Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

முரளி கிண்ண கிரிக்கெட் சுற்றுப் போட்டிகள் ; ஆரம்பித்து வைத்தார் சங்கா (படங்கள் இணைப்பு)

Featured Replies

முரளி  கிண்ண கிரிக்கெட் சுற்றுப் போட்டிகள் ; ஆரம்பித்து வைத்தார் சங்கா (படங்கள் இணைப்பு)

 

 

இலங்கையிலுள்ள இளம் கிரிக்கெட் வீரர்களிடையே நட்புறவை பேணும் வகையில் ஆரம்பிக்கப்பட்ட முரளி கிண்ண கிரிக்கெட் சுற்றுப் போட்டி தொடர்ந்தும் 5 ஆவது முறையாக நாளை (21) ஆரம்பமாகவுள்ளது.

_MG_0005.JPG

இதன் ஆரம்ப நிகழ்வு கிளிநொச்சி இரணைமடு நிலும்பியசவில் இன்று மாலை மூன்று மணியளவில் நடைபெற்றது. 

இந்த நிகழ்வில் இலங்கை கிரிகெட் அணியின்  முன்னாள் தலைவரும், விக்கெட் காப்பாளருமான குமார் சங்கக்கார விசேட அதிதியாக கலந்துகொண்டு ஆரம்ப நிகழ்வை ஆரம்பித்து வைத்தார்.

_MG_0002.JPG

இந்நிலையில் இந்த போட்டிகள் இம்மாதம் 21 திகதி முதல் 25 ஆம் திகதிவரை  யாழ்ப்பாணம், கிளிநொச்சி, ஒட்டுசுட்டான், மாங்குளம்,போன்ற பகுதிகளில் இருபதுக்கு இருபது போட்டிகளாக நடத்தப்படவுள்ளன.

இப்போட்டியில் 16 ஆண்கள் அணி மற்றும் 8 பெண்கள் அணி பங்கேற்கும் இந்த போட்டியின் இறுதி போட்டி கிளிநொச்சி மத்திய கல்லூரியின் மைதானத்தில் இடம்பெறவுள்ளது.

_MG_0042.JPG

குறித்த முரளி கிண்ண தொடராரை இலங்கை அணியின் முன்னாள் சுழற்பந்து வீச்சாளர் முத்தையா முரளிதரன் ஏற்பாடு செய்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

_MG_0048.JPG

_MG_0044.JPG

_MG_0038.JPG

_MG_0033.JPG

_MG_0035.JPG

_MG_0030.JPG

http://www.virakesari.lk/article/11562

  • தொடங்கியவர்
முரளி நல்லிணக்க கிண்ண கிரிக்கெட் இன்று ஆரம்பம்
2016-09-21 09:43:06

பாட­சா­லை­களின் 19 வய­துக்­குட்­பட்ட மாண­வர்­களைக் கொண்ட 12 கிரிக்கெட் அணி­களும் 23 வய­துக்­குட்­பட்ட எட்டு பெண்கள் அணி­களும் பங்­கு­பற்றும் முரளி நல்­லி­ணக்க கிண்ண கிரிக்கெட் போட்­டிகள் இன்று ஆரம்­ப­மா­கின்­றன.

 

19392murali-cup.jpg

முரளி நல்­லி­ணக்க கிண்ண கிரிக்கெட் போட்­டி­களில் பங்­கு­பற்றம் அணி­க­ளுக்­கான ரீ ஷேர்ட்­களை அரிமா ஹோல்டிங்ஸ் நிறு­வ­னத்தின் உரி­மை­யாளர் ஆஷான் மல­ல­சே­க­ர­வி­ட­மி­ருந்து முத்­தையா முர­ளி­தரன் பெறு­வ­தையும் தன்வீர் சித்தீக் (ஃபோச்சூன்), ரவி டயஸ் (டோக்­கியோ சிமென்ட்), குஷில் குண­சே­கர (பௌண்­டேஷன் ஒவ் குட்நெஸ் தலைமை தர்­ம­கர்த்தா), மஹேல ஜய­வர்­தன ஆகியோர் நிற்பதையும் படத் தில் காணலாம்.


