Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

அரசியல் தீர்வைக் குழப்ப வன்முறை குழுக்கள்!

Featured Replies

அரசியல் தீர்வைக் குழப்ப வன்முறை குழுக்கள்!

samanthan-copy-596104cee5766523084148784d34210b7c43893a.jpg

 

வடக்கு, கிழக்கு இணையாவிட்டால் தமிழ் பேசும் மக்களின் நிலங்கள் பறிபோகும் என்கிறார் எதிர்க்கட்சித் தலைவர் இரா.சம்பந்தன்  
ஆர்.பி., எஸ்.கணேசன்

நாட்டில் அர­சியல் தீர்­வுக்­கான நட­ வ­டிக்­கைகள் முன்­னெ­டுக்­கப்ப­டு­கின்ற வேளையில் அதைத் தடுத்து நிறுத்­து­வ­தற்கு பல சக்­திகள் இலங்­கையின் பல பாகங்­க­ளிலும் செயற்­பட்டு வரு­கின்­றன. தற்­போ­தைய அர­சியல் தீர்­வுக்­கான முயற்­சியை தொடர்­வ­தாக இருந்தால் அமைதி, சமா­தானம் என்­பன நீடிக்­க 

­வேண்டும். அமைதி, சமா­தானம் இல் லாத குழப்­ப­க­ர­மான சூழலில் அர­சி யல் தீர்­வுக்­கான நட­வ­டிக்­கை­களை முன்­னெ­டுப்­பது கடினம்.   

ஆகவே சமா­தா­னத்தைக் குலைத்து அமை­தி­யின்­மையை ஏற்­ப­டுத்தி நிரந்த அர­சியல் தீர்­வுக்­கான செயற்­பா­டு­களை குழப்­பு­கின்ற விதத்தில் இவ்­வா­றான வன்முறைக் குழுக்கள் 

ஈடு­பட்­டு­வ­ரு­வ­தாக மக்கள் மத்­தியில் சந்­தேகம் எழுந்­துள்­ளது என்று எதிர்க்­கட்சித் தலை­வரும் தமிழ்த் தேசியக் கூட்­ட­மைப்பின் தலை­வ­ரு­மான இரா.சம்­பந்தன் தெரி­வித்தார். 

  குந்­தகம் விளை­விக்­கின்ற இவ்­வா­றான குழுக்­களை கட்­டுப்­ப­டுத்­து­வ­தற்­கான நட­வ­டிக்­கைகள் முன்­னெ­டுக்­கப்­ப­ட­வேண்டும். . அதே­வேளை, முறை­யான அர­சியல் தீர்வே தேவை. முறை­யா­ன­தொரு அர­சி­யல்­தீர்வை பெற்றுக் கொள்­வ­தி­லேயே எங்­க­ளு­டைய முழுப் பிர­யத்­த­னத்­தையும் முழுக்­க­வ­னத்­தையும் செலுத்­த­வேண்டும் என்றும் அவர் கூறினார். 

 வடக்கு, கிழக்கு இணைப்பு என்­பது மக்­களின் விருப்பம். தற்­போது கிழக்கில் பெரும்­பான்­மை­யி­னரின் குடி­யேற்­றங்கள் அதி­க­மாக இடம்­பெற்­று­வ­ரு­கின்­றன. என்று கூறிய அவர் ஆகவே, வடக்கு கிழக்கு இணைக்­கப்­ப­டா­விட்டால் தமிழ்­மக்கள் அதிகம் வாழ்­கின்ற மாகா­ணங்கள் பெரும்­பான்­மை­யி­ன­ரிடம் பறி­போ­வ­தற்கு வாய்ப்­புள்­ளது. அதைத்தான் நான் கூறினேன். அதை முஸ்லிம் தலை­வர்­களும் முஸ்லிம் மக்­களும் உண­ர­வேண்டும். என்று வீர­கே­சரி வார வெளி­யீட்­டுக்கு எதிர்க்­கட்சி தலைவர் இரா.சம்­பந்தன் வழங்­கிய பிரத்­தி­யேக செவ்­வி­யி­லேயே இவ்­வாறு தெரி­வித்தார்.

