Skip to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

லசந்த கொலையாளி தொடர்பில் சமூக வலைத்தளங்களில் பல்வேறு கருத்துக்கள்

Featured Replies

சன்டே லீடர் பத்திரிகையின் ஸ்தாபக ஆசிரியரான ஊடகவியலாளர் லசந்த விக்ரமதுங்கவை கொலை செய்தது தானே கூறி, கேகாலை கரடுபான பிரதேசத்தில் சுருக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட 51 வயதான நபரின் புகைப்படத்தையும், லசந்தவை கொலை செய்தவர் என கடந்த பெப்ரவரி 17 ஆம் திகதி பொலிஸ் சித்திர கலைஞர்கள் வெளியிட்ட அடர்த்தியான மீசையுடன் கூடிய நபரின் புகைப்படத்தையும் ஒப்பிட்டு பார்த்து சமூக வலைத்தளங்களில் பல்வேறு கருத்துக்கள் வெளியிடப்பட்டு வருகின்றன.

லசந்த விக்ரமதுங்கவின் சாரதி மற்றும் சாட்சியாளர்களின் வாக்குமூலத்தை அடிப்படையாக கொண்டு பொலிஸ் சித்திர கலைஞர்கள் இரண்டு வரைப்படங்களை ஊடகங்களுக்கு வெளியிட்டிருந்தனர்.

 

625.0.560.320.160.600.053.800.668.160.90.jpg

 

பொலிஸார் வெளியிட்ட அடர்த்தியான மீசையுடன் கூடிய வரைப்படத்துடன் ஒப்பிட்டு பார்க்கும் போது, முன்னாள் ஜனாதிபதியின் பாதுகாப்பாளராகவும் சாரதியாகவும் பின்னர் ஷிரந்தி ராஜபக்சவின் சாரதியாக பணியாற்றிய கெப்டன் திஸ்ஸ என்பவருடன் புகைப்படத்துடன் ஒப்பிட்டு பார்க்கும் அது திஸ்ஸவின் உருவத்துடன் பொருந்துகிறது.

625.0.560.320.160.600.053.800.668.160.90.jpg

கெப்டன் திஸ்ஸ என்பவரே பிரபல றக்பி வீரர் வசிம் தாஜூடீனின் கொலையுடன் தொடர்புடைய பிரதான சந்தேக நபர் என சமூக வலைத்தளங்களிலும் இணைய ஊடகங்களிலும் கூறப்பட்டு வந்தன. திஸ்ஸ திருகோணமலை கடற்படை முகாமில் தடுத்து வைக்கப்பட்டுள்ளதாகவும் செய்திகள் வெளியாகின. எனினும் கெப்டன் திஸ்ஸ பற்றி தற்போது எந்த தகவல்களும் வெளிவருவதில்லை.

இந்த நிலையில், நேற்று தற்கொலை செய்து கொண்ட ஓய்வு பெற்ற இராணுவப் புலனாய்வு அதிகாரி சம்பந்தமாக குற்றப் புலனாய்வுப் பிரிவினர் விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர். இலந்தரகே ஜயமான்ன என்ற இந்த புலனாய்வுப் பிரிவு அதிகாரி 2007 ஆம் ஆண்டு ஓய்வுபெற்றுள்ளார். எனினும் லசந்த விக்ரமதுங்க 2009 ஆம் ஆண்டு ஜனவரி 8 ஆம் திகதி கொல்லப்பட்டார்.

625.0.560.320.160.600.053.800.668.160.90.jpg

இந்த நபர் ஏற்கனவே மில்லேனியம் சிட்டியில் வீடொன்றில் ஆயுத களஞ்சியம் ஒன்று இயங்கிய சம்பவம் தொடர்பில் கைது செய்யப்பட்டவர் என்றும் தெரியவந்துள்ளது.

லசந்த விக்ரமதுங்க கொலை செய்யப்பட்ட பின்னர், அவரது சாரதியை கடத்திச் சென்று தடுத்து வைத்து மரண அச்சுறுத்தல் விடுத்ததாக குற்றம் சுமத்தப்பட்டு கைது செய்யப்பட்டுள்ள இராணுவப் புலனாய்வுப் பிரிவின் முன்னாள் சார்ஜன்ட் பிரேமானந்த உதலாகம தனது நண்பர் எனவும்

அவரை விடுவிக்குமாறும் தற்கொலை செய்து கொண்டு ஓய்வுபெற்ற இராணுவப் புலனாய்வுப் பிரிவின் உறுப்பினர் இறப்பதற்கு முன்னர் எழுதியதாக கூறப்படும் கடிதத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.

http://www.tamilwin.com/community/01/121109?ref=home

  • தொடங்கியவர்

தற்கொலைக்கு இவரை தெரிவு செய்தது யார்? கேள்விகளால் உருவாகும் பூதம் போன்ற சந்தேகங்கள்

ஊடகவியலாளர் லசந்த விக்ரமதுங்கவின் கொலைக்கு தான்தான் காரணம் என பொறுப்பேற்று நேற்றைய தினம் தனது வீட்டில் தற்கொலை செய்துக் கொண்டுள்ள ஓய்வுப் பெற்ற இராணுவ அதிகாரி குறித்து பல சர்ச்சைகள் எழுந்துள்ளதாக ஆங்கில ஊடகம் ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது.

