Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

அரசியல் சதுரங்கக் காய் நகர்த்தலில் சிக்கி திணறும் சிறீலங்கன் எயார்லைன்ஸ்

Featured Replies

அரசியல் சதுரங்கக் காய் நகர்த்தலில் சிக்கி திணறும் சிறீலங்கன் எயார்லைன்ஸ்
 
 
அரசியல் சதுரங்கக் காய் நகர்த்தலில் சிக்கி திணறும் சிறீலங்கன் எயார்லைன்ஸ்

முன்னொரு காலத்திலே என்றுதான் எழுதுவதை ஆரம்பிக்க வேண்டியுள்ளது. அப்படியொரு காலத்தில் தனிக்காட்டு ராஜாவாக இலங்கையின் தேசிய விமானச் சேவையான எயர்லங்கா இலாபம் மேல் இலாபம் ஈட்டி தன் நாட்டிற்கு புகழ் சேர்த்துக் கொண்டிருந்தது. ஆனால் யார் கண்பட்டதோ தெரியவில்லை.கடந்த காலங்களில் கோடிக்கணக்கான  பணத்தை முழுங்கிய எயர்லங்கா, இப்பொழுது அரசுக்கே ஒரு சுமையாக நிற்கும் நிலைக்கு தள்ளப்பட்டுள்ளது. 2008இல் ஐக்கிய அரபுக் குடியரசின் எமிரேட் விமான நிறுவனம், விழுந்தவரை கைபிடித்து தூக்கலாமென நினைத்து முயற்சித்தது. ஆனால் அதல பாதாளத்தில் விழுந்துவிட்ட அதனைத் தூக்கும் திறன் எமிரேட்டிடம் இருக்கவில்லையோ அல்லது தூக்கி நிறுத்தியும் பய னில்லை என்ற நினைத்ததோ தெரியவில்லை.எயர்லங்காவின் கதி அதோகதியாகி விட்டது.

இப்பொழுதெல்லாம் இலங்கையில் பலராலும் சூடாக விவாதிக்கப்படும் விவகாரமாக சிறீலங்கா விமான நிறுவனம் மாறிவிட்டிருப்பதுதான் விந்தை. ஊழல் விவகாரங்களுக்கு எதிராகச் செயற்படுபவரும், மனித உரிமைகளுக்கான சட்னடத்தரணியுமான வெல்லியமுன என்பவரை இந்த நிறுவன ஊழல் பற்றி ஓர் ஆய்வறிக்கை சமர்ப்பிக்கும்படி பிரதமர் ரணில் விக்ரமசிங்க கோரியிருந்தார்.

1478792287_unnamed.jpg

இந்த அறிக்கை ஏற்கனவே கறைபட்டிருந்த எயர்லங்கா நிறுவனத்தை மேல் எழும்ப விடாத வாறு மேலும் கறைபட வைத்ததா என்பதுதான் இங்கே எழுப்பப்படும் மில்லியன் டொலர் வினாவாகும்.

இந்த நிறுவனத்தின் பெருவீழ்ச்சியில் சம்பந்தப்பட்டவர்களை நீதிதேவதையின் முன்னிறுத்தி தண்டிக்க, இந்த அரசாங்கம் எடுத்த நடவடிக்கைகள் அதிகமில்லை. அப்படி எடுத்திருந்தாலும் அந்த நடவடிக்கைகள் தண்டிப்பதாயும் இல்லை.

எயர்லங்காவின் தற்போதைய தலைவர் இந்த அறிக்கை பற்றிக் கூறுகையில் நல்ல தக வல்கள் அடங்கிய அறிக்கை இது இன்று பாராட்டு வழங்கினாலும், அறிக்கையில் காண ப்படுவதுபோல பணமோசடிகள் ஏதும் இடம்பெற்றதாகத் தெரியவில்லையே என்றும் கரு த்துத் தெரிவிக்க அவர் தவறவில்லை. இவர் கருத்தைப் பார்க்கும்போது, அறிக்கை காதில் விழுந்த அரசல் புரசலான செய்திகளின் அடிப்படையில் எழுதப்பட்டதா அல்லது இன்றைய எயர்லங்கா அதிபர் ஒரு பக்கமாக பந்தை அடிக்கிறாரா என்ற குழப்பமே எஞ்சுகின்றது.

மகிந்தவின் ஆட்சிக்காலத்திற்கு சற்றே பின்னோக்கி போவாமா?

