Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

அரசியல் தீர்வு விடயத்தில் தமிழ்த் தேசிய கூட்டமைப்பு தலைவர்களின் இன்றைய நிலைப்பாடு என்ன?

Featured Replies

அர­சியல் தீர்வு விட­யத்தில் தமிழ்த் தேசிய கூட்­ட­மைப்பு தலை­வர்­களின் இன்­றைய நிலைப்­பாடு என்ன?

p15-5e598797759340d708821371131491a6cbd9bc22.jpg

 

எந்­த­வொரு தேசியப் பிரச்­சினை தொடர்­பிலும் நிலைப்­பா­டொன்றை எடுப்­ப­தற்­கான சகல உரி­மை­களும் தமிழ்த் தேசி­யக்­கூட்­ட­மைப்பின் தலை­மைத்­து­வத்­துக்கு இருக்­கி­றது. தமிழ் மக்கள் சம்­பந்­தப்­பட்ட எந்­த­வொரு விவ­கா­ரத்­திலும் தீர்­மா­னத்தை எடுப்­ப­தற்­கான விசேட பொறுப்­பையும் உரி­மை­யையும் கூட அவர்கள் கொண்­டி­ருக்­கி­றார்கள். மாறு­கின்ற நிலை­வ­ரங்­க­ளுக்கும் பின்­பு­லங்­க­ளுக்கும் ஏற்­ற மு­றையில் தங்­க­ளது நிலைப்­பாட்டை மாற்­று­வ­தற்கு அல்­லது திருத்தம் செய்­வ­தற்கும் அவர்­க­ளுக்கு உரிமை இருக்­கி­றது. ஆனால், எந்­த­வொரு பிரச்­சி­னை­யிலும் தங்­க­ளது புதிய நிலைப்­பாடு எது என்­பதை மக்­க­ளுக்கு கூற வேண்­டிய கடப்­பாட்டை அவர்கள் பொறுப்பு வாய்ந்த தலை­வர்கள் என்ற வகையில் கொண்­டி­ருக்­கி­றார்கள்.

இலங்­கை­யினால் ஏற்­றுக்­கொள்­ளப்­பட்ட குடி­யியல் மற்றும் அர­சியல் உரி­மைகள் தொடர்­பான ஐக்­கிய நாடுகள் சர்­வ­தேச சாச­னத்­துக்கும் பொரு­ளா­தார, சமூக மற்றும் கலா­சார உரி­மைகள் தொடர்­பான சர்­வ­தேச சாச­னத்­துக்கும் இசை­வான முறையில் தமிழ் மக்கள் சுய­நிர்­ணய உரி­மைக்கு உரித்­து­டை­ய­வர்­க­ளாக இருக்­கி­றார்கள். முன்னர் இருந்­ததைப் போன்றே வடக்கு, கிழக்கு மாகா­ணங்கள் இணைந்த ஒரு அல­கிற்கு சமஷ்டி முறையின் அடிப்­ப­டையில் அதி­காரப் பர­வ­லாக்க ஏற்­பா­டுகள் செய்­யப்­ப­ட­வேண்டும். வடக்கு, கிழக்கில் செய்­யப்­ப­டக்­கூ­டிய சகல வகை­யான அதி­காரப் பகிர்வு ஏற்­பா­டு­க­ளி­னதும் பய­னா­ளி­க­ளாக இருப்­ப­தற்கு தழிழ் பேசும் முஸ்லிம் மக்கள் உரித்­து­டை­ய­வர்கள் என்று 2015 ஆகஸ்ட் பாரா­ளு­மன்றத் தேர்­த­லுக்­கான விஞ்­ஞா­ப­னத்தில் தமிழ்த் தேசியக் கூட்­ட­மைப்பு தெரி­வித்­தி­ருந்­தது. அதன் அடிப்­ப­டை­யி­லேயே கூட்­ட­மைப்பு வடக்கு, கிழக்கு மாகா­ணங்­களில் மக்­களின் வாக்­கு­களைக் கேட்டு பிர­சா­ரங்­களை முன்­னெ­டுத்­தது. 2016 இறு­திக்கு முன்­ன­தாக தமிழர் பிரச்­சி­னை­களைத் தீர்த்து வைப்­ப­தற்கு தங்­களை பெரும் எண்­ணிக்­கையில் பாரா­ளு­மன்­றத்­துக்குத் தெரிவு செய்­யு­மாறு 56 வரு­டங்­க­ளுக்கும் அதி­க­மான கால அர­சியல் அனு­ப­வத்தைக் கொண்ட மூத்த அர­சி­யல்­வா­தி­யான தமிழ்த் தேசியக் கூட்­ட­மைப்பின் தலைவர் இரா.சம்­பந்தன் தமிழ் மக்­களைக் கேட்டுக் கொண்டார். அத்­தேர்­தலில் கூட்­ட­மைப்பு சாத்­தி­ய­மா­ன­ளவு கூடுதல் பட்ச வாக்­கு­களைப் பெற்­றது. வட­மா­கா­ணத்தில் அனே­க­மாக 63 சத­வீத வாக்­கு­க­ளையும் 39 சத­வீத தமிழ் சனத்­தொ­கையைக் கொண்ட கிழக்கு மாகா­ணத்தில் 31 சத­வீத வாக்­கு­க­ளையும் கூட்­ட­மைப்பு பெற்­றுக்­கொண்­டது.

