Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

இலங்கை, மேற்கிந்தியத் தீவுகள், ஸிம்பாப்வே மோதும் மும்முனை சர்வதேச ஒருநாள் தொடர் இன்று ஆரம்பம்

Featured Replies

இலங்கை, மேற்கிந்தியத் தீவுகள், ஸிம்பாப்வே மோதும் மும்முனை சர்வதேச ஒருநாள் தொடர் இன்று ஆரம்பம்
 

இலங்கை, மேற்­கிந்­தியத் தீவுகள், ஸிம்­பாப்வே ஆகிய அணிகள் மோதும் மும்­முனை சர்­வ­தேச ஒருநாள் கிரிக்கெட் தொடர் ஹரா­ரேயில் இன்று நடை­பெ­ற­வுள்ள இலங்கை – ஸிம்­பாப்வே அணி­க­ளுக்கு இடை­யி­லான போட்­டி­யுடன் ஆரம்­ப­மா­கின்­றது.

 

சர்­வ­தேச ஒருநாள் தர­நிலை வரி­சையில் 6 ஆம் இடத்­தி­லி­ருக்கும் இலங்கை, 9 ஆம் இடத்­தி­லி­ருக்கும் மேற்­கிந்­தியத் தீவுகள், 11 ஆம் இடத்­தி­லி­ருக்கும் ஸிம்­பாப்வே ஆகிய நாடு­க­ளுக்கு இந்தத் தொடர் மிகவும் முக்­கியம் வாய்ந்ததாக அமை­ய­வுள்­ளது.

 

2060524.jpg

 

 

இந்தத் தொடரில் தோல்­வி­களைத் தழு­வினால் தர­நிலை வரி­சையில் இலங்கை தாக்­கத்தை எதிர்­கொள்ளும். எனவே தர­நிலை வரி­சையில் பின்­னி­லையில் இருக்கும் மேற்­கிந்­தியத் தீவு­க­ளையும் ஸிம்­பாப்­வே­யையும் வெற்­றி­கொண்டே ஆக­வேண்­டிய நிலையில் இலங்கை இருக்­கின்­றது.

 

இலங்கை அணியின் வழ­மை­யான தலைவர் ஏஞ்­சலோ மெத்யூஸ், உதவித் தலைவர் தினேஷ் சந்­திமால் ஆகிய இரு­வரும் உபா­தை­க­ளி­லி­ருந்து பூரண குண­ம­டை­யா­ததன் கார­ண­மாக உபுல் தரங்­க­விடம் தலைமைப் பொறுப்பு வழங்­கப்­பட்­டுள்­ளது.

 

ஒரு வருட இடை­வெ­ளியின் பின்னர் டெஸ்ட் அணியில் மீள் பிர­வேசம் செய்த உபுல் தரங்க, ஸிம்­பாப்­வேயில் திற­மையை வெளிப்­ப­டுத்­தி­யதன் மூலம் அவ­ரது மன உறுதி அதி­க­ரித்­துள்­ளது.

 

இது மும்­முனைத் தொடரில் அவர் மேலும் திற­மையை வெளிப்­ப­டுத்த உந்­து­சக்­தி­யாக அமை­ய­வுள்­ளது.

 

 

உபுல் தரங்­க­வுக்கு அடுத்­த­தாக அணியில் இடம்­பெறும் சிரேஷ்ட வீரர் நுவன் குல­சே­கர ஆவார். பத்து மாத இடை­வெ­ளியின் பின்னர் இவர் மீண்டும் குழாமில் இணைத்­துக்­கொள்­ளப்­பட்­டுள்ளார். அவ­ரது சக­ல­துறை ஆட்டம்  அணிக்கு வலு சேர்க்கும் என நம்­பப்­ப­டு­கின்­றது.

 

இவர்­க­ளுடன் குசல் ஜனித் பெரேரா, சுரங்க லக்மால் ஆகிய இரு­வரே குழாமில் இடம்­பெறும் மற்­றைய அனு­ப­வ­சா­லி­க­ளாவர்.

 

எனினும் இளம் வீரர்­க­ளான தனஞ்­செய டி சில்வா, குசல் மெண்டிஸ், நிரோஷன் டிக்­வெல்ல, ஷெஹான் ஜய­சூ­ரிய, சச்­சித்ர பத்­தி­ரன, ஜெவ்றி வெண்­டர்சே, தசுன் ஷானக்க, 30 வய­தான அசேல குண­ரட்ன ஆகியோர் தங்­க­ளுக்கு கிடைத்­துள்ள சந்­தர்ப்­பத்தை முறை­யாகப் பயன்­ப­டுத்தி அணியில் நிலை­யான இடங்­களைப் பிடிக்க முடி­யற்­சிப்பர் என நம்­பப்­ப­டு­கின்­றது.

 

மேற்­கிந்­தியத் தீவு­க­ளுக்கு எதி­ராக 54 சர்­வ­தேச ஒருநாள் போட்­டி­களில் விளை­யா­டி­யுள்ள இலங்கை 24 போட்­டி­களில் வெற்­றி ­பெற்­றுள்­ள­துடன் 27 இல் தோல்­வியைத் தழு­வி­யுள்­ளது. ஸிம்­பாப்­வேக்கு எதி­ராக 47 போட்­டி­களில் விளை­யாடி 39 வெற்­றி­களை ஈட்­டி­யுள்ள இலங்கை ஏழில் தோல்வியடைந்­துள்­ளது.

 

இலங்கை குழாம்: உபுல் தரங்க (அணித் தலைவர்), தனஞ்­செய டி சில்வா, குசல் மெண்டிஸ், ஷெஹான் ஜயசூரிய, குசல் ஜனித் பெரேரா, நிரோஷன் டிக்வெல்ல, அசேல குணரட்ன, சச்சித் பத்திரன, நுவன் குலசேகர, சுரங்க லக்மால், ஜெவ்றி வெண்டர்சே, நுவன் பிரதீப், லக் ஷான் சந்தகன், தசுன் ஷானக்க, லஹிரு குமார.

- See more at: http://www.metronews.lk/article.php?category=sports&news=20605#sthash.SDVlRFtv.dpuf
  • தொடங்கியவர்

இலங்கை மற்றும் சிம்பாபேவுக்கு எதிரான முதலாவது ஒருநாள் போட்டியில் முதலில் துடுப்பெடுத்து ஆடிய சிம்பாப்வே அணி 154 ஓட்டங்கள் எடுத்து உள்ளது

  • தொடங்கியவர்

154 ஓட்டங்களுக்குள் சுருண்டது சிம்பாப்வே

 

 

இலங்கை மற்றும் சிம்பாப்வே அணிகளுக்கிடையிலான முதலாவது ஒருநாள் போட்டியில் சிம்பாப்வே அணி 154 ஓட்டங்களுக்கு சகல விக்கட்டுகளையும் இழந்துள்ளது.

