Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

மணமுறிவுக்கு மனமுறிவு காரணமாகலாமா?

Featured Replies

மணமுறிவுக்கு மனமுறிவு காரணமாகலாமா?

 

சமீபத்தில் மகான் ராகவேந்திரரை தரிசிக்க நண்பர்கள் குழாமுடன் மந்த்ராலயம் சென்றிருந்தேன். அதிஅற்புதமான தரிசனம் கிடைத்தது. பல்வேறு உலக  விஷயங்களை பேசிக்கொண்டே சென்றோம். அதில் மிக முக்கியமாக என்னை ஆழ்ந்து சிந்திக்க வைத்தது, என்னை அழைத்துச்சென்ற வழக்கறிஞரின் பேச்சுதான்.  ‘‘என்ன அண்ணா, கோர்ட் கேஸ் எல்லாம் எப்படி போயிட்டிருக்கு?’’ என்று அவரிடம் நான் கேட்டதுதான் தாமதம். ‘‘இப்ப எல்லாம் Family courtதான் -  குடும்ப நீதிமன்றம்தான் - சோறு போடுது!’’ என்றார். ஒருநாளைக்கு பணக்காரர்களிலிருந்து பரம ஏழைகள்வரை சமூகத்தின் அத்தனை தரப்பினரும் இங்கே  படையெடுத்து வருகிறார்கள் என்று தகவல் தந்தார். ‘‘இதற்கு முக்கிய காரணம்  Ego-தான். நீயா நானா போட்டிதான்’’ என்று அதற்கான காரணத்தையும்  வெகு எளிமையாகச் சொல்லிவிட்டார்.

அவர் சொன்ன அந்த விஷயம் என்னை ஆழ்ந்து சிந்திக்க வைத்துவிட்டது. ‘பையன் கல்யாணம் நல்லா  நடந்து; பொண்ணு கல்யாணம் ரொம்ப டாப்’ என்று  திருமண நாளின்போது வாழ்த்தி, பிரமித்து, வியந்து பாராட்டியதும் உண்டு. ஆனால், ஒருசில மாதங்களுக்குப் பிறகு சம்பந்தப்பட்ட குடும்பத்தாரிடம், ‘என்ன,  இல்லற வாழ்க்கை எப்படி இருக்கிறது?’ எனக்கேட்டால், புலம்பல்தான் பதிலாகக் கிடைக்கிறது! ‘அதை மட்டும் கேட்காதீங்கோ. அவர்களுக்கிடையில்  உறவுமுறை நன்றாக இல்லை; ஏதோ காலம் போயிட்டிருக்கு…’ என்ற விரக்தி பதில்தான் கிடைக்கிறது. இதற்கெல்லாம் என்ன காரணம் என்று உளவியல்  ரீதியாகப் பார்த்தால், பெரும்பாலான மணமுறிவுகளுக்கு காரணமே மனமுறிவுதான் என்பது தெளிவாகப் புரிகிறது. இதுதான் வெளிப்படையான, யதார்த்தமான  உண்மை. அந்த மனமுறிவுக்கு  அநேக ஆயிரம் காரணங்கள் இருக்கலாம்; அது வேறு விஷயம்.

‘யார் பெரியவர் யார் உயர்ந்தவர் நான் என்ன ரொம்ப மட்டமா?’ போன்ற பத்து பைசாவுக்கு பிரயோஜனம் இல்லாத அற்பமான விஷயத்திற்கு போட்டா போட்டி  நடக்கிறது. ஸ்டார் குடும்பங்களில் இருந்து சாதாரண குடும்பங்கள்வரை இந்தப் பிரச்னை சர்வ சாதாரணமாகி விட்டது. பெரியவர் யார்? என்ற கேள்விக்கு  சுவாரஸ்யமான பதிலைத் தருகிறார் ஆழ்வார்களின் தலைவரான சுவாமி நம்மாழ்வார். நாலாயிர திவ்ய பிரபந்தத்தில் பெரிய திருவந்தாதியில் இடம் பெற்றுள்ள  அந்த அற்புதமான பாசுரம்:

புவியும் இருவிசும்பும் நின் அகத்த; நீ என்
செவியின் வழிபுகுந்து என் உள்ளாய் - அவிவுஇன்றி
யான் பெரியன் நீ பெரியை என்பதனை யார் அறிவார்?
ஊன்பருகு நேமியாய் உள்ளு.

