Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

ஜப்பானியருக்கு மருத்துவத்துக்கான நோபல்! #NobelPrize #Medicine

Featured Replies

ஜப்பானியருக்கு மருத்துவத்துக்கான நோபல்! #NobelPrize #Medicine

oshoo.jpg

லகின் உயர்ந்த பரிசாக கருதப்படும் நோபல் பரிசுகள் இந்த வாரம் முழுக்க அறிவிக்கப்படும். இன்று ஸ்டாக்ஹோமில் நடந்த விழாவில், மருத்துவத்துறைக்கான நோபல் பரிசு அறிவிக்கப்பட்டது. அதன்படி இந்த வருடத்துக்கான மருத்துவத்துறைக்கான நோபல் பரிசு, ஜப்பான் நாட்டை சேர்ந்த யோஷினோரி ஓஷுமிக்கு வழங்கப்பட உள்ளதாக நோபல் கமிட்டி அறிவித்தது.

Ct1TPljWEAARPge.jpg

BREAKING NEWS The 2016 #NobelPrize #Medicine awarded to Yoshinori Ohsumi @tokyotech_en ”for his discoveries of mechanisms for autophagy”

ஆட்டோபேஜி(Autophagy) எனப்படும் செல் தொடர்பான நிகழ்வின் செயல்பாடுகளை துல்லியமாக கண்டறிந்ததற்காக இவருக்கு இந்த விருது வழங்கப்பட்டுள்ளது. ஆட்டோபேஜி என்றால் தன்னைத்தானே உண்ணுதல் என்று பெயர். யோஷினோரி ஓஷூமி ஜப்பான் நாட்டில் இருந்து நோபல் பரிசைப் பெறும் 23-வது நபர். ஜப்பான் நாட்டில் இருந்து, மருத்துவத்துறைக்காக பெறும் 6-வது நபர் ஆவார். பயோமெடிக்கல் துறையில் தீவிர ஆராய்ச்சியில் இருக்கும் பிரிவுகளில் ஒன்று, இந்த ஆட்டோபேஜி. அதில் மிக விரிவான ஆராய்ச்சியை நடத்தியிருக்கிறார் ஓஷூமி.

ஓஷூமி 1945ம் ஆண்டு ஜப்பானில் பிறந்தவர். டோக்கியோ பல்கலைக்கழகத்தில் 1974-ம் ஆண்டு முனைவர் பட்டம் பெற்றவர். டோக்கியோ தொழில்நுட்ப கல்லூரியில் 2009-ம் ஆண்டு முதல் பேராசிரியராக பணியாற்றி வருகிறார்.

ஆட்டோபேஜி என்பது நமது உடல் செல்கள் தன்னைத்தானே உண்பது. இது ஆரோக்கியமற்ற விஷயமாக தெரிந்தாலும், இதுதான் நமது உடலின் மிக முக்கியமான தற்காப்பு நடவடிக்கை. பழைய செல்களை அழிப்பதற்கும், புதிய செல்களை உருவாகவும் இதுதான் உதவுகிறது. இந்த ஆட்டோபேஜி முறையில் நடக்கும் குளறுபடிகள்தான் பெரும்பாலான நோய்களுக்கு காரணமாக அமைகின்றன. இப்படி ஆட்டோபேஜி முறையினை தடுக்கும் ஜீன்களை ஓஷூமி கண்டறிந்திருக்கிறார். இவை பெரும்பாலான நோய்கள் பற்றிய ஆராய்ச்சிக்கு விடையாக அமைந்திருக்கின்றன. ஆட்டோபேஜியானது  பார்க்கின்சன், டைப் 2 சர்க்கரை வியாதி,பரம்பரை வியாதிகள் உட்பட பல வியாதிகளுடன் தொடர்புடையது. இந்த ஆட்டோபேஜியை குறிவைத்து மருந்துகள் தயாரிக்க, தற்போது பல்வேறு ஆராய்ச்சிகள் நடந்துவருகின்றன. 

”I was surprised. I was in my lab” says Yoshinori Ohsumi on being awarded the 2016 #NobelPrize #Medicine. Interview to follow!

