Skip to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

ஜனாதிபதி தெரிவித்துள்ள விடயங்கள் குறித்து அவரே விளக்கமளிக்கவேண்டும் : சர்வதேச ரீதியில் பெரும் சர்ச்சை என்கிறார் மனோ

Featured Replies

ஜனாதிபதி தெரிவித்துள்ள விடயங்கள்  குறித்து அவரே விளக்கமளிக்கவேண்டும் : சர்வதேச ரீதியில் பெரும் சர்ச்சை என்கிறார் மனோ  

 

புலனாய்வு துறை  மற்றும் நிதி குற்றப்புலனாய்வு துறை தொடர்பாக ஜனாதிபதி தெரிவித்துள்ள கருத்து தொடர்பில் ஜனாதிபதியே விளக்கமளிக்கவேண்டும். அத்துடன் இதுதொடர்பில் நாட்டுக்குள் மட்டுமன்றி சர்வதேச ரீதியிலும் பெரும் சர்ச்சை ஏற்பட்டுள்ளது என தேசிய சகவாழ்வு கலந்துரையாடல் மற்றும் அரச கருமமொழிகள் அமைச்சர் மனோகணேசன் தெரிவித்தார்.

Mano.jpg

மேலும் இனங்களுக்கிடையில் சகவாழ்வை ஏற்படுத்தும் வேலைத்திட்டங்களை மேற்கொள்வதில் ஒருபோதும் சலைக்கமாட்டேன் எனவும் அவர் குறிப்பிட்டார்.    

தேசிய மொழிக்கொள்கை மற்றும் சகவாழ்வு தொடர்பான செயலாமர்வு நேற்று கொழும்பு இலங்கை மன்றக் கல்லூரியில்  நடைபெற்றது. இதில் பிரதம அதிதியாக கலந்துகொண்டு உரையாற்றுகையிலேயே அவர் இவ்வாறு தெரிவித்தார்.

அவர் அங்கு தொடர்ந்து கூறுகையில்,

கடந்த காலத்தில் நாட்டில் இருந்துவந்த அடிப்படைவாதம் இனவாதம் மற்றும் பயங்கரவாதத்தை மீண்டும் நாட்டுக்குள் ஏற்படுத்த சிலர் முயற்சிக்கின்றனர். இவ்வாறான நிலையில் நல்லாட்சி அரசாங்கத்தின் கீழ் இனங்களுக்கிடையில் சகவாழ்வு மற்றும் நல்லிணக்கத்தை ஏற்படுத்துவதற்கு எமது அமைச்சின் கீழ் நடவடிக்கை எடுத்துவருகின்றோம். அதன் அடிப்படையிலேயே இன்றையதினம் நாட்டில் இருக்கும் பல்கலைக்கழகங்களின் வேந்தர்கள் உபவேந்தர்கள் விரிவுரையாளர்கள் மற்றும் பலகலைக்கழகங்களைச் சேர்ந்தவர்களுடன் இதுதொடர்பாக கலந்துரையாடல் செயலமர்வொன்றை மேற்கொண்டுள்ளோம்.

அடிப்படைவாதம் இனவாதத்தை ஏற்படுத்த முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டாலும் நாட்டில் இனங்களுக்கிடையில் சகவாழ்வை ஏற்படுத்தும் வேலைத்திட்டங்களை சளைக்காமல் மேற்கொள்வேன். அத்துடன் இன்றையதினம் இங்கு வந்திருக்கக்கூயவர்களிடம் இருந்து பெறக்கூடிய பிரேரணைகளை அடிப்படையாக்கொண்டு கலந்துரையாடல்களை மேற்கொள்வேன் என்றார்.

ஜனாதிபதியின் உரைதொடர்பில் கேட்கப்பட்ட கேள்வியொன்றுக்கு அமைச்சர் பதிலளிக்கையில்,  

புலனாய்வு துறை  மற்றும் நிதி குற்றப்புலனாய்வு துறை தொடர்பாக ஜனாதிபதி தெரிவித்துள்ள கருத்து தொடர்பில் ஜனாதிபதியே விளக்கமளிக்கவேண்டும். ஜனாதிபதியின் கருத்து நாட்டுக்குள் மாத்திரமின்றி சர்வதேச சமூகத்துக்குள்ளும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. இதுதொடர்பாக கொழும்பில் இருக்கும் சில வெளிநாட்டு தூதுவர்கள் என்னுடன் கலந்துரையாடினர், கேள்வியெழுப்பினர்.

எனவே ஜனாதிபதியின் உரையின் உண்மை அர்த்தத்தை ஜனாதிபதிதான் தெரிவிக்கவேண்டும். என்றாலும் ஊழல் மோசடி தொடர்பாக விசாரணைகளை மேற்கொள்ளக்கூடியவர்கள் எந்தவொரு அரசியல் நிகழ்ச்சி நிரலிலும் இல்லாமல் செயற்படவேண்டும் என்ற கருத்தில்தான் ஜனாதிபதி தெரிவித்திருப்பார் என நான் நினைக்கின்றேன்.

அத்துடன் நாட்டில் இருக்கும் அல்லது இருந்த பிரதான நபர்கள் தொடர்பில் நடவடிக்கைகளை மேற்கொள்ளும் போது அது தொடர்பில் ஜனாதிபதி மற்றும் பிரதமருக்கு அறிவிப்பது கட்டாயமாகும். அது நாட்டின் சம்பிரதாயமாகும். இந்தியா உட்பட வெளிநாடுகளிலும் அவ்வாறுதான் மேற்கொள்ளப்படுகின்றது. 

அதனால் யாரும் இதற்காகவேண்டி குழப்பமடைந்து பதவிகளை இராஜினாமா செய்யவேண்டியதில்லை. ஏனெனில் நாங்கள் ஆரம்பித்துள்ள ஊழலுக்கு எதிரான இந்த பயணத்தை தொடர்ந்து மேற்கொள்ளவேண்டும். கடந்த அரசாங்க காலத்தில் மேற்கொள்ளப்பட்ட ஊாழல் குற்றச்சாட்டுக்கள் போன்று இந்த அரசாங்கத்தில் ஏற்பட்டுள்ள மத்திய வங்கி பிணைமுறி தொடர்பான குற்றச்சாட்டு தொடர்பாகவும் விசாரணை நடத்தப்படவேண்டும்.

எனவே ஊழல் மோசடி தொடர்பாக இந்த அரசாங்கத்தில் விசாரணைகள் சுதந்திரமாக நடத்தப்படுகின்றன. ஜனாதிபதி ஒருபோதும் விசாரணைகளுக்கு தடையாக இருக்கமாடார் என்றார்.

http://www.virakesari.lk/article/12393

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.