Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

வியட்னாம் கற்றுத்தந்த பாடம்

Featured Replies

வியட்னாம் கற்றுத்தந்த பாடம்

-சி.இதயச்சந்திரன்-

அமெரிக்கா பற்றி யாராவது பேசினால் வியட்னாமின் ஞாபகம் எல்லோருக்கும் வரும். போராட்டங்கள் குறித்து அலசும் போது, வியட்னாமிய விடுதலைப் போரை உள்நுழைக்காது போனால் ஆய்வு செய்பவர்கள் தடுமாறிப்போவார்கள்.

இந்த வியட்னாம் தரும் படிப்பினைகள், காலங் கடந்தாலும் சில விடயங்களை எமக்குப் புலப்படுத்தியபடியே சென்றிருக்கின்றன.

வியட்னாம் மக்களோடு அன்று போர் புரிந்த அமெரிக்கா இன்று தனிப்பெரும் உலக வல்லரசு. இன்றைய நவீன உலக ஒழுங்கில், அமெரிக்காவைப் புறந்தள்ளி அரசியல் பேசுவதென்பது நகைப்பிற்கிடமாகத் தென்படும்.

சிறிலங்கா விவகாரத்திலும் இந்த உலக ஜனநாயகக் காவலனின் பங்களிப்பு அதிகமாகக் காணப்படும். இந்தக் காவலன், வியட்நாமில் உள்நுழைந்து அழிவுகளை உருவாக்கி, தோல்வியுற்றுப் பின்வாங்கிய நாட்களை இப்போது எடைபோடுவது சற்றுப் பொருத்தமானதாக இருப்பது போல் உணர்வதால் அவற்றில் சிலவற்றை கூறலாமென விரும்புகிறேன்.

வட தென் வியட்னாமில் நடைபெற்ற பல நிகழ்வுகள், எமது தாயக வடக்கு, கிழக்குப் பிரதேசத்தில் தற்போது நடைபெறும் நகர்வுகளின் பிரதி போலவும் தோற்றமளிக்கலாம்.

தொடர்ச்சியான நிலப்பரப்பும் கலாசார சமூக விழுமியங்களை தன்னகத்தே உள்ளடக்கிய ஒரே இன மக்கள் கூட்டமே இந்த வடக்கு தெற்கு வியட்னாமியர்கள். இவர்கள் 30 ஆண்டுகளாக வல்லரசுகளின் ஆக்கிரமிப்பிற்கெதிரான வீரம் செறிந்த போராட்டத்தை நிகழ்த்திக் காட்டினர்.

மூன்றாவது மனிதனாக நின்று பிரான்சு ஏகாதிபத்தியத்திற்கான சகல ஆலோசனைகளையும் உதவிகளையும் வழங்கியது அமெரிக்கா.

எந்த சூழ்நிலையிலும், வியட்னாமை விட்டு பிரெஞ்சுக்காரர் வெளியேறி விடக்கூடாதென்பதற்காகவே அமெரிக்க உதவிகள் வழங்கப்பட்டன. ஏனெனில் தனது உள்நுழைவிற்கான காலம் கனியும்வரை பிரான்சின் ஆக்கிரமிப்பிற்குள் வியட்னாம் இருக்கவேண்டுமென்பதையே அமெரிக்கா விரும்பியது.

80 களில் சிறிலங்கா பற்றிய இந்தியப் பார்வையும் அமெரிக்காவின் வியட்னாம் குறித்த பார்வையோடு ஒத்ததாகவே அமைகிறது.

இரண்டாவது உலக யுத்தம் வெடித்தபோது பிரான்சை வட வியட்னாமிலிருந்து ஜப்பான் விரட்டியடித்தது. ஆயினும் வடக்கின் அதிகாரம் வியட்னாம் போராளிகள் வசம் வந்தது.

தென் வியட்னாமைப் பிடித்த பிரித்தானியா அதனைப் பிரெஞ்சுக்காரரிடம் ஒப்படைத்தது.

