Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

காஷ்மீரிகளின் கறுப்புத்தினம்

Featured Replies

காஷ்மீரிகளின் கறுப்புத்தினம்
 
 

article_1477558164-2.jpg

-மாலிக் அப்துல்

ஒக்டோபர் 27 ஆம் திகதியானது, மகிழ்ச்சியற்ற காஷ்மீர் மக்களுக்கு மேலும் துக்கம், கவலை, மனச்சோர்வு, துயர்நிலை மற்றும் தாங்க முடியாத இன்னல்களை அளிக்கின்றமை உலகம் அறிந்த உண்மையாகும்.

இவ்வாறானதொரு துரதிஷ்டமான நாளிலேதான், இப்பூமியிலே காணப்படுகின்ற சொர்க்கமான காஷ்மீரின்  ஒரு பகுதியினை  வலுக்கட்டாயமாக இந்திய இராணுவம்  கைப்பற்றியதுடன் அதனை நரகமாக மாற்றியுள்ளது.  

காஷ்மீரியர்கள்;, அவர்களது தாய் நாட்டின் மீதான சட்டவிரோத ஆக்கிரமிப்பினை ஒரு போதும் ஏற்றுக்கொள்ளவில்லை என்பதுடன்,  பிராந்தியத்தின்  கொடுங்கோல் ஆட்சியாளர் மனித உரிமை மீறல்கள், இரத்த நீரோடைகளை உருவாக்குதல், உடைமைகளை அழித்தல், ஜனநாயகத்தினை கேலிக்கூத்தாக்கல் மற்றும் எண்ணிலடங்காத  அட்டூழியங்கள் புரிந்துக் கொண்டிருக்கின்றது.

எவ்வாறாயினும், காஷ்மீரியர்கள் மீதான  ஐ.நாவின் தீர்மானங்கள் இதுவரையில் கிடப்பில் போடப்பட்டுள்ளது என்பதனை  ஐக்கிய நாடுகள் சபைக்கும், உலகத்துக்கும் வெளிச்சமிட்டு காட்டுவதற்காக உலகம் முழுவதிலுமுள்ள காஷ்மீர் மக்கள், ஒக்டோபர் 27ஆம் திகதியை கறுப்புத் தினமாக  அனுஷ்டித்து வருகின்றனர்.

சுதந்திரத்தின் போது, பெரும்பான்மையான காஷ்மீர் முஸ்லிம் மக்கள், பாகிஸ்தானுடன் இணைவதற்கு தீர்மானித்த பொழுதிலும்; ராஜா ஹரி சிங், அப்போதைய இந்திய பிரதமர் ஜவஹர்லால் நேரு மற்றும் பிரபு மௌன்ட் பேட்டன் ஆகியோரின் உடந்;;தையுடன் காஷ்மீரில் இந்திய ஆக்கிரமிப்புக்கு வழிவகுத்தார்.

ஆனால், 1947ஆம் ஆண்டு ஓகஸ்ட் 16 ஆம் திகதி, காஷ்மீரினை இந்தியாவுடன் வலுக்கட்டாயமாக இணைக்கும் சதியானது, 'ரெட் க்ளிப் பவுண்டரி விருது' (சுநன ஊடகைக டீழரனெயசல யுறயசன ) அறிவிப்பின்பொழுது கசிந்தது.

அவ்விருதானது, முஸ்லிம்களை பெரும்பான்மையாக கொண்ட பஞ்சாப் மாநிலத்தின்; குர்தாஸ்பூர் ஊடாக காஷ்மீருக்குள் இந்திய படைகள்; பிரவேசிப்பதற்கான வழியினை அமைத்துக்கொடுத்தது.   

