Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

இந்தியா எதிர் இங்கிலாந்து டெஸ்ட் போட்டி தொடர் செய்திகள்

Featured Replies

  • தொடங்கியவர்

சென்னை டெஸ்ட்: முதல் நாள் ஆட்ட முடிவில் இங்கிலாந்து 284/4

 

மொயீன் அலி சதத்தால் சென்னை டெஸ்டில் முதல் நாள் ஆட்ட முடிவில் இங்கிலாந்து 4 விக்கெட் இழப்பிற்கு 284 ரன்கள் சேர்த்துள்ளது.

 
 
சென்னை டெஸ்ட்: முதல் நாள் ஆட்ட முடிவில் இங்கிலாந்து 284/4
 
இந்தியா - இங்கிலாந்து அணிகளுக்கு இடையிலான ஐந்தாவது மற்றும் கடைசி டெஸ்ட் கிரிக்கெட் போட்டி சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் இன்று தொடங்கியது.

டாஸ் வென்ற இங்கிலாந்து அணி பேட்டிங் தேர்வு செய்தது. ஆட்டம் தொடங்கும் முன் மறைந்த ஜெயலலிதாவிற்கு இரங்கல் தெரிவிக்கப்பட்டது. அத்துடன் வீரர்கள் தங்கள் கையில் கருப்பு பட்டை அணிந்து களம் இறங்கினார்கள்.

இங்கிலாந்து அணியின் குக், ஜென்னிங்ஸ் ஆகியோர் தொடக்க வீரர்களாக களம் இறங்கினார்கள். ஜென்னிங்ஸ் 1 ரன் எடுத்த நிலையில் இசாந்த் சர்மா பந்தில் ஆட்டம் இழந்தார். அடுத்து ஜோ ரூட் களம் இறங்கினார். அவர் வழக்கமான தனது அதிரடி ஆட்டத்தை வெளிப்படுத்தினார்.

ஆனால் குக் 10 ரன்கள் எடுத்த நிலையில் ஜடேஜா பந்தில் ஆட்டம் இழந்தார். ஜடேஜா இந்த தொடரில் குக்கை ஐந்தாவது முறையாக வீழ்த்தி சாதனைப் படைத்தார். குக் 2 ரன்கள் எடுத்திருந்தபோது 11 ஆயிரம் ரன்களை கடந்தார்.

D7BF2DE1-8469-479A-8861-3676EB83A2B0_L_s

இங்கிலாந்து அணி 21 ரன்களுக்குள் 2 விக்கெட்டுக்களை இழந்த நிலையில் ஜோ ரூட் உடன் மொயீன் அலி ஜோடி சேர்ந்தார். இந்த ஜோடி 3-வது விக்கெட்டுக்கு 146 ரன்கள் குவித்தது. ஜோ ரூட் 88 ரன்கள் எடுத்த நிலையில் ஜடேஜா பந்தில் ஆட்டம் இழந்தார்.

அடுத்து பேர்ஸ்டோவ் களம் இறங்கினார். இவர் 49 ரன்கள் எடுத்த நிலையில் ஜடேஜா பந்தில் அவட்டாகி அரைசதம் வாய்ப்பை இழந்தார். ஆனால், மறுமுனையில் விளையாடிய மொயீன் அலி சதம் அடித்தார். இந்த தொடரில் இது அவரது 2-வது சதமாகும். பேர்ஸ்டோவ் அவுட்டானதும் பென் ஸ்டோக்ஸ் களம் இறங்கினார். இவர் மொயீன் அலி உடன் இணைந்து மேலும் விக்கெட் இழக்காமல் பார்த்துக் கொண்டார்.

ED8BAB45-5917-421D-8A00-3A576877F567_L_s

இதனால் இங்கிலாந்து அணி முதல் நாள் ஆட்ட முடிவில் 4 விக்கெட் இழப்பிற்கு 284 ரன்கள் எடுத்துள்ளது. மொயீன் அலி 120 ரன்னுடனும், பென் ஸ்டோக்ஸ் 5 ரன்னுடனும் களத்தில் உள்ளனர். இந்திய அணி சார்பில் ஜடேஜா அதிகபட்சமாக 4 விக்கெட்டுக்கள் வீழ்த்தினார்.

http://www.maalaimalar.com/News/Sports/2016/12/16172652/1056502/Chennai-Test-stumps-Day-1-England-284-for-4.vpf

  • Replies 157
  • Views 8.6k
  • Created
  • Last Reply
  • தொடங்கியவர்

சட்டையில்லா இங்கிலாந்து ரசிகர்கள்... பாரபட்சமில்லாமல் பாராட்டிய சென்னை ரசிகர்கள் #IndVsEng

 

சென்னை டெஸ்ட்

*வர்தா புயல் காரணமாக நேற்று இரவு வரை மழை அச்சுறுத்தல் இருந்தது. இதனால் இந்தியா - இங்கிலாந்து அணிகள் மோதும் சென்னை டெஸ்ட் நடக்குமா என்ற சந்தேகம் இருந்தது. ஆனால் இன்று காலை 11 மணிக்கெல்லாம் வெயில் தன் வேலையைக் காட்ட ஆரம்பித்து விட்டது. முதல்நாள் ஆட்டத்துக்கு இயற்கை தடையாக இல்லை. 

* ஆட்டம் தொடங்கும் முன், மறைந்த முதல்வர் ஜெயலலிதாவுக்கு இரண்டு நிமிடம் மௌன அஞ்சலி செலுத்தப்பட்டது. துக்கம் அனுசரிக்கும் விதமாக அம்பயரில் இருந்து இரு அணி வீர்ர்களும் கையில் கறுப்பு பேட்ஜ் அணிந்திருந்தனர்.

*டாஸ் வென்ற இங்கிலாந்து பேட்டிங்கை தேர்வு செய்தது. இங்கிலாந்து கேப்டன் குக் (10), ரவீந்திர ஜடேஜா பந்தில் ஸ்லிப்பில் இருந்த விராட் கோஹ்லியிடம் கேட்ச் கொடுத்தார். இஷாந்த் சர்மா பந்தில் விக்கெட் கீப்பர் பார்த்தீவ் படேலிடம் கேட்ச் கொடுத்து, ஜென்னிங்ஸ் 1 ரன்னில் வெளியேறினார். 

* இந்திய நிருபர்களுக்கு நிகராக இங்கிலாந்து நிருபர்கள் பிரஸ் பாக்ஸில் நிறைந்திருந்தனர். தோராயமாக 15 நிருபர்கள் இங்கிலாந்தில் இருந்து வந்திருந்தனர். அவர்கள் டெஸ்ட் மேட்ச்சுக்கு எவ்வளவு முக்கியத்துவம் அளிக்கிறார்கள் என்பது புரிந்தது. 

* இங்கிலாந்து ரசிகர்கள் தங்களுக்கே உரிய பாணியில்  சட்டையைக் கழற்றி டெஸ்ட் மேட்ச்சை கண்டுகளித்தனர். வெயில் ஏற ஏற சட்டையை மாட்டிக் கொண்டனர். 

* 17வது ஓவரை வீச வந்தார் அஷ்வின். ஹோ...வென ஆர்ப்பரித்தனர் ரசிகர்கள். தன் முதல் ஓவரில் 2 ரன்கள் விட்டுக் கொடுத்தார். முதல் ஓவரை அவர் 'பட்டாபிராமன் கேட்'  எண்டில் இருந்து வீசினார். விக்கெட் இல்லை. இதைப் புரிந்து கொண்ட விராட் கோஹ்லி, அஷ்வினை அடுத்த ஓவரை பெவிலியன் எண்டில் இருந்து வீச வைத்தார். ஆனால், கடைசி வரை அவர், எந்த எண்டிலும் விக்கெட் வீழ்த்தவில்லை.

* வெற்றி, தோல்வியைக் கடந்து நல்ல கிரிக்கெட்டை ரசிக்கிறோம், எங்கள் அணிக்கு ஆதரவாக இருக்கிறோம் என்பது போல, இங்கிலாந்து வீரர்கள் ஒவ்வொரு பவுண்டரி அடித்த போதும் கைதட்டி அங்கீகரித்தனர் இங்கிலாந்து ரசிகர்கள். மொயின் அலி சதம், ஜோ ரூட் அரைசதம் அடித்தபோது எழுந்து நின்று ஆர்ப்பரித்தனர். 

* முதல் நாளில் ஆடுகளம் வேகத்துக்கு ஒத்துழைக்கும் வகையில் இருந்தது. இஷாந்த் சர்மா, உமேஷ் யாதவ் இருவரும் பௌன்சர்களை எகிற விட்டனர். சுழற்பந்தும் விதிவிலக்கல்ல. அஷ்வின், ஜடேஜா பந்தும் எகிறியது. 

* மதிய உணவு இடைவேளையின்போது இங்கிலாந்து அணியின் ஸ்கோர் 68/2. மொயின் அலி 7, ஜோ ரூட் 44 ரன்களுடன் ஆட்டமிழக்காமல் இருந்தனர்.

* நாடு பேதம் கடந்து நல்லதொரு கிரிக்கெட்டை அங்கீகரிப்பவர்கள் சென்னை ரசிகர்கள் என்பது அடிக்கடி நிரூபணம் ஆனது. ஜோ ரூட் அரைசதம் அடித்தபோதும், இங்கிலாந்து 100 ரன்களை எட்டியபோதும், கைதட்டினர் சென்னை ரசிகர்கள். இந்த சத்தம் கேட்டு இங்கிலாந்து ரசிகர்கள் ஆச்சர்யப்பட்டனர்.

* உமேஷ் யாதவ் 135 கி.மீ. வேகத்தில் வீசிய பந்துகளை நேர்த்தியான ட்ரைவ்களில் சமாளித்தார் மொயின் அலி. குறிப்பாக கவர் ட்ரைவ் அட்டகாசம். மதிய உணவு இடைவேளைக்குப் பின் அவர் அரைசதம் அடித்தார். தேநீர் இடைவேளைக்குப் பின் சதம் அடித்தார்.  120 ரன்களுடன் அவர் ஆட்டமிழக்காமல் இருக்கிறார். ஒருவேளை நாளையும் நின்று விட்டால் இங்கிலாந்து முதல் இன்னிங்சில் டீசன்ட்டான ஸ்கோரை எட்டும். 

* சதம் அடிப்பார் என்று எதிர்பார்க்கப்பட்ட ஜோ ரூட், 88 ரன்கள் எடுத்திருந்தபோது ரவீந்திர ஜடேஜா பந்தில் விக்கெட் கீப்பரிடம் கேட்ச் கொடுத்தார். முதலில் அம்பயர் நாட் அவுட் என்றார். இந்தியா ரிவ்யூ கோரியது. அதில் இன்சைட் எட்ஜ் ஆனது தெரிந்தது. சத வாய்ப்பை நழுவ விட்ட சோகத்தில் வெளியேறினார் ரூட். 

moeen_ali_18560.jpg

* ஜோ ரூட், மொயின் அலி இருவரும் மூன்றாவது விக்கெட்டுக்கு 45 ஓவர்கள் தாக்குப்பிடித்து 146 ரன்கள் எடுத்தனர்.  பின் நான்காவது விக்கெட்டுக்கு ஜானி பேர்ஸ்டோ உடன் ஜோடி சேர்ந்தார் அலி. இந்த பார்ட்னர்ஷிப் 86 ரன்களை எட்டியது. 


* பேர்ஸ்டோ பத்து ரன் எடுத்திருந்தபோது அஷ்வின் பந்தில் கேட்ச் கொடுத்தார். ஆனால் இங்கிலாந்து அப்பீல் செய்தபோது பந்து தரையில் பட்டது தெளிவானது. 

* தேநீர் இடைவேளையின்போது இங்கிலாந்து ஸ்கோர் 182/3. மொயின் அலி 62, பேர்ஸ்டோ 10. 

* நான்காவது விக்கெட்டுக்கு மொயின் அலியுடன் ஜோடி சேர்ந்த பேர்ஸ்டோ இந்திய பௌலிங்கை அநாயசமாக எதிர்கொண்டார். குறிப்பாக அஷ்வின் பந்தில் ஒரு சிக்சர் பறக்க விட்டார். எடுத்த 49 ரன்களில் மூன்று சிக்ஸர்கள் விளாசி மிரட்டினார் போர்ஸ்டோ.

 * பேர்ஸ்டோ 38 ரன் எடுத்திருந்தபோது ஜடேஜா பந்தில் இறங்கி அடிக்க முயன்றார். ஆனால் பார்த்திவ் படேல் ஸ்டம்பிங் வாய்ப்பை நழுவ விட்டார். ஆனாலும் அவர் நீண்ட நேரம் நிற்கவில்லை. 

* மொயின் அலி ரன் ஓடும்போது அவர் கையில் இருந்த பேட் நழுவி கீழே விழுந்தது. அதை எடுத்த அஷ்வின், அவரிடம் கொடுப்பதற்கு முன் பேட்டை வைத்து ஸ்ட்ரெய்ட் ட்ரைவ் விளையாடுவது போல சமிக்ஞை செய்ய, ஆர்ப்பரித்தனர் ரசிகர்கள். 