 

ஐக்­கியம், நல்­லெண்ணம், கூட்டு செயற்­பாடு, நேர்­மைத்­துவம் ஆகி­ய­வற்றை ஊக்­கு­விக்கும் நல்­லி­ணக்க கிரிக்கெட் போட்­டி­யாக இது அமை­கின்­றது. இரு­வகை சர்­வ­தேச கிரிக்கெட் போட்­டி­களில் பந்­து­வீச்சு உலக சாதனை நாய­க­னான முத்­தையா முர­ளி­த­ரனின் காருண்ய அமைப்­பான 'பௌண்­டேஷன் ஒவ் குட்நெஸ் இப்போட்­டி­களை ஐந்­தா­வது தட­வைாக ஏற்­பாடு செய்­துள்­ளது.

 

யாழ்ப்­பாணம், கிளி­நொச்சி, ஒட்­டு­சுட்டான், மாங்­குளம் ஆகிய நக­ரங்­க­ளி­லுள்ள ஐந்து மைதா­னங்­களில் இன்று முதல் ஐந்து தினங்­க­ளுக்கு இப் போட்­டிகள் நடை­பெ­ற­வுள்­ளன.

 

முதல் சுற்றுப் போட்­டிகள் யாவும் 15 ஓவர்­களைக் கொண்­ட­தா­கவும் இறுதிப் போட்­டிகள் 20 ஓவர்­களைக் கொண்­ட­தா­கவும் நடத்­தப்­படும். பெண்கள் பிரிவில் இரண்டு குழுக்­க­ளிலும் முதலாம் இடங்­களைப் பெறும் அணிகள் இறுதிப் போட்­டியில் விளை­யாடத் தகு­தி­பெறும்.

 

ஆண்கள் பிரிவில் நான்கு குழுக்­க­ளிலும் முத­லி­டங்­களைப் பெறும் அணிகள் அரை இறு­தி­ களில் விளை­யாடி அவற்றில் வெற்­றி­பெறும் அணிகள் இறுதிப் போட்­டியில் விளை­யாடும். இறுதிப் போட்­டிகள் கிளி­நொச்சி மத்­திய கல்­லூரி மைதா­னத்தில் எதிர்­வரும் 25ஆம் திகதி நடை­பெறும்.

 

பங்­கு­பற்றும் அணிகள் (ஆண்கள்)
குழு ஏ புனித பத்­தி­ரி­சியார் மைதானம்


யாழ். பாட­சா­லைகள் கூட்டு அணி, கொழும்பு றோயல், சீனி­கம பாட­சா­லைகள் கூட்டு அணி, மலை­யக பாட­சா­லைகள் கூட்டு அணி.


குழு பி யாழ். மத்­திய கல்­லூரி மைதானம்


யாழ். மத்­திய கல்­லூரி, கொழும்பு, புனித சூசை­யப்பர், மரு­தானை ஸாஹிரா, மொன­ரா­கலை பாட­சா­லைகள் கூட்டு அணி.


குழு சி கிளி­நொச்சி மத்­திய கல்­லூரி மைதானம்


கொழும்பு நாலந்த, கிளி­நொச்சி - முல்­லைத்­தீவு பாட­சா­லைகள் கூட்டு அணி, களுத்­துறை மகா வித்­தி­யா­லயம், இரத்­தி­ன­புரி புனித அலோ­ஷியஸ்.


குழு டி முல்­லை­தீவு ஐ ஓ டி ஆர் ஓவல் மைதானம்


திரு­கோ­ண­மலை மட்­டக்­க­ளப்பு பாட­சா­லைகள் கூட்டு அணி, காலி மஹிந்த, மன்னார் -வவு­னியா பாட­சா­லைகள் கூட்டு அணி, கண்டி கிங்ஸ்வூட்.


23 இன் கீழ் பெண்கள் (மாங்­குளம் மைதானம்)


குழு ஏ: நித்­தம்­புவை பெண்கள், சக்தி பெண்கள், பதுளை பெண்கள், வடக்கு - கிழக்கு பெண்கள் கூட்டு அணி.


