Skip to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

சர்வ வல்லமை பொருந்தியவர்கள் இன்று சர்வ நாசமடைந்து வீதியில் நிற்கிறார்கள் - மேன்முறையீட்டு நீதிமன்ற நீதியரசர் துரைராஜா

Featured Replies

சர்வ வல்லமை பொருந்தியவர்கள் இன்று சர்வநாசமடைந்து வீதியில் நிற்கின்றார்கள். நாமும் அந்த நிலைமைக்கு செல்லக் கூடாது எனத் தெரிவித்த மேன்முறையீட்டு நீதிமன்ற நீதியரசர் சி.துரைராஜா நாம் சண்டையிட்டு தென்னவர்களுக்கு வழிவகுக்காது எமக்குள் பிரச்சினைகளை தீர்த்து எமக்கே வழிவகுப்போம் எனவும் கேட்டுக் கொண்டார்.  

அகில இலங்கை இந்து மாமன்றத்தின் ஏற்பாட்டில் மேன்முறையீட்டு நீதியரசராக நியமிக்கப்பட்ட ஜனாதிபதி சட்டத்தரணி சி.துரைராஜாவுக்கு கௌரவிப்பும் பாராட்டு விழாவும் நேற்று  வெள்ளிக்கிழமை  சரஸ்வதி மண்டபத்தில் நடை பெற்றிருந்தது. 

அகில இலங்கை இந்து மாமன்றத்தின் தலைவர் கந்தையா நீலகண்டன் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில் அம்மன்றத்தின் நம்பிக்கைப் பொறுப்பாளர் சபைத்தலைவர் வி.கயிலாசபிள்ளை, பொதுச்செயலாளர் வே.கந்தசாமி, பொருளாளர் திருமதி கயிலாசபிள்ளை உட்பட பாரளுமன்ற உறுப்பினர்கள், நீதித்துறை சார் பிரதிதிகள், சட்டத்தரணிகள், பிரமுகர்கள் எனப் பலர் கலந்து கொண்டனர்.

இந்நிகழ்வில் உரையாற்றும்போதே அவர் மேற்கண்டவாறு மேன்முறையீட்டு நீதிமன்ற நீதியரசர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.  அங்கு அவர் மேலும் தெரிவிக்கையில்,  இங்கு பெரியவர்கள், எனது துறை சார்ந்த சக நண்பர்கள் இருக்கின்றார்கள். எனக்கு கனிஷ்டவர்கள் இருக்கின்றார்கள். தற்போது பயின்றுகொண்டிருப்பவர்கள், எதிர்காலத்தில் இந்த துறையில் பயணிக்கவிருப்பவர்கள் எனப் பலர் இருக்கின்றார்கள். இத்தருணத்தில் நான் ஒரு விடயத்தை உங்கள் முன்னிலையில் தெரிவித்துக்கொள்கி்ன்றேன்.  

நாங்கள் கடந்து வந்த பாதை பட்டுப்பாதையல்ல. மிகக் கடுமையான பாதை. இன்னும் இரண்டு வாரங்களில் என்னைப் பாராட்டுவதற்காக கடந்த காலங்களில் எடுக்கப்பட்ட எனது புகைப்படங்கள் இருந்தால் தரும்படியாகக் கேட்டார்கள். அந்தப் புகைப்படங்களை தேட ஆரம்பிக்கும் போது சந்தேசமான மனநிலை வரவில்லை. என்னிடத்தில் பழைய புகைப்படங்கள் எதுவுமே இல்லை.  அதற்கு காரணம் இருக்கின்றது. 1970ஆம் ஆண்டு முதற்தடவையாக எனது வீடு எரிக்கப்பட்டது. 1971ஆம் ஆண்டு மீண்டும் எரிக்கப்பட்டது. 1977ஆம் ஆண்டு வீட்டில் இருந்தவர்களுடன் சேர்த்து கூண்டோடு எரிக்கப்பட்டது. அதன் தொடர்ச்சியாக 1979, 1981, 1983, 1989ஆம் ஆண்டு எரிக்கப்பட்டவாறே இருந்தது.  ஆகவே என்னிடத்தில் பழைய சான்றிதழ்களோ படங்களோ என்று ஒன்றுமேயில்லை. அவ்வாறான நிலையில் நாம் கல்லிலும் முள்ளிலும் தட்டுப்பட்டு மேலெழுவதற்கு மிகப்பிரயத்தனம் செய்தோம். 