* முதல்நாள் ஆட்ட முடிவில் இங்கிலாந்தின் ஸ்கோர் 284/4, மொயின் அலி 120 நாட் அவுட். பென் ஸ்டோக்ஸ் 5 ரன். இந்திய தரப்பில் ஜடேஜா மட்டும் மூன்று விக்கெட் எடுத்தார். கடைசி ஐந்து ஓவரில் எப்படியும் விக்கெட் எடுத்து விட வேண்டும் என 2 ஸ்லிப், கல்லி என ஃபீல்டர்களை செட் செய்திருந்தார் விராட். புதுப்பந்து ஏகத்துக்கும் பெளன்சர் ஆனது. ஆனால், மொயின் அலி, ஸ்டோக்ஸ் இருவரும் தப்பித் தவறிக் கூட, எட்ஜ் ஆகக் கூடாது என்பதில் கவனமாக இருந்தனர். 

* மண்ணின் மைந்தன் அஷ்வின் விக்கெட்டுகளை அள்ளுவார் என எதிர்பார்த்தவர்களுக்கு ஏமாற்றமே மிஞ்சியது. அவர் வீசிய 24 ஓவர்களில் 76 ரன்கள் எடுக்கப்பட்டது. நாளை ஆடுகளம் சுழலுக்கு ஒத்துழைக்கும் பட்சத்தில், விக்கெட் வேட்டை தொடர வாய்ப்பு இருக்கிறது. 

http://www.vikatan.com/news/sports/75131-england-fans-watched-the-match-without-shirts-chennai-fans-praise-england-batsmen-too-updates-from-day-1-of-indvseng.art

  • தொடங்கியவர்

சேப்பாக்கம் டெஸ்ட் போட்டி: சுவாரஸ்ய துளிகள்

 

 
மறைந்த தமிழக முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவுக்கு சென்னை டெஸ்ட் போட்டியின் போது தமிழக கிரிக்கெட் சங்கம் சார்பில் மவுன அஞ்சலி செலுத்தப்பட்டது. இதில் தமிழ்நாடு கிரிக்கெட் சங்க தலைவர் என்.சீனிவாசன், இந்திய அணியின் கேப்டன் விராட் கோலி, நடுவர்கள் மற்றும் இரு அணி வீரர்கள் கலந்து கொண்டனர். படம்: கே.பிச்சுமணி.
மறைந்த தமிழக முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவுக்கு சென்னை டெஸ்ட் போட்டியின் போது தமிழக கிரிக்கெட் சங்கம் சார்பில் மவுன அஞ்சலி செலுத்தப்பட்டது. இதில் தமிழ்நாடு கிரிக்கெட் சங்க தலைவர் என்.சீனிவாசன், இந்திய அணியின் கேப்டன் விராட் கோலி, நடுவர்கள் மற்றும் இரு அணி வீரர்கள் கலந்து கொண்டனர். படம்: கே.பிச்சுமணி.
 
 

குக் 11 ஆயிரம்

இங்கிலாந்து கேப்டன் அலாஸ்டர் குக் 2 ரன்கள் சேர்த்த போது டெஸ்ட் போட்டிகளில் 11 ஆயிரம் ரன்களை கடந்தார். இதன் மூலம் அவர் 11 ஆயிரம் ரன்களை கடந்த முதல் இங்கிலாந்து வீரர் என்ற சாதனையை படைத்தார். உலக அளவில் இந்த சாதனையை நிகழ்த்தும் 11-வது வீரர் குக் ஆவார். 252 இன்னிங்ஸ்களில் விளையாடி உள்ள குக் தற்போது வரை 11008 ரன்கள் சேர்த்துள்ளார்.

மவுன அஞ்சலி

மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவுக்கு நேற்றைய ஆட்டத்தின் போது ஒரு நிமிடம் மவுன அஞ்சலி செலுத்தப்பட்டது. போட்டி தொடங்குவதற்கு முன்னதாக இரு அணி வீரர்களும் வரிசையாக நின்றபடி மவுன அஞ்சலி செலுத்தினர். மேலும் வீரர்கள் கையில் கருப்பு பேண்ட் அணிந்திருந்தனர்.

ஆயிரம் ரன்கள் கிளப்

சென்னை டெஸ்ட்டில் சதம் அடித்த மொயின் அலி இந்த ஆண்டில் ஆயிரம் ரன்களுக்கு மேல் குவித்த குக், ஜோ ரூட், பேர்ஸ்டோவ் ஆகியோருடன் இணைந்தார். இதற்கு முன்னர் இதே சாதனையை 2006-ல் இங்கிலாந்து வீரர்கள் படைத் திருந்தனர்.

இந்தியா மற்றும் தென் ஆப்பிரிக்காவை சேர்ந்த தலா 4 வீரர்கள் 2008-ம் ஆண்டிலும், இலங்கை வீரர்கள் 4 பேர் 2009-ம் ஆண்டிலும் ஆயிரம் ரன்களுக்கு மேல் குவித்து சாதனை நிகழ்த்தியிருந்தனர். ஒட்டுமொத்தமாக ஒரே ஆண்டில் ஆயிரம் ரன்களை அடித்துள்ள 20-வது இங்கிலாந்து வீரர் மொயின் அலி ஆவார்.

கலக்கும் ரூட்

இங்கிலாந்து வீரர் ஜோ ரூட், இந்தியாவுக்கு எதிராக 11 டெஸ்ட் போட்டிகளில் விளையாடி உள்ளார். இதில் அனைத்து ஆட்டங்களிலும் அவர் அரை சதம் அடித்துள்ளார். இதன் மூலம் இந்தியாவுக்கு எதிராக தொடர்ச்சியாக அதிக முறை அரை சதங்கள் அடித்த வீரர் என்ற சாதனையை ஜோ ரூட் படைத்துள்ளார். இந்த வகையில் ஆஸ்திரேலிய ஜாம்பவான் டான் பிராட்டேன் இங்கிலாந்துக்கு எதிராக தொடர்ச்சியாக 14 முறை அரை சதங்கள் அடித்துள்ளார்.

நழுவிய வாய்ப்புகள்

* உமேஷ் யாதவ் வீசிய 14-வது ஓவரை ஜோ ரூட் எதிர்கொண்டார். இந்த ஓவரில் பவுன்சாகி வந்த 3-வது பந்து ரூட்டின் மட்டையில் பட்டு எட்ஜ் ஆகி 2-வது சிலிப் திசையை நோக்கி சென்று எல்லை கோட்டை அடைந்தது. இந்த ஓவரில் முதல் மற்றும் 3-வது சிலிப்பில் மட்டுமே பீல்டர்கள் நிறுத்தப்பட்டிருந்தனர்.

* ஜடேஜா வீசிய 70.1-வது ஓவரில் பேர்ஸ்டோவ்வை ஸ்டெம்பிங் செய்யும் வாய்ப்பை பார்த்தீவ் படேல் கோட்டைவிட்டார். அப்போது பேர்ஸ்டோவ் 38 ரன்கள் எடுத்திருந்தார்.

* ஜடேஜா வீசிய 15-வது ஓவரின் கடைசி பந்தை மொயின் அலி தூக்கி அடித்தார். இதை அருகில் நின்ற கே.எல்.ராகுல் சரியாக கணித்து பிடிக்க தவறினார். இந்த சமயத்தில் மொயின் அலி ரன்கள் எதும் சேர்க்காமல் இருந்தார்.

2 சதம் அடித்த 6-வது வீரர்

மொயின் அலி இந்த ஆண்டில் 4 சதங்கள் அடித்துள்ளார். இலங்கை, பாகிஸ்தானுக்கு எதிராக தலா ஒரு சதம் அடித்த அவர், இந்தியாவுக்கு எதிரான தற்போதைய தொடரில் 2 சதங்கள் அடித்துள்ளார். இந்திய மண்ணில் ஒரே தொடரில் 2 சதங்கள் அடிக்கும் 6-வது இங்கிலாந்து வீரர் மொயின் அலி ஆவார். இதற்கு முன்னர் அலாஸ்டர் குக், கென் பாரிங்டன், காலின் கவுட்ரே, மைக் காட்டிங், ஆண்ட்ரூ ஸ்டிராஸ் ஆகியோரும் ஒரே தொடரில் இரு சதங்கள் அடித்துள்ளனர்.

திணறடிக்கும் ஜடேஜா

இந்தியாவுக்கு எதிரான தற்போதைய டெஸ்ட் தொடரில் இங்கிலாந்து கேப்டன் அலாஸ்டர் குக்கை தனது சுழல் ஜாலத்தால் ஜடேஜா திணறவைத்து வருகிறார். ஏற்கெனவே இவரது பந்தில் 4 முறை குக் ஆட்டமிழந்த நிலையில் சென்னை டெஸ்ட் போட்டியிலும் ஜடேஜாவிடமே வீழ்ந்தார் குக். ஒரு தொடரில் குக் விக்கெட்டை இதுவரை யாரும் இந்த அளவுக்கு கைப்பற்றியதில்லை. அதிகபட்சமாக 2012-ம் ஆண்டு தொடரில் அஸ்வின் பந்தில் குக் 4 முறை ஆட்டமிழந்திருந்தார்.

5 ரன்கள் அபராதம்

அஸ்வின் வீசிய 25-வது ஓவரை ஜோ ரூட் எதிர்கொண்டார். இந்த ஓவரின் 3-வது பந்து இன்சைடு எட்ஜ் ஆகி விக்கெட் கீப்பரின் பின்புறம் சென்றது. சிலிப் திசையில் நின்ற கேப்டன் விராட் கோலி பந்தை விரட்டி சென்று கையில் எடுத்தபடி விக்கெட் கீப்பரை நோக்கி வீசினார். ஆனால் பந்தானது தரையில் வைக்கப்பட்டிருந்த ஹெல்மெட் (பேட்ஸ்மேனுக்கு அருகே பீல்டர் நிற்கும் போது அணியக்கூடியது) மீது பட்டது. இதையடுத்து ஐசிசி விதிகளின் படி 5 ரன்கள் அபராதமாக விதிக்கப்பட்டது. இந்த ரன்கள் இங்கிலாந்து அணியில் கணக்கில் சேர்ந்தது. ஏற்கெனவே ஜோ ரூட் ஒரு ரன் சேர்த்திருந்ததால் இந்த பந்தில் மட்டும் 6 ரன்கள் கிடைத்தது.

http://tamil.thehindu.com/sports/சேப்பாக்கம்-டெஸ்ட்-போட்டி-சுவாரஸ்ய-துளிகள்/article9431548.ece

  • தொடங்கியவர்

சென்னை டெஸ்ட்: இங்கிலாந்து முதல் இன்னிங்சில் 477 ரன்கள் குவிப்பு

சென்னையில் நடைபெற்று வரும் ஐந்தாவது மற்றும் கடைசி போட்டியில் இங்கிலாந்து முதல் இன்னிங்சில் 477 ரன்கள் குவித்துள்ளது.

 
சென்னை டெஸ்ட்: இங்கிலாந்து முதல் இன்னிங்சில் 477 ரன்கள் குவிப்பு
 
இந்தியா - இங்கிலாந்து அணிகளுக்கு இடையிலான ஐந்தாவது மற்றும் கடைசி டெஸ்ட் கிரிக்கெட் போட்டி நேற்று சென்னையில் தொடங்கியது. டாஸ் வென்ற இங்கிலாந்து அணி பேட்டிங் தேர்வு செய்தது.

அந்த அணியின் சுழற்பந்து வீச்சாளர் மொயீன் அலி சதத்தால் முதல் நாள் ஆட்ட முடிவில் 4 விக்கெட் இழப்பிற்கு 284 ரன்கள் எடுத்திருந்தது. மொயீன் அலி 120 ரன்னுடனும், பென் ஸ்டோக்ஸ் 5 ரன்னுடனும் களத்தில் இருந்தனர்.

இன்று 2-வது நாள் ஆட்டம் தொடங்கியது. பென் ஸ்டோக்ஸ் மேலும் ஒரு ரன் எடுத்த நிலையில் அஸ்வின் பந்தில் ஆட்டம் இழந்தார். அடுத்து வந்த அதிரடி வீரர் பட்லர் 5 ரன்னில் பெவிலியன் திரும்பினார். மொயீன் அலி 146 ரன்கள் எடுத்த நிலையில் ஆட்டம் இழந்தார். ஆட்டம் தொடங்கியதுமே இந்தியா மூன்று முக்கிய விக்கெட்டுக்களை கைப்பற்றியது. அப்போது இங்கிலாந்து அணி 7 விக்கெட் இழப்பிற்கு 321 ரன்கள் எடுத்திருந்தது.

864308C7-AD2B-46A4-A2E7-456AED048A80_L_s

இதனால் அந்த அணியை 375 ரன்களுக்குள் இந்தியா சுருட்டி விடும் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், சுழற்பந்து வீச்சாளர்கள் டவ்சன் மற்றும் ரஷித் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தினார்கள். இந்த ஜோடி 8-வது விக்கெட்டுக்கு 107 ரன்கள் குவித்தது. ரஷித் 60 ரன்கள் எடுத்த நிலையில் உமேஷ் யாதவ் பந்தில் ஆட்டம் இழந்தார்.