குழு பி: சீனிகம பெண்கள், மாத்தளை பெண்கள், பொலன் னறுவை பெண்கள், மொனராகலை பெண்கள் கல்வியகம்.

- See more at: http://www.metronews.lk/article.php?category=sports&news=19392#sthash.XqGQhciG.dpuf
  • தொடங்கியவர்

2016 ஆம் ஆண்டுக்கான முரளி கிண்ணம்  கிளிநொச்சியில்  ஆரம்பம் (படங்கள் இணைப்பு)

Published by Priyatharshan on 2016-09-21 16:41:32

 

(எஸ்.என்.நிபோஜன்)

 

2016 ஆம் ஆண்டுக்கான முரளி கிண்ணம் கிரிகெட் சுற்றுப் போட்டிகள் இன்று கிளிநொச்சியில்  ஆரம்பமாகியது.

unnamed-_19_.jpg

வருந்தோறும் நடைபெற்று வருகின்ற முரளி கிண்ணம்  கடினப்பந்து கிரிகெட் சுற்றுப் போட்டி 2016 ஆம் ஆண்டுக்கான  போட்டி  இன்றைய தினம் இலங்கை கிரிகெட் அணியின்  முன்னாள் தலைவரும் விக்கெட் காப்பாளருமான குமார் சங்கக்கார, விசேட அதிதியாக கலந்துகொண்டு ஆரம்ப நிகழ்வை ஆரம்பித்து வைத்தார்.

unnamed-_14_.jpg

இன்று காலை   ஒன்பது  மணிக்கு கிளிநொச்சி மத்திய கல்லூரி மைதானத்தில்   இலங்கை கிரிகெட் அணியின்  முன்னாள் தலைவரும் விக்கெட் காப்பாளருமான குமார் சங்கக்கார விசேட அதிதியாக கலந்துகொண்டு  நாலந்தா கல்லூரி அணிக்கும் கிளிநொச்சி முல்லைத்தீவு ஒருங்கிணைந்த  அணிக்குமான  முதலாவது தொடரினை  ஆரம்பித்து வைத்தார்.

unnamed-_15_.jpg

நாணயச்  சுழற்சியில் வெற்றிபெற்ற  நலந்தா  கல்லூரி அணியினர் துடுப்பாட்டத்தினை  தெரிவு செய்து துடுப்பெடுத்தாடி வருகின்றனர்.

unnamed-_16_.jpg

 

குறித்த  முரளிக் கிண்ணத்  தொடரின்  போட்டிகள் ஒட்டுசுட்டான், மாங்குளம் போன்ற இடங்களிலும்  நடைபெறுகின்றன.

unnamed-_17_.jpg

இப்போட்டியில் 23 அணிகள் மோதவுள்ளன.   இதில் மாங்குளம் மைதானத்தில் மட்டும்   பெண்களுக்கான   முரளிக் கிண்ணத்  தொடரின்  போட்டிகள் நடைபெறுகின்றமை குறிப்பிடத்தக்கது.

unnamed-_18_.jpg

unnamed-_20_.jpg

unnamed-_21_.jpg

unnamed-_22_.jpg

unnamed-_23_.jpg

unnamed-_24_.jpg

unnamed-_25_.jpg

unnamed-_26_.jpg

unnamed-_27_.jpg

unnamed-_28_.jpg

unnamed-_29_.jpg

unnamed-_30_.jpg

http://www.virakesari.lk/article/11603

  • தொடங்கியவர்

14322502_10154636022000962_7724367023054

14362591_10154636022085962_5955682359058

14352095_10154636022505962_1805409495754

14372303_10154636022675962_2130036479026

14424777_10154636022755962_3399164538104

14379894_10154636023025962_4054551119317

14354999_10154636023035962_6413818158643

14379685_10154636023220962_8687427329089

14352430_10154636023430962_5676634319637

14352252_10154636023485962_4968495250628

14409628_10154636023640962_7701038680390

Jaffna Combine Schools 81 (16.1/20 ov)
Royal College 85/2 (12.5/20 ov)
Royal College won by 8 wickets (with 43 balls remaining)

St. Joseph's College 187/2 (20 ov)
Jaffna Central College 155/7 (20 ov)
St. Joseph's College won by 32 runs