திரும்பி வந்த பிரெஞ்சுக்காரர், கம்யூனிஷத்தை இவ்வுலகிலிருந்து அழிப்பேன் என்று கூறியதால் பிரெஞ்சிற்கான நிதியுதவியை ஒரு கோடி டொலராக உயர்த்தியது அமெரிக்கா.

1954 இல் யுத்தச் செலவீனத்தை சமன் செய்ய, உதவியை அதிகரித்தவாறு வியட்நாம் விவகாரத்தில் தனது உள்நுழைவை நேரடியாக மேற்கொண்ட அமெரிக்கா, பிரான்சின் பின்வாங்கலை சலிப்புடன் நோக்கியது.

1952 இல் ஜெனிவாவில் முன்னெடுக்கப்பட்ட அமைதிப் பேச்சுவார்த்தைக்கான இடமாக பர்மா தேசம் தேர்ந்தெடுக்கப்பட்டது. அப்போது தென் வியட்னாமிலிருந்த ஜனாதிபதி இம்முயற்சியினை நிராகரித்தார்.

அமைதி முயற்சியினை விரும்பாத அமெரிக்கா பிரான்சிற்கான சகல உதவிகளும் நிறுத்தப்படுமென எச்சரிக்கை விடுத்தது.

தோல்விகளை எதிர்கொண்ட பிரெஞ்சுப் படைகளுக்கு உற்சாகமூட்ட, வியட்னாமின், ~டென் புன் பூ| பகுதியில் சி.ஐ.ஏ. விமானங்களின் மூலம் 16,000 பிரெஞ்சுப் படைகள் களமிறக்கப்பட்டன.

~டென் புன் பூ| வில் பிரெஞ்சு படைகளின் தோல்விக்கான நிலைமைகள் உச்சகட்டம் அடைந்தவேளையில் அமெரிக்கா சி.ஐ.ஏ., இன் விமானப்படைகள் நேரடியாக களத்தில் இறங்கின.

இந்நிலையில் இப்பிரதேசத்தைப் பாதுகாக்க வட வியட்னாம் ~டோன்கின்| வளைகுடா நோக்கி அமெரிக்க வல்லரசின் அணு ஆயுதம் தரித்த யுத்தக் கப்பல்கள் நகர்த்தப்பட்டன.

அதேவேளை ஐ.நா.வின் அமைதிப் பேச்சுவார்த்தைக்கான நாள் நெருங்கிக் கொண்டிருந்தது. கப்பல்களிலிருந்து மேற்கொள்ளப்படும் அணு ஆயுதத் தாக்குதல்கள் தமது படை வீரர்களின் அழிவிற்கு வழிசமைக்குமென்று அச்சமுற்ற பிரெஞ்சுத் தளபதி பிடால்ரோ, தோல்வி நிலையற்ற பின்வாங்கலை விரும்பினார்.

1954 யூனில் அமைதிப் பேச்சுவார்த்தை அமர்வுகள் ஜெனிவாவில் நடைபெற்றுக் கொண்டிருக்கையில், ஆகஸ்ட் மாதமளவில் பிரிவுற்றிருந்த தமது துணைப் படைகளை ஒன்றிணைக்கத் தொடங்கியது அமெரிக்கா.

யுத்தத்தை முடிவிற்கு கொண்டுவர முயன்ற ஜெனிவா ஒப்பந்தத்தினை தனியாக நின்று அமெரிக்கா எதிர்த்தது.

இந்நிலையில் பிலிப்பைன்ஸிலிருந்து தமது திருப்பணியை முடித்துக்கிளம்பிய சி.ஐ.ஏ இன் முக்கியஸ்தரான ~லேன்ஸ் ஸ்டேல்| என்பவர் வியட்னாமில் புதிய திருப்பலிக்காக களமிறக்கப்பட்டார்.

இவரின் பிரதி விம்பமாக கிழக்கு மாகாணத்தில் தற்போது களமிறக்கப்பட்ட ~லேண் ஸ்டேல்| யாரென்பது சொல்லாமல் புரியும்.