நோபல் பரிசு அறிவிக்கப்பட்ட நேரத்தில் தனது ஆய்வகத்தில் ஆராய்ச்சியில் இருந்திருக்கிறார் ஓஷூமி. "எனக்கு ஆச்சர்யமாக இருக்கிறது. நான் எனது லேப்பில் இருந்தேன்" என்கிறார் ஓஷூமி. இயற்பியலுக்கான நோபல் பரிசு நாளையும், வேதியியலுக்கான நோபல் பரிசு 5-ம் தேதியும், அமைதிக்கான நோபல் பரிசு 7-ம் தேதியும், பொருளாதாரத்திற்கான நோபல் பரிசு 10-ம் தேதியும், இலக்கியத்திற்கான நோபல் அதற்குப் பின்னரும் அறிவிக்கப்படும்.

http://www.vikatan.com/news/world/69105-nobel-prize-in-medicine-awarded-to-yoshinori-ohsumi.art

  • தொடங்கியவர்

ஜப்பானிய உடற்கூறியல் விஞ்ஞானிக்கு மருத்துவ நோபல்

 

 
யொஷினோரி ஓசுமி | படம்: Nobel Prize இணையதளம்
யொஷினோரி ஓசுமி | படம்: Nobel Prize இணையதளம்

செல்களின் அடிப்படையான செயல்பாடுகளில் முக்கியமான கண்டுபிடிப்பை நிகழ்த்திய ஜப்பான் உடற்கூறியல் ஆய்வு விஞ்ஞானி யொஷினோரி ஒசுமி என்பவருக்கு 2016-ம் ஆண்டுக்கான மருத்துவ நோபல் பரிசு அளிக்கப்பட்டுள்ளது.

autophagy என்று அழைக்கப்படும் செல்களின் அடிப்படைச் செயல்பாடுகளின் ஒரு முக்கியமான அம்சத்தை கண்டுபிடித்தார் ஓசுமி.

auto என்ற கிரேக்கச் சொல்லிற்கு self என்று பொருள். phagy என்றால் to eat. எனவே autophagy என்றால் self-eating என்று பொருள்.

இந்தக் கருத்தாக்கம் 1960களில் முன்னிலை பெற்றது. அதாவது செல் தனது உள்ளடக்கங்களை சவ்வுகளுக்குள் அடக்கி தன்னையே சேதப்படுத்திக் கொண்டு பை போன்ற ஒரு அமைப்பை உருவாக்கி இதனை lysosome என்ற ஒரு அறைபோன்ற அமைப்புக்கு மறுசுழற்சிக்கு அனுப்புகிறது. செல்லின் முக்கிய அலகுகளை இது கீழ்நிலைப்படுத்தும் பணிநிலையமாக செயல்படுகிறது. இதனைக் கண்டுபிடித்ததற்காக 1974-ம் ஆண்டு மருத்துவ நோபல் பெல்ஜிய விஞ்ஞானி கிறிஸ்டியன் டி துவே என்பவருக்கு வழங்கப்பட்டது. இவர்தான் self-eating என்பதைக் குறிக்கும் autophagy என்ற ஒரு சொல்லையும் அறிமுகப்படுத்தினார்.

லைசோசம் என்றால் புரோட்டீன்கள், கார்போஹைட்ரேட்கள், மற்றும் கொழுப்புகள் ஆகியவற்றை சீரணிக்கும் ஒரு சிறப்புவாய்ந்த அறையாகும்.

ஆட்டோபேகி என்ற செயல்பாட்டைக் கண்டுபிடிப்பது ஆய்வாளர்களின் கண்களின் மண்ணைத் தூவி வந்தது, ஆனால் 1990-ம் ஆண்டுகளில் யொஷினோரி ஒசுமி ஈஸ்ட் மூலம் ஆட்டோபேகியை அடையாளம் காட்டும் முக்கிய மரபணுக்களை அடையாளம் கண்டார். இதே போன்ற ஒரு உயர் நுட்ப செயல்பாடு நமது செல்களிலும் உள்ளது என்பதையும் யொஷினோரி ஓசுமி நிறுவினார்.

