Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

இந்தியா எதிர் இங்கிலாந்து டெஸ்ட் போட்டி தொடர் செய்திகள்

Featured Replies

இந்திய டெஸ்ட் அணி விபரம் நாளை வெளியாகும்

received_10210672864727318-696x464.jpeg

இந்திய டெஸ்ட் அணி விபரம் நாளை வெளியாகும்.

இந்திய மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கிடையிலான 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடருக்கான இந்திய அணி விபரம் நாளை அறிவிக்கப்படவுள்ளது.

சிக்குன்குனியா நோயால் பாதிக்கப்பட்டிருந்த இஷாந் சர்மா அணிக்கு  திரும்புவார் என்று நம்பப்படுகின்றது, அத்தோடு லோகேஸ் ராகுல், காம்பிர் ஆகிய வீரர்களும் அணியில் இணைக்கப்படுவதற்கான வாய்ப்பிருப்பதாக செய்திகள் வெளியாகியுள்ளன.

இரு அணிகளுக்குமிடையிலான முதலாவது டெஸ்ட் போட்டி எதிர்வரும் 9 ம் திகதி ஆரம்பமாகவுள்ளது.

http://vilaiyattu_com.apache5.cloudsector.net/en/%e0%ae%95%e0%ae%bf%e0%ae%b0%e0%ae%bf%e0%ae%95%e0%af%8d%e0%ae%95%e0%af%86%e0%ae%9f%e0%af%8d-%e0%ae%9a%e0%af%86%e0%ae%af%e0%af%8d%e0%ae%a4%e0%ae%bf%e0%ae%95%e0%ae%b3%e0%af%8d/%e0%ae%87%e0%ae%a8%e0%af%8d%e0%ae%a4%e0%ae%bf%e0%ae%af-%e0%ae%9f%e0%af%86%e0%ae%b8%e0%af%8d%e0%ae%9f%e0%af%8d-%e0%ae%85%e0%ae%a3%e0%ae%bf-%e0%ae%b5%e0%ae%bf%e0%ae%aa%e0%ae%b0%e0%ae%ae%e0%af%8d/

  • Replies 157
  • Views 8.6k
  • Created
  • Last Reply
  • தொடங்கியவர்

 

  • தொடங்கியவர்

இங்கிலாந்துக்கு எதிரான டெஸ்ட் போட்டியில் விளையாடும் இந்திய அணி அறிவிப்பு!

இங்கிலாந்துக்கு எதிராக டெஸ்ட் போட்டியில் இந்திய அணி விளையாட இருக்கிறது. முதல் 2 போட்டிகளுக்கான அணி தற்போது அறிவிக்கப்பட்டுள்ளது.

bcci_13109.jpg

விராட் கோலி தலைமையிலான 15 பேரில் அஷ்வின், ரவீந்திர ஜடேஜா, ரஹானே, கவுதம் கம்பீர், இஷாந்த் ஷர்மா, ஜெயந்த், புஜாரா, அமித் மிஸ்ரா, சாஹா, கருண் நாயர், முரளி விஜய், மொகமது ஷமி, உமேஷ் யாதவ், ஹர்திக் பாண்டியா ஆகியோர் இடம் பெற்றுள்ளனர்.

காயம் காரணமாக ஷிகர் தவான், ரோகித் ஷர்மா, லோகேஷ் ராகுல் ஆகியோர் இடம்பெறவில்லை. முதல் டெஸ்ட் வரும் 9-ம் தேதி நடக்க இருக்கிறது.

http://www.vikatan.com/news/sports/71154-indian-test-squad-announced-against-england.art

  • தொடங்கியவர்

மும்பை வந்தது இங்கிலாந்து அணி..

 

England team arrives in mumbai to face india in 5 test series

முதல் டெஸ்ட் போட்டிக்கு ஆயத்தம் இந்தியாவுடனான 5 டெஸ்ட் போட்டிகளை விளையாட உள்ள இங்கிலாந்து அணி மும்பை வந்தது.  மும்பை:அலஸ்டர் குக் தலையிலான இங்கிலாந்து கிரிக்கெட் அணி கடந்த செவ்வாய்க்கிழமை மும்பை வந்தது. பங்களாதேஷுடனான போட்டிகளை நிறைவு செய்த இங்கிலாந்து அணி, இந்தியாவுடனான 5 டெஸ்ட் போட்டிகளை எதிர்கொள்கிறது. இவ்விரு அணிகளும் மோதும் முதல் போட்டி வரும் 9ஆம் தேதி ராஜ்கோட்டில் தொடங்குகிறது.

 

 இங்கிலாந்துக்கு எதிரான டெஸ்ட் தொடருக்கான இந்திய அணி அறிவிப்பு  : இங்கிலாந்துக்கு எதிரான டெஸ்ட் தொடருக்கான இந்திய அணி அறிவிப்பு இது இருநாடுகளுக்கும் இடையிலான 85வது டெஸ்ட் போட்டி ஆகும். மும்பையில் சில நாட்கள் தங்கும் அந்த அணியினர் 5ஆம் தேதி கிரிக்கெட் கிளப்பின் பிராபோர்ன் மைதானத்தில் பயிற்சி மேற்கொள்கிறார்கள்.

 

இதைத்தொடர்ந்து 6ஆம் தேதி இங்கிலாந்து இந்தியாவுடன் முதல் போட்டியை எதிர்கொள்ள 6 ஆம் தேதி ராஜ்கோட் புறப்படுகிறது.இரண்டாவது டெஸ்ட் போட்டி விசாகப்பட்டினத்திலும் 3வது போட்டி மொகாலியிலும் 4வது போட்டி மும்பையிலும் கடைசி போட்டி சென்னையிலும் நடைபெறுகிறது.

 

ஆஸ்திரேலிய அணியில் அலஸ்டர் குக்(கேப்டன்), மொய்ன் அலி, கேரி பேல்லன்ஸ், கரேத் பேட்டி, ஸ்டூவர்ட் பிராட், ஜோஸ் பட்லர், பென் டக்கெட், ஸ்டீவ் ஃபின், எச் ஹமீத், அடில் ரஷித் ஜோ ரூட், பென் ஸ்டோக்ஸ், கிறிஸ் வோக்ஸ் ஆகியோர் இடம் பெற்றுள்ளனர். ஏற்கனவே டெஸ்ட் போட்டிகளில் நியூஸிலாந்தை மண்ணை கவ்வச் செய்த இந்திய அணி இங்கிலாந்தையும் வீழ்த்துமா என்ற ஆர்வத்துடன் போட்டியை காண ரசிகர்கள் தயாராகி வருகின்றனர். 

Read more at: http://tamil.oneindia.com/news/sports/cricket/england-team-arrives-mumbai-face-india-5-test-series-266296.html

  • தொடங்கியவர்

பேட்டிங், பவுலிங்கில் எந்த அணி கெத்து? #INDvsENG

India-vs-England.jpg

சச்சின் டெண்டுல்கர் சர்வதேச  போட்டிகளில் சுமார் 24 ஆண்டுகள் விளையாடினார். அவர் பேட்டிங் செய்த 24 வருடங்களில் ஒருமுறை கூட  இந்திய மண்ணில் ஐந்து டெஸ்ட் போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடர் நடந்ததில்லை.  1986 -1987 சீசனில் பாகிஸ்தான் இந்தியாவுக்கு வந்து ஆடியது தான் இந்தியாவில் நடந்த கடைசி ஐந்து டெஸ்ட் போட்டி கொண்ட தொடர். கிட்டத்தட்ட 29 வருடங்களுக்கு பிறகு இந்திய மண்ணில் தற்போது ஐந்து டெஸ்ட் போட்டிகள் கொண்ட கிரிக்கெட் தொடர் நடக்கவுள்ளது. இந்தியாவை எதிர்கொள்ள வந்திருப்பது இங்கிலாந்து. 

இங்கிலாந்து கடைசியாக இந்தியாவுக்கு வந்தபோது மும்பையிலும், கொல்கத்தாவிலும் டெஸ்ட் போட்டியை ஜெயித்தது மட்டுமின்றி தொடரையும் வென்றெடுத்தது. இந்தியா இங்கிலாந்துக்கு சென்ற போதும்  3-1 என்ற கணக்கில் தொடரை ஜெயித்தது இங்கிலாந்து தான். 

பேட்டிங்

1993-ம் ஆண்டுக்குப் பிறகு கடந்த 23 ஆண்டுகளில் இந்தியாவும் இங்கிலாந்தும்  ஒன்பது டெஸ்ட் தொடரில் விளையாடியிருக்கின்றன, இதில் எந்தவொரு டெஸ்ட் தொடரிலும் இந்தியா இரண்டு டெஸ்ட் போட்டிகளை ஜெயித்ததே கிடையாது. இருபத்தி  மூன்று ஆண்டுகளில் இந்தியாவும் இங்கிலாந்து 31 டெஸ்ட் போட்டிகளில் மோதியுள்ளன. இதில் ஏழு போட்டிகளை மட்டும் தான் இந்தியா ஜெயித்திருக்கிறது. கிரிக்கெட் வரலாறு சொல்லும் சேதி என்னவென்றால் சந்தேகமே இன்றி இந்தியாவை விட இங்கிலாந்து கெத்து என்பது தான்.

ஆனால் இதெல்லாம் நடந்து முடிந்தவை. தற்போதைய சூழ்நிலையில் இந்தியாவை இந்திய மண்ணில் எதிர்கொள்வது என்பது எந்தவொரு அணிக்கும் மிகப்பெரிய சவால். இந்தவருடம்  தென்னாப்ரிக்காவை அதன் மண்ணிலேயே டெஸ்ட் தொடரில் ஜெயித்து மாஸ் காட்டியது இங்கிலாந்து, ஆனால் வங்கதேசத்துக்கு எதிராக எதிர்பாராத தோல்வி அடைந்திருக்கிறது. மூத்த வீரர்கள் எல்லோரும் ஒதுங்கிவிட்ட நிலையில் இந்தியாவுக்கு இளம் படையுடன் வந்திருக்கிறது இங்கிலாந்து.

முதல்  இரண்டு டெஸ்ட் போட்டிகளுக்கு இந்திய அணியும், ஒட்டுமொத்த டெஸ்ட் தொடருக்கு இங்கிலாந்து அணியும் அறிவிக்கப்பட்டு விட்டன. அறிவிக்கப்பட்ட அணி எப்படியிருக்கிறது? தொடருக்கு முந்தைய சூழ்நிலையில் யாருக்கு வெற்றி வாய்ப்பு அதிகம்? 

பேட்டிங்

பேட்டிங் : -

இந்திய அணியைப் பொறுத்தவரை தொடக்க வீரர்களாக முரளி விஜய்யும், கவுதம் கம்பீரும் பலம் சேர்க்கிறார்கள். நடுவரிசையில் புஜாரா, கோலி, ரஹானே இருக்கிறார்கள். இவர்களுடன் கூடுதலாக கருண் நாயரும் இருக்கிறார்.  ஆறு தேர்ந்த பேட்ஸ்மேன்கள்,  15 பேர் கொண்ட பட்டியலில் இடம் பெற்றுள்ளனர். 