முற்­றிலும் இலங்கை தமி­ழ­ரசுக் கட்­சியின் ஆதிக்­கத்­தி­லான தமிழ்த் தேசியக் கூட்­ட­மைப்பு தலை­மைத்­துவம் பிர­தமர் ரணில் விக்­கி­ர­ம­சிங்க தலை­மை­யி­லான 100 நாள் அர­சாங்­கத்­துடன் ஏற்­க­னவே புரிந்­து­ணர்­வொன்­றுக்கு வந்­தி­ருந்­தது. விக்­கி­ர­ம­சிங்க தமிழ் அர­சியல் பிரச்­சி­னையை ஒரே­ய­டி­யாக தீர்த்து வைப்பார் என்­பதே கொழும்பு நடுத்­தர வர்க்­க­வட்­டா­ரங்­களின் நம்­பிக்­கை­யாக இருந்­தது.

அர­சி­ய­லிலே தனி­ந­பர்­களும் ஆளு­மை­களும் பெரி­தாக முக்­கி­ய­மு­டை­ய­வர்­க­ளாக இருப்­ப­தில்லை. குறிப்­பாக அதி­கார அர­சி­யலில் வேறு­பட்ட நிகழ்ச்சித் திட்­டத்­துடன் கூடிய சமூக மற்றும் பொரு­ளா­தாரக் குழுக்­களே வெற்­றி­பெறும். தலை­வ­ராக யாரை தாங்கள் மேம்­ப­டுத்­து­வது என்­பதைத் தீர்­மா­னிக்­கின்­றன. ராஜபக் ஷவுக்கு ‘மாற்­றாக’ விக்­கி­ர­ம­சிங்க தலை­மை­யி­லான ஐக்­கிய தேசியக் கட்­சியைக் கொண்டு வரு­வ­தற்கு தீர்­மா­னிக்­கப்­பட்­ட­போது (மைத்­தி­ரி­பால சிறி­சேன வெறு­மனே ஒரு பதி­லாள்தான்) அந்த அர­சி­யலை தமி­ழ­ரசு கட்­சியின் தலை­வர்கள் சரி­யான முறையில் விளங்கிக் கொண்­டி­ருக்க வேண்டும். பதி­லாக அவர்கள் பேச்­சு­வார்த்­தை­க­ளுக்­காக விக்­கி­ர­ம­சிங்­கவின் ஆளு­மையில் நம்­பிக்கை வைத்­தார்கள்.