F92869AC-6652-4B9A-80E9-3989A5C45F2D_L_s

அடுத்து வந்த பிராட் 19 ரன்னி்ல் வெளியேறினார். ஆனால் அறிமுக வீரர் டவ்சன் அரைசதம் அடித்தார். கடைசியாக வந்த பால் 12 ரன்கள் எடுத்து மிஸ்ரா பந்தில் போல்டாக, இங்கிலாந்து அணி 157.2 ஓவரில் 477 ரன்கள் குவித்து ஆல் அவுட் ஆனது. டவ்சன் 66 ரன்கள் எடுத்து கடைசி வரை அவுட்டாகாமல் இருந்தார். இந்திய அணி சார்பில் ஜடேஜா 3 விக்கெட்டும், இசாந்த் சர்மா, உமேஷ் யாதவ் ஆகியோர் தலா 2 விக்கெட்டுக்களும் வீழ்த்தினார்கள்.

ADF9B78A-3F18-47EB-9AD3-B7AF45DE17F9_L_s

பின்னர் இந்தியா முதல் இன்னிங்சை தொடங்கியது. முரளி விஜய் காயம் காரணமாக தொடக்க வீரராக களம் இறங்கவில்லை. அவருக்குப் பதிலாக லோகேஷ் ராகுல் உடன் பார்தீவ் பட்டேல் தொடக்க வீரராக களம் இறங்கினார். இந்தியா 7 ஓவர்கள் முடிவில் விக்கெட் இழப்பின்றி 16 ரன்கள் எடுத்து விளையாடி வருகிறது.

http://www.maalaimalar.com/News/Sports/2016/12/17154715/1056701/Chennai-Test-England-477-runs-all-out-in-1st-innings.vpf

  • தொடங்கியவர்

சென்னை டெஸ்ட்: இந்தியா 2-வது நாள் ஆட்ட முடிவில் விக்கெட் இழப்பின்றி 60 ரன்

 

சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் நடைபெற்று வரும் டெஸ்டில் இந்தியா முதல் இன்னிங்சில் 2-வது நாள் ஆட்ட முடிவில் விக்கெட் இழப்பின்றி 60 ரன்கள் எடுத்துள்ளது.

 
சென்னை டெஸ்ட்: இந்தியா 2-வது நாள் ஆட்ட முடிவில் விக்கெட் இழப்பின்றி 60 ரன்
 
இந்தியா - இங்கிலாந்து அணிகளுக்கு இடையிலான ஐந்தாவது மற்றும் கடைசி டெஸ்ட் கிரிக்கெட் போட்டி சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் நடைபெற்று வருகிறது. டாஸ் வென்று முதலில் பேட்டிங் செய்த இங்கிலாந்து அணி 477 ரன்கள் குவித்தது.

அந்த அணியின் மொயீன் அலி 146 ரன்கள் குவித்தார். ஜோ ரூட் (88), டவ்சன் (66 அவுட் இல்லை), ரஷித் (60) ஆகியோர் அரைசதம் அடித்து அணியின் ஸ்கோர் உயர காரணமாக இருந்தனர். இந்திய அணி சார்பில் ஜடேஜா 3 விக்கெட்டுக்களும், உமேஷ் யாதவ் மற்றும் இசாந்த் சர்மா ஆகியோர் தலா இரண்டு விக்கெட்டுக்களும் வீழ்த்தினார்கள்.

பின்னர் இந்தியா முதல் இன்னிங்சை தொடங்கியது. முரளி விஜய்க்கு காயம் ஏற்பட்டதால் பார்தீவ் பட்டேல் லோகேஷ் ராகுல் உடன் இணைந்து தொடக்க வீரராக களம் இறங்கினார். இருவரும் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தினார்கள்.

56DC100F-3376-4C26-AD14-365CB5887721_L_s

இதனால் இந்தியா 2-வது நாள் ஆட்ட முடிவில் விக்கெட் ஏதும் இழக்கவில்லை. 2-வது நாள் ஆட்ட முடிவில் இந்தியா 20 ஓவர்கள் முடிவில் விக்கெட் இழப்பின்றி 60 ரன்கள் எடுத்துள்ளது. ராகுல் 30 ரன்னுடனும், பார்தீவ் பட்டேல் 28 ரன்னுடனும் களத்தில் உள்ளனர்.
 

http://www.maalaimalar.com/News/Sports/2016/12/17170039/1056726/Chennia-Test-stumps-day-2-india-60-for-no-loss.vpf

  • தொடங்கியவர்

சென்னை மைதானத்தில் 83 வருட சாதனையை உடைத்த ரஷித்- டவ்சன் ஜோடி

 

சென்னை மைதானத்தில் இங்கிலாந்து ஜோடி 1933-34 சீசனில் வைத்த சாதனையை தற்போது ரஷித் - டவ்சன் ஜோடி உடைத்துள்ளது.

 
சென்னை மைதானத்தில் 83 வருட சாதனையை உடைத்த ரஷித்- டவ்சன் ஜோடி
 
இந்தியா - இங்கிலாந்து அணிகளுக்கு இடையிலான ஐந்தாவது மற்றும் கடைசி டெஸ்ட் கிரிக்கெட் போட்டி சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் நடைபெற்று வருகிறது.

இங்கிலாந்து அணி முதல் இன்னிங்சில் 477 ரன்கள் குவித்தது. அந்த அணி ஒரு கட்டத்தில் 7 விக்கெட் இழப்பிற்கு 321 ரன்கள் எடுத்திருந்தது. 8-வது விக்கெட்டுக்கு லியாம் டவ்சனுடன் அடில் ரஷித் ஜோடி சேர்ந்தார். இந்த ஜோடி 108 ரன்கள் குவித்துவிட்டது. இதனால் பல்வேறு சாதனைகளை இந்த ஜோடி படைத்துள்ளது.

1933-34-ம் ஆண்டு சென்னையில் நடைபெற்ற டெஸ்டில், இங்கிலாந்து அணியின் ஹெட்லி வெரிட்டி - டக்ளஸ் ஜார்டைன் 8-வது விக்கெட்டுக்கு 97 ரன்கள் எடுத்திருந்தது. இந்த 83 வருட சாதனையை இன்று இந்த ஜோடி 108 ரன்கள் எடுத்து உடைத்துள்ளனர்.

அதுபோக ஒட்டு மொத்தமாக 8-வது விக்கெட்டுக்கு அதிக ரன்கள் எடுத்த 3-வது ஜோடி என்ற பெருமையை பெற்றுள்ளது. 1971-ம் ஆண்டு ராய் இல்லிங்வொர்த் - பீட்டர் லெவர் ஜோடி 8-வது விக்கெட்டுக்கு 168 ரன்கள் எடுத்தது. 1936-ம் ஆண்டு வால்டர் ராபின்ஸ் - ஹெட்லி வெரிட்டி 138 ரன்கள் சேர்த்தது. அதன்பின் தற்போது இந்த ஜோடி 108 ரன்கள் சேர்த்துள்ளது.

8-வது மற்றும் 9-வது வீரர் அரைசதம் அடிப்பது இங்கிலாந்து அணியில் இது 2-வது முறையாகும். இதற்கு முன் 1936-ல் வால்டர் ராபின்ஸ் 76 ரன்னும், 9-வது நபராக களம் இறங்கிய ஹெட்லி வெரிட்டி 66 ரன்னும் எடுத்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.

அறிமுக போட்டியில் 8-வது வீரராக களம் இறங்கி அதிக ரன்கள் குவித்தவர் என்ற பெருமையை லியாம் டவ்சன் (66 அவுட் இல்லை) பெற்றுள்ளார். இதற்கு முன் 1979-ம் ஆண்டு டேவிட் பேர்ஸ்டோவ் 59 ரன்கள் எடுத்ததே அதிகபட்ச ரன்னாக இருந்தது.

இந்தியாவிற்கு எதிராக அறிமுகமாகி 8-வது இடத்தில் களம் இறங்கி அதிக ரன்கள் குவித்த ஐந்தாவது வீரர் டவ்சன் ஆவார். நியூசிலாந்து அணியின் நீசம் 2013-14-ல் 137 ரன்கள் (அவுட் இல்லை) எடுத்தது அதிகபட்ச ஸ்கோராகும்.

http://www.maalaimalar.com/News/Sports/2016/12/17204753/1056751/Adil-Rashid-Liam-Dawson-break-83-year-old-record-at.vpf

  • தொடங்கியவர்

சென்னை ஆடுகளம் பவுலர்களுக்கு ஆதரவாக இல்லை: உமேஷ் யாதவ்

சென்னை சேப்பாக் ஆடுகளம் பந்து வீச்சாளர்களுக்கு ஒத்துழைக்கவில்லை என்று இந்தியாவின் வேகப்பந்து வீச்சாளர் உமேஷ் யாதவ் கூறியுள்ளார்.

 
சென்னை ஆடுகளம் பவுலர்களுக்கு ஆதரவாக இல்லை: உமேஷ் யாதவ்
 
இந்தியா - இங்கிலாந்து அணிகளுக்கு இடையிலான ஐந்தாவது மற்றும் கடைசி டெஸ்ட் கிரிக்கெட் சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் நடைபெற்று வருகிறது. டாஸ் வென்று முதலில் பேட்டிங் செய்த இங்கிலாந்து அணி 477 ரன்கள் குவித்தது.

சென்னை ஆடுகளம் எதிர்பார்த்த அளவிற்கு பந்து வீச்சாளர்களுக்கு ஒத்துழைக்கவில்லை. குறிப்பாக வேகப்பந்து வீச்சுக்கு எடுபடாத நிலையிலும் இந்தியாவின் உமேஷ் யாதவ் மற்றும் இசாந்த் சர்மா ஆகியோர் தலா இரண்டு விக்கெட்டுக்கள் வீழ்த்தினார்கள்.

உமேஷ் யாதவ் ரிவர்ஸ் ஸ்விங் செய்வதில் வல்லவர். ஆனால், பந்து அவருக்க ரிவர்ஸ் ஸ்விங் ஆகவில்லை. இன்றைய 2-வது நாள் ஆட்டத்திற்குப் பின் உமேஷ் யாதவ் சென்னை சேப்பாக் ஆடுகளம் குறித்து கூறுகையில் ‘‘இந்த ஆடுகளத்தில் பந்து வீச மிகக் கடினம்.

ஏனென்றால் பந்து டர்ன் ஆகவே இல்லை. இது கொஞ்சம் மாறுபட்டதாக இருந்தது. இங்கிலாந்து வீரர்கள் விரைவாக ஓடி சில ரன்களை எடுத்தனர். ஆனால், பந்து அதிக அளவில் டர்ன் ஆகவில்லை என்று நான் நினைக்கிறேன். இந்த பிரச்சினையால்தான் எங்களால் விக்கெட்டுக்கள் வீழ்த்த முடியவில்லை. இன்னும் மூன்று நாட்கள் இருக்கிறது. ஆடுகளம் எப்படி செயல்படுகிறது என்று பார்ப்போம்.

மூன்றாவது நாளுக்குப் பின் ஆடுகளம் நன்றாக திரும்பினால் எஞ்சிய நாட்கள் ஆட்டத்தில் சில சுவராஸ்யம் இருக்கலாம்’’ என்றார்.

http://www.maalaimalar.com/News/Sports/2016/12/17211648/1056754/India-vs-England-5th-Test-Umesh-Yadav-says-Chennai.vpf

  • தொடங்கியவர்
England 477
India 174/1 (48.3 ov)
  • தொடங்கியவர்

எகிறிய பவுன்சர்களை சமாளித்து கே.எல்.ராகுல் சதம்! #IndVsEng

ராகுல்

இந்தியா – இங்கிலாந்து அணிகள் மோதும் கடைசி டெஸ்ட் சென்னையில் நடந்து வருகிறது. முதல் இன்னிங்சில் மொயின் அலி 146 ரன்கள் அடித்து உதவ, இங்கிலாந்து 477 ரன்கள் எடுத்தது. இரண்டாவது நாள் முடிவில் இந்தியா முதல் இன்னிங்சில் விக்கெட் இழப்பின்றி 60 ரன்கள் எடுத்திருந்தது. முரளி விஜய் ஃபீல்டிங்கின்போது இஞ்சுரி அடைந்ததால், பார்த்திவ் படேல், ஓபனிங் இறங்கினார்.
பார்த்திவ் படேல் 28, கே.எல்.ராகுல் 30 ரன்களுடன் இன்று, மூன்றாவது நாள் ஆட்டத்தைத் தொடங்கினர். ஞாயிற்றுக்கிழமை, இந்தியா பேட்டிங் என்பதால் காலை 9 மணியில் இருந்தே ரசிகர்கள் சேப்பாக்கம் மைதானத்துக்குப் படையெடுத்தனர். 

முதல் செசனில் விக்கெட்டை இழக்கக் கூடாது என்பதில் தெளிவாக இருந்தனர் இந்திய ஓபனர்கள். அதேநேரத்தில் மோசமான பந்துகளை அடித்து ஆடவும் தவறவில்லை. இதனால், ராகுல், பார்த்திவ் ஜோடி 100 ரன்களைக் குவித்தது. கடந்த ஆண்டு ஷிகர் தவன், முரளி விஜய் ஜோடி வங்கதேசத்துக்கு எதிராக செஞ்சுரி பார்ட்னர்ஷிப் அமைத்தது. அதன்பின் 32 இன்னிங்ஸ் கழித்து, முதல்முறையாக தொடக்க ஜோடி 100 ரன்கள் வரை விக்கெட் இழக்காமல் பார்ட்னர்ஷிப் அமைத்துள்ளனர் என புள்ளி விவரங்களை அடுக்கினர் நெட்டிசன்கள். 