இந்த தற்கொலையில் பல சர்ச்சைக்குரிய கேள்விகள் எழுப்பியுள்ளதோடு, அந்த கேள்விகளிலிருந்தே மறைந்துள்ள பல விடயங்கள் வெளிவரத் தொடங்கியுள்ளன. இந்தக் கேள்விகளும் அதிலிருந்து வரும் பதில்களையும் சற்று நாமும் ஆராய்ந்து பார்ப்போம்.

625.0.560.320.160.600.053.800.668.160.90.jpg

 

1. மூன்று பிள்ளைகளின் தந்தையான 51 வயது இராணுவ அதிகாரி ஏன் தற்கொலை செய்துக் கொள்ள வேண்டும்?

2. தற்கொலை செய்துக் கொள்ள யாராவது அவரை தூண்டியுள்ளார்களா?

3. குறித்த கடிதத்தை எழுதியது அவரா? அல்லது வேறு யாருடையாவது சதியா?

4. லசந்த கொலை தொடர்பில் கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள மலிந்த உடலகமவை, குறித்த இராணுவ அதிகாரி சிறைச்சாலையில் சென்று பார்வையிட்டிருப்பாரோ?

625.0.560.320.160.600.053.800.668.160.90.jpg

இதில் மிக முக்கியமான கேள்வி ஒன்று எழுப்பப்பட்டே ஆக வேண்டும், அதாவது

5. “லசந்த விக்ரமதுங்க கொலை செய்யப்பட்ட போது, இரண்டு மோட்டார் வாகனங்கள் அவரை தொடர்ந்து சென்றதாக சாட்சியாளர்களால் குறிப்பிடப்பட்டிருந்தது.” அப்படி என்றால் இந்த கொலையை தான் மட்டும் செய்துள்ளதாக இராணுவ அதிகாரி அவரது கடிதத்தில் எவ்வாறு குறிப்பிட்டிருக்க முடியும்?

6. ஏன் மற்றைய நபரின் பெயர் சுட்டிக்காட்டப்படவில்லை?

7. இந்த வழக்கில் ஒரு திசை திருப்பம் உள்ளதா?

8. தூக்கு மேடை முக்கிய பிரமுகர் இருவருடைய கழுத்துக்கு மேல் தொங்கியுள்ள நிலையில், எவ்வாறு அந்த தூக்கு கயிர் திசைமாறி இராணுவ அதிகாரியின் பக்கம் போனது?

என அரசியல் ஆர்வலர்கள் பலவாறு தங்களது கேள்விகளை எழுப்பிக் கொண்டிருக்கின்றனர்.

 

625.0.560.320.160.600.053.800.668.160.90.png

 

இருப்பினும் அண்மையில் இராணுவ அதிகாரிகளுக்கு பாதுகாப்பு வேண்டும் என ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்திருந்தார். ஜனாதிபதியின் இந்த கருத்துக்கள் தற்கொலை செய்துக் கொள்வதற்கு முன்னரே அறிவிக்கப்பட்டிருந்தது.

9. லசந்த கொலை மற்றும் பிரகீத் எக்னெலிகொட காணாமல் ஆக்கப்பட்ட சம்பவத்துடன் இராணுவத்தை சேர்ந்தவர்களே தொடர்புடையவர்கள் என்பதாலேயே ஜனாதிபதி அந்த கருத்தை வெளியிட்டிருப்பாரோ?

10. சரி, தற்கொலை குறிப்பு உள்ளது என கூறியது யார்? என பல்வேறு கேள்விகள் எழுப்பட்டு வரும் நிலையில், இது முதலில் ஒரு தற்கொலையா? அல்லது சம்பவத்துடன் தொடர்புடையவர்கள் பணம் அனுப்ப வில்லையா?

குற்றப்புலனாய்வு பிரிவு மற்றும் நீதிமன்றங்கள் நிச்சயமாக இதே கேள்விகளை கேட்கும் என குறிப்பிடப்பட்டுள்ளது.

இதேவேளை, அண்மையில் லசந்த விக்ரமதுங்கவின் சடலம் தோண்டி எடுக்கப்பட்டது. இதன்போது இந்த கொலை சம்பவம் புதிய கோணத்தில் விசாரணைகள் இடம்பெற்றன.

அதில் விசாரணைகள் மேற்கொள்ளப்பட்டு வந்த நிலையில் கோத்தபாய மற்றும் பொன்சேகாவின் பெயர்கள் பரபரப்பாக பேசப்பட்டு வந்தன, இவர்களுடைய கழுத்துக்கு மேலேயே தூக்கு கயிர்கள் தொங்கிக்கொண்டு இருப்பதாகவும், யார் சிக்கப்போகின்றார்கள் என்றும் எதிர்பார்த்துக் கொண்டிருக்கும் நிலையில், தடீரென ஒரு பலியாடு சிக்கியது என்று செய்திகள் வெளிவந்துள்ளன.

