Skip to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

சுவிஸ் அமைச்சருடன் சி.வி. சந்திப்பு

Featured Replies

சுவிஸ் அமைச்சருடன் சி.வி. சந்திப்பு
 
 

article_1475490552-1.jpg-எஸ்.ஜெகநாதன்

'இலங்கையில் இனரீதியான பாகுபாடுகள் தொடர்ந்து வரும் நிலையில், நல்லாட்சி அரசாங்கத்தால் முன்வைக்கப்படக்கூடிய அரசியலமைப்பானது தமிழ் மக்களுக்கு நன்மையளிக்குமா என்பது கேள்விக்குறியாக உள்ளது' என வடமாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் தெரிவித்தார்.

இலங்கைக்கு விஜயம் மேற்கொண்டிருக்கும் சுவிட்சர்லாந்தின் நீதியமைச்சர் சைமனேட்டா சொமாருகாவை யாழ்ப்பாணத்திலுள்ள முதலமைச்சர் அலுவலகத்தில் திங்கட்கிழமை (03) சந்தித்த பின்னர் ஊடகங்களுக்குக் கருத்து வெளியிடும்போதே முதலமைச்சர் இதனைக் கூறினார்.

அவர் தொடர்ந்து கூறுகையில், 'மாறிமாறி ஆட்சிக்கு வந்த பெரும்பான்மை அரசாங்கங்கள், பாகுபாடுகளைத் தொடர்ந்து வந்தன. 1948ஆம் ஆண்டு வரை பிரித்தானியர்களின் ஆட்சியில் நாம் சகலரும் சமமாக நடத்தப்பட்டோம். பரீட்சைகள் உள்ளிட்ட சகலவற்றிலும் நாம் சமமாக போட்டியிட்டோம். பாகுபாடு இல்லாவிட்டால் சமமாக எம்மால் போட்டியிட முடியும் என அவருக்கு கூறினேன்' என்றார்.

'எனினும், 1948ஆம் ஆண்டின் பின்னர் இந்த நிலைமை மாற்றப்பட்டது. 1956ஆம் ஆண்டு தனிச் சிங்களச் சட்டம் கொண்டுவரப்பட்ட பின்னர், இன ரீதியான பாகுபாடு ஆரம்பமானது. இதனைத் தொடர்ந்து கல்வி தரப்படுத்தல்களால் தமிழ் மாணவர்கள் பலருக்கு, பல்கலைக்கழகங்களுக்குச் செல்ல முடியாது போனது. இவ்வாறான பாகுபாடுகள் தொடர்கின்றன என்பதை விளக்கினேன்.

இவ்வாறான பின்னணியில் கொண்டுவரப்படக்கூடிய அரசியலமைப்பானது தமிழ் மக்களுக்கு நன்மையளிக்குமா? என்பது கேள்விக்குறியாகவே உள்ளது. உண்மையில் பாகுபாடு காட்டாது சகலரும் சமமாக மதிக்கப்படுவர் என்ற நிலைமைய பெரும்பான்மையினர் உறுதிப்படுத்தினால் அரசியலமைப்பினால் தமிழ் மக்களுக்கு நன்மை ஏற்படும் என்ற ரீதியில் கேள்வி எழுப்பியிருந்தேன்.

அதேநேரம், பயங்கரவாதத் தடைச்சட்டம் நீக்கப்படும் என அரசாங்கம் உறுதியளித்திருந்தது. எனினும், இது இன்னமும் செய்யப்படவில்லை. நாட்டில் 17 பகுதிகளில் தமிழ் இளைஞர்கள் தடுத்துவைக்கப்பட்டு சித்திரவதைக்கு உட்படுத்தப்பட்டதாக தகவல்கள் உள்ளன. ஆட்சி மாற்றத்தின் பின்னரும் இவ்வாறான சில சம்பவங்கள் குறித்து பதிவாகியுள்ளன.

முன்னரைவிட நாட்டில் நிலைமைகள் மாறியுள்ளன. தற்பொழுது ஜனநாயகம் உள்ளது. கலந்துரையாடல்களுக்கான சந்தர்ப்பங்கள் உள்ளன. இருந்தபோதும் பயங்கரவாதத் தடுப்புச் சட்டத்திலிருந்து இளைஞர்கள் விடுவிக்கப்பட்டாலே தீர்வொன்று கிடைக்கும் என்பதைச் சுட்டிக்காட்டினேன்.

வடக்கில் இராணுவப் பிரசன்னம் தொடர்ந்தும் அதிகமாகக் காணப்படுவதாகச் கூறினேன். யாழ்ப்பாணத்தில் ஒரு இலட்சத்துக்கும் அதிகமான இராணுவத்தினர் உள்ளனர். இவர்கள் தற்பொழுது ஓரளவுக்கு அடக்கி வைக்கப்பட்டுள்ள போதும், அவர்கள் பல ஏக்கர் கணக்கான காணிகளைப் பிடித்து வைத்திருப்பதுடன், அதில் விவசாயங்களை மேற்கொண்டு வருகின்றனர். இதனைக் கேட்பதற்காகவே கடந்த வாரம் நாம் பேரணியை நடத்தியிருந்தோம்.

நாம் நடத்தியிருந்த பேரணியானது அரசாங்கத்துக்கு எதிரானது அல்ல. அரசியல் செயற்பாடுகளுக்கு பக்கபலமாக சிவில் சமூக அமைப்புக்கள் இருப்பது வழமையானது. அவ்வாறானதொரு அமைப்பின் ஊடாகவே தமிழ் மக்கள் தமது உணர்வுகளை வெளிக்காட்டியிருந்தனர் என்பதை அவருக்கு கூறினேன்' என முதலமைச்சர் மேலும் கூறினார்.