அதன் பின்னர், காஷ்மீர் மக்கள், தமது நிலத்தில் சட்டவிரோதமான ஆக்கிரமிப்பினை மறுத்ததுடன் விடுதலை இயக்கத்தினை ஸ்தாபித்தனர். 1947 ஆண்டு இந்திய அரசானது காஷ்மீர்  பூர்வீக குடிகளால் தோல்வியை தழுவியதைத் தொடர்ந்து, ஐக்கிய நாடுகளின் பாதுகாப்பு சபையின் தலையீட்டினை கோரி நின்றதுடன், ஐக்கிய நாடுகள் பாதுகாப்பு சபையானது  காஷ்மீர் மக்கள் பாகிஸ்தானுடன் அல்லது இந்தியாவுடன் இணைவதற்கான தீர்மானமொன்றினை நிறைவேற்றியதுடன், அதற்கான  பொது வாக்கெடுப்பினை நடாத்துமாறு பணித்தது.அதன் பின்னர்,  1949 ஜனவரி மாதம் 01ஆம் திகதி யுத்த நிறுத்தம் ஏற்பட்டமை குறிப்பிடதக்கது.

ஐக்கிய நாடுகளினால் மேற்கொள்ளப்பட்ட தீர்மானத்திலே இந்தியா ஒரு தரப்பினராக கையொப்பமிட்டதுடன், அதன் தலைமைத்துவம்  காஷ்மீர் மக்களுக்கு சுய-நிர்ணய உரிமையினை வழங்குவதாக அதன்பொழுது உறுதியளித்தது. ஆனால், 1964, இந்தியா தனது வாக்குறுதிக்கு வலுசேர்த்துவந்ததுடன், காஷ்மீர் அதனது ஒரு பகுதியென உரிமை கூறத்தொடங்கியது.

1947 ஒக்டோபர் தொடக்கம்  காஷ்மீரிகளுக்கு எதிராக இந்திய ஆயுதப்படைகளும், அதன் துணை இராணுவ படைகளும் வௌ;வேறு விதமான அரச பயங்கரவாதத்தினை வேண்டுமென்றே காஷ்மீர் மக்கள் மீது கட்டவிழ்த்துவிட்டனர். அத்துடன் 1989 ஆம் ஆண்டிலிருந்து இந்தியாவின் அரச பயங்கரவாதம் பன் மடங்காக அதிகரித்தது.

சட்டவிரோத கைதுகள், முஸ்லிம் பெண்களை சித்திரவதை செய்தல், கற்பழித்தல், வீடுகளை எறித்தல், தடுத்து வைத்தல், இலக்கு வைத்து கொலை செய்தல், காவலில் வைத்து கொள்ளுதல் போன்ற பல்வேறு அட்டூழியங்கள் வௌ;வேறு கடுமையான சட்டங்களுடாக கொடூரமான உத்திகளின் மூலம் விஸ்தரிக்கப்பட்டது.

இந்தியாவின் இக்கறுப்பு சட்டங்கள், அப்பாவி காஷ்மீர் மக்களைக் கொலை செய்யும் கொடூர படைகளுக்கான தண்டனையிலிருந்து தப்புவதற்கான வழிகளை அளித்தது. இந்திய அரசாங்கம் காஷ்மீரிகளின் சுய நிர்ணய உரிமையினை மறுப்பதுடன்;, அவர்களை கையாள்வதற்கு துப்பாக்கியே சிறந்த வழிமுறையென எண்ணுகின்றது.

காஷ்மீரானது இரு நாடுகளுக்கிடையில் அணுவாயுத மையமாக இருந்து வருகின்றது என்ற உண்மையினை நியூ டெல்லி, புறக்கணித்து பாகிஸ்தானுடன் காஷ்மீர் பிரச்சினைக்கான தீர்வினை எட்டுவதற்கு  ஆணைகளை வழங்குவதுடன் அதன் மாற்றங்களை வெளிப்படுத்தி பாசாங்கு செய்து வருகின்றது.