அந்த கடின பயணத்தில் ஒரு நிலைக்கு வந்திருக்கின்றேன். பெரிய நிலைக்கு வந்ததாக நான் கருதவுமில்லை. அவ்வாறு கூறவுமில்லை. பூவோடு சேர்ந்த நாரும் மணக்கும் என்பதைப்போன்று எனக்கு பின்னால் உள்ள பட்டத்தின் காரணமாக நானும் மேன்மை பெறுகின்றேன்.இங்கு நான் நீதிபதியாக பதவியேற்றத்தன் பின்னர் ஆசனத்தில் இறுக்கமான முகத்துடன் அமர்ந்திருந்ததை சுட்டிக்காட்டினார்கள். இவ்வளவு நாட்களும் நாம் பேசுவதற்காக பணம் வழங்கினார்கள். ஆனால் இப்போது கேட்பதற்கே பணம் கொடுகின்றார்கள். 

சிரிக்க கூடாது என்ற காரணத்திற்காகவே அவ்வாறிருந்தேன். தொடர்ந்தும் அவ்வாறிருப்பதற்கு முயற்சிக்கின்றேன். இருப்பினும் எனது சுபாபமல்ல. சிரித்துப் பேசுவதே எனது சுபாபமாகவிருக்கின்றது. 

நான் பதவியேற்று முதற் பத்து நாட்களில் ஆறு வழக்குகள் வந்திருக்கின்றன. 1983ஆம் ஆண்டிலிருந்து வழக்குகள் இருக்கின்றன. நூற்றுக்கணக்கான வழக்குகள் காணப்படுகின்றன. அவை அனைத்தும் இந்து ஆலயங்கள் தொடர்பாகவே உள்ளன. அண்மையில் கூட இலங்கையில் பாடல்பெற்ற திருத்தலம் ஒன்றைச்சேர்ந்த இரண்டு குழுக்கள் சண்டையிட்டுக் கொண்டன. வடைக்கு இரண்டு தரப்புக்கள் சண்டை இடவும் நடுவில் வந்த நரி வடையை எடுத்துக் கொண்டு சென்று விட்டது. இவ்வாறான நிலைமையைப் பார்க்கையில் ஒரு இந்துவாக இருப்பதற்கு நாம் கவலையடைய வேண்டியவர்களாக இருக்கின்றோம். எமது பிரச்சினைகளை எமக்குள்ளேயே தீர்த்துக்கொள்ள வேண்டும்.

சிவச்சொத்து குல நாசம் என்று கூறுவார்கள். ஏதொவொரு கட்டத்தில் நாம் வாழ்ந்து கொண்டு இருக்கலாம். ஆனால் என்றோவொரு நாள் ஒன்றுமில்லாது நடுத்தெருவில் நிற்கவேண்டியேற்படும்.

உங்களுக்கு நன்கு தெரியும். சர்வ வல்லமை பொருந்தியவர்கள் இன்று சர்வ நாசமடைந்து வீதியில் நிற்கின்றார்கள். யார் என்பதை நீங்கள் நன்கு அறிவீர்கள். நாமும் அந்த நிலைமைக்கு செல்லக்கூடாது. நாம் சண்டையிட்டு தென்னவர்களுக்கு வழிவகுக்காது எமக்குள் பிரச்சினைகளை தீர்த்து எமக்கே வழிவகுப்போம் என்றார்  
 
  • தொடங்கியவர்
14 hours ago, போல் said:

1970ஆம் ஆண்டு முதற்தடவையாக எனது வீடு எரிக்கப்பட்டது. 1971ஆம் ஆண்டு மீண்டும் எரிக்கப்பட்டது. 1977ஆம் ஆண்டு வீட்டில் இருந்தவர்களுடன் சேர்த்து கூண்டோடு எரிக்கப்பட்டது. அதன் தொடர்ச்சியாக 1979, 1981, 1983, 1989ஆம் ஆண்டு எரிக்கப்பட்டவாறே இருந்தது.

நாம் பெரும்பாலும் சிங்கள-பௌத்த அரச பயங்கரவாதிகளால் 1956, 1977, 1983 இனக் கலவரங்களை மட்டும் குறிப்பிட்டு கதைத்து வருவது தவறு.

சிங்கள-பௌத்த அரச பயங்கரவாதிகளின் துணையுடன் மலையகத்தில் அவ்வப்போது கட்டவிழ்த்து விடப்படும் இனக் கலவரங்கள் பல நடந்துவிட்டன, இன்னும் நடந்து கொண்டுதான் இருக்கின்றன. புலிகள் காலத்தில் மட்டும் அவை பெருமளவு குறைந்திருந்தன.

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.