255000.jpg

சிம்பாப்வே அணி சார்பில் பீட்டர் மூர் 47 ஒட்டங்களையும், அணித்தலைவர் கிரீமர் 31 ஓட்டங்களையும் பெற்றுக்கொண்டனர்.

இலங்கைய அணி சார்பில் அசேல குணரத்ன 3 விக்கட்டுகளை கைப்பற்றியதோடு குலசேகர, லக்மால் மற்றும் பிரதீப் ஆகியோர் தலா 2 விக்கட்டுகளை கைப்பற்றினர்.

http://www.virakesari.lk/article/13475

  • தொடங்கியவர்
மும்முனை ஒருநாள் தொடரின் முதல் போட்டியில் இலங்கைக்கு 8 விக்கெட் வெற்றி
2016-11-14 19:16:47

ஸிம்பாப்வேயில் நடைபெறும் மும்முனை சர்வதேச ஒருநாள் கிரிக்கெட் தொடரை உப்புல் தரங்கவின் தலைமையிலான இலங்கை அணி வெற்றியுடன் ஆரம்பித்துள்ளது.

 

20621lanka%202.jpg

 

 

ஸிம்பாப்வேக்கு எதிராக ஹராரேயில் இன்று நடைபெற்ற மும்முனைத் தொடரின் முதலாவது சர்வதேச ஒருநாள் கிரிக்கெட் போட்டியில் 8 விக்கெட்களால் இலங்கை மிக இலகுவாக வெற்றிபெற்றது.

 

ஸிம்பாப்வேயினால் நிர்ணயிக்கப்பட்ட 155 ஓட்டங்கள் என்ற சுமாரான வெற்றி இலக்கை நோக்கிப் பதிலுக்கு துடுப்பெடுத்தாடிய இலங்கை 24.3 ஒவர்களில் வெற்றி இலக்கை அடைந்து மிகவும் அவசியமான போனஸ் புள்ளியையும் பெற்றுக்கொண்டது.

- See more at: http://www.metronews.lk/article.php?category=sports&news=20621#sthash.D197BPpw.dpuf
  • தொடங்கியவர்

உபுல் தலைமையில் வெற்றியினை சுவைத்தது இலங்கை

Published by Gnanaprabu on 2016-11-14 20:59:12

 

இலங்கை,சிம்பாப்வே,மேற்கிந்திய தீவுகள் அணிகள் மோதும் முத்தரப்பு ஒருநாள் தொடரின் முதல் போட்டி இன்று  ஹாராரேவில் இலங்கை- சிம்பாப்வே அணிகள் இடையில் நடந்த ஒருநாள் போட்டியில் இலங்கை அணி வெற்றிக்கொண்டது.

255008.jpg

நாணய சுழற்சியில் வென்ற இலங்கை அணியின் தலைவர் உபுல் தரங்கா களத்தடுப்பை தெரிவு செய்தார். இதனையடுத்து சிம்பாப்வே அணி முதலில் துடுப்பெடுத்தாட களமிறங்கியது.

255000.jpg

ஆரம்பம் முதலே இலங்கை அணியின்பந்து வீச்சாளர்கள் பந்துவீச்சில் ஆதிக்கம் செலுத்தியமையால் அவர்களின் பந்துகளை சமாளிக்க முடியாமல்  சிம்பாப்வே அணியினர் தடுமாறி வந்தனர்.

255003.jpg

இந்நிலையில் அந்த அணி 41.3 ஓவரில் 154 ஓட்டங்களுக்கு அனைத்து விக்கெட்டையும் பறிக்கொடுத்தது.

255013.jpg

அந்த அணி சார்பில் பீட்டர் மோர் அதிகபட்சமாக 47 ஓட்டங்களும், அணித்தலைவர் கிரிமர் 31 ஓட்டங்களும் எடுத்தனர்.

255004.jpg

இலங்கை அணி தரப்பில்,குணரத்னே 3 விக்கெட்டுகளும், குலசேகரா, சுரங்க லக்மல், நுவன் பிரதீப் ஆகியோர் தலா 2 விக்கெட்டுக்கள் வீதம் தமக்கிடையே பகிர்ந்துக் கொண்டனர்.

255007.jpg

155 ஓட்டங்கள் என்ற எளிய வெற்றி இலக்கை நோக்கி துடுப்பெடுத்தாட களமிறங்கிய இலங்கை அணியின் சார்பாக தொடக்க வீரர் குஷால் பெரேரா (21) களத்தில் நிலைக்கவில்லை. அடுத்து வந்த நிரோஷன் டிவெல்ல (41) நிதானமாக ஆடி ஓட்டங்கள் குவித்தார்.

255017.jpg

மற்றொரு தொடக்க வீரர் களமிறங்கிய தனஞ்சய டி சில்வா அதிரடியாக விளையாடி அரைசதம் கடந்தார்.

255014.jpg

இவரின் அபாரமான துடுப்பெடுத்தாட்டத்தில் இலங்கை அணி 24.3 ஓவரிலே 2 விக்கெட்டுகளை மாத்திரம் இழந்து 155 ஓட்டங்கள் எடுத்து வெற்றி பெற்றது.

255023.3.png

கடைசி வரை ஆட்டமிழக்காமல் இருந்த தனஞ்சய டி சில்வா  78 ஓட்டங்களும், குஷால் மெண்டிஸ் 12 ஓட்டங்கள் எடுத்தனர்.

255015.jpg

இந்த தொடரில் நாளை மறுநாள் இலங்கை, மேற்கிந்திய தீவுகள் அணியை எதிர் கொள்ளவுள்ளது.

255020.jpg

255019.jpg

http://www.virakesari.lk/article/13482

  • தொடங்கியவர்

இலங்கை - மே.இ. தீவுகள் மோதும் முக்கோணத் தொடரின் இரண்டாவது போட்டி இன்று

0-b2ed834752ea26767575eedb7fc236efe818614d.jpg

 

இலங்கை – சிம்­பாப்வே – மேற்­கிந்­தியத் தீவுகள் ஆகிய மூன்று நாடுகள் மோதும் முக்­கோணத் தொடரின் இரண்­டா­வது போட்டியில் இலங்கை மற்றும் மேற்­கிந்­தியத் தீவுகள் அணிகள் இன்று பலப்­ப­ரீட்சை நடத்­து­கின்­றன.

சிம்­பாப்­வேயில் நடை­பெற்­று­வரும் இம்­மூன்று நாடு­க­ளுக்­கி­டை­யி­லான முக்­கோணத் தொடரின் முதல் போட்டி கடந்த திங்­கட்­கி­ழமை நடை­பெற்­றது. இந்தப் போட்­டியில் இலங்கை மற்றும் சிம்­பாப்வே அணிகள் மோதி­யி­ருந்­தன. இதில் இலங்கை அணி 8 விக்­கெட்­டுக்­களால் அபார வெற்­றி­யீட்­டி­யது.

