Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

சூப்பர் ஸ்டார் ரஜினியை அவரது இல்லத்தில் சந்தித்தார் டோனி.

Featured Replies

சூப்பர் ஸ்டார் ரஜினியை அவரது இல்லத்தில் சந்தித்தார் டோனி. 

 

starசூப்பர் ஸ்டார் ரஜினியை அவரது இல்லத்தில் சந்தித்தார் டோனி.

இந்தியக் கிரிக்கெட் அணியின் தலைவரும், சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் தலைவராக செயல்பட்டு தமிழ்நாட்டு மக்களின் இதயங்களில் இருப்பிடம் கொண்ட டோனி, இன்று சூப்பர் ஸ்டார் ரஜினியை சென்னையில் அவரது இல்லத்தில் சந்தித்தார் .

டோனியின் வாழ்க்கை வரலாறை சித்தரித்து புனையப்பட்டுள்ள ‘MS Dhoni – The Untold Story’ என்ற திரைப்படம்
அடுத்தவாரம் 30 ம் திகதி வெளியாகவுள்ளது.

இந்தப் படத்தின் விரிவாக்கல் நடவடிக்கைக்காக சென்னை சென்ற டோனி,சென்னை சத்யம் திரையரங்கில் இன்று மாலை செய்தியாளர்களை சந்தித்த பின்னர் மேடையில் “என் வழி தனி வழி” என்ற ரஜினியின் வசனத்தைப் பேசிக்காட்டி அசத்தினார்.

இந்த நிகழ்வுக்குப் பின்னர் மரியாதை நிமித்தம் ரஜினியின் வீட்டுக்குச் சென்று அவரைச் சந்தித்துப் பேசினார்.இதன்போது டோனியின் வாழ்க்கைப் படம் குறித்து விசாரித்தறிந்த ரஜினிகாந்த், டோனிக்கு வாழ்த்துக்களையும், ஆசீர்வாதத்தையும் வழங்கினார்.

சென்னை என்னுடைய வாழ்க்கையில் முக்கியமான ஓரிடம், சென்னையில்தான் என்னுடைய கிரிக்கெட் வாழ்க்கையில் முதல் டெஸ்ட் விளையாட்டை தொடங்கினேன். எனக்கு சென்னையை அதிகமாகவே பிடிக்கும்.

நான் சூப்பர் ஸ்டார் ரஜினியின் தீவிரரசிகன். எத்தனையோ முறை சென்னை வந்திருக்கிறேன். ஆனால், இதுவரை அவரை சந்திக்க முடியாமலேயே இருந்தது. இன்று சந்திக்க கிடைத்தமை மகிழ்ச்சி எனவும் டோனி குறிப்பிட்டுள்ளார்.

டோனியின் இந்த வாழ்க்கை வரலாற்றுப் படத்தில் அசல் டோனியாகவே நடித்திருக்கும் சுஷாந்த் சிங் ராஜ்புட் உடனிருந்தார் என்பதும் குறிப்பிடத்தக்கது.

master s1

s2 s3

http://vilaiyattu.com/சூப்பர்-ஸ்டார்-ரஜினியை-அ/

Edited by நவீனன்

  • தொடங்கியவர்

என் வழி ரஜினி வழி... தோனி லக லக லக லக...

IMG_1442.jpg

 

M.S. Dhoni: The Untold Story.

நீரஜ் பாண்டே இயக்கத்தில் சுஷந்த் சிங் ராஜ்புட் நடித்த, மகேந்திர சிங் தோனியின் வாழ்க்கை வரலாறு குறித்த படம். செப்டம்பர் 30ல் தமிழ், இந்தியில் வெளியாக உள்ள இந்த படத்தை விளம்பரப்படுத்தும் நிகழ்ச்சி, சென்னை சத்யம் தியேட்டரில் நடந்தது. ப்ரமோ நிகழ்ச்சிக்கு தோனி வருகிறார் என்றதும் ஹவுஸ் ஃபுல்.

