Skip to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

யுத்தத்தால் பாதிக்கப்பட்ட வடக்கு, கிழக்கு மக்களுக்கு வரப்பிரசாதமாக அமையவுள்ள சட்ட திருத்தம்

Featured Replies

யுத்­தத்தால் பாதிக்­கப்­பட்ட வடக்கு, கிழக்கு மக்­க­ளுக்கு வரப்­பி­ர­சா­த­மாக அமை­ய­வுள்ள சட்ட திருத்தம்

p4-6146187bcfa9d094c044400c94eccb7433b84261.jpg

 

சட்­டத்­த­ரணி எம்.ஏ.எம். ஹக்கீம் 
(சிரேஷ்ட விரி­வு­ரை­யாளர் 
சட்­ட­பீடம், - கொழும்புப் பல்­க­லைக்­க­ழகம்)

 

யுத்­தத்­திற்குப் பின்­ன­ரான சமா­தான சூழலில் மக்கள் நாட்டின் எப்­பா­கத்­திற்கும் செல்­வ­தற்கும், தமது காணி­களில் குடி­யி­ருப்­ப­தற்கும் வாழ்­வா­தாரக் காணி­களை மீளப்­பெ­று­வ­தற்­கு­மான சந்­தர்ப்பம் எழுந்­துள்­ளது. ஆனால் வடக்கு மற்றும் கிழக்கு மாகாண மக்­க­ளுக்குச் சொந்­த­மான காணிகள், வீடுகள், ஏனைய கட்­டி­டங்கள் மற்றும் விவ­சாய நிலங்­களில் ஏரா­ள­மா­னவை கைவிடப்­பட்ட நிலையில் உள்­ளன.

இரா­ணு­வத்தின் அதி­யுயர் பாது­காப்பு வலயம், தம்­மு­டைய ஆத­னங்­களை இனங்­கண்டு கொள்­ள­மு­டி­யாமை, உரிய ஆவ­ணங்கள் அல்­லது பதி­வே­டுகள் அழிந்­து­ போ­யுள்­ளமை, அந்த ஆத­னங்­களில் வேறு ஆட்கள் குடி­யி­ருக்­கின்­றமை, விவ­சாய நிலங்­களில் பிறரால் பயிர்ச்­செய்கை மேற்­கொள்­ளப்­ப­டு­கின்­றமை உள்­ளிட்ட பல்­வேறு பிரச்­சி­னை­க­ளுக்கு மக்கள் முகங்­கொ­டுத்து வரு­கின்­றனர்.

இவ்­வா­றான பிரச்­ச­ினை­களை ஓர­ள­வா­வது தீர்க்கும் நோக்­கத்தில், புதிய அர­சாங்­க­மா­னது ஆட்­சி­யு­ரிமைக் கட்­டளைச் சட்­டத்தின் பிரிவு 3 இனு­டைய ஏற்­பா­டு­க­ளா­னவை குறிப்­பாக இரண்டு வரு­டங்­க­ளுக்கு விசேட ஏற்­பாட்டுச் சட்­டத்தின் மூல­மாக நிறுத்தி வைத்­துள்­ளது. எனவே குறித்த சட்ட ஏற்­பாடு யுத்­தத்­தினால் பாதிக்கப்­பட்ட வடக்கு மற்றும் கிழக்கு மக்­க­ளுக்கு வரப்­பி­ர­சா­த­மாக அமை­யலாம்.

 

ஆதன உரிமை அல்­லது சொந்தம் கிடைக்கும் வழி­மு­றைகள்

காணி, வீடு மற்றும் கட்­டடங்கள் போன்ற நகர்த்திச் செல்­ல­ மு­டி­யாத ஆத­னங்­களை அசையா ஆத­னங்கள் என்று குறிப்­பி­டலாம். இத்­த­கைய ஆத­னங்­களை சொந்தம் கொள்­வ­தற்கு பின்­வ­ரு­கின்ற சில வரை­ய­றுக்­கப்­பட்ட வழி­மு­றை­களே காணப்­ப­டு­கின்­றன:

அ) பணத்­தொ­கை­யொன்­றுக்கு அல்­லது நன்­கொ­டை­யாக அசையா ஆத­னத்தைக் கைமாற்றல்

ஆ) காணி­யற்­றோ­ருக்கு வழங்­கப்­ப­டு­கின்ற அரச காணி அளிப்­புக்கள்

இ) வாரி­சு­ரிமை மூல­மாகப் பெறப்­ப­டு­கின்ற அல்­லது பரம்­பரை அசையா ஆத­னங்கள்

ஈ) ஆட்­சி­யு­ரிமை மூல­மான ஆதன உடை­மையால் ஏற்­ப­டு­கின்ற ஆதன உரித்து பணத்­தொ­கை­யொன்­றுக்கு அல்­லது நன்­கொ­டை­யாக அசையா ஆத­னத்தைக் கைமாற்றல் பணத்­தொ­கை­யொன்றைச் செலுத்தி, காணி கட்­ட­டங்­களைக் கொள்­வ­னவு செய்­கின்­ற­போது பின்­பற்­றப்­பட வேண்­டிய கட்­டாய விதி­மு­றை­களை மோசடி தவிர்ப்­புக் ­கட்­டளைச் சட்டம் விதந்­து­ரைக்­கின்­றது. ஏனெனில், சட்டம் விதித்­துள்ள முறையில் ஆத­னக் ­கை­மாற்றம் இடம்­பெற்­றி­ருக்­கா­த­போது, பாதிக்­கப்­பட்­டவர் அல்­லது ஏமாற்­றப்­பட்­டவர் சட்­டத்தின் கீழான அவ­ருக்­குள்ள நிவா­ர­ணத்தைக் கோரிப் ­பெ­ற­மு­டி­யாது அல்­லது நிவா­ரணம் பெறு­வது மிகவும் சிர­ம­மான விட­ய­மொன்­றாகும். மோசடி தவிர்ப்புக் கட்­டளைச் சட்­டத்தின் இரண்டாம் பிரி­விற்­கி­ணங்க, காணி கட்­ட­டங்கள் போன்ற அசையா ஆத­னத்தைக் கைமாற்­று­கின்­ற­ போது (அதா­வது விற்றல், வாங்­குதல், கைமாற்­றுதல், ஒப்­ப­டைத்தல் அல்­லது ஈடு­வைத்தல்) எழுத்­து­மூ­ல­மா­கவும், அந்தக் கைமாற்­றத்தை மேற்­கொள்­ளு­ப­வரின் கையொப்­பத்­து­டனும், அனு­ம­திப்­பத்­தி­ர­மு­டைய பிர­சித்த நொத்­தா­ரிசு ஒருவர் முன்­னி­லையில், இரண்டு அல்­லது இரண்­டிற்­க­தி­க­மான சாட்­சி­க­ளுடன் அனை­வரும் ஒரே நேரத்தில் ஒன்­றா­யி­ருந்து செய்­யப்­பட்­ட­தாக அந்த நொத்­தா­ரி­சினால் சான்றுப்படுத்­தப்­பட்டால் மாத்­தி­ரமே அத்­த­கைய கைமாற்றம் சட்ட வலி­து­டை­ய­தாக அமையும்.