இலங்கை அணியின் தலைவர் அஞ்­சலோ மெத்­தியூஸ் மற்றும் உப தலைவர் தினேஷ் சந்­திமால் ஆகியோர் காயம் கார­ண­மாக இத் தொடரிலிருந்து வில­கி­யுள்ள நிலையில் ஒருநாள் கிரிக்கெட் அணிக்கு உபுல் தரங்க தலைமை தாங்­கு­கிறார்.

தான் தலை­மை­யேற்று விளை­யா­டிய முதல் போட்­டி­யி­லேயே இலங்கை அணியை வெற்­றிப்­பா­தைக்கு அவர் இட்டுச் சென்றார்.

இந்­நி­லையில் மேற்­கிந்­தியத் தீவுகள் அணி­யு­ட­னான இரண்­டா­வது போட்டி இன்று சிம்­பாப்வே ஹராரே விளை­யாட்­ட­ரங்களில் நடை­பெ­ற ­வுள்­ளது.

இலங்கை அணியைப் பொறுத்­த­வ­ரையில் பந்­து­வீச்சு மற்றும் துடுப்­பாட்டம் என முழு­மை­யான அணி­யாகக் காணப்­ப­டு­கி­றது. அண்மைக் காலங்­களில் சிறப்­பான போட்­டியைக் கொடுத்து வரும் இலங்கை அணிக்கு இன்­றைய போட்டி நிச்­ச­ய­மாக சற்று சவா­லா­கத்தான் இருக்கும்.

ஆனாலும் மேற்­கிந்­தியத் தீவுகள் அணியில் அதி­ர­டிக்கு பெயர்­போ­ன­வர்­க­ளான கெய்ல் மற்றும் பிராவோ ஆகியோர் இடம்பெறவில்லை. அதனால் மேற்கிந்தியத் தீவுகள் அணி பின்னடைவை சந்திக்குமா என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்.

இன்றைய போட்டி இலங்கை நேரப்படி பிற்பகல் 1.30 மணிக்கு ஆரம்பமாகும்.

http://content.epaper.virakesari.lk/newspaper/Daily/main/2016-11-16#page-12

  • தொடங்கியவர்

இலங்கை - மேற்கிந்திய தீவுகள் மோதும் முதலாவது போட்டி ஆரம்பம் ; களத்தடுப்பில் இலங்கை

thumb_large_asdad.jpg

இலங்கை மற்றும் மேற்கிந்திய தீவுகளுக்கிடையிலான ஒருநாள் போட்டி ஆரம்பமாகியுள்ளது.

இந்த போட்டியில் நாணய சுழற்சியில் வெற்றிபெற்ற இலங்கை அணி முதலில் களத்தடுப்பில் ஈடுபட தீர்மானித்துள்ளது.

இதனடிப்படையில் முதலில் துடுப்பெடுத்தாடும் மேற்கிந்திய தீவுகள் அணி 3.1 ஓவர் நிறைவில் ஒரு விக்கட்டினை இழந்து 7 ஓட்டங்களை பெற்றுள்ளது.

http://www.virakesari.lk/article/13538

Edited by நவீனன்

  • தொடங்கியவர்

228 ஓட்டங்கள் பெற்றால் இலங்கை வெற்றி

 

 

இலங்கை - மேற்கிந்திய தீவுகள் அணிகளுக்கிடையில்  நடைபெற்றுக்கொண்டிருக்கும் ஒருநாள் போட்டியில் மேற்கிந்திய தீவுகள் அணி 49.2 பந்து ஓவர்களில் சகல விக்கட்டுகளையும் இழந்து 227 ஓட்டங்களை மாத்திரம் பெற்றுக்கொண்டுள்ளது.

மேற்கிந்திய தீவுகள் அணி சார்பில் ஜோனதன் கார்டர் 54 ஓட்டங்களையும், சாய் ஹோப் 47 ஓட்டங்களையும் பெற்றதோடு வேகமாக துடுப்பெடுத்தாடிய ரோவ்மன் பவெல் 29 பந்துகளில் 44 ஓட்டங்களை பெற்றுக்கொண்டார்.

பந்துவீச்சில் நுவான் குலசேகர, சுராங்க லக்மால் மற்றும் நுவான் பிரதீப் ஆகியோர் தலா 2 விக்கட்டுகளை கைப்பற்றினர்.

http://www.virakesari.lk/article/13553

  • தொடங்கியவர்
இரண்டாவது மும்முனை சர்வதேச ஒருநாள் போட்டியில் மேற்கிந்தியத் தீவுகள் 62 ஓட்டங்களால் வெற்றி
2016-11-16 20:42:56

ஹராரேயில் இன்று நடைபெற்ற இலங்கைக்கு எதிரான மும்முனை சர்வதேச ஒருநாள் கிரிக்கெட் போட்டியில் மேற்கிந்தியத் தீவுகள் 62 ஓட்டங்களால் வெற்றிபெற்றது.

 

20695lanka-west-indies.jpg

 


மேற்கிந்தியத் தீவுகளினால் நிர்ணயிக்கப்பட்ட 228 ஓட்டங்கள் என்ற வெற்றி இலக்கை நோக்கிப் பதிலுக்கு துடுப்பெடுத்தாடிய இலங்கை  முதல் 6 விக்கெட்களை 79 ஓட்டங்களுக்கு இழந்து பெரும் தடுமாற்றத்தை எதிர்கொண்டது.


 சச்சித் பத்திரணவின் அதிரடியும் ஷெஹான் ஜயசூரியவின் பொறுமைகலந்த துடுப்பாட்டமும் 7ஆவது விக்கட்டில் 60 ஓட்டங்களைப் பகிர்ந்து கொடுத்தன. ஆனால் இருவரும் ஆட்டமிழக்க இலங்கையின் எதிர்பார்ப்பு அற்றுப்போனது.


இப் போட்டியில் முதலில் துடுப்பெடுத்தாட அழைக்கப்பட்ட மேற்கிந்தியத் தீவுகள் மத்தியவரிசை துடுப்பாட்ட வீரர்களின் பங்களிப்புடன் 227  ஓட்டங்களைப் பெற்றது.


எண்ணிக்கை சுருக்கம்:


மேற்கிந்தியத் தீவுகள் :

49.2 ஓவர்களில் சகல விக்கெட்களையும் இழந்து 227 (ஜொநதன் கார்ட்டர் 54, ஷாய் ஹோப் 47, ரோவ்மன் பவல் 44, நுவன் குலசேகர 37 க்கு 2 விக்., சுரங்க லக்மால் 45 க்கு 2 விக்., நுவன் ப்ரதீப் 55 க்கு 2 விக்.)


