Skip to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

முதல்வர் விக்கியின் உறுதிமொழியை அடுத்து சுகாதார ஊழியர்களின் பணிப்புறக்கணிப்பு கைவிடப்பட்டது-நாளைமுதல் வழமைபோல் ஊழியர்கள் கடமையில்

Featured Replies

முதல்வர் விக்கியின் உறுதிமொழியை அடுத்து சுகாதார ஊழியர்களின் பணிப்புறக்கணிப்பு கைவிடப்பட்டது-நாளைமுதல் வழமைபோல் ஊழியர்கள் கடமையில்
 
 
 
முதல்வர் விக்கியின் உறுதிமொழியை அடுத்து சுகாதார ஊழியர்களின் பணிப்புறக்கணிப்பு கைவிடப்பட்டது-நாளைமுதல் வழமைபோல் ஊழியர்கள் கடமையில்
நிரந்தர நியமனம் வழங்குமாறு வலியுறுத்தி வட பிராந்திய ஐக்கிய தொழிலாளர் சங்கத்தினர் மேற்கொண்ட பணிப்பகிஷ்கரிப்பு இன்று மாலை   தற்காலிகமாக கைவிடப்பட்டுள்ளது.
 
வடமாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரனின் கோரிக்கைக்கு அமைய வடமாகாண சபை உறுப்பினர் எம்.கே. சிவாஜிலிங்கம் வட பிராந்திய ஐக்கிய தொழிலாளர் சங்க ஊழியர்களுடன் மேற்கொண்ட பேச்சுவார்த்தையை தொடர்ந்தே பணிப்பகிஷ்கரிப்பு தற்காலிகமாக கைவிடப்பட்டுள்ளது.
1479226617_download.jpg
எதிர்வரும் மூன்று மாத காலத்திற்குள் தற்காலிக ஊழியர்களுக்கு நிரந்தர நியமனம் வழங்கப்படும் என உறுதிமொழி வழங்கப்பட்டுள்ளது.
 
யாழ்ப்பாணம் – பருத்தித்துறை வீதியில் உள்ள மாநகரசபை அலுவலகத்திற்கு முன்னால் கடந்த 7 ஆம் திகதி முதல் வட பிராந்திய ஐக்கிய தொழிலாளர் சங்கத்தினர் தமக்கு நிரந்தர நியமனம் வழங்குமாறு வலியுறுத்தி பணிப்புறக்கணிப்பில் ஈடுபட்டனர்.
 
இதனால் யாழ்ப்பாண நகரப் பகுதியில் குப்பைகள் அகற்றப்படாமையினால் தொற்று நோய் பரவும் அபாயம் ஏற்பட்டிருந்தது.
1479226635_unnamed%20%281%29.jpg
இந்நிலையில் தமது கோரிக்கைக்கு இதுவரை உரிய தீர்வு வழங்கப்படவில்லை என தெரிவித்து இன்றைய தினம் யாழ் மாநகர சபையின் நுழைவாயிலை மறித்து வட பிராந்திய ஐக்கிய தொழிலாளர் சங்கத்தினர்  முற்றுகைப் போராட்டத்தில் ஈடுபட்டிருந்தனர்.
1479226655_unnamed%20%283%29.jpg
இதனையடுத்து யாழ் பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரிக்கும்  போராட்டத்தில் ஈடுபட்டிருந்த ஊழியர்களுக்கும் இடையில் இடம்பெற்ற பேச்சுவார்த்தையை அடுத்து முற்றுகைப் போராட்டத்தை தற்காலிகமாக கைவிட்ட ஊழியர்கள் பணிப்புறக்கணிப்பில் ஈடுபட்டிருந்தனர்.
 
அத்துடன் யாழ்பாணம் பண்ணை பகுதியில் தேங்கி கிடக்கும் கழிவுகளை பருத்தித்துறை பிரதேச சபையின் சுத்திகரிப்பு பணியாளர்கள் மூலம் அகற்றுவதற்கு மேற்கொள்ளப்பட்ட முயற்சிக்கு வட பிராந்திய ஐக்கிய தொழிலாளர் சங்கத்தினர் எதிர்ப்பு தெரிவித்தனர்.
 
இந்த நிலையில் வடமாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரனின் கோரிக்கைக்கு அமைய வடமாகாண சபை உறுப்பினர் எம்.கே. சிவாஜிலிங்கம் வட பிராந்திய ஐக்கிய தொழிலாளர் சங்க ஊழியர்களுடன் பேச்சுவார்த்தை மேற்கொண்டார்.
1479226677_unnamed.jpg
தற்காலிகமாக பணியாற்றும் ஊழியர்களுக்கு மூன்று மாதகாலம் அல்லது ஆறு மாத காலத்தி ற்குள் நிரந்தர நியமனம் வழங்குவதாக உறுதியளிக்கப்பட்டதை தொடர்ந்து பணிப்புற க்கணிப்பு தற்காலிகமாக கைவிடப்பட்டுள்ளது.
 
இதனையடுத்து வடமாகாண சபை உறுப்பினர் எம்.கே. சிவாஜிலிங்கத்தை தமது தோள் மேல் தூக்கியவாறு வட பிராந்திய ஐக்கிய தொழிலாளர் சங்கத்தினர் மகிழ்ச்சியினை வெளிப்படு த்தினர்.
 
அத்துடன் நாளை முதல் பணிக்கு திரும்பவுள்ளதாகவும் வட பிராந்திய ஐக்கிய தொழிலாளர் சங்கத்தினர் அறிவித்துள்ளனர்.
 
இதேவேளை முன்னதாக  இன்று மாலை 3.30 மணியளவில் கொட்டடிப்பகுதி குப்பைகளை யாழ்ப்பாண, நல்லூர், திருநெல்வேலி, ஊர்காவற்துறை பிரதேச சபையினர் வருகை தந்து அகற்றினர். கலகம் அடக்கும் பொலிஸாரும் அப்பகுதிக்கு வருகை தந்ததுடன் இதற்கு எதி ர்ப்பு தெரிவித்த மாநகர சபை ஊழியர்களை தமது கட்டுப்பாட்டுக்குள் வைத்தனர். 
 
 
 

http://www.onlineuthayan.com/news/20221

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.