஓட்டங்களால் இலங்கையை வெற்றிகொண்ட அவுஸ்திரேலிய அணி, சாதனை வெற்றியை பதிவு செய்து தொடரில்  1-0 என முன்னிலை பெற்றது.

14247934_10205645227004697_1151390703_o.

இந்த நிலையில் 2 ஆவது இறுதியுமான இருபதுக்கு - 20 போட்டி இன்று கொழும்பு ஆர்.பிரேமதாஸ மைதானத்தில் இடம்பெற்றது.

14256754_10205645225604662_1578753914_n.

இதில் நாணய சுழற்சியில் வெற்றிபெற்ற இலங்கை அணித் தலைவர் சந்திமால் முதலில் துடுப்பெடுத்தாட முடிவெடுத்தார். அதன்படி இலங்கை அணி முதலில் துடுப்பெடுத்தாடக் களமிறங்கியது.

14285077_10205645225244653_334032343_o.j

தொடக்க வீரர்களாக டில்ஷான், குஷால் பெரேரா களமிறங்கினர். தனது இறுதிப் போட்டியில் ஆடிய டில்ஷான் ஒரு ஓட்டத்துடன் ஆட்டமிழந்து ரசிகர்களை ஏமாற்றினார்.

14285189_10205645224364631_1745355715_o.

நிதானமாக ஆடிய குஷால் பெரேரா 22 ஓட்டங்களுடன் ஆட்டமிழந்தார். இதன் பின்னர் வந்த இலங்கை அணி வீரர்கள் அனைவரும் சொற்ப ஓட்டங்களில் ஆட்டமிழந்து வெளியேறினர்.

14315895_10205645225164651_1254869410_o.

அணித்தலைவர் சந்திமால் 4 ஓட்டங்களுடனும் மெண்டிஸ் 5 ஓட்டங்களுடனும் கபுகெதர 7 ஓட்டங்களுடனும் திசர பெரேரா ஓட்டமெதனையுமு் பெறது ஒற்றை இலக்கங்களுடன் ஆட்டமிழந்து வெளியேறினர்.

14302984_10205645225924670_797192600_n.j

இறுதிவரை  பொறுமையாக விளையாடிய தனஞ்ஜய டி சில்வா  கன்னி அரைசதம் ( 62 )அடித்து ஆட்டமிழந்தார். 

14285013_10205645223604612_1862608872_o.

இவரது நிதான நின்று ஆடியதால் இலங்கை 20 ஓவர்களில்  9 விக்கெட் இழப்புக்கு 128 ஓட்டங்களைப்பெற்று அவுஸ்திரேலிய அணிக்கு 129 ஓட்டங்களை வெற்றி இலக்காக நிர்ணயித்தது.

14285073_10205645227364706_1467300013_o.

அவுஸ்திரேலிய அணி சார்பில், போல்க்னர், அடம் சம்பா தலா 3 விக்கெட்டுகளை வீழ்த்தினர்.

14315795_10205645226644688_1273923691_o.

பதிலுக்கு 129 ஓட்டங்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய அவுஸ்திரேலிய அணி, 17.5 ஓவர்களில் 130 ஓட்டங்களைப்பெற்று 4 விக்கெட்டுகளால் இலங்கை அணியை வீழ்த்தி 1-0 என தொடரைக் கைப்பற்றியது.

14281411_10205645227244703_1612531507_n.

அவுஸ்திரேலிய அணி சார்பில், மெக்ஸ்வெல் அதிகபட்சமாக 66 ஓட்டங்களை எடுத்து வெற்றிக்கு வித்திட்டார். 

14269475_10205645225764666_247010516_n.j

இலங்கை அணி சார்பில் பத்திரண, டில்ஷான் ஆகியோர் தலா இரண்டு விக்கெட்டுகளை கைப்பற்றினர்.

 

இந்த வெற்றியின் மூலம் இரண்டு போட்டிகள் கொண்ட இருபதுக்கு 20 தொடரை 2-0 என அவுஸ்திரேலிய கைப்பற்ற, இருபதுக்கு 20 கிரிக்கெட் வாழ்க்கைக்கு விடைகொடுத்த டில்ஷானை இலங்கை அணி தோல்வியுடன் வழியனுப்பி வைத்தது.

http://www.virakesari.lk/article/11180

  • தொடங்கியவர்

17,671 runs
154 wickets
39 100s
83 50s
242 catches
3 stumpings
1 unforgettable international career
#ThankYouDilshan

14232463_1330295733656186_77187496773949

 

14291634_1330177937001299_28960148635580

14237729_1914455538585644_87065913700924

14257682_1914455575252307_71727751506523

14249865_1914455658585632_21132280882171

 

14242326_1914455688585629_47051664564752

14289970_1914455705252294_48853993090331

14310519_1914455785252286_62489783066494

14257604_1914455828585615_18892855094002

 

14310281_1914455858585612_43767062160718

14242234_1914455921918939_40205664379724

14305303_1914456025252262_57777176656431

 