இலங்கை :

43.1 ஓவர்களில்  சகலரும் ஆட்டமிழந்து 165 (சச்சித் பத்திரண 45, ஷெஹான் ஜயசூரிய 31, நிரோஷன் டிக்வெல்ல 28, அசேல குணரட்ன 18. ஷெனன் கேப்ரியல் 31 க்கு 3 விக், அஷ்லி நேர்ஸ் 46 க்கு 3 விக். ஜேசன் ஹோல்டர் 16  க்கு 2 விக்.)

- See more at: http://www.metronews.lk/article.php?category=sports&news=20695#sthash.NsWNqpj6.dpuf
  • கருத்துக்கள உறவுகள்

:D:

  • தொடங்கியவர்

முக்கோணத் தொடரில் இலங்கை அணிக்கு தோல்வி

 
received_10211040330833741-696x391.jpeg

முக்கோணத் தொடரில் இலங்கை அணிக்கு தோல்வி.

சிம்பாவேயில் இடம்பெற்றுவரும் முக்கோணத்தி தொடரின் 2 வது ஒருநாள் போட்டியில் இலங்கை அணி தோல்வியை தழுவியுள்ளது.

முதல் போட்டியில் 8 விக்கெட்டுக்கள் வித்தியாசத்தில் வெற்றிபெற்ற இலங்கை அணி, இன்றைய போட்டியில் மேற்கிந்திய தீவுகள் அணியை சந்தித்தது.

நாணய சுழற்சியில் வெற்றிபெற்ற இலங்கை அணியின் தலைவர் தரங்க, முதலில் களத்தடுப்பு முடிவை மேற்கொண்டார்.

அதன்படி முதலில் ஆடிய மேற்கிந்திய தீவுகள் அணி 49.2 ஓவர்கள் நிறைவில் சகல விக்கெட்டுக்களையும் இழந்து 227 ஓட்டங்கள் பெற்றது. 

பதிலுக்கு 228 எனும் இலக்குடன் ஆடிய இலங்கை அணியின் வீரர்கள் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்த தவறிய நிலையில் 62 ஓட்டங்கள் வித்தியாசத்தில் தோல்வியை தழுவியது.

received_10211040330473732 received_10211040331113748 received_10211040336193875

fb_img_1479316539016

 

 

 

http://vilaiyattu_com.apache5.cloudsector.net/en/%e0%ae%95%e0%ae%bf%e0%ae%b0%e0%ae%bf%e0%ae%95%e0%af%8d%e0%ae%95%e0%af%86%e0%ae%9f%e0%af%8d-%e0%ae%9a%e0%af%86%e0%ae%af%e0%af%8d%e0%ae%a4%e0%ae%bf%e0%ae%95%e0%ae%b3%e0%af%8d/%e0%ae%ae%e0%af%81%e0%ae%95%e0%af%8d%e0%ae%95%e0%af%8b%e0%ae%a3%e0%ae%a4%e0%af%8d-%e0%ae%a4%e0%af%8a%e0%ae%9f%e0%ae%b0%e0%ae%bf%e0%ae%b2%e0%af%8d-%e0%ae%87%e0%ae%b2%e0%ae%99%e0%af%8d%e0%ae%95%e0%af%88/

  • தொடங்கியவர்

முக்கோணத் தொடரில் சிம்பாவே, மேற்கிந்திய தீவுகள் போட்டி சமநிலையில் நிறைவு.

November 19, 2016
received_10211066678492416-696x532.jpeg

முக்கோணத் தொடரில் சிம்பாவே, மேற்கிந்திய தீவுகள் போட்டி சமநிலையில் நிறைவு.

சிம்பாவேயில் இடம்பெற்றுவரும் முக்கோணத்தி தொடரின் 3 வது ஒருநாள் போட்டி இன்று பரபரப்பான போட்டியாக நிறைவுக்கு வந்துள்ளது.

இலங்கை அணியுடனான போட்டியில் 62 ஓட்டங்கள் வித்தியாசத்தில் வெற்றிபெற்ற மேற்கிந்திய தீவுகள் அணியால் இன்று சிம்பாவே அணியை வெற்றிகொள்ள முடியாதுபோனது.

நாணய சுழற்சியில் வெற்றிபெற்ற சிம்பாவே அணியின் தலைவர் முதலில் துடுப்பாடும் முடிவை மேற்கொண்டார்.

அதன்படி முதலில் ஆடிய சிம்பாவே அணி 50 ஓவர்கள் நிறைவில் சகல விக்கெட்டுக்களையும் இழந்து 257 ஓட்டங்கள் பெற்றது. 

பதிலுக்கு 258 எனும் இலக்குடன் ஆடிய மேற்கிந்திய தீவுகள் அணிக்கு சதமடித்த சாய் கோப்,கிரேக் பிரத்வைட் ஆகியோர் மிக நல்ல இணைப்பாட்டத்தைக் கொடுத்தாலும் இறுதியில் போட்டி சமநிலையில் நிறைவுக்கு வந்தது.

44.4 ஓவரில் 220 ஓட்டங்கள் பெற்றவேளையில்தான் மேற்கிந்தியத்தீவுகள் அணி 3 வது விக்கெட்டிடை இழந்தாலும் இறுதி ஓவரில் 4 ஓட்டங்கள் தேவை என்ற நிலையில், இறுதி பந்து உள்ளடங்கலாக அந்த ஓவரில் 3 விக்கெட்டுக்களை இழந்து போட்டியை கோட்டை விட்டது மேற்கிந்தியத்தீவுகள்..

 இறுதிவரை பரபரப்பை ஏற்படுத்திய இந்தப் போட்டி சமநிலையில் நிறைவுக்கு வர, ஆட்ட நாயகன் விருது சாய் கோப்புக்கு கிடைத்தது.

received_10211066585450090  received_10211066587130132

 

http://vilaiyattu_com.apache5.cloudsector.net/en/%e0%ae%95%e0%ae%bf%e0%ae%b0%e0%ae%bf%e0%ae%95%e0%af%8d%e0%ae%95%e0%af%86%e0%ae%9f%e0%af%8d-%e0%ae%9a%e0%af%86%e0%ae%af%e0%af%8d%e0%ae%a4%e0%ae%bf%e0%ae%95%e0%ae%b3%e0%af%8d/%e0%ae%ae%e0%af%81%e0%ae%95%e0%af%8d%e0%ae%95%e0%af%8b%e0%ae%a3%e0%ae%a4%e0%af%8d-%e0%ae%a4%e0%af%8a%e0%ae%9f%e0%ae%b0%e0%ae%bf%e0%ae%b2%e0%af%8d-%e0%ae%9a%e0%ae%bf%e0%ae%ae%e0%af%8d%e0%ae%aa%e0%ae%be/

 

3rd Match: Zimbabwe v West Indies :Unbelievable last Over 10 require of 7 balls : HD

  • தொடங்கியவர்
இலங்கை - ஸிம்பாப்வே போட்டி கைவிடப்பட்டது
2016-11-21 19:59:29

ஸிம்பாப்வேயில் நடைபெறும் மும்முனை சர்வதேச ஒருநாள் கிரிக்கெட் தொடரில் இன்று ஆரம்பமான ஸிம்பாப்வே அணிக்கும் இலங்கை அணிக்கும் இடையிலான போட்டி 14 ஓவர்களுடன் கைவிடப்பட்டு இரண்டு அணிகளுக்கும் தலா 2 புள்ளிகள் வழங்கப்பட்டன.