ராகுல் 50 அடிப்பதற்கு முன்னால், ராகுல், ராகுல், ராகுல்… என கத்தினர் ரசிகர்கள். அவர் தேர்ட் மேன் ஏரியாவில் 2 ரன்களை தட்டி அரைசதம் அடித்தார். ராகுல் டிராவிட் இடத்தை நிரப்புவதாக கருதப்படும் கே.எல்.ராகுல் ட்ரைவ், ஃப்ளிக் என எல்லாவிதத்திலும் டிராவிட்டை நகலெடுத்தார். மொயின் அலி பந்தில் ஸ்வீப் மூலம் பவுண்டரி, ரிவர்ஸ்வீப் பவுண்டரி, ஜேக் பால் அசுர வேகத்தில் வீசிய பந்தில் ட்ரைவ், அவுட் சைட் தி ஆஃப் ஸ்டம்ப் பந்துகளை தொடாமல் விடுவது என வெரைட்டி காட்டினார். 

மறுமுனையில் பார்த்திவ் படேல் ஃபைன் லெக்கில் சிங்கிள் தட்டி விட்டு அரைசதம் கடந்தார். எகிறும் பெளன்சர்களை அநாயசமாக சமாளித்து ஆடிய பார்த்திவ் படேல், மொயின் அலி பந்தில் இறங்கி வந்து பவுண்டரி அடித்தார். அடுத்த பந்தில் அதேபோல மீண்டும் மிட் விக்கெட் திசையில் தூாக்கி அடிக்க முயன்றார். ஆனால், லெக் ஸ்டம்புக்கு வீசப்பட்ட அந்த பந்து லேசாக டர்ன் ஆனதால், எட்ஜ் ஆகி கவர் ஏரியாவில் இருந்த, ஜோஸ் பட்லர் கையில் சிக்கியது. 112 பந்துகளை சந்தித்த பார்த்திவ், 71 ரன் எடுத்து பெவிலியன் திரும்பினார். முதல் விக்கெட்டுக்கு பார்த்திவ், ராகுல் ஜோடி 152 ரன்கள் சேர்த்தது. 

ராகுல் உடன் ஜோடி சேர்ந்த புஜாரா, ரஷித் பந்தில் மிட் விக்கெட் திசையில் இரண்டு பவுண்டரிகளை விரட்டினார். மதிய உணவு இடைவேளையின்போது இந்தியாவின் ஸ்கோர் 173/1. கே.எல்.ராகுல் 89. புஜாரா 11 ரன்களுடன் களத்தில் இருந்தனர்.  
இரண்டாவது செசனின் இரண்டாவது ஓவரிலேயே இங்கிலாந்துக்கு பலன் கிடைத்தது. பென் ஸ்டோக்ஸ் வீசிய பந்தில் ஸ்லிப்பில் இருந்த அலெஸ்டர் குக்கிடம் கேட்ச் கொடுத்து புஜாரா (19 ரன்கள்) வெளியேறினார். இதற்கு இங்கிலாந்து ரசிர்கள் உற்சாகம் அடைந்தனர் எனில், இந்திய ரசிர்களும் ஆர்ப்பரித்தனர். காரணம் இந்திய கேப்டன் விராட் கோஹ்லி பெவிலியனில் இருந்து துள்ளிக் குதித்து காற்றில் பேட்டை வீசியபடியே உள்ளே நுழைந்தார்.

ராகுல் 90 ரன்களைக் கடந்த பின் ஒவ்வொரு ஷாட்டையும் பார்த்துப் பார்த்து ஆடினார். டவ்சன் பந்தில் ரிவர்ஸ் ஸ்வீப் மூலம் 2 ரன், மிட் விக்கெட்டில் பளிச்சென இரண்டு ரன்கள் என, 98 ரன்களை நெருங்கினார். மீண்டும் ரிவர்ஸ் ஸ்வீப் ஷாட்டுக்கு முயன்றார். நல்லவேளையாக கண்டம் தப்பினார். அடுத்த ஓவரில் ராகுல் சதம் அடித்தார். 171 பந்துகளில் 8 பவுண்டரி, 2 சிக்ஸர்களுடன் இந்த சதத்ததை எட்டினார் ராகுல். இது சர்வதேச அரங்கில் அவர் அடிக்கும் நான்காவது சதம்.

http://www.vikatan.com/news/sports/75274-kl-rahul-hits-his-fourth-century.art

  • தொடங்கியவர்

ஒரு ரன்னில் இரட்டை சதத்தை மிஸ் செய்த ராகுல்! #MatchReport

 

ராகுல்

இந்தியா – இங்கிலாந்து அணிகள் மோதும் சென்னை டெஸ்ட் போட்டியின் மூன்றாவது நாள் அப்டேட்.

*முதல் இன்னிங்சில் இங்கிலாந்து 477 ரன்களில் ஆல் அவுட்டானது. இரண்டாவது நாள் முடிவில் இந்தியா விக்கெட் இழப்பின்றி 60 ரன்கள் எடுத்திருந்தது. பார்த்திவ் படேல், கே.எல்.ராகுல் ஜோடி இன்று ஆட்டத்தைத் தொடங்கியது.

* ஞாயிற்றுக்கிழமை என்பதால், இந்தியாவின் பேட்டிங்கைப் பார்க்க 15 ஆயிரத்துக்கும் மேற்பட்ட ரசிகர்கள் சேப்பாக்கம் மைதானத்துக்கு வந்திருந்தனர்.

*முதல் செசனில் பார்த்திவ், ராகுல் இருவரும் விக்கெட் விழாமல் தடுத்து, அரைசதம் கடந்தனர். முதல் விக்கெட்டுக்கு 152 ரன்கள் எடுத்திருந்தபோது பார்த்திவ் படேல் (71 ரன்கள்) ஆட்டமிழந்தார். மிட் விக்கெட் திசையில் தூக்கி அடிக்க முயன்றபோது, எட்ஜ் ஆனதால் எக்ஸ்ட்ரா கவர் திசையில் இருந்த ஜோஸ் பட்லரிடம் கேட்ச் கொடுத்து, வெளியேறினார்.

*இரண்டாவது செசன் தொடங்கிய சில நிமிடத்திலேயே புஜாரா (19 ரன்கள்) பென் ஸ்டோக்ஸ் பந்தில் ஸ்லிப்பில் இருந்த அலெஸ்டர் குக்கிடம் கேட்ச் கொடுத்தார்.

*புஜாரா அவுட்டானதும் ரசிகர்களின் ஆர்ப்பரிப்பை ஏற்றபடியே களம்புகுந்தார் விராட் கோஹ்லி. ஆனால், ரசிகர்களின் எதிர்பார்ப்புக்கு ஏற்ற ஆட்டத்தை அவர் வெளிப்படுத்தவில்லை.

* கோஹ்லி களமிறங்கிய அடுத்த சில நிமிடங்களில் கே.எல்.ராகுல் சதம் அடித்தார். இது அவரது நான்காவது சதம். ராகுல் சதத்துக்கான ரன்னை ஓடி முடிப்பதற்குள், கோஹ்லி தானே சதம் அடித்தது போல கொண்டாடினார். உடனே, ‛இதுதான் தலைவனுக்கு அழகு’ என வர்ணனையாளர்கள் கோஹ்லி புகழ் பாடினர். இப்படித்தான் சிட்னியில் ராகுல் தன் முதல் டெஸ்ட் சதம் அடித்தபோது, விராட் கோஹ்லி அவரைக் கொண்டாடினார்.

*இருவருக்கும் இடையிலான புரிதல் களத்தில் நன்றாகவே வெளிப்பட்டது. தேர்ட்மேன் திசையில் தட்டி விட்டு, இரண்டு ரன்கள் ஓடும்போது, இருவரும் பிட் வீன் தி விக்கெட்டில் அனலாக பறந்தனர். இது தோனி – ரெய்னா ரன் எடுக்க ஓடுவதை நினைவுபுடுத்தியது.

* ஆடுகளத்தின் சூழலைப் புரிந்துகொள்ளும் விதமாக, ஆரம்பத்தில் படு நிதானமாக இருந்தார் கோஹ்லி. அதனால் டவ்சன் மெய்டன் வீசினார்.

* கோஹ்லி சந்தித்த முதல் பந்தே பெளன்சர். இதை சற்றும் எதிர்பாராத கோஹ்லி, நேக்காக பந்தை தொடாமல் விட்டார். பென் ஸ்டோக்ஸ் முடிந்தவரை கோஹ்லிக்கு பெளன்சர்களாக வீசி மிரட்டினார்.

* சதம் அடிப்பார் என எதிர்பார்க்கப்பட்ட விராட் கோஹ்லி 19 ரன்கள் எடுத்திருந்தபோது, ஸ்டூவர்ட் பிராட் பந்தில் எக்ஸ்ட்ரா கவர் திசையில் இருந்த ஜென்னிங்ஸிடம் கேட்ச் கொடுத்து  பெவிலியன் திரும்பினார்.

*விராட் கோஹ்லி விக்கெட்டை எடுக்க பக்காவாக பிளான் செய்திருந்தது இங்கிலாந்து. பந்தை முழுக்க, முழுக்க அவுட் சைட் தி ஆஃப் ஸ்டம்பில் வீசச் சொல்லி, அதற்கேற்ப ஃபீல்டிங் செட் செய்திருந்தார் இங்கிலாந்து கேப்டன் அலெஸ்டர் குக். கோஹ்லியும் தனக்கே உரிய பாணியில் ட்ரைவ் ஆடிக் கொண்டே இருந்தார். அப்படி ஒரு ட்ரைவ் ஆடும்போது, கடைசியாக சிக்கிக் கொண்டார்.  

1bfe02c17de34c2a8817e6f428d9d171_17041.j

* மற்ற இன்னிங்ஸ்கள் போல் அல்லாது, ஆரம்பத்தில் இருந்தே கோஹ்லி ரன் குவிக்க ஆர்வமாக இருந்ததை கவனித்து, இங்கிலாந்து வீரர்கள் அதற்கேற்ப வியூகம் வகுத்து, அதில் வெற்றியும் பெற்றனர். முதல்முறையாக இந்த தொடரில் கோஹ்லி 40 ரன்களுக்குள் ஆட்டமிழந்துள்ளார். ஐந்தாவது டெஸ்டில்தான் கோஹ்லியன் பலவீனத்தைப் புரிந்து காய் நகர்த்தியுள்ளார் குக்.

*இரண்டாவது செசனில் ரன் குவிப்பும் மந்தமாக இருந்தது. புஜாரா, விராட் கோஹ்லி என இரு முக்கியமான விக்கெட்டுகளும் விழுந்தன. இரண்டாவது செசன் முடிவில் இந்தியாவின் ஸ்கோர் 256/3 ராகுல் 133, கருண் நாயர் 19 ரன்களுடன் இருந்தனர்.

*கடைசி செசனில், ராகுல் அடித்த பந்தை பிடித்த பெளலர் ஜோ ரூட், விக்கெட் கீப்பருக்கு த்ரோ செய்தார். நல்லவேளையாக ராகுல் குனிந்ததால், பந்து அவர் மீது படவில்லை. கடுப்பான ராகுல், ஜோ ரூட்டை கண்டித்தார்.

* தொடர்ந்து நிதானமாக ஆடிய ராகுல் 150 ரன்களைக் கடந்தார். மறுமுனையில் கருண் நாயரும் நேர்த்தியாக ஆட, நான்காவது விக்கெட்டுக்கு இந்த ஜோடி 100 ரன்களுக்கு மேல் பார்ட்னர்ஷிப் அமைத்தது.

*கடைசி ஒரு மணி நேரத்தில் விக்கெட் எடுக்க வேண்டும் என ஃபீல்டர்களை உள் வட்டத்தில் நிறுத்தி, வேகப்பந்துவீச்சாளர்களிடம் பந்தைக் கொடுத்தார் அலெஸ்டர் குக். ஆனால், ராகுல், கருண் நாயர் இருவரும் விக்கெட்டை விடக் கூடாது என்பதில் உறுதியாக இருந்தனர்.

* பிட்ச் ஸ்பின்னுக்கு ஒத்துழைக்கும் என்றுதான் எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், மூன்றாவது நாள் ஆட்டம் முடியும் வரை பந்து டர்ன் ஆகவே இல்லை. மாறாக, பெளன்சர்கள் எகிறியது.

* கோஹ்லி ஆட்டமிழந்த பின் ராகுலுடன் ஒத்துழைத்து ஆடிய கருண் நாயர் 98 பந்தில் 50 ரன்கள் அடித்தார். இது டெஸ்ட் அரங்கில் அவரது முதல் அரைசததம். ராகுல், கருண் நாயர் ஜோடி நான்காவது விக்கெட்டுக்கு 150 ரன்கள் சேர்த்தது.