அவர் வழங்­கிய முழு­மை­யான செவ்வி வரு­மாறு;

கேள்வி: வடக்கில் அமை­தி­யின்­மையை ஏற்­ப­டுத்­து­கின்ற 'ஆவா' போன்ற ஆயுதக் குழுக்­களின் பின்­ன­ணியில் இரா­ணுவப் புல­னாய்­வா­ளர்கள் உள்­ளார்கள் என்ற சந்­தேகம் தமிழ்­மக்­க­ளி­டையே பர­வ­லாகக் காணப்­ப­டு­கின்­றதே ?

பதில்: ஆம். அவ்­வா­றா­ன­தொரு சந்­தேகம் தற்­போது தமிழ்­மக்கள் மத்­தியில் நில­வு­கின்­றது. வடக்கில் விசே­ட­மாக யாழில் பல்­வேறு பெயர்­களில் இயங்­கு­கின்ற இக்­கு­ழுக்கள் இரா­ணு­வப்­பு­ல­னாய்வுப் பிரி­வி­ன­ருடன் நீண்­ட­காலம் தொடர்பில் இருக்­கின்­றார்கள் என்­ற­தொரு சந்­தே­கமே தற்­போது நில­வு­கின்­றது. உதா­ர­ண­மாக கிளி­நொச்­சியில் பொலி­ஸா­ரைத்­தாக்கும் விதத்தில் கையில் போத்­த­லோடு காணப்­பட்ட நபர், தங்­க­ளுக்குத் தெரிந்­த­வ­கையில் நீண்­ட­கா­ல­மாக இரா­ணு­வப்­பு­ல­னாய்வுப் பிரி­வி­ன­ருடன் செயற்­பட்­டவர் என்று மக்கள் தெரி­விக்­கின்­றனர். இவ்­வா­றான ஆயுதக் குழுக்­களை நாங்கள் ஒரு­போதும் ஆத­ரித்­த­தில்லை. அதை முற்­றாக எதிர்க்­கின்றோம். இவற்றைக் கட்­டுப்­ப­டுத்­து­வ­தற்­கான உபா­யங்கள் மேற்­கொள்­ளப்­பட்டே வரு­கின்­றன. 

கேள்வி: அமை­தி­யின்­மையை ஏற்­ப­டுத்­து­கின்ற இந்த ஆயு­தக்­கும்­பல்கள் தொடர்பில் மக்­க­ளுக்கு எதைக்­கூற விளை­கின்­றீர்கள்?

பதில்: நாட்டில் ஒரு அர­சியல் தீர்­வுக்­கான நட­வ­டிக்­கைகள் முன்­னெ­டுக்­கப்­ப­டு­கின்ற வேளையில் அதைத் தடுத்து நிறுத்­து­வ­தற்கு பல சக்­திகள் இலங்­கையின் பல பாகங்­க­ளிலும் செயற்­பட்டு வரு­கின்­றன. தற்­போ­தைய அர­சியல் தீர்­வுக்­கான முயற்­சியை தொடர்­வ­தாக இருந்தால் அமைதி, சமா­தானம் என்­பன நீடிக்­க­வேண்டும்.. அமைதி, சமா­தானம் இல்­லாத குழப்­ப­க­ர­மான சூழலில் அர­சியல் தீர்­வுக்­கான நட­வ­டிக்­கை­களை முன்­னெ­டுப்­பது கடினம். ஆகவே சமா­தா­னத்தைக் குலைத்து அமை­தி­யின்­மையை ஏற்­ப­டுத்தி நிரந்­தர அர­சியல் தீர்­வுக்­கான செயற்­பா­டு­களைக் குழப்­பு­கின்ற விதத்தில் இவ்­வா­றான குழுக்கள் ஈடு­பட்­டு­வ­ரு­வ­தாக சந்­தேகம் எழுந்­துள்­ளது. அது ஒரு நியா­ய­மான சந்­தே­க­மென்றே நான் நினைக்­கின்றேன். ஆகவே குந்­தகம் விளை­விக்­கின்ற இவ்­வா­றான குழுக்­களை கட்­டுப்­ப­டுத்­து­வ­தற்­கான நட­வ­டிக்­கைகள் முன்­னெ­டுக்­கப்­ப­ட­வேண்டும். 

