Skip to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

சர்வஜன வாக்கெடுப்பு தொடர்பான சம்பந்தனின் கோரிக்கை எமக்கு கவலையை ஏற்படுத்தியுள்ளது

Featured Replies

சர்­வ­ஜன வாக்­கெ­டுப்பு தொடர்­பான சம்­பந்­தனின் கோரிக்கை எமக்கு கவ­லையை ஏற்­ப­டுத்­தி­யுள்­ளது

delan-0e9faaeae33730db6d86df78e166674ac3aa66dc.jpg

 

(ரொபட் அன்­டனி)
அர­சியல் கள யதார்த்தத்தை புரிந்­து­கொள்­ள­வில்­லையா; டிலான் கேள்வி 
சர்­வ­ஜன வாக்­கெ­டுப்­புக்கு செல்­லாமல்  பொலிஸ், காணி அதி­கா­ரங்­க­ளுடன்  மூன்­றி­லி­ரண்டு பெரும்­பான்­மையில்  அர­சி­ய­ல­மைப்பு திருத்­தமே சிறந்தது

புதிய அர­சி­ய­ல­மைப்பு உரு­வாக்­கப்­பட்டு சர்­வ­ஜன வாக்­கெ­டுப்­பிற்கு சென்றால் தமிழ் மக்கள் எதிர்­பார்க்­கின்ற உச்­ச­பட்ச அதி­காரப் பகிர்வு கிடைக்­காமல் போய்­விடும் என்­பது கூட்­ட­மைப்பின் தலைவர் சம்­பந்­த­னுக்கு தெரி­யாதா? அவர் இந்த விட­யத்தில் சர்­வ­ஜன வாக்­கெ­டுப்­பினை கோரி­ய­தா­னது அதி­காரப் பகிர்­வினை வலி­யு­றுத்தும் எமக்கு கவ­லையை ஏற்­ப­டுத்­தி­யுள்­ளது என்று ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்­சியின் பேச்­சா­ளரும் இரா­ஜாங்க அமைச்­ச­ரு­மான டிலான் பெரேரா தெரி­வித்தார்.  

பொலிஸ் மற்றும் காணி அதி­கா­ரங்­க­ளுடன் மூன்றில் இரண்டு பெரும்­பான்மை பலத்­துடன் 

அதி­கூ­டிய அதி­காரப் பகிர்­வுக்கு செல்ல முடியும். ஆனால் சர்­வ­ஜன வாக்­கெ­டுப்­பிற்கு சென்றால் இது ஒன்றும் கிடைக்­காமல் போய்­விடும். இந்த நாட்டின் அர­சியல் கள யதார்த்­தத்தை எதிர்க்­கட்சித் தலைவர் புரிந்து கொள்­ளாமல் இருக்­கின்­றமை கவ­லையை ஏற்­ப­டுத்­து­கின்­றது எனவும் டிலான் பெரேரா சுட்­டிக்­காட்­டி­யி­ருக்­கின்றார். 

புதிய அர­சி­ல­மைப்பு தொடர்பில் சர்­வ­ஜன வாக்­கெ­டுப்பு நடத்­தியே இறுதி முடிவு எடுக்­கப்­படும் என அர­சி­ய­ல­மைப்பு நிர்­ணய சபையின் அமர்வில் பிர­தமர் ரணில் விக்­கி­ர­ம­சிங்க அறி­வித்­துள்­ளமை தொடர்பில் விப­ரிக்­கை­யி­லேயே சுதந்­திரக் கட்­சியின் பேச்­சாளர் மேற்­கண்­ட­வாறு குறிப்­பிட்டார். 

