Skip to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

உறவுகளை நினைவுகூரும் உரிமை வேண்டும் : தமிழ் அரசியல் தலைவர் கோரிக்கை

Featured Replies

உறவுகளை நினைவுகூரும் உரிமை வேண்டும் : தமிழ் அரசியல் தலைவர் கோரிக்கை

 

 

v.jpg

30 வருட யுத்தத்தில் உயிர் நீத்த போராளிகள் பொது மக்களுக்கு சபையில் அஞ்சலி செலுத்திய தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் வன்னி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் சிவசக்தி ஆனந்தன் கார்த்திகை மாதத்தில் உயிர் நீத்தவர்களுக்கு அஞ்சலி செலுத்தும் உரிமையை தமிழ் மக்களுக்கு வழங்க வேண்டும் எனவும் வலியுறுத்தினார்.

பாரளுமன்றத்தில் இன்று 2017 ஆம் ஆண்டுக்கான வரவு – செலவுத் திட்டத்தின் மூன்றாம் நாள் விவாதத்தில் கலந்து கொண்டு உரையாற்றுகையிலேயே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

அவர் மேலும் உரையாற்றுகையில்;

யுத்தத்தில் உயிர் நீத்த போராளிகள் பொது மக்களுக்கு இந்த கார்த்திகை மாதத்தில் எனது மரியாதையையும் அஞ்சலியையும் இந்த சபையில் தெரிவித்துக் கொள்கின்றேன். யுத்தத்தில் உயிர் நீத்த போராளிகளையும் பொது மக்களையும் நினைவு கூர்ந்து அஞ்சலி செலுத்துவதற்கு கார்த்திகை மாதமான இம் மாதத்தில் அரசாங்கத்தினால் சுதந்திரம் வழங்கப்படவில்லை. அந்த மக்கள் உயிர் நீத்தவர்களை நினைவுகூருவதற்கு உரிமையுடையவர்கள் என்பதை நல்லாட்சி அரசாங்கம் புரிந்து கொண்டு அந்த உரிமையை வழங்க வேண்டும் என இந்த சபையில் பகிரங்கமாக கோரிக்கை விடுக்கின்றேன்.

அத்தோடு யத்தத்தில் உயிர் நீத்த இழப்புக்களைச் சந்தித்தவர்களுக்கு சர்வதேச நியமங்களுக்கு அமைவாக உரிய இழப்பீடுகளை அரசாங்கம் வழங்குவதுடன் அதற்கான பொறுப்புக் கூறலையும் செய்ய வேண்டும் எனவும் கோரிக்கை விடுக்கின்றேன் என்றார்.

http://www.virakesari.lk/article/13506

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.