அவர்­களின் ராஜபக் ஷ விரோத அர­சியல் ஒரு­போதும் ‘சிறு­பான்­மை­யி­னத்­த­வர்­க­ளுக்கு ஆத­ர­வா­ன­தாக’ இருந்­த­தில்லை. இதை நான் கடந்த வருடம் நவம்பர் 29 எனது இணை­யத்­த­ளத்தில் எழு­தி­யி­ருந்தேன். ‘இந்த ராஜபக் ஷ விரோத பிர­சாரம் முழு­வ­துமே (2015 ஜன­வரி 8 ஜனா­தி­பதித் தேர்தல் தொடக்கம் ஆகஸ்ட் பாரா­ளு­மன்றத் தேர்தல் வரை) சமூக ஐக்­கியம், நிலை­மாற்­றுக்­கால நீதி மற்றும் நல்­லி­ணக்கம் தொடக்கம் ஐக்­கி­யப்­பட்ட இலங்­கை­யொன்­றுக்குள் அதி­காரப் பகிர்­வுக்­கான தமிழ் அர­சியல் கோரிக்­கைக்­கான பதில் வரை சகல பிரச்­சி­னை­க­ளையும் நெஞ்­ச­றிந்தே ஒதுக்­கி­வைத்­தி­ருந்­தது. அது உண்­மையில், தெற்கில் ஒரு மாற்­றத்­துக்­கான சிங்­கள செயற்­றிட்டம் தான் என்று நான் அதில் குறிப்­பிட்­டி­ருந்தேன். 2015 ஜன­வரி பிரத்­தி­யே­க­மாக சிங்­க­ள­வர்­க­ளுக்­கான மாற்­றமே தவிர, தமி­ழர்­க­ளுக்­கா­ன­தல்ல.

அது மேலும் விரி­வு­ப­டுத்­தப்­பட்­டது. இந்த அர­சாங்கம் ராஜபக் ஷ பாணி­யி­லான ஒரு சிங்­கள அர­சாங்­க­மா­கவே தொடர்ந்­தது. இந்த அர­சாங்­கத்தின் அர­சியல் கோட்­பாட்டை ஸ்ரீலங்கா சுதந்­தி­ரக்­கட்சி வளர்த்த மைத்­தி­ரி­பால சிறி­சேன மாத்­தி­ர­மல்ல, தோல்வி மனப்­பான்­மை­யு­ட­னான விக்­கி­ர­ம­சிங்க குழு­வி­னரும் வரை­யறை செய்­தார்கள். அதனால், இந்த அர­சாங்கம் நல்­லி­ணக்கம், இரா­ணு­வ­ம­ய­மாக்கல், அதி­கா­ரப்­ப­கிர்வு மற்றும் போர்க்­குற்ற விசா­ர­ணைக்­கான சர்­வ­தேசக் கோரிக்கை உட்­பட தேசிய விவ­கா­ரங்கள் சக­ல­தையும் கையா­ளுதல் ராஜபக் ஷவின் பாதையில் இருந்து விலகிச் செல்­ல­வில்லை. என்றும் நான் அப்­போது குறிப்­பிட்­டி­ருந்தேன்.

பிறகு சுமார் ஒரு­வ­ருடம் கழித்து தற்­போ­தைய ‘ஐக்­கிய’ அர­சாங்­கத்தைப் பற்­றிய எனது இந்த மதிப்­பீட்டை உறுதி செய்யும் வகையில் அக்­டோபர் முதலாம் திகதி எனது இணை­யத்­த­ளத்தில் மீண்டும் பின்­வ­ரு­மாறு எழு­தினேன்.

புதிய அர­சி­ய­ல­மைப்பை நிறை­வேற்ற இந்த அர­சாங்­கத்­தினால் முடி­யாது என்­பது மிகவும் கூடு­த­லான அள­வுக்கு பார­தூ­ர­மா­ன­தான ஒரு உண்­மை­யாகும். அர­சி­ய­ல­மைப்பை நிறை­வேற்­று­வ­தற்கு பாரா­ளு­மன்­றத்தில் மூன்றில் இரண்டு பெரும்­பான்மை ஆத­ரவு தேவை. அதைப் பெறு­வது இப்­போது மிகவும் கஷ்­ட­மா­னது போலத் தெரி­கி­றது. சர்­வ­ஜ­ன­வாக்­கெ­டுப்­பொன்­றுக்கு முகங்­கொ­டுப்­ப­தற்­கான நம்­பிக்கை அவர்­க­ளிடம் இல்லை. எனவே, விக்­கி­ர­ம­சிங்­கவின் வழியில் முடி­வில்­லாத கமிட்­டிகள் என்றும் வரை­வுகள் என்றும் செயன்­மு­றை­களை அவர்கள் இழுத்­த­டித்துக் கொண்டே போவார்கள்.

