Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

இந்தியாவின் 600-வது டெஸ்டுக்கு கேப்டன் யார்?

Featured Replies

இந்தியாவின் 600-வது டெஸ்டுக்கு கேப்டன் யார்?

600 டெஸ்ட் போட்டிகளை நோக்கி பயணத்தை தொடங்கியுள்ளது இந்திய கிரிக்கெட் அணி. அடுத்த நூறு போட்டிகளில் இந்தியாவுக்கு தேவை என்ன? அதை தெரிந்து கொள்வதற்கு முன் இந்த 500 போட்டிகளில் இந்தியாவின் செயல்பாடுகள் குறித்து தெரிந்து கொள்ள வேண்டியது அவசியம். 500-வது போட்டியில் பெற்ற வெற்றி, இந்தியாவுக்கு 130வது டெஸ்ட் வெற்றி. தொடர்ந்து மூன்று மைல்கல் சதங்களையும் வெற்றியுடன் கடந்திருக்கிறது இந்திய அணி. முதல் போட்டி தொடங்கி சதம் கண்ட போட்டிகள் பற்றிய தகவலை கீழே காணலாம். table%201.JPG

 


1980 களில் இருந்து சராசரியாக 10 ஆண்டுகளில் நூறு டெஸ்ட் போட்டிகளில் விளையாடுகிறது இந்திய அணி. அதாவது ஆண்டுக்கு சராசரியாக 9 போட்டிகள். அதில் கடந்து 200 போட்டிகளில் தன்னை அசைக்க முடியாத சக்தியாக வளர்த்தெடுத்துள்ளது இந்தியா. முதல் 300 போட்டிகளில் இந்தியாவின் வெற்றி சதவிகிதம் சராசரியாக 18%.

                                                        table%202.JPG

 


300 முதல் 500 போட்டிகளில் இந்தியாவின் வெற்றி சதவிகிதம் இரண்டு மடங்கு அதிகரித்துள்ளது. 400-வது போட்டியின் போது இந்தியாவின் வெற்றி சதவிகிதம் 32%. இந்த நூறு போட்டிகளில் 32 போட்டிகளில் வெற்றியும், 31 போட்டிகளில் தோல்வியும், 37 போட்டிகளில் டிராவும் செய்துள்ளது இந்தியா. 400 முதல் 500 வரையிலான போட்டிகளில் 42 வெற்றிகளும், 28 தோல்விகளும், 30 போட்டிகள் டிராவும் ஆகியுள்ளன. வெற்றி சதவிகிதம் 10% உயர்ந்து 42 சதவிகிதமாக உள்ளது. மேலும் இந்த 200 போட்டிகளில் தான் தோல்விகளை விட, அதிகம் வெற்றிகளை பதிவு செய்துள்ளது இந்தியா. மொத்தம் அடைந்த 130 வெற்றிகளில் 56% கடைசி 200 போட்டிகளில் அள்ளியுள்ளது இந்திய அணி. இது குறித்து தகவல்கள் கீழே.  

 

 

                                                                         table%203.JPG

 


 

இந்திய கிரிக்கெட் வரலாற்றில் தவிர்க்க முடியாத இடம் பிடித்த இரண்டு கேப்டன்கள் கங்குலி மற்றும் தோனி. 2000-ம் ஆண்டு முதல் 2005 வரை கேப்டனாக செயல்பட்ட கங்குலி இந்திய அணிக்கு புதிய உத்வேகம் தந்தவர். சச்சின், கங்குலி, திராவிட், லக்‌ஷ்மன் என ஜாம்பவான்கள் களமாடிய அது ஒரு கிளாசிக் காலம். கங்குலியின் வெற்றி சதவிகிதம் 42.5%. ஆனால் வேற லெல்வல் ட்ரெண்டை செட் செய்தவர் தோனி. இந்திய டெஸ்ட் வரலாற்றிலேயே சிறந்த கேப்டன் தோனி தான் என்பதை நாம் மறுக்க முடியாது. அதற்கு அவரது வெற்றி சதவிகிதம் அத்தாட்சி. 2009 முதல் 2014 வரை இந்தியாவை வழி நடத்திச் சென்ற தோனியின் வெற்றி சதவிகிதம் 45%. இந்திய கேப்டன்கள் இது வரை செய்யாத சாதனை இது. அதே நேரம், கேப்டன் பொறுப்பில் அதிக போட்டிகளில்(60) விளையாடியவர் என்ற வரலாறும் தோனிக்கே சொந்தம்.