இங்கிலாந்து அணியில் அலெஸ்டர் குக், பாலன்ஸ், ரூட் ஆகிய மூன்றே பேட்ஸ்மேன்கள் தான் அணியில் உள்ளனர். ரூட்டும், குக்கும் இந்திய மண்ணில்  ஏற்கெனவே சிறப்பாக விளையாடியவர்கள், ஆனால் அவர்களைத் தவிர  வேறு எந்த பேட்ஸ்மேனுக்கும் இந்திய மண்ணில் டெஸ்ட் கிரிக்கெட் ஆடி பழக்கம் இல்லை. எனவே பேட்டிங் துறையை பொறுத்தவரை இந்தியா இங்கிலாந்தை விட பல மடங்கு முன்னணியில் இருக்கிறது

பவுலிங் :-

அஷ்வின், ஜடேஜா, அமித் மிஸ்ரா என மூவர் கூட்டணி சூழலுக்கு பலம் சேர்க்கும். இஷாந்த், ஷமி, உமேஷ் வேகப்பந்துக்கு இருக்கிறார்கள். இவர்களுடன் ஜெயந்த் யாதவ், ஹர்டிக் பாண்டே  அணியில் இருக்கின்றனர். இஷாந்த் அணிக்கு திரும்பியது சாதகமான அம்சம் என்றாலும் கூட, கான்பூர், விசாகப்பட்டினம் முதலான  ஸ்லோ பிட்ச்களில் ஸ்விங் செய்வதற்கு சிறந்த பவுலரான புவனேஷ்வர் யாதவ் இல்லை. இது  இந்திய அணிக்கு சற்று பின்னடைவு தான். இங்கிலாந்து அணியை பொறுத்தவரை பந்துவீச்சுக்கு கவலையே வேண்டாம். வோக்ஸ், ஸ்டோக்ஸ், பிராட், அன்சாரி, பட்டி, ஜேக் பால்,  ஸ்டீவன் ஃபின், மெயின் அலி, பென் டக்ட், அடில் ரஷீத் என பத்து பேர் பவுலிங்கை பார்த்துக்கொள்வார்கள். மெயின் அலி இந்திய அணிக்கு கடும் குடைச்சல் தருவார் என எதிர்ப்பார்க்கலாம். எனினும் மேட்ச் வின்னிங் பவுலர்கள் இங்கிலாந்திடம் இல்லை. இதனாலேயே பவுலிங்கிலும் இங்கிலாந்தை விட இந்தியா கொஞ்சம் கூடுதல் வலிமையோடு தான் இருக்கிறது.

ind%20vs%20eng%202.jpg

விக்கெட் கீப்பிங் :-

இங்கிலாந்து அணிக்கு  பேர்ஸ்டோ,  பட்லர் என இரண்டு  கீப்பர் பேட்ஸ்மேன்கள் இருக்கிறார்கள். இருவருமே அதிரடியாகவும், சிறப்பாகவும் விளையாடக்கூடியவர்கள். அணியை சரிவில் இருந்து  மீட்கும் திறன் இருவருக்குமே உண்டு. விக்கெட் கீப்பிங்கிலும் பட்டையைக் கிளப்பக்கூடியவர்கள். இந்தியாவுக்கு விருத்திமான் சாஹா விக்கெட் கீப்பர். விக்கெட் கீப்பிங்கில் இங்கிலாந்து தான் டாப்.

ஆல்ரவுண்டர்: -

பேட்டிங் ஆல்ரவுண்டர் யாருமே இந்தியாவுக்கு இல்லை. அஷ்வின், ஜடேஜா இருவரும் பவுலிங் ஆல்ரவுண்டர்கள். பாண்டியா ஒரு ஆல்ரவுண்டராக இன்னும் பரிமளிக்கவில்லை. ஸ்டோக்ஸ், வோக்ஸ், பென் டக்ட், அடில் ரஷீத், மொயின் அலி என ஆல்ரவுண்டர் பட்டாளம் இங்கிலாந்து அணியில் நிறைந்திருக்கிறது. குறைந்தபட்சம் நான்கு ஆல்ரவுண்டர்கள் அணியில் இருப்பார்கள் என்பதால் இதிலும் இங்கிலாந்தின் கையே ஓங்கியிருக்கிறது. 

<script id="infogram_0_f7306c4e-0f9d-483e-ba1f-baa2b6ce3b03" title="IND vs ENG" src="//e.infogr.am/js/embed.js?U26" type="text/javascript"></script><div style="padding:8px 0;font-family:Arial!important;font-size:13px!important;line-height:15px!important;text-align:center;border-top:1px solid #dadada;margin:0 30px"><a target="_blank" href="https://infogr.am/f7306c4e-0f9d-483e-ba1f-baa2b6ce3b03" style="color:#989898!important;text-decoration:none!important;">IND vs ENG</a><br><a style="color:#989898!important;text-decoration:none!important;" href="http://charts.infogr.am/bar-chart?utm_source=embed_bottom&utm_medium=seo&utm_campaign=bar_chart" target="_blank">Create bar charts</a></div>

http://www.vikatan.com/news/sports/71284-batting-and-bowling-strengths-of-india-and-england.art

Edited by நவீனன்

  • தொடங்கியவர்

இங்கிலாந்தின் தடுமாற்றம் இந்தியாவிலும் தொடரும்- மத்தியூ ஹோகார்ட் எச்சரிக்கை.

received_10210914732853870-696x405.jpeg

இங்கிலாந்தின் தடுமாற்றம் இந்தியாவிலும் தொடரும்- மத்தியூ ஹோகார்ட் எச்சரிக்கை.

இந்திய மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கிடையில 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடுவதற்காக குக் தலைமையிலான இங்கிலாந்து அணி இந்தியாவில் கால்பதித்திருக்கின்றது.

இங்கிலாந்து அணி அண்மைய நாட்களில் துடுப்பாட்டத்தில் பெருமளவில் சறுக்கி வருகின்றது.இதன் காரணத்தால்தான் பங்களாதேஷில் நடைபெற்ற 2 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரை முழுமையாக வெற்றிகொள்ள முடியாது போனது.

சூழல் பந்து வீச்சாளர்களை தாக்கு பிடிக்க முடியாது சுருண்டு போன இங்கிலாந்து அணியின் தடுமாற்றம், இந்திய மண்ணிலும் தொடரும் என முன்னாள் வேகப்பந்து வீச்சாளர் மத்தியூ கோஹார்ட எச்சரிக்கை விடுத்துள்ளார்.

இரு அணிகளுக்கும் இடையிலான முதலாவது டெஸ்ட் போட்டி எதிர்வரும் 9 ம் திகதி ராஜ்கோட்டில் ஆரம்பமாகவுள்ளது.

http://vilaiyattu_com.apache5.cloudsector.net/en/%e0%ae%95%e0%ae%bf%e0%ae%b0%e0%ae%bf%e0%ae%95%e0%af%8d%e0%ae%95%e0%af%86%e0%ae%9f%e0%af%8d-%e0%ae%9a%e0%af%86%e0%ae%af%e0%af%8d%e0%ae%a4%e0%ae%bf%e0%ae%95%e0%ae%b3%e0%af%8d/%e0%ae%87%e0%ae%99%e0%af%8d%e0%ae%95%e0%ae%bf%e0%ae%b2%e0%ae%be%e0%ae%a8%e0%af%8d%e0%ae%a4%e0%ae%bf%e0%ae%a9%e0%af%8d-%e0%ae%a4%e0%ae%9f%e0%af%81%e0%ae%ae%e0%ae%be%e0%ae%b1%e0%af%8d%e0%ae%b1%e0%ae%ae/

  • தொடங்கியவர்

இங்கிலாந்துக்கு எதிராக மோசமான சராசரி: மட்டையை சுழற்ற விராட் கோலிக்கு வாய்ப்பு

 

 
விராட் கோலி
விராட் கோலி

விராட் கோலி டெஸ்ட் போட்டிகளில் வெற்றிகரமான கேப்டனாக வலம் வருகிறார். அதேவேளையில் பேட்டிங்கை அவர் அனுபவித்தும் விளையாடி வருகிறார். கோலி தலைமையில் இந்திய அணி தொடர்ச்சியாக 4 டெஸ்ட் தொடர் களை வென்றுள்ளது. இலங்கை, மேற்கிந்தியத் தீவுகள் மண்ணிலும், சொந்த மண்ணில் தென் ஆப்பிரிக்கா, நியூஸிலாந்து அணி களுக்கு எதிரான தொடர்களையும் கோலி வென்று கொடுத்துள்ளார்.

இந்திய கேப்டன்களில் இருமுறை இரட்டை சதம் அடித்த ஒரே வீரர் என்ற பெருமையையும் தன்னகத்தே உள்ளடக்கியுள்ளார் கோலி. அவர் தலைமையில் இந்திய அணி கடைசியாக விளையாடிய 14 டெஸ்ட்டில் 10-ல் வெற்றி பெற்றுள் ளது. சமீபத்தில் நியூஸிலாந்து அணியை 3-0 என ஓயிட்வாஷ் செய்ததும் அதில் அடங்கும்.

இது எல்லாம் முடிந்த கதை. தற்போது கோலியின் முழுகவன மும் இங்கிலாந்துக்கு எதிரான 5 டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரின் மீதுதான். முதல் டெஸ்ட் வரும் 9-ம் தேதி ராஜ்கோட்டில் தொடங்க உள்ள நிலையில் இதற்கான ஆயத்த பணிகளை கோலி தொடங்கி உள்ளார்.

எல்லா நாடுகளுக்கு எதிராகவும் சீராக ரன் குவித்துள்ள கோலியின் மட்டை இங்கிலாந்து அணிக்கு எதிராக மட்டும் இதுவரை வேகம் எடுக்கவில்லை. அந்த அணிக்கு எதிராக 9 டெஸ்ட் போட்டிகளில் விளையாடி உள்ள கோலி 20.12 சராசரியுடன் 322 ரன்கள் மட்டுமே எடுத்துள்ளார்.

இதை வடிகட்டி பார்த்தால் நிலைமை கொஞ்சம் மோசம்தான். இங்கிலாந்து மண்ணில் கடந்த 2014-ல் இந்தியா 5 டெஸ்ட் போட் டிகள் கொண்ட தொடரில் விளை யாடியது. இதில் கோலி 10 இன் னிங்ஸ்களில் சேர்த்த ரன்கள் 134. சராசரி 13.4. அதிகபட்ச ரன்கள் 39.

சொந்த மண்ணிலும் இங்கிலாந் துக்கு எதிராக கோலியின் ஆட்டம் சற்று ஆட்டமே கண்டுள்ளது. 2012-ல் இங்கிலாந்து அணி இந்தியாவில் சுற்றுப்பயணம் செய்து 4 டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரில் விளையாடியது. இதில் கோலி 7 இன்னிங்ஸ்களில் சேர்த்த ரன்கள் 188. இதன் சராசரி 31.33. கடைசி டெஸ்ட் போட்டியில் மட்டும் அவர் 103 ரன்கள் எடுத்தார். இதை தவிர்த்து பார்த்தால் 6 இன்னிங்ஸ் களில் கோலி எடுத்த ரன்கள் 85 மட்டுமே.

நவீன கால கிரிக்கெட்டில் தனக்கென தனி ஒரு இடத்தை உருவாக்கியுள்ள கோலி வேகப்பந்து வீச்சுக்கு சாதகமான ஆஸ்திரேலியா, தென் ஆப்பிரிக்கா ஆடுகளங்களில் கூட பம்பரமாக கூழன்று ரன் வேட்டையாடிள்ளார்.

தலைசிறந்த வீரராக தன்னை மெருகேற்றி வரும் கோலி தற்போது நடைபெற உள்ள இங்கிலாந்துக்கு எதிரான தொடரில் கணிசமாக ரன் குவித்து முந்தைய சோதனை களுக்கு முற்றுப்புள்ளி வைக்க வேண்டிய நிலையில் உள்ளார்.