இத்­த­கை­ய­தொரு பின்­பு­லத்­திலே, பிர­தமர் விக்­கி­ர­ம­சிங்க தமிழ் மக்­க­ளுக்­கான சமஷ்டித் தீர்வை நிரா­க­ரித்­தி­ருப்­ப­தாக அக்­டோபர் 7 ஆம் திகதி இந்­தி­யாவின் பிஸ்னஸ் ஸ்ராண்டர்ட் பத்­தி­ரிகை செய்தி வெளி­யிட்­டதைக் காணக்­கூ­டி­ய­தாக இருந்­தது. வட­மா­கா­ணமும் கிழக்கு மாகா­ணமும் இணைந்த சமஷ்டி முறை­யி­லான தீர்வு ஒன்று குறித்து வட­மா­காண முத­ல­மைச்சர் விக்­னேஸ்­வரன் தொடர்ந்து வலி­யு­றுத்திக் கொண்­டி­ருப்­பது குறித்து கருத்து வெளி­யிட்ட பிர­தமர் ‘எவ­ருமே தங்கள் கருத்தை வெளிப்­ப­டுத்­து­வ­தற்­கான சுதந்­தி­ரத்தைக் கொண்­டி­ருக்­கி­றார்கள். ஆனால், அர­சி­ய­ல­மைப்பு உரு­வாக்கச் செயன்­முறை என்­பது பாரா­ளு­மன்­றத்தின் பணி­யாகும்’ என்று குறிப்­பிட்­ட­தாக பிஸ்னஸ் ஸ்ராண்டர்ட் கூறி­யி­ருக்­கி­றது. தனது இந்தக் கருத்தின் மூல­மாக பிர­தமர், வட­மா­காண முத­ல­மைச்சர் ஒரு பாரா­ளு­மன்ற உறுப்­பினர் அல்ல என்­ப­தையும் அர­சி­ய­ல­மைப்பு உரு­வாக்கச் செயன்­மு­றை­களில் அவ­ருக்கு தொடர்­பேதும் இல்லை என்­ப­தை­யுமே சுட்­டிக்­காட்­டி­யி­ருக்­கிறார். சிங்­கள வாக்­கா­ளர்­களை அணு­கு­வ­தற்கு அனு­ம­திக்கக் கூடிய வகை­யி­லான அர­சி­ய­ல­மைப்பு ஏற்­பா­டு­க­ளுக்­காக பாரா­ளு­மன்­றத்தில் தமிழ்த் தேசியக் கூட்­ட­மைப்பின் தலை­வர்­க­ளுடன் தன்னால் இடை­யூ­றின்றிப் பேச்­சு­வார்த்­தை­களை நடத்த முடியும் என்ற நம்­பிக்­கையை பிர­தமர் விக்­கி­ர­ம­சிங்க கொண்­டி­ருக்­கிறார் என்­பதை இதன் மூலம் உணரக் கூடி­ய­தா­க­வுள்­ளது.

விக்­கினேஸ்­வரன் கோரி­யி­ருப்­பதைப் போன்ற, வடக்கு, கிழக்கு இணைப்­பு­ட­னான ஒரு சமஷ்டிக் தீர்வு தமிழ்த் தேசியக் கூட்­ட­மைப்பின் தேர்தல் விஞ்­ஞா­ப­னத்தில் இருக்­கி­றது. எனவே, வடக்கு, கிழக்கு இணைப்­பையும் சமஷ்டித் தீர்­வையும் கோரு­வ­தற்­காக ஏன் விக்கி­னேஸ்­வ­ரனை பழித்­து­ரைத்து ‘ஒரு தீவி­ர­வாதி’ என்று அழைக்­க­வேண்டும்? சமஷ்டித் தீர்­வொன்­றுக்­கான அவரின் கோரிக்­கை­களை தமி­ழ­ரசுக் கட்­சியின் தலை­மைத்­துவம் ஏன் அங்­கீ­க­ரிக்­க­வில்லை? சமஷ்டித் தீர்­வொன்றை பிர­தமர் விக்­கி­ர­ம­சிங்க நிரா­க­ரித்­ததை தமி­ழ­ரசுக் கட்­சியின் தலை­மைத்­துவம் ஏன் உத்­தி­யோ­க­பூர்­வ­மாக கண்­ட­னம் செய்­ய­வில்லை?