கேள்வி: வடக்கில் முஸ்­லிம்­களின் மீள்­கு­டி­யேற்­றத்­திற்கு வட­மா­கா­ண­சபை தடை­யாக இருப்­ப­தாக அண்­மையில் கூட்­ட­மைப்பு உறுப்­பி­ன­ரொ­ருவர் தெரி­வித்­தி­ருந்­தாரே ?

பதில்: நான் அண்­மையில் வட­மா­காண மக்­களின் மீள்­கு­டி­ய­மர்வு சம்­பந்­த­மாக இடம்­பெற்ற நிகழ்­வொன்றில் பங்­கு­பற்­றி­யி­ருந்தேன். முஸ்­லிம்கள் வடக்­கி­லி­ருந்து வெளி­யேற்­றப்­பட்டு 26 ஆண்­டுகள் பூர்த்­தி­ய­டைந்த தினத்தில் இடம்­பெற்ற நிகழ்வு அது. அந்­நி­கழ்வில் கலந்­து­கொண்ட பல மாவட்­டங்­களைச் சேர்ந்த முஸ்லிம் சிவில் சமூ­கங்கள், அமைப்­புக்கள் தங்­க­ளது கருத்­துக்­களை வெளி­யிட்­டன. நான் அவர்­க­ளுக்கு ஒரு வழி­மு­றையை கூறினேன். அதா­வது நாங்கள் பிர­த­ம­ரு­டனும் மீள்­கு­டி­யேற்ற அமைச்­ச­ரு­டனும் கலந்­து­ரை­யாடி இரண்டு அலு­வ­ல­கங்­க­ளிலும் பொறுப்­பான உய­ர­தி­கா­ரி­களை நிய­மிப்போம். அவர்கள் மூல­மாக யாழ்ப்­பா­ணத்தில் முஸ்­லிம்­களின் மீள்­கு­டி­யேற்றம் தொடர்பில் எடுக்­க­வேண்­டிய முடி­வு­களை எடுத்து அதை நடை­மு­றைப்­ப­டுத்தி மக்­களின் குறை­களை தீர்த்­து­வைப்போம் என்றேன். அதை அவர்கள் ஏற்றுக் கொண்­டார்கள். 

அந்த அடிப்­ப­டையில் நாங்கள் விரைவில் உரி­ய­வர்­க­ளுடன் பேசி மேற்­கூ­றி­ய­வாறு இரு அலு­வ­ல­கங்­க­ளிலும் ஒவ்­வொரு உய­ர­தி­கா­ரியை நிய­மிப்போம். அங்கு வந்த சிவில் சமூ­கங்­களும், இதற்கு மேற்­கொள்­ள­வேண்­டிய கரு­மங்­க­ளுக்கு தாங்­களும் ஐந்­து­பேரை நிய­மிப்­ப­தாக கூறி­யி­ருந்­தார்கள். எனவே, இவற்­றிற்குத் தேவை­யான நட­வ­டிக்­கை­களை நாங்கள் மேற்­கொள்­ளா­ம­லில்லை என்­பதை அனை­வரும் புரிந்­து­கொள்­ள­வேண்டும். 

கேள்வி: 2016 ஆம் ஆண்­டிற்குள் இனப்­பி­ரச்­சி­னைக்கு தீர்வு எட்­டப்­படும் எனக் கூறி­யி­ருந்­தீர்கள். மேலும், பொது­மக்­களும் சிங்­களத் தலை­வர்­களும் கூட சம்­பந்தன் ஐயாவின் கால­கட்­டத்­தி­லேயே இனப்­பி­ரச்­சி­னைக்கு தீர்வு காணப்­ப­ட­வேண்டும் என்­கின்­றார்கள். ஆகவே இந்த இனப்­பி­ரச்­சி­னைக்­கான தீர்வு தொடர்­பி­லான நட­வ­டிக்­கைகள் எந்­த­ளவில் காணப்­ப­டு­கின்­றன?