தென் வியட்நாமில் மக்களிற்கான ஆயுதப் பயிற்சியும், வடவியட்னாம் போராளிகள் பற்றிய பொய்யான பரப்புரைகளும், இவரால் திட்டமிட்ட வகையில் முன்னெடுக்கப்பட்டன.

சர்வதேசத்தின் நேரடிப் பார்வையில், வட தென் வியட்னாமை இணைந்து தலைவர் ஒருவரை தேர்ந்தெடுக்க, நாளொன்றும் ஐ.நா. சபையில் நிர்ணயிக்கப்பட்டது.

ஒரு பேச்சிற்கு அமெரிக்கா இதை வரவேற்றாலும், அதன் அனுசரணையோடு தென் வியட்னாமை ஆண்ட ஜனாதிபதி ~நிகோடின் டியம்| தேர்தலை நடத்த மறுத்தார். தேர்தல் நடைபெற்றால் வியட்நாம் விடுதலைப் போராட்டத் தலைவரான ~ஹோ சி மின்| வெற்றி பெறுவாரென்பதை அவர் தெளிவாக புரிந்திருந்தார்.

இந்நிலையில் மக்களின் விடுதலைக்கான பாதையை, ~பீனிக்ஸ்| (Phழநniஒ) தாக்குதல் திட்டம் மூலம் அமெரிக்கா வழி சமைத்தது.

இந்த ~பீனிக்ஸ்| நடவடிக்கையில் கிராமங்கள் சுற்றிவளைக்கப்பட்டு 20,000க்கும் மேற்பட்ட மக்கள் படுகொலை செய்யப்பட்டனர். மிக மோசமான சித்திரவதைகள் மேற்கொள்ளப்பட்டன. இவையனைத்தையும் எதிர்கொண்டு, அமெரிக்கப் படைகளைத் துவம்சம் செய்தனர். வியட்கொம் மக்கள் படையினர்.

சுட்டு வீழ்த்தப்பட்ட அமெரிக்க விமானங்களின் பாகங்கள், வியட்னாமியச் சிறுவர்களின் விளையாட்டுப் பொருளாகின. சிறுவர் படையணிப் பயிற்சிகள் இங்கிருந்து (யுனிசெப் பார்வைக்கு) ஆரம்பிக்கப்பட்டிருக்கலாம். மக்கள் எழுச்சியுற்றனர். அமெரிக்கப் படைகளுக்குப் புதை நிலமாக மாறிய வியட்னாம் மண் விடுதலையின் விதை நிலமாகியது.

இதன் விளைவாக 1973 ஆம் ஆண்டு ஜனவரி 27 ஆம் திகதியன்று ஜெனிவா ஒப்பந்தத்தில் கைச்சாத்திட்டது அமெரிக்கா. இவையணையத்தும் வரலாற்றுத்தடத்தில் மக்கள் பெற்ற வெற்றிக்கான பதிவுகள். இது போராடும் மக்களிற்கான வரலாற்று அனுபவப் பகிர்வாகவும் அமைகிறது.

வியட்நாம் மக்களின் வீரம் செறிந்த போராட்டத்திற்கும், தமிழ் மக்களின் தாயக விடுதலைக்கும் இடையேயுள்ள பொருட்பண்புகளைத் தெரிந்து கொள்வது தற்கால நிலைமைக்கு அதிகம் ஒத்து வரலாம்.

வடக்கிலிருந்து எதிரியின் பலமிக்க குவி மையமான தென் வியட்னாமை நோக்கிய போராடும் படையணி நகர்வினை எமது கள யதார்த்தத்தோடு ஒப்பிட்டால் சில வினாக்களுக்கு இலகுவான புரிதல் புலப்படும்.

மூவின மக்களும் பரவலாக வாழும் பிரதேசமே கிழக்குப்பகுதி. சிங்களக் குடியேற்றங்கள், குடிசார் இனப் பரம்பலை சிதைத்து, நிலத்தொடர்ச்சியையும் அபகரித்துள்ளது.