படங்கள். முகநூல் sangakkara

Edited by நவீனன்

  • தொடங்கியவர்
முரளி நல்லிணக்க கிண்ண கிரிக்கெட் ஆரம்பம்; சீனிகம பாடசாலை வீரர் மிலான் அதிரடி சதம்
2016-09-22 11:12:00

முரளி நல்லிணக்க கிண்ண கிரிக்கெட் போட்டிகளின் சம்பிரதாயபூர்வ ஆரம்ப விழா, இலங்கையின் முன்னாள் கிரிக்கெட் அணித் தலைவர் குமார் சங்கக்கார தலைமையில் கிளிநொச்சியில் நேற்று முன்தினம் நடைபெற்றது.

 

1942815.jpg

 

 

இந்த நிகழ்வில் பாடசாலை வீரர்களைக் கொண்ட 19 வயதுக்குட் பட்ட 16 அணிகளும் 23 வயதுக்குட்பட்ட 8 மகளிர் அணிகளும் பங்குபற்றின.

 

வடக்கு, கிழக்கு மாகா ணங்களில் உள்ள இளம் கிரிக்கெட் வீரர்களின் ஆற்றல்களை வெளிக் கொணர்வதே இந்தப் போட்டி நடத்தப்படுவதன் முக்கிய நோக்கம் என குமார் சங்கக்கார தெரிவித்தார்.

 

ஆரம்ப விழா சிறப்பாக நடந்தேறியதைத் தொடர்ந்து நேற்று முதல் முரளி கிண்ண கிரிக்கெட் போட்டிகள் நடைபெற்று வருகின்றன. ஆரம்ப தினத்தன்று மலையக பாடசாலைகள் கூட்டு அணி க்கு எதிரான போட்டியில் சீனிகம பாடசாலைகள் கூட்டு அணி பாரிய வெற்றி ஒன்றைச் சம்பாதித்தது.

 

இப் போட்டியில் சீனிகம பாடசாலைகள் வீரர் ஆர். பி. சி. மிலான் ஆட்டமிழக்காமல் 104 ஓட்டங்களைப் பெற்றார்.

 

இவ் வருட முரளி நல்லிணக்க கிரிக்கெட் போட்டியில் பதி வான முதலாவது சதம் இதுவாகும். மிலான் 53 பந்துக ளில் 5 சிக்சர்கள், 10 பவுண்ட்றிகள் அடங்கலாக 104 ஓட் டங்களை ஆட்டமிழக்காமல் பெற்றார்.

 

இப்போட்டியில் சீனிகம 20 ஓவர்களில் 2 விக்கெட்களை மாத்திரம் இழந்து 213 ஓட்டங்களைக் குவித்தது. மலையக அணி 20 ஓவர்களில் 5 விக்கெட்களை இழந்து 111 ஓட்டங் களை மாத்திரமே பெற்றது.

 

சில போட்டி முடிவுகள்:
புனித ஜோசப் எதிர் யாழ். மத்திய கல்லூரி. புனித ஜோசப் 32 ஓட்டங்களால் வெற்றி.

 

நாலந்த எதிர் கிளிநொச்சி, முல்லைத்தீவு பாடசாலைகள் கூட்டு அணி. நாலந்த 56 ஓட்டங்களால் வெற்றி.

 

கிங்ஸ்வூட் எதிர் மன்னார், வவுனியா பாடசாலைகள் கூட்டு அணி. கிங்ஸ்வூட் 65 ஓட்டங்களால் வெற்றி.

 

- See more at: http://www.metronews.lk/article.php?category=sports&news=19428#sthash.I0dtnZPO.dpuf
  • தொடங்கியவர்

முரளி கிண்ண இருபதுக்கு20 தொடர் இறுதி போட்டி நாளை மறுதினம்

 

முரளி கிண்ண கிரிக்கட் சுற்றுப் போட்டிகள் கிளிநொச்சி, யாழ்ப்பாணம், ஒட்டுசுட்டான், மாங்குளம் ஆகிய இடங்களில் இடம்பெற்று வருகிறது.

