Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

வரலாற்று வெற்றியினை பதிவு செய்தது பங்களாதேஷ்

Featured Replies

வரலாற்று வெற்றியினை பதிவு செய்தது பங்களாதேஷ்

 

 

இங்கிலாந்திற்கு எதிரான டெஸ்ட் போட்டிகளில் தனது முதலாவது வெற்றியினை இன்று பங்களாதேஷ் பெற்றுக்கொண்டுள்ளது.

2000 ஆம் ஆண்டு டெஸ்ட் அந்தஸ்தினை பெற்றுக்கொண்ட பங்களாதேஷ் அணி 16 வருடங்கள் கடந்த நிலையில் இன்று இங்கிலாந்தினை முதல் முறையாக வெற்றி கொண்டுள்ளது.

254245.jpg

பங்களாதேஷிற்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இங்கிலாந்து அணி இரு டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரின் முதல் போட்டியினை வெற்றிக் கொண்டது.

254232.jpg

இரண்டாவது  டெஸ்ட் போட்டியில் முதலில் நாணயச்சுழற்சியில் வென்ற பங்களாதேஷ் அணி முதலில் துடுப்பெடுத்தாட தீர்மானித்தனர்.

தனது முதலாவது இனிங்ஸில் பங்களாதேஷ் அணி 63.5  ஓவர்களுக்கு சகல விக்கட்டுக்களையும் இழந்து 220 ஓட்டங்களை பெற்றுக்கொண்டது. பங்களாதேஷ் அணி சார்பாக தமிம் இக்பால் 104 ஓட்டங்களை பெற்றுக்கொடுத்தார்.

254242.jpg

இதனை தொடர்ந்து தனது முதலாவது இனிங்ஸினை தொடங்கிய இங்கிலாந்து அணியினர்  81.3 ஓவர்களில் சகல விக்கட்டுக்களையும் பறிக்கொடுத்து 244 ஓட்டங்களை பெற்றுக்கொண்டனர்.

24 ஓட்டங்கள் பின்னிலையில் தனது இரண்டாவது இனிங்ஸினை ஆரம்பித்த பங்களாதேஷ் 66.5 ஓவர்களில் தனது சகல விக்கட்டுக்களையும் இழந்து 296 ஓட்டங்களை பெற்றுக்கொண்டது.

254241.jpg

273 ஓட்டங்களை வெற்றியிலக்காக கொண்டு தனது இரண்டாவது இனிங்ஸினை ஆரம்பித்த இங்கிலாந்து அணியினர் 100 ஓட்டங்களை விரைவாகவும் விக்கட் இழப்பின்றியும் பெற்றுக்கொண்டிருந்த நிலையில் இங்கிலாந்தின் வீழ்ச்சி ஆரம்பமானது. 

பங்களாதேஷ் அணியினர் அபாரமான களத்தடுப்பும் பந்துவீச்சும் இங்கிலாந்து அணியினரின் வெற்றி வாய்ப்பினை தட்டி பறித்து தனதாக்கி கொண்டது.

254237.jpg

இங்கிலாந்து அணி பங்களாதேஷின் பந்து வீச்சாளர்களிடம் 164 ஓட்டங்களுக்கு தனது அனைத்து விக்கட்டுக்களையும் பறிக்கொடுத்தது.

108 ஓட்டங்களால் தனது வரலாற்று வெற்றியினை ருசித்த பங்களாதேஷ் அணி இரு டெஸ்ட் போட்டிகளை கொண்ட தொடரினை 1-1 என்று சமநிலை செய்தது. 

254235.jpg

http://www.virakesari.lk/article/12926

  • தொடங்கியவர்

மெஹதி ஹசன் அபாரம்: இங்கிலாந்தை வீழ்த்தி வங்கதேசம் வரலாற்று வெற்றி

 

 
 
  • இங்கிலாந்தை வீழ்த்தி வரலாற்று வெற்றி கண்ட வங்கதேச வீரர்கள் கொண்டாடும் காட்சி. | ராய்ட்டர்ஸ்.
    இங்கிலாந்தை வீழ்த்தி வரலாற்று வெற்றி கண்ட வங்கதேச வீரர்கள் கொண்டாடும் காட்சி. | ராய்ட்டர்ஸ்.
  • ஆட்ட நாயகன், தொடர்நாயகனுமான ஆஃப் ஸ்பின்னர் மெஹதி ஹசனுடன் தமிம் இக்பால். | ஏ.பி.
    ஆட்ட நாயகன், தொடர்நாயகனுமான ஆஃப் ஸ்பின்னர் மெஹதி ஹசனுடன் தமிம் இக்பால். | ஏ.பி.

