Skip to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

26 வருடங்களுக்கு பின்னர் இராணுவத்தினர் விடுவித்த தையிட்டி ஆலய சொத்துக்கள் திருட்டு

Featured Replies

தையிட்டி - கணையவில் பிள்ளையார் ஆலயத்தில் 26 வருடங்களாக உயர் பாதுகாப்பு வலயத்தக்குள் இருந்த சாமி விக்கிரகங்கள், காணி விடுவிக்கப்பட்ட சில நாட்களில் காணாமல் போயுள்ளன.

மேலும், சுவாமி வாகனங்கள், மணிகள், பொறுமதியான பொழிகற்கள் என்பவையும் ஆலயத்தில் இருந்து திருடப்பட்டுள்ளன.

விடுவிக்கப்பட்ட இந்தப் பகுதியில் இரவு வேளைகளில் யாரும் அனுமதிக்கப்படுவதில்லை. அங்கு இராணுவத்தினர் பாதுகாப்புக் கடமையில் ஈடுபட்டுள்ளனர். இந்நிலையில் இப்பொருட்கள் காணமல் போனமைக்கான முழுப் பொறுப்பையும் இராணுவத்தினரே ஏற்க வேண்டும் என ஆலயத்தைச் சார்ந்தவர்களும் அந்தப் பகுதி பொதுமக்களும் கூறுகின்றனர்.

1990ஆம் ஆண்டு வலி.வடக்கில் இருந்து மக்கள் வெளியேற்றப்பட்ட பின்னர் கடந்த 1998ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் ஒரேயொரு நாள் தையிட்டி - கணையவில் பிள்ளையார் ஆலயத்தை பார்வையிடுவதற்கு ஆலய நிர்வாகத்தினர் மற்றும் அவ்வூர் மக்களுக்கு அனுமதியளிக்கப்பட்டது.

அப்போது ஆலயத்தில் சாமி விக்கிரகங்கள், வாகனங்கள், பெறுமதி வாய்ந்த கற்கள் உள்ளிட்ட சொத்துக்கள் அங்கே இருந்ததாக அவ்வூர் மக்கள் தெரிவித்தனர்.

ஆனால் அண்மையில் தையிட்டிப் பகுதி விடுவிக்கப்பட்டபோது அங்கு சென்ற மக்கள் ஆலயத்தில் இருந்த பல சாமி விக்கிரகங்கள் உள்ளிட்ட பெரும்பாலான பொருட்கள் காணாமல் போயிருந்ததைக் கண்டு அதிர்ச்சியடைந்தனர்.

எனினும் சில சாமி விக்கிரகங்கள் ஆலயத்தில் ஏஞ்சியிருந்ததைக் கண்டு அவர்கள் சற்று ஆறுதல் அடைந்தனர். அத்துடன் தலை இல்லாத சூரன், சுவாமி வெளிவீதி வலம்வரும் காரம்பசு வாகனமும் அங்கு இருந்ததாகவும் அவர்கள் கூறினர். ஆனால் மீண்டும் சென்று பார்த்தபோது அவையும் முற்று முழுதாக அங்கிருந்து திருடிச் செல்லப்பட்டுள்ளதாக அவர்கள் கவலையுடன் தெரிவித்தனர்.

இந்த ஆலய கருவறை இந்தியாவில் இருந்து தருவிக்கப்பட்ட தனியே பொழி கற்களால் முற்று முழுதாக நிர்மாணிக்கப்பட்டிருந்தது. நிர்மாணப் பணிகள் முடிய எஞ்சிய பொழிகற்களும் ஆலயத்திற்குள்ளேயே வைக்கப்பட்டிருந்தன அந்தக் கற்கள் கூட அங்கிருந்து ஏற்றிச் செல்லப்பட்டுவிட்டன எனவும் அவர்கள் குறிப்பிட்டனர்.

எமது பகுதி இராணுவத்தின் கட்டுப்பாட்டில் இருந்து விடுவிக்கப்பட்டு சில நாட்களே ஆகும். நிலையில் இரவோடு இரவாக எஞ்சியிருந்த விக்கிரகங்கள் உள்ளிட்ட ஆலய சொத்துக்களும் களவாடப்பட்டள்ளன.

படைத் தரப்பினரின் கண்காணிப்பில் குறித்த பகுதி இன்னமும் உள்ளது. இரவில் யாரும் அங்கு அனுமதிக்கப்படுவதில்லை. இந்த நிலையில் ஆயலத்தில் எஞ்சியிருந்தவையும் காணாமல்

போயுள்ளன. இதற்கான முழுப் பொறுப்பையும் இராணுவத்தினரே ஏற்க வேண்டும் எனவும் தையிட்டி மக்கள் தெரிவிக்கின்றனர்.

http://www.tamilwin.com/community/01/123941?ref=home

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.