Skip to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

இலங்கையில் தமிழர்களே அதிகளவில் நீரிழிவு நோயால் பாதிப்பு-மருத்துவர் அரவிந்தன் எச்சரிக்கை

Featured Replies

இலங்கையில் தமிழர்களே அதிகளவில் நீரிழிவு நோயால் பாதிப்பு-மருத்துவர் அரவிந்தன் எச்சரிக்கை
 
 
இலங்கையில்  தமிழர்களே அதிகளவில்    நீரிழிவு நோயால் பாதிப்பு-மருத்துவர் அரவிந்தன் எச்சரிக்கை
இலங்கையர்கள்  தமிழர்களே நீரிழிவு நோயினால் அதிகமாக பாதிக்கப்படுவதாக யாழ் போதனா வைத்தி யசாலை நீரிழிவு வைத்தியர் அரவிந்தன் தெரிவித்துள்ளார்.
 
உலக நீரிழிவு தினத்தை முன்னிட்டு விழிப்புணர்வு நிகழ்வு நேற்று காலை யாழ் வேம்படி மகளிர் கல்லுரி மண்டபத்தில் இடம்பெற்றது.இதன் போது  யாழ் போதனா வைத்தியசாலை நீரிழிவு வைத்தியர் அரவிந்தன் உரையாற்றும் போதே  மேற்கண்டவாறு தெரிவித்தார். அவர் தனதுரையில் மேலும்   தெரிவித்ததாவது,
 
உலகளாவிய ரீதியில் நீரிழிவு நோயாளிகளின் எண்ணிக்கை சிறிது சிறிதாக அதிகரித்து வருவதை காணக்கூடியதாகவுள்ளது. பொதுவாக ஒவ்வொரு 10 வருடமும் நீரிழிவு நோயாளிகளின் எண்ணிக்கை சில நாடுகளில் இரட்டிப்பாகி வருகின்றது. உலகிலுள்ள முதல் 10 நீரிழிவு நாடுகள் பட்டியலில் சீனா முதல் இட த்திலும் இந்தியா இரண்டாம் இடத்திலும் காணப்படுகின்றன. இன்னும் 20 வருடங்களில் இந்தியா முதலாம் இடத்தை பிடிக்க சீனா இரண்டாம் இடத்திற்கு தள்ளப்பட்டுவிடும். இதே போல தென்னாசிய நாடுகளான பாகிஸ்தான், பங்களாதேஷ் போன்ற நாடுகளும் இன்னும் 20 வருடங்களில் முதல் 10 இடங்களுக்குள் வந்து விடும் 
 
வருந்தத்தக்க விடயம் என்னவெனில் இலங்கையினுடைய நிலவரம் 1980 இல் இலங்கையில் நீரிழிவு நோயா ளிகளின் எண்ணிக்கை 2.5 சதவீதம் தொடக்கம் 3 சதவீதமாக காணப்பட்டது. அதேபோல 2005 இல் வடக்கு, கிழக்கு தவிர்ந்த இலங்கை முழுவதும் மேற்கொள்ளப்பட்ட ஆய்வின்படி 12 சதவீதமானவர்கள் நீரிழிவு நோயால் பாதிக்கப்பட்டிருந்தார்கள். 2013 ஆம் ஆண்டு மேற்கொள்ளப்பட்ட ஆய்வின்படி கொழும்பு மாநக ரில்  23 சதவீதமானவர்கள் நீரிழிவு நோயினால் பாதிக்கப்பட்டிருந்தனர். 
 
அந்த ஆய்வின்படி இனக்குழுமங்களை ஒப்பிட்டு ஒரு ஆய்வினையும் வெளிப்படுத்தியிருந்தனர். அதன்படி இலங்கைத் தமிழர்களின் நீரிழிவு சதவீதம் மிக அதிகமாகவும் இரண்டாமிடத்தில் முஸ்லிம்களும் மூன்றாம் இடத்தில் சிங்களவர்களும் நான்காம் இடத்தில் மலையக தமிழர்களும் இருந்தார்கள். ஒரே நாட்டில் வசிக்கும் ஒரே மக்கள் ஆனாலும் நீரிழிவின் தாக்கம் வேறுபடுகின்றது என்ற கேள்வியெழக்கூடும் இதற்கு காரணம் எமது வாழ்க்கை   நடமுறைகளிலுள்ள வித்தியாசம்தான்.  
 
உதாரணமாக கொழும்பு மாவட்டத்தில் 23 சதவீதமான நீரிழிவு நோயாளிகள் உள்ள போதும் பதுளை மாவ ட்டத்தில் 6 சதவீதமாக காணப்படுகின்றது. உடற்பருமன் அதிகரிக்கின்ற போது நீரிழிவு நோயின் தாக்கம் அதிகரிக்கின்றது அதேபோல ஒருவருடைய வருமானம் அதிகரிக்கின்ற போதிலும் நீரிழிவின் தாக்கம் அதிகரிக்கும். ஒருவருடைய கல்வி நிலை அதிகரிக்கின்ற போதிலும் நீரிழிவு நோய் அதிகரிக்கும். நீரிழிவு நோய்க்கு பல காரணங்கள் உண்டு நாம் அனைவரும் ஒன்றுகூடி இந்த நீரிழிவு தாக்கத்திலிருந்து விடுபட வேண்டும்.
 
மேற்கத்தேய நாடுகளில் கூறுவார்கள் 40 வயதிற்கு மேற்பட்டவர்கள் நீரிழிவு நோய் இருக்கின்றதா என பரிசோதனை மேற்கொள்ளவேண்டும். ஆனால் தென் ஆசிய நாடுகளில் மிகக்குறைந்த வயதிலேயே நீரிழிவின் தாக்கம் ஏற்படுகின்றது. ஆகவே மிகக்குறைந்த வயதில் நீரிழிவு உள்ளதா என பரிசோதிப்பது அவசியமானது. இதற்கு மிகவும் இலகுவான பரிசோதனைகள் உள்ளது அதைத்தான் இன்று பலர் சமுக மட்டத்தில் செய்து கொண்டுள்ளனர்.
 
நீரிழிவு நோய் ஏற்பட்டால் பல குணம்குறிகள் இருக்கும். அதிகமாக சிறு நீர் கழித்தல் , உடல் மெலிதல் , அதிக தாகம் என்பன இருக்கும். ஆனால் நீரிழிவு நோயாளர்களில் இரண்டு வீதமானோர் உள்ளனர். இரண்டாவது வகை நோயாளர்கள் எந்தவொரு குணம் குறியும் இல்லாமல் கூட நீரிழிவு தாக்கத்திற்கு உட்படலாம். ஆகவே ஒருவர் உடற்பருமனாகவும் குணம் குறிகளும்  இருந்தால் கட்டாயமாக நீரிழிவு தொடர்பான பரிசோதனைகளை மேற்கொள்ளுதல் வேண்டும்.  நீரிழிவு நோய் என்பது தொடர்கின்ற நோய் ஆகவே நீரிழிவு நோயிருக்குமாறு இருந்தால் தொடர்ச்சியாக வைத்தியரிடம் சிகிச்சை பெறுதல் அவசியம்.  எனவே நாம் அனைவரும் ஒன்றிணைந்து நீரிழிவு நோயை கட்டுப்படுத்துதல் அவசியமானது.

http://www.onlineuthayan.com/news/20177

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.