Skip to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

வடக்கு பாடசாலைகளை உன்னிப்பாக கண்காணிக்கிறது மாகாண கல்வியமைச்சு

Featured Replies

வடக்கு பாடசாலைகளை உன்னிப்பாக கண்காணிக்கிறது மாகாண கல்வியமைச்சு
 
 
வடக்கு பாடசாலைகளை உன்னிப்பாக கண்காணிக்கிறது மாகாண கல்வியமைச்சு
வடமாகாணத்தில் உள்ள பாடசாலைகளை எமது கல்வி அமைச்சானது உன்னிப்பாக கவனித்து வருகி ன்றது.குறிப்பாக யாழ்ப்பாண கல்வி வலயம்,வலிகாம கல்வி வலயம்,ஆகிய கல்வி வலயங்களுக்கு உட்பட்ட பாடசாலைகளின்அபிவிருத்தி,கல்வி நடவடிக்கைகளில் நாம் நேரடியான கவனத்தினை கொண்டுள்ளோம் என யாழ்.சுன்னாகம் இராமநாதன் பெண்கள் கல்லூரியின் வருடாந்த பரிசளிப்பு நிகழ்வில் பிரதம விருந்தி னராக கலந்து  கொண்ட வடக்கு  மாகாண கல்வி அமைச்சின் செயலாளர் ஆர்.ரவீந்திரன்மேற்கண்டவாறு   தெரிவித்துள்ளார்.அவர் தனதுரையில் மேலும் தெரிவித்ததாவது
 
"அண்மையில் உள்ள பாடசாலை நல்ல பாடசாலை" எனும் கருப்பொருளுக்கு அமைய பாடசாலைகளின் அபிவிருத்தி வேலைகளை ஆரம்பித்துளோம்.குறிப்பாக பாசாலைகளின் கட்டட தேவைகளை பூர்த்தி செய்யும் பொருட்டு இப்பாடசாலைக்கு 30 மில்லியன் ரூபா செலவில் இரண்டு மாடி கட்டடம் அமைப்ப தற்கான நடவடிக்கைகளை எடுத்துள்ளோம்,மேலும் 2020 ஆம் ஆண்டு "ஸ்மாட் பாடசாலை" எனும் பெயரை பெறும் அளவிற்கு நாம் யாழ் மாவட்ட பாடசாலைகளை அபிவிருத்தி செய்து வருகின்றோம்.
 
 "ஸ்மாட் பாடசாலை" என்று நாம் இனம் காணும் பாடசாலைகள் கல்வி,விளையாட்டு,சமயம்,கலாச்சாரம், போன்ற அடிப்படை விடயங்கள் பூர்த்தி செய்யுமானால் 2020 ஆம் ஆண்டு எமது இலக்கு நிறைவேறும்.கல்வி கற்பதற்கும்,கல்வியைபுகட்டுவதற்கும் ஏற்ற பருவம் ஆரம்ப கல்வியான தரம் 1-5 வரையான காலப்பகு தியாகும்.இந்த வயதில்  உள்ள  பிள்ளைகளின் கற்றல் நடவடிக்கைகளில் ஆசிரியர்கள்,பெற்றோர்கள்  கவ னம் செலுத்த வேண்டும்.
 
ஆரம்ப கல்வியை கற்பிக்கக் கூடிய,பயிற்றுவிக்கப்பட்ட ஆசிரியர்கள் எமது வட மாகாணத்திலேயே அதிக மாக உள்ளனர்.புள்ளிவிபரத்தின் படி ஆரம்ப கல்வியை கற்பிக்க கூடிய ,பயிற்றுவிக்கப்பட்ட ஆசிரியர்கள் வடமாகாணத்தில் 70 வீதமானோர் காணப்படுகின்றனர்.மேலும் தரம் 5 புலமைப் பரிசில் பரீட்சையில் 70 புள்ளிகளுக்கு  மேலே  பெற்றவர்கள் வட மாகாணத்தில் 78.2 வீதமாக  காணப்படுகின்றது.தரம் 1-5 வரை உள்ள  பாடசாலைகள் ஒரு  வகுப்பு பிரிவில் 32 மாணவர்களை வைத்திருக்க முடியும்.
 
இம்முறை எமது கல்வி அமைச்சினால் ஒதுக்கப்பட்ட நிதியின் கீழ் வடக்கு மாகாணத்தின் கலாச்சா ரத்தினை வளர்க்கும் நோக்கில் செயற்படும் பாடசாலைகளில் கலை அம்சங்களை வளர்க்கும் நோக்கில் இயல்,இசை,நாடகம் என்பவற்றை அரங்கேற்றும் "தியேட்டர்" இரண்டினை அமைப்பதற்காக நிதி ஒதுக்கப் ப்ட்டுள்ளது.இதனை நாம் யாழ்ப்பணம் இராமநாதன் கல்லூரி,முல்லைத்தீவு பாடசாலைக்கும்  வழங்கியு ள்ளோம்.
 
வடக்கில் தொண்டர் ஆசிரியர்கள் வெற்றிடம் நிரப்பப்படவில்லை என்ற குற்றச்சாட்டு உண்டு,அதற்கான பதிலாக நான்  கூறுவது ஒவ்வொரு பிரதேச செயலகங்களின் கீழ்  உள்ள பாடசாலைகளில் உள்ள ஆசிரி யர்கள்ஓய்வுபெறும் போது அதற்கான வெற்றிடங்கள் படிப்படியாக நிரப்பப்பட்டு வருகி ன்றன. யாழ்ப்பா ணத்தில் உள்ள பெண்கள்  பாடசாலைகளில் 3 ஆவது பெரிய பெண்கள் பாடசாலையாக 2020 இல் இப் பாடசாலை விளங்கும் என்று  நான் நம்புகின்றேன்,அதற்காக நாம் எல்லாரும் ஒன்றாக உழைக்க வேண்டும். என  தெரிவித்தார்.

http://www.onlineuthayan.com/news/20207

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.