Skip to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

இருதரப்பு பேச்சுவார்த்தை இலங்கைக்கு சாதகமா? பாதகமா? முடிவு நாளை!

Featured Replies

இலங்கை கடற்பரப்பில் மீன்பிடிப்பதற்கும், இலுவைப்படகுகளை பயன்படுத்துவதற்கும் இலங்கையிடம் கோரிக்கை விடுத்திருப்பதாகவும், இது நடைமுறைப்படுத்தப்படும் எனவும் இந்தி மீனவப் பிரதிநிதிகள் தெரிவித்துள்ளார்.

டெல்லியில் நடைபெற்ற இரு நாட்டு மீனவப்பிரதிநிதிகளுக்கு இடையிலான பேச்சுவார்த்தை முடிவடைந்த பின்னர் நேற்று ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போது ராமேஸ்வரம் மீனவ சங்கப்பிரதிநிதி சங்கத் தலைவர் தேவதாஸ் இவ்வாறு கூறினார்.

இலங்கை - இந்திய மீனவர்களுக்கு இடையிலான பிரச்சினை தொடர்பாக நடைபெற்ற பேச்சுவார்த்தை சுமூகமாக முடிந்திருப்பதாகவும் தெரிவித்துள்ளார்.

“இலங்கை கடற்பரப்பில் 83 நாட்கள் மீன்பிடிக்க இந்திய மீனவர்களுக்கு அனுமதி வேண்டும், இலங்கை அரசால் தடைவிதிக்கப்பட்ட இலுவைப் படகுகளை மூன்று வருடங்களுக்கு மாத்திரமே பயன்படுத்துவோம், அதற்கு பின்னர் பயன்படுத்த மாட்டோம், இதற்கும் அனுமதி தர வேண்டும்” என இலங்கையிடம் கோரிக்கை விடுத்திருப்பதாக ராமேஸ்வரம் மீனவ சங்கப்பிரதிநிதி சங்கத் தலைவர் தேவதாஸ் இந்திய ஊடகங்களிடம் குறிப்பிட்டார்.

மேலும் இவற்றை தருவதற்கு இலங்கை அரசு மறுப்பு தெரிவித்தால் வருடத்திற்கு இரண்டு உயர்மட்ட கூட்டத்தை நடாத்தி அதன்மூலம் இடர்பாடுகள் நீக்கப்படும் எனவும் குறிப்பிட்டார்.

இந்த பேச்சுவார்த்தை முடிவடைய உள்ளதாகவும், இதனால் இந்திய மீனவர்களுக்கு நல்ல செய்தி கிடைக்கும் எனவும் தாம் எதிர்பார்ப்பதாக தெரிவித்திருந்தார்.

இதேவேளை நாளை நடைபெற உள்ள இரு நாட்டு வெளிவிவகார அமைச்சர்களுக்கும் இடையிலான பேச்சுவார்த்தையின் போது இந்த தீர்மானங்கள் முடிவு செய்யப்படும் எனவும் நம்பிக்கை வெளியிட்டுள்ளார்கள்.

மீனவப் பிரச்சினை தொடர்பாக இரு நாட்டு பிரதிநிதிகளுக்கு இடையிலான 4ஆம் கட்ட பேச்சுவார்த்தை டெல்லியில் கடந்த இரண்டாம் திகதி நடைபெற்றது.

இதற்காக கடற்தொழில் அமைச்சர் மஹிந்த அமரவீர தலைமையிலான 10 பேரங்கிய மீனவ சங்கப் பிரதிநிதிகள் டெல்லிக்கு சென்றிருந்தனர்.

இந்தப் பேச்சுவார்த்தையில் இலங்கையிடம் இந்திய தரப்பினர் பல கோரிக்கைகளை முன்வைத்துள்ளனர். இந்த கோரிக்கைகளுக்கு இலங்கை அரசு சம்மதம் தெரிவிக்குமேயானால் பாரிய பின்விளைவுகளை எதிர்கொள்ள நேரிடும்.

இலுவைப்படகுகளை பயன்படுத்துவதன் மூலம் கடல்வளங்கள் அழிக்கப்படுவதன் மூலம், எதிர்காலத்தில் பல பிரச்சினைகள் ஏற்படும் என்பது யாவரும் அறிந்த விடயமே.

நாளை நடைபெற உள்ள அமைச்சர்களுக்கு இடையிலான பேச்சுவார்த்தை இலங்கைக்கு சாதகமாக? பாதகமா? என்பது பொருத்திருந்து பார்க்க வேண்டும்.

http://www.tamilwin.com/statements/01/123342?ref=morenews

  • தொடங்கியவர்

21ம் நூற்றாண்டில் தெற்காசிய பிராந்தியத்தில் மனித இனத்தை சீரழிக்கும் முயற்சியில் ஈடுபடும் மூன்று பிரதான நாடுகள்  ஹிந்தியா, பாகிஸ்தான், ஸ்ரீலங்கா ஆகும்.

எல்லை தாண்டி கடற்கொள்ளையில் ஈடுபடும் ஹிந்திய சமூக விரோதிகளுக்கும் கேரளா கஞ்சா கள்ளக் கடத்தலில் ஈடுபடும் ஹிந்திய மாபியாக்களுக்கும் ஆதரவான காடையர்கள் கோலோச்சும் ஹிந்திய மத்திய அரசும், தமிழினப் படுகொலையில் ஈடுபட்ட சிங்கள-பௌத்த அரச பயங்கரவாதிகளும் சந்தித்து மேற்கூறிய சமூக விரோத செயல்களை முன்னெடுக்கும் வழிவகைகளை பேசுகிறார்கள். 

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.