தொடர் வெற்றிகளால் புத்துணர்ச்சியுடன் காணப்படும் கோலி சொந்த மண்ணில் இங்கிலாந் துக்கு எதிராக சிறந்த முறையில் மட்டை வீச நல்ல வாய்ப்பு கிடைத் துள்ளது. அதேவேளையில் இங்கிலாந்து அணி முந்தைய தொடர்களில் கோலிக்கு எதிராக எந்தவகையில் ஆதிக்கம் செலுத் தியது என்பதையும் சற்று பார்க்க வேண்டும். 9 டெஸ்ட் போட்டிகளில் ஆண்டர்சன் பந்தில் 5 முறை கோலி வீழ்ந்துள்ளார். கோலி விக்கெட்டை எந்த பந்து வீச்சாளரும் இந்த அளவுக்கு அதிகமுறை கைப்பற்றிய தில்லை. மேலும் ஆண்டர்சன் கையாண்ட தொழில்நுட்ப நுணுக்கங்களையும் மற்ற பந்து வீச்சாளர்கள் வெற்றிகரமாக செயல்படுத்தியது கிடையாது.

இங்கிலாந்துக்கு எதிராக 16 இன்னிங்ஸ்களில் கோலி 11 முறை கேட்ச் முறையில் ஆட்டமிழந் துள்ளார். அதிலும் சிலிப் பீல்டர் மற்றும் விக்கெட் கீப்பரிடமே சரண்டராகி உள்ளார். இதற்கு இங்கிலாந்து பந்து வீச்சாளர்கள் கையாண்ட வியூகம் ஆப் ஸ்டெம்பை ஓட்டிய பகுதியில் சிறந்த நீளத்தில் பந்துகளை வீசியதுதான். குறிப்பாக 2014 தொடரில் பல முறை குறிவைத்து வீசப்பட்ட பந்துகள் கோலியின் மட்டை விளிம்பில் பட்டு சிலிப் பீல்டரிடம் தஞ்சம் அடைந்தது.

எதிர்வரும் தொடரில் கோலிக்கு ஓர் ஆறுதலான விஷயம் என்ன வென்றால் ஆண்டர்சன் காயம் காரணமாக முதல் கட்ட போட்டி களில் விளையாடாததுதான். மேலும் கடந்த கால தொடர்களில் அச்சுறுத்திய கிரேமி ஸ்வான், மோன்டி பனேசர் போன்ற தரம் வாய்ந்த சுழற்பந்து வீச்சாளர்கள் இல்லாததும் கோலிக்கு சாதகமாக கருதப்படுகிறது.

அஸ்வின், ஜடேஜா சுழல் கூட்டணி மிரட்ட தயாராக இருக்கும் வேளையில் மட்டையில் கோலியும் தெறிக்க விட்டால் இங்கிலாந்து அணிக்கும் 5-0 என வெள்ளை அடிக்கலாம் (ஓயிட்வாஷ்).

http://tamil.thehindu.com/sports/இங்கிலாந்துக்கு-எதிராக-மோசமான-சராசரி-மட்டையை-சுழற்ற-விராட்-கோலிக்கு-வாய்ப்பு/article9304399.ece

  • தொடங்கியவர்

இங்கிலாந்து டெஸ்ட் தொடருக்கு சிக்கல்!? பட்ஜெட் பஞ்சாயத்து

பிசிசிஐ

இந்தியா வந்துள்ள இங்கிலாந்து கிரிக்கெட் அணியினரின் பயணம் மற்றும் ஹோட்டலில் தங்கும் செலவை தங்களால் கொடுக்க முடியாது என, இங்கிலாந்து கிரிக்கெட் வாரியத்திடம் பிசிசிஐ. தெரிவித்துள்ளது. 

இந்தியாவுக்கு சுற்றுப் பயணம் மேற்கொண்டுள்ள இங்கிலாந்து அணி ஐந்து டெஸ்ட், தலா மூன்று ஒருநாள், 20-20 போட்டிகளில் பங்கேற்க உள்ளது. இதற்கான இங்கிலாந்து அணி ஏற்கனவே இந்தியா வந்துவிட்டது. இந்த சூழலில், இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியம் (BCCI) செயலாளர் அஜய் ஷிர்கே, இங்கிலாந்து மற்றும் வேல்ஸ் கிரிக்கெட் வாரியத்துக்கு ஒரு கடிதம் எழுதியுள்ளார். அதன் விவரம்: 

விரைவில் தொடங்க உள்ள கிரிக்கெட் தொடருக்காக இந்தியா வந்துள்ள உங்களை மனதார வரவேற்கிறேன். பி.சி.சி.ஐ மற்றும் இங்கிலாந்து கிரிக்கெட் வாரியம் இணைந்து பரஸ்பரம் செய்து கொண்ட புரிந்துணர்வு ஒப்பந்தத்தை, தற்போது எங்களால் செயல்படுத்த முடியாது என்பதை மிகுந்த வருத்தத்துடன் தெரிவித்துக் கொள்கிறேன். 

உச்ச நீதிமன்றத்தால் நியமிக்கப்பட்ட நீதிபதி லோதா கமிட்டி தற்போது, பி.சி.சி.ஐ.யின் நிதி விவகாரங்களைக் கண்காணித்து வருகிறது. அந்த கமிட்டியின் சம்மதம் இல்லாமல், நாங்கள் எந்த ஒப்பந்தத்தையும் நிறைவேற்ற முடியாது. எனவே, நாம்  ஏற்கனவே செய்து கொண்ட ஒப்பந்தப்படி, இங்கிலாந்து கிரிக்கெட் அணியின் பயணம் மற்றும் ஹோட்டலில் தங்கும் செலவை எங்களால் ஏற்க முடியாது. 

இங்கிலாந்து  அணி இந்தியா வந்து விட்டதால், இந்தமுறை அந்த செலவினங்களை ஏற்க உடனடியாக அனுமதி வழங்குமாறு, அக்டோபர் 28 ம் தேதி, லோதா கமிட்டியிடம் அனுமதி கோரி இருந்தோம். மீண்டும் ஒருமுறை இன்று (நேற்று)  அனுமதி கோரினோம். ஆனால்,  அந்த கமிட்டி கூடுதல் விவரங்களை அளிக்க கோரியதே தவிர, அனுமதி வழங்கவில்லை. 

இதற்கு முன் இப்படி ஒரு பிரச்னை இல்லை என்பதால், ஒப்பந்தத்தை நிறைவேற்றியே இருக்கிறோம். இந்த முறையும் அந்த ஒப்பந்தப்படி நடந்து கொள்ள முடியாத சூழலில் பி.சி.சி.ஐ. உள்ளது. எனவே, செலவினங்களை சமாளிக்க நீங்கள் மாற்று ஏற்பாடுகளை செய்து கொள்ளுங்கள். இந்த விஷயம் தொடர்பாக லோதா கமிட்டியிடம் இருந்து பி.சி.சி.ஐ.க்கு அடுத்த உத்தரவு வரும் பட்சத்தில், அதை உடனடியாக உங்களிடம் பகிர்ந்து கொள்வோம். உங்கள் பயணம் மற்றும் தங்கும் செலவை ஏற்க முடியாததற்காக, பி.சி.சி.ஐ. சார்பில் மன்னிப்பு கேட்டுக் கொள்கிறேன் என, அந்த கடிதத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.


பி.சி.சி.ஐ.யின் இந்த அறிவிப்பால், இந்தியா - இங்கிலாந்து டெஸ்ட் தொடர் பாதிக்கப்படுமோ என்ற சூழல் நிலவியது. ஆனால், திட்டமிட்டபடி சுற்றுப் பயணத்தை முடிக்க வேண்டும் என்பதில் இங்கிலாந்து கிரிக்கெட் வாரியம் தெளிவாக உள்ளது. அந்த அணியின் செய்தித் தொடர்பாளர் கூறுகையில் ‛‛நாங்கள் ஏற்கனவே இந்தியா வந்து விட்டோம். எங்கள் திட்டத்தில் மாற்றம் இல்லை. திட்டமிட்டபடி செயல்பட, இந்தியாவுக்கு எதிரான தொடரை ஆவலுடன் எதிர்நோக்கி உள்ளோம்’’ என்றார்.

ஐ.பி.எல். சூதாட்ட விவகாரத்தைத் தொடர்ந்து, ‛லோதா கமிட்டியிடம் ஆலோசிக்காமல் எந்த ஒப்பந்தத்திலும் பி.சி.சி.ஐ. கையெழுத்திடக் கூடாது. பி.சி.சி.ஐ.யின் நிதி விவகாரங்களை லோதா கமிட்டி கண்காணிக்கும்’ என உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டிருந்ததன் எதிரொலியே இது.

http://www.vikatan.com/news/sports/71348-we-cannot-pay-for-your-hotel-and-travelling-bills-bcci-tells-england-team.art

  • தொடங்கியவர்

இங்கிலாந்து அணியுடன் இணைந்து கொண்டார் ஆண்டெர்சன்

FB_IMG_1478337365933.jpg

இங்கிலாந்து அணியுடன் இணைந்து கொண்டார் ஆண்டெர்சன்.

இங்கிலாந்து கிரிக்கெட் அணியின் நட்சத்திர வேகப்பந்து வீச்சாளர் ஜேம்ஸ் ஆண்டெர்சன் இங்கிலாந்து அணியுடன் இணைந்து கொண்டுள்ளார்.

உபாதை காரணமாக இந்தியாவுடனான முதலிரு டெஸ்ட் போட்டிகளில் ஆண்டெர்சன் விளையாடமாட்டார் என்று ஏற்கனவே அறிவிக்கப்பட்டது.

ஆயினும் உபாதை குணமடைந்து இங்கிலாந்து அணியுடன் ஆண்டெர்சன் இணைந்து கொண்டதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

இவ்விரு அணிகளுக்கும் இடையிலான 5 போட்டிகள் கொண்ட தொடரின் முதல் டெஸ்ட் போட்டி எதிர்வரும் 9 ம் திகதி ராஜ்கோட்டில் ஆரம்பமாகவுள்ளது.

http://vilaiyattu_com.apache5.cloudsector.net/en/%e0%ae%95%e0%ae%bf%e0%ae%b0%e0%ae%bf%e0%ae%95%e0%af%8d%e0%ae%95%e0%af%86%e0%ae%9f%e0%af%8d-%e0%ae%9a%e0%af%86%e0%ae%af%e0%af%8d%e0%ae%a4%e0%ae%bf%e0%ae%95%e0%ae%b3%e0%af%8d/%e0%ae%87%e0%ae%99%e0%af%8d%e0%ae%95%e0%ae%bf%e0%ae%b2%e0%ae%be%e0%ae%a8%e0%af%8d%e0%ae%a4%e0%af%81-%e0%ae%85%e0%ae%a3%e0%ae%bf%e0%ae%af%e0%af%81%e0%ae%9f%e0%ae%a9%e0%af%8d-%e0%ae%87%e0%ae%a3%e0%af%88/

  • தொடங்கியவர்

இந்தியத் தொடர் இங்கிலாந்துக்கு சவாலாக அமையும் – ஜொன்டி ரோட்ஸ்

 

 

இந்­திய அணிக்­கெ­தி­ரான 5 போட்­டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் பங்­கேற்கும் இங்­கி­லாந்து அணி பலத்த சவாலை எதிர்­கொள்ளும் என தென் ஆபி­ரிக்க கிரிக்கெட் அணியின் முன்னாள் வீர­ரான ஜொன்டி ரோட்ஸ் தெரி­வித்­துள்ளார். 

5 போட்­டிகள்  கொண்ட டெஸ்ட் தொடரில் விளை­யா­டு­வ­தற்­காக  அலெஸ்­டயார் குக் தலை­மை­யி­லான இங்­கி­லாந்து கிரிக்கெட் அணி இந்­தி­யா­வுக்கு கிரிக்கெட் சுற்­றுலா மேற்­கொண்­டுள்­ளது.  இவ்­விரு அணி­க­ளுக்­கி­டை­யே­யான  முத­லா­வது டெஸ்ட் போட்டி எதிர்­வரும் 9 ஆம் திகதி ராஜ்­கோட்டில்  ஆரம்­ப­மா­க­வுள்­ளது. 

