Skip to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

வடக்கு முதல்வருக்கு எதிராக சேறு பூசும் வகையில் விஷமத்தனமான பிரசாரம்..!

Featured Replies

நீங்கள் ஊடகங்களில் அவதானித்திருப்பீர்கள். வடக்கு மாகாண அமைச்சுக்களிலிருந்து நிதி திரும்பப் போகிறது எனச் சொல்லுகிறார்கள். நிதி இன்னும் செலவழிக்கப்படாமலிருக்கிறது எனச் சொல்லுகிறார்கள்.

ஆனால், அமைச்சரான நான் நிதி பற்றாக் குறைவாகவிருக்கிறதே எனச் சொல்லுகிறாரே என நீங்கள் சிந்திப்பீர்கள். உண்மையில் அதுவொரு விஷமத்தனமான பிரசாரம்.

திட்டமிடப்பட்டு வட மாகாண சபைக்கும், அதனுடைய தலைமைத்துவமாக வாய்த்திருக்கக் கூடிய சிறந்த தலைவர் விக்கினேஸ்வரன் ஐயாவுக்கும் திட்டமிட்டு சேறு பூச வேண்டும் என்பதற்காகச் சொல்லப்படுகின்ற விமர்சனங்கள் என வடமாகாண விவசாய அமைச்சர் பொ.ஐங்கரநேசன்.

யாழ்ப்பாணத்தில் இன்று இடம்பெற்ற நிகழ்வு ஒன்றில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இதனை குறிப்பிட்டுள்ளார். தொடர்ந்தும் கருத்து தெரிவித்த அவர்,

வடமாகாண சபையின் நிதி ஒதுக்கீட்டில் வழங்கப்படுகின்ற உதவிகள் சிறியளவிலானதாகவே உள்ளன. இவ்வாறான உதவித் திட்டங்கள் மூலம் நாங்கள் ஓரளவுக்கே வருவாயை ஈட்டிக்கொள்ள முடியும்.

வாழ்வாதாரத்திற்காகப் பயன்படுத்திக் கொள்ளலாம். மனமிருந்தாலும் பாரியளவிலான உதவித் திட்டங்களை மேற்கொள்வதற்கு எங்களால் ஒதுக்கப்படுகின்ற நிதிகள் பற்றாக் குறையாகவுள்ளது.

 

625.0.560.320.160.600.053.800.668.160.90.jpg

நாங்கள் ஒரு திட்டத்தை அமுல்படுத்துகின்ற போது கண்டபடி அமைச்சர்களோ அல்லது உறுப்பினர்களோ கண்டபடி பணம் செலவழிப்பது கிடையாது. இதற்கெனத் தனியாகக் கணக்காய்வுகளிருக்கின்றன.

இதற்கென நியமிக்கப்பட்டுள்ள கணக்காய்வாளர்கள் மூன்று இடங்களில் கூறு விலை கோரிப் பொருட்களின் தரங்களனைத்தும் பார்த்துத் தான் வாழ்வாதார உதவிகளுக்கான பொருட்களைக் கொள்முதல் செய்வார்கள்.

போருக்குப் பின்னரான வடக்கை நாங்கள் கட்டியெழுப்புவதற்குப் பெரும்பாலும் கட்டுமானப் பணிகளே இடம்பெறுகின்றன. இந்தக் கட்டுமானப் பணிகளுக்கென வடக்குமாகாணத்துக்கெனதொரு கட்டடத் திணைக்களமிருக்கிறது.

இந்தக் கட்டடத் திணைக்களத்தின் ஊடாகவே நாங்கள் கட்டுமானத்துக்கான அத்துணை வேலைகளையும் செய்யலாம்.

ஆகவே, முழு மாகாணங்களுக்கும் இருக்கக் கூடிய மாகாண சபைகளுக்குரிய கட்டடங்களை கட்டுகின்ற பொறுப்பு அவர்களிடமிருக்கும் போது நிச்சயமாக இந்தப் பணிகளை மேற்கொள்வது என்பது கடினமானது.

நாங்கள் பணம் செலவழிக்கப்படும் பணம் குறைவாகவிருக்கிறதே என்பதற்காக நிச்சயமாக அந்த வேலைகள் முடிக்கப்படாமலுள்ளது என்பதல்ல.

வேலை ஆரம்பமாகுவதற்கு முன்னர் கூடப் பணத்தை நாங்கள் நினைத்தவாறு ஒப்பந்தகாரரிடம் வழங்க முடியாது. வேலையை முடித்த பின்னர் தான் பணம் அவர்களிடம் வழங்கப்படும்.

அதுவரை ஒதுக்கப்பட்ட பணம் வங்கியிலேயே வைப்பிலிருக்கும். தற்போது ஒன்பதாம் மாதம் முடிவடையும் தருவாயிலிருக்கும் சூழலில் கணிசமான பணம் எல்லா அமைச்சுக்களினது திணைக்களங்களிலோ, பிரதம செயலாளரிடமோ குறிப்பிட்ட பணம் கையிலிருப்பிலிருக்கும்.

625.0.560.320.160.600.053.800.668.160.90.jpg

பின்னர் இந்த வருடம் முடிவடைவதற்குள் ஒவ்வொரு கட்டட ஒப்பந்தகாரர்களோ அல்லது எடுக்கப்பட்ட வேலைத் திட்டங்கள் முடிவுறும் போது குறித்த பணம் வழங்கப்படும்.

அவசர அவசரமாக ஒன்பதாம் மாதாமிருந்த பணத்தைப் பதினொராம் மாதத்திற்குள் செலவழித்து விட்டதாகச் சொல்லுவார்கள். அவ்வாறல்ல நாங்கள் கடந்த வருடமே இந்த வருடத்துக்கான செயற்பாடுகள் தொடர்பில் திட்டமிட்டிருப்போம்.

எம்முடைய அமைச்சைப் பொறுத்தவரை பெரும் போகத்தில் நெல்லுக்கு அல்லது ஏனைய விதைகளுக்கு, உழவியந்திரங்களுக்குப் பெருமளவு பணத்தை ஒதுக்கீடு செய்திருப்போம்.

இவ்வாறு ஒதுக்கப்பட்ட பணம் செலவழிக்கப்படுவது ஐப்பசி அல்லது கார்த்திகை மாதமாகத் தானிருக்கும். உதாரணமாக நெல்லை நாங்கள் கோடை வெயில் கொளுத்தும் சித்திரை மாதத்தில் வழங்க முடியாது.

எனவே, வடமாகாண சபைக்கு ஒதுக்கப்பட்டுள்ள பணம் செலவழிக்கப்படவில்லை என்ற கூற்றில் எந்தவித உண்மைகளுமில்லை என அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

http://www.tamilwin.com/politics/01/119175?ref=home

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.