Skip to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

பயங்கரவாத பட்டியலில் சேர்த்தமையே சாதனை

Featured Replies

பயங்­க­ர­வாத பட்­டி­யலில் சேர்­த்த­மையே சாத­னை
தமிழர் விடு­தலைக் கூட்­ட­ணியின் செய­லாளர் வீ. ஆனந்த சங்­கரி எதிர்க்­கட்சித் தலைவர் இரா. சம்­பந்­த­னுக்கு கடி­தம்
showImageInStory?imageid=298688:tn
 
showImageInStory?imageid=298689:tn
 

கடந்த மாதம் 19ஆம் திகதி உங்­க­ளுக்கு வரிசைக் கிர­ம­மாக இரண்­டா­வது கடி­தத்தை எழு­தி­ய ­போது மூன்­றா­வது கடி­தத்­தையும் இவ்­வ­ளவு சீக்­கி­ர­மாக எழு­த ­வேண்­டி ­வ­ரு­மென நான் எண்­ண­வில்லை.

நீங்கள் உட்­பட அக்­க­டி­தத்தை வாசிப்­ப­வர்கள் கன­டாவின் ஒட்­டாவா சமஷ்டி நீதி­மன்­றத்தில் கடந்த ஆகஸ்ட் 25ஆம் திகதி இலங்­கையர் ஒரு­வ­ரு­க்கு அர­சியல் புக­லிடக் கோரிக்கை அந்­நாட்டு குடி­வ­ரவு இலா­காவால் நிரா­க­ரிக்­கப்­பட்டு மேன் மு­றை­யீடு செய்­யப்­பட்ட மேல்­நீ­தி­மன்ற விசா­ர­ணையில் அவ­ரது விண்­ணப்­பத்தை நிரா­க­ரித்த நீதி­பதி பிரவுண் அவர்­களின் தீர்ப்பை உள்ளூர் பத்­தி­ரி­கை­களில் படித்­து­விட்டு இதனை எழு­தி­ய­தாக நினைத்­தி­ருப்­பீர்கள். இக்­க­டி­தத்­தைத் தான் அத் தீர்ப்பை படித்­து­விட்டு எழு­து­கிறேன். தமிழ்த் தேசியக் கூட்­ட­மைப்­போடு இணைந்த உங்­க­ளு­டைய பல நட­வ­டிக்­கைகள் நீங்கள் ஒரு சிறந்த அர­சி­யல்­வா­தி­யென நல்­ல­தொரு பெயரை முன்பு பெற்­றி­ருக்­கக்­ கூடும்.

அந்த உற்­சா­கத்தில் செயற்­பட்ட நீங்கள் பல்­வேறு நாடு­களில் அர­சியல் புக­லிடம் கோரி வாழும் தமிழ் மக்­க­ளுக்கு பெரும் இடைஞ்­சலை ஏற்­ப­டுத்­தி­யுள்­ளீர்கள். இனப்­பி­ரச்­சினை சம்­பந்­த­மாக தமிழ்த் தேசியக் கூட்­ட­மைப்பை முறை­யற்ற வகையில் உப­யோ­கித்­த­மை­யா­னது ஒரு நாள் உங்­களை திரும்­பி ­வந்து கடு­மை­யாக தாக்­கக் ­கூடும் என்று நீங்கள் உண­ர­வில்லை.

நீதி­மன்­றத்தின் தீர்ப்பு உங்­களை அதேபோல் தமி­ழ­ரசுக் கட்­சி­யையும், தமிழ்த் தேசியக் கூட்­ட­மைப்பும் விடு­தலைப்புலி­க­ளா­கிய பயங்­க­ர­வாத அமைப்பு ஒன்­றுக்கு ஆத­ரவு வழங்­கி­ய­தாக அத் தீர்ப்பு கூறு­கின்­றது என்­பதை இன்­றைக்­கா­வது உண­ரு­கின்­றீர்­களா. அப்­படி நான் கூற­வில்லை. நீதி­மன்­றமே கூறி­யுள்­ளது. உங்­களை தலை­வ­ராக ஏற்று தமி­ழ­ரசு கட்­சி­யையும், தமிழ்த் தேசியக் கூட்­ட­மைப்­பையும் ஆத­ரித்து வந்­த­­தாக அகதி அந்­தஸ்து கோரி­யவர் கூறி­யதை கார­ண­மாகக் காட்­டியே நீதி­ப­தியின் தீர்ப்பு அமைந்­துள்­ளது. இது சம்­பந்­த­மாக நான் மேலும் ஆராய விரும்­ப­வில்லை.