*மொயின் அலி பந்தில் இறங்கி வந்து சிக்ஸர் அடித்து 193 ரன்கள் வந்தார் கே.எல்.ராகுல். இந்த ஸ்கோரை எட்டியபோது, இங்கிலாந்துக்கு எதிராக அதிக ரன் அடித்த முதல் இந்திய தொடக்க வீரர் என்ற பெயரைப் பெற்றார். இதற்கு முன் 1964ல் சென்னையில் நடந்த டெஸ்டில் புதி குந்தரன் 192 ரன்கள் எடுத்ததே, இங்கிலாந்துக்கு எதிரான இந்திய ஓபனிங் பேட்ஸ்மேனின் அதிகபட்சமாக இருந்தது.

* ரஷித் பந்தில் ஸ்வீப் மூலம் ஒரு பவுண்டரி அடிக்க, ராகுல் 199 ரன்களை எட்டினார். விராட் கோஹ்லியில் இருந்து மைதானத்தில் இருந்த  அனைத்து ரசிகர்களும், ராகுலின் இரட்டை சதத்தைக் கொண்டாட எழுந்து நின்றனர். ஆனால், அவர் அஜாக்கிரதையாக ஆடிய அந்த ஷாட், கவரில் இருந்த ஜோஸ் பட்லரின் கைகளில் சிக்கியது. ராகுல் இரட்டை சதம் மிஸ். என்ன நடந்தது என்பதை அவரால் நம்பவே முடியவில்லை. அவர் மட்டுமல்ல ஒட்டுமொத்த ரசிகர்களும் அதே நிலைதான். மைதாானத்தில் ஒரு நிசப்தம். அப்படியே பேட்டை கீழே போட்டு தலையில் கை வைத்து கீழே அமர்ந்தார் ராகுல். இருந்தாலும், இவ்வளவு நேரம் நங்கூரம் போட்டதற்காக, அவர் பெவிலியின் திரும்பும்போது எழுந்து நின்று கைதட்டி அங்கீகரித்தனர் ரசிகர்கள்.

* மூன்றாம் நாள் ஆட்ட நேர முடிவில் இந்தியாவின் ஸ்கோர் 391/4 கருண் நாயர் 71, முரளி விஜய் 17 ரன்களுடன் களத்தில் உள்ளனர். இந்தியா முதல் இன்னிங்சில் 86 ரன்கள் பின்தங்கியுள்ளது.  

http://www.vikatan.com/news/sports/75296-rahul-missed-double-ton-in-one-run-matchreport.art

  • தொடங்கியவர்

சென்னை டெஸ்ட்: இந்தியா பதிலடி; 3-வது நாள் ஆட்ட முடிவில் 391/4

 

சென்னையில் நடைபெற்று வரும் ஐந்தாவது டெஸ்டின் 3-வது நாள் ஆட்ட முடிவில் இந்தியா 4 விக்கெட் இழப்பிற்கு 391 ரன்கள் குவித்துள்ளது.

 
சென்னை டெஸ்ட்: இந்தியா பதிலடி; 3-வது நாள் ஆட்ட முடிவில் 391/4
 
இந்தியா - இங்கிலாந்து அணிகளுக்கு இடையிலான ஐந்தாவது மற்றும் கடைசி டெஸ்ட் கிரிக்கெட் போட்டி சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் நடைபெற்று வருகிறது.

டாஸ் வென்ற இங்கிலாந்து அணி பேட்டிங் தேர்வு செய்தது. அந்த அணி முதல் இன்னிங்சில் 477 ரன்கள் குவித்தது. மொயீன் அலி அதிகபட்சமாக 146 ரன்கள் சேர்த்தார். இந்திய அணி சார்பில் ஜடேஜா அதிகபட்சமாக 3 விக்கெட்டுக்கள் வீழ்த்தினார்.

பின்னர் இந்தியா முதல் இன்னிங்சை தொடங்கியது. நேற்றைய 2-வது நாள் ஆட்ட முடிவில் இந்தியா விக்கெட் இழப்பின்றி 60 ரன்கள் எடுத்திருந்தது. லோகேஷ் ராகுல் 30 ரன்னுடனும், பார்தீவ் பட்டேல் 28 ரன்னுடனும் களத்தில் இருந்தனர்.

இன்று 3-வது நாள் ஆட்டம் தொடங்கியது. இருவரும் தொடர்ந்து சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தினார்கள். லோகேஷ் ராகுல் 96 பந்துகளை சந்தித்த நிலையில் அரைசதம் அடித்தார். இந்தியா 29.1 ஓவரில் 100 ரன்னைத் தொட்டது.

மறுமுனையில் விளையாடிய பார்தீவ் பட்டேல் 84 பந்துகளை சந்தித்து அரைசதம் அடித்தார். 41.3 ஓவரில் இந்தியா 150 ரன்னைத் தொட்டது. மதிய உணவு இடைவேளைக்கு சற்று முன் இந்தியா 152 ரன்கள் எடுத்திருக்கும் இந்த ஜோடி பிரிந்தது. பார்தீவ் பட்டேல் 71 ரன்கள் எடுத்த நிலையில் மொயீன் அலி பந்தில் ஆட்டம் இழந்தார். அடுத்து லோகேஷ் ராகுல் உடன் புஜாரா ஜோடி சேர்ந்தார்.

3-வது நாள் மதிய உணவு இடைவேளையின் இந்தியா 1 விக்கெட் இழப்பிற்கு 173 ரன்கள் சேர்த்திருந்தது. உணவு இடைவேளை முடிந்து ஆட்டம் தொடங்கியதும் புஜாரா 16 ரன்கள் எடுத்த நிலையில் ஆட்டம் இழந்தார். அடுத்து விராட் கோலி களம் இறங்கினார்.

லோகேஷ் ராகுல் 171 பந்தில் தனது 4-வது சதத்தை பதிவு செய்தார். இந்திய மண்ணில் இது அவரது முதல் சதமாகும். மறுமுனையில் நின்ற விராட் கோலி 15 ரன்கள் எடுத்த நிலையில் பிராட் பந்தில் பெவிலியன் திரும்பினார்.

2981EBD0-1EC3-48E1-8DC6-1EB28C946BF4_L_s

அப்போது இந்தியா 3 விக்கெட் இழப்பிற்கு 211 ரன்கள் எடுத்திருந்தது. 4-வது விக்கெட்டுக்கு லோகேஷ் ராகுல் உடன் கருண் நாயர் ஜோடி சேர்ந்தார். இந்த ஜோடி ஆட்டத்தை இந்தியாவிற்கு சாதகமாக அழைத்துச் சென்றது. 150 ரன்களை கடந்த லோகேஷ் ராகுல் இரட்டை சதம் அடிப்பார் என்று எதிர்பார்க்கையில் 199 ரன்கள் எடுத்த நிலையில் துரதிருஷ்டவசமாக அவுட்டாகி இரட்டை சதத்தை தவறவிட்டார். ஆனால், கருண் நாயர் சிறப்பாக விளையாடி அரைசதத்தை கடந்தார். இந்த ஜோடி 4-வது விக்கெட்டுக்கு 161 ரன்கள் குவித்தது.

D7C0675A-4D96-455D-96FC-2327246E0548_L_s

5-வது விக்கெட்டுக்கு கருண் நாயர் உடன் முரளி விஜய் ஜோடி சேர்ந்தார். இந்த ஜோடி 3-வது நாள் ஆட்டம் முடியும் வரை மேலும் விக்கெட் இழக்காமல் பார்த்துக் கொண்டது. இதனால் இந்தியா 3-வது நாள் ஆட்ட முடிவில் 4 விக்கெட் இழப்பிற்கு 391 ரன்கள் எடுத்துள்ளது. கருண் நாயர் 71 ரன்னுடனும், முரளி விஜய் 17 ரன்னுடனும் களத்தில் உள்ளனர்.

தற்போது வரை இந்தியா 86 ரன்கள் பின்தங்கிய நிலையில் உள்ளது. நாளைய ஆட்டத்தின் மதிய உணவு இடைவேளை வரை இந்தியா பேட்டிங் செய்தாலே இந்த 86 ரன்களை எட்ட வாய்ப்புள்ளது. அதன்பிறகு சுமார் 100 ரன்கள் முன்னிலை பெற்றால் போட்டி பரபரப்பாகி விடும்.

http://www.maalaimalar.com/News/Sports/2016/12/18174001/1056855/Chennai-Test-india-391-for-4-stumps-Day-3.vpf

  • தொடங்கியவர்

199-ல் கொடுமையான ஷாட் மூலம் அவுட்டானேன்: லோகேஷ் ராகுல் கூறுகிறார்

சென்னை டெஸ்டில் 199-ல் அவுட்டாகி இரட்டை சதத்தை தவறவிட்ட லோகேஷ் ராகுல், தான் அடித்த ஷாட் மிகவும் கொடுமையானது என்று கூறியுள்ளார்.

 
199-ல் கொடுமையான ஷாட் மூலம் அவுட்டானேன்: லோகேஷ் ராகுல் கூறுகிறார்
 
இந்தியா - இங்கிலாந்து அணிகளுக்கு இடையிலான ஐந்தாவது மற்றும் கடைசி டெஸ்ட் கிரிக்கெட் போட்டி சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் நடைபெற்று வருகிறது.

3-வது நாள் ஆட்ட முடிவில் இந்தியா 4 விக்கெட் இழப்பிற்கு 391 ரன்கள் சேர்த்துள்ளது. நேற்றைய ஆட்ட நேர முடிவில் 60 ரன்கள் எடுத்திருந்தது. இன்று 331 ரன்கள் குவித்துள்ளது. இந்திய அணியின் ரன்குவிப்புக்கு தொடக்க வீரர் லோகேஷ் ராகுல் முக்கிய காரணமாக இருந்தார். அவர் 311 பந்தில் 16 பவுண்டரி, 3 சிக்சர்களுடன் 199 ரன்கள் குவித்து ஒரு ரன்னில் இரட்டை சதத்தை தவறவிட்டார்.

இரட்டை சதத்தை தவற விட்டது குறித்து லோகேஷ் ராகுல் கூறுகையில் ‘‘நான் கடந்த இரண்டு மாதங்களாக ஏராளமான போட்டிகளில் விளையாடவில்லை. அப்படி இருக்கும்போது சிறந்த ஆட்டத்தை வெளிப்படுத்துவது மிகக்கடினம். மும்பை வான்கடே போட்டியில் நிண்ட நேரம் செலவழித்தது சிறந்ததாக இருந்தது.

நான் சென்னை வரும்போது அடுகளம் மிகவும் சிறந்ததாக இருந்தது. அதை நான் வீணடிக்க விரும்பவில்லை. நியூசிலாந்து தொடரை முழுவதுமாக நான் இழக்க நேரிட்டது. நான் நல்ல பார்மில் இருப்பதாக நினைத்தேன். வீட்டிற்குச் சென்று என்னுடைய உடற்தகுதிக்காக கடின பயிற்சி எடுத்தேன். ஒரு ரஞ்சி போட்டியில் விளையாடினேன். அது எனக்கு ஏறுமுகமாக அமைந்தது.

மும்பை ஆடுகளம் நன்றாக இருந்த நிலையில், ரன் குவிக்காமல் என்னையே நான் கொன்றுவிட்டேன். தற்போது சென்னையில் இன்று அடித்த சதம் சிறந்த சதத்தில் ஒன்றாக இருக்கப்போகிறது.

பயிற்சியாளர் ஒவ்வொரு ரன்களும் முக்கியமானது என்று கூறுவதை தற்போது உணர்ந்து கொள்ள முடிகிறது. நான் இந்த எண்ணத்தோடு இனி விளையாடுவேன். மிகவும் கொடுமையான ஷாட் அடித்து 199-ல் அவுட்டாகிவிட்டேன்.

வீடியோவில் இன்னும் அந்த ஷாட்டை நான் பார்க்கவில்லை. நான் மழை தூரலுக்குக்கு கீழ் நின்று கொண்டிருக்கிறேன். முழுவதுமாக மூழ்க கொஞ்சம் நேரம் எடுக்கும். எளிதாக இரட்டை சதம் அடிப்பேன் என்று நினைத்தேன். அடுத்த போட்டிகளில் வலுவான நிலையுடன் திரும்பி வருவேன்’’ என்றார்.

http://www.maalaimalar.com/News/Sports/2016/12/18191702/1056865/I-played-a-horrible-shot-and-got-out-on-199.vpf

  • தொடங்கியவர்

சென்னை டெஸ்ட்: கருண் நாயர் சதம்!

 

 
karun_nair11

 

இங்கிலாந்துக்கு எதிரான 5-வது மற்றும் கடைசி டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் இந்திய வீரர் கருண் நாயர் சதம் எடுத்து அசத்தியுள்ளார்.

சென்னையில் நடைபெற்று வரும் இந்தப் போட்டியில் முதலில் பேட் செய்த இங்கிலாந்து அணி தனது முதல் இன்னிங்ஸில் 157.2 ஓவர்களில் 477 ரன்கள் குவித்து ஆட்டமிழந்தது. அந்த அணியில் அதிகபட்சமாக மொயீன் அலி 146, ஜோ ரூட் 88, லியாம் டாசன் ஆட்டமிழக்காமல் 66, ஆதில் ரஷித் 60 ரன்கள் எடுத்தனர். இந்தியத் தரப்பில் ஜடேஜா 3 விக்கெட்டுகளையும், உமேஷ் யாதவ், இஷாந்த் சர்மா ஆகியோர் தலா 2 விக்கெட்டுகளையும் சாய்த்தனர்.