அவர் இந்த விடயம் குறித்து மேலும் குறிப்­பி­டு­கையில், 

கடந்த சனிக்­கி­ழமை நடை­பெற்ற அர­சி­ய­ல­மைப்பு நிர்­ணய சபையின் கூட்­டத்தில் புதிய அர­சி­ய­ல­மைப்­பா­னது சர்­வ­ஜன வாக்­கெ­டுப்­பி­னூ­டாக நிறை­வற்­றப்­படும் என பிர­தமர் ரணில் விக்­கி­ர­ம­சிங்க அறி­வித்தார். கூட்­ட­மைப்பின் தலை­வரும் எதிர்க்­கட்சித் தலை­வ­ரு­மான இரா.சம்­பந்­தனின் கோரிக்­கை­கக்கு அமை­வா­கவே பிர­தமர் ரணில் விக்­ர­ம­சிங்க இந்த கருத்தை வெ ளியிட்­டி­ருந்தார். 

இந்த இடத்தில் எதிர்க்­கட்சித் தலைவர் சம்­பந்­தனின் சர்­வ­ஜன வாக்­கெ­டுப்பு கோரிக்­கை­யா­னது அதி­காரப் பகிர்­வினை விரும்­பு­கின்ற எம்மைப் போன்­ற­வர்­க­ளுக்கு ஆச்­ச­ரி­யத்தை ஏற்­ப­டுத்­து­வ­தா­கவும் கவ­லையை தரு­வ­தா­கவும் அமைந்­தி­ருந்­தது. காரணம் தேர்தல் முறை மாற்­றத்­தையும் பொலிஸ் மற்றும் காணி அதி­கா­ரங்­க­ளுடன் கூடிய அதி­காரப் பகிர்­வையும் மூன்றில் இரண்டு பெரும்­பான்மை பலத்­துடன் நிறை­வேற்றிக் கொள்­ளலாம். அதற்கு சர்­வ­ஜன வாக்­கெ­டுப்­பிற்கு செல்ல வேண்­டிய அவ­சியம் இல்லை. 

ஆனால் நிறை­வேற்று அதி­காரம் கொண்ட ஜனா­தி­பதி முறை மாற்­றத்­துடன் தேர்தல் முறை மாற்றம் அதி­காரப் பகிர்வு ஆகிய மூன்று விட­யங்­க­ளையும் நிறை­வேற்ற வேண்­டு­மானால் சர்­வ­ஜன வாக்­கெ­டுப்­பிற்கு செல்ல வேண்டும். ஆனால் ஸ்ரீ லங்கா சுதந்­திரக் கட்­சி­யா­னது சர்­வ­ஜன வாக்­கெ­டுப்­பிற்கு செல்­லாமல் தேர்தல் முறை மாற்றம் அதி­காரப் பகிர்வு ஆகிய இரண்டு விட­யங்­களை மாத்­திரம் மூன்­றி­லி­ரண்டு பெரும்­பான்­மை­யுடன் நிறை­வேற்றிக் கொள்ள வேண்டும் என்ற நிலைப்­பாட்டில் இருக்­கின்­றது.

எனவே சர்­வ­ஜன வாக்­கெ­டுப்­பிற்கு செல்­லாமல் மூன்­றி­லி­ரண்டு பெரும்­பான்மை பலத்­துடன் மட்டும் இந்த இரண்டு விட­யங்­களை மட்டும் செய்து கொள்­வதே தற்­போது சாமர்த்­தி­ய­மா­ன­தாக அமையும். மாறாக மூன்று விட­யங்­க­ளுக்­காவும் சர்­வ­ஜன வாக்­கெ­டுப்­பிற்­காக சென்றால் இறு­தியில் ஒன்றும் இல்­லாமல் போய்­விடும். 

காரணம் சர்­வ­ஜன வாக்­கெ­டுப்­பிற்கு சென்றால் பிர்­ச­சி­னைகள் எவ்­வாறு குழப்­ப­ம­டையும் என்­ப­தற்கு பிரிட்­டனில் நடை­பெற்ற சர்­வ­ஜன வாக்­கெ­டுப்பு ஒரு சிறந்த உதா­ர­ண­மாகும். ஆம் அல்­லது இல்லை என்ற இரண்டு விட­யங்­க­ளுக்­காக மட்­டுமே சர்­வ­ஜன வாக்­கெ­டுப்பு நடத்த முடியும். 