தங்­க­ளது சொந்த தேர்தல் விஞ்­ஞா­ப­னத்­தி­லேயே கூறப்­பட்­டி­ருப்­பதை உறு­தி­யாக ஆத­ரித்து நிற்­பதில் தமி­ழ­ரசுக் கட்­சியின் தலை­மைத்­து­வத்­துக்கு இருக்­கின்ற இய­லாமை அவர்கள் ஒரு திரி­சங்கு நிலையில் இருக்­கி­றார்கள் என்­பதை நிரூ­பித்து நிற்­கி­றது. ‘எழுக தமிழ்’ பேர­ணியின் பிர­க­ட­னத்தில் உள்ள கோரிக்­கை­களின் பட்­டி­யலை முற்­று­மு­ழு­தாக ஆத­ரிப்­ப­தாக தமி­ழ­ரசுக் கட்­சியின் தலைவர் மாவை சேனா­தி­ராஜா பகி­ரங்­க­மா­கவே கூறி­யதன் மூலம் அவர் தமி­ழ­ரசுக் கட்­சியின் தலை­வர்கள் மத்­தியில் ஒரு குழப்­ப­நிலை இருக்­கி­றது என்­பதை நிரூ­பித்­தி­ருக்­கிறார் என்று தான் கூற­வேண்­டி­யி­ருக்­கி­றது. தமி­ழ­ரசுக் கட்­சியின் அர­சி­ய­லுக்குள் புதி­தாக வந்­த­வர்­களும் கொழும்பில் வச­தி­யான வாழ்வை அமைத்­துக்­கொண்­டி­ருக்கும் மத்­தி­ய­தர வர்க்­கத்­தி­னரும் அத்­த­கைய தீர்­வு­களில் நாட்டம் கொள்­ள­வில்லை என்றே தோன்­று­கி­றது. ஐக்­கிய அர­சாங்­கத்­துடன் இணைந்து நின்று விக்­கி­ர­ம­சிங்­கவின் கரங்­களைப் பலப்­ப­டுத்தி ‘செள­மி­ய­மூர்த்தி தொண்­டமான்’ கடைப்­பி­டித்த வகை­யான அணு­கு­மு­றையே இன்று தமி­ழர்­க­ளுக்கு இருக்­கக்­கூ­டிய ஒரே மார்க்கம் என்று இந்த கொழும்பு மத்­தி­ய­தர வர்க்­கத்­தினர் வாதி­டவும் கூடும். கொழும்பில் செள­க­ரி­ய­மான வாழ்க்கையைத் தொடரும் தங்­க­ளது முயற்­சியில் அவர்கள் விக்­கி­ர­ம­சிங்க சமஷ்டித் தீர்வை நிரா­க­ரித்­த­தையும் பொருட்­ப­டுத்­தாமல் அவர் மீது தொடர்ந்து நம்­பிக்கை வைக்க விரும்­பு­வார்கள்.

ஆனால், சம்­பந்தன், மாவை சேனா­தி­ராஜா போன்­ற­வர்­களைப் பொறுத்­த­வரை அது சாத்­தி­ய­மா­ன­தல்ல, அவர்கள் தங்­களால் ‘தெரிந்­­தெ­ டுக்­கப்­பட்ட’ சிங்­களத் தலை­வரின் நம்­பிக்­கையை வென்­றெ­டுக்கக் கூடி­ய­தான விட்­டுக்­கொடுப்பின் அடிப்­ப­டை­யி­லான தீர்­வொன் றைத் தேட வேண்­டி­யி­ருக்­கி­றது. சமஷ்டி என்ற அதே சொல்லைப் பயன்­ப­டுத்தி சமஷ்டித் தீர்­வொன்­றுக்­காக முயற்­சி­களை முன்­னெ­டுப்பது இப்­போது அவர்­க­ளது தந்­தி­ரோ­பா­ய­மாக இல்லை என்றே தோன்­று­கி­றது. அதனால், நிலைபே­றா­னதும் நடை­மு­றைப்­ப­டுத்­தக்­கூ­டி­ய­து­மான அதி­கா­ரப்­ப­கிர்வு முறை­யொன்று குறித்து கெள­ர­வ­மான முறையில் பேச்­சு­வார்த்தை நடத்­து­வதே செள­க­ரி­ய­மா­ன­தென்று சம்­பந்தன் உண­ரு­கிறார். விக்­கி­ர­ம­சிங்­கவின் தலை­மைத்­துவம் அத்­த­கை­ய­தொரு விட்­டுக்­கொ­டுப்பைச் செய்­வது குறித்து பரி­சீ­லிக்­கவும் கூட முடி­யாது.

