Skip to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

கெஹலிய ரம்புக்வெல்லவின் புதல்வர் கைது

Featured Replies

கெஹலிய ரம்புக்வெல்லவின் புதல்வர் கைது

 

கெஹலிய ரம்புக்வெல்லவின் புதல்வர் கைது

 

முன்னாள் ஊடக அமைச்சர் கெஹலிய ரம்புக்வெல்லவின் புதல்வர் ரம்மித் ரம்புக்வெல்ல வாகன விபத்து ஒன்று தொடர்பில் கைது செய்யப்பட்டுள்ளார்.


கொழும்பு சுதந்திர சதுக்கத்திற்கு அருகாமையில் ரம்மித் கைது செய்யப்பட்டதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர். குடி போதையில் வாகனத்தை செலுத்தியதாக குற்றம் சுமத்தப்பட்டுள்ளது. ரம்மித் இலங்கை கிரிக்கட் அணியின் வீரர் என்பது குறிப்பிடத்தக்கது.
 

http://globaltamilnews.net/GTMNEditorial/tabid/71/articleType/ArticleView/articleId/136215/language/ta-IN/article.aspx

  • தொடங்கியவர்
விருந்தென்றால் மது அருந்தத்தான் வேண்டுமாம்-கூறுகிறார் ரம்புக்வெல
 
 
விருந்தென்றால் மது அருந்தத்தான் வேண்டுமாம்-கூறுகிறார் ரம்புக்வெல
மகன் ரம்மித் ரம்புக்வெல்ல குடி போதையில் வாகனம் செலுத்தியதனை முன்னாள் ஊடக அமைச்சர் கெஹலிய ரம்புக்வெல்ல நியாயப்படுத்தியுள்ளார்.
 
ரம்மித் ரம்புக்வெல்ல வாகன விபத்து ஒன்றை மேற்கொண்ட சம்பவம் தொடர்பில் கொழும்பு ஊடகமொன்று கெஹலியவிடம் கேட்ட போது இதனைத் தெரிவித்துள்ளார்.அவர் இது தொடர்பாக  கூறுகையில்,
 
விருந்துபசாரமொன்றுக்கு சென்றால் மதுபானம் அருந்த நேரிடும்.இந்த விபத்து அவ்வளவு பெரிய ஓர் விடயமல்ல.
 
கொழும்பு கறுவாத்தோட்டம் புனித பிரிஜ்ட் மகளிர் பாடசாலை எதிரில் மகன் ரம்மித் செலுத்திய வாகனம் விபத்துக்குள்ளானது.
 
இந்த விபத்தில் எவருக்கும் காயங்கள் ஏற்படவில்லை.யாருக்கும் பெரிய நட்டம் ஏற்படவும் இல்லை.மதில் சுவருக்கு அவ்வளவு பெரிய பாதிப்பு ஏற்படவும் இல்லை.எமக்கே நட்டம் ஏற்பட்டுள்ளது.
 
விருந்துபசாரமொன்றுக்கு சென்றால் மது அருந்தப்படும். அருந்தாமல் வரும் சந்தர்ப்பங்களும் உண்டு.எனக்கு என்றால் இந்த விபத்து மிகப் பெரிய ஓர் விடயமல்ல என முன்னாள் ஊடக அமைச்சர் கெஹலிய ரம்புக்வெல்ல தெரிவித்துள்ளார்.
 
குடிபோதையில் வாகனம் செலுத்தி விபத்து மேற்கொண்டமை தொடர்பில் ரம்மித் ரம்புக்வெல்லவை பொலிஸார் கைது செய்து பின்னர் பிணையில் விடுதலை செய்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

http://onlineuthayan.com/news/17971

மது போதையில் வாகனம் செலுத்தியமை பெரிய ஓர் குற்றமல்ல – கெஹலிய ரம்புக்வெல்ல
 
மது போதையில் வாகனம் செலுத்தியமை பெரிய ஓர் குற்றமல்ல என முன்னாள் ஊடக அமைச்சர் கெஹலிய ரம்புக்வெல்ல தெரிவித்துள்ளார்.


இலங்கை தேசிய கிரிக்கட் அணியின் வீரரும் கெஹலிய ரம்புக்வெல்லவின் புதல்வருமான ரம்மித் ரம்புக்வெல்ல மது போதையில் வாகனத்தைச் செலுத்தியதாக குற்றம் சுமத்தப்பட்டு கைது செய்யப்பட்டு பின்னர் பிணையில் விடுதலை செய்யப்பட்டார்.


இந்த விபத்துச் சம்பவம் தொடர்பில் கெஹலிய இவ்வாறான ஒர் கருத்தை வெளியிட்டுள்ளார். கொழும்பு சுதந்திர சதுக்கத்திற்கு அருகாமையில் இந்த விபத்து இடம்பெற்றிருந்தது.


விருந்துபசாரமொன்றில் பங்கேற்றால் மது அருந்துவது வழமையானதேயாகும் என குறிப்பிட்டுள்ள அவர் இந்த விபத்தினால் எவருக்கும் காயங்கள் ஏற்படவில்லை எனவும் மதில் ஒன்றுக்கு சிறு சேதம் ஏற்பட்டுள்ளது எனவும் வாகனத்திற்கே அதிகளவு சேதம் ஏற்பட்டுள்ளது எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.


இலங்கை கிரிக்கட் சுற்றுப் பயணமொன்று மேற்கொண்டு நாடு திரும்பும் போது நடு வானில் விமான கதவை திறக்க முயற்சித்தமை, கொழும்பு நட்சத்திர ஹோட்டல் ஒன்றில் குடிபோதையில் ஒருவரை தாக்கியமை உள்ளிட்ட குற்றச்சாட்டுக்கள் ஏற்கனவே ரம்மித் ரம்புக்வெல்ல மீது சுமத்தப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

 

http://globaltamilnews.net/GTMNEditorial/tabid/71/articleType/ArticleView/articleId/136256/language/ta-IN/article.aspx

சிங்கள-பௌத்த பயங்கரவாதிகள் செய்யும் பஞ்சமாபாதகங்களும் சிங்கள-பௌத்த நீதித்துறை பயங்கரவாதிகளின் கண்களில் கூட குற்றங்கள் இல்லை என்பதை நாம் அறிவோம்.

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.