Skip to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

யாழ்.மாணவர்கள் படுகொலை - சர்வதேச ரீதியாக சிக்கலில் பொலிஸார்!

Featured Replies

கடந்த மாதம் 20 ஆம் திகதி யாழ்.பல்கலைக்கழக தமிழ் மாணவர்கள் இருவர் பொலிஸாரினால் சுட்டுக் கொலை செய்யப்பட்டனர்.யாழ்.பல்கலைக்கழக தமிழ் மாணவர்கள் வாகன விபத்திலேயே உயிரிழந்தார்கள் என பொலிஸார் அறிக்கை வெளியிட்டிருந்தனர்.ஆனால்,பிரேத பரிசோதனை அறிக்கைகளின் படி குறித்த மாணவர்கள் இருவரும் சுட்டே கொலை செய்யப்பட்டனர் என தெரியவந்துள்ளது.எனவே இந்த சம்பவத்தை சில அதிகாரிகள் மூடி மறைக்கவே திட்டமிட்டிருந்தனர்.

எவ்வாறாயினும் இந்த கொலை சம்பவத்தின் விளைவு, ஐந்து பொலிஸ் அதிகாரிகளின் சேவை இடைநீக்கப்பட்டு தற்போது தடுப்பு காவலில் வைக்கப்பட்டிருப்பது மாத்திரமே என மனித உரிமைகள் கண்காணிப்பகம் தெரிவித்துள்ளது.

மேலும், ஜெனீவாவில் நடைபெறவுள்ள ஐக்கிய நாடுகள் சபையின் சித்திரவதைகளுக்கு எதிரான குழுவின் 59 ஆவது கூட்டத் தொடரில் இலங்கை தொடர்பிலான அமர்வு இந்த மாதம் 15 ஆம் மற்றம் 16 ஆம் திகதிகளில் இடம்பெறவுள்ளது.

பொலிஸாரின் சித்திரவதைகள் தொடர்புப்பட்டிருக்கின்றமையால் இந்த விடயம் கடினமானதாகவே அமையும் என மனித உரிமைகள் கண்காணிப்பகம் குறிப்பிட்டுள்ளது.

இலங்கையில் தற்போது ஆட்சி மாற்றம் இடம்பெற்றுள்ள போதிலும் பொலிஸார் அரச படையினரால் தொடர்ந்தும் சித்திரவதைகள் இடம்பெறுவதாகவும், இந்த சித்திரவதைகளுக்கு எதிராக ஐ.நா குழுவிற்கு அறிக்கை சமர்ப்பிக்கப்பட்டுள்ள நிலையில் இந்த கூட்டத்தொடர் மிக முக்கியமாதாக அமையும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதேவேளை, 2014 ஆம் ஆண்டு ஜூன் மாதம் கொழும்பு-கண்டி பிரதான வீதியில் வைத்து ndika Jayesinha என்பவர் பொலிஸாரால் சுட்டுக் கொலை செய்யப்பட்டார், 2014 ஆம் ஆண்டு மே மாதம் பொலிஸாரின் சித்திரவதை காரணமாக Sandun Malinga உயிரிழந்தார், 2015 ஆம் ஆண்டு மார்ச் மாதம் மோட்டார் வாகனத்தில் பயணித்த இளைஞன் ஒருவரை முறையான எந்த காரணங்கள் இன்றியும் பொலிஸ் தடுப்புகாவலில் வைத்து பல சித்திரவதைகள் மேற்கொண்டனர்.

அத்துடன் இரகசியமான முறையில் நாட்டில் பல சித்திரவதைகள் இடம் பெற்றுவருவதால் இலங்கையின் மனித உரிமைகள் ஆணைக்குழு அறிக்கை ஒன்றை சமர்ப்பித்துள்ளது.

எனவே இந்த அமர்வின் போது யாழ்.பல்கலைக்கழக தமிழ் மாணவர்கள் இருவர் பொலிஸாரினால் சுட்டுக் கொலை செய்யப்பட்டமை தொடர்பிலும் ஆராயப்பட உள்ளதாக மனித உரிமைகள் கண்காணிப்பகம் குறிப்பிட்டுள்ளது.

http://www.tamilwin.com/statements/01/123820?ref=home

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.