Skip to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

வடமாகாண விவசாய அமைச்சுக்கு சொந்தமான 29 இடங்கள் படையினர் வசம்

Featured Replies

வடமாகாண விவசாய அமைச்சுக்கு சொந்தமான விவசாய பண்ணை, விவசாய விதை உற்பத்தி நிலையம், விடுதிகள் உள்ளிட்ட 29 இடங்களையும், அவற்றின் சுமார் 2072.103 ஏக்கர் நிலத்தையும் படையினர் ஆக்கிரமித்திருப்பதாக மாகாண விவசாய அமைச்சு சுட்டிக்காட்டியுள்ளதுடன்,

மேற்படி ஆக்கிரமிப்பு தொடர்பான தரவுகளை வடமாகாண முதலமைச்சர் சீ.வி.விக்னேஷ்வரனிடம் ஒப்படைத்துள்ளது.

கிளிநொச்சி, முல்லைத்தீவு, மன்னார், வவுனியா மாவட்டங்களில் மாகாண விவசாய அமைச்சுக்கு சொந்தமா ன 29 இடங்கள் படையினரால் ஆக்கிரமிக்கப்பட்டு தொடர்ந்தம் படையினரின் கட்டுப்பாட்டின் கீழ் உள்ளது.

இவற்றில் கிளிநொச்சி மாவட்டத்தில் 12 இடங்களும், முல்லைத்தீவு மாவட்டத்தில் 07 இடங்களும், வவுனியா மாவட்டத் தில் 06 இடங்களும், மன்னார் மாவட்டத்தில் 04 இடங்களுமாக 29 இடங்கள் இவ்வாறு ஆக்கிரமிக்கப்பட்டுள்ளதாக அமைச்சு சுட்டிக்காட்டுகிறது.

மேலும் கிளிநொச்சி- பல்லவராயன்கட்டு மரமுந்திரிகை பண்ணை, கிளிநொச்சி- முட்கொம்பன் தென்னை பண்ணை, கிளிநொச்சி- கனகாம்பிகை குளம் பண்ணை, வவுனியா- பெரியகுளம் நாரத்தை பாம்,

மன்னார்- வெள்ளாங்குளம் தோட்டக்கலை பண்i ண, முல்லைத்தீவு- தேராவில் தோட்டக்கலை பண்ணை, முல்லைத்தீவு- தேறாங்கண்டல் பண்ணை ஆகிய 7 பாரிய விவசாய பண்ணைகளும் அந்த பண்கைளுக்குரிய சுமார் 1496.06 ஏக்க ர் நிலமும் போருக்கு பின்னர் படையினருடைய கட்டுப்பாட்டில் உள்ளது.

இவற்றில் மன்னார்- வெள்ளாங்குளம் தோட்டக்கலை பண்ணை மற்றும் முல்லைத்தீவு- தேராவில் தோட்டக்கலை பண்ணை ஆகியவற்றில் சுமார் 15 வரையான பழமர கன்றுகள் உற்பத்தி செய்வதற்கான வசதிகள் செய்யப்பட்டுள்ளது.

மேலும் விதை உற்பத்தி நிலையங்கள், உத்தியோகஸ்த்தர்களுக்கான தங்குமிடங்கள், பயிற்சி பாடசாலைகள் உள்ளிட்டவை அடங்குகின்றது என அமைச்சு சுட்டிக்காட்டியுள்ளதுடன்,

மேற்படி இடங்களை மீளவும் மாகாண விவசாய அமைச்சிடம் கையளிக்கவேண்டும் என பல தடவைகள், பல சந்தர்ப்பங்களில் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளபோதும் எந்தவிதமான நடவடிக்கைகளும் எடுக்கப்பட்டதாக இல்லை எனவும் சுட்டிக்காட்டியுள்ளது.

இதேவேளை மேற்படி விடயம் தொடர்பாக மாகாண விவசாய அமைச்சர் பொ.ஐ ங்கரநேசனை தொடர்பு கொண்டு கேட்டபோது,

மாகாண விவசாய அமைச்சு வடமாகாண விவசாய அமைச்சுக்கு சொந்தமான 29 இடங்களை படையினர் ஆக்கிரமித்து வைத்துள்ள விடயம் தொடர்பாக சகல தரவுகளும் சேகரிக்கப்பட்டு முதலமைச்சரிடம் ஒப்படைக்கப்படவுள்ளது.

அதன் தொடர்ச்சியாக மேல் நடவடிக்கைகளை எடுப்பதன் ஊடாக அந்த நிலங்களை படையினரிடமிருந்து விடுவிப்பதற்கான முயற்சிகள் முதலமைச்சர் மேற்கொள்ள வேண்டும் என்ற கோரிக்கையினை மாகாண விவசாய அமைச்சு முதலமைச்சருக்கு விடுக்கும் எனவும் அவர் கூறியுள்ளார்.

http://www.tamilwin.com/community/01/120129?ref=home

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.