மேலும், குறிப்­பிட்ட ஆத­னத்தின் அக்­கால சந்­தை­ வி­லையை விட அரை­வா­சிக்கும் குறை­வான விலையில் ஆத­ன­மொன்றை ஒருவர் கொள்­வ­னவு செய்­ய­ மு­டி­யாது என்ற சட்­ட­வி­தியும் காணப்­ப­டு­கின்­றது. அவ்­வா­றான சந்­தர்ப்­பங்­களில், பாதிக்­கப்­பட்­டவர் தாம் ஏமாற்­றப்­பட்­டி­ருப்­ப­தாகக் கூறி, சட்­டத்­தின்­ கீ­ழான பாது­காப்­பினை அல்­லது நிவா­ர­ணத்தைப் பெற்­றுக்­கொள்­ளவும் முடியும். அத்­துடன், பரா­ய­ம­டை­யா­த­வர்­க­ளுக்குச் சொந்­த­மான அல்­லது சித்த சுவா­தீ­ன­மற்­ற­வர்­க­ளு­டைய ஆத­னங்­களின் கைமாற்­ற­மா­னது சட்­டத்­தினால் விதித்­து­ரைக்­கப்­பட்ட நட­ப­டி­மு­றைகள் பின்­பற்­றப்­ப­டாது மேற்­கொள்­ளப்­ப­டு­மாயின் அத்­த­கைய கைமாற்­றமும் செல்­லு­ப­டி­யற்­ற­தாகும். அச்­சு­றுத்தி அல்­லது ஏமாற்றிச் செய்­யப்­ப­டு­கின்ற அசையா ஆதனக் கைமாற்­றங்­களும் அவ்­வாறு நடை­பெற்­ற­தாக அவை நிரூ­பிக்­கப்­ப­டு­கின்­ற­போது செல்­லு­ப­டி­யற்றவையாகும்.

அசையா ஆத­னங்­களின் கைமாற்­ற­மா­னது வலி­து­டைமை (அல்­லது முன்­னு­ரிமை) பெறு­வ­தற்கு அவை காணிப்­ப­தி­வ­கத்தில் உரிய படி­வத்­திலும், வழி­மு­றை­களைப் பின்­பற்­றியும், முத்­திரைக் கட்­ட­ணத்தைச் செலுத்­து­வதன் மூல­மாக உட­ன­டி­யாகப் பதிவு­செய்­யப்­ப­டுதல் வேண்டும். தாம­த­மாக அல்­லது காலங்­க­டத்திப் பதி­வு­ செய்­வ­தனால் பல்­வேறு வித­மான பாத­மான விளை­வு­களை எதிர்­நோக்க வேண்­டி­யேற்­ப­டலாம். அதா­வது, குறித்த காணியை ஒரு­வ­ருக்கு விற்­பனை செய்­தவர், அதே காணி இன்­னொ­ரு­வ­ருக்கும் விற்­பனை செய்­ய­ மு­டியும். இந்த இரண்டு ஆவ­ணங்­க­ளிலும் எந்த ஆவணம் முதலில் முறை­யாகப் பதி­வு­ செய்­யப்­ப­டு­கின்­றதோ, அந்த ஆத­னக் ­கைமாற்­றமே சட்­டப்­படி முன்­னு­ரி­மை­யு­டை­தாகச் செல்­லு­ப­டி­யாகும். பதி­வு­செய்தல் தொடர்பில் காலத்தால், சில­வே­ளை­களில் நேரத்தால் முந்­தி­யதே மேலோங்கி சட்ட வலி­து­டை­ய­தாக வரும்.

அசையா ஆத­னங்­களை இரத்த உற­வி­னர்கள் மத்­தியில் நன்­கொ­டை­யாக வழங்­கு­வ­தற்கு சட்­டத்தில் ஏற்­பா­டுகள் காணப்­ப­டு­கின்­றன. மேலும், காணி கட்­ட­டங்­களை தர்ம நோக்­கங்­க­ளுக்­கா­கவும் நன்­கொ­டை­யாக வழங்­கவும் முடியும். நன்­கொ­டை­யாக வழங்­கு­கின்­ற­ போது, ஆதனக் கைமாற்­ற­லுக்­கான நோக்­க­மா­னது அடிப்­ப­டையில் இரத்த உற­வி­னர்­க­ளுக்­கி­டை­யி­லான அன்பு, பாசம் மற்றும் திரு­ம­ணத்தை அடிப்­ப­டை­யாகக் கொண்ட சீதன ஆத­ன­மாகவும் கைமாற்­றப்­ப­டலாம். அந்த சந்­தர்ப்­பங்­களில், நன்­கொ­டை­யா­னது ஒன்றில் கைமீட்­கப்­ப­டக்­கூ­டி­ய­தாக அல்­லது கைமீட்க முடி­யாத அறுதி நன்­கொடை­யா­கவும் ஆக்­கப்­படலாம். அதே­நேரம், பெற்­றோர்கள் தமது பிள்­ளை­க­ளுக்­கான அசையா ஆத­னங்­களை சீவிய நல­உ­ரித்தை அல்­லது வேறே­தேனும் நிபந்­த­னை­களை முன்­வைத்தும் நன்­கொ­டை­யாக ஆத­னங்­களைக் கைமாற்­று­வார்கள். அத்­த­கைய சந்­தர்ப்­பங்­களில், சீவிய நல­ உ­ரித்தை முன்­வைத்­துள்­ள­போது ஆத­னத்தை நன்­கொ­டை­ய­ளித்­த­வரின் மர­ணத்தின் பின்­னரும், நிபந்­த­னைகள் அடிப்­ப­டை­யி­லான நன்­கொ­டை­யா­னது அத்­த­கைய நிபந்­த­னை­களை நிறை­வேற்­றிய பின்­ன­ருமே முழு­மை­யான உரித்தும் உடை­மையும் நன்­கொடை வழங்கப் பெற்­ற­வ­ருக்குக் கிடைக்கும்.