இதன் பொருள்: ‘‘ஊனைக் கவரும் சக்கரத்தை ஏந்திய பெருமானே! இந்த உலகமும் பரமபதமும் உனக்குள்ளேயே அடங்கியுள்ளன. இவ்வளவு சக்தி  வாய்ந்தவனான நீ, என் செவிவழியே புகுந்து என்னை விட்டு நீங்காமல் எப்பொழுதும் என்னிடமே இருக்கிறாய். என்னுள் நீ வந்துவிட்ட பிறகு எனக்குள் அடங்கிய  பிறகு நான் பெரியவனா? நீதான் பெரியவனா என்பதனை யார் அறிவார்? உன் அருள் பெற்ற நானே உன்னைவிட பெரியவன் என்று ஆழ்வார் பெருமான்  இறைவனுக்கும் தனக்கும் உள்ள நெருக்கத்தை அழகாக எடுத்துக் காட்டியுள்ளார். நல்ல விஷயங்களில் ஆரோக்கியமான போட்டி, விவாதம் எல்லாம் இருக்கலாம்.  அதில் தவறு இல்லை. தற்கால சூழ்நிலையில் மனித உறவுகள் மலினமாகப் போய்விட்டது. பெரும்பாலான வீட்டுப் பெரியவர்கள் தனிமையிலும், முதியோர்  இல்லத்திலும் காலம் தள்ளுகிறார்கள். சகிப்புத்தன்மையும், பொறுமையும் காணாமல் போய்விட்டது. வீட்டிற்குப் பெயர் ‘அன்னை இல்லம்’;

ஆனால், அன்னை இருப்பது அனாதை இல்லமாக இருக்கிறது! இதில் மிகப்பெரிய கொடுமை என்னவென்றால் சமூகத்தில் படித்த, அந்தஸ்து, கௌரவம்  எனப்  பேசித் திரிகிறவர்களின் பெற்றோர்கள்தான் குடும்ப உறவுகளில் இருந்து தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர். பெற்ற தாய் தந்தைக்கு சோறு போடாமல் காசி  ராமேஸ்வரத்திற்கு புனித யாத்திரை சென்று வந்தால் மட்டும் நல்லது எப்படி நடக்கும்? நம் அன்னையின் ஆன்மா அலறினால் ஆண்டவன் அருள் எப்படி கிட்டும்?  முக்கியப் பிரச்னையாக உருவெடுப்பது அடக்கமின்மை. பெரியவர், சிறியவர் என்ற விஷயம் எல்லாம் மலையேறி விட்டது.

பல பேருக்கு அடக்கமே அடக்கம் செய்யப்பட்ட பிறகுதான் வருகிறது என்பார் வார்த்தை சித்தர் அமரர் வலம்புரிஜான். இறைவனை, அந்தக் கருணாமூர்த்தியை,  நெஞ்சாற நேசித்த திருமங்கை ஆழ்வார் ‘பெற்ற தாயினும் ஆயின செய்யும் நலம் தரும் சொல்லை நான் கண்டுகொண்டேன் நாராயணா என்னும் நாமம்’ என்று  நயமாக உரைக்கிறார். இறைவனுக்கு சமமான இடத்தை தாய்க்கு தந்திருக்கிறார் அவர். கம்பராமாயணத்தில் அற்புதமாக காட்சி. ராமபிரான் அஞ்சநேயரைப் பார்த்து  ‘‘அப்பா நீ யார்?’’ என்று கேட்கிறார். இன்றைய சூழ்நிலையாக இருந்தால் ‘முதல்ல நீ யாருன்னு சொல்லு; நான் யாராக இருந்தா உனக்கென்ன?’ என்று  வீம்பாகத் திரும்பிக் கேட்பான். ஆனால், ஆஞ்சநேயர் என்ன சொன்னார் தெரியுமா? கம்பர் படம் பிடித்துக் காட்டுகிறார்:

