Skip to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

தியாக தீபம் திலீபனுக்கு அஞ்சலி

Featured Replies

தியாக தீபம் திலீபனுக்கு அஞ்சலி
 
 
தியாக தீபம் திலீபனுக்கு அஞ்சலி
தியாக தீபம் திலீபனின் 29ஆவது ஆண்டு நினைவுதினம் இன்று (திங்கட்கிழமை) அனுஷ்டிக்கப்படும் நிலையில், நல்லூரில் திலீபனுக்கு தமிழ்த்தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர்கள்,மாகாணசபை உறுப்பினர்கள், முன்னாள்போராளிகள் மற்றும் பொதுமக்களென பலர் அஞ்சலி செலுத்தியுள்ளனர்.
14483481_1146263848820472_1567590726_n.jpg
முன்னதாக   இன்று காலை நல்லூரின் வடக்குப்பக்கத்தில்  திலீபன் உண்ணாவிரதமிருந்த இடத்தில் சுடரேற்றி அகவணக்கம் செலுத்தப்பட்டது.பின்னர் நல்லூர் பின்வீதியில் உள்ள நினைவுத் தூபியில் அஞ்சலி செலுத்தப்பட்டது.
14459683_1146263625487161_1529123237_n.jpg
இந்த அஞ்சலி நிகழ்வில் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர்களான மாவை சேனாதிராசா, சரவணபவன் மற்றும் வடக்கு மாகாணசபை அவைத்தலைவா் சி.வி.கே.சிவஞானம் மாகாணசபை உறுப்பினர்களானபரஞ்சோதி,சுகிர்தன் மற்றும் தமிழர்விடுதலைக்கூட்டணித் தலைவர் ஆனந்தசங்கரி ,முன்னாள்போராளிகள் ,பொதுமக்களென பலர் கலந்து கொண்டு தமது அஞ்சலியை செலுத்தினர்.
14483618_769378673201217_410554504_n.jpg
 
14454693_769378613201223_455675757_n.jpg
 

http://onlineuthayan.com/news/18113

  • தொடங்கியவர்

தியாகி திலீபனின் 29ஆவது ஆண்டு நினைவு தினம் யாழில் இன்றைய தினம் உணர்வுபூர்வமாக அனுஸ்டிக்கப்பட்டது.

 

தியாகி திலீபனின் 29ஆவது  ஆண்டு நினைவு தினம் யாழில் இன்றைய தினம் உணர்வுபூர்வமாக அனுஸ்டிக்கப்பட்டது.



தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கத்தின் முக்கிய போராளியும் இந்திய அரசுக்கு எதிராகவும் தமிழர் உரிமைக்காகவும் உண்ண நோன்பு இருந்து உயிர் நீத்த தியாகி திலீபனுக்கு யாழ் பல்கலைக்கழகத்தில் அஞ்சலி செலுத்தப்பட்டுள்ளது.



யாழ் பல்கலைக்கழக முன்றலில் கூடிய யாழ் பல்கலைக்கழக சமூகத்தினர் திலீபனின் திருவுருவப்படத்திற்கு தீபம் ஏற்றி மலர் அஞ்சலி செலுத்தினர். முன்னாள் துணைவேந்தர், பீடாதிபதிகள், பேராசிரியர்கள், விரிவுரையாளர்கள், ஊழியர்கள், மாணவர்கள் எனப் பலரும் இந்த நிகழ்வில் கலந்து கொண்டு தியாகி திலீபனுக்கு அஞ்சலி செலுத்தினர்.



இதேவேளை தியாகி திலீபனின் நல்லூர் நினைவுக் கோபுரத்தின் முன்பாகவும் அஞ்சலி நிகழ்வுகள் இடம்பெற்றுள்ளன. அங்கு நடைபெற்ற நிகழ்வில் தமிழ் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் மாவை சேனாதிராஜா கலந்துகொண்டு அஞ்சலி செலுத்தினார்.




குறித்த நிகழ்வினை ஜனநாயக போராளிகள் கட்சியினர் ஏற்பாடு செய்திருந்தனர்.  குறித்த நிகழ்வு நடைபெற்ற இடத்தில் முன்னர் விடுதலை புலிகளினால் திலீபனுக்கு நினைவு தூபி ஒரு அமைக்கப்பட்டு இருந்தது. பின்னர் அந்த நினைவு தூபி இடித்தழிக்கப்பட்டு உள்ளது.  இடித்தழிக்கப்பட்ட நினைவு தூபி அமைந்துள்ள இடத்திலேயே அஞ்சலி நிகழ்வுகள் இடம்பெற்றன.



இதனைத் தவிர, கிளிநொச்சி, முல்லைத்தீவு மாவட்டங்களிலும் சில இடங்களில் தியாகி திலீபனை நினைவுகூறும் நிகழ்வுகள் இடம்பெற்றுள்ளன.

 

 

http://globaltamilnews.net/GTMNEditorial/tabid/71/articleType/ArticleView/articleId/136356/language/ta-IN/article.aspx

  • தொடங்கியவர்

 

தியாகி திலீபனின் 29வது ஆண்டு தினம் இன்று குடாநாட்டின் பல பகுதிகளிலும் அனுஸ்டிக்கப்பட்டது....

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.