Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

உலுக்கும் உபாதைகளால் அவதிப்படும் இலங்கை கிரிக்கெட் வீரர்கள்.

Featured Replies

உலுக்கும் உபாதைகளால் அவதிப்படும் இலங்கை கிரிக்கெட் வீரர்கள்.

anji.jpg

உலுக்கும் உபாதைகளால் அவதிப்படும் இலங்கை கிரிக்கெட் வீரர்கள்.

இலங்கை கிரிக்கெட் அணியின் முன்னணி வீரர்கள் பலர் அண்மைய நாட்களாக உபாதைகளால் அவதிப்பட்டு வருவதாகவும், சிலவேளைகளில் அடுத்துவரும் சிம்பாவே தொடருக்கான அணியில் இளையவர்கள் அழைக்கப்படலாம் எனும் கருத்து வெளியாகியுள்ளது.

இலங்கை கிரிக்கெட் அணியின் முகாமையாளர் சேனநாயக்கவை மேற்கோள்காட்டி இந்த செய்திகள் வெளியாகியுள்ளன.

இலங்கை அணியின் தலைவர் அஞ்சேலோ மத்தியூஸ் , ஆஸ்திரேலிய அணியுடனான ஒருநாள் தொடரில் தசைப்பிடிப்பு காரணமாக தொடரிலிருந்து வெளியேறினார்,ஆயினும் அவரும் இன்னும் குணமாகவில்லை என அறியக் கிடைக்கிறது.

Sri Lanka's captain Angelo Mathews(R) speaks with a physio as he reacts after being hit on the leg during the fourth one day international (ODI) cricket match between Sri Lanka and Australia at The Rangiri Dambulla International Cricket Stadium in Dambulla on August 31, 2016. / AFP / ISHARA S.KODIKARA        (Photo credit should read ISHARA S.KODIKARA/AFP/Getty Images)

இலங்கை அணியின் உதவித் தலைவர் தினேஷ் சந்திமால் விரல் முறிவு உபாதைக்கு சத்திர சிகிச்சை மேற்கொண்டவர் இன்னும் பூரண சுகம்பெற்று வலைப்பயிற்சிகளை ஆரம்பிக்கவில்லை என்றும் சொல்லப்படுகின்றது.

மேற்கிந்திய தீவுகள் A அணிக்கெதிராக விளையாடும்போது அதிரடித் துடுப்பாட்டுட வீரர் குஷால் ஜனித்த பெரேராவும் தசைப்பிடிப்பு உபாதையை எதிர்கொண்டார்.

ஆஸ்திரேலியாத் தொடரின்போது அறிமுகமாகி கலக்கிய இளம் நட்டுசத்திரம் தனஞ்சய டி சில்வாவும் விரல் பகுதியில் உபாதைக்குளாகியுள்ளார்.

பந்து வீச்சாளர்களை பொறுத்தவரை மலிங்க, தம்மிக்க பிரசாத், துஷ்மந்த சமீரா ஆகியோரும் உபாதைகளால் அவதிப்படுகின்ற நிலையில் இந்தப் பட்டியலில் இப்போது நுவான் பிரதீப்பும் இணைந்து கொண்டுள்ளார்.

அனுபவம் வாய்ந்த பந்து வீச்சாளர் எனும் அடிப்படையில் சுரங்க லக்மால் மட்டுமே அணித்தேர்வில் கவனத்தில் கொள்ளபடக்கூடியவராவார்.

சிம்பாவே அணிக்கெதிரான 2 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடர் 29 ம் திகதி ஆரம்பிக்கவுள்ளதால் ,இலங்கை அணி 25 ம் திகதி இங்கிருந்து புறப்படக் காத்திருக்கிறது.

அதன்பின்னர் சிம்பாவே, மேற்கிந்திய தீவுகள், இலங்கை அணிகள் பங்கெடுக்கும் முக்கோணத்தொடரும் ,டிசம்பர் மாதத்தில் தென் ஆபிரிக்க அணியுடனான டெஸ்ட்தொடரும் இடம்பெறவுள்ள நிலையில் இலங்கையின் மூத்த வீரர்கள் பலர் காயத்தால் அவதிப்படுகின்றமை அணிக்கு நெருக்கடியைக் கொடுத்திருப்பதாக முகாமையாளர் சேனநாயக்க கருத்து வெளியிட்டுள்ளார்.

http://www.reeshinternational.com/vilaiyattu/கிரிக்கெட்-செய்திகள்/உலுக்கும்-உபாதைகளால்-அவத/

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.