பின்னர் முதல் இன்னிங்ஸை ஆடிய இந்திய அணி 3-வது நாள் ஆட்டநேர முடிவில் 108 ஓவர்களில் 4 விக்கெட் இழப்புக்கு 391 ரன்கள் குவித்தது. கருண் நாயர் 71, முரளி விஜய் 17 ரன்கள் எடுத்து களத்தில் இருந்தார்கள்.

இன்றும் முதல் ஒரு மணி நேரம் இருவரும் கவனமாக ஆடி இந்திய அணியின் ஸ்கோர் 400 தாண்ட உதவினார்கள். மூன்றாவது டெஸ்ட் போட்டியில் விளையாடும் கருண் நாயர் இன்று தனது முதல் சதத்தை 185 பந்துகளில் பூர்த்தி செய்தார். இவர் சதம் எடுத்தபிறகு, அடுத்த ஓவரில் 29 ரன்களில் ஆட்டமிழந்தார் முரளி விஜய். இந்திய அணி 126 ஓவர்களில் 5 விக்கெட் இழப்புக்கு 437 ரன்கள் எடுத்து விளையாடிவருகிறது.

http://www.dinamani.com/sports/sports-news/2016/dec/19/சென்னை-டெஸ்ட்-கருண்-நாயர்-சதம்-2618054.html

  • தொடங்கியவர்

சேப்பாக்கம் டெஸ்டில் கருண் நாயர் அதிரடி சதம்: உணவு இடைவேளை வரை 463/5

இங்கிலாந்துக்கு எதிரான 5-வது டெஸ்ட் போட்டியில் இந்திய அணி உணவு இடைவேளை வரை 5 விக்கெட் இழப்பிற்கு 463 ரன்கள் எடுத்துள்ளது. கருண் நாயர் 122 ரன்களுடனும், அஷ்வின் 9 ரன்களுடனும் களத்தில் உள்ளனர்.

 
சேப்பாக்கம் டெஸ்டில் கருண் நாயர் அதிரடி சதம்: உணவு இடைவேளை வரை 463/5
 
சென்னை:

இந்தியா - இங்கிலாந்து அணிகள் மோதும் 5-வது மற்றும் கடைசி டெஸ்ட் கிரிக்கெட் போட்டி சென்னை சேப்பாக்கம் எம்.ஏ.சிதம்பரம் மைதானத்தில் நடைபெற்று வருகிறது.

இங்கிலாந்து அணி முதல் இன்னிங்சில் 477 ரன் குவித்தது. மொயின் அலி 146 ரன் எடுத்தார். ரவிந்திர ஜடேஜா 3 விக்கெட் வீழ்த்தினார்.

பின்னர் முதல் இன்னிங்சை விளையாடிய இந்தியா நேற்றைய 3-வது நாள் ஆட்டத்தின் முடிவில் 4 விக்கெட் இழப்புக்கு 391 ரன் எடுத்து இருந்தது. தொடக்க வீரர் லோகேஷ் ராகுல் ஒரு ரன்னில் இரட்டை சதத்தை தவறவிட்டார். அவர் 199 ரன் குவித்தார். கருண் நாயர் 71 ரன்னிலும், முரளி விஜய் 17 ரன்னிலும், ஆட்டம் இழக்காமல் இருந்தனர்.

இன்று 4-வது நாள் ஆட்டம் நடந்தது. 86 ரன்கள் பின்தங்கிய நிலை, கைவசம் 6 விக்கெட் என்ற நிலையில் இந்திய அணி தொடர்ந்து விளையாடியது.

ஆட்டம் தொடங்கிய 3-வது ஓவரில் பிராட் பந்தில் கருண் நாயர் பவுண்டரி அடித்தார். அதற்கு அடுத்த ஓவரில் இந்தியா 400-வது ரன்னை குவித்தது. 111.2-வது ஓவரில் இந்த ரன்னை தொட்டது. கருண் நாயரும், முரளி விஜய்யும் தொடர்ந்து நேர்த்தியான ஆட்டத்தை வெளிப்படுத்தி ரன்களை சேர்த்தனர்.

கருண் நாயர் மிகவும் சிறப்பாக விளையாடி சதம் அடித்தார். 99 ரன்னில் இருந்து பவுண்டரி மூலம் அவர் 100 ரன்னை தொட்டார். 185 பந்துகளை சந்தித்து 8 பவுண்டரி, 1 சிக்சருடன் அவர் சதத்தை பதிவு செய்தார்.

3-வது டெஸ்டில் விளையாடும் கருண் நாயர் தனது முதல் சதத்தை எடுத்தார். சேப்பாக்கம் மைதானம் அவருக்கு முதல் செஞ்சூரி எடுக்க உதவியாக அமைந்தது. இங்கிலாந்து தொடரில் அறிமுகமான அவர் மொகாலி டெஸ்டில் 4 ரன்னிலும், மும்பை டெஸ்டில் 13 ரன்னிலும் வெளியேறினார்.

உணவு இடைவேளையின்போது இந்திய அணி 5 விக்கெட் இழப்பிற்கு 463 ரன்கள் எடுத்துள்ளது. கருண் நாயர் 122 ரன்களுடனும், அஷ்வின் 9 ரன்களுடனும் களத்தில் உள்ளனர்.

http://www.maalaimalar.com/News/Sports/2016/12/19122612/1056960/India-463-runs-5-wickets-of-lunchtime-against-england.vpf

England 477
India 573/5 (161.4 ov)
India lead by 96 runs with 5 wickets remaining in the 1st innings
  • தொடங்கியவர்

இந்தியாவின் பேட்டிங் கோலியை மட்டும் நம்பி இருக்கவில்லை: பென் ஸ்டோக்ஸ்

இந்தியாவின் பேட்டிங் விராட் கோலியை மட்டுமே நம்பி இருக்கவில்லை என்று இங்கிலாந்து வீர்ர் பென் ஸ்டோக்ஸ் கூறியுள்ளார்.

இந்தியாவின் பேட்டிங் கோலியை மட்டும் நம்பி இருக்கவில்லை: பென் ஸ்டோக்ஸ்
 
இங்கிலாந்து அணியின் ஆல்-ரவுண்டர் பென் ஸ்டோக்ஸ் நிருபர்களுக்கு அளித்த பேட்டியில் கூறியதாவது:-

ஒவ்வொரு போட்டியிலும் இந்திய அணி மிகப்பெரிய ரன்களை குவித்துவிடுகிறது. விராட் கோலி 15 ரன்னில் துரதிருஷ்டவசமாக ஆட்டம் இழந்த போதிலும் இந்தியா ரன்களை குவித்துவிட்டது.

விராட் கோலியை மட்டுமே நம்பி இந்தியாவின் பேட்டிங் இல்லை என்பது புரிந்துவிட்டது. லோகேஷ் ராகுலின் ஆட்டம் மிகவும் அபாரமாக இருந்தது. அவர் 199 ரன்னில் ஆட்டம் இழப்பார் என்று நினைக்கவில்லை.

இவ்வாறு அவர் கூறியுள்ளார்.
 
  • தொடங்கியவர்

முதல் சதமே இரட்டை சதம்- அசத்திய 3வது இந்திய வீரர்

 

karun_nayar_indian_playar_15599.jpg

இங்கிலாந்து அணிக்கு எதிரான 5வது டெஸ்ட் போட்டியில் இந்திய வீரர் கருண் நாயர் இரட்டை சதம் விளாசியுள்ளார். முதல் சதமே இரட்டை சதம் அடித்தவர்கள் பட்டியலில் 3வது இந்திய வீரர் இவர் ஆவார்.

சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் நடந்து வரும் 5வது டெஸ்ட் போட்டியில் இங்கிலாந்து அணி முதல் இன்னிங்சில் 477 ரன்கள் குவித்தது. அந்த அணியில் அலி 146 ரன்னும், ரூட் 88 ரன்னும், எடுத்தனர். இந்தியா தரப்பில் ஜடேஜா 3 விக்கெட்டும், உமேஷ், இஷாந்த் சர்மா தலா 2 விக்கெட்டுகளை வீழ்த்தினர்.

பின்னர் இந்திய அணி தனது முதல் இன்னிஸ்சை தொடர்ந்தது. தொடக்க வீரராக ராகுலும், பாட்டீலும் களம் இறங்கினர். இந்த ஜோடி முதல் விக்கெட்டுக்கு 152 ரன்கள் குவித்தது. அரை சதம் அடித்த பாட்டீல் 71 ரன்னில் ஆட்டம் இழந்தார். பின்னர் வந்த புராஜா 16 ரன்னிலும், கோலி 15 ரன்னிலும் வெளியேறினர். இதைத் தொடர்ந்து களம் இறங்கிய கருண் நாயர்- ராகுலுடன் ஜோடி சேர்ந்தார். இந்த ஜோடி அபாரமாக விளையாடி ரன்களை குவித்தது. 4வது விக்கெட்டுக்கு இந்த ஜோடி 162 ரன்கள் எடுத்தது.

இரட்டை சதம் அடிப்பார் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில் 199 ரன்னில் ராகுல் ஆட்டம் இழந்தார். மறுமுனையில் அசத்தி வந்த கருண் நாயர் இரட்டை சதம் விளாசினார். தனது முதல் சதமே இரட்டை சதமாக விளாசிய இந்திய வீரர்களில் 3வது நபர் பட்டியலில் இடம் பிடித்துள்ளார். 2 டெஸ்ட் போட்டியில் விளையாடியுள்ள கருண் நாயர் அதிகபட்சமாக 13 ரன்கள் மட்டுமே அடித்துள்ளார். தற்போது, இரட்டை சதம் அடித்து விளாசியுள்ளார்.

முரளி விஜய் 29 ரன்னிலும், அஸ்வின் 67 ரன்னிலும் ஆட்டம் இழந்தனர். தற்போது இந்திய அணி 6 விக்கெட்டுகளை இழந்து 620 ரன்கள் எடுத்துள்ளது. கருண் நாயர் 218 ரன்னிலும், ஜடேஜா 1 ரன்னிலும் களத்தில் உள்ளனர்.

http://www.vikatan.com/news/sports/75357-karun-nair-reaches-double-ton-in-style.art

  • கருத்துக்கள உறவுகள்

கருன்நாயர் ருத்திர தான்டவம்:)

  • தொடங்கியவர்

சென்னை டெஸ்ட்: இந்தியா 7 விக்கெட் இழப்பிற்கு 759 ரன்கள் குவித்து டிக்ளேர்

 

சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் நடைபெற்று வரும் டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் இந்தியா முதல் இன்னிங்சில் 7 விக்கெட் இழப்பிற்கு 759 ரன்கள் குவித்து டிக்ளேர் செய்துள்ளது.

 
 
சென்னை டெஸ்ட்: இந்தியா 7 விக்கெட் இழப்பிற்கு 759 ரன்கள் குவித்து டிக்ளேர்
 
இந்தியா - இங்கிலாந்து அணிகளுக்கு இடையிலான ஐந்தாவது மற்றும் கடைசி டெஸ்ட் கிரிக்கெட் போட்டி சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் நடைபெற்று வருகிறது.

டாஸ் வென்ற இங்கிலாந்து அணி முதலில் பேட்டிங் தேர்வு செய்தது. அந்த அணியின் மொயீன் அலி 146 ரன்கள் குவிக்க இங்கிலாந்து முதல் இன்னிங்சில் 477 ரன்கள் சேர்த்து ஆல்அவுட் ஆனது.

பின்னர் இந்தியா முதல் இன்னிங்சை தொடங்கியது. லோகேஷ் ராகுலின் (199) அபார ஆட்டத்தால் இந்தியா 3-வது நாள் ஆட்ட முடிவில் 4 விக்கெட் இழப்பிற்கு 391 ரன்கள் குவித்திருந்தது. கருண் நாயர் 71 ரன்னுடனும், முரளி விஜய் 17 ரன்னுடனும் களத்தில் இருந்தனர்.

இன்று 4-வது நாள் ஆட்டம் தொடங்கியது. இருவரும் ஆட்டத்தை தொடர்ந்தனர். முரளி விஜய் 29 ரன்கள் எடுத்த நிலையில் டவ்சன் பந்தில் எல்.பி.டபிள்யூ ஆனார்.

அடுத்து கருண் நாயர் உடன் அஸ்வின் ஜோடி சேர்ந்தார். இந்த ஜோடி சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தியது. கருண் நாயர் தனது முதல் சதத்தை பதிவு செய்தார். அதோடு நிற்காமல் அதை இரட்டை சதமாக மாற்றினார். அதேவேளையில் அஸ்வின் அரைசதம் அடித்தார். அணியின் ஸ்கோர் 616 ரன்னாக இருக்கும்போது அஸ்வின் 67 ரன்கள் எடுத்த நிலையில் ஆட்டம் இழந்தார்.