இதன் தொடர்ச்சியாக, காஷ்மீர் இளைஞன் புர்ஹான் வானி, ஜுலை மாதம் இந்திய படைகளின் போலியான என்கவுன்டர் தாக்குல் முலம் உயிரிழந்தார். கொலைசெய்யப்பட்ட புர்ஹான் வானி, காஷ்மீர் அடக்குமுறை தொடர்பாக சமூக வலைதளங்களில் போலவே காணொளி செய்திகளுடாக மேற்கொண்ட  நடவடிக்கைகளுக்கு மிகவும் பிரசித்திப்பெற்றவராக காணப்பட்டார். அவரது நடவடிக்கைகள் இந்திய அடக்குமுறை, அட்டூழியங்கள், நீதியின்மைக்கு எதிராக காணப்பட்டதுடன், இந்திய அடக்கு முறைக்கெதிராக இளைஞர்கள் எழுந்து நிற்க வேண்டும் என்ற செய்தியினை ஆழமாக வழங்கியது.

புர்ஹான் வானியின் கொலையினை தொடர்ந்து, முழு காஷ்மீர் மக்களும் இந்திய அடக்கு முறைக்கு எதிராக எழுந்து நின்றதடன், அமைதியான முறையில் மேற்கொள்ளப்பட்ட ஆர்பாட்டங்களை அடக்குவதற்காக இந்திய படையினர் உருண்டை துப்பாக்கி உட்பட அபாயகரமான ஆயுதங்களை கையிலெடுத்தனர். இந்திய ஆக்கிரமிப்பு  காஷமீரின்  மேற்கொள்ளப்படும் உருண்டை துப்பாக்கி தாக்குதலானது ஆண்கள் மற்றும் பெண்களின் முக்கிய உடல் உறுப்புகளுக்கு  சீர்படுத்தமுடியாத அழிவுகளை ஏற்படுத்திவருகின்றதுடன், காஷ்மீர் மக்கள் இந்திய படைகளால் கொல்லப்படுவது மட்டுமல்லாது உருண்டை துப்பாக்கி தாக்குதல்களால் குருடர்களாக ஆக்கப்படுகின்றார்கள்.
 
இந்திய ஆக்கிரமிப்பு காஸ்மீரில் அரங்கேற்றப்படும் மனித உறிமை மீறல்கள் மற்றும் அட்டூழியங்களின் நவீன தரவுகளின் படி, 1989 ஆண்டிலிருந்து 94,000 கொல்லப்பட்டுள்ளதுடன், அவைகளில் 7,062 கொலைகள் இராணுவ கட்டுப்பாட்டில் வைத்து மேற்கொள்ளப்பட்டவையாகும்.

அத்துடன், 136,434 பேர் இதுவரையில் கைது செய்யப்பட்டுள்ளதுடன், 106,261 கட்டமைப்புக்கள் அழிக்கப்பட்டுள்ளன. மேலும் இந்திய ஆக்கிரமிப்பு காஷ்மீரில் 22,884 பெண்கள் விதவைகளாகவும், 107,586 சிறுவர்கள் அநாதைகளாகவும்,10,433 பெண்கள் குழுவாக பாலியல் வல்லுறவுக்குள்ளாக்கப்பட்டுள்ளனர். இவை இன்று வரையில் தொடர்ந்த வண்ணமுள்ளது. 2016 ஜீலை 8க்குப் பின்னர், 110 பேர் கொள்ளப்பட்டுள்ளதுடன், 700 காஷ்மிரியர்கள் குருடாக்கப்பட்டுள்ளனர. அத்துடன் 9,000 பேர் வரையில் தாக்குதலுக்குள்ளாகியுள்ளதுடன், 10,000 இன்று வரையில் சிறையில் வைக்கப்பட்டுள்ளனர்.
 