ஐக்­கிய நாடுகள் மனித உரி­மைகள் பேர­வையின் 31/1 தீர்­மானம் தொடர்பில் காணப்­ப­டு­கின்ற முரண்­பா­டு­களில் அவர்­களின் சிங்­களச் சார்பு பிர­தி­ப­லிக்­கி­றது. அதனால், வெளி­யு­றவு அமைச்சர் மங்­கள சம­ர­வீர பெரும் அசெ­ள­க­ரி­யத்­துக்­குள்­ளா­கி­யி­ருக்­கிறார். ஜனா­தி­ப­தியும் பிர­த­மரும் சம­ர­வீ­ரவும் எடுத்­தி­ருக்கும் முரண்­பட்ட நிலைப்­பா­டுகள் இப்­போது வெளிப்­ப­டை­யாகத் தெரி­கி­றது. ஜனா­தி­ப­தியும் பிர­த­மரும் சிங்­க­ள­வர்­களின் ஆத­ர­வு­டைய நிலைப்­பாட்டை கடைப்­பி­டிக்­கி­றார்கள். இது ராஜபக் ஷ அர­சி­யலின் ஒரு நீட்­சி­யா­கவே அமை­கி­றது. அத­னால்தான் மல்­வத்தை மகா­நா­யக்கர் வண.திப்­பட்­டு­வாவே ஸ்ரீ சுமங்­கள தேரர் தன்னைச் சந்­தித்த சுவிட்­சர்­லாந்து பாரா­ளு­மன்ற சபா­நா­யகர் கிறிஸ்டா மார்க் வால்­ட­ரிடம் ‘ஜனா­தி­ப­தியும் பிர­த­மரும் நாட்­டுக்கும் மக்­க­ளுக்கும் பாத­க­மாக அமை­யக்­கூ­டிய எந்தத் தீர்­மா­னத்­தையும் ஒரு­போதும் எடுக்­க­மாட்­டார்கள்? என்று முழு­நம்­பிக்­கை­யுடன் கூறக்­கூ­டி­ய­தாக இருந்­தது. சிங்­கள அர­சி­யலைப் பொறுத்­த­வரை ‘நாடும் மக்­களும்’ என்­பது ‘சிங்­களத் தெற்கு’ என்­ப­தையே மறை­மு­க­மாகக் குறிக்­கி­றது.

சிங்­கள பெளத்த மேலா­திக்­கத்­துக்கு அடி­பணி­கின்ற இந்தப் போக்கு இரு­வா­ரங்­க­ளுக்கு முன்னர் சகித்­துக்­கொள்ள முடி­யாத அள­வுக்கு தெளி­வாக வெளிப்­பட்­டதைக் காணக்­கூ­டி­ய­தாக இருந்­தது. அமைச்­ச­ர­வையின் அங்­கீ­கா­ரத்­துடன் பாரா­ளு­மன்ற விவா­தத்­துக்கு வந்த இரு சட்­ட­மூ­லங்­களை ஜனா­தி­பதி மைத்­தி­ரி­பால சிறி­சே­னவும் பிர­தமர் விக்­கி­ர­ம­சிங்­கவும் கெள­ரவம் என்று சொல்­லக்­கூ­டிய பண்பின் எந்­த­வொரு சாய­லு­மே­யில்­லாத வகையில் வாபஸ் பெறு­வ­தற்கு இணங்கிக் கொண்­டார்கள். சட்­ட­மூ­லங்­களை வாபஸ்­பெ­று­மாறு மல்­வத்தை பீட மகா­நா­யக்க தேர­ரினால் விடுக்­கப்­பட்ட வேண்­டு­கோ­ளுக்கு அவர்கள் அடி­ப­ணிந்­தார்கள். மக்­களால் தெரிவு செய்­யப்­பட்ட பாரா­ளு­மன்றம் பெளத்த மத­கு­ரு­மாரை சாந்­தப்­ப­டுத்­து­வ­தற்­காக பொருத்­த­மற்ற ஒரு சபை­யாக மாற்­றப்­பட்­டது. மக்­களின் இறை­மையை பெளத்த மத­கு­ரு­மார்­க­ளுக்கு கீழ் நிலைப்­பட்­ட­தாக்­கிய படு­மோ­ச­மான ஜன­நா­யக விரோத முன்­னோடி நட­வ­டிக்­கையை மேற்­கொண்ட இவ்­விரு தலை­வர்­களும் தமி­ழ­ரசுக் கட்சி தலை­மைத்­து­வத்­துக்கு சாத­க­மாக அமை­யக்­கூ­டிய தீர்­மா­னங்­களை எடுப்பர் என்று எதிர்­பார்க்­கவே முடி­யாது.