இவ்­வா­றான சந்­தர்ப்­பங்­களில் மக்­களின் மனதை குழப்பி நிலை­மையை மேச­மாக்­கி­விடும் சந்­தர்ப்­பங்கள் அதிகம் காணப்­ப­டு­கின்­றன. எனவே இந்த விடயம் தொடர்பில் கவ­ன­மாக செயற்­பட வேண்­டி­யது அவ­சி­ய­மாகும். 

தற்­போது மூன்­றி­லி­ரண்டு பெரும்­பான்மை பலத்­துடன் அதி­காரப் பகி­ர­வையும் தேர்தல் முறை மாற்­றத்­தையும் நிறை­வேற்றிக் கொள்ள முடியும். அதனை செய்து விட்டு பின்னர் நிறை­வேற்று அதி­காரம் கொண்ட ஜனா­தி­பதி முறைமை தொடர்பில் பொருத்­த­மான சம­யத்தில் நட­வ­டிக்கை எடுக்­கலாம். இத­னையே ஸ்ரீ லங்கா சுதந்­திரக் கட்­சியின் பெரும்­பா­லான உறுப்­பி­னர்கள் வலி­யு­றுத்­து­கின்­றனர்.

இந்த அர­சியல் யதார்த்த நிலை கூட்­ட­மைப்பின் தலை­வரும் எதிர்க்­கட்சித் தலை­வ­ரு­மான சம்­பந்­த­னுக்கு புரி­யாமல் இருக்­கின்­றமை கவ­லைக்­கு­ரிய விட­ய­மாகும். ஒரு­வேளை சம்­பந்தன் உயர்ந்த ஜன­நா­யக கோட்­பா­டு­களின் அடிப்­ப­டையில் இந்த விட­யத்தை குறிப்­பிட்­டி­ருக்­கலாம். அதா­வது இரண்டு பிர­தான கட்­சி­களும் இணைந்து ஆட்சி அமைத்­துள்­ளதன் கார­ண­மாக சர்­வ­ஜன வாக்­கெ­டுப்­பிற்கு சென்றால் இல­கு­வாக வெற்றி பெறலாம் என எதிர்க்­கட்சித் தலைவர் கரு­தி­யி­ருக்­கலாம். ஆனால் அர­சியல் கள நிலை என்­பது வித்­தி­யா­ச­மாகும். இதனை எதிர்க்­கட்சித் தலைவர் புரிந்து கொண்­டி­ருக்க வேண்டும். 

நிறை­வேற்று அதி­கார முறை கொண்ட ஜனா­தி­பதி முறை மாற்றம் அதி­காரப் பகிர்வு மற்றும் தேர்தல் முறை மாற்றம் ஆகிய மூன்று விட­யங்­க­ளையும் ஒன்­றாக புதிய அர­சி­ய­ல­மைப்­பி­னூ­டாக செய்ய முயன்றால் அது எதிர்­பார்க்கும் வெற்­றியை கொடுக்­காமல் போய்­விடும். அது­மட்­டு­மன்றி சர்­வ­ஜன வாக்­கெ­டுப்பு என்று வரும்­போது இன­வா­திகள் சம்­பந்தம் இல்­லாத சில விட­யங்­களை முன்­வைத்து நிலை­மையை குழப்பி விடு­வார்கள். 

இறு­தி­யாக ஒன்­றுமே கிடைக்­காமல் போய்­விடும் துர­திஷ்ட நிலை­மையே உரு­வாகும். இதனை அனைத்து தரப்­பி­னரும் புரிந்து கொள்ள வேண்டும். விசே­ட­மாக எதிர்க்­கட்சித் தலைவர் இரா. சம்­பந்தன் இந்த விட­யத்தை சரி­யாக புரிந்து கொள்ள வேண்­டி­யது அவ­சி­ய­மாகும். 