அதாவது நம் செல்கள் அதன் உள்ளடக்கங்களை எப்படி மறுசுழற்சிக்கு உட்படுத்துகிறது என்பது பற்றிய நம் புரிதலில் ஒரு சட்டக-சிந்தனை மாற்றத்தை ஏற்படுத்தியுள்ளார் ஓசுமி.

இதன் மூலம்தான் நம் உடலின் பல்வேறு செயல்பாடுகளுக்கு புதிய வெளிச்சம் கிட்டியுள்ளது, குறிப்பாக பட்டினி கிடப்பதற்கு நம் உடல் எப்படி தன்னை தகவமைத்துக் கொள்கிறது. அதே போல் கிருமித் தொற்றிற்கு வினையாற்றுவதை எப்படி செய்கிறது என்பது பற்றிய மிக முக்கியக் கண்டுபிடிப்பு இது என்று மருத்துவ அறிஞர்கள் வட்டம் கூறுகிறது. இந்த ‘ஆட்டோபேகி’ மரபணுக்களில் ஏற்படும் உருமாற்றம், திடீர் மாற்றம் எப்படி நோய்க்கு அடிப்படையாக விளங்குகிறது என்பது கண்டுபிடிக்கக் கூடியதே என்று தெரியவருகிறது. இந்த ஆட்டோபேகி தொடர்பான செல் செயல்பாடுகள்தான் பல்வேறு நரம்பியல் மற்றும் புற்றுநோய்களுக்குக் காரணமாகிறது.

மனித செல்களுக்கு இணையான ஈஸ்ட்டின் செல்களை யொஷினோரி ஓசுமி தனது ஆய்வுக்கு எடுத்துக் கொண்டார். ஆனால் ஈஸ்ட்டின் செல்கள் மிகச்சிறியது என்பதால் நுண்ணோக்கியில் அவரால் அதன் உள்ளமைப்புகளை வேறு படுத்திப் பார்ப்பதில் சிரமம் ஏற்பட்டது. இதனால் ஆட்டோபேகி என்ற செயல்பாடு ஈஸ்டில் இருக்கிறதா என்பதே அவருக்கு ஐயமாக இருந்தது. ஆனால் அவர் தொடர்ந்து விடாமுயற்சியுடன் அதில் ஆட்டோபேகி இருப்பதற்கான சோதனைகளை மேற்கொண்டு கண்டுபிடிப்பில் வெற்றி பெற்றார். 1992-ம் ஆண்டு தனது ஆய்வு முடிவுகளை வெளியிட்டார்.

ஈஸ்ட்டில் ஆட்டோபேகி செயல்பாடுகள் இருப்பதை மனித செல்களுக்குள் கண்டுபிடிப்பது எப்படி என்ற கேள்வி அவருக்கு எழுந்தது. ஆனால் இதனையும் தொடர் பரிசோதனைகள் மூலம் கடந்து கண்டுபிடித்தார் ஓசுமி.

ஆட்டோபேகி என்ற செல்கள் தன் உள்ளடக்கங்களை கீழ்நிலைப்படுத்தி மறுசுழற்சி செய்யும் நடைமுறைக்கு ஏற்படும் இடையூறுதான் பார்கின்ஸன் நோய், டைப் 2 நீரிழிவு நோய் உள்ளிட்ட வயது முதிர்ந்தோருக்கான அனைத்து நோய்களுக்கும் காரணம் என்பது தெரியவர யொஷினோரி ஓசுமியின் கண்டுபிடிப்புதான் காரணம். ஆட்டோபேகி மரபணுக்களின் ஏற்படும் மாற்றங்களே மரபுசார் நோய்களுக்குக் காரணமாகிறது. இந்த ஆட்டோபேகியில் ஏற்படும் தொந்தரவுகள்தான் புற்றுநோய்க்கும் காரணம். இந்தக் கண்டுபிடிப்பை அடுத்து ஆட்டோபேகி செயல்பாட்டை நோக்கிய மருந்துகளை கண்டுபிடிக்கும் ஆய்வுகள் தீவிரமடைந்துள்ளன.