ஒரு கட்டத்தில் ஐரோப்பிய நாடுகளுக்கு செல்லும் விமானங்கள் இலாபத்தை ஈட்டித் தரவில்லை என்று அன்றைய அரசு நினைத்தது. எரிபொருள் செலவு உட்பட பெரும் பணம் விழுங்கப்படும் வெள்ளை யானைகளைச் சேவையில் ஈடுபடுத்த முடியாது என்று கருதப்பட்டது. மொத்தச் செலவுத் தொகையில் 50 வீதமான தொகை எரிபொருளுக்கே செலவானது என்பதை குறிப்பிட்டாக வேண்டும். (தற்பொழுது எரிபொருள் விலை கணிசமான வீழ்ச்சியைக் கண்டிருப்பதால் மொத்தச் செலவில் எரிபொருள் செலவு 25 வீதமேமுதலில் சேவைகளை நிறுத்த நினைத்த அன்றைய அரசு, பின்பு மனதை மாற்றிக் கொண்டு, தம்மிடமுள்ள விமானங்களின் தொகையை அதிகரிப்பதில் கவனம் செலுத்தத் தொடங்கியது. தரமான பொருட்களுடன் ஐரோப்பிய வான்வீதிகளில் வலம்வரவேண்டும் என்ற கொள்கை யோடு செயற்படத் தொடங்கியது எயர்லங்கா.

ஏன் இந்த மாற்றம் நிகழந்தது?

பண நட்டமோ இலாபமோ பரவாயில்லை எப்பொழுதுமே, எதுவும் ஆடம்பரமாக, பிரமா தமாக இருக்க வேண்டும் என்பதை நேசித்தார் அன்றைய ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஸ. இது முதலாவது காரணம். அன்றைய பிரதமரோ அவரது குழுக்களோ அவரது ஆட்சிக்காலத்தில் எயர்லங்காவில்தான் பறந்து திரிந்திருக்கின்றார்கள். தன் நிர்வாகத்தின் வெற்றியைத் தம்பட்டமடிக்க, புதிய நவீன விமானங்கள் அவருக்கு அப்பொழுது தேவைப்பட்டன.

இரண்டாவது காரணம் அன்றைய அரசின் கொள்கை வகுப்பாளர்கள். அரசுக்கு சொந்தமான நட்டத்தில் இயங்கும் ஒரு நிறுவனத்தை இழுத்து மூடும் தைரியம் அவர்களிடம் இல்லா திருந்திருக்கலாம்.. வரியிறுப்பாளர்களின் பணத்தை மேலும் வாரியிறைத்து இந்தப் பிரச்சினையைத் தீர்க்கலாம் என்று அவர்கள் நினைத்தார்கள்.

1478792311_unnamed%20%282%29.jpg

மூன்றாவது காரணம் ஒரு நியாயமான உல்லாசப் பயணிகளை அதிகரிக்க முயற்சிக்கும் காரணமாக இருந்திருக்கலாம். 2009இல் யுத்தம் முடிவுற்று நாடு சமாதானத்திற்கு திரும்பிய காலத்தில் உல்லாசப் பயணத்துறை வளர்ச்சிகண்டு, உல்லாசப் பயணிகள் பெருவாரியாக வரத்தொடங்கியிருந்த காலம் அது. ஆங்காங்கே புதிய ஹோட்டல்கள் முளைவிட்டு, உல்லாசப் பயணிகளுக்கு இடமளிக்க வங்கிகளிடமிருந்து கடன்பட்டு தங்களைப் பலப்படுத்த முயன்ற காலம் அது.

இந்தக் காலகட்டத்தில் நாட்டின் தேசிய விமானநிலையம் என்ற முறையில் தாம் ஒரு முக்கிய பணியை ஆற்ற வேண்டிய தருணமாக எயர்லங்கா நினைத்திருக்கலாம். அப்படி நினைத்து தங்கள் சேவையை விரிவுபடுத்தியிருக்கலாம். தாங்கள் சந்தித்த பெரும் நட்டத் தொகையை ,இங்கு வரும் அதிகரித்த பயணிகள் தொகையால் ஈடுகட்டலாம் என்று அப்பொழுது கருதப்பட்டது. இந்த விளக்கத்தைத்தான் அன்றைய அரசு தன் புதிய விமானக் கொள்வனவுகளுக்கு கொடுத்து வந்திருந்தது.