14242374_1914456108585587_32343727874728

14242205_1914456128585585_18343160627469

14305398_1914456398585558_33334554478728

14258277_1914456575252207_65698555393291

14195403_1914456691918862_21852221389835

14242386_1914456741918857_12622107781590

14242299_1914456795252185_96892917001829

14324280_1914456825252182_13827401902251

14310567_1914457095252155_43260297065009

14311503_1914457131918818_54639171355785

14305190_1914457415252123_37088459369657

14241413_1914457475252117_87611653849809

14311260_1914457515252113_69988618501931

14231348_1914457635252101_43839225073533

14305292_1914457675252097_20067699167268

  • தொடங்கியவர்
கனத்த இதயத்துடன்
விடைபெற்றார் டில்ஷான்
showImageInStory?imageid=296448:tn
 

(எம்.எம். சில்­வெஸ்டர்)

சர்­வ­தேச கிரிக்கெட் அரங்கின் தனது பிரி­யா­விடைப் போட்­டியில் பங்­கு­கொண்ட இலங்கை அணியின் டில்ஸ்கூப் மன்னன் தில­க­ரட்ண டில்ஷான் கனத்த இத­யத்­துடன் 17 வருட சர்வதேச கிரிக்கெட் வாழ்க்­கையை முடித்­துக்­கொண்டார்.

அவுஸ்­தி­ரே­லி­யா­வுக்கு எதி­ரான 2 ஆவதும் இறு­தி­யு­மான இரு­ப­துக்கு 20 போட்டி கொழும்பு ஆர். பிரே­ம­தாச மைதா­னத்தில் நேற்று முன்­தினம் இரவு நடை­பெற்­றது.

இலங்கை அணியின் அதி­ரடித் துடுப்­பாட்ட வீரரும் முன்னாள் அணித்­த­லை­வ­ரு­மான தில­க­ரட்ன டில்­ஷானின் கடைசிப் போட்டி என்­ப தால் இப்­போட்­டியைக் காண ஆயி­ரக்கணக்­கான கிரிக்கெட் ரசி­கர்கள் நிரம்­பி­யி­ருந்­தனர்.

இலங்கை அணி சார்பாக முதலில் துடுப்­பெ­டுத்­தாட களமிறங்கிய போட்­டியின் கதா­நா­ய­கனான டில்­ஷா­னுக்கு இலங்கை கிரிக்கெட் அணி வீரர்கள் இரு பக்­க­மாக நின்று துடுப்­பாட்ட மட்­டையை மேலே உயர்த்­தி­ய­வாறு மரி­யாதை அளித்­தனர். இதில் டில்ஷான் ஒரு ஓட்­டத்தை மாத்­தி­ரமே பெற்று ஆட்­ட­மி­ழந்தார். இதை­ய­டுத்து மைதா­னத் தில் நிரம்­பி­யி­ருந்­த­வர்கள் எழுந்து நின்று கர­கோ­ஷத்தை எழுப்பி டில்­ஷா­னுக்கு மரி­யாதை செலுத்­தினர்.

இதன்­போது டில்ஷான் அனைவருக்கும் தலை வணங்கினார். பின்னர் முழந்­தா­ளிட்டு கரங்­களை மேலே உயர்த்­தி, மைதா­னத்தை முத்­தமிட்டு ரசிகர்­ க­ளுக்கு தனது அன்பு கலந்த மரி­யா­தையை செலுத்­தினார். இப்­போட்­டியில் பந்து வீச்சில் 2 ஓவர்­களை வீசி 2 விக்­கெட்­டு­க­ளையும் கைப்­பற்றி இலங்கை ரசி­கர்­களை பர­வ­ச­ம­டையச் செய்தார்.

இப்­போட்­டியில் இலங்கை அணி 20 ஓவர்­களில் 9 விக்­கெட்­டு­களை இழந்து 128 ஓட்­டங்­களை பெற்­றுக்­கொண்டது. பதி­லுக்கு துடுப்­பெ­டுத்­தாடிய அவுஸ்­தி­ரே­லியா 6 விக்­கெட்­டு­களை இழந்து 17.5 ஓவர்­களில் 130 ஓட்­டங்­களைப் பெற்று வெற்றியீட்டி 2 போட்­டிகள் கொண்ட இரு­ப­துக்கு 20 தொ டரை 2–0 என்ற கணக்கில் கைப்பற்றியது.

இலங்கை, அவுஸ்­தி­ரே­லியா பங்­கு­கொண்ட கிரிக்கெட் சுற்­றுப்­போட்­டியில் இலங்கை அணி டெஸ்ட் தொடரை 3 – 0 என்ற கணக்கில் வென்று வர­லாறு படைத்தது. எனி­னும், அதன் பின்னர் நடை­பெற்ற சர்­வ­தே­ச ஒரு நாள் போட்டித் தொடரை 4 – 1 என்ற கணக்கில் தோல்வியடைந்தது.

இப்போட்­டி நிறை­வ­டைந்­ததன் பின்னர் டில்ஷான், மைதா­னத்தில் நிரம்­பி­யி­ருந்த ரசிகர்க ளுக்கு கைலாகு கொடுத்து தனது நன்றியைத் தெரி­வித்­தி­ருந்தார்.