பதில்: 2015 ஜன­வரி மாதம் எட்­டாம்­தி­கதி மைத்­தி­ரி­பால சிறி­சேன ஜனா­தி­ப­தி­யாகத் தெரி­வு­செய்­யப்­பட்டார். அது ஒரு ஜன­நா­யக முடிவு. நாட்டில் வாழ்­கின்ற அனைத்து மக்­க­ளாலும் அவர் தெரி­வு­செய்­யப்­பட்டார். அந்த அர­சியல் மாற்­ற­மா­னது நாட்டின் ஜன­நா­யகப் போக்­கின்­மீது பாரி­ய­தொரு மாற்­றத்தை ஏற்­ப­டுத்­தி­யி­ருந்­தது. ஜனா­தி­பதி மைத்­தி­ரி­பால சிறி­சேன முன்னர் கூறி­யி­ருந்­தது போன்று ரணில் விக்­கி­ர­ம­சிங்­கவை பிர­த­ம­ராக நிய­மித்தார். அதைத் தொடர்ந்து பாரா­ளு­மன்­றத்­தேர்­தலும் இடம்­பெற்­றது. நான் அவர்­க­ளுடன் தமிழ்­மக்­களின் பிரச்­சினை தொடர்­பாக பல தடை­வைகள் பேசி­யி­ருக்­கின்றேன். இரு கட்­சி­களும் ஒன்­றி­ணைந்து ஒரு அர­சாங்­கத்தை அமைத்­துள்­ளன. மூன்றில் இரு பெரும்­பான்­மையை பெறும் வல்­லமை தற்­போது காணப்­ப­டு­கி­றது. அந்த அடிப்­ப­டையில் ஒரு அர­சியல் தீர்வு சம்­பந்­த­மாக தீர்­மா­னங்கள் எடுக்­கப்­ப­ட­வேண்டும். அது நடை­மு­றைப்­ப­டுத்­தப்­ப­ட­வேண்டும். இது 2016 ஆம் ஆண்­டுக்குள் முடி­வுக்­கு­கொண்­டு­வ­ரப்­ப­ட­வேண்டும் என்ற கருத்தை நான் உறு­தி­யாக முன்­வைத்­தி­ருந்தேன்.  

பாரா­ளு­மன்றம் ஒரு அர­சியல் சாசன சபை­யாக மாற்­றப்­பட்­டி­ருக்­கின்­றது. அர­சியல் சாச­ன­சபை மூலம் பிர­தமர் ரணில் விக்­கி­ர­ம­சிங்க தலை­மையில் பிர­தான வழி­ந­டத்தல் குழு­வொன்று நிய­மிக்­கப்­பட்­டி­ருக்­கின்­றது. அர­சி­யல்­சா­ச­னத்தில் உள்­ள­டக்­கப்­ப­ட­வேண்­டிய மிக முக்­கி­ய­மான விட­யங்கள் சம்­பந்­த­மாக ஆறு உப­கு­ழுக்கள் நிய­மிக்­கப்­பட்­டி­ருக்­கின்­றன. அவை தற்­போது தங்கள் அறிக்­கை­களை பிர­தான வழி­ந­டத்தல் குழு­வுக்கு சமர்ப்­பித்­தி­ருக்­கின்­றன. பிர­தான வழி­ந­டத்தல் குழு 36 தட­வை­களில் கூடி­யி­ருக்­கின்­றது. பேச­வேண்­டிய நட­வ­டிக்­கைகள் சம்­பந்­த­மாக பேச்­சு­வார்த்­தைகள் இடம்­பெற்­றுள்­ளன. தேர்தல் முறை சம்­பந்­த­மாக, ஜனா­தி­பதி நிர்­வாக முறை சம்­பந்­த­மாக, அர­சியல் அதி­கா­ரப்­பங்­கீடு சம்­பந்­த­மாக பேச்­சு­வார்த்­தைகள் நடை­பெற்­று­வ­ரு­கின்­றன. 