புதிதாக ஆட்சி பீடத்தில் அமர்ந்த அரசு இதை வேறு முறையில் அணுக நினைத்து செயற்ப டவும் தொடங்கியிருக்கின்றது.அரசின் வேண்டுகோளின்படி ஏற்கனவே  அன்றைய அர சினால் பிறப்பித்திருந்த கொள்வனவுக் கட்டளைகளை ரத்து செய்யும் பணியில் முனைந்து ள்ளது.  4 350 ரக எயர்பஸ் விமானங்களின் கொள்வனவு  ரத்துச் செய்யப்பட்டு விட்டது. விமானங்களைக் குத்தகைக்கு விடும் உலகின் மிகப் பெரிய இராட்சத நிறுவனமொன்றுக்கு தண்டமாக 170 மில்லியன் டொலர் கொடுப்பனவும் கொடுபட இருக்கின்றது .

அன்றைய அரசு 4 350 ரக எயர்பஸ் விமானங்களுக்காக ஏற்கனவே சமர்ப்பித்திருந்த கொள்வனவுக் கட்டளை விடயத்தில் என்ன செய்வது என்று எயர்லங்கா நிறுவனம் இன்னும் முடிவெடுக்கவில்லை. இந்த விமானங்களை 2022இலிருந்துதான் விநியோகிப்போம் என்று ஒப்பந்தம் செய்யப்பட்டிருந்தது. முதற் தடவையாக 2015இல் கட்டார் விமான நிறுவனத்தால் பாவனைக்கு விடப்பட்ட நவீன விமானமான எயர்பஸ்350 அகலமானதும், நீண்ட தூரம் பறக்கக் கூடியதும் இரட்டை என்ஜின்கள் கொண்டதுமாகும்.

இந்த நான்கு விமானக் கொள்வனவையும் ரத்து செய்து விட்டு, ஒரு பிராந்திய விமான நிறுவனமாக்கி, பணம் புரள்வதைச் சீராக்குவதே எமது குறிக்கோள் என்கிறது நிர்வாகம். இந்திய மகாசமுத்திரத்திலும், மத்திய கிழக்கு நாடுகளிலும் தனது பிரசன்னத்தை விரிவுபடுத்துவதே தமது திட்டமென புதிய நிர்வாகம் அறிவித்துள்ளது. இந்தியாவை மட்டும் வைத்துக் கொண்டு  வாரத்தில் 106 பயணங்கள் இடம்பெற்று வருகின்றன. அதே சமயம் இலண்டன் பயணங்களைத் தவிர்ந்த ஏனைய ஐரோப்பிய நாடுகளுக்கான பயணங்களை இந்த மாதத்திலிருந்து கத்தரித்துள்ளது எயர்லங்கா.

இதோடு நிர்வாகம் பேசாமல் இருந்து விடவில்லை. பணம் புரட்ட வேண்டாமா? ஏற்கனவே பழைய அரசினால் கொள்வனவுக் கட்டளை பிறப்பித்திருந்த 7 புதிய விமானங்களில் ஒன்றை(புத்தம் புதிய 330-200 ரகம்பாகிஸ்தான் விமான நிலையத்திற்கு குத்தகைக்கு வழங்கியுள்ளது. அடுத்த நடவடிக்கையாக மேலும் மூன்று விமானங்களை குத்தகைக்கு விடவுள்ளது.

தற்போது எயர்லங்கா விமான நிறுவனத்திடம் சொந்தமாக எத்தனை விமானங்கள் இருக்கி ன்றன?

மொத்தமாக விமான நிறுவனத்திடம் இருப்பது 13 விமானங்கள். இதில் ஏழு புதிய விமானங்கள். மீதி ஆறும் வயதாளிகள்.14தொடக்கம் 17 ஆண்டுகள் வரையில் சேவையில் ஈடுபடுத்தப்பட்ட விமானங்கள் இவை. ஏற்கனவே ஆறு 320நியோஸ் ரக விமானங்களுக்காக பிறப்பித்த கொள்வனவுக் கட்டளையை தற்போதைய நிர்வாகம் ரத்துச் செய்ய விரும்ப வில்லை. இது சற்றே ஒடுக்கமான உடலைக் கொண்ட விமானம்.

இந்த ஆறு விமானங்களும்  இரண்டு நிறுவனங்களிடமிருந்து குத்தகைக்கு எடுக்கப்ப டவுள்ளன. 2017இன் முதற் காற்பகுதி ஆண்டில் முதல் விமானம் விநியோகிக்கப்படவுள்ளது. ஐந்து விமானங்கள் அடுத்த ஆண்டில் விநியோகிக்கப்பட்டாலும், 2018இல் ஆறாவது விமானம் எயர்லங்காவை வந்தடையவுள்ளது. இந்த ஆறு விமானங்களும் பிராந்திய பாவ னைக்கே உபயோகிக்கப்படவுள்ளன.