கிளிநொச்சி மத்திய கல்லூரி மைதானத்தில்  இன்று காலை  ஒன்பது  மணிக்கு ஆரம்பமானது. இலங்கை கிரிக்கட் அணியின்  முன்னாள் தலைவரும் வீரருமான மஹேல ஜெயவர்த்தன அவர்கள் விசேட அதிதியாக கலந்துகொண்டு போட்டியினை ஆரம்பித்து வைத்தார். 

_MG_0261.JPG

முதலாவது போட்டியானது நாலந்தா  கல்லூரி அணி முதலில் துடுப்பாட்டத்தினைத்  தெரிவு செய்து குறித்த தொடர் 20 ஓவரில் ஐந்து விக்கட்டுக்களை இழந்து 175 ஓட்டங்களை பெற்றது. 

பதிலுக்கு துடுப்பெடுத்தாடிய இரத்தினபுரி சென்ட் அலோசியஸ் கல்லூரி அணி 20 ஓவரில் 7 விக்கட்டுக்களை இழந்து 102 ஓட்டங்களை பெற்றதினால் கொழும்பு நாலந்தா  கல்லூரி அணி 73 ஓட்டங்களினால் வெற்றியை தனதாக்கி கொண்டது.

_MG_0233.JPG

தொடர்ந்து மாலை இடம்பெற்ற போட்டியில் களுத்துறை மகாவித்தியாலய அணி முதலில் துடுப்பெடுத்தாடி 20 ஓவரில் 7 விக்கட்டுக்களை இழந்து 140 ஓட்டங்களை பெற்றது. 

தொடர்ந்து கிளிநொச்சி முல்லைத்தீவு ஒருங்கிணைந்த அணி பதிலுக்கு துடுப்பெடுத்தாடியது 18.2 ஓவரில் அனைத்து விக்கட்டுக்களையும் இழந்து 116 ஓட்டங்களை மட்டும் மாத்திரமே பெற்றது.

_MG_0197__1_.JPG

களுத்துறை மகாவித்தியாலய அணி 24 ஓட்டங்களினால் வெற்றியை தனதாக்கி கொண்டது.நாளை முல்லைத்தீவு ஒட்டுசுட்டான் மைதானத்தில் அரையிறுதி  நடைபெற  உள்ளமை  குறிப்பிடத்தக்கது.

_MG_0168.JPG

http://www.virakesari.lk/article/11697

  • தொடங்கியவர்

 

  முரளி கிண்ண கிரிக்கட் சுற்றுப் போட்டிகள் கிளிநொச்சி, யாழ்ப்பாணம், ஒட்டுசுட்டான், மாங்குளம் ஆகிய இடங்களில் இடம்பெற்று வருகிறது.

14425297_1212489115491318_70254793434914

14434961_1212483908825172_86511197947772

14379906_1212488232158073_20522282908046

14434830_1212489915491238_23198879205909

14425353_1211629025577327_32788204217446

14379931_1211629032243993_73180457082257

14444639_1211629228910640_12110025078407

14435066_1211629268910636_18298568794927

  • தொடங்கியவர்
ஐந்­தா­வது முரளி நல்­லி­ணக்க கிண்ண இரு­பது 20 கிரிக்கெட்: காலி மஹிந்­த, நிட்டம்­புவை மகளிர் அணிகள் சம்­பி­ய­னா­கின
2016-09-27 10:35:58

பலம்­வாய்ந்­ததும் சம்­பி­ய­னா­கக்­கூ­டி­யதும் என அனு­மா­னிக்­கப்­பட்­டி­ருந்த நாலந்த கல்­லூரி அணியை இறுதிப் போட்­டியில் முற்­றிலும் எதிர்­பா­ரா­த­வி­த­மாக வெற்­றி­கொண்ட காலி மஹிந்த கல்­லூரி அணி முதல் தட­வை­யாக முரளி நல்­லி­ணக்க கிண்­ணத்தை சுவீ­க­ரித்­தது.