 

20787zimbawbe-600.jpg

கிறெய்க் ஏர்வின்


 


கடும் மழையினால் மைதானத்தின் சில பகுதிகளில் சேறு நிறைந்திருந்ததால் நேற்றைய போட்டியை 14ஆவது ஓவருடன் கைவிடுவதென மத்தியஸ்தர்கள் தீர்மானித்தனர்.


இப் போட்டியில் முதலில் துடுப்பெடுத்தாடத் தீர்மானித்த ஸிம்பாப்வே அணி 13.3 ஓவர்களில் 2 விக்கெட்களை இழந்து 55 ஓட்டங்களைப் பெற்றிருந்தபோது  ஆட்டம் தடைப்பட்டது.

 

சுமார் 4 மணித்தியாலங்களின் பின்னர் மைதானத்தைப் பரிசீலித்த மத்தியஸ்தர்கள் ஆட்டத்தை கைவிடுவதென தீர்மானித்தனர்.

கிறெய்க் ஏர்வின் 23 ஓட்டங்களுடனும் சிக்கந்தர் ராஸா 4 ஓட்டங்களுடனும் ஆட்டமிழக்காதிருந்தனர்.
பிறயன் சாரி (11), சாமு சிபாபா (8) ஆகிய இருவரே ஆட்டமிழந்தவர்களாவர்.

 

இந்த மும்முனை சர்வதேச ஒருநாள் கிரிக்கெட் தொடரில் மேற்கிந்தியத் தீவுகளும் இலங்கையும் தலா 7 புள்ளிகளையும் ஸிம்பாப்வேக்கு 4 புள்ளிகளையும் பெற்றுள்ளன.

 

- See more at: http://www.metronews.lk/article.php?category=sports&news=20787#sthash.TX8PkQMD.dpuf
  • தொடங்கியவர்
வாழ்வா, சாவா என்ற போராட்டத்தில் இலங்கை, மே. தீவுகள்
2016-11-23 09:30:34

ஸிம்­பாப்­வேயில் நடை­பெற்­று­வரும் மும்­முனை சர்­வ­தேச ஒருநாள் கிரிக்கெட் தொடரில் வாழ்வா சாவா என்ற போராட்­டத்தை இலங்கை அணியும் மேற்­கிந்­தியத் தீவுகள் அணியும் எதிர்­நோக்­கி­யுள்­ளன.

 

20837Untitled-2.jpgஇந்த மும்­முனை சர்­வ­தேச ஒருநாள் கிரிக்கெட் தொடரின் ஐந்­தா­வது போட்­டியில் மேற்­கிந்­தியத் தீவுகள் அணியை இல­ங்கை அணி இன்று சந்­திக்­க­வுள்­ளது.

 

இரண்டு அணி­களும் தலா 7 புள்­ளி­களைப் பெற்­றுள்ள போதிலும் நிகர ஓட்ட வேக அடிப்­ப­டையில் மேற்­கிந்­தியத் தீவுகள் முத­லி­டத்தில் இருக்­கின்­றது. ஸிம்­பாப்வே 4 புள்­ளி­க­ளுடன் கடைசி இடத்தில் உள்­ளது.

 

இன்­றைய போட்­டியில் வெற்­றி ­பெறும் அணி இறுதிப் போட்­டியில் விளை­யா­டு­வது உறுதி செய்­யப்­படும். தோல்வி அடையும் அணி வெள்­ளி­யன்று நடை­பெ­ற­வுள்ள ஸிம்­பாப்­வே­யு­ட­னான போட்­டி­யிலும் தோல்வி அடைந்தால் அதன் இறுதிப் போட்டி வாய்ப்பு அற்­றுப்­போகும்.

 

எனவே, இன்­றைய போட்­டியில் இலங்­கையும் மேற்­கிந்­தியத் தீவு­களும் தத்­த­மது வெற்­றிக்­காக கடு­மை­யாக முயற்­சிக்கும் என்­பதால் இப்­போட்டி இரண்டு அணி­க­ளுக்கும் பர­ப­ரப்பைத் தோற்­று­விப்­ப­தாக அமையும் என்­பதில் சந்­தே­க­மில்லை.

 

இலங்­கை­யு­ட­னான முத­லா­வது சுற்றுப் போட்­டியில் மேற்­கிந்­தியத் தீவுகள் 62 ஓட்­டங்­களால் வெற்­றி­ பெற்­றி­ருந்­தது.

 

அப் போட்­டியில் இலங்­கையின் முன்­வ­ரிசை வீரர்கள் கவ­னக் ­கு­றை­வி­னாலும் தவ­றான அடி தெரி­வு­க­ளாலும் குறைந்த ஓட்­டங்­க­ளுக்கு ஆட்­ட­மி­ழந்­தனர். அதுவே அணியின் தோல்­விக்கு முக்­கிய கார­ண­மாக அமைந்­தது.

 

இன்­றைய போட்­டியில் முன்­வ­ரிசை வீரர்கள் நிதா­னத்­து­டனும் பொறுப்­பு­ணர்­வு­டனும் அதே­வேளை வேக­மா­கவும் துடுப்­பெ­டுத்­தாடி ஓட்­டங்­களைக் குவித்து கணி­ச­மான மொத்த எண்­ணிக்­கையைப் பெறு­வது அவ­சி­ய­மாகும். 

 

ஒரு­வேளை இன்று நடை­பெறும் போட்டி சம­நி­லையில் முடி­வ­டைந்தால் அல்­லது சீரற்ற கால­நி­லையால் கைவி­டப்­பட்டால் மேற்­கிந்­தியத் தீவு­களும் இலங்­கையும் தலா 9 புள்­ளி­க­ளுடன் இறுதிப் போட்டியில் விளையாடுவது உறுதி செய்யப்பட்டுவிடும்.

 

அணிகள் நிலை

 

20837_VRA-20161122-M01-MED.jpg

 

குறிப்பு : வி: விளையாடியது, வெ: வெற்றி, தோ: தோல்வி, ச: சமநிலை, மு: முடிவு இல்லை, நிஓ: நிகர ஓட்ட வேகம், பு: புள்ளிகள்.