நீங்கள் ஒரு முதிர்ந்த சட்­டத்­த­ர­ணி­யாக இருப்­பதால் இந்தத் தீர்ப்பு உலகின் பல்­வேறு பகு­தி­களை சென்­ற­டை­யும்­போது பல்­வேறு விட­யங்­களில் எத்­த­கைய தாக்­கத்தை இந்தத் தீர்ப்பு ஏற்­ப­டுத்தும் என்­பதை அறிந்­தி­ருக்க வேண்டும். உள்­ளூரில் இத் தீர்ப்பு பெரி­ய­ளவில் அறி­ய­வரும் போது உங்கள் ஆத­ர­வுடன் உரு­வா­கிய தேசிய அர­சாங்கம் என்று நீங்கள் தம்­பட்டம் அடிக்­கின்ற அந்த அர­சுக்கு என்ன நடக்கும் என்­பது அந்த கட­வு­ளுக்­குத் தான் தெரியும். சம்­பந்தன் அவர்­களே, எதிர்­கா­லத்தில் என்ன நடக்­கப் ­போ­கின்­றது என்று முன்­கூட்­டியே அறியும் அள­விற்கு நானொரு தீர்க்­க­த­ரிசி அல்ல.

ஆனால் ஒரு அமைப்பை பற்­றியும் அதன் செயற்­பா­டு­களை பற்­றியும் நன்கு அறிந்­த­வர்­க­ளுக்கு எதிர்­கா­லத்தில் என்ன நடக்கும் என்­பதை ஊகித்து அறிய அவர்­க­ளி­ட­முள்ள பொது­அ­றிவு போதும். ஒன்றும் அறி­யாத ஒரு அப்­பா­வி­ கூட கால­வோட்­டத்தில் என்ன நடக்கும் என்­பதை முன்­கூட்­டியே அறிந்­து­கொள்வார்.

ஆனால் மிகவும் வருத்­தத்­துக்­கு­ரிய விடயம் என்­ன­வெனில் ஓர் அனு­ப­வ­மிக்க அர­சி­யல்­வா­தி­யா­கவும், முதிர்ந்த சட்­டத்­த­ர­ணி­யா­கவும் இருந்­து­ கொண்டு எதிர்­கா­லத்தில் தமிழ் சமூ­கத்­துக்கு என்ன நடக்கும் என்­ப­தனை முன்­கூட்­டியே அறி­யாது பொறுப்­பற்ற வகையில் தமிழ் சமூ­கத்தை பயங்­க­ர­வா­திகள் என்று முத்­திரை குத்­தக்­ கூ­டிய வகையில் ஒரு சிறந்த அதி­காரம் பெற்­ற­வ­ருக்கு உத­வி­யி­ருக்­கின்­றீர்கள்.

தமிழ்த் தேசியக் கூட்­ட­மைப்பு உரு­வாக்­கப்­பட்­ட­ போது மிக அவ­தா­ன­மாக தெரிவு செய்­யப்­பட்ட நான்கு அர­சியல் கட்­சி­களை ஆறு சிறந்த தமிழ் முக்­கி­யஸ்­தர்கள் இணைந்து உரு­வாக்­கினர். 2001ஆம் ஆண்டு இடம்­பெற்ற பாரா­ளு­மன்றத் தேர்­தலில் தமிழ்த் தேசியக் கூட்­ட­மைப்பு ஈட்­டிய வெற்றி மிகப் ­பி­ர­தா­ன­மா­ன­தாகும்.

நான்­ கூட 36,000 வாக்­கு­களைப் பெற்று பல்­வேறு கட்­சி­க­ளாலும் தெரிவு செய்­யப்­பட்ட ஒன்­பது பேரில் முத­லா­வ­தாக நான் தெரிவு செய்­யப்­பட்டேன். தமி­ழ­ரசுக் கட்­சியின் ஸ்தாபகர் எஸ்.ஜே.வி. செல்­வ­நா­யகம் அரச வழக்­க­றிஞர் 1972ஆம் ஆண்டு தமிழர் விடு­தலைக் கூட்­ட­ணியை ஸ்தாபித்து விட்டு தன்னால் உரு­வாக்­கப்­பட்ட தமி­ழ­ரசுக் கட்­சியை முடக்கி வைத்­தி­ருந்தார்.

அதனை மீள இயங்க வைக்க அவர் என்றும் எண்­ணாமல் இருந்­த­ போதும் அவர் இறந்து 26 ஆண்­டு­க­ளுக்குப் பின் பதவி ஆசை பிடித்த ஒருவர் அதனை புதுப்­பித்து தமிழர் விடு­தலைக் கூட்­டணித் தலை­வரை, அன்று என்னால் வகிக்­கப்­பட்ட தலைவர் பத­வியை உங்­களின் உத­வி­யுடன் எது­வித நியா­ய­மான காரணம் எது­வு­மின்றி வன்­னியில் உள்ள ஒரு­வ­ரு­டைய உத்­த­ரவின் பேரில் பதவி நீக்கம் செய்ய நட­வ­டிக்கை மேற்­கொண்டார். இது பத­வியை மோசடி மூலம் கைப்­பற்ற மேற்­கொண்ட முயற்­சி­யென்­பதை நீங்கள் நன்கு அறிந்­தி­ருந்­தீர்கள்.