 இப்­பேச்­சு­வார்த்­தைகள் பல விட­யங்கள் தொடர்பில் ஒரு தெளிவை ஏற்­ப­டுத்­தி­வ­ரு­கின்­றன. ஒரு கரு­மத்தில் நாங்கள் வெற்­றி­ய­டை­ய­வேண்­டு­மாயின், கரு­மத்தை முடி­வுக்குக் கொண்­டு­வ­ர­வேண்­டு­மாயின் குறித்த கரு­மத்தின் மீது நாங்கள் நம்­பிக்கை வைக்­க­வேண்டும். அதில் நம்­பிக்கை வைக்­கா­விட்டால் அக்­க­ரு­மத்தில் நாங்கள் வெற்­றி­ய­டைய முடி­யாது. அக்­க­ரு­மத்தை ஒரு முடி­வுக்குக் கொண்­டு­வ­ர­மு­டி­யாது. ஆகவே அந்­த­வ­கையில் தமிழ்த் தேசியக் கூட்­ட­மைப்­பா­கிய நாங்கள் அம்­மு­யற்­சியில் நம்­பிக்கை வைத்து செயற்­பட்­டு­வ­ரு­கின்றோம். 

மேலும், விரைவில் ஆறு உப­கு­ழுக்­களும் சமர்ப்­பித்த அறிக்­கைகள் அர­சியல் சாசன சபைக்கு சமர்ப்­பிக்­கப்­பட்டு பகி­ரங்­கப்­ப­டுத்­தப்­படும். அதன்­பின்னர் தாம­திக்­காமல் பிர­தான வழி­ந­டத்தல் குழு­வினால் அர­சியல் சாச­ன­ச­பைக்கு இடைக்­கால அறிக்­கை­யொன்று சமர்ப்­பிக்­கப்­படும் என்ற கருத்தும் தற்­போது நில­வி­வ­ரு­கின்­றது. ஆகவே கரு­மங்கள் இடம்­பெற்­று­வ­ரு­வதை அவ­தா­னிக்க முடி­கின்­றது. பல விட­யங்கள் சம்­பந்­த­மாக இறு­தி­மு­டி­வுகள் எட்­டப்­ப­ட­வில்லை என சிலர் நினைக்­கலாம். ஆனாலும் பல விட­யங்­க­ளுக்கு தீர்­வு­காண்­ப­தற்­காக பேச்­சு­வார்த்­தைகள் இடம்­பெற்று வரு­கின்­றன. இதுவே தற்­போது காணப்­படும் நிலைமை. இனப்­பி­ரச்­சினைத் தீர்­வுக்­கான நட­வ­டிக்­கைகள் மேற்­கொள்­ளப்­பட்டே வரு­கின்­றன.  

கேள்வி: இந்த நல்­லாட்சி அர­சாங்­கத்தால் மக்­களின் இனப்­பி­ரச்­சி­னைக்கு தீர்வு கிட்டும் என நீங்கள் நம்­பு­கின்­றீர்­களா?