- See more at: http://www.metronews.lk/article.php?category=sports&news=20837#sthash.D2oXNxig.dpuf
  • தொடங்கியவர்

94 ஓட்டத்தில் இரு இலங்கை அணி வீரர்களுக்கு கிடைத்த அதிர்ச்சி

 

 

இலங்கை மற்றும் மேற்கிந்திய தீவுகளுக்கிடையிலான ஒருநாள் போட்டியில் இலங்கை அணியின் இரண்டு வீரர்கள் 6 ஓட்டங்களால் சதத்தை தவறவிட்டனர்.

255421.3.jpg

குசால் மெண்டிஸ்  73 பந்துகளில் 94 ஓட்டங்களை பெற்றிருந்த வேளை விக்கட் காப்பாளரிடம் பிடிகொடுத்து ஆட்டமிழந்ததுடன், நிரோஷன் டிக்வெல்ல 106 பந்துகளுக்கு 94 ஓட்டங்களை பெற்றிருந்த போது எல்பிடபுள்யூ முறையில் ஆட்டமிழந்து வெளியேறினர்.

இலங்கை அணி இதுவரையில் 45 ஓவர்களுக்கு 285 ஓட்டங்களை பெற்றுள்ளதுடன் 5 விக்கட்டுகளை இழந்துள்ளது.

http://www.virakesari.lk/article/13782

  • தொடங்கியவர்
Sri Lanka 330/7 (50.0 ov)
West Indies 329/9 (50.0 ov)
Sri Lanka won by 1 run
  • கருத்துக்கள உறவுகள்

கடைசி வரை விறுவிறுப்பு

  • தொடங்கியவர்

“த்ரில்” போட்டியில் இலங்கை வெற்றி ; தொடரும் ஹோல்டரின் துரதிஷ்டம் 

 

 

இலங்கை மேற்கிந்திய தீவுகளுக்கிடையிலான ஒருநாள் போட்டியில் இலங்கை அணி ஒரு ஓட்டத்தால் வெற்றிபெற்றது.

asd1.jpg

இறுதிவரை பரபரப்பாக இடம்பெற்ற இந்த போட்டியில் இறுதி பந்துக்கு 3 ஓட்டங்களை பெற வேண்டிய நிலையில், மேற்கிந்திய தீவுகள் அணித்தலைவர் ஜேசன் ஹோல்டரால் ஒரு ஓட்டத்தை மாத்திரமே பெற முடிந்தது.

இந்த போட்டியில் முதலில் துடுப்பெடுத்தாடிய இலங்கை அணி 50 ஓவர்கள் நிறைவில் 7 விக்கட்டுகளை இழந்து 330 ஓட்டங்களை பெற்றுக்கொண்டது.

இலங்கை அணி சார்பில் நிரோஷன் டிக்வெல்ல மற்றும் குசால் மென்டிஸ் ஆகியோர் தலா 94 ஓட்டங்களை பெற்றுக்கொண்டதுடன், தனஞ்சய டி சில்வா  58 ஓட்டங்களை பெற்றுக்கொண்டார்.

பந்துவீச்சில் மேற்கிந்திய தீவுகள் அணி சார்பில் ஜேசன் ஹோல்டர் 3 விக்கட்டுகளை கைப்பற்றினர்.

331 என்ற வெற்றியிலக்கினை நோக்கி துடுப்பெடுத்தாடிய மேற்கிந்திய தீவுகள் அணி ஆரம்பத்தில் சிறப்பாக துடுப்பெடுத்தாடியது.

ஆரம்ப துடுப்பாட்ட வீரராக களமிறங்கி துடுப்பெடுத்தாடிய லிவிஸ் 148 ஓட்டங்களை பெற்றுக்கொண்டதுடன், ஜேசன் ஹோல்டர் ஆட்டமிழக்காமல் 45 ஓட்டங்களை பெற்றுக்கொண்டார்.

எனினும் ஏனைய வீரர்கள் பிரகாசிக்காத நிலையில் மேற்கிந்திய தீவுகள் அணிக்கு 50 ஓவர் நிறைவில் 9 விக்கட்டுகளை இழந்து 329 ஓட்டங்களையே பெறமுடிந்தது.

பந்துவீச்சில் நுவான் குலசேகர மற்றும் லக்மால் தலா 2 விக்கட்டுகளை கைப்பற்றினர்.

போட்டியின் சிறப்பாட்டக்காரராக இலங்கை அணியின் குசால் மெண்டிஸ் தெரிவுசெய்யப்பட்டார்.

இந்த போட்டியில் வெற்றிபெற்றதனூடாக இலங்கை அணி முக்கோணத்தொடரின் இறுதிப்போட்டிக்கு தெரிவாகியுள்ளது.

http://www.virakesari.lk/article/13792

  • தொடங்கியவர்
3 hours ago, சுவைப்பிரியன் said:

கடைசி வரை விறுவிறுப்பு

 

நேற்றைய போட்டியின் இறுதி ஓவர்

  • தொடங்கியவர்

இலங்கையுடன் இறுதிப்போட்டியில் மோதப்போவது யார்? தீர்க்கமான போட்டி இன்று

Published by Pradhap on 2016-11-25 11:16:04

 

இலங்கை, சிம்பாப்வே மற்றும் மேற்கிந்திய தீவுகள் அணிகளுக்கிடையிலான முக்கோணத் தொடரின் தீர்மானம் மிக்க போட்டி இன்று இடம்பெறவுள்ளது.

255254.jpg

இந்த போட்டியில் மேற்கிந்திய தீவுகள் மற்றும் சிம்பாப்வே அணிகள் மோதுகின்றன.

நேற்று முன்தினம் இடம்பெற்ற மேற்கிந்திய தீவுகளுக்கு எதிரான போட்டியில் இலங்கை அணி வெற்றிபெற்றதனூடாக இறுதிப்போட்டிக்கு தெரிவாகியுள்ளது.

இந்நிலையில் இன்று மேற்கிந்திய தீவுகள் மற்றும் சிம்பாப்வே  அணிகளுக்கிடையிலான போட்டியில் வெற்றிபெறும் அணி இறுதிப்போட்டிக்கு தகுதிபெறும் என்பது குறிப்பிடத்தக்கது.

http://www.virakesari.lk/article/13850

  • தொடங்கியவர்

மே.இ.தீவுகளை துரத்தும் துரதிஷ்டம் ;  “டக்வர்த் லூவிஸ்” முறையில் வென்றது சிம்பாப்வே

Published by Pradhap on 2016-11-25 21:41:11

 

முக்கோணத்தொடரின் சிம்பாப்வே - மேற்கிந்திய தீவுகள் அணிகளுக்கிடையில் இடம்பெற்ற இன்றைய போட்டியின் இரண்டாம் பாதியில் மழைக்குறுக்கிட்டதால் “டக்வர்த் லுவிஸ்” முறைப்படி சிம்பாப்வே அணி 5 ஓட்டங்களால் வெற்றிபெற்றுள்ளது.

asd1.jpg

இந்நிலையில் இந்த போட்டியில் வெற்றிபெற்றதனூடாக  சிம்பாப்வே அணி இறுதிப்போட்டியில் இலங்கை அணியுடன் மோதும் வாய்ப்பை பெற்றுள்ளது.