இந்­நி­லையில் இந்த தொடர் குறித்து தென் ஆபி­ரிக்க கிரிக்கெட் அணியின் முன்னாள் வீர­ரான ஜொன்டி ரோட்ஸ் கூறி­யுள்­ள­தா­வது,

‘‘இந்­திய சுற்­றுப்­ப­யணம் இங்­கி­லாந்து அணிக்கு கடி­ன­மா­ன­தா­கவே  அமையும்.  இந்­தி­யாவில் 5 டெஸ்ட் போட்­டி­களை விளை­யா­டு­வ­தற்கு உடல் அள­விலும், மன­த­ள­விலும் வலி­மை­யாக இருக்­க­வேண்டும்.

ஏனெனில் இங்கு நிலவும் சூழ்­நி­லைகள் இங்­கி­லாந்து அணிக்கு வச­தி­யா­ன­தாக இருக்காது. இது நெருக்­க­டியை மேலும் அதி­க­ரிக்­கவே செய்யும். 3 போட்­டிகள் கொண்ட தொடர் என்றால் அதில் சாத­க­மான விடயங் களை பெறவும் முடியும், இழக்­கவும் முடியும். ஆனால் 5 போட்­டிகள் கொண்ட தொடர் என்றால் அது கடி­ன­மா­கவே இருக்கும்’’ என்றார்.

ஐ.பி.எல். இரு­ப­துக்கு 20 தொடரில் மும்பை இந்­தியன்ஸ் அணிக்கு நீண்­ட­கால மாக களத்­த­டுப்பு பயிற்­று­ந­ராக இருந்­து­வரும் ஜொண்டி ரோட்ஸ் தற்­போது டெல்­லியில் நடத்­தப்­பட்டு வரும் இளம் வீரர்களுக்கான  ஐ.ஜே.பி.எல். இருபதுக்கு   20 தொடரின் ஆலோசகராவும்  செயற்பட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது. 

647_110416054127.jpg

http://www.virakesari.lk/article/13196

  • தொடங்கியவர்

சுழல் சூறாவளியில் சிக்குமா இங்கிலாந்து?

 

 
 
 
 
அஸ்வின்
அஸ்வின்

சமீபகாலமாக சொந்த மண்ணில் நடைபெறும் டெஸ்ட் போட்டிகளில் இந்திய சுழற்பந்து வீச்சாளர்கள் எதிரணியை புரட்டியெடுத்து வருகின்றனர். தென் ஆப்பிரிக்கா, நியூஸிலாந்து அணிகளுக்கு எதிரான டெஸ்ட் தொடர்களில் இதை கண்கூடாக காண முடிந்தது.

கடைசியாக நியூஸிலாந்து தொடரில் 3 டெஸ்ட் போட்டிகளிலும் அந்த அணியின் ஒட்டு மொத்த 60 விக்கெட்களில் 41 விக்கெட்களை இந்திய சுழற்பந்து வீச்சாளர்கள் காவு வாங்கியுள்ளனர். இதேபோல் தென் ஆப்பிரிக்க தொடரில் வீழ்த்தப்பட்ட 70 விக்கெட்களில் நமது சுழல் மன்னர்கள் கைப்பற்றியது 61 விக்கெட்கள்.

இதனால் இந்தியாவுக்கு எதிராக 5 டெஸ்ட் போட்டிகள் கொண்ட டெஸ்ட்டில் விளையாட உள்ள இங்கிலாந்து அணிக்கு சற்று கிலி உருவாகி உள்ளது. கடந்த 2012ல் இந்தியாவில் சுற்றுப்பயணம் செய்து விளையாடிய இங்கிலாந்து அணி இந்தியாவுக்கு போக்கு காட்டியது.

4 டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரில் இந்தியா முதல் டெஸ்ட்டில் வெற்றி பெற்ற போதிலும் அடுத்த 2 போட்டிகளிலும் தோல்வியை தழுவியது. கடைசி போட்டியை டிரா செய்தது. இந்த தொடரை வெல்வதில் இங்கிலாந்து சுழற்பந்து வீச்சாளர்கள் கிரேமி ஸ்வான், மோன்டி பனேசர் முக்கிய பங்காற்றினர்.

இருவரும் சேர்ந்து அந்த தொடரில் 37 விக்கெட்களை வீழ்த்தி ஆதிக்கம் செலுத்தினர். இவர் களுக்கு பிறகு அடுத்த 4 ஆண்டு களில் இந்திய மண்ணில் எந்த ஒரு வெளிநாட்டு சுழற்பந்து வீச்சாளர் களும் இந்த அளவுக்கு அதிக விக்கெட்கள் கைப்பற்றவில்லை.

ஆனால் ஸ்வானும், பனேசரும் ஓய்வு பெற்றுவிட்டதால் இந்த முறை இங்கிலாந்து அணிக்கு கடந்த சுற்றுப்பயணம் போன்று இனிமையானதாக இருக்குமா என்பது கேள்விக்குறிதான். வங்கதேச தொடரில் சுழற்பந்து வீச்சில் இங்கிலாந்து அணி ஆட்டம் கண்டது.

இதனால் எதிர் வரும் தொடரில் அஸ்வின், ஜடேஜா ஆகியோரை இங்கிலாந்து வீரர்கள் எப்படி சமாளிக்கிறார்கள் என்பதை பொறுத்துதான் அந்த அணியின் தலைவிதி அமையும். இங்கிலாந்து அணி மீது மேலாதிக்கம் செலுத்த வசதியாக அஸ்வின், ஜடேஜா ஆகியோருடன் அமித் மிஸ்ரா, ஜெயந்த் யாதவ் ஆகிய இரு சுழலர்களும் கூடுதல் பலத்துக்காக 15 பேர் கொண்ட அணியில் சேர்க்கப்பட்டுள்ளனர்.

ஹர்திக் பாண்டியாவை இந்திய அணி நிர்வாகம் கையில் எடுக்கும் பட்சத்தில் 3 சுழலர்களுடன் இங்கிலாந்தை தாக்க கோலி திட்டமிடக்கூடும். நியூஸிலாந்து தொடரில் அஸ்வின் 27 விக்கெட்கள் அள்ளினார். அவருக்கும் ஜடேஜாவுக்கும் போதிய அளவு ஓய்வு அளிக்கப்பட்டுள்ளதால் மீண்டும் அவர்கள் மிரட்ட தயாராகி வருகின்றனர்.

டெஸ்ட் போட்டிகளில் நம்பர் ஒன் பந்து வீச்சாளரான அஸ்வினிடம் ஒரு சாமர்த்தியம் உண்டு. பேட்ஸ்மேன்கள் நிலைத்து நின்று விளையாடும் பட்சத்தில் விக்கெட்கள் விழாது. அந்த சமயத்தில் பேட்ஸ்மேன்கள் தவறு இழைக்கும் வரை பொறுமையாக அஸ்வின் செயல்படுவார்.

இதற்காக பேட்ஸ்மேன்களின் கால் நகர்வுகளையும், மன ஓட்டத்தையும் கணக்கிட்டு ஒவ்வொரு பந்தையும் மாறுபாடாக வீசுவார். இதற்கு நிச்சயம் அவருக்கு பலன் கிடைக்கும். எதிரணியின் சிறந்த பார்ட்னர்ஷிப் கட்டமைப்பை உடைத்து விட்டதால் அதன் பின்னர் அஸ்வினின் விக்கெட் வேட்டையை நிறுத்த முடியாது. இதை சமீபகால போட்டிகளை சற்று கூர்ந்து கவனித்தால் தெரிந்திருக்கும்.

எதிரணியை ரன் சேர்க்க விடாமல் நெருக்கடி கொடுத்து விக்கெட்களை கைப்பற்றும் திறன் கொண்ட இடது கை சுழல் வீரரான ஜடேஜா நியூஸிலாந்து தொடரில் 14 விக்கெட்கள் சாய்த்தார்.

சமீபத்தில் முடிவடைந்த ஒருநாள் போட்டி தொடரில் அமித் மிஸ்ரா 15 விக்கெட்கள் வீழ்த்தி நல்ல பார்மில் உள்ளார். இளம் சுழல் வீரரான ஜெயந்த் யாதவையும் பயிற்சியாளர் அனில் கும்ப்ளே நன்கு பட்டை தீட்டி வைத்துள்ளார்.

இங்கிலாந்து அணியும் சுழலுக்கு சாதகமான இந்திய ஆடுகளத்தில் பந்து வீச்சுக்கு தயாராகவே வந்துள்ளது. அந்த அணியில் மொயின் அலி, கிரேத் பாத்தி, அடில் ரஷித், ஜாபர் அன்சாரி ஆகிய 4 சுழற்பந்து வீச்சாளர்கள் இடம் பிடித்துள்ளனர்.

இதில் மொயின் அலி கடந்த 2014-ம் ஆண்டு இந்தியாவுக்கு எதிராக நடைபெற்ற 5 டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரில் 19 விக்கெட்கள் வீழ்த்தினார். சமீபத்திய வங்கதேச தொடரில் 11 விக்கெட்கள் கைப்பற்றினார். இதே தொடரில் அடில் ரஷித் 7 விக்கெட்கள் வீழ்த்தினார்.

மேலும் பாகிஸ்தான் முன்னாள் சுழற்பந்து வீச்சாளர் சக்லைன் முஸ்டாக் இந்திய தொடரில் இங்கி லாந்து சுழலர்களுக்கு ஆலோ சகராகவும் செயல்படுகிறார். இது எந்த அளவுக்கு அவர் களுக்கு உதவும் என்பதை பொறுத் திருந்துதான் பார்க்க வேண்டும்.

உள்ளூர் சாதகம், சுழல் ஆடுகளம், இந்திய அணியின் தொடர் வெற்றி வேட்கை ஆகிய வற்றுக்கு அலாஸ்டர் குக் குழுவினர் தடைபோட வேண்டுமெனால் அந்த அணியினர் அதிசயத்தையே நிகழ்த்த வேண்டும்.

இங்கிலாந்து அணியின் முன்னாள் சுழற்பந்து வீச்சாளர் கிரேமி ஸ்வான் கூறும்போது,

‘‘இங்கிலாந்து நாட்டில் சுழற்பந்து வீச்சாளர்கள் என்பவர்கள் 3-ம் தர குடிமக்களாக கருதப்படுகின்றனர். மேலும் சுழற்பந்து வீச்சை பெரிதாகவும் கருதமாட்டார்கள். இதனால்தான் துணைக்கண்ட நாடுகளில் விளையாடும்போது உலகத்தரம் வாய்ந்த சுழற்பந்து வீச்சாளர்கள் அணியில் இல்லாமல் நாம் விளையாடுகிறோம்.

சுழற்பந்து வீச்சுக்கு எதிராக வீரர்கள் மோசமாக விளையாடும் நிலை உள்ளது. இது ஒட்டுமொத்த அணியையும் பாதிக்கும்.