பதில்: ஆம். இந்த அர­சாங்­கத்தின் மூலம் இனப்­பி­ரச்­சி­னைக்­கான தீர்வு கிட்டும் என நான் எதிர்­பார்த்­ததால் தான் இந்த அர­சாங்­கத்தில் பங்­கு­பற்­றி­யி­ருக்­கின்றேன். அவ்­வா­றான நம்­பிக்கை எனக்கு இல்­லா­தி­ருந்தால் நான் அர­சாங்­கத்தின் பக்கம் திரும்­பிக்­கூட பார்த்­தி­ருக்க மாட்டேன். தற்­போது அர­சி­ய­ல­மைப்பு மற்றும் ஏனைய நட­வ­டிக்­கைகள் தொடர்பில் மேற்­கொள்­ளப்­ப­டு­கின்ற விட­யங்­களைப் பார்த்தால் நம்­பிக்­கை­யில்­லா­ம­லி­ருப்­ப­தற்கு காரணம் இருப்­ப­தாக எனக்கு தெரி­ய­வில்லை. இவ்­வி­டயம் சம்­பந்­த­மாக பல தலை­வர்கள் பகி­ரங்­க­மா­கவே தமது நிலைப்­பாட்டை எடுத்­து­ரைத்­தி­ருக்­கின்­றார்கள். ஜனா­தி­பதி மைத்­தி­ரி­பால சிறி­சேன கூட அண்­மையில் கூறும்­போது , நான் உங்­க­ளுக்கு எவ்­வித வாக்­கு­று­தியும் வழங்­கா­ம­லேயே ஜனா­தி­பதித் தேர்­தலில் எனக்கு வாக்­க­ளித்­தி­ருக்­கின்­றீர்கள். எழுத்தில் எழு­தப்­ப­டு­கின்ற அனைத்து ஒப்­பந்­தங்­களும் நிறை­வேற்­றப்­ப­டு­வ­தில்லை. ஆனால் மன­சாட்­சியின் அடிப்­ப­டையில் மேற்­கொள்­ளப்­படும் ஒப்­பந்­தங்கள் கட்­டாயம் நிறை­வேற்­றப்­படும். ஆகவே, அனைத்து மக்­களும் ஏற்­றுக்­கொள்­கின்ற ஒரு அர­சியல் தீர்வை ஏற்­ப­டுத்­துவோம் என்று கூறி­யி­ருக்­கின்றார். 

எமது மக்­க­ளுக்கு தீர்வு வேண்டும். அதி­கா­ரப்­பங்­கீடு வேண்டும். ஆகவே எமது மக்­க­ளுக்கு தீர்­வையும் அதி­கா­ரப்­ப­ர­வ­லாக்­கத்­தையும் ஏற்­ப­டுத்­து­கின்ற விட­யங்­களில் பங்­கு­பற்­றாமல் வெளியில் நின்­று­கொண்டு கோஷ­மிட என்னால் முடி­யாது. நான் அவ்­வாறு செய்­யவும் மாட்டேன்.  

கேள்வி: வடக்கு, கிழக்கு இணைக்­கப்­ப­டா­விட்டால் கிழக்கு மாகாணம் பெரும்­பான்மை மக்­க­ளிடம் பறி­போய்­விடும் என்று அண்­மையில் தெரி­வித்­துள்­ளீர்கள். அதற்­கான கார­ணத்தை சற்று விளக்க முடி­யுமா? 

பதில்: ஆம். அந்த அச்சம் எனக்கு இருக்­கின்­றது. அதன் நிமித்தம் தான் இந்­தி­யாவால் நல்­லெண்ண முயற்சி இடம்­பெற்­ற­போது வடக்­கையும் கிழக்­கையும் இணைத்தோம்.. வடக்கு, கிழக்கு இணைப்பு என்­பது மக்­களின் விருப்பம். தற்­போது கிழக்கில் பெரும்­பான்­மை­யி­னரின் குடி­யேற்­றங்கள் அதி­க­மாக இடம்­பெற்­று­வ­ரு­கின்­றன. ஆகவே, வடக்கு கிழக்கு இணைக்­கப்­ப­டா­விட்டால் தமிழ்­மக்கள் அதிகம் வாழ்­கின்ற மாகா­ணங்கள் பெரும்­பான்­மை­யி­ன­ரிடம் பறி­போ­வ­தற்கு வாய்ப்­புள்­ளது. அதைத்தான் நான் கூறினேன். அதை முஸ்லிம் தலை­வர்­களும் முஸ்லிம் மக்­களும் உண­ர­வேண்டும். இந்­நாட்டில் தமிழ் பேசும் மக்கள் பெரும்­பான்­மை­யாக இருக்­கின்ற , தமிழ் மொழி முக்­கிய மொழி­யாக நில­வு­கின்ற மாகா­ணங்கள் தொடர்ந்தும் அதே அந்­தஸ்தில் இருப்­பது எங்­க­ளுக்கு அவ­சியம். 