 

காணி­யற்­றோ­ருக்கு வழங்­கப்­ப­டு­கின்ற அரச காணி அளிப்­புக்கள்  

காலத்­துக்குக் காலம் அர­சாங்கம் பின்­பற்­று­கின்ற கொள்­கை­களின் அடிப்­ப­டை­யிலும், அரச காணிகள் தொடர்­பான சட்ட ஏற்­பா­டு­க­ளுக்­கி­ணங்­கவும் காணி­யற்­றோ­ருக்கு அரச காணித் துண்­டு­களை அர­சாங்கம் வழங்­கு­வது வழக்­க­மா­ன­தாகும். இதனை சுவர்­ண­பூமி அல்­லது ஜய­பூமி என்ற பல்­வேறு பெயர்­க­ளினால் அழைப்­பார்கள். குறிப்­பாக காணி அபி­வி­ருத்திக் கட்­டளைச் சட்டம், அரச காணிகள் கட்­டளைச் சட்டம் மற்றும் காணி அளிப்­புக்கள் (சிறப்­பேற்­பா­டுகள்) சட்டம் என்­ப­னவும் அவற்­றுக்கு கொண்­டு­வ­ரப்­பட்ட சட்­ட­சீர்­தி­ருத்­தங்­களும் அரச காணி வழங்­க­லுக்­கான நடை­மு­றை­யினை விதந்­து­ரைக்­கின்­றன. அதா­வது 18 வய­துக்கு கூடிய இலங்கைப் பிர­ஜையொ­ரு­வ­ருக்கு ஜனா­தி­பதி தனக்­குள்ள அதி­கா­ரத்தின் பிர­காரம் காணித்­துண்­டு­களை அரச காணி வழங்­க­லாகக் கைமாற்­றலாம். அரச காணித்­துண்­டு­களைப் பெற்­றுக்­கொண்­ட­வர்கள், முழு­நி­றை­வான ஆதன உரித்தைக் கொண்­ட­வர்­க­ளாகக் கரு­தப்­ப­டு­வார்கள். தமது உரித்தை, இரத்த உற­வினர் அல்­லா­த­வர்­க­ளுக்கு கைமாற்­றுதல் தடை­செய்­யப்­பட்­டி­ருப்­ப­துடன், வாரி­சு­ரி­மை­யாக வாழ்க்­கைத்­து­ணைக்குச் சென்­ற­டை­யலாம்.

 

வாரி­சு­ரிமை மூல­மாகப் பெறப்­ப­டு­கின்ற அல்­லது பரம்­பரை அசையா ஆத­னங்கள்

இலங்­கையில் காணப்­ப­டு­கின்ற பொது­வான சட்­டத்­திற்கு மேல­தி­க­மாக, கண்­டியர் சட்டம், தேச­வ­ழமை மற்றும் முஸ்லிம் சட்­டங்கள் என்­பன வாரி­சு­ரிமை மூல­மாக ஆத­னங்­களைப் பெற்­றுக்­கொள்­ளு­கின்ற வழி­மு­றை­க­ளுக்­கான ஏற்­பா­டு­களைக் கொண்­டுள்­ளன. அதா­வது, ஒரு நபர் இறு­தி­வி­ருப்­பா­வ­ண­மொன்றை எழுத்தில் விட்­டுச்­செல்­லா­த­போது, அவர் விட்­டுச்­செல்­கின்ற அசையும் அசையா ஆத­னங்கள் பகி­ரப்­ப­ட­வேண்­டிய வழி­மு­றைகள் பற்றி இச்­சட்­டங்கள் வெவ்­வே­றான ஏற்­பா­டு­களைக் கொண்­டுள்­ளன. வாரி­சு­க­ளுக்கும் அடுத்­து­று­வோ­ருக்­கு­மான அசையா ஆத­னங்கள் ஒன்றில் இறந்­தவர் எழு­தி­ வைத்­துள்ள இறு­தி­ வி­ருப்­பா­வ­ணத்தின் அடிப்­ப­டையில் பகிர்ந்­த­ளிக்­கப்­படும், அல்­லது சொத்­து­றுதி ஒன்­றினை ஆக்­காது இறக்­கின்­ற­போது, குறித்த நபர் ஆளப்­ப­டு­கின்ற தனியார் சட்­டத்தின் விதி­மு­றை­க­ளுக்­கி­ணங்க ஆத­னங்கள் பங்­கி­டப்­படும்.

 

ஆட்­சி­யு­ரிமை மூல­மான ஆதன உடை­மையால் ஏற்­ப­டு­கின்ற ஆதன உரித்து

1871ஆம் ஆண்டின் 22ஆம் இலக்க கால­வி­திப்புக் கட்­டளைச் சட்­டத்தின் மூன்றாம் பிரி­வா­னது, 'வழக்கு நட­வ­டிக்­கை­யொன்றில் எதி­ரா­ளி­யொ­ருவர் காணிகள் மற்றும் ஏனைய அசையா ஆத­னங்­க­ளின்­மீது கோரிக்­கை­யாளர் அல்­லது வழக்­காளி தொடர்­பி­லான குழப்­ப­மற்­றதும் தொடர்ச்­சி­யா­ன­து­மான எதி­ரு­டை­மை­யொன்றை பத்­து­வ­ரு­டங்­க­ளுக்குக் கொண்­டி­ருப்­பா­ராயின், தனக்கு சார்­பான தீர்ப்பைப் பெற்­றுக்­கொள்­வ­தற்கு எதி­ராளி உரித்­து­டை­ய­வ­ராவார்' என்று ஏற்­பாடு செய்­கின்­றது. அதா­வது, ஒரு­வ­ருக்கு உரித்­துள்ள அசையா ஆத­ன­மொன்றை மற்­றொ­ருவர் தன்­னு­டைய உடை­மையில் மேற்­கூ­றிய நிபந்­த­னை­களில் கொண்­டி­ருப்­பா­ராயின் அந்த அசையா ஆத­னத்­துக்­கான உரி­மையை ஆட்­சி­யு­ரிமை என்­பதன் அடிப்­ப­டையில் பின்­னை­யவர் கோரிப்­பெ­ற­ மு­டியும். ஆட்­சி­யு­ரிமை மூல­மான உரி­மைக்­கோ­ரிக்­கை­யா­னது, அரச காணிக்கு செல்­லு­ப­டி­யா­காது. அரச காணியில் எத்­தனை வரு­டங்­க­ளாக உடைமை கொண்­டி­ருந்­தாலும் ஆட்­சி­யு­ரிமை கோர­மு­டி­யாது. பின்­வரும் மூன்று தேவைப்­பா­டு­களைப் பூர்த்­தி­ செய்­கின்­ற­போது, ஒருவர் தனி­யா­ருக்குச் சொந்­த­மான அசையா ஆத­ன­மொன்றின் உரி­மையை வழக்­கொன்றில் கோரிப் ­பெற்­றுக்­கொள்ள முடியும்.