ஆட்டோபேகி என்பது 50 ஆண்டுகளாக மருத்துவ உலகில் பேசப்பட்டு வருவதுதான். ஆனால் உடற்கூறியல் மற்றும் மருந்துகள் ஆய்வில் இது பெரிய அளவில் தாக்கம் செலுத்தியது யொஷினோரி ஓசுமியின் பாதை திறப்புக் கண்டுபிடிப்புக்குப் பிறகே என்பதால் அவருக்கு மருத்துவ நோபல் வழங்கி சிறப்பிக்கப்பட்டுள்ளது.

http://tamil.thehindu.com/world/ஜப்பானிய-உடற்கூறியல்-விஞ்ஞானிக்கு-மருத்துவ-நோபல்/article9180168.ece?homepage=true

  • தொடங்கியவர்

'3 விஞ்ஞானிகளுக்கு இயற்பியலுக்கான நோபல் பரிசு!' #NobelPrize #Physics

physics.jpg

ந்த ஆண்டிற்கான நோபல் பரிசுகள் நேற்று முதல் அறிவிக்கப்பட்டு வருகின்றன. நேற்று முதல்கட்டமாக மருத்துவத்துறைக்கான நோபல் பரிசு அறிவிக்கப்பட்டது. இது ஜப்பானை சேர்ந்த யோஷினோரி ஓஷூமிக்கு வழங்கப்பட உள்ளதாக அறிவிக்கப்பட்டது. அதைத்தொடர்ந்து இன்று இயற்பியல் துறைக்கான நோபல் பரிசு ஸ்டாக்ஹோமில் அறிவிக்கப்பட்டது. 

அதன்படி டேவிட் தௌலஸ், டங்கன் ஹால்டனே மற்றும் மைக்கேல் கோஸ்டர்லிட்ஸ் ஆகிய மூன்று பேரும் இந்த ஆண்டிற்கான நோபல் பரிசைப் பெற உள்ளதாக அறிவிக்கப்பட்டது. பரிசுத் தொகையின் பாதித் தொகை டேவிட் தௌலஸ்க்கும், மீதித் தொகை மற்ற இருவருக்கும் பிரித்து வழங்கப்பட இருக்கிறது.

 

இந்த மூன்று பேருமே, பொருட்களின் வடிவ மாற்றங்கள் குறித்த, ஆராய்ச்சியில் ஈடுபட்டவர்கள். பொருட்களின் வடிவங்களில் திட, திரவ, வாயு ஆகிய மூன்று பற்றி மட்டுமே நாம் பெரிதும் தெரிந்து வைத்திருக்கிறோம். பொருட்கள் மிக அதிகமான வெப்ப நிலையில் இருக்கும் போதோ, மிகவும் குறைவான வெப்ப நிலையில் இருக்கும் போதோ அவை மேலும் பல வடிவங்களை அடையும். இதனைப் போல, இன்னும் யாரும் அறியாத வடிவங்களை கண்டறிந்ததில், இவர்களுக்கு முக்கியப் பங்கு உண்டு. இவர்களின் கண்டுபிடிப்புகளின் மூலமாக, வருங்காலத்தில் புதிய விதமான பொருட்கள் மற்றும் மின்னணு பொருட்களை தயாரிக்கக் இது உதவியாக இருக்கும் என்கின்றனர் விஞ்ஞானிகள். இந்த உருமாற்றங்களை கணிதத்தின் உதவியைக் கொண்டு விளக்கியுள்ளனர்.
நாளை வேதியியல் துறைக்கான நோபல் பரிசு அறிவிக்கப்பட உள்ளது.

http://www.vikatan.com/news/miscellaneous/69152-david-thouless-duncan-haldane-and-michael-kosterlitz-win-nobel-prize-in-physics.art