தற்போது இராணுவ முனைப்பு கிழக்கில் பரவலாக்கப்பட்டு, விடுதலைப் புலிகளை அப்பிரதேசத்திலிருந்து வெளியேற்றப் போவதாக அறைகூவலும் விடுக்கப்பட்டுள்ளது.

தற்போது மேலாதிக்கக் குரல்கள் சகல திசைகளிலிருந்தும் ஒலிக்கத் தொடங்கிவிட்டன.

உடனடியாக பேச்சுவார்த்தைக்கு புலிகள் முன்வராவிடில், தமது இராணுவம் கிழக்கைக் கைப்பற்றிய பின்னரே தாம் அது குறித்து சிந்திக்க போவதாக பாதுகாப்பு அமைச்சின் பேச்சாளர் ரம்புக்வெல எச்சரிக்கை விடுக்கின்றார்.

தனது கட்சி எம்.பிக்களை ஜனாதிபதி இழுத்தெடுக்கிறார் என்று மனமுடைந்து, நியாயம் கேட்க டெல்லி செல்கிறார் ரணில் விக்கிரமசிங்க. வாகரை வெற்றியை தனது அரசியல் இலாபத்திற்கு ஜனாதிபதி பயன்படுத்துவதாக ஜே.வி.பி. அழுகிறது.

புலிகளுடன் போர் புரியச் சொன்ன தனக்கும் அவ்வெற்றியில் பங்குண்டென்பதை வெட்கத்தை விட்டு கூறும் அளவிற்கு ஜே.வி.பி.யின் அரசியல் கீழிறங்கி வந்துள்ளது.

வாகரை போன்ற சிறிய ஊரைக் கைப்பற்ற தனது சகல ஆளணி, ஆயுதங்களையும் பிரயோகிக்க வேண்டிய நிர்ப்பந்தம் ஏற்பட்டுள்ளது.

இறுதிப் போரொன்று வெடித்ததால், நிலைமை எப்படியிருக்கும் என்பதை தற்போது நிகழும் சிறு சமர்களிலிருந்தே தெரிந்து கொள்ளலாம். ஆதலால் மறுபடியும் வியட்நாம் படிப்பினைகளை மீட்டிப் பார்த்தால், வடக்கிலிருந்து தெற்கை நோக்கிய வியட்நாம் படையினரின் நகர்வோடு, ஜெயசிக்குறுச் சமரில் வெளிப்படுத்தப்பட்ட போரியல் முறையை ஓரளவு ஒப்பிடலாம்.

முன்பு வன்னியைக் கைப்பற்ற அரசு முன்னெடுத்த ஜெயசிக்குறுச் சமரினை எதிர்கொள்ள, வட கிழக்கிலுள்ள தமது ஆளனி வளங்களைப் புலிகள் முழுமையாக ஈடுபடுத்தினர். அதாவது கிழக்கிலிருந்தும் ஏராளமான புலிகள் இச்சமரில் ஈடுபட்டனர் புலிகள்.

கடலோடு இணைந்த தமது முக்கியமான, பாதுகாப்பான பின்தளத்தினைத் தக்கவைக்க பெருஞ் சமரில் ஈடுபட்டார்கள் புலிகள். இன்றைய நிலையில், அரசின் இராணுவ வழி கிழக்கில் குவிக்கப்படுவதால், இன்னுமொரு ஜெயசிக்குறுச் சமர் வடக்கில் நிகழ்வதற்கான சாத்தியப்பாடுகள் அதிகமுண்டு. கிழக்கில், புலிகளின் தந்திரோபாய பின்னகர்வுகள், கால முயற்சியோடு கூடிய தற்காப்பு சமரினை நிகழ்த்தியவாறே மேற்கொள்ளப்படுவதைப் புரிதல் வேண்டும்.