சிங்­கள பெளத்த தலை­மைத்­துவ பாத்­தி­ரத்தை தம­தாக்கிக் கொள்­வ­தற்­காக பேரா­வ­லுடன் ராஜபக் ஷவுடன் மல்­லுக்­கட்­டு­கின்ற தற்­போ­தைய அர­சாங்­கத்தின் தலை­வர்கள் தமி­ழர்­களின் அபி­லா­ஷை­க­ளுக்கு இடங்­கொ­டுப்­பதில் 13 ஆவது திருத்­தத்­துக்கு அப்­பா­லான எந்­த­வொரு ஏற்­பாட்­டையும் உள்­ள­டக்­கக்­கூ­டிய அர­சி­ய­ல­மைப்பு வரை­வொன்றை சமர்ப்­பிப்­பதற்­கான வாய்ப்பு இருக்­கு­மென்று எதிர்­பார்ப்­ப­தற்­கில்லை. அர­சி­ய­ல­மைப்­புக்­கான 13 ஆவது திருத்­தத்தைக் கூட நீக்­கி­விட வேண்­டு­மென்று சிங்­கள எதி­ர­ணியில் ஒரு பிரி­வினர் விரும்­பு­கின்ற ஒரு சூழ்­நி­லையும் இருக்­கி­றது என்­பது குறிப்­பி­டத்­தக்­கது.

புரிந்­து­கொள்­ளப்­ப­டாத இந்த விக்­கி­ர­ம­சிங்க இனி­மேலும் எதிர்க்­கட்­சியில் இருந்­த­போது காணப்­பட்ட ‘அப்­ப­ழுக்­கற்ற’ லிபரல் அர­சி­யல்­வா­தி­யாக இல்லை. மத்­திய வங்கி பிணை முறி தொடக்கம் மக்­கின்சே கொந்­த­ராத்து வரை­யான ஊழல்கள், மக்­களின் பணத்தில் எம்.பி.க்களை சந்­தோ­சப்­ப­டுத்தும் அவரின் புதிய தந்­தி­ரோ­பாயம் அமைச்­ச­ரவை சகாக்­களின் ஊழல்கள் எல்லாம் விக்­கி­ர­ம­சிங்­கவின் நம்­ப­கத்­தன்­மை­யையும் நேர்­மை­யையும் பெரு­ம­ள­வுக்கு கேள்­விக்­குள்­ளா­க்கி­யி­ருக்­கின்­றன. அவ­ரது அர­சாங்­கத்தின் முத­லா­வது முழு அள­வி­லான பட்ஜெட் (2016) கூட, முதல் நாளில் இருந்தே பெரும் தோல்­வி­யாக அமைந்­தது. பெறு­மதி சேர் வரி (வற்) சட்­ட­மூலம் தொடர்பில் இரு தட­வைகள் அவரின் அர­சாங்கம் மகா தவ­று­களைச் செய்­தது. 100 நாள் துரித அபி­வி­ருத்தித் திட்டம் தேர்­தல்­க­ளுக்குப் பிறகு நீடிப்பு வழங்­கப்­பட்­ட­போ­திலும் கூட, பூர்த்தி செய்­யப்­ப­ட­வில்லை. பிறகு இரு வரு­டங்­க­ளுக்­கான இடைக்­கால பொரு­ளா­தாரத் திட்டம் கடந்த வருடம் பாரா­ளு­மன்­றத்தில் அறி­விக்­கப்­பட்­டது. இப்­போது விக்­கி­ர­ம­சிங்க தனது நான்கு வருட பொரு­ளா­தாரத் திட்­டத்தை அறி­விக்­க­வி­ருக்­கிறார். சீனாவின் உத­வி­யு­ட­னான சகல திட்­டங்­களும் ராஜபக் ஷ ஆட்சிக் காலத்தில் முன்­னெ­டுக்­கப்­பட்­டதைப் போன்ற நிலை­மையே மீண்டும் தோன்­றி­யி­ருக்­கி­றது. ‘ஆற்­றல்­மிக்க முகா­மை­யாளர்’ என்ற பெயரெடுத்த விக்கிரமசிங்க இப்போது ஆட்சி முறையில் தவறான முகாமைத்துவத்தையே செய்துகொண்டிருக்கும் நிலையைக் காண்கிறோம்.