மஞ்செனத் திரண்ட கோல மேனிய,
மகளிர்க்கெல்லாம்
நஞ்செனத் தகையவாகி நளிரும் பனிக்குத்
தேம்பாக்கஞ்ச மொத்தலர்ந்த செய்ய
கண்ணயான் காற்றின் வேந்தர்க்கு
அஞ்சனை வயிற்றில் வந்தேன்
நாமும் அனுமன் என்றான்.

கேள்வி கேட்ட ராமபிரானின் அருமை பெருமைகளை பட்டியலிட்ட அனுமார் அதன்பிறகுதான், ‘நான் வாயுதேவன் குமாரன். என் தாய் அஞ்சனாதேவி, என் பேர்  அனுமன்’ என்றார், பவ்யமாக. அதனால்தான் ராமபக்தியில் இன்றுவரை அனுமனுக்கு நிகர் யாருமில்லை என்று பக்தர்கள் கொண்டாடி மகிழ்கிறார்கள். அன்புக்கும்  நட்புக்கும் பக்திக்கும் எல்லையே இல்லை. இதற்கு அப்பர் பெருமானைவிட  சாட்சிக்கு யார் வேண்டும்?

யாதும் சுவடுபடாமல் ஐயாறு அடைகின்ற போது
காதல் மடப்பிடியோடும் களிறு வருவன கண்டேன்
கண்டேன் அவர்திருப்பாதம் கண்டறியாதன
கண்டேன்.

திருவையாற்றிலே கயிலைக் காட்சியை நன்றாகப் பார்த்து ஆனந்தப்பட்ட, பரவசப்பட்ட அப்பர் பெருமான் திருவையாறிலிருந்து திருப்பூந்துருத்திக்கு வருகிறார்.  அந்தச் சமயத்தில் ஞான ஒளிச்சுடரான திருஞானசம்பந்தர் பல்லக்கில் எழுந்தருளுகிறார். கூட்டத்தோடு கூட்டமாகப் போய் அப்பர் பெருமான் பல்லக்கைத் தாங்கிக்  கொண்டார். எந்த அப்பர் பெருமான்? பெருமானுக்குத் தொண்டு செய்து பழுத்த பழமாக இருப்பவர், வயது முதிர்ந்தவர்! யாருடைய பல்லக்கை சுமக்கிறார்?  இளம்பிஞ்சான ஞானசம்பந்தர் சுவாமிகள் அமர்ந்திருக்கும் பல்லக்கை தோள் கொண்டு சுமக்கிறார். இந்த அதிஅற்புத நிகழ்வை உலகில் வேறு எங்காவது காண  முடியுமா? அல்லது கேள்விதான்பட்டிருக்கிறோமா? அப்பர் பெருமான் இருக்கும் இடமான அவருடைய மடத்திற்கு வந்ததும் சம்பந்தர் ‘‘அப்பர் எங்குற்றார்?’’  எனக் கேட்டார். அதைக்கேட்ட அப்பர், ‘‘தேவரீர், பல்லக்கைத் தாங்கும் பேறு பெற்று இங்குற்றேன்’’ என்றவுடன் துடிதுடித்துவிட்டார் சம்பந்தர். உடனே  அப்படியே பல்லக்கிலிருந்து கீழே குதித்து விட்டார். இருவரும் கட்டிப்பிடித்துக் கண்ணீர் மல்கினர்.