அ) குழப்­ப­மற்­றதும் இடை­ய­றா­த­து­மான (தொடர்ச்­சி­யான) உடைமை

ஆ) காணிச் சொந்­தக்­கா­ர­ருக்கு எதி­ரா­னதும் சுயா­தீ­மா­ன­து­மான உரித்­து­டைமை

இ) பத்து வரு­டங்­க­ளாக உடை­மையில் (கட்­டுப்­பாட்டில்) வைத்­தி­ருத்தல் குழப்­ப­மற்­றதும் இடை­ய­றா­த­து­மான (தொடர்ச்­சி­யான) உடைமை

ஆட்­சி­யு­ரிமை மூல­மாக ஆத­னத்தின் உரித்தைக் கோரு­பவர் காணி மற்றும் அசையா ஆத­னத்தில் அவர் கொண்­டுள்ள உடை­மை­யா­னது எந்தச் சந்­தர்ப்­பத்­திலும் (ஆத­னத்தின் மூலச்­சொந்­தக்­காரர் அல்­லது அவ­ரது வாரி­சினால்) ஆட்­சே­ப­னைக்கு அல்­லது குழப்­பத்­திற்கு உட்­ப­ட­வில்லை என்­ப­த­னையும், அவ்­வா­றான உடை­மை­யா­னது தொடர்ச்­சி­யா­கவும் எந்த சந்­தர்ப்­பத்­திலும் முறி­வ­டை­யா­மலும் இருப்­ப­த­னையும் நிரூ­பித்தல் வேண்டும். அத்­த­கைய உடை­மை­யா­னது, பௌதீக ரீதி­யான கட்­டுப்­பாட்டை வெளிப்­ப­டுத்திக் காட்­டுதல் வேண்டும். ஆட்­சி­யு­ரிமை கோரு­கின்ற அசையா ஆத­னத்தை தன்­னு­டைய பெயரில் குத்­த­கைக்கு வழங்­கி­யி­ருந்தால், தனது முகவர் ஒருவர் மூல­மாகப் பரா­ம­ரித்து வந்தால் அல்­லது தனக்­கு­ரிய வேலை­யாட்­களை நிய­மித்து பரா­ம­ரித்து வந்­தாலும் போது­மா­னது. இங்கு குறிப்­பாக நோக்­கப்­ப­டு­வது யாதெனில், பௌதீகக் கட்­டுப்­பாட்டைக் கொண்­டுள்­ளாரா என்­ப­தாகும். ஆனால், அசையா ஆத­ன­மொன்றின் சொந்தம் அல்­லது ஆத­னத்தை உடை­மையில் வைத்­தி­ருப்­ப­வரை வெளி­யேற்­று­வது தொடர்­பான பிணக்கு, அல்­லது குறிப்­பிட்ட காலம் ஆட்­சி­யு­ரிமை கோரு­பவர் தனது கட்­டுப்­பாட்டில் வைத்­தி­ருக்­காமல் விடு­கின்­ற­போது, முறையே குழப்பம் ஏற்­பட்­டுள்­ள­தா­கவும், தொடர்ச்சி முறி­வ­டைந்­துள்­ள­தா­கவும் கரு­தப்­படும். ஆயினும், தொடர்ச்­சி­யா­ன­ தன்மை என்ற தேவைப்­பா­டா­னது ஒவ்­வொரு வழக்­கிலும் அந்­தந்த வழக்கின் நிகழ்­வு­களின் மீது தங்­கி­யுள்­ளது.

 

காணிச் சொந்­தக்­கா­ர­ருக்கு எதி­ரா­னதும் சுயா­தீ­மா­ன­து­மான உரித்­து­டைமை  

இந்த இரண்­டா­வது தேவைப்­பா­டா­னது சொந்­தக்­கார­ருக்கு எதி­ரான உடை­மை­யா­னது, எதி­ரு­டை­மை­யாக கொள்­ளப்­பட்­டி­ருக்க வேண்டும் என்று குறிப்­பி­டு­கின்­றது. ஆட்­சி­யு­ரிமை கோரு­பவர் தானே ஆத­னத்தின் சொந்­தக்­காரர் என்ற கருத்தில் செயற்­பட்­டி­ருக்க வேண்டும். மாறாக, வாடகை அல்­லது குத்­தகைப் பணம் பெற்­றி­ருந்தால், அறு­வ­டை­களைப் பெற்­று­ வந்­தி­ருந்தால், அந்த அசையா ஆதனம் தொடர்­பான வரி­களை அல்­லது கட்­ட­ணங்­களை அர­சாங்க அதி­கார சபை­க­ளுக்கு சொந்­தக்­காரர் தன்­னு­டைய பெயரில் செலுத்­தி­ வந்­தி­ருந்தால், ஆட்­சி­யு­ரி­மையைக் கோரு­ப­வ­ருக்கு சுயா­தீ­ன­மான எதி­ரு­டைமை கிடைக்­க­மாட்­டாது. தன்­னு­டைய செயல்­ மூ­ல­மாக மற்­றொ­ரு­வரை சொந்­தக்­கார­ராக ஏற்­றுக்­கொண்­டி­ருப்­ப­தனால் ஆட்­சி­யு­ரி­மை­யினைக் கோர­மு­டி­யாது. எதி­ரு­டை­மை­யா­னது, எந்த அடிப்­ப­டை­யிலும் தொடங்­கி­யி­ருக்­கலாம், ஆனால் ஆட்­சி­யு­ரிமைக் கோரிக்­கையை முன்­வைக்­கின்­ற­ போது பூர்த்­தி­செய்ய வேண்­டிய நிபந்­த­னை­க­ளுடன் சேர்த்து எதி­ரு­டை­மையை வெளிக்­காட்­டு­கின்ற கருத்தில் அவர் செயற்­பட்­டி­ருக்க வேண்டும். உதா­ர­ண­மாக, உள்­நாட்டில் இடம்­பெ­யர்ந்­த­வர்­களை தனக்குச் சொந்­த­மான தனியார் காணி­களில் ஒருவர் தற்­கா­லி­க­மாக குடி­ய­மர்த்­து­கின்றார். அவ்­வாறு குடி­யே­றி­ய­வர்கள் அரச மற்றும் அர­சு­சாரா உத­விகள் மூல­மாக அக்­கா­ணி­களில் வீடு­கட்டி, மின்­சாரம் மற்றும் குடிநீர் போன்ற பொது­வ­ச­தி­க­ளைப் ­பெற்று பத்து வரு­டங்­க­ளுக்கு மேலாக வாழு­கின்­றனர். இவ்­வாறு குடி­யேறி வாழு­ப­வர்கள் தொடர்ச்­சி­யான குழப்­ப­மற்ற பத்­து­வ­ரு­டங்­களைக் கடந்­தி­ருந்தால், அக்­கா­ணிக்­கான ஆட்­சி­யு­ரி­மையை கோரு­கின்ற எதி­ரு­டை­மையை காணியின் சொந்­தக்­கா­ர­ருக்கு எதி­ராகக் கொண்­டி­ருப்பார்.