தற்போதைய நிலையில் இந்திய தொடரில் இங்கிலாந்து அணி வெற்றி பெற வாய்ப்பிருப்பதாக நான் கருதவில்லை’’ என்றார்.

http://tamil.thehindu.com/sports/சுழல்-சூறாவளியில்-சிக்குமா-இங்கிலாந்து/article9311881.ece

  • தொடங்கியவர்

இந்தியாவை ஜெயிக்க இந்த 5 விஷயங்களைச் செய்யுமா இங்கிலாந்து? #IndVsEng

இங்கிலாந்து

சொந்த மண்ணில் எந்த அணியாக இருந்தாலும் வெறித்தன வெற்றியைச் சுவைத்து வருகிறது இந்தியா. தென்னாபிரிக்கா, நியூசிலாந்துக்கு அடுத்தபடியாக தற்போது இங்கிலாந்து வந்திருக்கிறது. சென்ற முறை இங்கிலாந்து இங்கே வந்தபோது தொடரை ஜெயித்து அமர்க்களப்படுத்தியது. ஆனால் அது போன்றதொரு நிலை இம்முறை இங்கிலாந்துக்கு இல்லை. சீனியர் வீரர்கள் பலர் இல்லாமல் இளம் படையுடன் இந்தியாவில் கால்வைத்திருக்கிறது. சுழற்பந்துக்கு சாதகமான இந்திய மைதானங்களில் இங்கிலாந்தின் இளம் படை எப்படி விளையாடப் போகிறது என்பது மிகப்பெரிய எதிர்பார்ப்பாக உள்ளது. 

கோலியின் தலைமையில் தொடர்ந்து நான்கு தொடர்களை இந்தியா ஜெயித்து வந்துள்ளது. தவிர, கடைசி 13 டெஸ்ட் போட்டிகளில் ஒன்றில் கூட இந்தியா தோற்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. தென்னாப்ரிக்காவும், நியூசிலாந்தும் இந்திய மண்ணில் அல்லோலப்பட்டடன. இந்நிலையில் வங்கதேசத்திடம் டெஸ்ட் போட்டியில் தோல்வியடைந்த கையோடு இந்தியாவுக்கு வந்திருக்கிறது இங்கிலாந்து. கொஞ்சம் அசந்தாலும் இந்தியாவிடம் 5-0 என வாஷ் அவுட்டாகி,  வரலாற்றில் மிக மோசமான தோல்வியை அடையவேண்டியதிருக்கும் என இங்கிலாந்து அணிக்கு பல முன்னாள் கிரிக்கெட் வீரர்கள் எச்சரிக்கை விடுத்திருக்கிறார்கள். 

இங்கிலாந்து

சுழற்பந்தை எப்படி எதிர்கொள்வது என்ற புரிதல் இல்லாமல் விளையாடுவதாலேயே இந்தியாவில் நடக்கும் டெஸ்ட் போட்டிகள் எப்போதும் ஒரு பக்க சார்பான போட்டிகளாக அமைந்து விடுகின்றன. சொந்த மண்ணில் இந்தியா, சவாலான டெஸ்ட் போட்டியை ஆடி பல ஆண்டுகள் ஆகிறது. இந்த முறை அப்படி நடக்காமல் இந்தியாவுக்கு சவால் தர வேண்டும்  எனில் இந்த ஐந்து  விஷயங்களைச் செய்யவேண்டும் இங்கிலாந்து.

1. டாஸ் முக்கியம்: -

இந்திய மண்ணில் எதிரணியினர் 250 ரன்களை சேஸ் செய்வது என்பதே மிக கடினமான காரியம். எனவே டாஸ் ஜெயித்து முதல் பேட்டிங் செய்வது இங்கிலாந்துக்கு நல்லது. டாஸ் தோற்றால் போட்டியை டிரா செய்ய வேண்டுமென்றால் கூட இங்கிலாந்து மிகவும் கஷ்டப்பட வேண்டியதிருக்கும்.

2. வலது - இடது பேட்டிங் ஆர்டர்: -

இங்கிலாந்து அணியில் ஐந்து இடது கை பேட்ஸ்மேன்கள் இருக்கின்றனர். அஷ்வினுக்கு இது அல்வா சாப்பிடும் விஷயம். எனவே கூடுமானவரை ஆர்டர் மாறினாலும் பரவாயில்லை என்ற நோக்கில் வலது - இடது காம்பினேஷனை இங்கிலாந்து முயற்சிக்க வேண்டும். 

3. சீரான ரன்கள் தேவை :-

மொஹாலி மட்டுமே இங்கிலாந்துக்கு ஓரளவு சாதகமான சூழ்நிலையில் இருக்கும். விசாகப்பட்டினம் ஸ்லோ பிட்ச், மும்பையும், சென்னையும் சுழல் சொர்க்கபுரி, கான்பூர் பிட்ச்  இரண்டாவது நாளின் பிற்பாதிக்கு  பிறகு சுழலுக்கு சாதகமாக இருக்கும். எனவே இந்த  டெஸ்ட் தொடரில் இங்கிலாந்து முற்றிலுமாக தனது ஆட்டபாணியை மாற்ற வேண்டியதிருக்கும். மெய்டன் ஓவர்களை வீச விடாமல், ஓவருக்கு குறைந்தபட்சம் இரண்டு மூன்று ரன்களாவது ஓடி ஓடிச் சேர்க்க வேண்டும். பவுண்டரிகளை விட இப்படி ஓடிச் சேர்ப்பது முக்கியம். இல்லையெனில் சுழல் வலை அமைத்து காலி செய்து விடுவார் கோலி.

4. இன்ஸ்விங் பலம் :-

முரளி விஜய், ரஹானே தவிர இந்திய அணியில் ஸ்விங் ஆகும் பந்துகளை சிறப்பாக விளையாடும் பேட்ஸ்மேன்கள் யாரும் இல்லை. எனவே ஒருவேளை இந்தியா  முதலில் பேட்டிங் செய்தால், முதல் நாளின் உணவு இடைவெளிக்குள் நான்கு விக்கெட்டுகளை கைப்பற்றுவதற்கு இங்கிலாந்து முயற்சிக்க வேண்டும், இல்லையெனில் இந்தியா எளிதாக 300 ரன்களை தாண்டிவிடும். மிதவேகப்பந்து வீசும் ஸ்டோக்ஸ் இங்கிலாந்துக்கு முக்கிய பலம். ஸ்டோக்ஸை சரியான இடத்தில் குக் பயன்படுத்த வேண்டும்.

இங்கிலாந்து

5.  குக் - ரூட் இணை :- 

சுழல் மண்ணில் சிறப்பாக விளையாடும் திறன் படைத்தவர் குக். இந்திய மண்ணில் சிறப்பாக விளையாடிய அயல்நாட்டு பேட்ஸ்மேன்களில் குக் முக்கியமானவர். இந்திய மண்ணில் ஏற்கெனவே இரண்டு  டெஸ்ட் தொடர் ஆடிய அனுபவம் குக்குக்கு உண்டு.  தட்டையான மைதானங்களில் சுழல் பந்தை திறம்பட எதிர்கொள்ள கூடியவர் ரூட், ஆனால் சுழல் மண்ணில் டெஸ்ட் போட்டிகளில் இன்னும் தன்னை நிரூபிக்க வேண்டிய கட்டாயம் ரூட்டுக்கு இருக்கிறது. இங்கிலாந்தில் போதிய பேட்ஸ்மேன்கள் இல்லை என்பதால், குக் - ரூட் இருவரில் யாராவது ஒருவர் ஒவ்வொரு இன்னிங்ஸிலும்  ஆங்கர் பேட்ஸ்மேனாக ஆட வேண்டும். ரூட்- குக் இணை விரைவில் அவுட்டானால் இங்கிலாந்தின் நிலைமை மோசமாகிவிடும். எனவே கூடுதல் பொறுப்போடு குக்கும் ரூட்டும் ஆட வேண்டியது அவசியம். 

 இந்த கட்டுரை வாயிலாக சொல்லப்பட்டுள்ளது இந்தியாவின் பலவீனங்கள். இதைச் சரி செய்யாமல் போனால் இந்தியாவுக்கு இந்த டெஸ்ட் தொடர்  சவாலானதாக மாறலாம்.

http://www.vikatan.com/news/sports/71759-can-england-beat-india-in-tests.art

Edited by நவீனன்

  • தொடங்கியவர்

முதல் டெஸ்ட் - இங்கிலாந்து பேட்டிங்

400_09009.jpg

ராஜ்கோட்டில் நடக்கும் இந்தியாவுக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியில் இங்கிலாந்து அணி பேட்டிங் தேர்வு செய்துள்ளது. இங்கிலாந்து அணியின் கேப்டன் அலெஸ்டர் குக் டாஸ் வென்று பேட்டிங் தேர்வு செய்தார். இங்கிலாந்து அணியிடம் இந்த மேட்ச்சுக்கு மூன்று ஸ்பின்னர்கள். கோலிக்கு முதலில் பேட் செய்யவே விருப்பமாம்.

  • தொடங்கியவர்

மோசமான பீல்டிங்: ஸ்லிப்பில் 3 கேட்ச்களை நழுவ விட்ட ரஹானே, கோலி, விஜய்

 

 
கேட்ச் விட்ட ரஹானே | படம்: கே ஆர் தீபக்
கேட்ச் விட்ட ரஹானே | படம்: கே ஆர் தீபக்

ராஜ்கோட்டில் இன்று தொடங்கிய முதல் டெஸ்ட் போட்டியில் டாஸ் வென்ற இங்கிலாந்து முதலில் பேட் செய்து வருகிறது, விக்கெட் இழப்பின்றி 29 ரன்கள் எடுத்துள்ளது.

ஆனால், 2 தொடக்க வீரர்களும் பெவிலியன் திரும்பியிருக்க வேண்டும். அலிஸ்டர் குக் மற்றும் 19 வயது அறிமுக வலது கை பேட்ஸ்மென் ஹசீப் ஹமீத் இருவருமே ஆட்டமிழந்து பெவிலியன் திரும்பி இருக்க வேண்டும். ஆனால், இந்திய அணியின் ஸ்லிப் பீல்டிங் படுமோசமாக அமைந்தது.

மொகமது ஷமி, உமேஷ் யாதவ் இருவரும் அருமையான வேகத்துடன் சரியான லைன் மற்றும் லெந்த்தில் வீசினர். அலிஸ்டர் குக் பதற்றமான தொடக்க வீரர் என்பது அனைவரும் அறிந்ததே. மொகமது ஷமி வீசிய முதல் ஓவரின் முதல் பந்தில் பீட்டன் ஆனார் அலிஸ்டர் குக். ஷமி ரவுண்ட் த விக்கெட்டில் வந்து வீச அடுத்த பந்து உண்மையான எட்ஜ் ஆனது. கல்லியில் ரஹானேயின் கைக்கு வந்த கேட்சை அவர் தட்டித் தட்டி கீழே நழுவ விட்டார்.

2-வது ஓவரை உமேஷ் யாதவ் வீச 2-வது பந்து அருமையான அவுட் ஸ்விங்கர் ஆக மீண்டும் குக்கிற்கு எட்ஜ் எடுததது. பந்து 2-வது ஸ்லிப்பில் கோலிக்கு இடதுபுறம் கேட்ச் பிடிக்குமாறு சென்றது நழுவ விட்டார் கோலி.

இன்னிங்சின் 6-வது ஓவரை மீண்டும் உமேஷ் யாதவ் வீச, இம்முறை இளம் ஹசீப் ஹமீத் எதிர்கொண்டார். ஆஃ ப் ஸ்டம்புக்கு சற்று வெளியே சென்ற பந்தை ஹமீத் எந்த வித கால் நகர்த்தலும் இல்லாமல் தொட எட்ஜ் ஆகி நேராக முதல் ஸ்லிப்பில் விஜய் கைக்கு சென்றது, மிகவும் எளிதான வாய்ப்பு ஆனால் சோம்பேறித்தனமாக வினையாற்றிய முரளி விஜய் கேட்சை நழுவ விட்டார்.

இன்னும் கூட எட்ஜ் எடுத்துக் கொண்டுதான் இருக்கிறது, ஆனால் அதன் பிறகு பந்து பீல்டர் கைக்குச் செல்லவில்லை முன்னாலேயே பிட்ச் ஆனது.

