January 24, 200719 yr வடபோர்முனை, வாகரை களமுனைப்பகுதிகளில் சிறீலங்கா படைகளுடன் இடம்பெற்ற மோதலில் நான்கு போராளிகள் களப்பலியாகியுள்ளார்கள் கடந்த ஞாயிற்றுக்கிழமை வடபோர்முனை கிளாலி களமுனையில் சிறீலங்கா படைகளுடன் நிகழ்ந்த மோதலில் அம்பாவை மாவட்டத்தை சேர்ந்த லெப்ரினட் கீதவாணன் என்றழைக்கப்படும் குவேந்திரராசா தயானந்தன், யாழ்மாவட்டத்தை சேர்ந்த வீரவேங்கை அருளன் என்றழைக்கப்படும் டேவிட் பிரேம்குமார் ஆகியோர் வீரச்சாவடைந்துள்ளனர். அதேநாளன்று முகமாலை களமுனையில் சிறீலங்கா படைகளுடன் இடம்பெற்றமோதலில், முல்லைத்தீவு மாவட்டத்தை சேர்ந்த வீரவேங்கை கானகன் அல்லது அறிவுமதி என்றழைக்கப்படும் பாலகிருஷ்ணன் நவரதன் என்ற போராளி வீரச்சாவடைந்துள்ளார். கடந்த வெள்ளிக்கிழமை வாகரை களமுனையில் சிறீலங்கா படைகளுடன் நிகழ்ந்த மோதலில் யாழ்மாவட்டத்தை சேர்ந்த கப்டன் கதர்தேவன் என்றழைக்படும் சூசைநாயகம் தேவநாயகம் என்ற போராளி வீரச்சாவடைந்துள்ளார் http://www.pathivu.com/index.php?subaction...amp;ucat=1&
Archived
This topic is now archived and is closed to further replies.