எங்­க­ளு­டைய பாரம்­ப­ரியம், பண்­பாடு, கலை, கலா­சாரம், மொழி, தனித்­துவம் போன்­ற­வற்றை பாது­காப்­ப­தற்கு அவை தேவை. அதே­போன்று கிழக்கைப் பாது­காப்­பதும் அங்கு வாழ்­கின்ற தமிழ் பேசும் மக்­க­ளது கடமை. வடக்கும் கிழக்கும் ஒன்­றாக இணைந்­தால்தான் அது நிரந்­த­ர­மாகப் பாது­காக்­கப்­படும். அதன்­மூலம் எந்­த­வொரு மக்­க­ளுக்கும் அநீதி இழைக்­கப்­ப­டு­வதை நாங்கள் விரும்­ப­வில்லை. இது குறித்து முஸ்லிம் மக்­க­ளு­டனும் பேச­வேண்டும்.. முஸ்லிம் தலை­வர்­க­ளு­டனும் பேச­வேண்டும். அவர்­களும் இந்த இணைப்பு எவ்­வாறு இடம்­பெ­ற­வேண்டும் என்­பது தொடர்பில் ஒரு சமத்­து­வத்­துக்கு வர­வேண்டும். 

சிங்­கள மக்­க­ளுக்கு அநீதி இழைக்கும் நோக்கம் எங்­க­ளுக்கு இல்லை. அவர்­க­ளு­டைய பாது­காப்பும் உறு­திப்­ப­டுத்­தப்­ப­ட­வேண்டும். அந்­த­வ­கையில் இந்த வடக்கு கிழக்கு இணைப்பு காணப்­ப­ட­வேண்டும். 

கேள்வி: கிழக்கு மாகா­ணத்தில் அதி­க­ளவு வேலை­வாய்ப்­புக்கள் வழங்­கப்­ப­டு­கின்­றன. ஆனால் வட­மா­கா­ணத்தில் இவை வழங்­கப்­ப­டு­வ­தில்லை என்ற குற்­றச்­சாட்­டுக்கள் நில­வு­கின்­ற­னவே?

பதில்: இதற்கு வட­மா­காண முத­ல­மைச்­சரே பதி­ல­ளிக்­க­வேண்டும். என்னைப் பொறுத்­த­வ­ரையில் அதி­கா­ரப்­பங்­கீட்­டி­ன­டிப்­ப­டையில் அதா­வது 13 ஆவது அர­சியல் சாச­னத்தின் அடிப்­ப­டையில் ஒரு மாகாணம் அல்­லது பிராந்­தியம் தனது அதி­கா­ரங்­களை முழு­மை­யாக முறை­யாக பயன்­ப­டுத்திக் கொள்­வ­தற்­கான நிலைமை தற்­போது இல்லை. அந்­நி­லைமை மாற்­றப்­ப­ட­வேண்டும். அதற்­கா­கவே நாங்கள் அர­சியல் சாசனம் மாற்­றப்­பட்டு அர­சியல் அதி­கா­ரப்­பங்­கீட்­டிற்கு வழி­கி­டைப்­ப­தற்­காக முயற்­சித்­து­வ­ரு­கின்றோம்.  

சட்­ட­வாக்க அதி­காரம் மாத்­தி­ர­மல்ல, நிர்­வாக அதி­காரம் மற்றும் பல்­வேறு விட­யங்கள் சம்­பந்­த­மாக சமூக, பொரு­ளா­தார, கலை, கலா­சார, காணி, சட்டம், ஒழுங்கு சம்­பந்­த­மான அதி­கா­ரங்கள் முறை­யாக மாகா­ணங்­க­ளுக்கு கிடைக்­க­வேண்டும். அப்­போ­துதான் வேலை­வாய்ப்பு மற்றும் வேறு விட­யங்கள் தொடர்பில் அந்த மாகாண நிர்­வாகம் முழு­மை­யாக செயற்­ப­டக்­கூ­டிய நிலை தோன்றும். 