தமி­ழ­ரசுக் கட்­சியை புதுப்­பிக்க அதன் ஸ்தாபகர் என்றும் விரும்­பி­ய­தில்லை. தமி­ழ­ரசுக் கட்­சியின் ஆரம்­ப­கால உறுப்­பி­ன­ரா­கவும், தமிழர் விடு­தலைக் கூட்­ட­ணியின் செய­லாளர் நாய­க­மா­கவும் செயற்­பட்ட அ.அமிர்­த­லிங்கம் அவர்­களும் அவ்­வாறு என்றும் விரும்­பி­ய­தில்லை. அவரின் மனைவி மங்­கை­யற்­க­ரசி அம்­மையார் இந்த நட­வ­டிக்­கையை வன்­மை­யாக கண்­டித்­த­துடன் இது­வொரு படு­பா­தக செய­லெ­னவும், எமது பெருந்­த­லை­வர்­களை அவ­ம­திப்­ப­தா­கவும் கண்­டித்­தி­ருந்தார்.

சம்­பந்தன் அவர்­களே செல்­வ­நா­யகம் அவர்­களால் உரு­வாக்­கப்­பட்ட தமி­ழ­ரசுக் கட்­சியில் நீங்கள் ஒரு­போதும் அங்­கத்­த­வ­ராக இருக்­க­வில்லை என்­பதை நான் உங்­க­ளுக்கு ஞாப­க­மூட்ட வேண்­டுமா? நீங்கள் மோசடி மூலம் மாவை சேனா­தி­ராஜா அவர்­களால் மீள் உரு­வாக்­கப்­பட்ட தமி­ழ­ரசுக் கட்­சியில் தலை­வ­ராக நிய­மிக்­கப்­பட்­டி­ருந்­தீர்கள். தயவு செய்து இதனை ஒத்­துக்­கொள்­ளுங்கள்.

இது சம்­பந்­த­மாக நான் மேலும் இது­பற்றிக் கூற விரும்­ப­வில்லை. முழு நாடும் மற்றும் பல்­வேறு நாடு­களில் வாழ்­கின்ற நம்­ம­வர்­களும் இவர்கள் எடுத்த முயற்­சிகள் அத்­த­னையும் தமிழர் விடு­தலைக் கூட்­டணி பத­வி­யி­லி­ருந்து நீக்­கு­வது முக்­கிய கார­ண­மாக இருந்­தது.

நியா­ய­மான கார­ணங்­களைக் காட்டி கோரிக்கை விடுத்­தி­ருந்தால் நானாக பத­வியை துறப்­ப­தாக கூறி­யி­ருந்தேன். ஆனால் அதற்கு எவரும் முன்­வ­ர­வில்லை. உங்­க­ளு­டை­யதும் மாவை சேனா­தி­ரா­ஜா­வு­டை­ய­து­மான தந்­தி­ரத்தால் என்னை தலைவர் பத­வி­யி­லி­ருந்து நீக்க முடி­ய­வில்லை. ஆனால் ஒரு ஜன­நா­யகக் கட்­சி­யா­கிய தமிழர் விடு­தலைக் கூட்­ட­ணியை சிதைப்­ப­தோடு என்­னையும் எனது அணி­யி­ன­ரையும் தேர்­தலில் முற்று முழு­தாக தோற்­க­டித்­தீர்கள். உங்கள் இருவரினதும் மிகப்பெரும் சாதனை யாதெனில் முற்று முழுதாக அகிம்சையை கொள்கையாகக் கொண்டு இயங்கிய தமிழரசுக் கட்சி, தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு ஆகிய இரண்டினையும் பயங்கரவாத இயக்கங்களுடைய பட்டியலில் சேர்த்து வைத்தமையே.

இறுதியாக, நானொரு தீர்க்கதரிசி அல்ல. எனது கடைசி கடிதத்தில் தீர்க்க தரிசனமாக கூறப்பட்ட வார்த்தைகளை இங்கு தருகின்றேன்.

“நான் உங்களை விழிப்படையச் செய்வது யாதெனில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் வரலாறும் அது சம்பந்தமாக தற்போது ஏற்பட்டுள்ள சில முன்னேற்றங்கள் நீங்கள் கூறுகின்ற நல்லாட்சிக்கு பெரும் பங்கம் ஏற்படும் என்பதே” சில விடயங்களை ஊகித்து அறிவதில் நான் சரியாக செயற்படுகின்றேன் என்பதனை அறிந்து கொள்ளுங்கள்.

http://epaper.virakesari.lk:8080/home/index?editionId=13&editionDate=23/09/2016

  • கருத்துக்கள உறவுகள்

நீங்க இங்க வந்து நம்மட ஆணிய புடுங்க வேண்டாம் ! ! !

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.