அர­சியல் கள யதார்த்­தத்தை புரிந்து கொள்­ளாமல் எதிர்க்­கட்சித் தலைவர் விடுத்த கோரிக்­கை­யா­னது எமக்கு ஆச்­ச­ரி­யத்­தையும் கவ­லை­யையும் ஏற்­ப­டுத்­தி­யுள்­ளது. உண்­மை­யி­லேயே அதி­காரப் பகிர்வை கூட்­ட­மைப்பு விரும்புகிறதா என்ற சந்தேகம் கூட எங்களுக்கு ஏற்படுகின்றது. 

காரணம் நாங்கள் பல்வேறு சவால்களுக்கு மத்தியிலும் விமர்சனங்களுக்கு மத்தியிலுமே ஆரம்ப காலத்திலிருந்தே அதிகாரப் பகிர்வுக்காக குரல் கொடுத்து வருகிறோம். ஆனால் இவ்வாறு அதிகாரப் பகிர்வின் அடிப்படையில் தீர்வை காண முடியாமல் போய்விடுமோ என்ற அச்சம் தற்போது எங்களுக்கு ஏற்பட்டுள்ளது. 

பொலிஸ் மற்றும் காணி அதிகாரத்துடன் மூன்றிலிரண்டு பெரும்பான்மையினூடாக இனப் பிரச்சினைக்கு தீர்வு காணக்கூடிய சாத்தயம் தற்போது ஏற்பட்டுள்ளது. ஆனால் அந்த சாத்தியமானது சர்வஜன வாக்கெடுப்பினால் சாத்தியமற்றுப் போய்விடுமா என்ற சந்தேகம் ஏற்படுகின்றது என்றார். 

http://content.epaper.virakesari.lk/newspaper/Daily/main/2016-11-21#page-1

  • கருத்துக்கள உறவுகள்

தீர்வு எதுவானாலும், அரசியல்வாதிகள் மூலமாக இல்லாது மக்கள் மூலம் வருவதே நீண்டகால நோக்கில் சிறப்பானது.

ஏனெனில், சிங்கள அரசியல்வாதிகள், எதிர்காலத்தில், ஒன்றினைந்து தந்ததை பிடுங்க முடியும்.

ஆனால் சர்வஜன வாக்குரிமைக்கு போய் தான் புடுங்க முடியும் எனும் போது, ஒன்றுமே செய்ய முடியாது என அமைதியாக இருப்பார்கள். ஏனெனில் கொடுத்ததை புடுங்க சர்வஜன வாக்குரிமை வைத்தால், சர்வதேச நாடுகள் கண்டணத்துக்கும், வடகிழக்கில் சுஜநிர்ணய உரிமைக்கும் வைக்க வேண்டிய நிலை வரும்.

அதேவேளை சம்பந்தர் கோரிக்கைப்படி, சர்வஜன வாக்களிப்பில் சிங்களவர் தீர்வை நிராகரித்தாலும், அங்கேயும், அப்படியாயின், அடுத்தது சுஜநிர்ணய உரிமை தேர்தல்தானே எனும் சிக்கல் அவர்களுக்கே வரும். அத்துடன் தீர்வை எதிர்த்து வாக்களிக்க சொல்பவர்கள், சுஜநிர்ணய உரிமைக்கான, வடகிழக்கில் சர்வஜன வாக்கெடுப்பு நடாத்தும் நிலை வரும் என்றவுடன் பெட்டிப்பாம்பாகி விடுவர். வேறுவழி இருக்காது.

ஏனெனில், இன்னுமோர் இனத்தை, அவர்களது நியாயமான உரிமைகளை மறுத்து, அடக்கியாள வழங்கப்படும் குடியொப்பத்தை 'சர்வதேச நாடுகள்' ஏற்றுக் கொள்ளாது.

ஆகவே, அரசாங்கத்தின் தில்லாலங்கடி வேலையை தவிர்த்து, சர்வஜன வாக்கெடுப்பே தேவை என்ற சம்பந்தர் நிலைப்பாடு சரியானது.

Edited by Nathamuni

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.