- See more at: http://www.tamilmirror.lk/183140/ச-வ-ஸ-அம-ச-சர-டன-ச-வ-சந-த-ப-ப-#sthash.7TZTuShA.dpuf
  • தொடங்கியவர்

தமிழ் மக்களின் மனங்களில் இருப்பதை கூறுவதே தமிழ் மக்கள் பேரவையின் நோக்கம் ; சி.வி.

 

 

(ரி.விரூஷன்)

தமிழ் மக்கள் பேரவையானது எதிர்கட்சி என கூறப்படுகின்றதே தவிர அது எதிர்க்கட்சி இல்லை எனவும் அது உருவாக்கப்பட்டதன் நோக்கம் தமிழ் மக்களின் மனங்களில் உள்ள தேவைகள், அபிலாஷைகள் மற்றும் விருப்பங்களை எடுத்து கூறுவதற்காகவே என வடமாகாண முதலமைச்சர் சி.வி.விக்கினேஸ்வரன் சுவிற்ஸர்லாந்து வெளிவிவகார அமைச்சரிடம் எடுத்துரைத்துள்ளார்.

14580324_752964644854907_749838421_n.jpg

அத்துடன் கடந்த ஆட்சியில் காணப்பட்ட  நிலைமைகள் இந்த ஆட்சியிலும் தொடருமானால் நாட்டில் நல்லிணக்கத்தை ஏற்படுத்துவது கடினம் எனவும் சுவிற்ஸர்லாந்து வெளிவிவகார அமைச்சருக்கு குறிப்பிட்டிருந்தார்.

 

இன்று நண்பகல் சுவிற்ஸர்லாந்து வெளிவிவகார அமைச்சர் வடக்கு மாகாண முதலமைச்சரை அவரது அலுவலகத்தில் சந்தித்து கலந்துரையாடியிருந்தார்.

இக் கலந்துரையாடலிலேயே முதலமைச்சர் விக்கினேஸ்வரன் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

அவர் அங்கு மேலும் தெரிவிக்கையில்,

 

தமிழ் மக்கள் பேரவை தொடர்பாகவும் அது ஆரம்பிக்கப்பட்டதன் நோக்கம் குறித்தும் முதலமைச்சர் குறிப்பிட்டிருந்தார். 

அதாவது தமிழ் மக்கள் பேரவையானது எதிர்க்கட்சியாக குறிப்பிடப்படுகின்றது. ஆனால் அது எதிர்க்கட்சி அல்ல. இது தமிழ் மக்களின் தேவைகள், விருப்பங்கள்  மற்றும் அபிலாஷைகள் தொடர்பாக அரசாங்கத்திற்கு எடுத்துரைப்பதற்காகவே உருவாக்கப்பட்ட சிவில் அமைப்பாகும்.

14528400_752964651521573_629624320_n.jpg

ஏனெனில் இதுவரை காலமும் தமிழ் மக்களுக்கு அவ்வாறான ஒரு சந்தர்ப்பம் கிடைத்திருக்கவில்லை. அவர்கள் தமது தேவைகள், விருப்பங்கள் மற்றும் அபிலாஷைகள் தொடர்பாக தெரிவிப்பதற்கு இராணுவத்தினாலும் ஆயுதக்குழுக்களாலும் தமிழ் மக்களின் வாய்கள் மூடப்பட்டிருந்தன. 

இது அரசியல் நகர்வில் முக்கியமான ஓர் விடயம் ஏனெனில் தமிழ் மக்களது மனங்களில் உள்ளவற்றை எடுத்துக்கூற வேண்டிய அவசியமுள்ளது.

 

மேலும் நாட்டில் தற்போது ஏற்படுத்தப்பட்டுள்ள புதிய ஆட்சியானது தமிழ் மற்றும் முஸ்லிம் மக்களுடைய ஆதரவுடனேயே ஏற்படுத்தப்பட்டது. 

ஆனாலும் இன்னமும் தமிழ் மக்களது பிரச்சினைகள் முற்றாக தீர்க்கப்படவில்லை. அரசியல் கைதிகளின் விடுதலை, பயங்கரவாத தடைச்சட்டம் நீக்கம், காணாமல் போனவர்கள் விடயம் இவை தீர்க்கப்பட வேண்டும். 

பயங்கரவாத தடைச்சட்டமானது நீக்கப்பட வேண்டும். இவ்வாறான நடவடிக்கைகள் ஊடாகவே நாட்டில் மக்களிடையே நல்லாட்சியினை ஏற்படுத்த முடியும்.

 

அத்துடன் கடந்த ஆட்சிக் காலங்களில் காணப்பட்ட நிலைமையே இனியும் தொடருமானால் நல்லிணக்கத்தை ஏற்படுத்துவது கடினம் என்ற விடயத்தையும் முதலமைச்சர் சுவிற்ஸர்லாந்து வெளிநாட்டு அமைச்சருக்கு எடுத்துரைத்ததுடன், மத்திய அரசானது மாகாண அரசை மதித்து அவர்களோடு பேசி பிரச்சினைகளை தீர்த்து வைக்க முயல வேண்டும் எனவும் நாம் கோருகின்ற சமஷ்டியானது நாட்டினை பிரிப்பதற்கான ஒன்றல்ல என்பதை அரசாங்கத்திற்கும் சிங்கள மக்களுக்கும் தெளிவுபடுத்த வேண்டும் எனவும் சுவிற்ஸர்லாந்து வெளிநாட்டு அமைச்சருக்கு வலியுறுத்தியிருந்தார்.

http://www.virakesari.lk/article/12014

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.