  • தொடங்கியவர்

வேதியியல் துறைக்கான நோபல் பரிசு அறிவிப்பு! #NobelPrize #Chemistry

chemistry.jpg

ந்த ஆண்டிற்கான நோபல் பரிசுகள் இந்த வாரம் முழுவதும் அறிவிக்கப்பட்டு வருகின்றன. ஏற்கனவே மருத்துவம் மற்றும் இயற்பியல் துறைகளுக்கான நோபல் பரிசுகள் அறிவிக்கப்பட்டிருந்தன. அதைத் தொடர்ந்து இன்று வேதியியல் துறைக்கான நோபல் பரிசு அறிவிக்கப்பட்டது. அதன்படி, இந்த ஆண்டிற்கான வேதியியல் துறைக்கான நோபல் பரிசு, பிரான்ஸ் நாட்டை சேர்ந்த, ஜான் பியர் சாவேஜ், அமெரிக்காவை சேர்ந்த , சர்.ஜெ.ஃபிரேசர் ஸ்டோடர்ட் மற்றும் நெதர்லாந்தை சேர்ந்த பெர்னார்ட் ஃபெரிங்கா ஆகிய மூன்று விஞ்ஞானிகளுக்கு வழங்கப்பட உள்ளது.

BREAKING NEWS 2016 #NobelPrize in Chemistry to Jean-Pierre Sauvage, Sir J. Fraser Stoddart and Bernard L. Feringa

Ct_p2E-XgAAYUmm.jpg

 

உலகின் மிகச்சிறிதான இயந்திரங்களை வடிவமைத்தற்காக இவர்களுக்கு இந்த பரிசு வழங்கப்படுகிறது. அதாவது மூலக்கூறுகளின் உதவியுடன், பல மூலக்கூறுகளை இணைத்து, ஒரு இயந்திரமாக வடிவமைத்திருக்கின்றனர். இவர்கள் வடிவமைத்த இந்த சிறிய இயந்திரங்கள் மனித முடியை விட, 1000 மடங்கு சிறியவை. வேதியியல் ஆற்றலை, இயந்திர ஆற்றலாக மற்றும் இயக்கங்களாக மாற்றும் பண்பை இந்த மூலக்கூறு இயந்திரங்கள் கொண்டுள்ளன

 

வரும் வெள்ளிக்கிழமை நடக்கும் நிகழ்ச்சியில், அமைதிக்கான நோபல் பரிசும், 10-ம் தேதி பொருளாதாரத்திற்கான நோபல் பரிசும் அறிவிக்கப்பட இருக்கின்றன.

http://www.vikatan.com/news/miscellaneous/69195-jean-pierre-sauvage-sir-fraser-stoddart-and-bernard-feringa-win-nobel-prize-in-chemistry.art

  • தொடங்கியவர்

 

  • தொடங்கியவர்

2016-ம் ஆண்டுக்கான பொருளாதார நோபல் பரிசு இருவருக்கு அறிவிப்பு

 

 
பெங்ட் ஹோம்ஸ்டோர்ம் மற்றும் ஆலிவர் ஹார்ட். | படம்: நோபல் அகாடமி.
பெங்ட் ஹோம்ஸ்டோர்ம் மற்றும் ஆலிவர் ஹார்ட். | படம்: நோபல் அகாடமி.

2016-ம் ஆண்டு பொருளாதார அறிவியலுக்கான நோபல் பரிசு இரண்டு அமெரிக்க ஆய்வாளர்களுக்கு அறிவிக்கப்பட்டுள்ளது.

ஹார்வர்ட் பல்கலைக் கழகத்தைச் சேர்ந்த ஆலிவர் ஹார்ட் மற்றும் மாசாசுசெட்ஸ் தொழில்நுட்ப பல்கலைக் கழகத்தின் ஆய்வாளர் பெங்ட் ஹோம்ஸ்ட்ரோம் ஆகியோருக்கு அறிவிக்கபட்டுள்ளது.

குடிமக்கள், அரசுகள், வர்த்தகங்கள், பங்குதாரர்கள் மற்றும் நிறுவனத்தின் முன்னிலை நிர்வாகத்தினர், காப்பீட்டு நிறுவனம் மற்றும் கார் முதலாளிகள் என்று ஒப்பந்த உறவுகளை, அதாவது வாழ்க்கையில் உள்ள ஒப்பந்தங்கள் மற்றும் நிறுவனங்கள் தொடர்பான ஆய்வில் புதிய கண்டுபிடிப்புகளை நிகழ்த்தியதற்காக இவர்களுக்கு இந்த நோபல் அறிவிக்கப்பட்டுள்ளது.