டாக்காவில் நடைபெற்ற 2-வது, கடைசி டெஸ்ட் போட்டியில் வங்கதேச அணியிடம் இங்கிலாந்து 108 ரன்கள் வித்தியாசத்தில் அதிர்ச்சித் தோல்வி கண்டது, இதன் மூலம் வரலாற்று வெற்றி கண்ட வங்கதேசம் தொடரை 1-1 என்று சமன் செய்தது.

தேநீர் இடைவேளைக்குப் பிறகு 10 விக்கெட்டுகளையும் இழந்து இங்கிலாந்து அதிர்ச்சி சரிவு கண்டு தோல்வியுற்றது. வங்கதேசம் இங்கிலாந்தை முதல் முதலாக வெற்றி கண்டது.

நிறைய கேட்ச்களை கோட்டை விட்ட இங்கிலாந்து அணி வங்கதேசத்தை 2-வது இன்னிங்சில் 296 ரன்கள் வரை எடுக்க அனுமதித்தது. இதனையடுத்து 4-ம் நாளான இன்று இங்கிலாந்துக்கு 273 ரன்கள் வெற்றி இலக்கு நிர்ணயிக்கப்பட்டது.

இதில் அலிஸ்டர் குக் (59), டக்கெட் (56) ரன்கள் என்று முதல் விக்கெட்டுக்காக அபாரமாக ஆடி 100 ரன்களைச் சேர்த்தனர். 100/0 என்ற நிலையிலிருந்து தேநீர் இடைவேளைக்குப் பிறகு அதிர்ச்சிகரமாக 10 விக்கெட்டுகளையும் இழந்து 164 ரன்களுக்கு அனைத்து விக்கெட்டுகளையும் இழந்தது.

இளம் ஆஃப் ஸ்பின்னர் மெஹதி ஹசன் மிராஸ் 2 இன்னிங்ஸ்களிலும் தலா 6 விக்கெட்டுகளைக் கைப்பற்றி 12 விக்கெட்டுகளை தனது 2-வது டெஸ்ட் போட்டியிலேயே சாய்த்தார். ஷாகிப் அல் ஹசன் தன் ஒரே ஓவரில் ஸ்டோக்ஸ், ரஷீத், அன்சாரி ஆகியோர் விக்கெட்டுகளைக் கைப்பற்றி 4 விக்கெட்டுகளைக் கைப்பற்றினார்.

2000-ம் ஆண்டு முதல் வங்கதேசம் டெஸ்ட் அணியாக இருந்து வருகிறது. இது அந்த அணியின் 8-வது டெஸ்ட் வெற்றியாகும். ஜிம்பாப்வேயிற்கு எதிராக 5 டெஸ்ட் வெற்றியையும், பலவீன மே.இ.தீவுகளுக்கு எதிராக 2 டெஸ்ட் வெற்றியையும் மட்டுமே பெற்றுள்ள வங்கதேச அணிக்கு இந்த இங்கிலாந்துக்கு எதிரான முதல் டெஸ்ட் வெற்றி நிச்சயம் அந்நாட்டு கிரிக்கெட்டில் பெரிய திருப்பு முனையை ஏற்படுத்தும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

தேநீர் இடைவேளைக்குப் பிறகு மெஹதி ஹசன் மிராஸ் முதல் பந்திலேயே டக்கெட்டை அருமையான விரைவு பந்தில் பவுல்டு செய்ய அருமையான தொடக்கம் எதிர்பாராத சரிவுக்கு இட்டுச் சென்றது. 12-ல் இருக்கும் போது மெஹதி பந்தை இவர் கட் செய்தார் அதனை மஹமுதுல்லா கேட்சாக்கத் தவறினார். வயிற்று வலியிலிருந்த ஜோ ரூட் பேட் செய்ய வந்து 1 ரன்னில் ஷாகிபிடம் எல்.பி.ஆகி வெளியேறினார். 108/2 என்பது 110/3 ஆகியிருக்கும், ஆனால் அலிஸ்டர் குக் வெற்றிகரமாக எல்.பி.தீர்ப்பு ஒன்றை ரெஃபர் செய்து மீண்டார். கேரி பாலன்ஸ் படுமோசமான ஷார்ட் பிட்ச் பந்தை மெஹதி வீச அதனை அடித்து நொறுக்கும் முயற்சி அவசரத்தில் முன் விளிம்பில் பட்டு மிட் ஆஃபில் கேட்ச் கொடுத்து வெறுப்பில் வெளியேறினார்.