இந்த போட்டியில் நாணய சுழற்சியில் வெற்றிபெற்று முதலில் துடுப்பெடுத்தாடிய சிம்பாப்வே அணி மழைக்குறுக்கிட்ட நிலையில்  நிர்ணயிக்கப்பட்ட 49 ஓவர்களில் 8 விக்கட்டுகளை இழந்து 218 ஒட்டங்களை பெற்றுக்கொண்டது.

சிம்பாப்வே அணிசார்பில் இறுதிவரை ஆட்டமிழக்காமலிருந்த ரஷா 76 ஓட்டங்களையும், சிசாரோ  42 ஓட்டங்களையும் பெற்றுக்கொண்டனர்.

பந்துவீச்சை பொறுத்தவரையில் பிஷ்ஹு மற்றும் நெர்ஷ் தலா 3 விக்கட்டுகளை கைப்பற்றினர்.

219 என்ற வெற்றியிலக்கை நோக்கி துடுப்பெடுத்தாடிய மேற்கிந்திய தீவுகள் அணி 27.3 ஓவர்கள் நிறைவில் 4.50 என்ற சராசரியில் 124 ஓட்டங்களை பெற்றிருந்த போது மழைக்குறுக்கிட்டது.

எவ்வாறாயினும் மழைவிடாமல் பெய்துக்கொண்டிருந்தமையால் போட்டி நிறுத்தப்பட்டு, போட்டியின் வெற்றி சிம்பாப்வே அணிக்கு வழங்கப்பட்டது.

போட்டியின் சிறப்பாட்டக்காராக 42 ஓட்டங்களை பெற்றதுடன், இரண்டு விக்கட்டுகளை கைப்பற்றிய சிம்பாப்வே அணியின் சிசாரோ தெரிவுசெய்யப்பட்டார்.

இதேவேளை முக்கோணத்தொடரின் இறுதிப்போட்டியில் இலங்கை மற்றும் சிம்பாப்வே அணிகள் எதிர்வரும் ஞாயிற்றுக்கிழமை மோதவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

http://www.virakesari.lk/article/13879

  • தொடங்கியவர்

வெஸ்ட் இண்டீசை வீழ்த்தி இறுதிப் போட்டிக்குள் நுழைந்தது ஜிம்பாப்வே

முத்தரப்பு கிரிக்கெட் தொடரில் வெஸ்ட் இண்டீஸ் அணியை வீழ்த்தி ஜிம்பாப்வே அணி இறுதிப் போட்டிக்கு முன்னேறியது.

 
 
வெஸ்ட் இண்டீசை வீழ்த்தி இறுதிப் போட்டிக்குள் நுழைந்தது ஜிம்பாப்வே
 
ஜிம்பாப்வே நாட்டில் இலங்கை, வெஸ்ட் இண்டீஸ் மற்றும் ஜிம்பாப்வே அணிகள் மோதும் முத்தரப்பு ஒருநாள் கிரிக்கெட் தொடர் நடைபெற்று வருகிறது. இன்று கடைசி லீக் போட்டியில் வெஸ்ட் இண்டீஸ் - ஜிம்பாப்வே அணிகள் மோதின. இதில் வெற்றி பெறும் அணி இறுதிப் போட்டிக்கு முன்னேறும் என்பதால் இரு அணிகளும் வெற்றிக்காக விளையாடினார்கள். டாஸ் வென்ற ஜிம்பாப்வே அணி பேட்டிங் தேர்வு செய்தது.

அதன்படி முதலில் களம் இறங்கிய ஜிம்பாப்வே அணி 127 ரன்களுக்குள் 8 விக்கெட்டுக்களை இழந்து தத்தளித்தது. 9-வது விக்கெட்டுக்கு சிகந்தர் ரசாவுடன் சிசோரோ ஜோடி சேர்ந்தார். இந்த ஜோடி ஜிம்பாப்வே அணியை சரிவில் இருந்து மீட்டது. சிகந்தர் ரசா அவுட்டாகாமல் 76 ரன்னும், சிசோரோ 42 ரன்னும் எடுக்க ஜிம்பாப்வே அணி நிர்ணயிக்கப்பட்ட 49 ஓவரில் 8 விக்கெட் இழப்பிற்கு 218 ரன்கள் சேர்த்தது.

பின்னர் 219 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் வெஸ்ட் இண்டீஸ் களம் இறங்கியது. அந்த அணியின் லெவிஸ் மற்றும் சார்லஸ் ஆகியோர் தொடக்க வீரர்களாக களம் இறங்கினார்கள். சார்லஸ் ரன் ஏதும் எடுக்காமல் டக் அவுட் ஆனார். லெவிஸ் 9 ரன்னில் ஆட்டம் இழந்தார். அடுத்து வந்த பிராத்வைட் 24 ரன்னிலும், ஹோப் 14 ரன்னிலும் ஆட்டம் இழந்தனர். வெஸ்ட் இண்டீஸ் அணி 27.3 ஓவரில் 5 விக்கெட் இழப்பிற்கு 124 ரன்கள் எடுத்திருக்கும்போது மழை பெய்தது.

தொடர்ந்து மழை பெய்ததால் டக்வொர்த் லிவிஸ் விதியின்படி போட்டியின் முடிவு கணிக்கப்பட்டது. டக்வொர்த் லிவிஸ் விதிப்படி வெஸ்ட் இண்டீஸ் அணி 27.3 ஓவர்கள் முடிவில் 130 ரன்கள் எடுத்திருக்க வேண்டும். ஆனால் 124 ரன்கள் மட்டுமே எடுத்திருந்ததால் 5 ரன்கள் வித்தியாசத்தில் ஜிம்பாப்வே அணி வெற்றி பெற்றதாக அறிவிக்கப்பட்டது. இந்த வெற்றியின் மூலம் ஜிம்பாப்வே அணி இறுதிப் போட்டிக்கு முன்னேறியது.