அடுத்து கருண் நாயர் உடன் ஜடேஜா ஜோடி சேர்ந்தார். இரட்டை சதம் அடித்த கருண் நாயர் அதிரடியாக விளையாடி ரன் குவித்தார். இதனால் அவர் முச்சதத்தை நெருங்கிக் கொண்டிருந்தார். அதேநேரத்தில் ஜடேஜா அரைசதம் அடித்தார்.

கருண் நாயர் 299 ரன்கள் எடுத்திருக்கும்போது ஜடேஜா 51 ரன்கள் எடுத்த நிலையில் ஆட்டம் இழந்தார். அடுத்து உமேஷ் யாதவ் களம் இறங்கினார். 191-வது ஓவரை ரஷித் வீசினார். இந்த ஓவரின் 4-வது பந்தை பவுண்டரிக்கு விரட்டி கருண் நாயர் முச்சதம் அடித்தார். அத்துடன் இந்தியா முதல் இன்னிங்சை டிக்ளேர் செய்தது. இந்தியா முதல் இன்னிங்சில் 190.7 ஓவர்களை சந்தித்து 7 விக்கெட் இழப்பிற்கு 759 ரன்கள் குவித்தது. கருண் நாயர் 303 ரன்களுடன் களத்தில் இருந்தார்.

பின்னர் 289 ரன்கள் பின்தங்கிய நிலையில் இங்கிலாந்து அணி 2-வது இன்னிங்சை தொடங்கியது. அலஸ்டைர் குக், ஜென்னிங்ஸ் ஆகியோர் தொடக்க வீர்ரகளாக களம் இறங்கினார்கள். 4-வது நாள் ஆட்ட முடிவில் இங்கிலாந்து அணி ஐந்து ஓவர்களை சந்தித்து விக்கெட் இழக்காமல் 12 ரன்கள் எடுத்துள்ளது. அலஸ்டைர் குக் 3 ரன்னுடனும், ஜென்னிங்ஸ் 9 ரன்னுடனும் களத்தில் உள்ளனர்.
 
 

Edited by நவீனன்

  • தொடங்கியவர்

முதல் சதமே முச்சதம்; வரலாறு படைத்த கருண் நாயர்: இந்தியா 759 ரன்கள் குவித்து புதிய சாதனை

 

  • முச்சதம் அடித்து சாதனை நிகழ்த்திய கருண் நாயர். | படம்: பிடிஐ.
    முச்சதம் அடித்து சாதனை நிகழ்த்திய கருண் நாயர். | படம்: பிடிஐ.
  • cricket-Karun_3105959g.jpg
     
 

சென்னை டெஸ்ட் போட்டியில் 4-ம் நாளான இன்று கருண் நாயர் தனது முதல் சதத்தையே முச்சதமாக மாற்றி 303 ரன்கள் எடுத்து நாட் அவுட்டாகத் திகழ்ந்து சாதனை புரிந்தார். இந்திய அணி தன் முதல் இன்னிங்சில் 7 விக்கெட்டுகள் இழப்புக்கு 759 ரன்கள் என்று டெஸ்ட் போட்டியில் தங்கள் அதிகபட்ச ரன்களை எட்டியது.

381 பந்துகளை எதிர்கொண்ட கருண் நாயர் 32 பவுண்டரிகள் 4 சிக்சர்களுடன் 303 ரன்கள் எடுத்து நாட் அவுட்டாக திகழ்ந்தார், இந்திய அணி 7 விக்கெட்டுகள் இழப்புக்கு 759 ரன்கள் என்று டெஸ்ட் கிரிக்கெட்டில் தங்கள் முந்தைய அதிகபட்ச ஸ்கோரான 726 ரன்களைக் கடந்து 759 ரன்கள் குவித்தது. இங்கிலாந்துக்கு எதிராக இதுவே அதிகபட்ச ரன்களாகும். ஒட்டுமொத்தமாக இது 7-வது பெரிய டெஸ்ட் ஸ்கோராகும்.

கருண் நாயர் 306 பந்துகளில் 200 ரன்கள் எடுத்து இரட்டைச் சதம் பூர்த்தி செய்த பிறகு அடுத்த 103 ரன்களுக்கு 75 பந்துகளே எடுத்துக் கொண்டு அதிரடி காட்டினார். இவரும் ஜடேஜாவும் இணைந்து 138 ரன்களை 19 ஓவர்களில் விளாசித் தள்ளினர். ஜடேஜா 55 பந்துகளில் 1 பவுண்டரி 2 சிக்சருடன் 51 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார்.

கருண் நாயரிடம் விராட் கோலியைக் காட்டிலும் அதிக ஷாட்கள் உள்ளது, இவரது இன்னிங்ஸின் முக்கிய அம்சம் சக்தி வாய்ந்த ஸ்வீப்ஷாட்கள், ரிவர்ஸ் ஸ்வீப், அப்பர் கட் ஆகியவை அடங்கும், இதைத்தவிர கட், புல், டிரைவ் என்று அனைத்து ஷாட்களையும் அவர் வெளிப்படுத்தி சேவாகிற்குப் பிறகு முச்சதம் கண்ட வீரரானார் கருண் நாயர். மேலும் டெஸ்ட் வரலாற்றில் முதல் சதத்தையே முச்சதமாக மாற்றிய 3-வது வீரராகத் திகழ்கிறார் கருண் நாயர். ரஷீத் படேல் பந்தை கட் செய்து பவுண்டரிக்கு விரட்டி தான் எடுத்த இந்த முச்சத ஷாட்டை அவர் வாழ்நாள் முழுதும் மறக்க மாட்டார்.

சென்னையில் சேவாக் தென் ஆப்பிரிக்காவை புரட்டி எடுத்து 319 ரன்கள் எடுத்த பிறகு கருண் நாயர் சென்னையில் 2-வது முச்சத நாயகரானார். கடைசி 10 ஓவர்களில் 79 ரன்கள் விளாசப்பட்டது.

கருண் நாயர் 30களில் இருந்த போது அவருக்கு கேட்ச் விடப்பட்டது, மேலும் ஒருமுறை ரிவர்ஸ் ஸ்வீப்பில் அவுட் முறையீட்டை நடுவர் நிராகரிக்க இங்கிலாந்திடன் ரிவியூ இல்லாமல் போனதும் கருண் நாயரின் அதிர்ஷ்டம். இரட்டைச்சதம் கடந்த பிறகு ஜோ ரூட் கேட்ச் விட்டார், விக்கெட் கீப்பர் ஜானி பேர்ஸ்டோ ஸ்டம்பிங் வாய்ப்பைக் கோட்டை விட்டார்.

இங்கிலாந்து ஒரு சமயத்தில் இந்திய அணியின் டிக்ளேரை எதிர்நோக்கி சொதப்பலாக ஆடினர், குக் கேப்டன்சி உண்மையில் மறுபரிசீலனைக்குரியதே. இன்று அவரது மனநிலை ஆட்டத்திலேயே இல்லை என்று கூறும் அளவுக்கு சொதப்பல்கள் நிரம்பி வழிந்த்து.

இன்று 391/.4 என்ற நிலையில் கருண் நாயர் 71 நாட் அவுட் என்று தொடங்கினார், ஒரே நாளில் 232 ரன்களை விளாசியுள்ளார். முரளி விஜய் 17-ல் இருந்தவர் 29 ரன்களில் டாசனின் முதல் விக்கெட்டாக எல்.பி.ஆனார். அஸ்வின் (67), கருண் நாயர் இணைந்து ஸ்கோரை 435 ரன்களிலிருந்து 616 ரன்களுக்கு உயர்த்தினர், அஸ்வின் 6 பவுண்டரி 1 சிக்சர் அடித்து பிராடிடம் ஆட்டமிழந்தார்.

தற்போது அஜிங்கிய ரஹானே இடமே கேள்விக்குறியாகிவிட்டது. 282 ரன்கள் முன்னிலை பெற்றுள்ளது இந்தியா. கருண் நாயர் 303 நாட் அவுட். இங்கிலாந்து 2-வது இன்னிங்ஸை தொடங்கி ஆட்ட முடிவில் விக்கெட் இழப்பின்றி 12 ரன்கள் எடுத்துள்ளது.

இங்கிலாந்து தரப்பில் மொயின் அலி 190 ரன்கள் கொடுத்து 1 விக்கெட்டை மட்டுமே கைப்பற்றினார். 3 பிரதான ஸ்பின்னர்கள் மட்டும் இந்த 759 ரன்களில் 472 ரன்களை வாரி வழங்கியுள்ளனர். வேகப்பந்து வீச்சாளர் மூவர் இணைந்து 249 ரன்களை விட்டுக் கொடுத்தனர்.

http://tamil.thehindu.com/sports/முதல்-சதமே-முச்சதம்-வரலாறு-படைத்த-கருண்-நாயர்-இந்தியா-759-ரன்கள்-குவித்து-புதிய-சாதனை/article9434503.ece

 

Edited by நவீனன்

  • தொடங்கியவர்

டெஸ்ட் கிரிக்கெட் வரலாற்றில் இந்தியாவின் அதிகபட்ச ஸ்கோர் இதுதான்

சென்னை போட்டியில் இந்தியா முதல் இன்னிங்சில் 7 விக்கெட் இழப்பிற்கு 759 ரன்கள் குவித்து டிக்ளேர் செய்தது. இதுதான் இந்தியாவின் அதிகபட்ச ஸ்கோர் ஆகும்.

டெஸ்ட் கிரிக்கெட் வரலாற்றில் இந்தியாவின் அதிகபட்ச ஸ்கோர் இதுதான்
 
இந்தியா - இங்கிலாந்து அணிகளுக்கு இடையிலான ஐந்தாவது மற்றும் கடைசி டெஸ்ட் கிரிக்கெட் போட்டி சென்னை  சேப்பாக்கம் மைதானத்தில் நடைபெற்று வருகிறது. இதில் முதல் இன்னிங்சில் இந்தியா 7 விக்கெட் இழப்பிற்கு 759 ரன்கள் குவித்து டிக்ளேர் செய்தது.

இதுதான் இந்தியா டெஸ்ட் கிரிக்கெட் வரலாற்றில் ஒரு இன்னிங்சில் குவித்த அதிகபட்ச ஸ்கோராகும். இதற்கு முன் 2009-ல் மும்பையில் நடைபெற்ற இலங்கை அணிக்கெதிரான போட்டியில் 9 விக்கெட் இழப்பிற்கு 726 ரன்கள் குவித்து டிக்ளேர் செய்ததே அதிகபட்ச ஸ்கோராக இருந்தது.

2010-ல் கொழும்பில் நடைபெற்ற போட்டியில் இந்தியா 707 ரன்கள் குவித்தது. 2004-ல் சிட்னியில் நடைபெற்ற போட்டியில் 705 ரன்களும், 1986-ம் ஆண்டு கான்பூரில் இலங்கை அணிக்கெதிராக 676 ரன்களும் எடுத்திருந்தது.

http://www.maalaimalar.com/News/Sports/2016/12/19192809/1057078/India-top-score-in-Test-cricket.vpf

  • தொடங்கியவர்

கேட்ச்களை விட்டதால் 500 ரன்களை விட்டுக்கொடுத்துள்ளோம்: இங்கிலாந்து பயிற்சியாளர் டிரவர் பெய்லிஸ்

 

 
டிரவர் பெய்லிஸ் பேச அலிஸ்டர் குக் மற்றும் வீரர்கள் கவனிக்கின்றனர். | படம்: கே.ஆர்.தீபக்.
டிரவர் பெய்லிஸ் பேச அலிஸ்டர் குக் மற்றும் வீரர்கள் கவனிக்கின்றனர். | படம்: கே.ஆர்.தீபக்.
 
 

முச்சத நாயகன் கருண் நாயர் வரலாறு படைக்க இந்திய அணியின் ஸ்கோர் 759 என்று புதிய சாதனையில் திளைக்க, கேட்ச்களைக் கோட்டவிட்டதால் 500 ரன்களை கூடுதலாக கொடுக்க நேர்ந்ததாக இங்கிலாந்து அணியின் பயிற்சியாளர் டிரவர் பெய்லிஸ் சாடியுள்ளார்.

“எங்களது கேட்சிங் மிகவும் தரக்குறைவாக உள்ளது, கடைசி 3 கேட்ச்களை விட்டதால் 500 ரன்களை விட்டுக் கொடுத்துள்ளோம், இது மிகுந்த ஏமாற்றமளிக்கிறது. இதிலிருந்து மீண்டெழ தீவிரமாக பயிற்சி செய்ய வேண்டியுள்ளது. எங்கள் அணியில் இயல்பாக நன்றாக ஓடும் வீரர்கள் இல்லை.

நல்ல கிரிகெட் வீரர்கள் உள்ளனர், ஆனால் தரமான ஸ்லிப் பீல்டர்கள் இல்லை. களத்தில் இன்னும் மேம்பட வேண்டியுள்ளது.

வீரர்களுக்கு இது போன்ற தினம் அமைவது புதிதல்ல, இதுவே கடைசி முறையாகவும் இருக்கப்போவதில்லை

ஆனால் இப்படியொரு தினம் அமைந்தால் அது உண்மையில் கடினமே. இந்திய அணிக்கும் அதன் பேட்ஸ்மென்களுக்கும் நாம் உரிய அங்கீகாரம் அளித்தேயாக வேண்டும், அவர்கள் மிக அருமையாக ஆடுகின்றனர். நாங்கள் இன்று ஆட்டத்தில் இல்லை.