 (தொடரும்)

http://content.epaper.virakesari.lk/newspaper/Daily/main/2016-11-14#page-4

  • தொடங்கியவர்

யுத்­தத்தால் பாதிக்­கப்­பட்ட வடக்கு, கிழக்கு மக்­க­ளுக்கு வரப்­பி­ர­சா­த­மாக அமை­ய­வுள்ள சட்டத் திருத்தம்

0-f52696032e6220679a7258630f41007e3705c07d.jpg

 

(நேற்றைய தொடர்ச்சி)

சட்­டத்­த­ரணி எம்.ஏ.எம். ஹக்கீம் 
(சிரேஷ்ட விரி­வு­ரை­யாளர் சட்­ட­பீடம், - கொழும்பு பல்­க­லைக்­க­ழகம்)

பத்து வரு­டங்­க­ளாக உடமையில் (கட்­டுப்­பாட்டில்) வைத்­தி­ருத்தல் ஆட்­சி­யு­ரி­மையைக் கோரு­பவர் பத்து வரு­டங்­க­ளாக குறித்த அசையா ஆத­னத்தை தன்­னு­டைய உட­மையில் (கட்­டுப்­பாட்டில்) வைத்­தி­ருந்­த­தாக நிரூ­பித்தல் வேண்டும். வரு­டங்­களைக் கணிப்­பி­டு­கின்­ற­போது, ஆத­னத்தின் உண்­மை­யான சொந்­தக்­காரர் மற்றும் அவ­ரு­டைய வாரி­சுகள் என்­போ­ருக்கு எதி­ரா­கவும் பத்து வருட உடமை ஏற்­றுக்­கொள்ளக் கூடி­ய­தாகும். 

உதா­ர­ண­மாக, ஒரு­வரின் காணியில் எதி­ரு­ட­மையைக் கொண்­டி­ருக்கும் போது, காணியின் உண்­மை­யான சொந்­தக்­காரர் இறந்தால் ஆட்­சி­யு­ரி­மைக்­காலம் முறி­வ­டை­யாது. ஆட்­சி­யு­ரி­மைக்­கா­ல­மா­னது தொடர்ந்தும் உண்­மை­யான சொந்­தக்­கா­ரரின் வாரி­சு­க­ளுக்கு எதி­ரா­கவும் தொடர்ந்­து­ செல்லும். ஆனால், கால­வி­திப்புக் கட்­ட­ளைச்­சட்­டத்தின் பிரிவு 13 இன்கீழ் ஏற்­பாடு செய்­யப்­பட்­டுள்­ள­வாறு சிறு­பிள்­ளை­களின், சித்­த­சு­யா­தீ­ன­மற்­ற­வர்­களின், புத்­தி­கு­றைந்­த­வர்­களின், மற்றும் வெளி­நா­டு­களில் வசிப்­ப­வர்­களின் ஆத­னங்­களை பத்து வரு­டங்கள் உடமை கொண்­டி­ருந்­தாலும் ஆட்­சி­யு­ரிமை கோர­முடி­யாது என்ற மட்­டுப்­பாட்­டினை விதித்­து­ரைக்­கின்­றது. ஆயினும், அவ்­வாறு முப்­பது வரு­டங்கள் உட­மை­யாட்­சியில் இருக்கும் போது ஆட்­சி­யு­ரிமைக் கட்­ட­ளைச்­சட்­டத்தின் பிரிவு 3இன் கீழ் ஆட்­சி­யு­ரிமை கோரு­வ­தனைச் சட்டம் அனு­ம­திக்­கின்­றது. 

அசையா ஆதன உடமை தொடர்பில் இலங்­கையில் ஏற்­பட்­டுள்ள பிரச்­ச­ினைகள்  

இலங்­கையின் வடக்கு, கிழக்கு மாகா­ணங்­களில் மூன்று தசாப்­தங்­க­ளுக்கும் மேலாக தொடர்ச்­சி­யாக நடை­பெற்ற ஆயு­த­மோதல் சூழ்­நிலை கார­ண­மாக அல்­லது சூறா­வளி, சுனாமி அல்­லது வெள்­ளப்­பெருக்கு போன்ற இயற்கைச் சீற்­றங்கள் கார­ண­மாக தமது வாழி­டத்­தை­விட்டு மக்கள் வெளி­யேறி இடம்­பெ­யர்ந்து வாழ்ந்­தமை – வாழ்ந்­து­வ­ரு­கின்­றமை புதிய விட­ய­மல்ல. உள்­நாட்டில் இடம்­பெயர்ந்­த­வர்கள் பல்­வேறு நலன்­புரி நிலை­யங்­க­ளிலும் புதிய குடி­யேற்றக் கிரா­மங்­க­ளிலும் வாழு­கின்­றனர்.

 பொது­வா­கவே இடம்­பெ­யர்ந்­த­வர்கள் தமது பூர்­வீக வாழி­டத்தை விட்டு அல்­லது விவ­சாயக் காணி­களை விட்­டுச்­சென்­றுள்­ள­தனைக் காணலாம். நாட்டின் அர­சியல் மற்றும் இன­ரீ­தி­யான செயற்­பா­டு­க­ளினால், திட்­ட­மிட்ட இனப்­ப­ரம்பல் நிலை­மை­களில் மாற்­றங்­களைச் செய்­வ­தற்­காக, காணி­களின் உட­மைகள் புதிய கொள்­கை­களின் அடிப்­ப­டையில் கடந்­த­கா­லங்­களில் முன்­னெ­டுக்­கப்­பட்­டுள்­ள­மை­யினைக் காணலாம். இந்த மக்­க­ளுக்குச் சொந்­த­மான காணி­களில் வேறு எவ­ரேனும் குடி­யேறி உடமை கொண்­டி­ருந்தால், அத்­த­கைய குடி­யே­றிகள் பத்து வரு­டங்­க­ளுக்கு மேலாக வாழ்ந்­து­வந்­தி­ருந்தால், ஆட்­சி­யு­ரிமை அடிப்­ப­டையில் அந்த ஆத­னத்தின் உரித்தைக் கோரு­வ­தற்கு சட்­டத்தில் இட­மி­ருக்­கின்­றது. அதே­நேரம், வெளி­நாட்டில் புலம்­பெ­யர்ந்து

வாழு­ப­வர்­க­ளுக்கு எதி­ராக ஆட்­சி­யு­ரிமை கோர­மு­டி­யாது என்ற சட்ட ஏற்­பாடு காணப்­ப­டு­வதால், வெளி­நாட்­டி­லுள்ள அக­திகள் எப்­போது திரும்­பி­வந்­தாலும் அவர்­க­ளு­டைய காணி­களின் உரித்தை அல்­லது சொந்­தத்தை நிலை­நாட்ட முடியும்.