சிவத்தொண்டையே உயிர் மூச்சாக கருதிய அப்பர் பெருமான் என்றும் Upper ஆகவே இருக்கிறார். நாமெல்லாம் Lower ஆகவே இருக்கிறோம். உடல்  ஊனமாக இருந்தாலும் பரவாயில்லை. உள்ளம் ஊனமாக இருக்கக் கூடாது என்பதை நம்முடைய மாரியப்பன் தங்கவேலு உலகத்திற்கு எடுத்துக் காட்டியிருக்கிறார்.  பாரா ஒலிம்பிக்கில் உயரம் தாண்டுதலில் தங்கப்பதக்கம் பெற்ற செய்தி வந்தபோது அவருடைய தாய் சேலத்திற்கு பக்கத்தில் உள்ள கிராமத்தில் சைக்கிளில்  சென்று காய்கறி விற்றுக்கொண்டிருந்தார். இளமையிலேயே குடும்பத்தலைவரை பறிகொடுத்துவிட்ட அந்த குடும்பத்திற்கு முதுகெலும்பாக இருந்தவர்  தங்கவேலுவின் தாய்தான். இன்றைக்கு உலகமே தங்கவேலுவை அண்ணாந்து பார்த்து வியந்துகொண்டிருக்கிறது. அவர் மீடியாமுன் சொன்ன முக்கியச் செய்தி  என்ன தெரியுமா? ‘‘என்னுடைய  இந்தப் புகழுக்கும் உயரத்திற்கும் காரணம், என் தாயின் உழைப்பும் அரவணைப்பும்தான்.’’

சமூகத்தில் பல பிரச்னைகளுக்கும் காரணம், உள்ளம் ஊனமாகிப் போனதுதான். நாகரிக வளர்ச்சியில் எல்லோரும் எல்லாமும் பெற்று சமமாக புரிந்துகொண்டு  விட்டுக்கொடுத்து வாழவேண்டும்தான். விட்டுக்கொடுத்துப் போவதாலோ, இருவரில் ஒருவர் பணிந்து போவதாலோ யாருக்கும் பெரிய நஷ்டம் வந்துவிடப்  போவதில்லை. மாறாக தனிப்பட்ட தன்முனைப்பால் பிரிந்து சென்றால் குடும்ப அமைப்பு, பிள்ளைகளின் எதிர்காலம் எல்லாம் மிகப்பெரிய கேள்விக்குறியாகிவிடும்.  உணர்ச்சிவசப்பட்டு எடுக்கின்ற எந்த முடிவும் நல்ல பயனைத் தருவது இல்லை. ‘நல்ல குலம் என்றும் தீய குலமென்றும் சொல்லளவு அல்லால்  பொருளில்லை’ என்று நாலடியார் எடுத்துச் சொல்கிறது. இனத்தில் யாரும் கீழானவர் மேலானவர் என யாரும் இல்லை. குணத்தில்தான் பலரும் கீழான  சிந்தனையைக் கொண்டு இருக்கிறார்கள். அன்பும் அரவணைப்பும் இருந்தால் எல்லாம் நம் வசமாகும். அங்கே ஏது பிரிவினை? ஏது இடைவெளி? ஏது துயரம்?  பைபிளில் ஒரு அற்புதமான வாசகம்: நேசிக்கிறவர்களே நேசிக்கப்படுவார்கள். நாம் எல்லோரையும் நேசிக்கக் கற்றுக்கொள்வோம்.

-ஆழ்வார்க்கடியான் மை.பா.நாராயணன்

http://www.dinakaran.com/Aanmeegam_Detail.asp?Nid=14346&cat=3

  • கருத்துக்கள உறவுகள்
50 minutes ago, வந்தியதேவன் said:

சிவத்தொண்டையே உயிர் மூச்சாக கருதிய அப்பர் பெருமான் என்றும் Upper ஆகவே இருக்கிறார். நாமெல்லாம் Lower ஆகவே இருக்கிறோம். உடல்  ஊனமாக இருந்தாலும் பரவாயில்லை. உள்ளம் ஊனமாக இருக்கக் கூடாது

வெள்ளிக்கிழமை நற்சிந்தனை உடைய ஒரு பகிர்வை... எம்முடன் பகிர்ந்து கொண்டமைக்கு.... நன்றி,  வந்தியத் தேவன். :)

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.