மொயின் அலி 4 பந்துகளே தாக்குப் பிடித்து மெஹதி பந்தில் எல்.பி.ஆனார். ஒரு ரிவியூவையும் விரயம் செய்தார். அலிஸ்டர் குக் மெஹதி பந்தை சில்லி பாயிண்டில் மொமினுல்லிடம் கேட்ச் கொடுக்க இங்கிலாந்தின் சரிவு துரிதமடைந்தது. அதன் பிறகு பேர்ஸ்டோவை மெஹதி வீழ்த்த, ஷாகிப் அல் ஹசன் ஒரே ஓவரில் ஸ்டோக்ஸ், ரஷீத், அன்சாரியை வீழ்த்த கடைசியில் ஸ்டீவ் ஃபின் விக்கெட்டை மெஹதி ஹசன் வீழ்த்த வரலாற்று வெற்றி பெற்றது வங்கதேசம். தொடரையும் சமன் செய்து, இங்கிலாந்துக்கு எதிராக முதல் வெற்றியைச் சாதித்தது.

ஆட்ட நாயகனாகவும், தொடர்நாயகனாகவும் அறிமுக ஆஃப் ஸ்பின்னர் மெஹதி ஹசன் மிராஸ் தேர்வு செய்யப்பட்டார்.

http://tamil.thehindu.com/sports/மெஹதி-ஹசன்-அபாரம்-இங்கிலாந்தை-வீழ்த்தி-வங்கதேசம்-வரலாற்று-வெற்றி/article9285579.ece?homepage=true

  • தொடங்கியவர்

 

ஆட்ட நாயகன், தொடர் நாயகன் விருதுகளை பங்களாதேஷ் இளம் வீரர் மஹதி ஹசன் மிராஸ் பெற்றுக்கொண்டார்.

254247 254244-4 fb_img_1477845500890 fb_img_1477845504699 fb_img_1477845509890 fb_img_1477845527562 fb_img_1477845514416 fb_img_1477845563430 fb_img_1477845489697

FB_IMG_1477845551779.jpg

http://vilaiyattu_com.apache5.cloudsector.net/en/%e0%ae%95%e0%ae%bf%e0%ae%b0%e0%ae%bf%e0%ae%95%e0%af%8d%e0%ae%95%e0%af%86%e0%ae%9f%e0%af%8d-%e0%ae%9a%e0%af%86%e0%ae%af%e0%af%8d%e0%ae%a4%e0%ae%bf%e0%ae%95%e0%ae%b3%e0%af%8d/%e0%ae%87%e0%ae%99%e0%af%8d%e0%ae%95%e0%ae%bf%e0%ae%b2%e0%ae%be%e0%ae%a8%e0%af%8d%e0%ae%a4%e0%af%81-%e0%ae%85%e0%ae%a3%e0%ae%bf%e0%ae%95%e0%af%8d%e0%ae%95%e0%af%86%e0%ae%a4%e0%ae%bf%e0%ae%b0-2/

  • தொடங்கியவர்
ஸ்டோக்ஸின் அபராதம் குறித்து குக் கடுப்பு

 

article_1477923514-InShort-Story-2_31102

பங்களாதேஷ், இங்கிலாந்து அணிகளுக்கிடையிலான 2ஆவது டெஸ்ட் போட்டியில், நடுவர்களின் பணிப்புரைகளை ஏற்க மறுத்தார் என்ற குற்றச்சாட்டில், இங்கிலாந்தின் பென் ஸ்டோக்ஸுக்கு அபராதம் விதிக்கப்பட்டமை குறித்து, அவ்வணித் தலைவர் அலஸ்டெயர் குக், தனது விருப்பமின்மையை வெளிப்படுத்தியுள்ளார்.

பங்களாதேஷ் துடுப்பாட்ட வீரர் சபீர் ரஹ்மானுடன், வாய்த்தர்க்கத்தில் ஈடுபட்டுக் கொண்டிருந்த ஸ்டோக்ஸை, அதை நிறுத்துமாறு கோரப்பட்டதோடு, அணித்தலைவர் குக்குக்கும் அறிவுறுத்தப்பட்டது. ஆனால், அதற்கேற்ப அவர் நடக்கவில்லையென முறையிடப்பட்டது. இதையடுத்து, ஸ்டோக்ஸின் ஊதியத்தின் 15 சதவீதம், அபராதமாக விதிக்கப்பட்டது.