ஒப்பந்தங்களில் பொதுகாக எதிரெதிர் இரட்டை நலன்கள் இருப்பது வழக்கம் எனவே ஒப்பந்தங்களை வடிவமைப்பதில் இருதரப்பினரும் பயனுள்ள முடிவுகளை எடுக்கும் விதமான ஒப்பந்தங்களை வடிவமைக்க வேண்டும்.

இந்த நோபல் பொருளாதார அறிஞர்கள் ‘ஒப்பந்தக் கோட்பாடு’ ஒன்றை உருவாக்கினர். ஒப்பந்த வடிவமைப்பில் உள்ள பல்வேறு சட்டகங்கள், சிக்கல்கள், ஆகியவற்றை ஒட்டுமொத்தமான ஒரு திட்டத்தின் கீழ் வடிவமைப்பின் கீழ் கொண்டு வர இவர்களது ஆய்வு உதவி புரிகிறது.

உதாரணமாக முதன்மை செயலதிகாரிகளின் வேலைத்திறமைக்கேற்ப சம்பளம் நிர்ணயம் செய்வது, பொதுத்துறை நடவடிக்கைகளை தனியார்மயப்படுத்துவது குறித்த ஒப்பந்த வடிவமைப்புகள் என்று இவர்கள் ஆய்வு ஒருங்கிணைந்த ஒப்பந்தம் பற்றிய கோட்பாட்டை உருவாக்கியதற்காக நோபல் வழங்கப்பட்டுள்ளது.

இன்றைய ஒப்பந்தங்கள் பலவும் இவரது ஒப்பந்தக் கோட்பாட்டை அடிப்படையாகக் கொண்டது என்றால் மிகையாகாது, அரசியல் சட்ட வடிவமைப்புகள் முதல் திவால் சட்டங்கள் வரை அனைத்துக் கொள்கை வடிவமைப்புகளுக்கும் இவர்களது கோட்பாடுதான் ஒரு அறிவார்த்த சட்டகத்தையும் அடித்தளத்தையும் வழங்குகிறது.

http://tamil.thehindu.com/world/2016ம்-ஆண்டுக்கான-பொருளாதார-நோபல்-பரிசு-இருவருக்கு-அறிவிப்பு/article9206970.ece?homepage=true

  • தொடங்கியவர்

அமெரிக்க பாடலாசிரியர் பாப் டிலனுக்கு நோபல் பரிசு

nobil2013131.jpg

அமெரிக்க பாடலாசிரியர் பாப் டிலனுக்கு இலக்கியத்துக்கான நோபல் பரிசு அறிவிக்கப்பட்டுள்ளது.

2016ஆம் ஆண்டின் நோபல் பரிசுகள் அறிவிக்கப்பட்டு வருகிறது. பொருளாதாரம், மருத்துவம் உள்ளிட்ட பல்வேறு துறைகளுக்கான நோபல் பரிசுகள் அறிவிக்கப்பட்டு வருகிறது.

இந்த நிலையில், அமெரிக்க பாடலாசிரியர் பாப் டிலனுக்கு இலக்கியத்துக்கான நோபல் பரிசு அறிவிக்கப்பட்டுள்ளது.

அமெரிக்க கவிதை உலகில புதிய பரிமாணத்தை ஏற்படுத்தியதற்காக டாப் டிலனுக்கு நோபல் பரிசு வழங்கப்பட்டுள்ளது. தத்துவம், அரசியல், சமூகம் சார்ந்த பாடல்களை இவர் எழுதியுள்ளார். கோல்டன் குளோப், கிராம்மி விருதுகளை வென்றவர் பாப் டிலன்.

http://www.vikatan.com/news/world/69532-us-songwriter-bob-dylan-wins-nobel-peace-prize-for-literature.art

