Skip to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

இலங்கையில் சமாதானம் நீடித்துநிலைபெற அனைவரும் ஒன்றுபடவேண்டும்-வடக்கு ஆளுனர்

Featured Replies

இலங்கையில் சமாதானம் நீடித்துநிலைபெற அனைவரும் ஒன்றுபடவேண்டும்-வடக்கு ஆளுனர்
 
 
இலங்கையில் சமாதானம் நீடித்துநிலைபெற அனைவரும் ஒன்றுபடவேண்டும்-வடக்கு ஆளுனர்
ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, பிரதமர் ரணில் விக்கிரமசிங்க மற்றும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவரும் எதிர்க்கட்சித் தலைவருமான இரா.சம்பந்தன் ஆகியோர் ஒன்றாக இணைந்து நாட்டிற்கு சாந்தியும் சமாதானமும் கிடைக்க ஒற்றுமையுடன் உழைக்க வேண்டும் என வடமாகாண ஆளுநர் றெஜினோல்ட் குரே கேட்டுக்கொண்டுள்ளார்.
 
யாழ்ப்பாணத்தில் நேற்று ஞாயிற்றுக்கிழமை இடம்பெற்ற 42ஆவது தேசிய வியைாட்டு விழா இறுதி நாள் நிகழ்வில் கலந்து கொண்டு உரையாற்றும்போதே அவர்  இவ்வாறு தெரிவித்தார்.அவர் அங்கு தொடர்ந்தும் கருத்து தெரிவிக்கையில்,
 
இந்த உலகத்தில் பல்வேறு இன, மத, மொழி, கலாசாரம் என்பன காணப்படுகின்றன. இவற்றில் பல்வேறு வித்தியாசங்கள் காணப்ப டுகின்றன.எனினும் எவ்வித வேறுபாடுமின்றி ஒரேமாதிரியான முறை விளையாட்டில் மாத்திரமே காணப்படுவதுடன் வீரர்கள் அதற்கேற்ப செயற்படவேண்டிய தேவை காணப்படுகின்றது.
 
இலங்கையில் உள்ள சகல மாகாணங்களையும் சேர்ந்த அனைவரும் விளைாயட்டின்போது இன, மத, மொழி வேறுபாடின்றி ஒரேமாதிரியான முறையைப் பின்பற்றுகின்றனர்.அதுமாத்திரமின்றி உலகத்திலே ஒலிம்பிக் விளையாட்டின் போது அனைவரும் எவ்வித வேறுபாடுமின்றி பங்கேற்கின்றனர்.
 
இம்முறை யாழ்ப்பாணத்தில் நடைபெற்ற இந்த விளைாயட்டுப் போட்டியானது நாட்டிலே ஒற்றுமையை ஏற்படுத்தும் ஒரு நிகழ்வாகவே பார்க்கின்றேன். எனவே இவ்வாறான நிகழ்வுகள் தொடர்ந்தும் இடம்பெறவேண்டியது அவசியம்.
 
எமது தாய்நாட்டில் பிறந்த எல்லோரினதும் வியர்வை இன்று கீழே விழுந்தது. ஆனால் கடந்த 5 வருடத்திற்கு முன்பு 30 வருடங்களாக எமது பிள்ளைகள் அநியாயமாக இரத்தம் சிந்தினார்கள்.
 
தற்போது ஆட்சியில் இருக்கும்  ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, பிரதமர் ரணில் விக்கிரமசிங்க மற்றும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவரும் எதிர்க்கட்சித் தலைவருமான இரா.சம்பந்தன் ஆகியோர் ஒன்றாக இணைந்து நாட்டிற்கு சாந்தியும் சமாதானமும் கிடைக்க ஒற்றுமையுடன் உழைக்க வேண்டும்.
 
யாழ்ப்பாணத்தில் சிறப்பாக நடைபெற்று முடிந்த இந்த விளையாட்டு நிகழ்வை ஒழுங்குசெய்த விளையாட்டுத் துறை அமைச்சர் தயாசிறி ஜயசேகர மற்றும் அவரது செயலாளர், உத்தியாகத்தர்களுக்கும் எனது நன்றியைத் தெரிவித்துக்கொள்கின்றேன்.
 
எமது நாட்டுக்கும் மக்களுக்கும் சிறப்பான எதிர்காலம் உருவாக பிரார்த்திப்போம் என வடமாகாண ஆளுநர் தனது உரையின்போது குறிப்பிட்டார்.

http://onlineuthayan.com/news/18428

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.