தற்­போது எழுந்­துள்ள சமா­தானச் சூழலில் மக்கள் நாட்டின் எப்­பா­கத்­திற்கும் செல்­வ­தற்கும், தமது காணி­களில் குடி­யி­ருப்­ப­தற்கும் வாழ்­வா­தாரக் காணி­களை மீளப்­பெ­று­வ­தற்­கு­மான சந்­தர்ப்பம் எழுந்­துள்­ளது. ஆனால், குறிப்­பாக வடக்கு மற்றும் கிழக்கு மாகா­ணங்­களில் மக்­க­ளுக்குச் சொந்­த­மான கைவி­டப்­பட்ட காணிகள், வீடுகள், ஏனைய கட்­ட­டங்கள் மற்றும் விவ­சாய நிலங்கள் என்­பன நிறை­யவே காணப்­ப­டு­கின்­றன. 

தம்­மு­டைய ஆத­னங்­களை இனங்­கண்டு கொள்­ள­மு­டி­யாமை, உரிய ஆவ­ணங்கள் அல்­லது பதி­வே­டுகள் அழிந்­து­போ­யுள்­ளமை, அந்த ஆத­னங்­களில் வேறு ஆட்கள் குடி­யி­ருக்­கின்­றமை, விவ­சாய நிலங்­களில் பிறரால் பயிர்ச்­செய்கை மேற்­கொள்­ளப்­ப­டு­கின்­றமை மற்றும் இரா­ணு­வத்தின் அதி­யுயர் பாது­காப்பு வலயம் போன்ற பல்­வேறு பிரச்­சினை­க­ளுக்கு மக்கள் முகங்­கொ­டுத்து வரு­கின்­றனர். இவ்­வா­றான பிரச்­ச­ினை­களை ஓர­ள­வுக்­கா­வது தீர்க்கும் நோக்­கத்தில், புதிய அர­சாங்­க­மா­னது ஆட்­சி­யு­ரிமைக் கட்­டளைச் சட்­டத்தின் பிரிவு 3 இனு­டைய ஏற்­பா­டு­க­ளா­னவை குறிப்­பாக இரண்டு வரு­டங்­க­ளுக்கு விசேட ஏற்­பாட்டுச் சட்­டத்தின் மூல­மாக நிறுத்திவைத்­துள்­ளது. அதா­வது, ஆயு­த­மோதல் கார­ண­மாக தம்மு­டைய ஆதன உரி­மையை நிலை­நாட்ட முடி­யாமல் போன­வர்கள் தமது ஆதன உரி­மை­களைக் கோரி வழக்­கு தொடுக்கும்­போது, எந்த நபரும் எதி­ரு­டமை என்ற அடிப்­ப­டையில் ஆட்­சி­யு­ரிமைக் கோரிக்­கையை முன்­வைக்க முடி­யாது.

2016ஆம் ஆண்டின் 5ஆம் இலக்க, ஆட்­சி­யு­ரிமை (விசேட ஏற்­பா­டுகள்) சட்டம் 

இலங்­கையில் நடை­பெற்ற யுத்த செயற்­பா­டு­க­ளினால் காணி மற்றும் அசையா ஆத­னங்­களின் உட­மை­யு­ரித்தை சட்ட வழக்­குகள் மூல­மாக நீதி­மன்­றத்தில் தமது மீள நிலை­நி­றுத்­து­வதில் இய­லா­மை­யு­டை­ய­வர்­களை இய­லச்­செய்­வ­தனை நோக்­க­மாகக் கொண்டே இந்த விசேட சட்டம் கொண்­டு­வ­ரப்­பட்­டுள்­ளது. 1983ஆம் ஆண்டு மே மாதம் 1ஆம் திகதி தொடக்கம் 2009ஆம் ஆண்டு மே மாதம் 18ஆம் திக­தி­வ­ரை­யான காலப்­ப­கு­திக்குள் இலங்­கையில் நடை­பெற்ற ஆயு­த­மோதல் சூழ்­நி­லைகள் கார­ண­மாக அத்­த­கை­ய­வர்கள் பாதிப்­புக்­குள்­ளா­ன­வர்­க­ளாக இருந்­தி­ருத்தல் வேண்டும்.

இச்­சட்­டத்தின் இரண்டாம் பிரி­வா­னது ஆட்­சி­யு­ரிமைக் கட்­ட­ளைச்­சட்­டத்தின் பிரிவு 3 கீழ் எந்­த­வொரு நப­ருக்கும் ஆட்­சி­யு­ரிமை அடிப்­ப­டையில் உரித்­து­டமைக் கோரிக்­கையை ஆயுத மோத­லினால் பாதிக்­கப்­பட்டு இய­லா­மை­யு­டை­ய­வ­ராக இருந்த உண்­மை­யான சொந்­தக்­காரர் தொடர்பில் எதி­ரு­ட­மையைக் கொண்­டி­ருக்­க­மாட்டார் என்று ஏற்­பாடு செய்­கின்­றது.

உதா­ர­ண­மாக, 'ஆ' என்­பவர் 'அ' என்­ப­வ­ரு­டைய காணியில் உட­மையைத் தொடங்­கு­கின்ற காலப்­ப­கு­தியில், 'அ' (1983ஆம் ஆண்டு மே மாதம் 1ஆம் திகதி தொடக்கம் 2009ஆம் ஆண்டு மே மாதம் 18ஆம் திக­தி­வ­ரை­யான காலப்­ப­கு­திக்குள் இலங்­கையில் நடை­பெற்ற ஆயு­த­மோதல் சூழ்­நி­லைகள் கார­ண­மாக) பாதிக்­கப்­பட்­ட­வ­ராக இருந்­துள்ளார். அவ்­வாறு, 'அ' பாதிக்­கப்­பட்­ட­வ­ராகத் தொடர்ந்­தி­ருக்­கின்ற காலம்­வரை, 'ஆ' வுக்கு அக்­கா­ணியின் மீது ஆட்­சி­யு­ரிமை கோர­மு­டி­யாது.

ஆட்­சி­யு­ரிமைக் கட்­டளைச் சட்­டத்தின் 13ஆவது பிரிவின் கீழ், சில சந்­தர்ப்­பங்­களில் முப்­பது வரு­டங்கள் அத்­த­கைய எதி­ரு­ட­மையைக் கொண்­டி­ருக்க வேண்டும் என்ற தேவைப்­பாடு உள்­ளது. ஆயினும், பாதிக்­கப்­பட்ட நபர் என்­பவர் வெளி­நாட்டில் இருந்தால், முப்­பது வரு­டத்­துக்கு அதி­க­மாக இருப்­பினும், அவ­ருக்கு எதி­ராக ஆட்­சி­யு­ரிமை கோர­மு­டி­யாது.