 

19528Ladies-winners---Nittabuwa-Ladies.j

 

வடக்கு மாகா­ணத்தில் ஐந்து இடங்­களில் 19 வய­துக்­குட்­பட்ட 16 பாட­சாலை அணி­க­ளுக்கும் 23 வய­துக்­குட்­பட்ட 8 மகளிர் அணி­க­ளுக்கும் இடை­யி­லான முரளி நல்­லி­ணக்க கிண்­ணத்­திற்­கான இறுதிப் போட்­டிகள் கிளி­நொச்சி மத்­திய மகா வித்­தி­யா­லய மைதா­னத்தில் நேற்­று­முன்­தினம் நடை­பெற்­றன.

 

19 வய­துக்­குட்­பட்ட ஆண்­க­ளுக்­கான இறுதிப் போட்­டியில் நாலந்த அணியை எதிர்த்­தா­டிய மஹிந்த அணி 8 விக்­கெட்­களால் வெற்­றி­கொண்டு சம்­பி­ய­னா­னது.

 

அணித் தலைவர் ரவிந்து வெலி­ஹிந்­த, நிப்புன் மாலிங்க ஆகிய இரு­வரும் பிரிக்­கப்­ப­டாத மூன்­றா­வது விக்­கெட்டில் 70 பந்­து­களில் 81 ஓட்­டங்­களைப் பகிர்ந்து தமது அணி சம்­பி­ய­னா­வதை உறுதி செய்­தனர். 

 

இப் போட்­டியில் முதலில் துடுப்­பெ­டுத்­தா­டிய நாலந்த அணி 20 ஓவர்­களில் 9 விக்­கெட்­களை இழந்து 117 ஓட்­டங்­களைப் பெற்­றது. கசுன் சந்­த­ருவன் (33), தசுன் சென­வி­ரத்ன (28), சச்­சின்த சுப­சிங்க (22) ஆகிய மூவரும் துடுப்­பாட்­டத்தில் ஓர­ளவு பிர­கா­சித்­தனர்.

 

மஹிந்த பந்­து­வீச்சில் ரேஷான் கவிந்து 17 ஓட்­டங்­க­ளுக்கு 3 விக்­கெட்­க­ளையும் கன்­கா­னம்கே கவீன் 27 ஓட்­டங்­க­ளுக்கு 2 விக்­கெட்­க­ளையும் கைப்­பற்­றினர்.

 

பதி­லுக்கு துடுப்­பெ­டுத்­தா­டிய மஹிந்த அணி 16.4 ஓவர்­களில் 2 விக்­கட்­களை மாத்­திரம் இழந்து 120 ஓட்­டங்­களைப் பெற்று அபார வெற்­றி­யீட்டி முரளி நல்­லி­ணக்க கிண்­ணத்தை சுவீ­க­ரித்­தது.

 

19528Boys-winners--Mahinda-College.jpg

 

வெலி­ஹிந்த 49 ஓட்­டங்­க­ளு­டனும் மாலிங்க 30 ஓட்­டங்­க­ளு­டனும் ஆட்­ட­மி­ழக்­கா­தி­ருந்­தனர். இறுதி ஆட்­ட­நா­யகன் மற்றும் தொடர்­நா­யகன் விரு­து­களை வெலி­ஹிந்த வென்­றெ­டுத்தார். 

 

மகளிர் கிரிக்கெட்
மகளிர் பிரிவில் மாத்­தளை மகளிர் அணியை 6 விக்கெட்­களால் வெற்­றி­கொண்ட நிட்டம்­புவை மகளிர் அணி சம்­பி­ய­னா­னது. 

 

இப் போட்­டியில் மாத்­தளை மகளிர் அணி 17.1 ஓவர்­களில் சகல விக்கெட்களையும் இழந்து 84 ஓட்டங்களை மாத்திரமே பெற்றது.

 

பதிலுக்கு துடுப்பெடுத்தாடிய நிட்டம்புவை மகளிர் அணி 15.3 ஓவர்களில் 4 விக்கெட்களை இழந்து 85 ஓட்டங்களைப் பெற்று முரளி நல்லிணக்க கிண்ணத்தை சுவீகரித்தது.

- See more at: http://www.metronews.lk/article.php?category=sports&news=19528#sthash.OBM1ExsI.dpuf

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.