ஒருவேலை லசந்தவை இவரே கொலைசெய்திருந்தாலும், சுமார் 12 வருடங்களாக ஓய்வுப் பெற்ற இந்த இராணுவ அதிகாரி இப்போது தற்கொலை செய்துக் கொண்டிருக்க வேண்டிய அவசியமே இல்லை. ஏனெனில் “கொலை செய்தவன் நான் தான்” என அறிவித்திருந்தால் நீதிமன்றமே தூக்குத் தண்டனையை வழங்கியிருக்குகுமே? அது கூட தெரியாத சிரேஸ்ட இராணுவ அதிகாரியா அவர்???

இவரின் மரணத்தை பல கோணங்களில் நோக்கும் போது பல்வேறு விதமான சந்தேகங்கள் எழுந்துக் கொண்டு வருகின்றன.

இந்த கொலையை செய்தவர்கள் தாம் குற்றவாளி என்ற விடயம் அம்பலமாகிவிடும் என்ற பயத்தினால் தான் இவரை மாட்டிவிட்டார்களா? கொலை செய்துவிட்டு கடிதத்தை எழுதி வைத்துள்ளார்களா?

பயத்தில் செய்யப்பட்ட சதியாக இருக்கலாமோ? குறித்த இராணுவ அதிகாரிக்கு பல அழுத்தங்கள் மேற்கொள்ளப்பட்டனவோ?

இதில் சுட்டிக்காட்டத்தக்க விடயம் ஒன்று உண்டு. லசந்த கொலையில் சந்தேகப்பட்ட இருவரில் ஒருவரான கோத்தபாய தற்போது நாட்டில் இல்லை என்ற விடயமும் சற்றே முனுமுனுக்கப்படுகின்றமையை ஆர்வலர்கள் காதில் விழத்தான் செய்கின்றன.

http://www.tamilwin.com/statements/01/121126?ref=right_featured

  • தொடங்கியவர்

லசந்தவின் கொலைக்கு உரிமை கோரி இராணுவ வீரர் தற்கொலை! தொலைபேசி பதிவுகள் கண்டுப்பிடிப்பு

ஊடகவியலாளர் லசந்த விக்ரமதுங்கவை தானே கொலையை செய்ததாக கூறி கடந்த வாரம் துாக்கிட்டு தற்காலை செய்துக் கொண்ட இராணுவ அதிகாரியின் தொலைபேசி பதிவுகளை கண்டுப்பிடித்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

குறித்த இராணுவ அதிகாரியின் தொலைபேசி அழைப்புக்கள் மற்றும் குறுஞ்செய்தி போன்றவை அழிக்கப்பட்ட விபரங்களை தெரிந்து கொள்வதற்காக பொலிஸார் தொலைபேசி சேவை வழங்குநரின் உதவியை நாடியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஊடகவியலாளர் லசந்த விக்ரமதுங்கவின் கொலை 2009 ஆம் ஆண்டு ஜனவரி 8 ஆம் திகதி இடம்பெற்றது. குறித்த இராணுவ அதிகாரி தனது சேவையில் இருந்து 2007 ஆம் ஆண்டு ஓய்வுப் பெற்றுள்ளார்.

அத்துடன் லசந்த கொலை தொடர்பில் கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள இராணுவ புலனாய்வு பிரிவின் முன்னாள் அதிகாரியான பிரேமானந்த உடலகமவை விடுதலை செய்யுமாறு கடிதம் ஒன்றை எழுதி வைத்து தற்கொலை செய்துக் கொண்டுள்ளார்.

குறித்த இராணுவ அதிகாரியின் தற்கொலை செய்துக் கொண்டுள்ள போது அவரது வீட்டில் தனிமையிலேயே இருந்துள்ளார் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது

தூக்கிட்டு தற்கொலை செய்துக் கொண்டவர் மூச்சு திணறியே உயிழந்துள்ளார் என கேகாலை மாவட்ட சட்ட வைத்திய அதிகாரி ரோமேஸ் அழகியவன்ன தெரிவித்துள்ளார்.

ஆனால் குறித்த கடிதத்தில் இருந்த கையெழுத்து தனது தந்தையுடையதே என இராணுவ அதிகாரியின் மகன் கூறியுள்ளார்.

அத்துடன் இராணுவ புலனாய்வு பிரிவின் முன்னாள் அதிகாரியான பிரேமானந்த உடலகமவை ஏன் மலிந்த உடலகம என்று கடிதத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது என பொலிஸார் விசாரணைகள் மேற்கொண்டு வருகின்றனர்.

இதேவேளை, குறித்த இராணுவ அதிகாரி முன்னரே மில்லேனியம் சிட்டியில் உள்ள வீடொன்றில் ஆயுத களஞ்சியம் ஒன்று இயங்கிய சம்பவம் தொடர்பில் கைது செய்யப்பட்டவர் என்று விசாரணைகள் மூலம் தெரியவந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

http://www.tamilwin.com/security/01/121323?ref=home

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.