அவ்­வாறு பாதிக்­கப்­பட்ட ஒரு நப­ராக இருந்­த­வே­ளையில் ஒருவர் இறந்­தி­ருப்பின், அவ­ரு­டைய வாரி­சுகள் அத்­த­கைய கோரிக்கை பாதிக்­கப்­பட்ட நபர் என்ற அடிப்­ப­டை­யி­லேயே இச்­சட்­டத்தின் கீழான நன்­மையை அனு­ப­விக்க உரித்­து­டை­ய­வர்கள்.

இந்த விசேட ஏற்­பா­டுகள் சட்­ட­மானது நடை­மு­றைக்கு வந்த திக­தி­யி­லி­ருந்து இரண்டு வரு­டங்­க­ளுக்கு மாத்­திரம் பய­னு­று­தி­மிக்­க­தாக இருக்கும் என்று பிரிவு 4 குறிப்­பி­டு­கின்­றது. அதா­வது, இச்­சட்டம் 2016ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் 29ஆம் திகதி வர்த்­த­மா­னியில் பிர­சு­ரிக்­கப்­பட்­ட­துடன் நடை­மு­றைக்கு வந்­துள்­ளது. 2018ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் 28ஆம் திகதி­வரை இச்­சட்­டத்தின் நன்­மை­களை ஆயு­த­மோ­த­லினால் பாதிக்­கப்­பட்ட மக்கள் அனு­ப­விக்க முடியும்.

இச்­சட்­டத்தின் சலு­கைகள் அரச காணிகள் தொடர்­பி­லான சட்­டங்­க­ளின்கீழ் வழங்­கப்­பட்­டுள்ள ஏதேனும் காணிக்கு அல்­லது அக்­காணி தொடர்­பான கோரிக்­கை­க­ளுக்கு பாவிக்­கப்­ப­ட­மு­டி­யாது.

ஆட்­சி­யு­ரிமைச் (விசேட ஏற்­பா­டுகள்) சட்டத்தின் நோக்­கெல்­லையும் தாக்­கமும்

இந்த விசேட சட்­ட­மா­னது குறிப்­பாக இரண்டு வரு­டங்­க­ளுக்கு மாத்­திரம் மட்­டுப்­பாட்டைக் கொண்­டி­ருப்­பது குறிப்­பாக வடக்கு, கிழக்கு மக்­களைப் பொறுத்­த­வரையில் பாத­க­மா­ன­தாகும். ஆயு­த­மோதல் கார­ண­மாக இடம்­பெ­யர்ந்த மக்கள், 2015ஆம் ஆண்டு ஜன­வரி மாதம் பத­விக்கு வந்த அர­சாங்­கத்தின் தாரா­ளக்­கொள்­கைகள் கார­ண­மாக, தமது சொந்த இடங்­களை நாடிச்­செல்லத் தொடங்­கி­யுள்­ளனர். இன்னும் ஆயி­ரக்­க­ணக்­கான மக்கள் நலன்­புரி முகாம்­க­ளிலும் தற்­கா­லிக வசிப்­பி­டங்­க­ளிலும் குடி­ய­மர்த்­தப்­பட்­டுள்­ளனர். 

இந்த சூழ்­நி­லை­களில் இரண்டு வருடம் என்ற விளை­வு­காலம் என்­பது போது­மா­ன­தாக இருக்­க­மாட்­டாது. தமது காணி­களை இனங்­கா­ணுதல், ஆவ­ணங்­களை மீளத்­தேடி­யெ­டுத்தல், உயி­ரு­ட­னுள்ள வாரி­சுகள் தமது உரித்தை நிலை­நாட்­டுதல் மற்றும் வழக்குத் தொடுப்­ப­தற்கு தயா­ரா­குதல் என்­பன மிகவும் சிக்­க­லுக்­கு­ரி­யதும் சவால்­மிக்­க­து­மாகும். இந்த இரண்டு வருடம் என்ற சந்­தர்ப்­பத்தை தவ­ற­விட்டால், தமது உரி­மையை நிலை­நாட்­டு­கின்ற வாய்ப்­பையும் பாதிக்­கப்­பட்ட மக்கள் இழந்­து­விடு­வார்கள்.

இலங்­கையின் ஆயு­த­மோதல் சூழ்­நி­லைகள் கார­ண­மான இடம்­பெ­யர்வு பல்­வேறு கால­கட்­டங்­க­ளிலும், மூன்று இன மக்­க­ளையும் பாதித்­துள்­ளது. அர­சியல் சூழ்­நி­லைகள், அச்­சு­றுத்­து­கின்ற பின்­ன­ணிகள் மற்றும் நிச்­ச­ய­மற்ற எதிர்­பார்ப்­புக்கள் என்­பன கார­ண­மாக, தமது காணி­களை, கட்­ட­டங்­களை மிகவும் குறைந்த விலைக்கு மற்­றொரு இனத்­த­வ­ருக்கு விற்­பனை செய்­துள்­ளமை அல்­லது அச்­சு­றுத்தி கைமாற்றம் செய்­துள்ள சந்­தர்ப்­பங்­க­ளுக்கு இச்­சட்டம் எத்­த­கைய தீர்­வையும் வழங்­க­வில்லை.

ஆயு­த­மோதல் தவிர்ந்த ஏனைய இயற்கை அனர்த்­தங்கள் மற்றும் அர­சியல் குழப்­பங்கள் கார­ண­மாக இடம்­பெ­யர்ந்த மக்­களின் காணி­களை அடாத்­தாகப் பிடித்­து­வைத்­துள்­ள­வர்­க­ளுக்கு எதி­ராக தமது உரி­மை­களை மீள நிறு­வு­வ­தற்­கான எந்த வாய்ப்பும் இச்­சட்­டத்தில் உள்­ள­டக்­கப்­ப­ட­வில்லை.

இச்­சட்­டத்தின் பய­னு­று­தி­மிக்க அமு­லாக்­கத்­திற்கு உள்­ளூராட்சி மன்­றங்கள், மாகாண சபைகள் மற்றும் அரச அதி­கா­ர­ ச­பை­களின் அலு­வ­லர்கள் முறை­யாகப் பயிற்­சி­ய­ளிக்­கப்­ப­டுதல் வேண்டும். அர­சாங்க நிறு­வ­னங்­களில் விசேட பிரி­வுகள் அமைக்­கப்­ப­டு­வ­துடன், விசேட ஆள­ணி­யினர் நிய­மிக்­கப்­ப­டு­தலும் வேண்டும். சில சந்­தர்ப்­பங்­களில் அரச தொழில்­நுட்ப அதி­கா­ரிகள், நில அள­வை­யா­ளர்கள் மற்றும் காணி அலு­வ­லக உத்­தி­யோ­கத்­தர்­களின் கள விஜ­யங்­களும் அறிக்­கை­களும் உரி­ய­மு­றையில் நேர்­மை­யா­கவும் விரை­வா­கவும் வழங்­கப்­ப­டுதல் வேண்டும். அரச நிறு­வ­னங்கள் வழ­மை­யான போக்­கி­னையும் இச்­சட்ட அமு­லாக்கல் விட­யத்தில் பின்­பற்­றினால், பாதிக்­கப்­பட்ட அப்­பாவி பொது­மக்கள் இச்­சட்­டத்தின் நன்­மை­யை இரண்டு வரு­டங்­க­ளுக்குள் அனு­ப­விக்க முடி­யாது போய்­விடும்.

