Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

வங்குரோத்துநிலையில் விக்கினேஸ்வரன் -ரில்வின்சில்வா சாடல்

Featured Replies

வங்குரோத்துநிலையில் விக்கினேஸ்வரன் -ரில்வின்சில்வா சாடல்
 
 
வங்குரோத்துநிலையில் விக்கினேஸ்வரன் -ரில்வின்சில்வா சாடல்
வட மாகாண முதலமைச்சர் சிவீ.விக்னேஸ்வரன் வங்குரோத்து அடைந்துள்ளார் என மக்கள் விடுத்லை முன்னணியின் பொதுச் செயலாளர் ரில்வின் சில்வா தெரிவித்துள்ளார்.
 
அந்த கட்சியின் தலைமைக் காரியாலயத்தில் இன்று நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில் அவர் இதனை குறிப்பிட்டுள்ளார். அவர் மேலும் கூறுகையில்,
 
விக்னேஸ்வரன் வங்குரோத்து அடைந்துள்ளார். எனவே, விக்னேஸ்வரனின் கருத்துக்களை நாம் நிராகரிக்க வேண்டும். விக்னேஸ்வரனின் கருத்து தெற்கு இனவாதிகளுக்க சிறந்த சந்தர்ப்பமாக அமைந்துள்ளது.
 
ராஜபக்சவை சுற்றியிருக்கும் இனவாத சக்திகள் தொங்குவதற்கு ஒரு வைக்கோல் கூட இல்லாத நிலையில் இருந்த போது விக்னேஸ்வரன் அவர்களுக்கு கயிறு வழங்குகின்றார்.
 
இதற்கு முன்னரும் விக்னேஸ்வரன் பல்வேறு கருத்துக்களை வெளியிட்டிருந்தார். இம்முறை அவருடைய கருத்துக்கள் மிகவும் பாரதூரமானவை.விக்னேஸ்வரனின் கருத்தை மக்கள் விடுதலை முன்னணி நிராகரிக்கின்றது. தமிழ்த் தேசியக் கூட்டமைப்பும் இந்தக் கூற்றை நிராகரித்துள்ளது.
 
போரின் பின்னர் சிங்கள தமிழ் மக்கள் சமாதானத்தை நிலைநாட்ட பல்வேறு நடவடிக்கை எடுத்து வருகின்றனர். விக்னேஸ்வரன் முதமைச்சர் என்ற ரீதியில் முழுமையாக தோல்விய டைந்துள்ளார்.
 
வடக்கு மக்கள் மத்தியில் விக்னேஸ்வரன் தொடர்பில் அதிருப்தி ஏற்பட்டுள்ளது. இலங்கை சட்டத்தின் அடிப்படையில் சிங்களவர், முஸ்லிம், தமிழர், பர்கர் உள்ளிட்ட அனைத்து மக்களும் எந்த இடத்திலும் வாழ முடியும் என ரில்வின் சில்வா மேலும் தெரிவித்துள்ளா
 

http://onlineuthayan.com/news/18196

  • தொடங்கியவர்

மஹிந்தவை வளர்க்கிறார் விக்கி

 

 

வடக்கில் சிங்களவர்களை குடியமர்த்தக் கூடாது, பெளத்த விகாரை களை நிர்மாணிக்கக்கூடாது என கூறுவதைப்போல தெற்கில் தமிழர் களை குடியமர்த்த வேண்டாம் என்றோ அல்லது ஆலயங்கள் தகர்க்கப்பட வேண்டும் என்றோ கருத்து முன்வைக்கப்பட்டால் தமிழர்களின் நிலைமை என்னவாகும். வடக்கு முதல்வர் விக்கினேஸ்வரன் எல்லைமீறி செயற்படுகின்றார் என்று மக்கள் விடுதலை முன்னணியின் பொதுச்செயலாளர் ரில்வின் சில்வா குற்றஞ்சாட்டினார்.

விக்கினேஸ்வரன் போன்ற நன்கு கற்றவர்கள், நாட்டின் சட்டம் என்னவென்பதை அறிந்தவர்கள் இவ்வாறு அடிமட்ட நிலையில் இறங்கி இனவாதிகளுடன் கைகோர்ப்பது நாட்டின் சூழலுக்கு உகந்ததொன்றல்ல எனவும் அவர் குறிப்பிட்டார்.

மக்கள் விடுதலை முன்னணியின் செய்தியாளர் சந்திப்பு நேற்று கட்சி தலைமை அலுவலகத்தில் நடைபெற்ற போது வடமாகாண முதல்வர் விக்கினேஸ்வரன் எழுக தமிழ் பேரணியின் போது தெரிவித்த கருத்துக்கள் தொடர்பில் கேள்வி எழுப்பிய போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