தோனி வருவதற்கு கொஞ்சம் லேட்டானது. உடனே மேடை ஏறி மைக் பிடித்த விஜய் டிவி தொகுப்பாளினி டிடி ‘‘இவ்வளவு நேரம் உங்களை வெயிட் பண்ண வச்சதுக்கு ஸாரி... ஆனா, தோனி எவ்வளவு பெரிய பிளேயர். அவருக்காக காத்திருக்கிறது தப்பே இல்லை’ என தனக்கே உரிய பாணியில் அடித்து நொறுக்கி விட்டு, ‘நம்ம அவரை எப்படி வரவேற்கப் போறோம்...’ என்றதும், ஆடியன்ஸ் ஹோவென கத்தினர். ‘இந்த மாதிரி இல்லைப்பா... தோனி, தோனி, தோனி, தோனி.... இந்த மாதிரி...’ என டிடி எடுத்துக் கொடுக்க, ‘தோனி, தோனி, தோனி, தோனி....’ என, ரசிகர்கள் உடனடியாக பிக் அப் செய்தனர். 

இந்த ரிகர்சல் நடந்து கொண்டிருக்கும்போதே, திடீரென கேமரா வெளிச்சம் மொத்தமாக ஒரு இடத்தில் குவிந்தது. ஆம். சிஎஸ்கே நாயகன் எம்எஸ்டி வந்து விட்டார். கூடவே, இந்த படத்தில் எம்.எஸ்.தோனியாக நடித்த சுஷந்த் சிங் ராஜ்புட்டும். உடனே லைட்ஸ் ஆஃப் பண்ணி, வி.ஐ.பி.களை சீட்டில் அமர வைத்தனர். படத்தின் ட்ரெய்லர் ஓடியது. பின், படத்தில் இடம்பெற்ற பாடலை, எஸ்பிபி சரண் பாட, தமிழ் புரியாவிட்டாலும் தலையாட்டி ரசித்தார் தோனி. ‘பாடல் பிடித்திருந்ததா?’ என டிடி கேட்டதும், ‘அஃப் கோர்ஸ்’ என தோனியிடம் இருந்து பதில் வந்தது.

ஒருவழியாக ப்ரமோ நிகழ்ச்சி தொடங்கியது. ‘எப்படி இருக்கிங்க’ என டிடி கேட்டதுதான் தாமதம், ‘நல்லா இருக்கேன்’ என தோனி அழகு தமிழில் பதில் சொல்ல, கைதட்டல் அடங்க சிறிது நேரம் பிடித்தது. இந்த படம் உருவான விதம் குறித்து கேட்ட கேள்விக்கு ‘ஆரம்பத்தில் இதை நான் பெரிதாக எடுத்துக் கொள்ளவில்லை. ஆரம்பிங்க, பார்க்கலாம் என சொல்லி வைத்தேன். அவர்கள் உடனடியாக வேலையைத் தொடங்கி விட்டனர். அதன்பின் என்னால் பின்வாங்க முடியவில்லை. சுஷந்த் அருமையான நடிகர். இந்த படத்துக்காக கடுமையாக உழைத்திருக்கிறார். ஒன்பது மாதம் கடினமாக பயிற்சி செய்து கிரிக்கெட் ஷாட்களை ஆடி இருக்கிறார். ஸ்கிரீனில் பார்க்கும்போது அந்த ஷாட் நேர்த்தியாக இருக்கிறது. அநேகமாக சுஷந்த் அடுத்த படத்தில் நடிக்கும்போது, இந்த படத்தில் நடித்த சாயல் இல்லாமல் பார்த்துக் கொள்வது சவலாக இருக்கும்’’ என்றார்.

‘உங்களிடம் ஒரு குட்டிப் பொண்ணு ரொம்ப நேரமாக கேள்வி கேட்க காத்திருக்கிறாள்’ என்று சொன்னதும் நடிகர் சூர்யாவின் மகள் தியா, மகன் தேவ் இருவரும் மேடைக்கு வந்தனர். தியா கேட்ட ‘நீங்கள் பள்ளியில் படிக்கும்போது குறும்புத்தனம் செய்தீர்களா? என்ற கேள்விக்கு, ‘‘பொதுவாக குழந்தையாக இருக்கும்போது எல்லோரும் குறும்புத்தனம் செய்வர். ஆனால், நான் அவ்வளவு குறும்பு செய்ததில்லை. சீரியஸாக இருந்தேன். டீச்சர்கள், பெற்றோர்கள் சொன்னதைக் கேட்டேன். நீங்கள் குறும்பு செய்யலாம். அதே நேரத்தில் பெற்றோர் சொல்வதையும் கேட்க வேண்டும்’’ என தோனி சொன்னதை அப்படியே கேட்டுக் கொண்டனர் அந்த சுட்டீஸ். 