கேள்வி: தமிழ் மக்­க­ளுக்கு விகி­தா­சார முறை அடிப்­ப­டையில் வேலை­வாய்ப்பு வழங்­கு­வ­தற்கு எதிர்க்­கட்­சித்­த­லைவர் என்ற முறையில் நீங்கள் அர­சாங்­கத்­திடம் வலி­யு­றுத்­தலாம் தானே?

பதில்: நான் அது குறித்த அதிக தட­வைகள் வலி­யு­றுத்­திக்­கொண்­டி­ருக்­கின்றேன். தமிழ்­மக்­க­ளுக்கு அநீ­திகள் இழைக்­கப்­ப­டு­கின்­றன என்­பதை ஏற்றுக் கொள்­கின்றேன். இதைக்­கு­றித்து கூட்­ட­மைப்பு உறுப்­பி­னர்கள் பாரா­ளு­மன்­றத்தில் பலமுறை பேசியுள்ளார்கள். அத்துடன் இதை தடுத்து நிறத்துவதற்கான முயற்சிகளிலும் ஈடுபட்டே வருகின்றோம். 

ஆனாலும், இவ்வேளையில் முறையானதொரு அரசியல்தீர்வே எங்களது முழு நோக்கமாக இருக்கவேண்டும். எமது முழுக்கவனமும் இதிலேயே இருக்கவேண்டும். ஏனென்றால் தற்போது எம்மக்கள் முகங்கொடுக்கின்ற பிரச்சினைகளுக்கு நிரந்தரமான தீர்வு கிட்டவேண்டுமென்றால் அதற்கு முறையான அரசியல் தீர்வே தேவை. 

அதை விடுத்து தற்காலிகமான தீர்வைத் தேடினால் ஒருவேளை தற்போதுள்ள பிரச்சினைகள் சில தீர்க்கப்படலாம். ஆனால் மீண்டும் அப்பிரச்சினைகள் தோன்றும். ஆகவேதான் முறையானதொரு அரசியல்தீர்வை பெற்றுக் கொள்வதிலேயே எங்களுடைய முழுப் பிரயத்தனத்தையும் முழுக்கவனத்தையும் செலுத்தவேண்டியுள்ளது. 

இந்நாட்டிற்கு புதிய ஒரு அரசியல்சாசனம் தேவை. ஒற்றுமையாக ஒருமித்த நாட்டுக்குள் வாழ்கின்ற சகல மக்களும் சமத்துவமாக வாழக்கூடிய வகையில் அரசியல் சாசனம் உருவாக்கப்படவேண்டும். இந்த அரசியல் சாசனத்தினூடாக அரசியல் அதிகாரப்பங்கீடு போதுமானளவுக்கு ஏற்படுத்தப்படவேண்டும். அந்த அதிகாரங்களை நிறைவேற்றுவதற்குத் தேவையான வளங்களும் அந்த மாகாணங்களிடம் அல்லது பிராந்தியங்களிடம் காணப்படவேண்டும். தமிழ் பேசும் மக்களின் ஒட்டுமொத்த தனித்துவத்தை பாதுகாக்கின்ற வகையில் அதிகாரங்கள் பகிர்ந்தளிக்கப்படவேண்டும். அத்துடன் நாங்கள் பெரும்பான்மை இனத்தவர்களுக்கு எதிரானவர்கள் அல்ல. அவர்களை நாங்கள் நேசிக்கின்றோம். அவர்களை மதிக்கின்றோம். நாங்கள் அவர்களுடன் இந்நாட்டில் சமத்துவமாக வாழ விரும்புகின்றோம். அதற்கு மேற்கொள்ளவேண்டிய சகல முயற்சிகளையும் எடுப்போம். எங்களது கோரிக்கை ஒரு நியாயமான கோரிக்கை. அது நிறைவேற்றப்படவேண்டும். அது நிறைவேற்றப்படும் என்று இறைவன் மேல் முழு நம்பிக்கையையும் வைத்து செயற்படுகின்றோம். மிகுதியை இறைவன் பார்த்துக் கொள்வார். 

http://content.epaper.virakesari.lk/newspaper/Weekly/weekly-main/2016-11-06#page-1

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.