ஆக்ரோஷமாக ஆடுவோம், வெற்றி பெறுவோம் என்று தொடருக்கு முன்னால் சூளுரைக்கும் வீரர்கள் பவுலர்களை வெறுப்பேற்றும் விதமாக கேட்ச்களை கோட்டை விடுவது தொடருக்கு நல்ல ஆரம்பமாகத் தெரியவில்லை. அலிஸ்டர் குக் ஏற்கெனவே இந்திய அணியை இங்கிலாந்திலும் இந்தியாவிலும் படுத்தி எடுத்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்திய அணியில் அஸ்வின், ஜடேஜா, அமித் மிஸ்ரா ஆகிய 3 ஸ்பின்னர்கள் உள்ளனர்.

http://tamil.thehindu.com/sports/மோசமான-பீல்டிங்-ஸ்லிப்பில்-3-கேட்ச்களை-நழுவ-விட்ட-ரஹானே-கோலி-விஜய்/article9323089.ece?homepage=true

  • தொடங்கியவர்

ராஜ்கோட் டெஸ்ட்: முதல் நாள் ஆட்ட நேர முடிவில் இங்கிலாந்து 311-4

cric_16041.jpg

ராஜ்கோட்டில் நடந்து வரும் இந்தியாவுக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியில் இங்கிலாந்து அணி ஆட்ட நேர முடிவில் 4 விக்கெட்டுகளை இழந்து 311 எடுத்துள்ளது. 

டாஸ் வென்ற இங்கிலாந்து அணி முதலில் பேட்டிங் செய்தது. தொடக்க வீரர்கள் குக் (21)- ஹமீது (31) ஆகியோர் சொற்ப ரன்னில் ஆட்டம் இழந்தனர். இதைத் தொடர்ந்து களம் இறங்கிய ரூட் அபாரமாக விளையாடி சதம் அடித்தார்.

பின்னர் வந்த டக்கெட் 13 ரன்னில் வெளியேற மொயின் அலி களம் இறங்கினார். இவர் அபாரமாக விளையாடி ரன்கள் குவித்தார். முதல் நாள் ஆட்ட நேர முடிவில் இங்கிலாந்து அணி 3 விக்கெட்டுகளை இழந்து 311 ரன்கள் எடுத்துள்ளது. மொயின் அலி 99 ரன்னிலும், ஸ்டோக்ஸ் 19 ரன்னிலும் களத்தில் உள்ளனர்.

அஸ்வின் 2 விக்கெட்டுகளும், ஜடேஜா, உமேஷ் யாதவ் தலா 1 விக்கெட்டுகளையும் வீழ்த்தியுள்ளனர். இங்கிலாந்து இன்று தனது நிதான ஆட்டத்தையே வெளிப்படுத்தியது. இந்திய பந்துவீச்சாளர்களுக்கு நெருக்கடி ஏற்பட்டுள்ளது.

http://www.vikatan.com/news/sports/71921-rajkot-test-day-1-stumps-england-311-4.art

  • கருத்துக்கள உறவுகள்

 

  • தொடங்கியவர்

ராஜ்கோட் டெஸ்ட்: இங்கிலாந்து 537 ரன்கள் குவிப்பு- 3 பேர் சதம் விளாசல்

ராஜ்கோட்டில் நடந்து வரும் இந்தியாவுக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியில் இங்கிலாந்து அணி முதல் இன்னிங்ஸில் 537 ரன்கள் குவித்துள்ளது. 3 பேர் சதம் விளாசியுள்ளனர்.

22526_14287.jpg

இந்தியா-இங்கிலாந்து முதல் டெஸ்ட் ராஜ்கோட்டில் நடைபெற்று வருகிறது. இதில் டாஸ் வென்ற இங்கிலாந்து அணி ஆரம்பம் முதலே சிறப்பான பேட்டிங்கை செய்து வந்தது. இந்நிலையில் இன்று இரண்டாம் நாள் ஆட்டத்தில் முதல் இன்னிங்ஸில் இங்கிலாந்து அணி 537 ரன்களுக்கு ஆல் அவுட் ஆனது. அந்த அணியின் பென் ஸ்டோக்ஸ் 128, ஜோ ரூட் 124, மொய்ன் அலி 117 ரன்கள் எடுத்தனர்.

இந்திய அணி தரப்பில் ஜடேஜா 3 விக்கெட்டுகள், அஸ்வின், சமி, யாதவ் தலா 2 விக்கெட்டுகள் வீழ்த்தினர். இதையடுத்து இந்திய அணி இன்னும் சற்று நேரத்தில் முதல் இன்னிங்ஸை தொடங்க உள்ளது.

vikatan

  • தொடங்கியவர்

மூன்று சதங்களுடன் மிரட்டிய இங்கிலாந்து ; பதிலடி கொடுக்கிறது இந்தியா

 

 

இந்தியா மற்றும் இங்கிலாந்து அணிகள் மோதும் முதலாவது டெஸ்ட் போட்டி இந்தியாவின் ராஜ்கோட்டில் இடம்பெற்று வருகின்றது.

254814.jpg

இந்த போட்டியில் நாணய சுழற்சியில் வெற்றிபெற்ற இங்கிலாந்து அணி தனது முதலாவது இன்னிங்ஸ் நிறைவில் சகல விக்கட்டுகளையும் இழந்து 537 ஓட்டங்களை பெற்றுக்கொண்டுள்ளது.

இங்கிலாந்து அணியின் துடுப்பாட்டத்தை பொறுத்தவரையில் ஒரே இன்னிங்ஸில் மூன்று சதங்கள் பெறப்பட்டன.

254813.jpg

இதில் பென் ஸ்டோக்ஸ் 128 ஓட்டங்கள், ஜோ ரூட் 124 ஓட்டங்கள் மற்றும் மொஹின் அலி 117 ஓட்டங்கள் என சிறப்பாக துடுப்பெடுத்தாடி அணியின் ஓட்டயிலக்கை உயர்த்தினர்.

இந்திய அணி சார்பில் ரவீந்ர ஜடேஜா மூன்று விக்கட்டுகளை கைப்பற்றியதுடன் உமேஸ் யாதவ், மொஹமட் சமி மற்றும் ரவிச்சந்திரக் அஷ்வின் ஆகியோர் தலா 2 விக்கட்டுகளை கைப்பற்றினர்.

254798.jpg

இந்நிலையில் பதிலுக்கு துடுப்பெடுத்தாடிய இந்திய அணி 2 ஆம் நாள் ஆட்டநேர முடிவின்போது விக்கட்டிழப்பின்றி 63 ஒட்டங்களை பெற்றுள்ளது.

இந்திய அணி சார்பில் ஆரம்ப துடுப்பாட்ட வீரர்களான கௌதம் கம்பீர் 28 ஓட்டங்கள் மற்றும் முரளி விஜய் 25 ஓட்டங்கள் பெற்று களத்தில் உள்ளனர். 

254797.jpg

254788.jpg

254784.jpg

254776.jpg

http://www.virakesari.lk/article/13385

  • தொடங்கியவர்

ஆட்டமிழப்பா? இல்லையா? மைாதனத்தில் பரபரப்பு (காணாளி இணைப்பு)

இந்தியா மற்றும் இங்கிலாந்து மோதும் டெஸ்ட் போட்டியில் ஒரு விசித்திரமான ஆட்டமிழப்பொன்று வழங்கப்பட்டுள்ளது.

 

 

இந்த போட்டியில் சிறப்பாக துடுப்பெடுத்தாடிய ஜோ ரூட் 124 ஓட்டங்களை பெற்றவேளை உமேஸ் யாதவின் பந்துவீச்சில் பிடிகொடுத்து ஆட்டமிழந்தார்.

ஜோ ரூட் உமேஸ் யாதவின் பந்தை அடித்ததும், அது பிடியெடுப்பாக மாறி உமேஸ் யாதவை நோக்கிசென்றது. குறித்த பிடியெடுப்பை இலாவகமாக பிடித்துக்கொண்ட யாதவ் தனது மகிழ்ச்சியை வெளிப்படுத்த பந்தை வீசுவதற்கு எண்ணியபோது குறித்த பந்து கண்ணிமைக்கும் நொடியில் தவறி கீழே விழுந்துவிட்டது.

குறித்த பிடியெடுப்பு தவறவிடப்பட்டது என எல்லோரும் நினைக்க, மூன்றாவது நடுவர் அது ஆட்டமிழப்புதான் என்று அறிவித்துள்ளார்.

http://www.virakesari.lk/article/13402

  • தொடங்கியவர்

விஜய், புஜாரா அபார சதம்; இங்கிலாந்துக்கு இந்தியா பதிலடி

 

 
சதநாயகர்கள் விஜய், புஜாரா. | படம்: கே.ஆர்.தீபக்.
சதநாயகர்கள் விஜய், புஜாரா. | படம்: கே.ஆர்.தீபக்.

ராஜ்கோட் டெஸ்ட் போட்டியின் 3-ம் நாள் ஆட்டமான இன்று முரளி விஜய், செடேஸ்வர் புஜாரா ஆகியோர் சதம் எடுத்து ஆடி வருகின்றனர், இந்திய அணி 1 விக்கெட் இழப்புக்கு 253 ரன்கள் எடுத்துள்ளது.

தேநீர் இடைவேளைக்குப் பிறகு இந்திய அணி சற்று முன் வரை முரளி விஜய் 259 பந்துகளில் 8 பவுண்டரிகள் 3 சிக்சர்களுடன் 103 ரன்களுடனும், புஜாரா 178 பந்துகளில் 16 பவுண்டரிகளுடன் 107 ரன்களுடனும் ஆடி வருகின்றனர்.

இருவரும் இணைந்து 2-வது விக்கெட்டுக்காக 185 ரன்களைச் சேர்த்துள்ளனர்.

இன்று காலை 63/0 என்று தொடங்கிய இந்திய அணி கவுதம் கம்பீரை அவரது சொந்த எண்ணிக்கையான 29 ரன்களில் இழந்தது. ஸ்டூவர்ட் பிராட் ரவுண்ட் த விக்கெட்டிலிருந்து வீசிய பந்து யார்க்கர் லெந்தில் பெரிய அளவில் உள்ளே வர கம்பீர் ஆஃப் திசையில் நகர்ந்து லெக் திசையில் பந்தை தட்டி விட முயன்றார், முன்னங்கால் சற்று கூடுதலாகவே முன்னால் நகர மட்டையை அவரால் சரியான நேரத்தில் பந்தின் மேல் இறக்க முடியவில்லை, கால்காப்பைத்தாக்க எல்.பி.ஆனார்.

அதன் பிறகு புஜாரா இறங்கினார், தொடக்கத்தில் ஷார்ட் பிட்ச் உத்தியை எதிர்கொண்டார், ஹெல்மெட் இல்லையெனில் அவர் இந்நேரம் மருத்துவமனையில் ஆபத்தான நிலையில் இருந்திருப்பார்.

தொடர்ந்து ஆக்சன் ரீப்ளே போல் வோக்ஸ் வீசிய 3 பவுன்சர்களையும் பந்திலிருந்து கண்ணை எடுத்து முகத்தை வலது புறம் திருப்பி ஹெல்மெட்டில் வாங்கினார், ஆனால் அவர் பதற்றமடையவில்லை.

அதன் பிறகு அருமையான சில ஷாட்களை ஆடினார். விஜய்யை காட்டிலும் வேகமாக ரன் குவித்தார். விஜய் அவ்வப்போது ஆக்ரோஷம் காட்டி 3 சிக்சர்களை அடித்தார், சதம் அடிப்பதற்கு முன்பாக 90களுக்கு நுழைய லாங் ஆஃபில் சிக்ஸ் அடித்தார் விஜய், பிறகு பிராடை ஒரு அருமையான பிளிக் அடுத்து ஒரு எட்ஜ் பவுண்டரி என்று சதம் அடித்தார்.