இந்தத் தொடரிலேயே நல்ல பேட்டிங் பிட்ச் ஆகும் சென்னை. சில வேளைகளில் கேப்டன் அமைத்த களவியூகத்திற்கு ஏற்ப பந்து வீச்சு இருப்பதில்லை. இதுதான் சூழலை கடினமாக்குகிறது

இந்திய அணியில் நல்ல பேட்ஸ்மென்கள் உள்ளனர், நிச்சயமாக ஸ்பின்னை அருமையாகவே ஆடுகின்றனர். உள்நாட்டில் அவர்கள் எதிரணிக்கு அதிக கஷ்டம் கொடுப்பார்கள் அதைத்தான் இன்று பார்த்தோம்.

கடைசி 7 டெஸ்ட் போட்டிகளில் அதாவது வங்கதேசத்தில் 2 உட்பட வீரர்கள் தங்கள் முயற்சியைக் கைவிடவில்லை. முயற்சி திருவினையாகவில்லை.

இந்தத் தொடரில் எங்களை இந்திய அணியின் அடித்து நொறுக்கி விட்டனர். எங்களை விட இந்திய அணி நன்றாக பேட், பவுல் செய்தது. துணைக்கண்டத்தில் தடுமாறும் முதல் அணியல்ல நாங்கள், தடுமாறும் கடைசி அணியும் அல்ல.

கடந்த 7 டெஸ்ட் போட்டிகளில் இளைஞர்கள் சிலருக்கு வாய்ப்பு கொடுத்தோம். எனவே இந்த அனுபவத்திலிருந்து இவர்கள் பயன் பெறுவார்கள். இந்திய வீரர்களிடமிருந்தே சிறிது கற்றுக் கொள்ளலாம்

நாளை டிராவுக்கு ஆடுவோம், விமானத்தில் தோல்வியுடன் ஏறமாட்டோம்.

அலிஸ்டர் குக் கேப்டன்சி பற்றி அவரிடம் இன்னமும் பேசவில்லை. நேர்மையாகக் கூற வேண்டுமெனில் நான் இது குறித்து அவரிடம் பேசமாட்டேன். இதை அவரே முடிவெடுப்பார். இதில் நான் கூறுவதால் அவர் மனம் மாறப்போவதில்லை

தொடர்ந்து கேப்டனாக இருப்பாரா, அல்லது இல்லையா என்பது அவரைப்பொறுத்தது எனக்கு அதனால் ஒன்றுமில்லை” என்றார் டிரவர் பெய்லிஸ்.

http://tamil.thehindu.com/sports/கேட்ச்களை-விட்டதால்-500-ரன்களை-விட்டுக்கொடுத்துள்ளோம்-இங்கிலாந்து-பயிற்சியாளர்-டிரவர்-பெய்லிஸ்/article9434727.ece

  • தொடங்கியவர்

முச்சதம் அடிக்க டிக்ளேர் முடிவு தள்ளிப்போனது: கருண் நாயர்

சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் கருண் நாயர் முச்சதம் அடித்து சாதனைப் படைத்துள்ளார். தான் சதம் அடித்தது குறித்து அவர் பேட்டியளித்துள்ளார்.

 
முச்சதம் அடிக்க டிக்ளேர் முடிவு தள்ளிப்போனது: கருண் நாயர்
 
சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் இந்திய வீரர் கருண் நாயர் முச்சதம் அடித்து அசத்தினார். அவர் 303 ரன்கள் எடுத்து கடைசி வரை அவுட்டாகாமல் இருந்தார். இந்த முச்சதம் டிரிபில் சதம் அடித்த 2-வது இந்தியர் என்ற பெருமையை பெற்றுள்ளார்.

இன்று முச்சதம் அடித்து சாதனைப் படைத்துள்ள கருண் நாயர் கூறுகையில் ‘‘எனது வாழ்நாளில் இது மிகவும் சிறந்த ஆட்டமாக இருக்கும். ராகுல், அஸ்வின் மற்றும் ஜடேஜா ஆகியோருடன் களத்தில் விளையாடும்போது பல சூழ்நிலைகள் நிலவியது. அவர்கள் எனக்கு மிகவும் ஆதரவாக இருந்தார்கள். அவர்கள் ஆதரவு என்னை தூண்டியது.

முதல் சதம் எப்போதுமே சிறந்ததாக இருக்கும். நான் முதல் சதத்தை அடிக்கும்போது எனக்கு எந்தவித நெருக்கடியையும் உணரவில்லை. சதம் அடித்தபின் நான் எனது வழக்கான ஷாட்டுகளை அடித்து விளையாடினேன். ஸ்வீப் செய்வது என்னுடைய வழக்கமான விளையாட்டு. இதற்காக நான் ஏராளமான வகையில் பயிற்சி எடுத்துள்ளேன்.

என்னுடைய பெற்றோர்கள் கேலரியில் இருந்து எனது ஆட்டத்தை பார்த்துக் கொண்டிருந்தனர். எனது தந்தை பெரும்பாலான போட்டிகளை நேரில் பார்ப்பார். இதனால் எனக்கு கூடுதல் நெருக்கடி ஏதும் இல்லை. போட்டியை பார்க்க வந்த அவர்களுக்கு நன்றி சொல்ல விரும்புகிறேன். என்னால் அவர்கள் பெருமைப்பட்டிருப்பார்கள் என்று நினைக்கிறேன்.

இன்றைய 3-வது செசனில் அதிரடியாக விளையாடியபோது வீரர்கள் அறையில் இருந்து ஒரு தகவல் வந்தது. விரைவில் நாம் டிக்ளேர் செய்யப் போகிறோம் என்ற தகவல் அதில் இருந்தது. ஆனால், நான் 300 ரன்களை நெருங்கும்போது டிக்ளேர் முடிவை சற்று தள்ளி வைத்தார்கள். இதனால் அணி நிர்வாகத்திற்கு நான் நன்றி கூறுகிறேன். ராகுல் ஒரு சிறந்த வீரர். அவர் விரைவில் 200 ரன்கள் அடிப்பார். 3-வது நாள் 4-வது நாள் என போகப்போக ஆடுகளம் மோசமாக மாறி வருகிறது. புதிய பேட்ஸ்மேன்களுக்கு கடினமாக இருக்கும். தற்போது ஆடுகளம் சற்று டர்ன் ஆகிறது. நாளை அதிக அளவில் டர்ன் ஆகும் என்ற நம்பிக்கை உள்ளது.

http://www.maalaimalar.com/News/Sports/2016/12/19212558/1057092/I-am-thankful-to-the-team-management.vpf

  • தொடங்கியவர்

இந்தியா-இங்கிலாந்து மோதல்: பரபரப்பான கட்டத்தில் சேப்பாக்கம் டெஸ்ட்

சென்னை சேப்பாக்கத்தில் நடைபெற்று வரும் இங்கிலாந்துக்கு எதிரான 5-வது டெஸ்ட் போட்டியில் இன்று கடைசி நாள் ஆட்டம் என்பதால் இப்போட்டி பரபரப்புடன் காணப்படுகிறது.

 
இந்தியா-இங்கிலாந்து மோதல்: பரபரப்பான கட்டத்தில் சேப்பாக்கம் டெஸ்ட்
 
சென்னை:

இந்தியா- இங்கிலாந்து அணிகள் மோதும் 5-வது மற்றும் கடைசி டெஸ்ட் போட்டி கிரிக்கெட் சென்னை சேப்பாக்கம் எம்.ஏ. சிதம்பரம் மைதானத்தில் நடைபெற்று வருகிறது.

இங்கிலாந்து அணி முதல் இன்னிங்சில் 477 ரன் குவித்தது. இதற்கு இந்திய அணி சரியான பதிலடி கொடுத்தது. 7 விக்கெட் இழப்புக்கு 759 ரன் குவித்து டிக்ளேர் செய்தது. இங்கிலாந்தின் ஸ்கோரை விட 282 ரன் கூடுதலாகும்.

கருண்நாயர் டிரிபிள் சதம் அடித்து 2-வது இந்தியர் என்ற சாதனையை படைத்தார். அவர் 303 ரன்னும் (அவுட்இல்லை), லோகேஷ் ராகுல் 199 ரன்னும் எடுத்தனர். ஸ்டூவர்ட் பிராட், டாசன் தலா 2 விக்கெட் எடுத்தனர்.

282 ரன்கள் பின்தங்கிய நிலையில் 2-வது இன்னிங்சை விளையாடிய இங்கிலாந்து நேற்றைய 4-வது நாள் ஆட்டத்தின் முடிவில் விக்கெட் இழப்பின்றி 12 ரன் எடுத்து இருந்தது. ஜென்னிங்ஸ் 12 ரன்னும், தேயின் கூக் 3 ரன்னும் எடுத்து ஆட்டம் இழக்காமல் இருந்தனர்.

இன்று 5-வது மற்றும் கடைசி நாள் ஆட்டம் நடந்தது. 270 ரன்கள் பின்தங்கிய நிலை, கைவசம் 10 விக்கெட் என்ற நிலையில் இங்கிலாந்து அணி தொடர்ந்து 2-வது இன்னிங்சை விளையாடியது.

ஆட்டத்தை ‘டிரா’ செய்யும் நோக்கில் விளையாடினார்கள். அதே நேரத்தில் இந்திய பவுலர்கள் விக்கெட்டுகளை கைப்பற்றி வெற்றி பெறும் வேட்கையில் பந்து வீசினார்கள். கடைசி நாள் ஆட்டம் என்பதால் பரபரப்புடன் காணப்பட்டது.

இங்கிலாந்து வீரர்கள் நிதானமாக விளையாடி வருவதால் இந்த டெஸ்ட் போட்டி ‘டிரா’வில் முடிவதற்கான வாய்ப்பு அதிகமாக உள்ளது. இதனால் 5 டெஸ்ட் கொண்ட இந்த தொடரை இந்திய 3-0 என்ற கணக்கில் கைப்பற்றுகிறது.

http://www.maalaimalar.com/News/Sports/2016/12/20113144/1057168/India-vs-England-5th-Test-Day-5-at-Chennai.vpf

  • தொடங்கியவர்
England 477 & 196/6 (74.5 ov)
India 759/7d
England trail by 86 runs with 4 wickets remaining
  • தொடங்கியவர்

சென்னை டெஸ்டில் இந்தியா இன்னிங்ஸ் வெற்றி.. 4-0 என்ற கணக்கில் தொடரை கைப்பற்றியது

 

சென்னை: இங்கிலாந்துக்கு எதிரான 5வது டெஸ்டிலும் இந்தியா வெற்றி பெற்று, 4-0 என்ற கணக்கில் டெஸ்ட் தொடரை கைப்பற்றியது. 3-0 என்ற கணக்கில் இந்தியா டெஸ்ட் தொடரை வென்ற நிலையில் 5வது மற்றும் இறுதி டெஸ்ட் போட்டி சென்னையில் கடந்த 16ம் தேதி தொடங்கியது.

 

டாசில் வென்ற இங்கிலாந்து பேட்டிங்கை தேர்ந்தெடுத்தது. முதல் இன்னிங்சில் அந்த அணி 477 ரன் எடுத்தது. இந்தியா, கருண் நாயர், முச்சத உதவியோடு 7 விக்கெட்டுகள் இழப்பிற்கு 759 ரன்கள் எடுத்திருந்தபோது டிக்ளேர் செய்தது.

India vs England Test 5 Day 5: India looks win, England for draw

 

இதையடுத்து 282 ரன்கள் பின் தங்கிய நிலையில் 2வது இன்னிங்சை நேற்று ஆரம்பித்தது இங்கிலாந்து. இன்று மதியம் தேனீர் இடைவேளையின்போது அந்த அணி 4 விக்கெட்டுகள் இழப்பிற்கு 167 ரன்கள் எடுத்திருந்தது. குக் 49 ரன்களிலும், ஜென்னிங்ஸ் 54 ரன்களிலும், ஜோ ரூட் 6 ரன்களிலும் ஜடேஜா பந்து வீச்சில் அவுட்டாகினர்.

ஜானி பெய்ர்ஸ்டோ இஷாந்த் பந்து வீச்சில் அவுட்டானார். ஆட்டத்தை டிரா செய்ய இங்கிலாந்து போராடிய நிலையில், தேனீர் இடைவேளைக்கு பிறகு நிலைமை மாறியது. அடுத்தடுத்து விக்கெட்டுகள் வீழ்ந்த நிலையில், 207 ரன்களுக்கு அந்த அணி ஆல்-அவுட்டானது.

இதனால் ஒரு இன்னிங்ஸ் மற்றும் 75 ரன்கள் வித்தியாசத்தில் இந்தியா அபாார வெற்றி பெற்று தொடரை 4-0 என்ற கணக்கில் வென்று அசத்தியது. இந்திய தரப்பில் ஜடேஜா அதிகபட்சமாக 7 விக்கெட்டுகளை வீழ்த்தி அசத்தினார்.

Read more at: http://tamil.oneindia.com/news/sports/cricket/india-vs-england-test-5-day-5-india-looks-win-england-draw-270141.html

 

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.