சிறீலங்கன் என்று பெயர் மாறியுள்ள இலங்கை விமான நிறுவனத்திடம் இந்த வருட முடிவில் 14 320 ரக விமானங்களும், 10 330 ரக விமானங்களும் கைவசம் இருக்கும்..

இலங்கை அரசுக்குள்ள  முழு வெளிநாட்டுக் கையிருப்புத் தொகையில் பாதியளவு தொகை யை அதாவது 3.2 பில்லியன் டொலர் தொகை எயர்லங்காவை தற்போது அழுத்திக் கொண்டிருக்கும் பாரிய கடன்சுமை. இந்த நிலையில் மகிந்த தொடக்கி வைத்த மிகின் எயர் நிறுவனத்தை அரசு எயர்லங்கனுடன் இணைத்துள்ளது. (மிகின்எயர் 2007இல் ஆரம்பிக்கப்பட்டது). .இந்த நிறுவனம் சந்தித்த நட்டத் தொகை 17 பிலிலியன் ரூபாய்கள்.

இரண்டு நோயாளிப் பிள்ளைகளின் கூட்டில் பிறக்கப் போகும் குழந்தையும் நோயாளிக் குழந்தையாகவே இருக்கப் போகின்றது என்கிறார் உயர் மட்டத்திலான பொருளாதார வல்லு னர் ஒருவர்.

1478792373_unnamed%20%283%29.jpg

தற்போதைய அரசின் நோக்கம் அனாவசியமான செலவுகளைக் கத்தரித்து கடனை முழுக்க முழுக்க ஒழித்து, அதனுடைய மறுபிறப்பிற்கு ஒரு அயல்நாட்டுக் கூட்டாளியைத் தேடிப் பிடித்து, வான்வீதியில் எயர்லங்கனைப் பறக்க விடவேண்டும் என்பதுதான்இதை ஒரு சாரார் ஏற்றுக் கொண்டாலும் இன்னொரு பகுதியினர் ஏற்கத் தயாராக இல்லை.

ஓர் அரசியல் பகடைக்காயாக நகர்த்தப்பட்டு வரும் இந்த நிறுவனம் ஆட்சிக்கு ஆட்சி நகர்த்த ப்பட்டு, அரசியல்மயமாக்கப்பட்டு, கறைப்படுத்தப்பட்டு, ஆட்சியாளர் விருப்பு வெறுப்புக்கேற்ப உருமாற்றப்பட்டு, பயணிகளின் அதிருப்தியைச் சந்திப்பதே யதார்த்தம் என்கிறார்கள் மறு சாரார்.

பெரிய அரசியல் தலைகளை உயர்பதவிக்கு நியமிப்பதை விடுத்து முன்னைய அரசு தன் குடும்பத் தேவைகளை நிறைவேற்றும் ஒரு போக்குவரத்து சாதனமாகவே எயாலங்கா நிறுவனத்தை வைத்திருந்தது.இது போதாதென்று தன் பெயரில் புதியதொரு விமான நிலை யத்தை பலவந்தமாகத் தொடக்கியும் வைத்தது. இந்தப் புள்ளிவிபரம் உங்களில் பலருக்கு அதிர்ச்சியைத் தரலாம். 2014இல் மத்தள ராஜபக்ச விமான நிலையத்திலிருந்து புறப்பட்ட விமானங்களில் பயணித்தவர்களின் சராசரித் தொகை ஏழு.

80களின் பிற்பகுதியிலும், 90களிலும் பிரேமதாச ஆட்சியில் பெரிய அரசியல் தலைகளுக்காக பலதரப்பட்ட களியாட்ட நிகழ்வுகளுக்காக விமானம் புறப்படும் நேரங்கள் மாற்றியமைக்க ப்பட்டுள்ளனவாம்.

நீலமோ பச்சையோ ஆட்சிக்கு வந்தால் இலங்கை  அரச நிறுவனங்களின் தலைகள் உருள்வதும், உருட்டப்ப்படுவதுமான நிகழ்வுகள் தவிர்க்க முடியாதவை. இதற்கு இந்த எயர்லங்கன் மாத்திரம் எங்ஙனம்  விதிவிலக்காகி விட முடியும்?

நன்றி: டெய்லிமிரர்

- -ராஜேஸ்மணாளன்-

http://www.onlineuthayan.com/article/256

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.