உணவு இடைவேளைக்கு முன்பாக கடைசி ஓவரை அடில் ரஷீத் வீச கூக்ளியில் கால்காப்பில் பட கடுமையான முறையீடு எழுந்தது, விஜய் பதற்றமடைந்தார், ஆனால் ரிவியூ செய்யவில்லை, செய்திருந்தாலும் இங்கிலாந்துக்கு தோல்விதான் ஏற்பட்டிருக்கும், காரணம் பந்து ஸ்டம்புக்கு மேலே சென்றது. அடுத்த பந்து எட்ஜைக் கடந்து சென்றது லெக்ஸ்பின். இப்படி தடுமாறிய பிறகு 66 ரன்களில் விஜய் இருந்த போது 19 வயது இளம் வீரர் ஹசீப் ஹமீது கவர் திசையில் கேட்சைக் கோட்டை விட்டார், பிராட் கடும் கடுப்பானார். கடுமையாக உழைத்து ஒரு வாய்ப்பை உருவாக்கினால் அது தவறவிடப்படும் போது ஏற்படும் நியாயமான கோபம் பிராடினுடையது. இந்திய அணி சற்று முன் வரை 1 விக்கெட் இழப்புக்கு 261 ரன்கள் எடுத்துள்ளது.

http://tamil.thehindu.com/sports/விஜய்-புஜாரா-அபார-சதம்-இங்கிலாந்துக்கு-இந்தியா-பதிலடி/article9333756.ece?homepage=true

  • தொடங்கியவர்

3-ம் நாள் ஆட்டநேர முடிவில் இந்தியா 319-4

cric_17476.jpg

இந்தியா - இங்கிலாந்து டெஸ்ட்டின் முதல் இன்னிங்ஸை விளையாடி வரும் இந்தியா, 3-ம் நாள் ஆட்ட நேர முடிவில் 4 விக்கெட்டுகள் இழப்பிற்கு 319 ரன்கள் எடுத்துள்ளது. முரளி விஜய் 126, புஜாரா 124 ரன்களிலும் ஆட்டமிழந்தனர். கேப்டன் விராட் கோலி 24 ரன்களுடன் களத்தில் உள்ளார். கவுதம் கம்பீர் 29 ரன்களில் வெளியேற்றப்பட்டார். ஆட்ட நேர முடிவில் அமித் மிஸ்ரா களமிறங்கி டக்-அவுட் ஆனார். இன்னும் 218 ரன்கள் இங்கிலாந்தை விட பின்தங்கியுள்ளது இந்திய அணி.

  • தொடங்கியவர்

விஜய், புஜாரா அபார சதங்களுடன் இந்திய அணி 4 விக்கெட்டுகள் இழப்புக்கு 319 ரன்கள்

 

 
சதநாயகர்கள் விஜய், புஜாரா. | படம்: கே.ஆர்.தீபக்.
சதநாயகர்கள் விஜய், புஜாரா. | படம்: கே.ஆர்.தீபக்.

ராஜ்கோட் டெஸ்ட் போட்டியின் 3-ம் நாள் ஆட்டமான இன்று முரளி விஜய், செடேஸ்வர் புஜாரா ஆகியோர் சதம் எடுக்க இந்திய அணி 4 விக்கெட் இழப்புக்கு 319 ரன்கள் எடுத்துள்ளது.

குழிபிட்ச் இல்லையேல் தார்ச்சாலை பிட்ச் என்ற இந்திய பிட்ச் நிர்வாகத்திற்கு இணங்க ராஜ்கோட் செயல்படுகிறது. இம்முறை ஒரு மாற்றத்திற்காக தார்ச்சாலை.

முரளி விஜய் 259 பந்துகளில் 8 பவுண்டரிகள் 3 சிக்சர்களுடன் 103 ரன்களுடனும், புஜாரா 178 பந்துகளில் 16 பவுண்டரிகளுடன் 107 ரன்களுடனும் ஆடி வந்தனர், ஆனால் புஜாரா கடைசியில் 206 பந்துகளில் 17 பவுண்டரிகளுடன் 124 ரன்கள் எடுத்து, பந்து வீச்சில் லைன் லெந்துக்கு போராடிய ஸ்டோக்ஸ் வீசிய வெளியே சென்ற பந்தை நேராக குக் கையில் திருப்பி வெளியேறினார்.

முரளி விஜய் 9 பவுண்டரிகள் 4 சிக்சர்களுடன் 301 பந்துகளில் 126 ரன்கள் எடுத்து அடில் ரஷீத்தின் கூக்ளியை நேராக ஷார்ட் லெக்கில் ஹமீத் கையில் அடித்தார்.

இருவரும் இணைந்து 2-வது விக்கெட்டுக்காக 209 ரன்களைச் சேர்த்தனர், விராட் கோலி 26 ரன்களுடன் ஒருமுனையில் நிற்க தேவையில்லாலம் இரவுக்காவலனாக இறக்கப்பட்டு அமித் மிஸ்ரா பலிவாங்கப்பட்டார். இடது கை சுழற்பந்து வீச்சாளர் அன்சாரியின் பந்தை ஷார்ட் லெக்கில் ஹமீதிடம் கேட்ச் கொடுத்து வெளியேற இந்தியா 4 விக்கெட் இழப்பிற்கு 319 ரன்கள் எடுத்தது.

இன்று காலை 63/0 என்று தொடங்கிய இந்திய அணி கவுதம் கம்பீரை அவரது சொந்த எண்ணிக்கையான 29 ரன்களில் இழந்தது. ஸ்டூவர்ட் பிராட் ரவுண்ட் த விக்கெட்டிலிருந்து வீசிய பந்து யார்க்கர் லெந்தில் பெரிய அளவில் உள்ளே வர கம்பீர் ஆஃப் திசையில் நகர்ந்து லெக் திசையில் பந்தை தட்டி விட முயன்றார், முன்னங்கால் சற்று கூடுதலாகவே முன்னால் நகர மட்டையை அவரால் சரியான நேரத்தில் பந்தின் மேல் இறக்க முடியவில்லை, கால்காப்பைத்தாக்க எல்.பி.ஆனார்.

அதன் பிறகு புஜாரா இறங்கினார், தொடக்கத்தில் ஷார்ட் பிட்ச் உத்தியை எதிர்கொண்டார், ஹெல்மெட் இல்லையெனில் அவர் இந்நேரம் மருத்துவமனையில் ஆபத்தான நிலையில் இருந்திருப்பார்.

தொடர்ந்து ஆக்சன் ரீப்ளே போல் வோக்ஸ் வீசிய 3 பவுன்சர்களையும் பந்திலிருந்து கண்ணை எடுத்து முகத்தை வலது புறம் திருப்பி ஹெல்மெட்டில் வாங்கினார், ஆனால் அவர் பதற்றமடையவில்லை.

மதிய உணவு இடைவேளையில் இந்திய அணி 50 ஓவர்களில் ஒரு விக்கெட் இழப்புக்கு 162 ரன்கள் எடுத்தது. முதல் செஷனில் இந்திய அணி 27 ஓவர்களில் 99 ரன்கள் சேர்த்தது. உணவு இடைவேளைக்கு பிறகு ஆட்டத்தை தொடர்ந்த முரளி விஜய்-புஜாரா ஜோடி இங்கிலாந்து பந்து வீச்சாளர்களின் பொறுமையை சோதித்தது.

புஜாரா அருமையான சில ஷாட்களை ஆடினார். விஜய்யை காட்டிலும் வேகமாக ரன் குவித்தார். விஜய் அவ்வப்போது ஆக்ரோஷம் காட்டி 3 சிக்சர்களை அடித்தார், சதம் அடிப்பதற்கு முன்பாக 90களுக்கு நுழைய லாங் ஆஃபில் சிக்ஸ் அடித்தார் விஜய், பிறகு பிராடை ஒரு அருமையான பிளிக் அடுத்து ஒரு எட்ஜ் பவுண்டரி என்று சதம் அடித்தார்.

உணவு இடைவேளைக்கு முன்பாக கடைசி ஓவரை அடில் ரஷீத் வீச கூக்ளியில் கால்காப்பில் பட கடுமையான முறையீடு எழுந்தது, விஜய் பதற்றமடைந்தார், ஆனால் ரிவியூ செய்யவில்லை, செய்திருந்தாலும் இங்கிலாந்துக்கு தோல்விதான் ஏற்பட்டிருக்கும், காரணம் பந்து ஸ்டம்புக்கு மேலே சென்றது. அடுத்த பந்து எட்ஜைக் கடந்து சென்றது லெக்ஸ்பின். இப்படி தடுமாறிய பிறகு 66 ரன்களில் விஜய் இருந்த போது 19 வயது இளம் வீரர் ஹசீப் ஹமீது கவர் திசையில் கேட்சைக் கோட்டை விட்டார், பிராட் கடும் கடுப்பானார். கடுமையாக உழைத்து ஒரு வாய்ப்பை உருவாக்கினால் அது தவறவிடப்படும் போது ஏற்படும் நியாயமான கோபம் பிராடினுடையது.

இவர்கள் நிலைத்து நின்று ரன் சேர்க்க தொடங்கியதால் விக்கெட்களை வீழ்த்த முடியாமல் இங்கிலாந்து கேப்டன் அலாஸ்டர் குக் தவித்தார். தேநீர் இடைவேளையில் இந்திய அணி 79 ஓவர்களில் மேற்கொண்டு விக்கெட்களை இழக்காமல் 228 ரன்கள் சேர்த்தது. இந்த 2-வது செஷனில் இந்திய அணி 29 ஓவர்களில் 66 ரன்கள் எடுத்தது. பிராட் 10 ஓவர்களில் 18 ரன்களையே கொடுத்தார், இங்கிலாந்து கட்டுக்கோப்புடன் வீசி இந்திய பவுண்டரிகளை வறளச் செய்தது.

புஜாரா 86 ரன்களை சேர்த்திருந்த போது ஜாபர் அன்சாரியின் சுழலில் எல்பிடபிள்யூ முறையில் சிக்கினார். களத்தில் இருந்த நடுவர் அவுட் கொடுக்க புஜாரா டிஆர்எஸ் முறையில் அப்பீல் செய்தார்.

இதை ஆய்வு செய்த டி.வி. நடுவர் ராடு டிக்கர், புஜாரா அவுட் இல்லையென கள நடுவரின் முடிவை மாற்றி அறிவித்தார். இதை ரசிகர்களுடன் இருக்கையில் அமர்ந்தபடி பார்த்த புஜாராவின் மனைவி பூஜா துள்ளிக்குதித்து மகிழ்ச்சியை வெளிப்படுத்தினார்.

தேநீர் இடைவேளைக்கு பின்னர் இந்த ஜோடி சதம் அடித்து அசத்தியது. புஜாரா 169 பந்துகளில் 15 பவுண்டரிகளுடன் 9-வது சதத்தையும், பொறுமையாக விளையாடிய முரளி விஜய் 254 பந்துகளில் 8 பவுண்டரிகள், 3 சிக்ஸர்களுடன் 7-வது சதத்தையும் விளாசினர்.

இந்த ஜோடியை ஒருவழியாக கிறிஸ் வோக்ஸ் பிரித்தார். ஸ்கோர் 277 ஆக இருந்த போது பென் ஸ்டோக்ஸ் பந்தில் புஜாரா சிலிப் திசையில் நின்ற குக்கிடம் கேட்ச் கொடுத்து வெளியேறினார். புஜாரா 206 பந்துகளில், 17 பவுண்டரிகளுடன் 124 ரன்கள் எடுத்தார். 2-வது விக்கெட்டுக்கு அவர் முரளி விஜய்யுடன் இணைந்து 67 ஓவர்களில் 209 ரன்கள் சேர்த்தார்.