தற்காப்புச் சமரின் வலிமை அதிகரிப்பதனால், ஊர்களைக் கைப்பற்ற எடுக்கும் நாட்கள் நீள்வதோடு இராணுவத்தின் படைவலுக்கள் ஓரிடத்தில் மிதமிஞ்சிய நிலையில் குவிவதற்கும் வழிவகுக்கிறது.

கிழக்கின் ஏனைய பகுதிகளிலுள்ள இராணுவ முகாம்களின் படை வலு நிலையோடு ஒப்பிடுகையில், கைப்பற்றப்பட்ட சம்பூர், வாகரை, கஞ்சிகுடிச்சாறு பகுதிகளில் தமது இருப்பினை வலுவாக்க கூடுதலான இராணுவத்தை குவிக்க வேண்டிய தேவை அரசிற்கேற்பட்டுள்ளது.

இது போன்று ஏனைய சில பகுதிகளிலும் இவ்வாறான வலிந்த தாக்குதல் மூலம் இடங்களைக் கைப்பற்றினால், இராணுவத்தின் அதிகளவு வளங்கள் கிழக்கிலே முடக்கப்பட்டு விடும்.

இதேவேளை விடுதலைப் புலிகள் தமது முன்னரங்க நிலைகளிலிருந்து, பின்னகர்ந்து, பாதுகாப்பான பின்தளங்களை நோக்கிச் சென்றால், கைப்பற்றிய இடங்களைப் பாதுகாக்க, ஆளணி பற்றாக்குறை ஏற்படும்.

திரும்பவும் வியட்நாம் மேற்கொள்ளப்பட்ட தந்திரோபாய பின்னகர்வுகளையிட்டு எமது பார்வையைச் செலுத்தினால் தெற்கில் தமது துணைக்குழுப்படைகளை அமெரிக்க இராணுவம் ஒருங்கிணைந்த பொழுது, தெற்கிலிருந்து, விடுவிக்கப்பட்ட வடக்கு நோக்கி நகர்ந்த வியட்கொங் போராளிகள் பெரும் போராட்டத்திற்கு தயார்படுத்தப்பட்டனர்.

அதேபோன்று கிழக்கைக் கைப்பற்றியவுடன் வடக்கை நோக்கிய தமது படை நகர்வு அமையுமென்று தனது இராணுவ உத்தியை வெளிப்படுத்திய தளபதி சரத் பொன்சேகாவின் சிந்தனைச் சிதறலின் எதிர்வினையான புதிய உத்தியொன்று இங்கு பிரயோகிக்கப்படலாம்.

கிழக்கோடு ஒப்பிடுகையில் குடாநாட்டிலுள்ள இராணுவ வளக்குவிப்பு அதிகமாகும். தந்திரோபாய பின்னகர்வினை மேற்கொள்ள முடியாத, கடல் சூழ்ந்த இறுக்கமான நிலையில் குடாநாட்டு 40 ஆயிரம் இராணுவத்தினர் அடைக்கப்பட்டுள்ளனர். வடக்கில், விடுதலைப் புலிகளுக்கு ஏதுவான கள நிலைமைகள், கிழக்கில் இராணுவத்திற்குக் கிடையாது.

குடாநாட்டில் பின்தளச் சிதைப்பினை ஏற்படுத்தினாலும், அடைபட்டிருக்கும் பெருமளவு இராணுவத்தை எதிர்கொள்ள புலிகளுக்கு ஆளணி வளம் தேவை.

வடக்கிலிருந்து தெற்கை நோக்கிப்பாய்ந்த வியட்நாம் வீரர்களையும் வன்னியைத் தக்கவைக்க ஜெயசிக்குறுவில் முழுத்தாயகமும் பங்கு கொண்டதையும், ஆழமாக உற்று நோக்கினால், இனிவரும் யுத்தத்தின் புதிய பரிமாணங்கள் புலப்படலாம். சிறு ஊர்களின் இழப்பு சலிப்பைத் தந்தாலும், முழம் ஏற, சாண் சறுக்குவதை புதிய பழமொழியாகக் கொள்வதே சரியானது.

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.