  • தொடங்கியவர்

புரட்சிப்பாடகன் பாப் டிலனுக்கு இலக்கியத்துக்கான நோபல் பரிசு! #BobDylan

unnamed_19130.jpg

2016-ம் ஆண்டு இலக்கியத்துக்கான நோபல் பரிசு, அமெரிக்காவைச் சேர்ந்த கவிஞரும் இசை ஆளுமையுமான பாப் டிலனுக்கு (Bob Dylan)வழங்கப்படுகிறது. கென்யாவைச் சேர்ந்த ஆங்கில நாவலாசிரியர் நுகிகி வா தியாங்கோ, ஜப்பானிய எழுத்தாளர் ஹருகி முரகாமி, `போர்ட்நாய்ஸ் கம்ப்ளைண்ட்' என்ற சர்ச்சைக்குரிய நாவல் மூலம் உலகின் கவனத்தை ஈர்த்த அமெரிக்க நாவலாசிரியர் பிலிப் ராத்.. இவர்களில் ஒருவருக்கு கிடைக்கக்கூடும் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில், அமெரிக்காவின் புரட்சிப்பாடகரான டிலனை தேர்வு செய்து வியப்பை உருவாக்கியிருக்கிறது ஸ்வீடன் அகாடமி. 

டிலன், அமெரிக்காவின் மினஸோட்டா மாகாணத்தில் உள்ள துளூத் (Duluth)நகரில் ஒரு நடுத்தரக் குடும்பத்தில் 1941, மே 24ம் தேதி பிறந்தவர். அப்பா போலியோவால் பாதிக்கப்பட்டவர். அம்மாவே உலகமென வளர்ந்தவர். இவருடைய மூதாதையர்கள், 1905ல் ரஷ்யாவில் யூதர்களைக் குறிவைத்து நடந்த படுகொலை சம்பவங்களுக்கு அஞ்சி அமெரிக்காவுக்கு இடம் பெயர்ந்தவர்கள். 'ராபர்ட் ஆலன் ஸிம்மர்மேன்' என்ற இயற்பெயர் கொண்ட டிலன், இளவயதிலேயே அமெரிக்க நாட்டுப்புற இசை மீது தீராத் தாகம் கொண்டார். பள்ளிக் காலத்திலேயே தனி இசைக்குழுக்கள் உருவாக்கி காஃபி விடுதிகளில் பாடத் தொடங்கினார். விரக்தி, கோபம், மகிழ்ச்சி, நம்பிக்கை, ஆவேசம், கொண்டாட்டம் என என சகல உணர்வுகளும் நிரம்பிய டிலனின் பாடல்கள் அமெரிக்க இளைஞர்களை வெகுவாக ஆட்கொண்டன. இசையின் மீதியிருந்த ஈடுபாட்டால் முதல் ஆண்டோடு கல்லூரியில் இருந்து இடை நின்ற டிலன், நியூயார்க் சென்று தீவிரமாக இசை நிகழ்ச்சிகளில் பங்கேற்றார். 1962ல் வெளிவந்த இவரது முதல் இசைத்தொகுப்பான Ôபாப் டிலன்Õ அமெரிக்க இசை ரசிகர்கள் மத்தியில் மிகப்பெரும் கவனத்தை உருவாக்கிக் கொடுத்தது.  

இசைக்கருவிகளின் சத்தத்திற்கு இரையாகாமல், தனித்தன்மையோடும், நகைச்சுவையோடும் வெளிப்பட்ட டிலனின் வார்த்தைகள் இளைஞர்களை வசீகரித்தன. 1963ல் வெளிவந்த அவரது இரண்டாவது இசைத்தொகுப்பான `தி ப்ரிவீலிங் பாப் டிலன்", அவரை தனித்து அடையாளம் காட்டியது. கருப்பின மக்கள் எதிர்கொள்ளும் சிக்கல்களையும், அரசியல் மற்றும் சமூகச் சூழலையும், அணு ஆயுதங்களால் ஏற்படும் கேடுகளையும் விவரிக்கும் பாடல்கள் அதில் இடம் பெற்றன. அதன்பிறகு வெளியான பெரும்பாலான இசைத் தொகுப்புகளில் டிலன், மனித உரிமைகளையும், சமூக ஒடுக்குமுறைகளையும் வெளிப்படையாகவே விமர்சித்தார். அவரது பல நிகழ்ச்சிகள் ரத்து செய்யப்பட்டன. நிகழ்ச்சிகளில் வன்முறைகள் நடந்தன. தொடக்கத்தில் நாட்டுப்புற இசையில் மட்டுமே ஆதிக்கம் செலுத்திய டிலன் காலப்போக்கில் ராப், ராக் பாடல்களின் திசையிலும் பயணித்தார். இந்தாண்டு வெளிவந்த ஃபாலென் ஏஞ்சல் இசைத்தொகுப்பையும் சேர்த்து, 69 இசைத்தொகுப்புகள் வெளிவந்துள்ளன. 10க்கும் மேற்பட்ட திரைப்படங்களிலும் இசை, நடிப்பு, பாடல் என பல நிலைகளில் பங்களிப்பு செய்திருக்கிறார். மேன் ஹேவ் நேம்ஸ் அன்ட் ஆல்தி அனிமல்,  பாப் டிலன் சாங் புக் உள்பட கவிதைகள், ஓவியங்கள், பாடல்களை உள்ளடக்கி 28 புத்தகங்களும் வெளிவந்திருக்கிறது. எலியட்ஸ்,  கீத்ஸ், டென்னிஸன் போன்ற இசைமாமேதைகள் வரிசையில் வைக்கத் ஆளுமையாக உலக இசை வல்லுனர்கள் டிலனை கொண்டாடுகிறார்கள். 