எனினும், இந்த விடயத்தில், நடுவர்கள் தேவையன்று நுழைந்ததாக, குக் தெரிவித்துள்ளார். "சபீரும் ஸ்டோக்ஸும், போட்டித்தன்மை வாய்ந்த கிரிக்கெட் வீரர்கள். என்னைப் பொறுத்தவரை, மக்கள் அதை விரும்புகிறார்கள். அதைத் தான் மக்கள் பார்க்கிறார்கள்" என்று குறிப்பிட்டார்.

http://www.tamilmirror.lk/185073

  • தொடங்கியவர்
'பங்களாதேஷ் கிரிக்கெட்டுக்கு அற்புதமான தருணம்'

 

article_1477921674-InRahim_31102016_GPI.

இங்கிலாந்து அணிக்கெதிரான 2ஆவது டெஸ்ட் போட்டியை வெற்றிகொண்டமை தொடர்பாக மகிழ்ச்சி தெரிவித்த பங்களாதேஷ் அணித்தலைவர் முஷ்பிக்கூர் ரஹீம், பங்களாதேஷ் கிரிக்கெட்டுக்கான அற்புதமான தருணமென இவ்வெற்றியை வர்ணித்தார். பங்களாதேஷ் அணியின் வரலாற்றில், அவ்வணி பெற்றுக் கொண்ட 8ஆவது டெஸ்ட் வெற்றியாக இருந்த போதிலும், அவ்வணியின் மிக முக்கியமான வெற்றியாக இது கருதப்படுகிறது.

இந்நிலையில் கருத்துத் தெரிவித்த ரஹீம், "இது, பங்களாதேஷ் கிரிக்கெட்டுக்கான அற்புதமான தருணம். இந்த டெஸ்ட், இருபுறமும் மாறி, மாறிக் காணப்பட்டது. எந்தப் பக்கமாக இப்போட்டி செல்கிறது எனத் தெரிந்திருக்கவில்லை. ஆனால், இங்கிலாந்து அணி 100 ஓட்டங்களுக்கு விக்கெட் எதனையும் இழந்திருக்காத போது, சிறப்பான திறனை, வீரர்கள் வெளிப்படுத்தினர். இந்த கள நிலைமைகளில், ஒரு விக்கெட்டைக் கைப்பற்றினால், புதிய துடுப்பாட்ட வீரருக்குக் கடினமாக இருக்குமென நாம் நம்பினோம்" என்றார்.

தேநீர்பான இடைவேளைக்குச் செல்லும் போது 100 ஓட்டங்களுக்கு விக்கெட் எதனையும் இழக்காமல் இருந்த நிலையில், அந்த இடைவேளையின் பின்னரே, இங்கிலாந்து அணியின் விக்கெட்டுகள் வீழ்த்தப்பட்டன. அது தொடர்பாகக் கருத்துத் தெரிவித்த ரஹீம், "பயிற்றுநர், சிறிது கோபப்பட்டார். தேநீருக்கு முன்பாக, நாங்கள் சிறப்பாகப் பந்துவீசியிருக்கவில்லை. ஆனால் அதன் பின்னர் அவர்கள், சரியான இடத்தில் பந்துவீச வேண்டுமென உணர்ந்து பந்துவீசினர்" என்று குறிப்பிட்டார்.

அண்மைக்காலமாக முன்னேறிவரும் பங்களாதேஷ் அணியின் அடுத்த சவாலாக, பங்களாதேஷுக்கு வெளியில் சிறப்பாகச் செயற்படுவதே காணப்படுவதாக, ரஹீம் ஏற்றுக் கொண்டார். "கடந்த 2 ஆண்டுகளாக, பங்களாதேஷுக்குள், நாங்கள் சிறப்பாக விளையாடினோர். ஆனால் எங்களது அடுத்த சவால், வெளிநாடுகளில் விளையாடுதலாகும். ஆடுகளங்களுக்குற்ப நாங்கள் விளையாட வேண்டும். நாட்டுக்குள் கிடைக்கும் அதே கள நிலைமைகளை, எல்லா இடங்களிலும் பெற முடியாது" என்று குறிப்பிட்டதோடு, இன்னும் அதிகமான போட்டிகளில் விளையாடும் போது, அந்த நிலையை அடைய முடியுமெனவும் அவர் நம்பிக்கை வெளியிட்டார்.

http://www.tamilmirror.lk/185071

 

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.