27-ந்தேதி நடக்கும் இறுதிப் போட்டியில் ஜிம்பாப்வே அணி இலங்கையை எதிர்த்து விளையாட இருக்கிறது.

http://www.maalaimalar.com/News/Sports/2016/11/25220027/1052772/zimbabwe-beats-west-Indies-by-5-runs.vpf

  • தொடங்கியவர்

முக்கோண சர்வதேச ஒருநாள் கிரிக்கெட் தொடர் இறுதிப் போட்டியில் இலங்கை - சிம்பாப்வே பலப்பரீட்சை

 

 

உபுல் தரங்க தலை­மை­யி­லான இலங்கை கிரிக்கெட் அணி கிரேம் கிரீமர் தலை­மை­யி­லான சிம்பாப்வே அணி­யுடன்  இன்­றைய தினம் நடை­பெறும் முக்­கோண சர்­வ­தேச ஒருநாள் கிரிக்கெட் தொடரின் இறுதிப் போட்­டியில் கள­மி­றங்­க­வுள்­ளது.

புல­வாயோ குயின்ஸ் பார்க் விளை­யாட்டு மைதா­னத்தில் நடை­பெறும் இப்­போட்டி  இலங்கை நேரப்­படி பிற்­பகல் 1.00 மணிக்கு ஆரம்­ப­மா­க­வுள்­ளது. 

இலங்கை, மேற்­கிந்­தியத் தீவுகள் மற்றும் சிம்பாப்வே ஆகிய அணி­க­ளுக்­கி­டை­யி­லான முக்­கோண சர்­வ­தேச ஒருநாள் கிரிக்கெட் தொடரில் பங்­கேற்­றன. இதில் புள்­ளிப்­பட்­டி­யலில் முத­லிரு இடங்­களைப் பெறும் அணிகள் இறுதிப் போட்­டிக்குத் தெரி­வாகும் நிலையில் , இலங்கை அணி 11 புள்­ளி­க­ளுடன் முத­லா­வது அணி­யாக இறுதிப் போட்­டிக்குத் தெரிவு செய்­யப்­பட்­டி­ருந்­தது. 

dasda.jpg

இந்­நி­லையில் இறுதிப் போட்­டிக்கு தகுதி பெறும் மற்­றைய அணிக்­கான போட்­டியில் மேற்­கிந்­தியத் தீவுகள் மற்றும் சிம்பாப்வே அணிகள் பலப்­ப­ரீட்சை நடத்­தின. கடந்த வெள்ளிக்­கி­ழ­மை­யன்று நடை­பெற்ற  தீர்க்­க­மான போட்­டியில் மழை குறுக்­கி­டவே சிம்பாப்வேஅணி டக்வேர்த் லூயிஸ் விதி­மு­றைப்­படி 5 ஓட்­டங்­களால் வெற்றி பெற்று  இறுதிப் போட்­டிக்கு முன்­னே­றி­யது. 

இன்­றைய இறுதிப் போட்­டியில் குசல் பெரேரா காயம் காரணமாக விளை­யாட மாட்டார் என கூறப்­ப­டு­கி­றது. அவ்­வாறு அவர் விளை­யா­டாத பட்­சத்தில் ஷெஹான் ஜய­சூ­ரிய தனஞ்­சய சில்­வா­வுடன் ஆரம்ப துடுப்­பாட்ட வீர­ராக கள­மி­றங்­குவார் என எதிர்­பார்க்­கப்­ப­டு­கி­றது. அவ்­வாறு குசல் பெரேரா விளை­யா­டாத பட்­சத்தில், பந்­து­வீச்சில் மேல­தி­க­மாக ஒரு­வரை சேர்த்­துக்­கொள்­வ­தற்­கான வாய்ப்பு அதி­க­மாக காணப்­ப­டு­கி­றது.  அதன்­படி ஜெப்ரி வெண்­டர்­சே­வுக்கு அவ்­வாய்ப்பு வழங்­கப்­படும்.

இத்­தொ­டரில் இலங்கை அணியின் களத்­த­டுப்­பா­னது மிகவும் பின்­தங்­கிய நிலை­யி­லேயே காணப்­ப­டு­கி­றது. மேலும் பந்து வீச்­சிலும் சிறப்­பாக செயற்­பட வேண்­டிய கட்­டா­யத்தில் உள்­ளது. 

சிம்பாப்வே தனது சொந்த மைதா­னத்தில் விளை­யா­டு­கின்­றமை அவ்­வ­ணிக்கு மாபெரும் பல­மாகும். அண்­மைக்­கா­ல­மாக சிம்பாப்வே கிரிக்கெட் அணி முன்­னேற்­ற­ம­டைந்து வரு­வதை அவதானிக்கலாம். 

அந்த வகையில் சிம்பாப்வே அணியை இலங்கை அணி வெற்றி கொள்வது மிகவும் கடினமானதாகும். ஆகவே,  இப்போட்டியை இலங்கை அணி மெத்தனப் போக்குடன் விளையாடாது, சிறப்பாக செயற்பட்டால் வெற்றிபெற முடியும்.

http://www.virakesari.lk/article/13912

  • தொடங்கியவர்

களத்தடுப்பில் இலங்கை - மழை குறுக்கிடுமா?

களத்தடுப்பில் இலங்கை - மழை குறுக்கிடுமா?

 

சிம்பாபேவில் இடம்பெறும் முத்தரப்பு ஒருநாள் கிரிக்கெட் தொடரில் இன்று இறுதிப் போட்டியில் நடைபெறுகின்றது.

இதில் இலங்கையை எதிர்கொள்ளும் சிம்பாபே அணி நாணயசுழற்சியை வசப்படுத்தி, துடுப்பெடுத்தாட தீர்மானித்துள்ளது.

மேற்கிந்திய தீவுகள், இலங்கை மற்றும் சிம்பாபே ஆகிய அணிகள் இந்தத் தொடரில் பங்கேற்றன.

ஒவ்வொரு அணியும் தலா நான்கு போட்டிகளை எதிர்கொண்ட நிலையில், இலங்கை அணி அதில் இரண்டு போட்டிகளில் வென்று, ஒன்றில் தோல்வியைத் தழுவியதோடு, ஒரு போட்டி மழை காரணமாக கைவிடப்பட்டது.

இந்தநிலையில் சிம்பாபே அணி ஒரு போட்டியில் வெற்றி பெற்றதோடு, ஒரு போட்டியில் தோல்வியை தழுவியது. மற்றைய இரண்டு போட்டிகளும் ஒன்று சமநிலையில் நிறைவடைய, மற்றொன்று கைவிடப்பட்டது.

மேற்கிந்திய தீவுகள் அணியைப் பொறுத்தவரை ஒரு போட்டி சமநிலையில் நிறைவடைய ஒன்றில் வெற்றியையும், இரண்டில் தோல்வியையும் பெற்றுக் கொண்டது.

இதற்கமைய, சிம்பாபோ மற்றும் இலங்கை ஆகிய அணிகள் இறுதிப் போட்டிக்குத் தெரிவாகி இன்று களம் கண்டுள்ளன.

எனினும் மழை காரணமாக போட்டி சிறிது நேரம் தாமதித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

http://tamil.adaderana.lk/news.php?nid=85646

  • தொடங்கியவர்

சிம்பாபே  100/5

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.