1979ல் வெளியிடப்பட்ட ஸ்லோ ட்ரெயின் கமிங் என்ற இசைத்தொகுப்புக்காக கிராமி விருதையும், 2000மாவது ஆண்டில் வெளிவந்த ஒண்டர் பாய்ஸ் என்ற படத்தில் இடம்பெற்ற பாடலுக்காக ஆஸ்கர் மற்றும் கோல்டன் குளோப் விருதையும் பெற்றிருக்கிறார் டிலன். `கவித்துவமான உணர்களால் அமெரிக்க இசைக்கலாச்சாரத்தை மேம்படுத்தியவர்' என்று டிலனை கொண்டாடி இப்போது நோபல் பரிசை வழங்கியிருக்கிறது ஸ்வீடன் அகாடமி. 

டிலனின் வாழ்க்கை இசையால் நிரம்பியது என்றாலும் பெரும்பாலும் போராட்டங்களும் அவரின் வாழ்க்கையில் அங்கமாக இருந்திருக்கின்றன. ஏராளமான இளைஞர்களின் ஏகோபித்த இசை ஆளுமையாக விளங்கினாலும் பெரும்பாலான ஆதிக்க மையங்கள் டிலனுக்கு எதிராகவே செயல்பட்டன. எதற்காகவும் தன் இயல்பை விட்டுக்கொடுக்கவில்லை டிலன். இலக்கணங்களைத் தகர்த்து, கரடுமுரடாக தொடங்கும் டிலனின் இசை, ஒரு கட்டத்தில் ஒட்டுமொத்த உணர்வுகளின் சங்கமமாக மாறி, உச்சமாக ரசிகனைப் பற்றிக்கொள்ளும். நகைச்சுவையும் பகடி ததும்பும் அவரது விமர்சனங்களும் அவரை உலகத்தின் தனித்தன்மை மிக்க இசைக்கலைஞனாகவும் பாடலாசிரியனாகவும் மாற்றியது. 

டிலன் தான் சம்பாதித்த செல்வத்தை சேவைகளுக்கு கொட்டிக் கொடுத்தார். ஆப்பிரிக்க நாடுகளின் பஞ்சத்தைப் போக்க ஏராளமான இசை நிகழ்ச்சிகளை நடத்தி நிதி திரட்டினார். இன்றளவும் அவருக்கு கிடைக்கும் உரிமத்தொகைகள் நன்கொடைகளாக பல்வேறு அமைப்புகளுக்கு செல்கின்றன.

வழக்கமான மரபுகளை உடைத்து, இசை ஆளுமையாக, மனித உரிமை செயற்பாட்டாளராக, எளிய மக்களின் துயரத்தைப் பாடும் புரட்சிப்பாடகனாக பயணித்துக் கொண்டிருக்கும் பாப் டிலனுக்கு இலக்கியத்துக்கான நோபல் பரிசை வழங்கி இந்தாண்டு புதிய வரலாற்றைப் படைத்திருக்கிறது ஸ்வீடன் அகாடமி.  

 

 

 

 

http://www.vikatan.com/news/miscellaneous/69559-bob-dylan-wins-nobel-literature-prize.art

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.