 

Sachin Ganguly Dravid Lakshman

2009 முதல் 2010 வரை கேப்டனாக தோனியின் முதல் இரண்டு ஆண்டு காலம் இந்திய கிரிக்கெட்டின் பொற்காலம்.  2008-2009 ஆஸ்திரேலியா தொடரில் காயம் காரணமாக கும்ப்ளே விலக, தொடரின் 4-வது மற்றும் கடைசி போட்டியில் தோனி கேப்டன் பதவி ஏற்றார். அன்று தொடங்கி தொடர்ந்து 5 டெஸ்ட் தொடர்களையும் தனது தலைமையில் வென்று, பின் வரும் கேப்டன்களுக்கு மிகக் கடின இலக்கை கொடுத்திருக்கிறார். அதுமட்டும் அல்ல 2009 தொடங்கி 2011-ம் ஆண்டு வரை 8 வெற்றி, 3 டிரா என தொடர்ந்து 11 தொடர்களில் இந்தியாவை தோல்வியடையாமல் தாங்கிச் சென்றுள்ளார்.

 

Dhoni Test

 

1977 முதல் 1980 வரையிலான காலத்தில் இந்திய அணி தொடர்ந்து 20 போட்டிகளில் தோல்வி அடையாமல் ( வெற்றி & டிரா மட்டும்) விளையாடியிருப்பதே இது வரையிலான சாதனை. நியூசிலாந்துடன் இந்தியா பெற்ற வெற்றியோடு, இந்திய மண்ணில், தொடர்ந்து 12 டெஸ்ட் போட்டிகளில் வென்றுள்ளது. ‘எங்க ஊர்ல் நான் தான் ராஜா’ என்று இந்திய கேப்டன்கள் மார்தட்டிக் கொள்வதுண்டு. அந்த வகையில் இந்த சாதனையை முறியடிக்கும் பொறுப்பை கோலியிடம் விட்டுச் சென்றிருக்கிறார் தோனி.  

 

கபில் தேவ், கவாஸ்கர், அசாருதீன், கங்குலி, தோனி என ஒவ்வொறு நூறு போட்டிக்கும் ஒரு சிறந்த கேப்டனை இந்தியா கணடுள்ளது. அடுத்த 200 போட்டிகளுக்கான வெற்றிப் பயணத்தை ஸ்டெடியாக நிலை நிறுத்த இந்தியாவுக்கு சிறந்த தலைமைகள் தேவை. திறமைகளை கண்டுபிடித்து அறுவடை செய்ய வேண்டிய பெரும் கடமை கோலியிடம் உள்ளது. ஒன்றல்ல, தன்னையும் சேர்த்து குறைந்தது இரு, சிறந்த கேப்டன்களையாவது நாட்டுக்கு கொடுக்க, தனது இலக்கை கோலி நீட்டித்துக் கொள்ள வேண்டும். கோலியை வளர்த்து, தனக்கு பின் இந்தியாவை வழிநடத்த விட்டுச் சென்று, சிறந்த ‘லீடர்’ என்ற பெயரை தக்க வைத்துக் கொண்டார் தோனி. இப்போது  அதே லீடர் பொறுப்பு கோலியின் கையில்….

                                                                                    table%204.JPG

 

http://www.vikatan.com/news/sports/68877-indias-search-for-the-best-captain-for-next-100-matches-begins.art

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.