இதையடுத்து கேப்டன் விராட் கோலி, முரளி விஜய்யுடன் இணைந்தார். இந்த ஜோடி மிக நிதானமாக விளையாடியது. 3-வது நாள் முடியும் தருவாயில் முரளி விஜய் விக்கெட்டை அடில் ரஷித் கைப்பற்றினார். முரளி விஜய் 301 பந்துகளில், 4 சிக்ஸர்கள், 9 பவுண்டரிகளுடன் 126 ரன்கள் எடுத்தார். அடுத்து களமிறங்கிய நைட் வாட்ச்மேன் அமித் மிஸ்ரா 2 பந்துகளை சந்தித்த நிலையில் அன்சாரி பந்தில் ஆட்டமிழக்க 3-வது நாள் ஆட்டம் அத்துடன் முடிவுக்கு வந்தது.

இந்திய அணி 108.3 ஓவர்களில் 4 விக்கெட்கள் இழப்புக்கு 319 ரன்கள் எடுத்துள்ளது. விராட் கோலி 26 ரன்களுடன் களத்தில் இருந்தார். இங்கிலாந்து அணி தரப்பில் ஸ்டூவர்ட் பிராடு, அன்சாரி, அடில் ரஷித், பென் ஸ்டோக்ஸ் தலா ஒரு விக்கெட் கைப்பற்றினர். 218 ரன்கள் பின்தங்கிய நிலையில் கைவசம் 6 விக்கெட்களுடன் இந்திய அணி இன்றைய 4-வது நாள் ஆட்டத்தை விளையாட உள்ளது.

http://tamil.thehindu.com/sports/விஜய்-புஜாரா-அபார-சதங்களுடன்-இந்திய-அணி-4-விக்கெட்டுகள்-இழப்புக்கு-319-ரன்கள்/article9333756.ece

  • தொடங்கியவர்

67 ஆண்டுக்குப் பிறகு ஹிட் விக்கெட்டான இந்திய கேப்டன்! (வீடியோ)

இந்தியா - இங்கிலாந்துக்கு இடையிலான முதல் டெஸ்ட் போட்டியின் இன்று நடந்து வரும் நான்காவது நாள் ஆட்டத்தில், இந்திய கேப்டன் விராட் கோலி, 40 ரன்னில் விளையாடிக் கொண்டிருக்கும் போது ஹிட் விக்கெட் மூலம் ஆட்டமிழந்தார். 1949க்குப் பிறகு ஒரு இந்திய டெஸ்ட் கேப்டன், ஹிட்-விக்கெட் முறையில் அவுட் இழப்பது  இதுவே முதல் முறை. 
 

 

http://www.vikatan.com/news/sports/72221-the-indian-captain-who-got-out-by-hit-wicket.art

  • தொடங்கியவர்

டிராவை நோக்கி முதல் டெஸ்ட்: இந்தியா 488 ரன்களுக்கு ஆல் அவுட்; இங்கிலாந்து 163 ரன்கள் முன்னிலை

 

 
ஹிட் விக்கெட் ஆன விராட் கோலி. | படம்: கே.ஆர்.தீபக்.
ஹிட் விக்கெட் ஆன விராட் கோலி. | படம்: கே.ஆர்.தீபக்.

இங்கிலாந்துக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியில் இந்திய அணி முதல் இன்னிங்ஸில் 488 ரன்கள் குவித்து அனைத்து விக்கெட்களையும் இழந்தது. அஸ்வின் சிறப்பாக விளையாடி 70 ரன்கள் சேர்த்தார். தொடர்ந்து விளையாடிய இங்கிலாந்து 2-வது இன்னிங்ஸில் விக்கெட் இழப்பின்றி 114 ரன்கள் சேர்த்தது.

ராஜ்கோட்டில் நடைபெற்று வரும் இந்த போட்டியில் இங்கிலாந்து அணி முதல் இன்னிங்ஸ் 159.3 ஓவர்களில் 537 ரன்கள் குவித்தது. இதையடுத்து முதல் இன்னிங்ஸை விளையாடிய இந்திய அணி 3-வது நாள் ஆட்டத்தின் முடிவில் 108.3 ஓவர்களில் 4 விக்கெட்கள் இழப்புக்கு 319 ரன்கள் எடுத்தது. முரளி விஜய் 126, புஜாரா 124 ரன்கள் சேர்த்தனர்.

218 ரன்கள் பின்தங்கிய நிலையில் கைவசம் 6 விக்கெட்களுடன் 4-வது நாள் ஆட்டத்தை இந்திய அணி தொடர்ந்தது. விராட் கோலி 26, அஜிங்க்ய ரஹானே ரன் எதும் எடுக்காத நிலையில் பேட்டிங்கை தொடங்கினர். ரஹானே 13 ரன்களில் அன்சாரி பந்தில் போல்டானார்.

95 பந்துகளில் 4 பவுண்டரிகளுடன் 40 ரன்கள் எடுத்த நிலையில் அடில் ரஷித் பந்தில் கோலி ஹிட் விக்கெட் முறையில் ஆட்டமிழந்தார். அப்போது ஸ்கோர் 361 ஆக இருந்தது. இரு விக்கெட்கள் விரைவாக சரிந்த நிலையில் அஸ்வின்-விருத்திமான் சாஹா ஜோடி நிதானமாக விளையாடியது. இதனால் இந்திய அணி 131.1 ஓவர்களில் 400 ரன்களை கடந்தது.

மதிய உணவு இடைவேளையில் இந்திய அணி 137 ஓவர்களில் 6 விக்கெட் இழப்புக்கு 411 ரன்கள் எடுத்திருந்தது. அஸ்வின், சாஹா ஆகியோர் தலா 29 ரன்களுடன் உணவு இடைவேளைக்கு பின்னர் தொடர்ந்து விளையாடினர். சாஹா மேற்கொண்டு 6 ரன்கள் மட்டும் சேர்த்த நிலையில் மொயின் அலி பந்தில் வெளியேறினார். இந்த ஜோடி 7-வது விக்கெட்டுக்கு 24.3 ஓவர்களில் 64 ரன்கள் சேர்த்தது.

நிதானமாக விளையாடிய அஸ்வின் 111 பந்துகளில் 3 பவுண்டரிகளுடன் தனது 7-வது அரை சதத்தை நிறைவு செய்தார். 8-வது விக்கெட்டுக்கு களமிறங்கிய ஜடேஜா 12 ரன்களிலும் அடுத்து வந்த உமேஷ் யாதவ் 5 ரன்களிலும் அடில் ரஷித் சுழலில் ஆட்டமிழந்தனர்.

கடைசி நபராக அஸ்வின் 70 ரன்களில் ஆட்டமிழந்தார். மொயின் அலி பந்தை சிக்ஸருக்கு தூக்கிய போது எல்லைக் கோட்டுக்கு அருகே நின்ற அன்சாரி கேட்ச் செய்தார். முடிவில் இந்திய அணி 162 ஓவர்களில் 488 ரன்களுக்கு அனைத்து விக்கெட்களையும் இழந்தது.

முகமது ஷமி 8 ரன்களுடன் கடைசி வரை ஆட்டமிழக்காமல் இருந்தார். இங்கிலாந்து அணி தரப்பில் அடில் ரஷித் 4, மொயின் அலி, அன்சாரி தலா 2 விக்கெட்கள் கைப்பற்றினர். 49 ரன்கள் முன்னிலையுடன் 2-வது இன்னிங்ஸை விளையாட தொடங்கிய இங்கிலாந்து அணி நேற்றைய ஆட்டதின் முடிவில் 37 ஓவர்களில் விக்கெட் இழப்பின்றி 114 ரன்கள் எடுத்தது.

அறிமுக வீரரான ஹமீது 94 பந்துகளில், ஒரு சிக்ஸர், 5 பவுண்டரிகளுடன் அரை சதம் அடித்தார். அவர் 62 ரன்களுடனும், கேப்டன் அலாஸ்டர் குக் 46 ரன்களுடனும் களத்தில் இருந்தனர். இங்கிலாந்து அணி 163 ரன்கள் முன்னிலையுடன் கைவசம் 10 விக்கெட்கள் இருக்க இன்றைய கடைசி நாள் ஆட்டத்தை எதிர்கொள்கிறது. இந்த ஆட்டம் டிராவில் முடிவடையும் என எதிர்பார்க்கக்படுகிறது.

http://tamil.thehindu.com/sports/டிராவை-நோக்கி-முதல்-டெஸ்ட்-இந்தியா-488-ரன்களுக்கு-ஆல்-அவுட்-இங்கிலாந்து-163-ரன்கள்-முன்னிலை/article9338937.ece?homepage=true

  • தொடங்கியவர்

குக் சதம்; இங்கிலாந்து 260/3 டிக்ளேர்: இந்தியாவுக்கு 310 ரன்கள் வெற்றி இலக்கு

 

 
அலஸ்டைர் குக். | படம்: ராய்ட்டர்ஸ்.
அலஸ்டைர் குக். | படம்: ராய்ட்டர்ஸ்.

ராஜ்கோட் டெஸ்ட் போட்டியில் இங்கிலாந்து அணி தன் 2-வது இன்னிங்ஸில் 3 விக்கெட்டுகள் இழப்புக்கு 260 ரன்கள் எடுத்து டிக்ளேர் செய்தது. இதன் மூலம் இந்திய அணிக்கு 49 ஓவர்களில் 310 ரன்கள் இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

இங்கிலாந்து கேப்டன் அலஸ்டைர் குக் தனது 30-வது டெஸ்ட் சதத்தை எடுத்தார்.

114/0 என்று இங்கிலாந்து இன்று தொடங்கியது. 38. 3 ஓவர்களில் இன்று 146 ரன்களை எடுத்து 3 விக்கெட்டுகளை இழந்தது.

தொடக்க அறிமுக வீரர் ஹமீத் 177 பந்துகளில் 7 பவுண்டரிகள் 1 சிக்சருடன் 82 ரன்கள் எடுத்து அமித் மிஸ்ரா பந்து வீச்சில் அவரிடமே கேட்ச் கொடுத்து வெளியேறினார். அருமையான இன்னிங்ஸ், சதம் எடுக்காதது துரதிர்ஷ்டமே. குக்கும் இவரும் இணைந்து முதல் விக்கெட்டுக்காக 180 ரன்களைச் சேர்த்தனர்.

அலஸ்டைர் குக் 243 பந்துகளைச் சந்தித்து 13 பவுண்டரிகளுடன் 130 ரன்களை எடுத்து அஸ்வின் பந்தைல் ஜடேஜாவிடம் கேட்ச் கொடுத்து ஆட்டமிழந்தவுடன் டிக்ளேர் அறிவிப்பு செய்தார், இவருடன் பென் ஸ்டோக்ஸ் 29 ரன்களில் நாட் அவுட்டாக இருந்தார். ஜோ ரூட் விரைவு ரன் குவிப்பு கவனத்தில் மிஸ்ராவிடம் 4 ரன்களில் ஸ்லாக் ஸ்வீப் ஷாட்டில் அவுட் ஆனார்.

75.3 ஓவர்களில் 260/3 என்று டிக்ளேர் செய்தது இங்கிலாந்து, இந்தியா டிராவுக்குச் செல்லுமா, வெற்றிக்குச் செல்லுமா என்பதை பொறுத்திருந்து பார்க்கவேண்டும்.

http://tamil.thehindu.com/sports/குக்-சதம்-இங்கிலாந்து-2603-டிக்ளேர்-இந்தியாவுக்கு-310-ரன்கள்-வெற்றி-இலக்கு/article9340680.ece?homepage=true

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.