பரி­ச­ளிப்பின் போது இலங்கை கிரிக்­கெட்­டுக்கு இவர் ஆற்­றிய சேவையைப் பாராட்டி இலங்கை கிரிக்கெட் நிறு­வ­னத்தால் டில்­ஷா­னுக்கு நினைவுச் சின்­ன­மொன்று வழங்­கப்­பட்­டது. 1976ஆம் ஆண்டு ஒக்­டோபர் 14ஆம் திக­தியன்று களுத்­து­றையில் பிறந்த தில­க­ரட்ண டில்ஷான், சிறு­வ­யது முதலே கிரிக்கெட் மீது ஆர்­வ­மிக்­க­வ­ராக விளங்­கினார். களுத்­துறை மத்­திய வித்­தி­யா லயத்தில் கல்வி பயின்ற அவர், பாட­சாலை மட்ட கிரிக்கெட் போட்­டி­களில் சிறப்­பாக விளை­யாடி, கழக மட்ட போட்­டி­களில் விளை­யாட அழைப்புப் பெற்றார். அதன் பின்னர் இலங்கை ஏ குழாமில் சிறந்த ஆற்­றல்­களை வெளிப்­ப­டுத்­தி­யதன் பய­னாக இலங்கை தேசிய கிரிக்கெட் அணியில் விளை­யாட அவ­ரு க்கு வாய்ப்பளிக்­கப்­பட்­டது.

இதன்­படி 1999ஆம் ஆண்டு ஸிம்பாப்வே அணி க்கு எதி­ராக சர்­வதேச ஒரு நாள் போட்­டியில் அறி­மு­க­மானார். துடுப்­பாட்டம், பந்­து­வீச்சு மற்றும் களத்­த­டுப்பு போன்ற சகல துறை­களிலும் சிறப்­பான பங்­க­ளிப்பை ஆற்­றி­யுள்ளார்.

அத்­துடன் விக்கெட் காப்­பிலும் ஈடு­பட்ட இவர், கிரிக்­கெட்டின் சகல துறை­க­ளிலும் பங் கேற்று தனது பன்­முகத் திற­மையை கிரிக்கெட் உலகுக்கு வெளிக்­காட்­டி­யுள்ளார். இவ்­வாறு தனது 17 வருட கால கிரிக்கெட் வாழ்க்­கையில் இலங்கை

கிரிக்கெட் அணிக்கு சிறந்த பங்­க­ளிப்புச் செய்து ள்ளார். சர்­வ­தேச கிரிக்கெட் அரங்கில் 87 டெஸ்ட் போட்­டி­களில் விளை­யா­டி­யுள்ள இவர், 16 சதங் கள், 23 அரைச்­ச­தங்கள் அடங்­க­லாக 5492 ஓட்­டங்­களை குவித்­துள்ளார்.

மேலும் சர்­வ­தேச ஒருநாள் போட்­டி­களில் 330 போட்­டி­களில் பங்­கேற்று 22 சதங்கள், 47 அரைச்­ச­தங்கள் அடங்­க­லாக 10,290 ஓட்­டங்­களை பெற்­றுக் ­கொண்டு உலக தரத்தில் 10 ஆயிரம் ஓட்­டங்­க ளைக் குவித்த 11ஆவது வீர­ரா­கவும் 4ஆவது இலங்­கை­ய­ரா­கவும் தனது பெயரை நிலை­நாட்­டினார்.

மேலும், சர்­வ­தேச இரு­ப­துக்கு 20 அரங்கில் 1889 ஓட்­டங்­களைக் குவித்து இவ்­வகைப் போட்­டியில் அதிக ஓட்டங்­களை குவித்த இரண்­டா­மவர் என தனது பெயரை நிலை­நாட்­டி­யுள்ளார்.

பந்­து­வீச்­சிலும் சிறப்­பாக செயற்­பட்ட திலக ரட்ண டில்ஷான், டெஸ்ட் அரங்கில் 39 விக்­கெட் டுக­ளையும், ஒருநாள் அரங்கில் 106 விக்­கெட்­டு­க­ளையும், இரு­ப­துக்கு 20 அரங்கில் 9 விக்­கெட்­டு­க ளையும் கைப்­பற்­றி­யுள்ளார்.

கிரிக்கெட் சாத­னைகள் பல காணப்­பட்­டாலும், திலகரட்ண டில்ஷானுக்கு மாத்திரமே உரித்தான புதுமையான சாதனையை அவர் படைத்துள்ளார். அதாவது, சர்வதேச கிரிக்கெட் அரங்கில் 10 ஆயிரம் ஓட்டங்களை குவித்து, 100 விக்கெட்டுகளுக்கு (109) மேல் கைப்பற்றி 100இற்கு அதிகமான பிடி

களை (123) எடுத்து, விக்கெட் காப்பில் ஒரு ஸ்டம்பை புரிந்த கிரிக்கெட் வரலாற்றின் ஒரே ெயாரு கிரிக்கெட் வீரர் திலகரட்ண டில்ஷான் மாத் திரமே என்பதாகும்.

 

 

http://epaper.virakesari.lk:8080/home/index?editionId=19&editionDate=11/09/2016

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.