நீதித்­து­றைக்கும் இச்­சட்ட அமு­லாக்­கத்தில் விசேட வகி­பங்­குள்­ளது. நீதி­மன்­றங்­களில் இச்­சட்­டத்தை மையப்­ப­டுத்­திய வழக்­குகள் முன்­னெ­டுக்­கப்­ப­டு­கின்­ற­போது, சட்­ட­நுட்­பங்கள் மற்றும் நுணுக்­கங்­க­ளுக்­காக பாதிக்­கப்­பட்ட மக்­களின் கோரிக்­கை­களை தாம­தப்­ப­டுத்­தா­மலும் நிரா­க­ரிக்­கா­மலும் நெகிழ்ச்­சி­யான சந்­தர்ப்­பங்கள் வழங்­குதல் வேண்டும்.

இச்­சட்­டத்தின் உள்­ள­டக்கம் மற்றும் உன்­ன­த­மாக நோக்கம் என்­ப­வற்றை வழக்­க­றி­ஞர்கள் புரிந்து கொள்­ளுதல் வேண்டும். மூன்று தசாப்­த­ங்களாகப் பாதிக்­கப்­பட்ட மக்­க­ளுக்கு மூச்­சு­வி­டு­வ­தற்கு கிடைத்­துள்ள சந்­தர்ப்­ப­மாக இத­னைக்­க­ருதி, குறைந்­தது ஒவ்­வொரு வழக்­க­றி­ஞரும் ஒரு வழக்­கை­யா­வது கட்­ட­ண­மின்றி பொறுப்­பேற்று நடத்­துதல் வேண்டும். இது­வொரு தேசிய சேவை மாத்­தி­ர­மன்றி தேசத்­தையும் நல்­லி­ணக்­கத்­தையும் கட்­டி­யெ­ழுப்­பு­வதில் நேர­டி­யா­கவும் மறை­மு­க­மா­கவும் பங்­கு­பற்­று­கின்ற வாய்ப்­பையும் வழக்­க­றி­ஞர்­க­ளுக்கு வழங்­கு­கின்­றது. மேலும், இச்­சட்­டத்தில் காணப்­ப­டு­கின்ற நடை­முறைக் குறை­பா­டு­களைச் சுட்­டிக்­காட்டி, இச்­சட்­டத்­திற்கு தேவை­யான ஏதேனும் திருத்­தங்கள் இருப்பின் அவற்­றையும் இலங்கை சட்­டத்­த­ர­ணிகள் சங்­கத்­தி­னூ­டாக பரிந்­துரை செய்­யலாம்.

குடி­யியல் சமூ­கத்­திற்கும் ஒரு பாரிய பொறுப்பு உள்­ளது. இது­வரை இச்­சட்டம் பாதிக்­கப்­பட்ட மக்­க­ளுக்குப் புரி­யும்­ப­டி­யாக எடுத்­துச்­சொல்­லப்­ப­ட­வில்லை. குறிப்­பாக, வடக்கு, கிழக்கில் வழு­கின்ற, இடம்­பெ­யர்ந்து வடக்கு, கிழக்­கிற்கு வெளியில் வாழு­கின்ற மக்­க­ளுக்கு இச்­சட்டம் பற்­றிய விழிப்­பு­ணர்வை ஏற்­ப­டுத்தி, அவ்­வாறு முன்­வ­ரு­கின்ற பாதிக்­கப்­பட்ட மக்­க­ளுக்கு சட்ட உத­வித்­திட்­டங்­களை நடை­மு­றைப்­ப­டுத்­தலாம்.

இச்­சட்டம் வீரி­ய­மாக நடை­மு­றைப்­ப­டுத்­தப்­பட்டால், ஆட்­சி­யு­ரிமை அடிப்­ப­டையில் பிற­ருக்குச் சொந்­த­மான காணி­களில் பல ஆண்­டு­க­ளாக திருத்­தங்­க­ளையும், முத­லீ­டு­க­ளையும், பண்ணை மற்றும் பயிர்ச்­செய்­கை­யிலும் செல­வு­களைச் செய்­துள்ள புதிய பாதிக்­கப்­பட்­ட­வர்­களுக்கு இச்­சட்டம் பாதகமாகும். இதற்­கான மாற்­றுத்­திட்­டத்தை அர­சாங்கம் விரை­வாக வகுக்­க­வேண்­டிய தேவையும் உள்­ளது.

எல்லா சந்­தர்ப்­பங்­க­ளிலும் நீதி­மன்­றங்­களில் இச்­சட்­டத்தின் கீழான கோரிக்­கை­களை முன்­வைத்து தீர்­வு­களை நாடு­வது, பாதிக்­கப்­பட்ட எல்லா மக்­க­ளுக்கும் பொருத்­த­மா­ன­தா­க­மாட்­டாது. ஆகையால், விசேட காணி மத்­தி­யஸ்தர் முறை­மை­யொன்­றினை அறி­முகம் செய்து, தீர்­வு­களைக் காண்­ப­தற்­கான மாற்று வழி­மு­றை­க­ளையும் அறி­மு­கப்­ப­டுத்­து­கின்ற பொறுப்பு அர­சாங்­கத்­திற்கு உள்­ளது.

இறுதியாக, பாதுகாப்புப் படையினரால் இடங்கொள்ளப்பட்டுள்ள பொதுமக்களின் காணி, கட்டடங்கள் தொடர்பில் இன்னும் எத்தகைய சாதகமான தீர்வுகளும் முழுமையாக வழங்கப்படவில்லை. இச்சட்டத்திலும் அதற்கான எத்தகைய வாய்ப்புகளும் இல்லை. ஏனெனில், தனி­யா­ரினால் இடங்­கொள்ளப்பட்­டுள்ள காணி­களை இச்­சட்­டத்தின் மூல­மாக மீளப்­பெற்றுக் கொள்­வ­தற்கு முடி­கின்ற அதே­வேளை, பார­பட்­ச­மான முறையில் பாது­காப்புப் படைகள் இடங்கொண்­டுள்ள தமது காணி­களை மீளக் கோரு­வ­தற்கு எந்த வழி­மு­றை­களும் இது வரை ஏற்­ப­டுத்­தப்­பட­வில்லை என்­பது கவலைக்குரியதாகும்.          

http://content.epaper.virakesari.lk/newspaper/Daily/main/2016-11-15#page-4

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.