அத்­த­கை­ய­தொரு பொரு­ளா­தார குழப்ப நிலைக்கு மத்­தியில், மத்­திய தர­வர்க்­கத்­தினர் விக்­கி­ர­ம­சிங்க மேலும் தன்னைத் தயார்­படுத்­து­வ­தற்கு கால அவ­கா­சத்தை வழங்கத் தயா­ரா­யி­ருந்­தாலும் (அதற்கு வேறு கார­ணங்கள் இருக்­கின்­றன) குறைந்த வரு­மானம் பெறும் நகர்ப்­புற சமூ­கமும் தென்­னி­லங்கை கிரா­மப்­புற மக்­களும் பெரும் விரக்­தி­ய­டைந்­தி­ருக்­கி­றார்கள். புதிய அர­சி­ய­ல­மைப்பு தொடர்­பான விக்­கி­ர­ம­சிங்­கவின் கதை­களில் அவர்­க­ளுக்கு அக்­க­றை­யில்லை.

ஸ்ரீலங்கா சுதந்­திரக் கட்­சிக்குள் தனது நிலையை வலுப்­ப­டுத்திக் கொள்­வதில் பிரச்­சி­னை­களை எதிர்­நோக்­கு­வதால் ஜனா­தி­பதி மைத்திரிபால சிறி­சேன உள்­ளூ­ராட்சித் தேர்­தல்­களை தொடர்ந்தும் பின்­போட்டுக் கொண்டு போகிறார். அதே­வேளை, ஐக்­கிய தேசியக் கட்­சியும் உள்­ளூ­ராட்சித் தேர்­தல்­களை விரை­வாக நடத்­த­வேண்­டு­மென்று கோரு­வ­தாக இல்லை. ஐக்­கிய தேசியக் கட்­சியும் அதன் வாக்கு வங்­கியில் தேய்வு ஏற்­பட்­டி­ருப்­ப­தாக உண­ரு­கி­றது.

இவை­யெல்­லா­வற்­றையும் அடிப்­ப­டை­யாகக் கொண்டு நோக்கும் போது, சம்­பந்தன் கோரு­கின்ற நிலை­பே­றா­னதும் நடை­மு­றைப்­ப­டுத்­தக்­கூ­டி­ய­து­மான கண்­ணி­ய­மான அதி­கா­ரப்­பகிர்வு ஏற்­பாட்டைக் ஏற்­றுக்­கொள்­ளக்­கூ­டிய ஆற்றல் இந்த அர­சாங்­கத்­துக்கு எந்த வகை­யி­லுமே இல்லை. அதனால், தமிழ்த் தேசியப் பிரச்­சி­னைக்­கான தங்­க­ளது தீர்வு அல்­லது தீர்­வுகள் எவை என்­பதை தமி­ழர்­க­ளுக்கும் நாட்­டுக்கும் சொல்­ல­வேண்­டிய கடப்­பாடும் அர­சியல் பொறுப்பும் தமி­ழ­ரசுக் கட்­சியின் தலை­வர்­க­ளுக்கு இருக்­கி­றது. அர­சியல் தீர்­வொன்று தொடர்பில் தற்­போ­தைய அர­சாங்­கத்­துடன் தங்­க­ளுக்கு இருக்­கின்ற புரிந்­து­ணர்வு என்ன என்­ப­தையும் தமி­ழ­ரசு தலை­வர்கள் கூற வேண்டும். இந்த ஐக்கிய அரசாங்கத்திடமிருந்து தங்களால் பெறக்கூடியது எதுவோ, எவையோ அவற்றைப் பெற்றுக்கொண்டு தமிழ் மக்கள் வாழவேண்டும் என்று கூறுவதற்கான உரிமை அந்தத் தலைவர்களுக்கு கிடையாது. 

http://content.epaper.virakesari.lk/newspaper/Daily/main/2016-10-21#page-4

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.