உருண்டை துப்பாக்கி பாவனைக்கு எதிராக உலகமெங்கிலும்; எதிர்ப்பு மற்றும் கண்டனங்கள் காணப்பட்டாலும் அதிகார வர்க்கம் தொடர்ந்தும் அவ்வாறான தாக்குதல்களை மேற்கொண்டு வருகின்றமை வருந்ததக்கது.  எவ்வாறாயினும், இவ்வாறான உருண்டை துப்பாக்கிகளில் மேலும் இரசாயன பதார்த்தங்களை உள்ளடக்கி தாக்குதல்களை மேற்கொள்வதற்கான யோசனைகள் வழங்கப்பட்டிருக்கின்றமை குறிப்பிடத்தக்கது.

இந்திய படைகளின் அட்டுழியங்களிலிருந்து உலகின் கவனத்தினை  திசைத்திருப்புவதற்காக இந்தியா உலக அமைப்புகளிடம் கூக்குரலிடுதல், யுரி தாக்குதலுக்கு பாகிஸ்தானை குற்றம் சுமத்துதல், 2016 ஜீலை மாதம் முதல் தொடர்ந்து ஊரடங்கு சட்டத்தினை அமுல்படுத்தி வருதல், இணையதள முடக்கம் மற்றும் ஊடக அடக்கு முறை போன்ற தந்திரரோபாயங்களை பயன்படுத்தி வருகின்றமை வெற்றியளிக்கவில்லை.  

வெற்றியளிக்காத முயற்சிகளில் வெறுப்படைந்த இந்தியா யுத்த வெறியினை வெளிப்படுத்த ஆரம்பித்துள்ளதுடன், மூலோபாய இராணுவ தாக்குதல்களை மேற்கொள்வதாக பாகிஸ்தானை பயமுறுத்தி வருகின்றது. அத்துடன் இந்திய பிரதமர் நரேந்திர மோடி பாகிஸ்தானை சர்வதேச அரங்கில் தனிமைப்படுத்த முயற்சி செய்து வருவதுடன் அவ்வாறான விடயங்கள் பிராந்தியத்தில் அனுவாயுத யுத்தத்தினை தோற்றுவிக்கும் என்பதமை உணராமலிருக்கின்றார் என்றே கூறவேண்டும்.
 
அத்துடன், ஐக்கிய நடுகள் சபை, மனித உரிமை மீறல்களுக்கு எதிரான  உலக அமைப்புக்கள் மற்றும் உலக சமூகத்தினர் இந்திய அரச பயங்கரவாதத்தினை கண்டுகொள்ளாதிருப்பது துரதிஷ்டவசமானது. உண்மையில், ஐக்கிய நாடுகள் சபையானது காஷ்மீர் மீதான அதன் தீர்மானத்தினை அமுல்படுத்தும் பொறுப்பினை உறுதிப்படுத்துதல் வேண்டும் ஆனால் கடந்த 6 தசாப்தங்களாக காஷ்மீர் மக்களின் சுயநிர்ணய உரிமையினை வழங்குவதற்கு நடவடிக்கை மேற்கொள்ள ஐ.நா தவறிவிட்டது. இந்திய ஆக்கிரமிப்பிலிருந்து விடுபடுவதற்கு காஷ்மீரிய இளைஞர்கள் தற்பொழுது எவ்விதமான தியாகங்களையும் மேற்கொள்ள தயாராகவுள்ளதுடன், இப் போராட்டம் புதிய உயரத்தினை தொட்டுள்ளது என்பது வெளிப்படையான உண்மை.

இவ்வாறான நிலையில், உலக சமூகத்தினர்;, ஐக்கிய நாடுகள் சபை  மற்றும் இஸ்லாமிய ஒத்துழைப்புக்கான கூட்டமைப்புக்கள், காஷ்மீரின் சமகால நிலைமையினை கவனத்தில் கொண்டு பிராந்தியத்தில் சமாதானத்தினை ஏற்படுத்தவும், காஷ்மீர் மக்களுக்கு சுயநிர்ணய உரிமையினை வழங்குவதற்கு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பதே தேவைப்பாடு.

http://www.tamilmirror.lk/184887/க-ஷ-ம-ர-கள-ன-கற-ப-ப-த-த-னம-

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.