அவர்கள் புறப்படும்போது டிடி, ‘இவர்கள் நடிகர் சூர்யாவின் பிள்ளைகள்’ என்றதும், ‘ஓ... அப்படியா’ என்ற தோனி, ‘‘ஒன்று தெரியுமா, நான் உங்க அப்பாவின் தீவிர ரசிகன். சிங்கம் படத்தை இந்தியில் பார்த்தேன். இந்தியை விட தமிழில் வெளியான சிங்கம் படம் நன்றாக இருக்கும் என ஒருவர் சொன்னார். சப் டைட்டிலுடன் சிங்கம் பார்த்தேன்’’ என சூர்யா புராணம் பாடினார் தோனி. 

IMG_1475.jpg



அடுத்து வழக்கம் போல, சென்னை பற்றிய கேள்விக்கு, ‘‘சென்னை ரசிகர்கள் உணர்ச்சிப்பூர்வமானவர்கள். சென்னை எனக்கு இரண்டாவது வீடு போன்றது. சென்னையில்தான் என் முதல் டெஸ்ட் போட்டியை ஆடினேன். சென்னையின் ஸ்பெஷல் பற்றி சொல்ல வேண்டுமானால், இங்கு கிடைக்கும் உணவு ரொம்ப பிடிக்கும். பலரும் ஹைதராபாத் பிரியாணி, கொல்கத்தா பிரியாணி நான்றாக இருக்கும் என்று சொல்வாரகள். ஆனால், எனக்கு சென்னை பிரியாணி பிடிக்கும் கொஞ்சம் ஸ்பைசியாக இருக்கும். அதேநேரத்தில் சுவையாகவும் இருக்கும். ஃபில்டர் காஃபியும் அருமையாக இருக்கும். அதோடு, லெதரில் உற்பத்தி செய்யும் பொருட்கள் நன்றாக இருக்கும்’’ என அடுக்கிக் கொண்டே போனார்.

கடைசியாக, ‘நீங்கள் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தை, சந்திக்க இருப்பதாக பேச்சு அடிபடுகிறதே’ என டிடி எடுத்து விட, ‘’ஆம், இன்று மாலை அவரை சந்திக்க உள்ளேன். எப்போதுமே அவரை சந்திக்க வேண்டும் என்று நினைத்துக் கொண்டே இருப்பேன். ஆனால், அதைப் பற்றி யாரிடமாவது சொல்ல தயக்கமாக இருந்தது. இன்று அவரை சந்திக்க போகிறேன். அதை நினைத்தால் பிரமிப்பாக உள்ளது’’ என்றார் தோனி. 

சூப்பர் ஸ்டார் வசனம் தெரியுமா எனக் கேட்டதும், ‘‘ஆக்சுவலி, ரஜினியின் பழைய வசனம் ஒன்று ரொம்ப பிடிக்கும். அதை சொல்லிக் காட்டுகிறேன். அதை சரியாக செய்யவில்லை எனில், மன்னிக்கவும்...’ என்று சொல்லி விட்டு, எழுந்து நின்று, ‘வசனத்தை சொல்வதற்கு முன் இப்படி செய்ய வேண்டும்’ என கோட்டை இங்கும் அங்கும் காற்றில் ஸ்டைலாக பறக்க விட்டு (ரஜினி செய்வது போல) ‘என் வழி தனி வழி’ என்று சொல்ல, படையப்பா பார்த்த திருப்தியில் ஆர்ப்பரித்தனர் ரசிகர்கள். 

http://www.vikatan.com/cinema/tamil-cinema/news/68765-dhoni-in-chennai-for-ms-dhoni-the-untold-story-movie-promotions.art

  • கருத்துக்கள உறவுகள்

இந்த,  அரிய செய்தியால்....... நாட்டுக்கு, ஏதாவது... நன்மை கிடைக்குமா? 