இது தொடர்பில் அவர் மேலும் கூறுகையில்,

வடக்கு முதல்வர் விக்கினேஸ்வரன் அவ்வப்போது இனவாத கருத்துக்களை முன்வைத்து வடக்கில் மட்டுமல்லாது நாட்டில் சலசலப்பை ஏற்படுத்துபவர். கடந்த காலங்களில் இவ்வாறு பல்வேறு கருத்துக்களை முன்வைத்தார். எனினும் அண்மையில் வடக்கில் நடைபெற்ற பேரணியில் மிகவும் பாரதூரமான வகையில் கருத்துக்களை முன்வைத்துள்ளமை மிகவும் கண்டிக்கத்தக்க விடயமாகும். இவரது கருத்துக்களை தமிழ் மக்களின் கருத்துக்களாக நாம் கருதவில்லை. தமிழ்த் தேசியக் கூட்டமைப்பும் இவ்வாறான கருத்துக்களை முன்வைக்காத நிலையில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு மற்றும் விக்கினேஸ்வரன் ஆகியோருக்கு இடையிலும் கூட முரண்பாடுகளை ஏற்படுத்தியுள்ளதாக விமர்சிக்கப்படுகின்றது. எவ்வாறு இருப்பினும் விக்கினேஸ்வரனின் கருத்துக்களை நாம் வன்மையாகக் கண்டிக்கின்றோம்.

நாட்டில் தேசிய நல்லிணக்கம், இன ஒற்றுமை பற்றி பேசிக்கொண்டு செயற்படும் வேளையில் இவ்வாறான மிகவும் மோசமான கருத்துக்களை வடமாகாண முதல்வர் முன்வைப்பது ஒருபோதும் நாட்டில் நல்லிணக்கத்தை ஏற்படுத்தும் பாதைக்கு வித்திடாது.

அதேபோல் வடக்கில் விக்கினேஸ்வரன் செயற்படும் விதம் தெற்கில் மஹிந்த ராஜபக் ஷ உள்ளிட்ட இனவாதிகளுக்கு போசனையூட்டும் வகையில் அமைந்துள்ளது. விக்கியும் மஹிந்தவும் இனவாதத்தின் மூலம் நாட்டில் தமது அரசியல் பயணத்தை பலப்படுத்தவே முயற்சிக்கின்றனர். அவ்வாறான நிலையில் அரசாங்கம் இவர்களின் பாதையை கட்டுப்படுத்த என்ன செய்யப்போகின்றது? இலங்கையில் சகல மக்களுக்கும் எந்தப் பகுதியிலும் சுதந்திரமாக வாழ்வதற்கு உரிமை உள்ளது. தமிழர், சிங்களவர், முஸ்லிம்கள், கிறிஸ்தவர்கள் என அனைவரும் சகல பகுதிகளிலும் அமைதியாகவும் ஒற்றுமையாகவும் வாழக்கூடிய சுதந்திரம் உள்ளது.

download.jpg

அவ்வாறு இருக்கையில் வடக்கில் சிங்கள மக்களை குடியமர்த்தக் கூடாது என கூற வடக்கு முதல்வருக்கு எந்த அதிகாரமும் இல்லை. வடக்கில் சிங்களவர்களை குடியமர்த்தக் கூடாது என கூறுவதைப்போல தெற்கில் தமிழர்களை குடியமர்த்த வேண்டாம் என்ற கருத்து முன்வைக்கப்பட்டால் தமிழர்களின் நிலைமை என்னவாகும். கிழக்கில் முஸ்லிம்கள் அதே நிலைப்பாட்டில் செயற்பட்டால் என்னவாகும். வடக்கில் விகாரைகளை தகர்த்தால் அதே செயற்பாட்டை தெற்கில் முன்னெடுத்து கோவில்களையும் கிறிஸ்தவ, முஸ்லிம் மத தலங்களையும் தகர்க்க வேண்டும் என்ற கோரிக்கை முன்வைக்கப்பட்டால் நாட்டின் நிலைமைகள் என்னவாகும். இவற்றை விக்கினேஸ்வரன் மறந்துவிட்டு கருத்துக்களை முன்வைக்கின்றார். தனது எல்லையை மீறி வடக்கு முதல்வர் செயற்பட்டு வருகின்றார்.

தமிழ் சிங்கள இனவாத செயற்பாடுகளின் மூலம் அமைதியாக வாழும் தமிழ், சிங்கள மக்கள் மத்தியில் குழப்பங்களை ஏற்படுத்தி நாட்டின் நிரந்தரமாக முரண்பாடுகளை ஏற்படுத்தவே முயற்சித்து வருகின்றனர். மஹிந்த அணியினரை விக்கினேஸ்வரன் வளர்ப்பதும், விக்கினேஸ்வரன் உள்ளிட்ட தமிழ் இனவாதிகளை மஹிந்த அணியினர் வளர்ப்பதும் இன்று வளமையாக மாறியுள்ளது. விக்கினேஸ்வரன் போன்ற நன்கு கற்றவர்கள், நாட்டின் சட்டம் என்னவென்பதை அறிந்தவர்கள் இவ்வாறு அடிமட்ட நிலையில் இறங்கி இனவாதிகளுடன் கைகோர்ப்பது நாட்டின் சூழலுக்கு உகந்த ஒன்றல்ல. ஆகவே நிலைமைகளை மாற்றிக்கொண்டு நாட்டின் ஒற்றுமையை கட்டியெழுப்ப அனைவரும் செயற்பட வேண்டும் என அவர் குறிப்பிட்டார்.

http://www.virakesari.lk/article/11831

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.