Skip to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

தமிழக முதலமைச்சரை நலம் விசாரிக்க அப்பலோ சென்ற ஈழத் தமிழர்கள்!

Featured Replies

தமிழக முதலமைச்சரை நலம் விசாரிக்க அப்பலோ சென்ற ஈழத் தமிழர்கள்!

பல வாரங்களாக உடல் நலக் குறைவினால் அப்பலோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சைபெற்றுவரும் தமிழக முதலமைச்சர் செல்வி ஜெயலலிதாவை நலம் விசாரிப்பதற்காக ஈழத்தமிழர் குழுவொன்று அப்பலோ மருத்துவமனைக்குச் சென்று ஜெயலலிதாவின் நலன் தொடர்பாக விசாரித்துள்ளது.

ஈழத் தமிழர் நட்புறவு மையம் சார்பாக திரு காசியானந்தன் தலைமையில் ஈழத் தமிழர்களான சிவம் மற்றும் திருநாவுக்கரசு ஆகியோர் கொண்ட குழுவினரே இன்று முற்பகல் 11.30 மணியளவில் அப்பலோ மருத்துவமனைக்குச் சென்று ஜெயலலிதாவின் நலன் குறித்து விசாரித்துள்ளனர்.

அப்பலோ மருத்துவமனையில் அதிமுகவின் மூத்த உறுப்பினர்களைச் சந்தித்த இக்குழு, முதலமைச்சரின் உடல் நலன் குறித்து விசாரித்தது. அத்துடன் இச்சந்திப்பு அரை மணித்தியாலங்கள் வரை நீடித்ததாகவும் தெரிவித்துள்ளனர்.

மேலும். ஈழத்தில் நடைபெற்ற படுகொலை, தனிநாட்டுக்கான பொது வாக்கெடுப்பு, தனித்தமிழீழமே தீர்வு மற்றும் பல தீர்மானங்களை சட்டசபையில் நிறைவேற்றிய தமிழக முதலமைச்சர் விரைவில் குணமடைந்து தமிழ்நாட்டு மக்களுக்கும் ஈழத்தமிழ் மக்களுக்கும் சேவையாற்றவேண்டுமென ஈழத் தமிழர் சார்பில் கேட்டுக்கொள்ளப்பட்டது.

http://thuliyam.com/?p=45088

 

நல்ல விடயம்! 

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.