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
On 23.9.2016 at 10:28 PM, தமிழ் சிறி said:

இந்த,  அரிய செய்தியால்....... நாட்டுக்கு, ஏதாவது... நன்மை கிடைக்குமா? 

தமிழ்நாடே!!! தலைவன் ரஜனி , ரஜனி படம் எண்டால் நாக்கை தொங்கப்போட்டுக்கொண்டு திரியேக்கை இந்த செய்தி அரிய செய்திதான்.
ஒரு  வேளை சோத்துக்கு வழியில்லாட்டாலும்......... அந்த தலைவனுக்காக உயிரையே கொடுக்கக்கூடிய அருமையான பூமி அது.

 

 

  • தொடங்கியவர்

ரஜினியுடன் டோனி திடீர் சந்திப்பு ; நான் சூர்யாவின் தீவிர ரசிகன் ; ரஜினி போன்று நடித்த டோனி (காணொளி இணைப்பு)

 

இந்திய கிரிக்கெட் அணியின் தலைவர் மகேந்திர சிங் டோனி சுப்பர் ஸ்டார் ரஜினிகாந்தை சந்தித்து கலந்துரையாடியுள்ளார். 

fsaf.JPG

இச் சந்திப்பு இடம்பெறுவதற்கு முன் இடம்பெற்ற எம்.எஸ்.தோனி பட விளம்பர விழாவில் படையப்பா பட திரைப்பட வசனத்தை தமிழில் பேசி ரஜினி ரசிகர்களை டோனி மகிழ்வித்திருந்தார்.

hhy.JPG

இந்திரைப்பட விழா நிகழ்வில் நடிகர் சூர்யாவின் இரு பிள்ளைகளையும் சந்தித்து நகைச்சுவையாக பேசிய டோனி, நான் உங்கள் அப்பாவின் தீவிர ரசிகன் எனவும் தெரிவித்துள்ளார்.

 

இந்திய கிரிக்கெட் அணியின் தலைவர் டோனியின் வாழ்க்கை வரலாற்றை அடிப்படையாகக் கொண்டு “எம்.எஸ்.டோனி தி அன்டோல்ட் ஸ்டோரி” என்கிற திரைப்படம் தாயராகியுள்ளது. 

 

எதிர்வரும் 30 ஆம் திகதி வெளியாகவுள்ள இந்த திரைப்பபடத்தை விளம்பரப்படுத்துவது தொடர்பான நிகழ்ச்சி சென்னை சத்தியம் தியேட்டரில் நடைபெற்றது. இந்தி படமான இதில் டோனியின் கதாபாத்திரத்தில் சுஷாந்த் சிங் ராஜ்புத் நடித்திருக்கிறார்.

 

நிகழ்ச்சியில் பங்கேற்ற டோனி, தாம் ரஜினியின் தீவிர ரசிகர் என்றுதெரிவித்து, படையப்பா படத்தில் ரஜினி பேசிய வசனத்தை பேசிக் காண்பித்து நிகழ்ச்சிக்கு வந்திருந்த ரசிகர்களை டோனி கவர்ந்தார். 

இந்த நிகழ்ச்சிக்கு பின்னர் சென்னை ஆழ்வார்பேட்டையில் உள்ள நடிகர் தனுசின் வீட்டில் ரஜினிகாந்த்தை டோனி சந்தித்தார்.

 

45 நிமிடம் நீடித்த இந்த சந்திப்பின்போது சினிமா, ஆன்மீகம், விளையாட்டு என பல்வேறு விஷயங்கள் தொடர்பாக இருவரும் சுவாரஷ்யமாகப் பேசிய மகிழ்ந்துள்ளனர். 

இந்த சந்திப்பின்போது ரஜினி குடும்பத்தினருடன்  உணவருந்தியமை குறிப்பிடத்தக்கது.

fs.JPG

bfsss.JPG

faaa.JPG

fagwrg.JPG

http://www.virakesari.lk/article/11709

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.